நீ எனக்கு தந்த காதல் – 6.
நிலா அக்ரிமெண்டிற்கு ஒப்பு கொண்டதற்கான காரணம் தமிழுக்கு தெரிய வரும் நேரம்.
தமிழ் ஆபீஸ்க்கு வந்து நிலாவை தேட அவளை காணாமல் நந்தினியிடம் வந்து கேட்கிறான்.
Advertisement
இனி,
‘சார் நிலா இன்னிக்கு லீவ். ரெண்டு நாளைக்கு முன்னாடியே உங்க கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்னு சொன்னாளே’ என நந்தினி கேட்க,
Advertisement
Advertisement
‘ஓ ஆமா நந்தினி சொன்னாங்க நான் தான் மறந்துட்டேன். சாரி’ என்று சொல்லி கிளம்பியவன் மீண்டும் திரும்பி நந்தினியிடம் வந்து
‘நிலா லீவுன்னு சொன்னாங்க ஆனா எதுக்குன்னு சொல்லல. உங்களுக்கு கண்டிப்பா ரீஸன் தெரிஞ்சிருக்கும். நீங்க தான் அவளோட ரொம்ப க்ளோஸாச்சே’ என தமிழ் கேட்க,
Advertisement
‘அது வந்து அவங்க தம்பிக்கு இன்னைக்கு ஹார்ட் ஆப்பரேஷன் அதான்’ என்றாள் நந்தினி.
‘அவங்க தம்பி படிக்கறதா தான எங்கிட்ட சொன்னாங்க’ என தமிழ் கேட்க,
‘ஆமா சார் படிச்சிட்டு தான் இருக்கான். இந்த ஆப்ரேஷனுக்காக ஒரு மாசம் லீவு போட்ருக்கான்’ என்றாள் நந்தினி.
‘அதில்ல நந்தினி அவங்க தம்பிக்கு ஆப்ரேஷன் பண்ற அளவுக்கு என்ன ப்ராப்ளம்’ என தமிழ் கேட்க,
‘சார் அவனுக்கு ஹார்ட்ல ஹோல்ஸ் இருக்காம். அவங்களுக்கே அது மூனு வருஷமா தான் தெரியுமாம். அவனோட ஆப்ரேஷனுக்கு பணம் ரெடி பண்ண போகும் போது தான் அவங்க அப்பா ஆக்சிடண்ட் ஆகி இறந்துருக்காரு பாவம். அதுக்கு பிறகு அவங்க சொந்த ஹோட்டல வித்திட்டு அவங்க அம்மா வேற வழி இல்லாம அதே ஹோட்டல்ல சம்பளத்துக்கு வேலைக்கு போறாங்க. நிலாவும் அதுக்காக தான் இங்க வேலைக்கு வறா. ஹோட்டல வித்ததுல முக்கால் வாசி ஆப்ரேஷனுக்கு பணம் கிடச்சதா சொன்னா. நீங்க கூட அவ கஷ்டம்னு சொல்லி பணம் கேட்டதும் எதுக்குன்ன கூட கேக்காம கடனா பணம் குடுத்திங்கன்னு உங்கள பத்தி எப்பவும் பெருமையா சொல்லிட்டு இருப்பா’ என நந்தினி சொல்லி முடிக்க நிலாவிடமிருந்து நந்தினிக்கு போன் வர அவள் அதை அடடண்ட் பண்ணி பேசிக் கொண்டிருக்க தமிழ் அங்கிருந்து தன் அறைக்கு சென்றான்.
ஏற்கனவே டெண்டர் விசயத்தில் அவசரப்பட்டு அவளைப் பற்றி தப்பாக பேசி விட்டோம் என குற்ற உணர்ச்சியில் இருந்த தமிழ் இப்போது நந்தினி சொன்னதைக் கேட்டு இன்னும் உடைந்து போனான்.
சிறிது நேரம் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு பிறகு நந்தினிக்கு போன் செய்து, ‘ நிலா போன் பண்ணாங்களா நந்தினி ஆப்ரேஷன் முடிஞ்சிருச்சா’ என தமிழ் கேட்க,
‘ம் ஆமா சார் ஆப்ரேசன் நல்ல படியா முடிஞ்சுதாம்’ என நந்தினி கூற,
‘நீங்க எப்ப போய் பாக்கறீங்கன்னு சொன்னீங்கன்னா நானும் கூட வரலாம்னு’ என தமிழ் இழுக்க,
‘ம் ஓகே சார். ஈவ்னிங் ஆபீஸ் முடிஞ்சதும் போலாம்ன்னு இருக்கேன்’ என நந்தினி கூற,
‘ஓகே ஈவ்னிங் ஆபீஸ் முடிஞ்சதும் கார் பார்க்கிங்ல வெய்ட் பண்றேன். நிலா கிட்ட நான் வரேன்னு சொல்லாதீங்க. அவங்க அன் கம்பர்டபுளா ஃபீல் பண்ணுவாங்க’ என தமிழ் சொல்ல,
‘ ஓகே சார்’ என்று சொல்லி போனை கட் செய்தாள் நந்தினி
ஆபீஸ் முடிந்து நந்தினி வர தமிழ் காரில் வெய்ட் பண்ணிக் கொண்டிருந்தான்.
‘போலாமா நந்தினி எந்த ஹாஸ்பிடல்’ என தமிழ் கேட்க,
‘சார் விஜய் ஹாஸ்பிடல். அப்புறம் போற வழில ஃப்ரூட்ஸ் வாங்கிக்கலாம்’ என நந்தினி கூற,
‘நோ ப்ராப்ளம் நந்தினி நான் ஏற்கனவே வாங்கிட்டேன்’ என தமிழ் எடுத்துக் காட்ட,
‘ம் நாம நினச்ச மாதிரி இவங்க. ரெண்டு பேருக்குள்ள என்னவோ இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்’ என நந்தினி தனக்குள் பேசிக் கொள்ள ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர்.
முதலில் நந்தினி வருவதை மட்டும் பார்த்த நிலா வேகமாய் ஓடிச் சென்று அவளை கட்டி பிடித்து அழுதாள். பிறகு தமிழ் வருவதை பார்த்து விட்டு கண்ணீரை துடைத்து விட்டு , ‘சார் நீங்க எப்டி இங்க ‘ என நிலா கேட்க,
‘சார் நீ ஏன் லீவுன்னு கேட்டாரு . அதான் எல்லாம் சொல்ல வேண்டியதா போச்சு. அப்புறம் நானும் வரேன்னு சொன்னாரு. சரின்னு கூட்டிட்டு வந்துட்டேன்’ என நந்தினி சொல்ல,
‘இப்ப உங்க தம்பி எப்டி இருக்கான்’ என தமிழ் கேட்க,
‘வாங்க சார். வா நந்தினி’ என இருவரையும் தனது தம்பியின் அறைக்கு அழைத்து சென்றாள் நிலா.
‘அம்மா இது நந்தினி என் கூட வேல பாக்குறவுங்க. இது தமிழ் . இவுரு ஆபீஸ்ல தான் நான் வேல பாக்குறேன்’ என நிலா தன் அம்மாவிடம் இருவரையும் அறிமுகப் படுத்தி விட்டு தன் தம்பியிடமும் அறிமுகம் செய்ய இருவரும் நிலாவின் தம்பியிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் நந்தினிக்கு வீட்டிலிருந்து போன் வர அவள் அனைவரிடமும் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்ப நிலா அவளை வழியனுப்ப அவளுடன் சென்றாள்.
அப்போது நிலா அம்மா தமிழுக்கு அருகில் சென்று உட்கார்ந்து, ‘என் பையன காப்பாத்துன்ன தெய்வம் நீங்க. நானும் நிலாவும் உங்கள அப்டி தான் பாக்குறோம். நிலா நீங்க கடனா பணம் குடுத்து ஹெல்ப் பண்ணதா சொன்னா. நீங்க இல்லைன்னா இந்த ஆப்ரேஷன் நடந்திருக்காது. முக்கால் வாசி ரெடி பண்ணாலும் மீதி பணம் கிடைக்காம ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆப்ரேஷனும் சீக்கிரமா பண்ணனும்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறமா தான் நிலா உங்க கிட்ட பணம் கேட்க நீங்க தந்ததா சொன்னா. எல்லாம் உங்களால தான் நல்லபடியா முடிஞ்சுது’ என அழுது கொண்டே சொல்ல,
‘ப்ளீஸ்ம்மா அழாதீங்க. அதான் எல்லாம் நல்ல படியா நடந்து முடிஞ்சிருச்சுல. எல்லாம் சரியாகிடும் தைரியமா இருங்க’ என தமிழ் ஆறுதலாய் நிலா அம்மா விடம் பேசிக் கொண்டிருக்க,
‘ஏய் அதெல்லாம் சரி. ஆமா உனக்கும் தமிழ் சார்க்கும் இடையில என்ன நடக்குது’ என நந்தினி கேட்க,
‘என்ன கேக்கறேன்னு புரியல’ என்றாள் நிலா.
‘ம் சரி சரி எனக்கு புரிஞ்சிருச்சு பாய்’ என சொல்லி விட்டு கிளம்பினாள். நிலாவும் நந்தினியை அனுப்பி விட்டு உள்ளே சென்றாள்.
‘அம்மா ஏதும் வாங்க வேண்டியிருக்கா’ என நிலா கேட்க,
‘டிபன் வாங்கிட்டு வந்துரு நிலா’ என நிலா அம்மா சொல்ல,
‘சரிம்மா’ என நிலா கிளம்ப,
‘ஒரு நிமிஷம் நிலா. அம்மா நானும் அப்டியே கிளம்பறேன்’ என தமிழ் சொல்ல,
‘சரிங்க தம்பி’ என்று சொல்லி நிலா அம்மா தமிழை வழியனுப்ப தமிழும் நிலாவும் வெளியே வந்தனர்.
‘சார் ரொம்ப தேங்க்ஸ் நீங்க குடுத்த பணத்தால தான் என் தம்பி உயிரோட இருக்கான்’ என நிலா சொல்ல,
‘நீங்க வேற நிலா. இந்த விசயத்த சொல்லி பணம் கேட்டுருந்தீங்கனாவே நான் குடுத்திருப்பேன். எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு உங்க பணத்தேவைய நான் தப்பா யூஸ் பண்ணதும் இல்லாம உங்கள சந்தேகப் பட்டு தப்பா வேற பேசிட்டேன்’ என தமிழ் வருத்தப்பட,
‘பரவால்ல சார். எது எப்படியோ நீங்க குடுத்த பணம் எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு.’ என நிலா சொல்ல,
‘சரி நிலா நான் கிளம்பறேன்’ என்று சொல்லி தமிழ் கிளம்ப நிலா டிபனை வாங்கிக் கொண்டு ரூமுக்கு சென்றாள்.
தமிழ் வீட்டிற்கு செல்ல, ‘ஏன்டா லேட்டு’ என அவன் அம்மா கேட்க அவன் நடந்தவற்றை அவனது பெற்றோரிடம் சொல்லி விட்டு தன் ரூமுக்கு சென்றான். அப்போது கவினிடமிருந்து போன் வந்தது.
‘என்னடா திடீர்னு கூப்டற’ என தமிழ் கேட்க,
‘இப்ப தான் கொஞ்சம் ஃப்ரீயானேன். அதான் உங்கிட்டபேசலாம்னு கூப்டேன். ஆமா எப்டி போகுது உன்னோட லவ் லைஃப்’ என கவின் கிண்டலாய் கேட்க,
‘ஏன்டா கேக்க மாட்ட. உன்னால தான் நான் இவ்ளோ கஷ்டப்படறேன்’ என தமிழ் சொல்ல,
‘ஏன்டா அந்த பொண்ண நிஜமாவே லவ் பண்ணிட்டியா’ என கவின் கேட்க,
‘ம் ஆமா அது ஒன்னுதான் குறச்சல். பாவம்டா அந்த பொண்ணு. அந்த பொண்ணோட பணத்தேவையை நான் தப்பா யூஸ் பண்ணிகிட்டேன். இப்ப தான் எனக்கு அந்த விசயம் தெரிஞ்சுது’ என நடந்தவற்றை சொல்லி முடித்தான் தமிழ்.
‘சாரிடா எனக்காக பண்ண போய் இப்டி ஆயிடுச்சு. பேசாம உண்மைய உங்க வீட்ல சொல்லிரு. பாத்துக்கலாம்’ என கவின் சொல்ல,
‘எப்டியோ ஆரம்பிச்சிட்டோம். கடைசி வரைக்கும் பாத்துடலாம். இந்த நாடகம் ஆரம்பிச்சது என்னவோ நான் தான் ஆனா முடிக்க வேண்டியது நீ’ என தமிழ் சொல்ல,
‘ம் அதுவும் சரி தான். ஆனா எனக்கு ஒன்னு தோனுது சொல்லவா. அந்த பொண்ணு நல்ல பொண்ணுன்னு நீயே சொல்ற அப்புறம் ஏன் நீ அந்த பொண்ண நிஜமாவே லவ் பண்ணக் கூடாது. ஏன் சொல்றேன்னா இத்தனை பேர் இருக்கும் போது உனக்கு ஏன் அவ கிட்ட ஹெல்ப் கேக்கனும்னு தோனுச்சு. அதே மாதிரி அவளுக்கு ஏன் உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோனுச்சு. யோசிச்சு பாரேன்’ என கவின் கேட்க,
‘சார் நீங்க முதல்ல உங்க பிரச்சனைய சால்வ் பண்ணுங்க. அப்புறம் அடுத்தவன் லவ்வ சேத்து வைக்கலாம்’ என சொல்லி போனை கட் செய்து விட்டு ஒரு நிமிடம் கவின் சொன்னதை யோசித்து விட்டு, ‘ச்சே நம்மளயே ஒரு நிமிஷம் மனசு தடுமாற வச்சுட்டானே’ ஏற்கனவே அவன் மனது தடுமாறியது தெரியாமல் தனக்குத் தானே பேசிக் கொண்டு தூங்க போனான் தமிழ்.
நிலாவின் தம்பி டிஸ்ஜார்ஜ் ஆகும் வரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று அலனோடு இருந்தான் தமிழ். ஒரு நாள் அவனது அம்மா அப்பாவையும் கூட்டிச் சென்றான்.
நிலாவுக்கும் தமிழ் இப்டி யெல்லாம் நடந்து கொள்வதைப் பார்த்து அவன் மேல் இருந்த மரியாதை அன்பாய் மலர தொடங்கியது. ஆனாலும் இடையிடையே அவனது அந்தஸ்து ஞாபகம் வந்து அவளது ஆசையை உடைத்தது.
ஒருநாள் கவின் தமிழின் ஆபீஸ் லேன்லைனுக்கு கூப்பிட நிலா எடுத்தாள்.
‘ஹலோ நான் நிலா பேசறேன் உங்களக்கு யார் வேனும்’ என நிலா கேட்க,
‘நான் கவின் தமிழோட ஃப்ரெண்ட்’ என கவின் சொல்ல,
‘ஒரு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சாருக்கு கனெக்ட் பண்றேன்’ என நிலா சொல்ல,
‘இல்லங்க நிலா நான் உங்ககிட்ட பேச தான் லேன் லைனுக்கு கூப்டேன்’ என்றான் கவின்.
கவின் நிலாவிடம் என்ன பேச போகிறான்?
தொடரும்….
,
