Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் -7.

தமிழ் காண்ட்ராக்ட் போட்டதற்கான காரணத்தை நிலாவோடு சேர்ந்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

 

கவின், தமிழ் ஆபீஸின் லேன்லைனுக்கு போன் செய்ய நிலா தமிழுக்கு கனெக்ட் பண்ண முயற்சிக்க அவனோ நிலாவுடன் தான் பேச போன் செய்ததாக கூறுகிறான்.

 



Advertisement

இனி,

 

‘எங்கிட்ட பேசனுமா. எதபத்தி’ என நிலா கேட்க,

Advertisement

 

Advertisement

‘உங்களையும் தமிழையும் பத்தி’ என கவின் சொல்ல,

 

‘எங்கள பத்தியா. சரி சொல்லுங்க ‘ என நிலா கேட்க,

Advertisement

 

‘நீங்களும் தமிழும் லவ் பண்றத பத்தி தான் பேசனும்’ என கவின் சொல்ல,

 

‘ஆமா அத பத்தி என்ன சொல்லனும் நீங்க ‘ என நிலா சந்தேகத்துடன் கேட்க,

 

‘நீங்க ரெண்டு பேரும் உண்மையா லவ் பண்ணல சும்மா நடிக்கிறீங்கன்னு எனக்கு தெரியும்’ என கவின் சொல்ல,

 

‘சரி நீங்க சொல்ற மாதிரி நாங்க நடிக்கிறதாவே  இருக்கட்டும்  அத சொல்ல தான் கால் பண்ணீங்களா’ என உள்ளே பாய்ந்தாலும் வெளியே காட்டிக் கொல்லாமல் நிலா கேட்க,

 

‘பரவால்லங்க தமிழ் கரெக்டான ஆள தான் செலக்ட் பண்ணிருக்கான .நான் நெனச்சத விட ரொம்ப தைரியமானவங்க தான் நீங்க’ என கவின் சொல்ல,

 

‘கவின் ப்ளீஸ் நீங்க  எங்கிட்ட எதோ சொல்லனும்னு சொன்னீங்களே’ என நிலா கேட்க,

 

‘சரி நான் நேரா விசயத்துக்கு வரேன். தமிழ் காண்ட்ராக்ட் போட காரணமே நான் தான். ஆமாங்க தமிழ், யாழினி நான் மூனு பேரும் சின்ன வயசுல இருந்தே க்ளோஸ் ஃபிரண்ட்ஸ். ஆனா எப்ப யாழினி மேல எனக்கு இருந்த நட்பு காதலா மாறுச்சுன்னு எனக்கே தெரியல. காதலிக்க தெரிஞ்ச எனக்கு அந்த காதல அவகிட்ட சொல்ல முடியல. அதுக்குள்ள தமிழ் வீட்லயும் யாழினி வீட்லயும் அவங்க கல்யாணத்த பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க. அவங்கள சமாளிக்க தான் இந்த டிராமாவே. சாரி நிலா எனக்கு ஹெல்ப் பண்றதுக்காக தான் தமிழ் இத செஞ்சான். அவன் ரொம்ப நல்லவன் . யாரு மனசும் கஷ்டபடக் கூடாதுன்னு நினைக்கிறவன். இதுவரைக்கும் எந்த பொண்ணு கிட்டயும் தப்பா பேசுனது கூட இல்ல. ஆனா உங்க கிட்ட முழுசா தன்னை தாழ்த்தி நடந்துகிட்டான். இது அத்தனையும் எனக்காக தான் அவ செஞ்சான். தனக்கு பிடிச்சவங்களுக்காக எத வேனா விட்டுக்குடுப்பாங்க என் தமிழ். எனக்காக அவனோட மரியாதைய உங்க கிட்ட விட்டு கொடுத்த மாதிரி’ என கவின் சொல்ல,

 

அனைத்தையும் கேட்டு விட்டு, ‘ஆமா நீங்க எங்கிட்ட இத சொல்ல காரணம். நான் தமிழ் சார தப்பா நினச்சற கூடாதுன்னா’ என்றாள் நிலா,

 

‘அதுவும் ஒரு காரணம். ஆனா உண்மைய சொல்லனும்னா நீங்க காண்ட்ராக்ட்க்கு. ஒத்து கிட்டதுக்கான காரணம் தெரிஞ்சு உங்கள அவனோட சொந்த பிரச்சனைக்கு யூஸ் பண்ணத நினைச்சு தமிழ் எங்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டான். அதான் அதுக்கு காரணமான நானே உங்க கிட்ட இந்த உண்மைய சொல்லிடலாம்னு கூப்டேன்’ என கவின் சொல்ல,

 

‘ஏங்க நானும் ஒத்து கிட்டு தான அதுல சைன் பண்ணேன். அப்புறம் எப்டிங்க நான் அவற தப்பா நினைக்க முடியும். அதுவுமில்லாம எனக்கு எவ்ளோ பெரிய உதவி பண்ணிருக்காருன்னு அவருக்கு புரியல. எப்டி அவருக்கு புரிய வைக்கறதுன்னு எனக்கும் தெரியல. என்ன ஒன்னு அவங்க பேரண்ட்ஸ ஏமாத்துறத நினச்சா தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு’ என நிலா சொல்ல,

 

‘கவலபடாதீங்க இதுக்கு ஒரு நல்ல தீர்வ சீக்கிரமா  நானே எடுக்கறேன். அப்புறம் என் மனசுல ஒன்னு தோனுது. ஏன் நீங்க ரெண்டு பேரும் உண்மையாவே லவ் பண்ணா என்ன. உங்க ரெண்டு பேருக்கும் இடைல ஏதோ இருக்கு. அதான் உங்களுக்குள்ள இந்த பந்தம் ஏற்பட்ருக்கு. ஏதோ என் மனசுல பட்டத சொன்னேன். நீங்களும் இதபத்தி யோசிச்சு பாருங்க. நான் சொன்னதுல்ல தப்பு இருந்தா சாரி. பாய் நிலா ‘ என சொல்லி கவின் போனை கட் செய்ய நிலா கவின் சொன்னதை பற்றி யோசித்த படி தன் வேலையை தொடர்ந்தாள்.

 

யாழினி வீட்டில் அவளது அம்மா அவளிடம், ‘யாழினி தமிழ் கிட்ட பேசுனியா. என்ன சொன்னான்’ என கேட்க,

 

‘மம்மி தமிழ் வேற பொண்ண லவ் பண்றானாம். உன் பேச்ச கேட்டு நான் நல்ல வேல சரின்னு சொல்லல. அவன் என்ன நல்ல ஃப்ரண்டா தான் பாக்குறான். நானும் அப்டிதான். இடைல நீங்க தான் என்ன குழப்பிட்டீங்க’ என யாழினி சொல்ல,

 

‘என்னடி சொல்ற. சரி வேற மாப்ளய தேட ஆரம்பிக்க வேண்டியது தான்’ என யாழினி அம்மா சொல்ல,

 

‘உனக்கு வேற வேலையே இல்லையா. எனக்கு இப்ப கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்ல. நான் நம்ம கம்பெனிக்கு இப்ப தான் போயிருக்கேன். நல்லா ஸ்டெடி ஆயிட்டு தான் கல்யாணம் . அதுவரைக்கும் அதபத்தி பேசாத’ என சொல்லி யாழினி தன் அறைக்கு சென்று கதவை சாத்திக் கொள்ள,

 

‘உங்க பொண்ணு சொல்றத கேட்டீங்களா’ என யாழினி அம்மா அவள் அப்பாவிடம் கேட்க,

 

‘அவ சொல்றதுல என்ன தப்பு. என் பொண்ணு என்ன சொல்றாளோ அத தான் நான் செய்வேன்’ என யாழினி அப்பா சொல்ல,

 

‘எனக்கென்ன அப்பாவும் பொண்ணும் எப்டியோ போங்க. நீயா வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வைம்மான்னு கேக்காம நான் இனி அதபத்தி பேச மாட்டேன்’ என கோபமாய் அங்கிருந்து சென்றார் யாழினி அம்மா.

 

தமிழ் வீட்டிற்கு செல்ல ஆபீஸை விட்டு வெளியே நிலாவும் வீட்டிற்கு செல்ல வெளியே வந்தாள். தமிழ் அவள் வருவதை பார்த்து, ‘நிலா வீட்டுக்கு தான நான் டிராப் பண்ணவா’ என கேட்க நிலாவும் தயங்கிய படி காரில் ஏறினாள்.

 

‘சார் உங்க ஃப்ரெண்ட் கவின் போன் பண்ணாரு’ என நிலா சொல்ல,

 

‘கவினா எப்ப எதுக்கு போன் பண்ணான் ‘ என பதற்றமாய் தமிழ் கேட்க,

 

அதை பார்த்த நிலா, ‘ஒன்னுமில்ல சும்மா உங்க கூட பேச தான் கூப்டாரு. நீங்க பிசியா இருக்கீங்கன்னு சொன்னேன். சரி அவன் நம்பருக்கு நான் கால் பண்ணி பேசிக்கறேன்னு சொல்லி வச்சிட்டாரு’ என நிலா சொல்ல,

 

அப்பாடா எதயும் உலறி வைக்கல என நினைத்த படி, ‘நிலா இனி அவன் போன் பண்ணா சாரே கூப்டறேன்னு சொன்னாருன்னு சொல்லி போனை கட் பண்ணிருங்க. நான் கால் பண்ணி பேசிக்கறேன். ஓகேவா’ என தமிழ் சொல்ல,

 

நிலா தனக்குள் நடந்ததை நினைத்து கொண்டு, ‘ம் ஓகே’ என்றாள்.

 

நிலாவை வீட்டில் இறக்கி விட்டு தானும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் தமிழ்.

 

‘ஏன்டா தமிழ் யாரோட கல்யாண பத்திரிக்கை இது ‘ என அவனது பேக்கில் இருந்து எடுத்து தமிழ் அம்மா கேட்க,

 

‘அதுவா ஆபீஸ்ல வேல பாக்குற பையனோடது. நல்ல வேல ஞாபகப்படுத்தின ராஜி. மறந்தே போச்சு’ என தமிழ் சொல்ல,

 

‘எல்லார்க்கும் கல்யாணம் ஆகுது. உனக்கு மட்டும் ஏன்டா கல்யாணம் பண்ணிக்க தோனல’ என தமிழ் அம்மா கேட்க,

 

‘ராஜி ப்ளீஸ் தயவு செஞ்சு என்னைய கம்பல் பண்ணாத. நடக்கும் போது நடக்கும்’ என்று சொல்லி அங்கிருந்து சென்றான் தமிழ்.

 

அடுத்த நாள் ஆபீஸில் அந்த கல்யாணத்துக்கு செல்வது பற்றியும் என்ன கிஃப்ட் வாங்குவது என்பது பற்றியும் டிஸ்கஷன் நடந்து கொண்டிருக்க தமிழ் அங்கு வரவும் அனைவரும் தங்கள் இருக்கைகளுக்கு சென்று அமர்ந்தனர்.

 

தமிழ் அந்த கல்யாணம் ஆகப் போகும் பையனை கூப்பிட்டு , ‘இந்தாங்க ஹரி கம்பெனி சார்பா நான் உங்களுக்கு தர கிஃப்ட்’ என்று அஞ்சு லட்சத்தை செக்காக குடுத்தான்.

 

அதை பார்த்த ஹரி, ‘சார் எதுக்கு இதெல்லாம். நீங்க வந்தீங்கன்னா மட்டும் போதும்’ என சொல்ல,

 

‘நீங்க கல்யாண செலவுக்கு சிரமபடறதா எனக்கு தோனுச்சு. அதான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணலாம்னு. ஏன் நான் தரக் கூடாதா. உங்க அண்ணனோ தம்பியோ குடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா’ என தமிழ் கேட்க,

 

‘ரொம்ப நன்றி சார். கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்துருங்க’ என சொல்லி அங்கிருந்து சென்றான் ஹரி.

 

சிறிது நேரம் கழித்து ஆபீஸில் வேலை பார்க்கும் அனைவரும் சேர்ந்து வந்து ‘சார் எங்க எல்லாருக்கும் இன்னிக்கு ஈவ்னிங் ஒன் ஹவர் பர்மிஷன் வேனும்’ என தமிழிடம் கேட்க,

 

‘எல்லாருக்குமா எதுக்குன்னு சொன்னா குடுக்கலாமா வேண்டாமானு யோசிக்கலாம்’ என தமிழ் கேட்க,

 

‘அது வந்து . ஹரிக்கு நாங்க எல்லாம் சேர்ந்து பேச்கசுலர் பார்ட்டி  வைக்கிறோம். அதான்’ என சொல்ல,

 

‘பரவால்லயே பேச்சுலர் பார்ட்டி அவரு தான வைக்கனும். வித்தியாசமா நீங்க வைக்கிறீங்க. சரி என்னை இன்வைட் பண்ணவே இல்ல. அப்புறம் எப்டி பர்மிஷன் தறது’ என தமிழ் கேட்க,

 

‘அவ்வளவு தான சார். இந்தா இப்ப கூப்டறோம். சார் ஹரிக்கு இன்னிக்கு ஈவ்னிங் ஏழு மணிக்கு பேச்சுலர் பார்ட்டி வைக்குறோம் கண்டிப்பா நீங்க வருனும்’ என்று அனைவரும் கோரசாக கூற,

 

தமிழும் ஓகே என சிரித்துக் கொண்டே அனைவருக்கும் பர்மிஷன் தந்து விட, உடனே அனைவரும் தமிழ் சார் வாழ்க என கோஷமிட்டுக் கொண்டே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

ஈவ்னிங் ஆனதும் அனைவரும் கிளம்பி தமிழிடம் வந்து, ‘சார் நாங்க வீட்டுக்கு போயிட்டு பிரஸப்பாகிட்டு ஏழு மணிக்கு வந்துருவோம். நீங்களும் வீட்டுக்கு போயிட்டு பிரஷப்  ஆகிட்டு ஏழு மணிக்கு ராயல் ஹோட்டல்க்கு வந்துடுங்க ‘ என சொல்ல,

 

‘நான் சும்மா கிண்டலுக்கு சொன்னேன். நான் வரல நீங்க என்ஜாய் பண்ணுங்க. நான் வந்தா உங்களுக்கு அன் கம்பர்டபுளா இருக்கும்’ என தமிழ் சொல்ல,

 

‘அதெல்லாம் ஒன்னுமில்ல. கண்டிப்பா வந்துருங்க . நாங்க உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்போம்’ என்று சொல்லி விட்டு அனைவரும் கிளம்பினர்.

 

வேறு வழியில்லாமல் தமிழும் வீட்டுக்கு கிளம்பினான்.

 

‘என்னடா சீக்கிரமா வந்துட்ட’ என தமிழ் அம்மா கேட்க,

 

‘ஒன்னுமில்ல ராஜி திடீர்னு ஒரு பார்ட்டிக்கு வர சொன்னாங்க. அதான் கிளம்ப வந்தேன். எனக்கு நைட் சாப்பாடு வேண்டாம் பார்ட்டிலயே சாப்டுக்கறேன்’ என சொல்லி விட்டு ப்ரஸப் ஆகி ஹோட்டலுக்கு கிளம்பினான் தமிழ்.

 

ஒவ்வொருவராய் ஹோட்டலுக்கு வர நிலாவும் வந்து சேர்ந்தாள். சிகப்பு நிறப் புடவையில் அழகாய் ஹோட்டலுக்குள் நுழைந்த நிலாவை தமிழ் கண் இமைக்காமல் பார்க்கிறான்.

 

பிறகு சுதாரித்துக் கொண்டு ‘என்னைக்கும் விட இன்னைக்கு ரொம்ப அழகா தெரியராளே. ஒரு வேல அவ மேல எனக்கு காதல் வந்துருச்சோ. ‘ என தனக்குத் தானே புலம்பிக் கொண்டான் தமிழ்.

 

தமிழுக்கு நிலாவின் மேல் காதல் வந்தது போல் தமிழ் மேல் நிலாவுக்கும் காதல் உள்ளதா?

 

தொடரும்…

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!