Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 13(b)

மைவிழி – 13(b)

என்ன பதில் கொடுப்பது எனத் தெரியாது தலையாட்டி வைத்தாள் சௌந்தர்யா.



Advertisement

எதையும் மனதில் வைத்துக் கொண்டு புறம் பேசாமல் நேரடியாக பேசுவளின் இந்தக் குணம் கொஞ்சம் மிரளவும் வைத்தது சௌந்தர்யாவிற்கு.

அவள் மிரட்சியைக் கண்டு வேதவி சிரிக்க சௌந்தர்யாவுமே புன்னகைத்தாள்.

Advertisement

Advertisement

“எங்கிட்ட ஒருத்தங்க எப்டி இருக்காங்களோ, அவங்ககிட்ட நானும் அப்படி தான் இருப்பேன் க்கா”என அலட்டலின்றிய பாவனையில் சொல்லி விட்டாள் வேதவி.

‘Give respect take respect’ பாலிஸி உடையவள் எனப் புரிந்தது.

Advertisement

ஒப்புதலாக தலையசைத்த சௌந்தர்யா வேறு என்னவோ கேட்க வேதவியின் கவனம் அவளிடமில்லை.

கிருஷ்ணனுடன் நுழைவாயிலில் நின்றிருந்த வாசனையே அடிக்கடி தீண்டிச் சென்றது வேதவியின் பார்வை.

அதைக் கண்டு கொண்டவளாக புன்னகைத்த சௌந்தர்யா, “நான் தூங்க போறேன் வேதா”என எழுந்து கொள்ள,

“நான் கொஞ்ச நேரம் இங்க இருக்கேன்க்கா”என்றாள் வேதவி.

“ஹ்ம்ம்,பால் வேணுமா வேதவி?” சௌந்தர்யா கேட்க,

“ராத்திரி பால் குடிச்சிட்டு தூங்கற பழக்கம் இல்லக்கா” என்றாள்.

சரியென்று அவள் உள்ளே சென்று விட,கணவனுக்காக அங்கேயே அமர்ந்திருந்தாள் வேதவி.

தன் மேலுள்ள கோபம் புரிந்தாலும் அவள் பக்கத்தை பற்றிக் கேட்கவாவது பேச மாட்டானா என ஏக்கமும் ஆவலுமாக இருந்தாள்.

ஆனால் வாசன் வரவில்லை. கிருஷ்ணன் மட்டும் வந்தவர், முற்றத்திலிருந்தவளைக் கோபமாக பார்த்து விட்டு உள்ளே செல்ல, அவர் பார்வையில் புருவம் சுருக்கினாள் வேதவி.

வாசனைப் பார்த்தாள். கேட்டடியிலே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அடிக்கடி தாடியை நீவிக் கொள்வதும், பின்னந்தலையை அழுந்த கோதிக்கொள்வதுமாக இருந்தவன் கோபத்தைக் குறைக்க முயற்சிக்கிறான் எனப் புரிந்தது வேதவிக்கு.

இத்தனை நாட்களில் வாசனை கவனித்து பார்த்தவளுக்கு அதீத டென்ஷன் அல்லது கோபம் வந்தால் இப்படித்தான் செய்வான் எனக் கணவனைப் புரிந்து வைத்திருந்தாள் அவள்.

நிச்சயமாக டென்ஷன் அல்ல! கோபம் தான் என அவன் நடையின் அழுத்தத்தில் விளங்கியது மனைவியவளுக்கு.

சாப்பிட்டு எழுந்த கணவனை அழைத்துச் சென்றதுடன்,சற்று முன் கிருஷ்ணன் தன்னை முறைத்து விட்டுப் போனதும் என்னவோ அவர் தான் பேசியிருக்கிறார் எனப் புரிந்தது.

ஆனால் தன்னைக் கொண்டு தான் அண்ணன் தம்பி இருவருக்குமிடையில் பேச்சு எனத் தெரியவில்லை இவளுக்கு.

வேதவி மீதிருந்த அதிருப்தியை தம்பியிடம் கூறியிருந்தார் கிருஷ்ணன்.

“கீர்த்தி என்ன இருந்தாலும் உன் பொண்டாட்டி இன்னைக்கு நடந்து கிட்டது சரியில்ல தம்பி! அம்மா பேச்சைக் கேட்க மாட்டேன்னு சொல்றா!நாமளே அவங்களை இதுவரைக்கும் எதிர்த்து பேசுனதுல்ல.வாணிய வேற மிரட்டுது அந்த பொண்ணு. நேத்து தான் இங்க வந்த பொண்ணு. எனக்குப் பிடிக்கல கீர்த்தி”என்றார் கிருஷ்ணன் அதிருப்தியாய்.

வாசன் நிதனமாய் தன் அண்ணனை ஏறிட்டான்.

“என் பொண்டாட்டின்னா உங்களுக்கு யாருண்ணா?அந்தப் பொண்ணுன்னு வேற சொல்றீங்க? அந்தப் பொண்ணுல்ல வேதா, வேதவி!எனக்கான மரியாதை எதுவோ அதுதாண்ணா அவளுக்கும்” என்றான்.

“ப்ச், கீர்த்தி. நான் என்ன..சரிப்பா ஸாரி” என்றார் அவன் பார்வையில்.

“மன்னிப்பு கேட்கணும்னு அப்டி சொல்லலண்ணா. என்னை நம்பி, நம்மல நம்பி நம்ம குடும்பத்துக்குள்ள வந்த பொண்ணு.இப்போ நம்ம பொண்ணு! இங்க நாம குடுக்கற மரியாதை தான் நாளைக்கு வெளிலயும் அவங்களுக்கு கிடைக்கும்” என்றவன்,

“நேத்து வந்தவளுக்கு நம்ம வீட்டவங்களை எதிர்த்துப் பேச என்ன அவசியம்-ண்ணா? அப்போ நம்ம வீட்டாளுங்க தான் அவளைப் பாதிக்கற மாதிரி பேசிருப்பாங்களா இருக்கும்னு உங்களுக்கு தோணல?நம்ம அம்மாவா இருக்காது.. நான் சொல்லாமலே உங்களுக்கு யார்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்றான் பொறுமையாக.

“என்ன இருந்தாலும் வாணிம்மா மூத்தவ இல்லையா கீர்த்தி? அந்தப் பொண்ணு..வே.. வேதா கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் தம்பி. எதுவுமே இங்க விட்டுப் போற உறவு இல்லையே!”என்றார் கிருஷ்ணன்.

“பொறுமையா.. ஹ்ம்ம்!வாணி அண்ணிட்ட வேதவி அப்படி பேசினதுல எனக்குமே உண்மையான வருத்தம் ண்ணா! அதே மாதிரி தப்புன்னா தப்புன்னு ஒத்துக்கிடனும்ணா..!ஆனா என் பொண்டாட்டிய வேதவியா எனக்குத் தெரியும்.ஒருத்தங்க அவக்கிட்ட எப்டி நடந்துக்கிறாங்களோ அதே மாதிரி தான் அவக்கிட்டருந்தும் அவங்களுக்கான மரியாதை கிடைக்கும்” என்றான்.

அண்ணியாரை மட்டுமன்றி எந்த இடத்திலுமே மனைவியையும் விட்டுக் கொடுக்காத தம்பியின் பேச்சில் அவனை நினைத்து பெருமை கொண்டார் கிருஷ்ணன்.

எனவே,வேறொன்றும் பேசவில்லை அவர். வாசனுடன் பேசினாலும் அவருக்கு வேதவி மேல் முதலே ஏற்பட்ட அதிருப்தி மறைய மறுத்தது. அதனால் தான் வேதவியைக் கடந்து செல்லும் போதும் அலட்சியமாக பார்த்திருந்தார்.

இங்கோ வாசனுக்கு,அண்ணன் வரையும் மனைவியைப் பேசும் படி ஆகி விட்டதே என வேதவியின் மேல் தான் கோபம் அதிகரித்தது.

கிருஷ்ணனிடம் விட்டுக் கொடுக்காமல் பேசினாலும், அவர் சொல்வது போல் விட்டுப் போகின்ற உறவு இல்லையே, எப்படி என்றாலும் மனைவி பொறுமையாக கையாண்டிருக்க வேண்டுமோ என நினைத்தான் வாசன்.

‘கேரக்ட்டர் அஸ்ஸாசினேஷன்’என்று வேதவி பேசியதில் கேட்டிருந்தான் தான் இவன். வாணி எதுவோ அவளது குணத்தை சொல்லிருக்கிறார் என்ற மட்டில் ஓரளவு புரிந்திருந்தது வாசனுக்கு.

கோபத்தை தணித்துக் கொண்டு பெரு மூச்சுடன் வீட்டை நோக்கி நடந்தான். தன்னையே ஆவலாக பார்த்திருந்த மனைவியைக் கண்டு கொள்ளாமல் அறைக்குள் சென்று மறைந்தான் வாசன்.

படிக்க வேறு இருந்தும் அவனுக்காக அல்லவா காத்துக் கொண்டிருந்தாள். வேண்டும் என்றே கண்டு கொள்ளாமல் செல்கிறான்!

கணவனின் அலட்சியத்திலும், பாரா முகத்திலும் வேதவிக்கு கண்கள் கலங்கும் போல் இருந்தது. 

‘வேதவி அழ மாட்டா’ தனக்கே சொல்லி கண் சிமிட்டிக் கொண்டவள்,

‘போயேன் போ!இப்டியே இருந்துக்கோடா கேவி. நான் பேசினாக் கேளு’ கோபமாய் நினைத்தவள் தானும் அறை நுழைந்தாள்.

ஆடை மாற்றி விட்டு ட்ராக் பேண்ட், கையில்லாத பனியன் சகிதம் கண்களுக்கு மேலாக வலது புறங்கையை நெற்றியில் வைத்த படி படுத்திருந்தான் அவள் கணவன்.

சற்று நேரம் அவனை முறைத்துக் கொண்டு நின்றவள் வாசனிடம் அசைவில்லாதது தெரிந்து பற்களை நறநறத்தாள்.

வீம்பாக படிக்க உட்கார்ந்தாள். ம்ஹூம்! படிக்கவே முடியவில்லை அவளால். புத்தகத்திலிருக்கும் ஒரு எழுத்தாவது மண்டையில் ஏறுவேனா என்றிருந்தது.

இத்தனை நேரம் கணவனிடம் அலட்சியம் காட்டிருந்தாலும் அவன் கோபத்தில் உள்ளுக்குள் தவிப்பு தான் பெண்ணுக்கு.

அவள் அலசிட்யமெல்லாம் காற்றில் கரைந்து போக தவிப்புடன் கணவனைப் பார்த்தாள். படுத்திருந்தவன் தூங்க வில்லை என நன்றாகவே தெரிந்தது. மீண்டும் கோபம் வந்தது மூக்கு நுனியில் அமர்ந்து கொண்டது இவளுக்கு!

எத்தனை அழகாகத் தொடங்கிய நாள். நேற்று திருமணம் ஆனதிலிருந்து காலையில் அவன் செய்த கலாட்டாக்கள் என அத்தனை மகிழ்ச்சியாக இருந்தோம் என்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை வேதவிக்கு.

என்னவோ அயர்வு. திருமணமாகி ஒரு நாளிலே இதோ இப்போது துளியும் மனதில் மகிழ்வில்லை இருவருக்கும்.

ஆனாலும் அவள் பேசியது பற்றி எந்த இடத்திலும் தவறென்று வருந்தவில்லை வேதவி. மாறாக வாணியைத் தான் மனதுக்குள் அர்ச்சித்தாள்.எப்படி ஒரு கீழ்த்தரமான எண்ணம்! மனிதர்களிடையே நிறத்தை வைத்து அவர்களின் குணத்தை எடை போடுவது.

‘இவருக்கு என் மேல அப்படி என்ன பிரச்சனை?ஹ்ம்ம்!கல்யாணம் பண்ணா நாத்தனார் கொடுமை இருக்கும்னு டீவி சீரியல், படிக்கிற கதை எல்லாம் காட்ரானுங்க பார்த்தா.. இங்க ஓரக்கத்தி கொடுமை நடக்கும் போலையே?’ என யோசித்தவள்,

‘இந்த சுஜி, ரதி அண்ணீஸ்லாம் நல்லாத்தானே இருக்காங்க. என்னோட சண்டை பிடிச்சதும் இல்ல.ஹும், அவங்க ரெண்டு பேரும் ஒரு சண்டை போட்டுருக்காங்களா??’ தனக்கே கடுப்படித்தவள் அதே கடுப்பை வாட்ஸாப்பில் இவர்கள் மூவரும் இருக்கும் குழுவில் ‘நீங்க ரெண்டு பேரும் ஒரு சண்டையாவது போடலாம்ல’என அனுப்பி வைத்தாள்.

மீண்டும் மாலையில் நடந்த நினைவு வந்தது. ப்ச்,வாணியை எதற்கு நினைப்பானேன்! அந்த நினைவை விரட்டி அடித்தவள் மீண்டுமொருமுறை கணவனை பார்த்து விட்டு புத்தகத்தின் மீதே கவிழ்ந்து கொண்டாள் வேதவி. 

சற்று நேரத்திற்கெல்லாம் இவள் அருகில் நிழலாடுவது தெரிந்தது.

‘டக்’ என சத்தத்துடன் மேசையில் நீர்க்குவளையை வாசன் வைப்பது அதிலிருந்த சில நீர்த் துளிகள் இவள் வலது கரத்தில் தெரித்ததில் உணர்ந்தாலும் நிமிர்ந்தாளில்லை வேதவி.

“அடம் புடிச்சவ”முனகிக் கொண்ட வாசன், அவள் தலை வருட உயர்ந்த கரத்தை அடக்கி விட்டு மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

அவன் விலகியது தெரிந்தும் கவிழ்ந்தே கிடந்தவளை ‘டிங்’ எனும் அலைபேசியின் குறுஞ்செய்தி சத்தம் களையச் செய்ய எடுத்து பார்த்தாள்.

அவள் கணவன் தான் அனுப்பியிருந்தான்.

“தண்ணி குடிச்சிட்டு படிக்கிற வழியப் பாரு”என.

“போன்ல தான் பேசுவாரா தொரை!” பல்லைக் கடித்தாள் வேதவி. கணவனை திரும்பி பார்த்து முறைக்க,அவனோ போனில் தான் கவனம் வைத்திருந்தான்.

‘நீ சொல்லி நான் எங்க செய்றது’ என வேண்டும் என்றே படிக்காமல் புத்தகத்தை மூடி வைத்தாள்.

புக் மூடும் சத்தம் கேட்டாலும் அதை அலட்சியப் படுத்தி விட்டு மீண்டும் என்னவோ டைப் செய்து மனைவியை சீண்டும் விதமாக அனுப்பினான் வாசன்.

“Bad luck in the exam” வேதவி அதைப் படித்தவள், கணவனை என்ன செய்தால் தகும் எனப் பார்த்தாள்.

கீழுதட்டை மடித்து அவன் சிரிப்பை அடக்குவது தெரிய அங்கிருந்த பேனையை அவன் மேல் விட்டடித்தாள்.

“அவுச்!”என்று வாசன் நிமிர்ந்து அவளை முறைக்க,

“நல்லா வலிக்கட்டும்!கிராதகா கேவி”என சத்தமாகச் சொன்னவள், கணவன் சீண்டியதில் மீண்டும் படிக்க உட்கார்ந்து விட்டாள்.

அன்றைய இரவு இருவரின் ஈகோவிலும் கழிந்து போனது.

காலையில் கணவன் எழும் நேரமே தானும் எழுந்து கொண்டாள் வேதவி.

வாசன் மனைவியைப் பார்க்க, அவன் மீதொரு பார்வை வீசி விட்டு குளிக்க வெளியில் சென்று விட்டாள்.

அப்போது தான் மேகலையும் எழுந்து முகம் கழுவி வந்திருந்தார்.

“குட் மார்னிங் அத்த!” என்றவளிடம்,

“என்னம்மா நேரமே எழுந்துட்ட? கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாம்ல? சௌந்து கூட இன்னும் எழுந்துக்கல” என்றார் மேகலை.

“பரவால்ல த்தை. இன்னைக்கு மார்னிங் எக்ஸாம் வேற இருக்கு. அதான் எழுந்துட்டேன்.” என்றாள் இவள்.

“எக்ஸாம் பத்தி கீர்த்தியும் சொன்னான். எத்தனை மணிக்கும்மா?”

“பத்து மணிக்கத்தை!”

“சரிம்மா!” என்றவரிடம் தலையசைத்தவள் குளிக்கச் சென்று விட வாசன் யோசனையுடன் கூடம் வந்தான்.

“நீயும் எழுந்துட்டியா கீர்த்திப்பா?” என மகனைக் கேட்ட மேகலை, அவன் அருகில் வந்து,

“என்னடா நைட்டு உன் பொண்டாட்டி பலமா ஒன்னும் உன்னை அடிச்சிடலையே?” என சின்னக் குரலில் கேட்க,

“ம்மா!”என திகைத்தான் வாசன்.

“என்னம்மா கேள்வி இது?”

“ச்சு, தப்பிச்சிட்டியா?”என அவர் கவலைப்பட,

“மிஸ்ஸ.மணி மேகலை அமரேசன்..!என் பொண்டாட்டி என்னை எதுக்காம் அடிக்கணும்?” என்று தாயின் பெயரை நீட்டி முழக்கி கேட்டான் இவன்.

“பின்ன என்னடா!நேத்து எதுக்கு பொம்பளைங்க சண்டைல நீ தலைய விட்டியாம்?”என நொடித்தவர் நேற்று நடந்தை மகனிடம் சொன்னார்.

புது மண தம்பதிகளுக்கு இந்த விடயத்தால் மனஸ்த்தாபம் ஏற்பட வேண்டாமென நினைத்தவராக,

“என்ன இருந்தாலும் வேதவிக்கு கோபம் வரும்ல! எனக்காக பேச வந்த பொண்ணு. உன் அண்ணி இன்னும் கொஞ்சம் பேசி அவளை கோபப்படுத்திட்டாங்க.” என்றார்.

தாய் சொல்லியதக் கேட்டுக் கொண்டவனுக்கு கவலையும் வருத்தமும்.

“ப்ச், அண்ணி..” என்றவன் பேச்சை நிறுத்தி விட்டு அன்னை முகம் பார்க்க,

“இதுல நீ வேற மன்னிப்பு கேட்டு வெச்சிட்ட! அதான் அடி பலமோன்னு” என நமட்டு சிரிப்பு சிரித்தார் மேகலை.

அன்னையை முறைத்த வாசன்,

“புள்ளை மேல எம்புட்டு பாசம் உனக்கு!மேகலை.. மணி மேகலை” என அவர் கன்னம் கிள்ளினான. கேலி செய்ய எப்பவாவது தாயை ஒருமையில் பேசுவான் இவன். 

“நாங்க பொம்பளைங்க சண்டை போட்டுப்போம். அப்பறம் ஒன்னு சேர்ந்துக்குவோம்டா மவனே! ஆம்பளைங்க நீங்க தலை விட்டா உங்களுக்குத்தான் சேதாரம் அதிகம். பார்த்து சுதானமா இருந்துக்கோடா..!” என்றார் கேலியாய்.

“நல்லா சொல்றம்மா நீ!” என்றவன்,

“என்ன இருந்தாலும் உன் மருமக வேதா கொஞ்சம் பொறுமையா இருந்துக்கலாம்”என்றான் வருத்ததுடன்.

“கீர்த்திப்பா. இப்ப தான் சொன்னேன் பொழச்சிக்கோன்னு” என சிரித்தவர் மருமகள் வரக் கண்டு அவளோடு பூஜை அறை சென்றார்.

இவன் சிரித்தபடியே தன் வேலையை முடித்து விட்டு வர, மாமியாரும், மருமகளும் அடுக்களையில் நின்றிருந்தனர்.

மாமியாரின் பின்னோடு தான் சுற்றிக் கொண்டிருந்தாள் வேதவி. 

மகனுக்கு தண்ணீர் கொடுத்த மேகலை,மருமகளுக்கு காபி போட எத்தணிக்க தடுத்தாள் வேதவி.

“இல்லத்தை நானே போட்டுக்கறேன்!” என்றாள் விடாப்பிடியாய்.

மருமகளை ஆழ்ந்து பார்த்தார் மேகலை.

அவர் பார்வையில் தலையைத் தாழ்த்திக் கொண்ட வேதவி,

“இ..இல்லத்தை நீங்க சொல்லிக் கொடுங்க, நான் செய்றேன். டீ போட கத்துக்கறேன். உங்களுக்கும் சமையல் ஹெல்ப் பண்றேன்” என்றாள்.

ஆக,நேற்று வாணிப் பேசியதற்கு தான் இத்தனை வீம்பாய் காலையில் எழுந்து சமையலில் உதவி செய்கிறேன் என்று நிற்கிறாள் என அவருக்கு புரிந்தது.

புதிதாக வந்த பிள்ளையை இந்தளவிற்கு நிற்க வைத்து விட்டோமே என இவருக்கு தான் கவலையாக இருந்தது.

மாமியார் அமைதியில் அவரை நிமிர்ந்து பார்த்தவள்,அவர் முகம் காட்டிய கவலையில் பதறி மேகலை கை பற்றிக் கொண்டாள்.

“ஸாரிடாம்மா வேதா”எனவும் சொல்லி விட, இவளுக்கு வருத்தமாகி விட்டது.

“என்னத்தை நீங்க!எங்கிட்ட போய்” என்றாள் மிரட்டுவது போல்.

புன்னகைத்தவர்,

“எதையும் நாம முழு மனசா செய்ய நினைக்கனும் வேதா!”என்றார்.

சரியென தலையசைத்தாள் வேதவி.

“கழுதை சமைக்கிறது ஒரு வேலைன்னு நீ செய்றேன்னு நிக்கற. எப்படி இருந்தாலும் பொம்புள ஜென்மத்துக்கு இதெல்லாம் காலப் போக்குல கை வந்த கலையாடும்மா வேதா! உனக்கு படிக்க இருந்தா போய் படி”என்றார் சிறு சிரிப்புடன்.

“எல்லாம் படிச்சிட்டேன் த்தை! முன்னாடி வீம்புக்கு தான் செய்றேன்னு சொன்னேன்.இப்போ நிஜமா ஹெல்ப் பண்றேன் த்தை” எனக் கண்களை சுருக்கி சொல்லிக் கொண்டிருக்க, சௌந்தர்யாவும் வந்து சேர்ந்தாள்.

பின் மூவரும் சேர்ந்து காலை உணவை தயார் செய்தனர். வேதவி தனக்கு தெரிந்த கட்டிங், வெட்டிங் வேலைகளை சிரத்தை எடுத்து செய்து கொடுத்தாள்.

அன்றைய காலை சமையல் கொஞ்சம் அதிகமாவே இருந்தது. காரணம், வாரத்தில் ஒரு நாளில் அமரேசன் வீட்டில் தான் அவர் பிள்ளைகளுக்கு காலை உணவு.

கௌசல்யா தவிர்த்து மற்ற பிள்ளைகள் நால்வரும் பக்கத்திலே இருப்பதால் இப்படியான ஏற்பாடு.

கௌசல்யாவும் ஒரு சில நாட்களில் மதிய உணவுக்கு வந்து விடுவாள். அன்று ஐவரும் இங்கு கூடிடுவர்.

ஆகவே அன்று காலையும் அங்கு தான் எல்லாருக்கும் உணவு! விஜயா வந்து விட, பரதன் சற்று தாமதமாகத் தான் வந்தார். வாணி தான் நேற்று நடந்ததை பிடித்துக்கொண்டு வர மாட்டேன் என அவரிடம் சண்டை போட்டிருக்க, மனைவியை நன்கு அறிந்தவர், ‘நீ வருகிறாயா வா நான் போறேன்’ என வந்து விட்டார்.

சற்று நேரத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வாணியும் பின்னால் வந்தாள்.

வாசன் தான் வீட்டவர்களுக்கு உணவு பரிமாறினான்.

வேதவி காபியுடன் வந்தவள்,

“அக்கா உங்களுக்கு காபி!”என வாணியிடம் கொடுக்க பதறி விட்டாள் வாணி.

“என்னக்கா..!நானே போட்டேன் வித் எஸ்ட்ரா பே..”என இழுத்தவள்,

“வித் என் பேரன்போட” என்று நீட்டினாள்.

வாசனுக்கு மனைவி வம்பு செய்வது புரிந்தது.

ஆனால் வாணி இப்படி பயத்துடன் முழித்து இருக்க காரணம் பிடிபடவில்லை.

‘பேதி மாத்திரை போட்டு காபி தருவேன்’ என வேதவி சொன்னது வாணியைத் தவிர எவருக்கும் தெரியாதே.!

“வாங்கிக்கோங்க!” வேதவியுடன் சேர்ந்து மற்றவர்களும் குரல் கொடுக்க,

“எ.. எனக்கு காபி வேணாம்! நான் குடிக்கிறதில்ல”என்றாள் வாணி நடுக்கமாய்.

“அச்சோ, உங்களுக்கு ஆசையா போட்டேனே”வேதவி கவலை போல் உதடு பிதுக்க,

“இ.. இல்ல எனக்கு வேணாம்” என எழுந்தே விட்டாள் வாணி.

நமட்டு சிரிப்பு வேதவியிடம்.

கீர்த்தி வாசன் யோசனையுடன் மனைவியைப் பார்த்தான்.

‘கேடி,என்னவோ அண்ணியை மிரட்டிருக்கா!’

*******************

ஒன்பது மணிக்கெல்லாம் பரீட்சைக்குச் செல்ல ஆயத்தமாக தொடங்கி விட்டாள் வேதவி.

இவர்கள் வீட்டிலிருந்து காலேஜ் சற்றே தூரமென்பதால் பேசாத கணவனுடன் போக விரும்பாது ஆட்டோவில் செல்வதாக முடிவில் இருந்தாள்.

கணவனிடம் இன்னும் பேசவில்லை. அவள் பேசாமல் தானும் பேசப் போவதில்லை என அவனும் இருந்து கொண்டான்.

வேதவி அவனை அலட்சியப்படுத்திய படி தன் பாட்டிற்கு இருக்க,வாசன் பல்லைக் கடித்தான்.

“வெளில வெயிட் பண்றேன் வா!”என மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்ப.. அதைப் படித்தவள்,

“பேசாதவங்க கூட எல்லாம் வர முடியாது. நானே போய்ப்பேன்!” என்றாள் அவன் முன்னே வந்து கோபமாய்.

அவளை உஷ்ணமாகப் பார்த்தவன், வெளி நடப்பு செய்து விட, கணவனை சட்டை செய்யாமல் தயாராகி விட்டாள்.

வாசன் காத்து நிற்பதை கண்டு கொள்ளாமல் செல்ல, ‘திமிர் பிடிச்சவ!’ பைக்கை முறுக்கினான்.

முறைத்துக் கொண்டே ஏறினாள் வேதவி.

சற்று தூரம் சென்றதும்,

“அண்ணிய ஏதாவது மிரட்டுனியா?” எனக் கேட்டவனை பைக் கண்ணாடி வழியே முறைத்தாள் இவள்.

அவள் பதிலின்றிப் போக இவனும் பேசவில்லை.

காலேஜ் வாசலில் இறக்கி விட்டவன், 

“ஹ்க்கும்,பெஸ்ட் ஆஃப் லக்”என்றான் வாசன்.

“பேட் லக்னு சொன்னவங்க வாழ்த்தல்லாம் ஏத்துக்க முடியாது” என்று முனகியவளின் மனது அவனின் வேதவி எனும் அழைப்பை வேண்டி நின்றது.

கோபம் கொண்டதிலிருந்து வாசன் அவள் பெயரை அழைத்திருக்கவில்லை. முகம் சுருங்கி விட்டது வேதவிக்கு.

“சரண்டர் வேதவி!ஆல் த பெஸ்ட். எக்ஸாம் நல்லா செய்திடு”என்று புன்னகைத்தான்.

கண்கள் மின்னினாலும் “ஹ்க்கும்!” என குறும்பாய் நொடித்தவள்,

“மிரட்டுனியான்னு கேட்டீங்க தானே? மிரட்டினேன் தான்!காபில பேதி மாத்திரை போட்டு தருவேன்னேன்” என்றாள் அலட்டலின்றி.

“அடிப்பாவி!”

“இனிமே உங்களுக்கும் அது தான்!”என்று விட்டு செல்பவளை சிறு புன்னகையுடன் பார்த்திருந்தான் கீர்த்தி வாசன்.

இருவரும் சமாதானமாகும் சமயத்தில் மீண்டுமொரு சண்டை ஆரம்பமாகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!