நீ எனக்கு தந்த காதல் – 5.
மோதல் அக்கறையாய் மாறிய முதல் தருணம்.
தமிழ் டெண்டர் பார்ட்டிக்கு சென்று லஞ்ச் முடித்து விட்டு ஈவ்னிங் ஆபீஸ்க்கு வருகிறான்.
Advertisement
இனி,
‘நிலா முடிச்சிட்டியா கிளம்பலாமா. எனக்கு கொஞ்சம் சீக்கரமா போகனும்’ என நந்தினி கேட்க,
Advertisement
Advertisement
‘இன்னும் அறை மணி நேரம் ஆகும் நந்தினி. நீ வேனா கிளம்பு’ என்றாள் நிலா.
‘சரி முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்பு பாய்’ என்று சொல்லி நந்தினி கிளம்பினாள்.
Advertisement
நிலாவும் தன் வேலையை முடித்து விட்டு கிளம்ப தமிழின் அறையில் இருந்து சத்தம் வருவதைக் கண்டு போகலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் கதவை தட்டி பார்த்து பதில் ஏதும் வராததால் திறந்து உள்ளே சென்றாள். வாஷ்ரூமில் .இருந்து வாமிட் எடுப்பது போல் சத்தம் கேட்க அங்கு சென்று பார்த்தாள். தமிழ் வாமிட் எடுப்பதை பார்த்து வேகமாக சென்று தலையை தன் இரு கைகளால் அழுத்தி பிடித்துக் கொள்கிறாள். அவன் வாமிட் எடுத்து முடித்ததும் அவனை கை தாங்கலாக பிடித்து கூட்டி வந்து சேரில் உட்கார வைத்து விட்டு வாஷ்ரூமை சுத்தம் செய்து விட்டு வந்தாள்.
‘என்னாச்சு சார். ஹாஸ்பிடல் போலாமா’ என நிலா கேட்க,
‘நிலா ஹாஸ்பிடல்லாம் வேணாம். லஞ்ச் பார்ட்டில காளான் க்ரேவின்னு நெரியாம சாப்டேன். சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது. எனக்கு காளான் சேராது. அதான் வந்ததில இருந்து அஞ்சாறு தடவ வாமிட் ஆயிடுச்சு இன்னும் நிக்கல. எனக்கென்னவோ நான் உங்கள கஷ்டபடுத்தினதுக்கு கிடைச்ச தண்டனைன்னு நினைக்கிறேன். நீங்க ஏதும் சாபம் விட்டிங்களோ’ என தமிழ் கிண்டலாய் கேட்க,
‘இந்த நிலைமைல கூட உங்களுக்கு கிண்டல் பண்ண தோனுது’ என்று சொல்லி தமிழின் டிரைவருக்கு போன் பண்ணி அவனது அறைக்கு வரச் சொல்ல அவரும் வருகிறார்.
இருவரும் சேர்ந்து தமிழை கூட்டிக் கொண்டு வந்து காரில் உட்கார வைத்தனர்.
‘மேடம் இப்ப என்ன பண்றது’ என டிரைவர் கேட்க,
நிலாவுக்கு அப்போது தான் தமிழுக்கு ஹாஸ்பிடல், மாத்திரை, ஊசி என்றால் ரொம்ப பயம்னு அவங்க அம்மா சொன்னது ஞாபகம் வந்தது.
‘அதான் சார் ஹாஸ்பிடல் போக வேணாம்னு சொல்றாரு’ என தனக்குள் யோசித்துக் கொண்டே நிலா தமிழை பார்க்க அவன் பாதி மயக்கத்தில் சாய்ந்திருந்தான்.
‘அண்ணா பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலுக்கு கொஞ்சம் சீக்கிரமா போங்க ‘ என நிலா டிரைவரிடம். கூற,
‘இல்லம்மா அது வந்து சாருக்கு ஹாஸ்பிடல்னா சேராது’ என டிரைவர் கூற,
‘ஆனா இப்ப இவரு இருக்கிற நிலைமைக்கு நமக்கு வேற வழியில்ல. நான் பாத்துக்கறேன் போங்க’ என்று நிலா சொல்ல டிரைவரும் வேகமாக வண்டியை எடுத்து அருகிலுள்ள ஹாஸ்பிட்டலில் சென்று தமிழை அட்மிட் செய்தனர்.
‘டாக்டர் இவருக்கு இப்ப எப்டி இருக்கு’ என நிலா பதட்டமாய் கேட்க,
‘சேராத உணவை சாப்டு இருக்காரு. அதுமட்டும் இல்லாம ரெண்டு நாளா சரியா சாப்டாம தூங்காம இருந்தாரா’ என டாக்டர் கேட்க,
‘ஆமா டாக்டர் ஒரு வேலை விசயமா ரொம்ப பிசியா இருந்ததால ரெண்டு நாளா சரியா சாப்டாம தாங்காம இருந்தாரு’ என நிலா சொல்ல,
‘அதான் எல்லாம் ஒன்னா சேந்து இப்டி சாப்டது சேராம வாமிட் ஆகிருக்கு. வாமிட் ஸ்டாப்பாக இன்சக்ஷன் போட சொல்லிருக்கேன். ரொம்ப வீக்கா இருக்காரு டிரிப்ஸ் போட வேண்டிருக்கு. காலைல பாத்துட்டு டிஸ்ஜார்ஜ் பண்றேன். அப்டியே வீட்டுக்கு போனாலும் ரெண்டு நாள் ஃபுல் பெட் ரெஸ்டு எடுக்கனும்’ என்று சொல்லி விட்டு டாக்டர் சென்றார்.
நிலா டிரைவரிடம், ‘அண்ணா நீங்க போய் சாரோட அம்மா அப்பாவ கூட்டிட்டு வாங்க ‘ என்று சொல்ல அவரும் சரி என அவர்களை கூட்டி வரச் சென்றார்.
நிலா தமிழ் அப்பாக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லி விட்டு ரூமுக்கு வந்தாள்.
‘எனக்கு இன்சக்ஷன் வேணா ப்ளீஸ்’ என குழந்தை போல அழுது கொண்டு நர்ஸை இன்சக்ஷன் போட விடாமல் தமிழ் தடுக்க,
‘சார் ஒன்னுமில்ல பயப்படாதீங்க நான் கூட இருக்கேன்’ என்று சொல்லி அவனது முகத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டு அவனது கையை அசைக்காதபடி இறுக்கி பிடித்துக் கொள்ள நர்ஸ் ஊசியை போட்டு விட்டு ட்ரிப்ஸையும் போட்டு விடுகிறார். அழுது வாறே தமிழ் நிலா மடியில் தூங்கி போனான்
தமிழின் அம்மா அப்பா அங்கு வந்து சேர தமிழ் நிலாவின் கையை பயத்தில் இறுக பிடித்துக் கொண்டு அவள் மடியில் படுத்து தூங்குவதை பார்க்கின்றனர்.
‘தமிழுக்கு என்னாச்சு நிலா. எப்பவும் துறுதுறுன்னு இருக்கறவன் இப்டி சோர்ந்து போய் படுத்திருக்கான்’ என்று அதிர்ச்சியுடன் அழுது கொண்டே தமிழ் அம்மா கேட்க நிலாவும் நடந்தவற்றை சொல்லி முடித்தாள்.
‘நிலா ரொம்ப தேங்க்ஸ்மா. சரியான நேரத்துல நீ மட்டும் இல்லைன்னா தமிழ் நிலைமை ரொம்ப மோசமாயிருக்கும். அதுக்கு உனக்கு நாங்க நன்றி கடன் பட்ருக்கோம்மா. சரி லேட்டாச்சு டிரைவர் நிலாவ அவங்க வீட்ல விட்டுட்டு வந்துருப்பா’ என தமிழ் அப்பா சொல்ல,
‘பரவால்ல அங்கிள் தமிழ் எனக்கு எவ்ளவோ ஹெல்ப் பண்ணிருக்காரு. அவருக்கு திருப்பி செய்ய எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது அவ்ளோ தான். அப்புறம் லாஸ்ட் பஸ்க்கு இன்னும் டைம் இருக்கு அங்கிள் நான் போய்க்கறேன். ஆன்டி தமிழ் சார் மேல நீங்க உயிரையே வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும். அவருக்கு ஒன்னுன்னா உங்களால தாங்க முடியாதுன்னும் தெரியும். கவலைப்படாதீங்க பயப்படற அளவுக்கு ஒன்னுமில்ல. நாளைக்கு காலைல செக் பண்ணிட்டு டிஸ்ஜார்ஜ் பண்ணிக்கலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு. நான் காலைல நேரமே வரேன்’ என்று சமாதானம் செய்து விட்டு தமிழ் இறுக்கி பிடித்திருந்த தனது கையை மெல்ல எடுத்துக் கொண்டு அவன் தலையை தன் மடியிலிருந்து எடுத்து அருகிலுள்ள தலையணையில் மெல்ல வைத்து விட்டு நிலா கிளம்ப,
‘பாத்து போயிட்டு வாம்மா’ என்றார் தமிழ் அம்மா.
தமிழ் அம்மா தமிழை பார்த்து அழுது கொண்டிருக்க, ‘என்ன ராஜி இது. நீ இப்டி அழுதுகிட்டே இருந்தா உனக்கு எதாவது ஆயிரும். ப்ளீஸ் அழாதே’ என்று தமிழ் அப்பா தன் மனைவியை சமாதானப் படுத்தினார்.
சிறிது நேரம் கழித்து திடீரென, ‘நிலா ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு என்னைய விட்டுட்டு எங்கயும் போய்டாதீங்க’ என்று பாதி மயக்கத்தில் தமிழ் அழ தமிழ் அம்மா அவனை சமாதானப் படுத்தி தூங்க வைக்கிறார்.
‘ஏங்க தமிழ் லவ் பண்றான்னு சொல்லும் போது நான் நம்பல. ஏன் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்த போது கூட நான் நம்பலைங்க. ஆனா அந்த பொண்ணு நம்ம சொன்னதுக்காக வாரத்துல ஒரு நாள் வந்து நம்மள பாத்துட்டு நம்ம கூட இருந்து நமக்கு வேனுங்கறத செஞ்சுட்டு போகுது. அதுமட்டும் இல்லாம நம்ம தமிழுக்கு ஒன்னுன்னா கூடவே இருந்து அக்கறையா பாத்துக்குது. அதவிட பெரிய விசயம் நம்ம தமிழ் அந்த பொணணுகிட்ட இவ்ளோ அட்டேச் ஆயிட்டான். இதெல்லாம் பாத்தா ரெண்டு பேரும் உண்மையாவே லவ் பண்ற மாதிரி இருக்கு. அப்டி இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷம்’ என்று தமிழ் அம்மா சொல்ல,
‘அப்டின்னா நிலாவ நம்ம மருமகளா நீ ஏத்துகிட்ட அப்டிதான. எனக்கு முதல்லயே அந்த பொண்ணு தான் நம்ம தமிழுக்கு சரியானவன்னு மனசுல தோனுச்சு. எனக்கும் அந்த பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு’ என இருவரும் பேசிக் கொண்டிருக்க விடிந்தும் போனது. நிலாவும் நேரமே வந்திருந்தாள்.
டாக்டர் வந்து செக் பண்ணி விட்டு ‘எல்லாம் நார்மலா இருக்கு. டிஸ்ஜார்ஜ் பண்றேன். நீங்க வீட்டுக்கு போகலாம் ஆனா ரெண்டு நாள் கண்டிப்பா ஃபுல் பெட் ரெஸ்ட் எடுக்கனும். இல்லைன்னா திரும்ப மயக்கம் வரும் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆக வேண்டி இருக்கும். அப்புறம் ரொம்ப ரிஸ்க் ஆயிரும். அதனால கவனமா பாத்துக்கங்க. ரெண்டு நாள் லிக்விட் ஃபுட் மடடும் குடுங்க’ என டாக்டர் கூற,
‘ஓகே டாக்டர் நாங்க ஜாக்ரதையா பாத்துக்கறோம்’ என்றார் தமிழ் அம்மா.
எப்போது இந்த இடத்தை விட்டு செல்வோம் என பயந்து கொண்டே இருந்த தமிழுக்கு இப்போது தான் உயிரே வந்தது.
தமிழ் அம்மா அப்பா இருவரும் நிலாவை தமிழை பார்த்துக்க சொல்லி விட்டு டிஸ்ஜார்ஜ் செய்வதற்கான வேலைகளை செய்ய போயினர்.
நிலாவிடம் தமிழ் ஏதும் பேசாமல் இருக்க, ‘என்ன சார் எதுவும் பண்ணுதா டாக்டர கூப்டவா’ என கேட்க,
‘அம்மா தாயே. திரும்பவுமா ஆள விடுங்க. எப்டியோ என்னை பலி வாங்கிட்டீங்க’ என்று தமிழ் சொல்ல நிலா சிரித்தாள்.
‘எனிவே ரொம்ப தேங்க்ஸ் என்னை மன்னிச்சு எங்கிட்ட திரும்ப பேசுனதுக்கு. ஆனா ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்ததுக்கு கண்டிப்பா உங்களுக்கு தேங்க்ஸ் கிடையாது’ என்றான் தமிழ்.
எல்லா பார்மாலிட்டீஸ் முடிந்து தமிழை ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டிற்கு கூட்டி வந்தனர்.
‘அம்மா நிலா இந்த பையன் சொன்னா கேக்க மாட்டான். அதனால ரெண்டு நாளைக்கு நீ இவன் பாக்க வேண்டிய ஃபைல்ஸ வீட்டுக்கு கொண்டுட்டு வந்துரு. நீயும் இங்க வந்து அவன்கூட வேலைய பாத்துக்க’ என தமிழ் அம்மா சொல்ல,
‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ராஜி. எனக்கு ஒன்னுமில்ல நான் ஆபீசுல போய் பாத்துக்கறேன்’ என தமிழ் சொல்ல,
‘ஆன்டி நீங்க சொல்றது மாதிரியே நான் செஞ்சடறேன். அவரு பேச்செல்லாம் கேக்க முடியாது.. டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கில்ல. ரெஸ்ட் எடுக்கலைன்னா மயக்கம் வரும் திரும்ப பெட்ல அட்மிட் பண்ண வேண்டி வரும் அப்புறம் ரிஸ்க் ஆயிடும்னு சொன்னாருல்ல. ஒழுங்கா ஆன்டி சொல்றத கேளுங்க. இல்ல திரும்பவும் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண வேண்டியதான்’ என நிலா சொல்ல தமிழ் பயந்து கொண்டு பதில் எதுவும் சொல்லாமல் தன் அறைக்கு சென்றான்.
அங்கு நடப்பதை நம்ப முடியாமல் தமிழின் பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
நிலா தமிழுக்கு தேவையான ஃபைலை எடுத்து வந்து அவனுடனிருந்து வேலையை பார்த்துக் கொள்வதோடு அவனுடைய அம்மாவுக்கு வீட்டு வேலைகளிலும் அவனை கவனித்துக் கொள்வதிலும் உதவி செய்ய இரண்டு நாட்களும் ஓடியது. இவ்வாறு நிலா அக்கறையாய் தன்னை பார்த்துக் கொள்வதைப் பார்த்து தமிழ்க்கு நிலா மேல் ஒருவித அன்பு மலர்ந்தது.
இடையில் ஆபீசில் வேலை பார்ப்பவர்களும் அவனது நண்பர்களும் நேரிலும் போனிலும் நலம் விசாரித்தனர்.
தமிழும் உடல்நிலை தேறி ஆபீஸ்க்கு வந்தான்.
தொடரும்…
