நீ எனக்கு தந்த காதல் – 10.
நிலாக்கு தமிழ் கொடுத்த பிறந்தநாள் பரிசு இதோ.
ஆபீஸில் நிலா தன் பிறந்தநாளுக்கு அனைவருக்கும் அம்மா செய்த ஸ்வீட்டைக் கொடுத்து விட்டு தமிழ் அறைக்கு செல்கிறாள்.
Advertisement
இனி,
நிலா உள்ளே செல்ல அனுமதி கேட்க தமிழும் வரச் சொல்கிறான்.
Advertisement
Advertisement
‘சார் இன்னிக்கு என்னோட பர்த்டே. இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்குங்க’ என நிலா டிபனை நீட்ட,
‘மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே நிலா. இந்தாங்க’ என சொல்லி அருகில் இருந்த கிஃப்டை எடுத்து தமிழ் நிலாவிடம் நீட்ட,
Advertisement
‘சார் எனக்கு இன்னைக்கு பர்த்டேன்னு உங்களுக்கு எப்டி தெரியும்’ என ஆச்சர்யமாய் நிலா கேட்க,
‘இது ஒரு பெரிய விசயமாங்க. இந்தாங்க கிஃப்ட்ட புடிங்க’ என தமிழ் கூற.
‘சார் சொல்றேன்னு தப்பா நினச்சுக்காதீங்க எனக்கு கிஃப்ட் எல்லாம் வேணாமே. உங்க வாழ்த்து மட்டும் போதும். வேனா உங்க மனசு கஷ்டப்படாம இருக்க இந்த பொக்கே மட்டும் வாங்கிக்கறேன்’ என்று சொல்லி தமிழிடமிருந்து அவன் கையில் இருந்த பூங்கொத்தை மட்டும் வாங்கிக் கொண்டாள் நிலா.
தமிழ் சிரித்துக் கொண்டே அவன் வைத்திருந்த மீதி கிஃப்டையும் அவள் கையில் வலுக்கட்டாயமாய் திணித்து விட்டு, ‘அதுல என்ன இருக்குன்னு முதல்ல பாருங்க. அதுக்கப்புறம் அது வேணுமா வேணாமான்னு முடிவு பண்ணுங்க. எனக்காக தயவு செஞ்சு பிரிச்சு பாருங்க ‘ என தமிழ் சொல்ல நிலா அவன் கிஃப்டாக குடுத்த இரண்டு கவர்களையும் ஒவ்வொன்றாக பிரித்து பார்க்கிறாள்.
முதலில் பிரித்த கவரில் அவர்கள் இருவரும் போட்டுக் கொண்ட அக்ரிமண்ட் பேப்பரும். அதை முடித்துக் கொண்டதற்கான இன்னொரு அக்ரிமண்ட் பேப்பரில் அவன் கையெழுத்து போட்ட ஒரிஜனலும் இருந்தது.
அதை பார்த்து விட்டு, ‘சார் நிஜமாவா. உங்க பிரச்சனை யெல்லாம் முடிஞ்சுருச்சா. என்னால நம்ப முடியல. இவ்ளோ சீக்கிரம் இது நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல. நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்க பேரண்ட்ஸ ஏமாத்தறன்னு எனக்கு ரொம்ப கில்டியா இருந்துச்சு. ரொம்ப நன்றி சார். நானே ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்து உங்க பேரண்ட்ஸ் கிட்ட உண்மைய சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு வரேன்’ என்று ஏதோ பெரிய தப்பு செய்வதை நிறுத்தியது போல் மிகவும் சந்தோஷத்தில் சொன்னாள் நிலா.
‘அதெல்லாம் ஒன்னும் நீ பண்ண வேண்டாம். நானே என் பேரண்ட்ஸ்க்கு சொல்லி புரிய வச்சுக்கறேன்’ என தமிழ் சொல்ல,
‘சார் இதுவே எனக்கு ரொம்ப பெரிய கிஃப்ட். இந்த கிஃப்டே போதும். இந்தாங்க’ என சொல்லி இன்னொரு கவரை நிலா தமிழிடம் நீட்ட,
‘எல்லாத்துலயும் உனக்கு அவசரம் தானா. ஒழுங்கா அதையும் பிரிச்சு பாத்திட்டு வேணாம்னா அப்புறமா எங்கிட்ட குடு’ என நிலாவின் தலையில் அந்த கவரை வைத்து லேசாக அடித்து விட்டு அதை அவளிடம் குடுத்தான் தமிழ்.
நிலா அந்த கவரை பிரிக்க அதில் அவளது ஹோட்டலை விற்றவரிடமிருந்து திரும்பி மீட்டு அவளது பெயரில் ரிஜிஸடர் பண்ணியதற்கான பத்திரம் இருந்தது.
அதை பார்த்த நிலாவின் கண்களில் ஆச்சரியமும் கண்ணீரும் நிறைந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் அழ ஆரம்பிக்க,
தமிழ் வேகமாக ஒடி வந்து நிலாவை சமாதானப் படுத்தி அமர வைத்து தண்ணீர் குடிக்க தந்தான்.
‘சார் இதெப்படி உங்களுக்கு தெரியும்’ என நிலா கேட்க,
‘அன்னிக்கு நீங்களும் நந்தினியும் பேசனத ஒட்டுக்கேக்கல எதேச்சயா கேட்டேன். சரி உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு. நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணீங்கல்ல அதுக்கு பதிலா தான் இத செஞ்சேன். நீங்க பிஸ்னஸ்ல நல்லா வருவீங்கன்னு எனக்கு உங்க மேல நிறைய நம்பிக்கை இருக்கு. ஆனா இது கடனா தான் உங்களுக்கு குடுக்கறேன். மறக்காம மாசா மாசம் வட்டி வேண்டாம் அசல் மட்டும் கொஞ்சம் கொஞ்சமா குடுத்துடுங்க. காசு விசயத்துல நான் ஸ்டிரிட்டா இருப்பேன். ஓகேவா’ என ஸீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு தமிழ் சொல்ல,
‘சார் நீங்க எனக்கு பண்ணிருக்கறது எவ்ளோ பெரிய உதவின்னு உங்களுக்கே தெரியாது. அதுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. எப்டி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல. கண்டிப்பா என் மேல உங்களுக்கு இருக்கற நம்பிக்கைய நான் காப்பாத்துவேன். நீங்க குடுத்த காசையும் சீக்கரமாவே உங்களுக்கு திருப்பித் தந்தறேன். என் வாழ்க்கைலயே இன்னிக்கு தான் ரொம்ப பெஸ்டான நாள். அதுக்கு காரணம் நீங்க தான். சார் என்னை எப்டி நீங்க இந்த அளவுக்கு நம்புறீங்க ‘ என நிலா கேட்க,
‘ம் இந்த விசயத்துல எல்லாம் உன்மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. ஆனா என் காதலை ஏத்துக்குற விசயத்துல தான் எனக்கு உன்மேல நம்பிக்கையே இல்ல. ஆனா எம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா நம்ம லவ்க்கு உன்னை ஓகே சொல்ல வச்சிருவேன்னு’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டு, ‘நீங்க எனக்கு பண்ண ஹெல்ப்க்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்ல. சரி நீங்க போய் ரிலாக்ஸ் ஆகுங்க. போகும் போது ஃபேஷ் வாஷ் பண்ணிட்டு போங்க ‘ என்றான் தமிழ்.
நிலாவும் தமிழ் ரூமிலேயே வாஷ்ரூமில் ஃபேஷ் வாஷ் செய்து விட்டு கிஃப்டை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
யாரும் பார்ப்பதற்கு முன் கொண்டு வந்த கவரை தன் பேக்கில் வைத்து விட்டு தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்த நிலாவிடம் வேலை விசயமாக பேச வந்தாள் நந்தினி.
நிலாவின் டேபிளில் பர்த்டே விஷ் போட்டு இருந்த பொக்கேயை பார்த்த நந்தினி, ‘நிலா இந்த பொக்கே யார் குடுத்தது’ என கேட்க,
‘அச்சோ இத மறந்துட்டனா’ என தனக்குள் நினைத்துக் கொண்டு, ‘இதுவா தமிழ் சார் தான் பர்த்டே கிஃப்டா குடுத்தாரு’ என்றாள் நிலா.
‘நிஜமாவா நிலா. அப்ப கன்பார்ம் ‘ என நந்தினி கூற,
‘என்ன கன்பார்ம். எனக்கு ஒன்னும் புரியல’ என நிலா கேட்க,
‘நீ தான் அசடாச்சே. உனக்கு எப்படி புரியும். தமிழ் சார் உன்னை லவ் பண்றாரு. ஒரு மனுஷன் இத விட எப்டி தன்னோட லவ்வ சொல்ல முடியும். ஆனா அவருக்கு தெரியல அவரு லவ் பண்றது ஒரு அசடுன்னு’ என நந்தினி சொல்லி சிரிக்க,
‘நந்தினி நீ இப்ப எங்கிட்ட அடி வாங்கப் போற. பொக்கே கிஃப்டா குடுத்தா லவ் பண்றதா அர்த்தமா’ என நிலா கேட்க,
‘இரு நான் உனக்கு புரிய வைக்கிறேன். இதுக்கு முன்னாடி நீ அவருகிட்ட உன் பர்த்டே டேட் சொல்லிருக்கியா’ என நந்தினி கேட்க,
‘இல்ல ‘ என நிலா சொல்ல,
‘அப்புறம் எப்டி எங்க எல்லாருக்கும் கூட ஏன் உன் க்ளோஸ் ப்ரெண்ட் எனக்கு கூட தெரியாத உன் பர்த்டே டேட் அவருக்கு தெரியும்’ என நந்தினி கேட்க,
‘ம் என்னோட பயோ டேட்டாவே அவரு கிட்ட இருக்கு அதுல பாத்திருப்பாரு’ என நிலா சொல்ல,
‘அவ்ளோ ஆர்வமா உன் பிறந்த நாள அவரு ஏன் தெரிஞ்சு வச்சுக்கணும். எங்க யாரு பர்த்டேயும் அவருக்குத் தெரியாது. ஆனா நாங்க சொன்னதுக்கப்புறம் லஞ்ச்ல போய் ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு வந்து தருவாரு. ஆனா உன் பர்த்டேவ மட்டும் ஏன் முன்னாடியே தெரிஞ்சுகிட்டு கிஃப்ட் வாங்கி வச்சு உனக்கு குடுக்கனும்’ என நந்தினி கரெக்டாக புரிந்து கொண்டு கேட்க,
‘நீ பாட்டுக்கு எதை எதையோ சொல்ற. எனக்கு ஒன்னும் புரியல.’ என்று நிலா சொல்ல,
‘அடி லூசு நீயே நல்லா நான் சொன்னத யோசிச்சு பாரு. உனக்கே புரியும். நீயும் அவர லவ் பண்றேன்னு தான் நான் நினைக்கறேன். ஆனா நீயே உனக்கு கோடு போட்டுக்கற. அத தாண்டக் கூடாதுன்னு பிடிவாதமாக இருக்கற. இதுல பாவம் தமிழ் சார் தான் உங்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறாரு. சரி நீ நல்லா யோசி நான் அப்புறம் வரேன்’ என்று சொல்லி விட்டு கிளம்பினாள் நந்தினி.
‘அம்மா தாயே தயவு செஞ்சு கிளம்பு’ என்று சொல்லி விட்டு,
‘ஒருவேல நந்தினி சொல்ற மாதிரி தமிழ் சார் என்னைய லவ் பண்றாறா? என்னைய போய் அவரெல்லாம் லவ் பணணுவாரா. ஏதோ நான் அவருக்கு ஹெல்ப் பண்ணதால அவுரு பதிலுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணிருக்காரு. அவ்ளோ தான். ஆனா நந்தினி சொன்னதுல ஒரு உண்மை இருக்கு அது என்னன்னா நான் அவர லவ் பண்றேன்னு சொன்னது. நல்லா இருந்த என்ன இப்டி எதை எதையோ சொல்லி புலம்ப வச்சிட்டாளே. நந்தினி உன்ன’ என தனக்குள் யோசித்து விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள் நிலா.
தமிழ் கவினுக்கு போன் செய்ய, ‘சொல்லுடா தமிழ். உன் லவ் ப்ரபோசல் சக்சஸ் தான . ஆமா என்ன கிஃப்ட் வாங்கிக் குடுத்த’ என கவின் கேட்க,
‘போடா நானே நினச்சது எதுவும் நடக்கலைன்னு கவலைல அடுத்து என்ன பண்றது நான் செஞ்சது கரெக்டானு கேக்கலாம்னு உன்ன கூப்டா நீ என்ன வேற வெறுப்பேத்துர. இங்க என்ன நடந்துச்சு தெரியுமா’ என நடந்ததை எல்லாம் ஒவ்வொன்றாக கவினிடம் சொல்லி முடித்தான் தமிழ்.
‘சாரி டா. ஆனா உன்ன நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா. நீ நினச்சிருந்தா உன் லவ்வ சொல்லி அவங்கள சம்மதிக்க வச்சு கல்யாணம் பண்ணிகிட்டு அவங்க ஹோட்டலை நீயே திருப்பி வாங்கி அவங்கள ஓனராக்கி இருக்க முடியும். ஆனா அவங்க ஆசைய பத்தி தெரிஞ்சதும் அதுக்கு மதிப்புக் குடுத்து அவங்க ஆசைல அவங்க ஜெயிக்கறதுக்கு உன் காதலை விட்டுக் குடுத்து அவங்க ஹோட்டல அவங்க பேர்ல வாங்கி குடுத்திருக்க. உன் எடத்துல நான் இருந்திருந்தா கண்டிப்பா இவ்ளோ பெருந்தன்மையா யோசிச்சிருக்க மாட்டேன். ஆனா ஒன்னு தான் எனக்கு புரியல. அத ஏன் கடனா குடுத்ததா சொன்ன’ என கவின் கேட்க,
‘அது ஒன்னுமில்ல நான் சும்மா குடுத்தா அவ கண்டிப்பா வாங்கிக்க மாட்டா. அதான் கடனா தான் குடுத்தேன்னு சொல்லி வாங்க வச்சேன். அதுமட்டுமில்ல அவளே அவளோட சொந்த முயற்சில சக்ஸஸ் ஆகணம்னு நினைப்பா. நானும் அது தான் எப்பவும் அவளுக்கு நல்லதுன்னு நினச்சேன். அவ மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா பிஸ்னஸ்ல பெரிய ஆளா அவ நினச்ச மாதிரியே வருவா. ஆனா அது வரைக்கும் நான் அவளுக்காக வெய்ட் பண்ணனும்னு நினச்சா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு’ என தமிழ் சொல்ல,
‘வேற வழியில்லடா. ஆனா நல்லதுக்காக எவ்ளோ நாள் வேணா வெய்ட் பண்ணலாம்’ என கவின் சொல்ல,
‘ம் பார்ப்போம். ஏதோ உங்கிட்ட பேசுனதுக்கு பிறகு தான் நான் செஞ்சது ரைட்டுன்னு எனக்கே கொஞ்சம் நம்பிக்கை வருது. சரி யாழினி என்ன சொன்னா’ என தமிழ் கேட்க,
‘அத ஏன்டா கேக்குற’ என இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
வேலை முடிந்து நிலா வீட்டுக்கு சென்று நடந்தவற்றை எல்லாம் தன் அம்மாவிடம் சொல்லி முடித்தாள்.
‘நிலா தமிழ் தம்பிக்கு போன் போட்டு குடு நான் பேசனும்’ என நிலா அம்மா கேட்க நிலா தமிழுக்கு போன் பண்ணி குடுத்தாள்.
‘சொல்லுங்க நிலா’ என தமிழ் கேட்க,
‘தம்பி நான் நிலாவோட அம்மா பேசறேன். நிலா நடந்தத சொன்னா. நாங்க கஷ்டப் படறப்ப எல்லாம் கடவுள் மாதிரி நீ எங்களுக்கு உதவற. அந்த ஹோட்டல எவ்ளோ கஷ்டப்பட்டு நிலாவோட அப்பா பெரிய லெவலுக்கு கொண்டு வந்தாரு தெரியுமா. அத விக்கும் போது எனக்கு உசுரே இல்ல. வேறவழியில்லாம தான் அத நாங்க வித்தோம். ஆனா அத திரும்பி வாங்குவோம்ன்னு எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்ல. இப்ப வரைக்கும் அத ஏன்டா வித்தோம்னு தினமும் தூங்க முடியாம கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். ஆனா கடவுளே உன் மூலமா எங்களுக்கு உதவி செய்ய வச்சிருக்காருன்னு நினைக்கறேன். ரொம்ப நன்றிப்பா நிலாவ நம்பி கடன் குடுத்ததுக்கு’ என நிலா அம்மா எமோசனலாக அழுதுக் கொண்டே பேச,
‘அம்மா ப்ளீஸ் தயவு செஞ்சு அழாதீங்க. நான் ஒன்னும் உங்களுக்கு பெருசா பண்ணல. நிலா ஒரு விசயத்துல எனக்கு ஹெல்ப் பண்ணாங்க. அதுக்கு பதிலா அவங்களுக்கு நான் என்னால முடிஞ்ச உதவிய செஞ்சேன். அவ்ளோ தான். எனக்கு நிலா மேல நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா அவங்க அப்பா மாதிரி பிஸ்னஸ்ல பெரிய ஆளா வருவாங்க’ என தமிழ் ஆறுதலாக பேச,
‘நீங்க சொன்ன மாதிரி நடந்தா ரொம்ப சந்தோஷம் தம்பி. சரி நான் போன வைக்கிறேன்’ என்று சொல்லி நிலா அம்மா போனை வைத்தார்.
நாட்கள் சென்றன.
நிலா ஹோட்டல ரினவேஷன் பண்ணி திறந்தாள். நிலா அம்மா பார்த்துக் கொண்டார்கள். ஹோட்டல் நல்லா ஓட ஆரம்பித்தது.
ஆபீஸில் எப்போதும் போல் நிலாவும் , தமிழும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலிக்க, நந்தினி கிண்டல் செய்ய என ஓடிக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் ஒரு நாள் தமிழ் அம்மா , ‘ஏன்டா நிலா ஏன் வீட்டுக்கே வரதில்ல’ என கேட்க,
தமிழ் அப்பாவும் சேர்ந்து கொண்டு , ‘ ஆமாடா நானும் கேக்கனும்னு நினச்சேன். உங்களுக்கு இடைல ஏதும் சண்டையாப்பா’ என கேட்க,
‘அதெல்லாம் ஒன்னுமில்ல நீங்க ரெண்டு பேரும் ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க. அவங்க ஹோட்டல திரும்ப வாங்கி திறந்துட்டாங்க. ஆபீஸ் போக மீதி நேரம் அங்கயே அவங்களுக்கு சரியா போயிடுது. ஆனா உங்க ரெண்டு பேரயும் பத்தி அடிக்கடி எங்கிட்ட விசாரிப்பாங்க’ என தமிழ் சொல்லி சமாளிக்க,
‘போன்ல கூட பேச முடியாத அளவுக்கு மேடம் பிசியோ. சரி நீ இப்ப கூப்டு நான் பேசனும்’ என தமிழ் அம்மா கூற,
‘ராஜி உனக்கு வேற வேல இல்லயா. என்னால எல்லாம் கூப்பிட முடியாது. உன்கிட்ட தான் அவங்க நம்பர் இருக்குல்ல. நீயே போன் பண்ணி பேசிக்கோ’ என சொல்லி விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து சென்றான் தமிழ்.
‘ஏங்க இவன் பேச்சே சரி இல்ல. நாளைக்கு நிலா கிட்ட போன போட்டு பேசியே ஆகனும்’ என தமிழ் அம்மா சொல்ல,
அதற்கு ‘ம் சரி நாளைக்கு கண்டிப்பா நிலா கிட்ட பேசலாம்’ என்றார் தமிழ் அப்பா.
‘இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த தமிழ் நிலாவுக்கு போன் செய்தான்.
‘நிலா என்னோட பேரண்ட்ஸ் நீ ஏன் வீட்டுக்கு வரதில்லைன்னு கேட்டாங்க. நான் இன்னும் நம்ம காண்ட்ராக்ட் விசயத்த பத்தி அவங்க கிட்ட சொல்லல. அதனால இந்த ஒரு தடவ மட்டும் . நான் கண்டிப்பா சீக்கிரம் அவங்க கிட்ட இத பத்தி சொல்லிறேன்’ என தமிழ் தயங்க,
‘சரிங்க நான் வந்து அவங்கள பாத்துட்டு வரேன்’ என நிலா சொல்ல,
‘ரொம்ப தேங்க்ஸ்ங்க’ என சொல்லி தமிழ் போனை கட் செய்தான்.
‘அப்பாடா எப்டியோ இப்ப தப்பிச்சிட்டோம்’ என தனக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டான் தமிழ்.
அடுத்த நாள் வேலை முடிந்து நிலா தமிழின் வீட்டிற்கு சென்றாள்.
‘வாம்மா நிலா. நாங்களே உனக்கு போன் பண்ணலாம்னு இருந்தோம். நீயே வந்துட்ட. தமிழ் சொன்னானா நாங்க உன்ன காணோம்னு கேட்டத’ என தமிழ் அப்பா கேட்க,
‘ஆமா அங்கிள். எனக்கும் உங்கள பாக்கனும்னு தோனுச்சு அதான் கிளம்பி வந்துட்டேன். இந்தாங்க உங்களுக்கு புடிச்ச சிங்கரோட பாட்டு கலெக்ஷன். ஆன்டி இந்தாங்க இது உங்களுக்கு’ என்று சொல்லி எப்போதோ தமிழ் அம்மா அவளிடம் தனக்கு ராஜேஷ் குமார் எழுதிய கதையை கேட்டிருக்க அதை ஞாபகமாய் வாங்கி வந்து கொடுத்தாள் நிலா.
‘ஏம்மா நிலா நீ வரலைன்னதும் உங்க ரெண்டு பேருக்கும் இடைல ஏதோ சண்டைனு நினச்சு நான் பயந்துட்டேன்’ என தமிழ் அம்மா கூற,
‘அதெல்லாம் ஒன்னுமில்ல ஆன்டி. நாங்க ஹோட்டல திரும்ப திறந்துட்டோம். அத பாத்துக்கறதனால அங்கயே டைம் சரியா போயிடுது அதான் இங்க வர முடியல. இனிமே இப்டி நடக்காது. நேர்ல வர முடியலைன்னா கூட போன்ல கண்டிப்பா பேசிடறேன். கவலபடாதீங்க’ என நிலா சொல்லி அவர்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டு இருந்து விட்டு பின்பு கிளம்பினாள்.
நிலா தமிழின் பெற்றோருக்கு உண்மையான மருமகளாகவே மாறிப் போனாள். அவர்களும் இவளை மகளாகவே பார்த்தனர்.
நிலா நிஜமாகவே தமிழ் வீட்டுக்கு மருமகளாவாளா?
தொடரும்…
