Skip to content
Post Views: 4,155
உன் காதல் ஒரு வரமாய்….12
அன்று ஞாயிறு காலையில் இருந்தே அழுதபடி தான் இருந்தாள் அமிர்தா.அவளை தேற்றியபடி அமர்ந்திருந்தாள் பாரதி.இன்று அமிர்தாவின் தேர்வு முடிவுகள் வந்திருந்தன அதில் அவள் தோல்வியை தழுவியிருந்தாள்.அது தான் இந்த அழுகைக்கு காரணம்.பாரதி எவ்வளவு தேற்றியும் அமிர்தாவின் அழுகை அடங்கவில்லை.
“அம்மு இப்படி அழாதடி….”என்று பாரதி கூறிக் கொண்டிருக்கும் போது அமிர்தாவின் கைபேசி இசைந்தது.அமிர்தா எதையும் உணரும் நிலையில் இல்லை அதனால் பாரதி அழைப்பை ஏற்க,மறுபுறம் என்ன கூறப்பட்டதோ அவள் பேசியை அமிர்தாவிடம் நீட்டி,
“பேசு உனக்கு தான்….”என்று கூற,
Advertisement
“வேணாம்….”என்று அவள் வாங்க மறுக்க,
“அமிர்தா….நான் சிவா பேசுறேன்….அழுகையை நிப்பாட்டிட்டு பார்க்கு வா….”என்று கூறிவிட்டு அவன் வைத்துவிட,அமிர்தா அப்படியே அமர்ந்திருந்தாள் ஆனால் முன்பு போல் அழுகை இல்லை.
“முதல்ல அழுகை நிப்பாட்டு கிளம்பு….” என்று பாரதி கூற,
Advertisement
“இல்ல நான் போகலை….எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம்….”என்று கூறிவிட்டு முழங்காலில் முகத்தை மூடிக் கொண்டு அமர,
Advertisement
“சரி போகாத….எனக்கு என்ன அந்த பையன் நீ வருவன்னு உட்கார்ந்து இருக்கட்டும்….”என்று கூறிவிட்டு பாரதி எழந்து சென்றுவிட்டாள்.அவள் மாடிக்கு சென்றுவிட்டு மீண்டும் அறைக்குள் வரும் போது அமிர்தா அங்கில்லை சென்றிருந்தாள்.
பார்க்கின் உள் நுழைந்தவள் தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கும் இடத்திற்கு வர,அங்கு சிவா எப்போதும் போல் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான்.வேகமாக வந்தவள் அவன் படிப்பதை பார்த்ததும் தூரத்திலேயே நின்று அவனையே பார்த்தாள்.பார்த்தாள் என்றால் அவனின் அழகை ரசிக்க வில்லை அவன் படிப்பதை தான் வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன என்னை பார்த்துக்கிட்டே அங்கே நிற்கலாம்னு முடிவு பண்ணிட்டியா….”என்று சிவாவின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள்,
Advertisement
“இல்ல…அப்படியெல்லாம் இல்லை….”என்று கூறிக் கொண்டே அவனை நெருங்க,அவளின் குரலே உடைந்து வர நிமிர்ந்து அவளின் முகத்தை பார்த்தான்.அழுதழுது முகமெல்லாம் வீங்கி கண்கள் சிவந்திருந்தது.
“ம்ம் அழுது முடிச்சிட்டியா….”என்று அவன் கேட்க,அமிர்தா எதுவும் பேசாமல் தலைகுனிய,
“என் முகத்தை பார்த்து பதில் சொல்லு அழுது முடிச்சாச்சா….”என்று மீண்டும் கேட்க,
“இல்ல நான் பரிட்சையில பெயில் ஆகிட்டேன்….அது தான்….”என்று குழந்தை போல கூற,
“நீ என்ன சின்ன பாப்பாவா….நான் பெயில் ஆகிட்டேன்னு அழுவுற….”
“இதுக்கு தான் நான் உங்களை பார்க்க வரலைனு சொன்னேன் பாரதிக்கா தான் பாவம் போன்னு சொன்னாங்க….வந்தேன் பாருங்க என்னை சொல்லனும்….”
“ஓ…மேடம் வரவேணாம்னு நினைச்சிருக்கீங்க….”படு நக்கலாக கேட்க,அவனை முறைத்து பார்த்தவள்,
“பின்ன சும்மா என்னை திட்டுறதுக்கு எதுக்கு என்னை கூப்பிடனும்….நான் போறேன்….”என்றுவிட்டு அவள் செல்ல சிவாவும் எதுவும் கூறவில்லை.அவள் சென்றவுடன் புத்தகத்தில் முகத்தை திருப்பிவிட,சட்டென்று அருகில் வேக மூச்சின் சத்தம் நிமிராமலே தெரிந்தது அவள் தான் என்று.
“என்ன போறேன்னு சொன்ன போகலை….”என்று குனிந்தபடியே கேட்க,
“எதுக்கு கூப்பிட்டீங்க….”என்று மூச்சு வாங்க அவள் கேட்க,
“மறந்துட்டேன்…நியாபகம் வரும் போது கூப்பிடுறேன்…நீ கிளம்பு….”என்று அவன் கூற,பக்கத்தில் நின்றிருந்தவளின் முகம் மேலும் கோபத்தில் சிவக்க,
“ஏன் நிக்குற கிளம்பு….”
“ப்ச் சொல்லுங்க….எனக்கு ஏற்கனவே மனசு சரியில்லை….”என்று அயர்ந்து போய் அமிர்தா அவனின் அருகில் அமர்ந்துவிட்டாள்.அவள் அமர்ந்தவுடன் தன் புத்தகத்தை மூடி வைத்தவன்,
“ஏன்????”
“என்ன ஏன்???”
“ஏன் மனசு சரியில்லை….”
“ஏன்னா அதான் நான் பெயில் ஆகிட்டேன்னு சொன்னேனே….”
“சரி அதுனால நீ அழுதா சரியா போகிடுமா….ம்ம்….சொல்லு….”
“அது…”
“இங்க பாரு அமிர்தா….நீ சின்ன பிள்ளை இல்ல….இதெல்லாம் காம்பிடேட்டிவ் எக்ஸாம் இதுல ஜெயிக்கிறதுக்கு நிறைய பொறுமை வேணும்…..இதை நான் உனக்கு முன்னாடியே சொன்னதா நியாபகம்…..”என்றுவிட்டு அவளின் முகம் பார்க்க,அவளுக்கு அவன் கூறியது நியாபகம் இருக்கிறது தான் இருந்தாலும் மனது தோல்வியை ஏற்க மறுத்தது.
“அக்ஸப்ட் த டூருத்….அன்ட் மூவ் ஆன்…..அமிர்தா அது தான் நமக்கு நல்லது….இது உனக்கு முதல் தோல்வி இதுக்கே நீ இப்படி உடைஞ்சா எப்படி….சரி அதை விடு…..அடுத்த எக்ஸாமுக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு….இப்போதிலிருந்தே படிக்க ஆரம்பி….”என்று கூற,அமிர்தாவின் முகத்தில் கவலை இருந்தாலும் முன்பு போல மனதை அழுத்தவெல்லாம் இல்லை.
“ம்ம்….சரி…..”
“குட்…..சரி கிளம்பு….”என்றுவிட அமிர்தாவிற்கு முகம் கூம்பியது.வெகுநாட்களுக்கு பிறகு அவனை பார்க்கிறாள் மனது தன் போல் மலர தான் செய்கிறது.ஆனால் அவனிற்கு அதுபோல் எல்லாம் இல்லை போல.
“ஏன் நிக்குற கிளம்பு….”
“உங்களுக்கு எப்ப ரிசல்ட்….”
“ம்ம்….அடுத்த மாசம்….கண்டிப்பா இந்த தடவை பாஸாகிடுவேன்…..எனக்கு நம்பிக்கையிருக்கு….”என்று கூற,
“அப்புறம் எதுக்கு இப்ப படிச்சிக்கிட்டு இருக்கீங்க….”
“எனக்கு படிக்க பிடிச்சிருக்கு படிக்கிறேன்….அதோட எனக்கு வேலையில்லாத நேரத்துல இந்த மாதிரி ஏதாவது புத்தகம் வாசிச்சி பழகிட்டேன்….அதான்….”என்று கூறியவன் மீண்டும் தன் புத்தகத்தில் தலையை நுழைத்துக் கொண்டான்.
“சரி நான் அடுத்த வாரம் வரேன்….”என்று அமிர்தா கூறிவிட்டு செல்ல பார்க்க,
“எங்க வர….”
“படிக்கதான்….”
“இல்ல அமிர்தா இனி நீ தான் படிக்கனும்….நான் இன்னும் இரண்டு நாள்ல வேலை விஷயமா வெளியூர் போறேன்….திரும்ப எப்ப வருவேன்னு எனக்கே தெரியலை….அதனால இனி என்னை எதிர்பார்க்காத…”
“என்ன வெளியூர் போறீங்கலா…அப்ப அடுத்த மாசம் ரிசல்ட்னு சொன்னீங்க….”
“ம்ம் ரிசல்ட் அடுத்த மாசம் தான் அதை நான் எங்கிருந்தாலும் பார்த்திடலாம்….அதனால பிரச்சனையில்ல….சரி நீ நல்லா படி….சரியா…கிளம்பு….”என்றுவிட,அமிர்தாவிற்கு தான் மனது என்னவோ போல் ஆனது.நான் தான் மனதை குழப்பிக் கொள்கிறோம் ஆனால் அவன் தெளிவாக தான் இருக்கிறான் என்று புரிந்தது,ஆனாலும் மனது அவன் அருகாமையை நாடுகிறது.இதற்கு என்ன தான் தீர்வு என்று தான் அமிர்தாவிற்கு புரியவில்லை.அவனிடமே கேட்கலாம் என்றால் அதற்கும் பயமாக இருந்தது.இப்போது நட்பாக இருக்கும் உறவு முறிந்துவிட்டால்.
“ம்ஹம்…ம்ஹம்….முடியாது…முடியாது…..”என்று தன்னையும் மீறி அவள் சத்தமாக பேசிவிட,
“என்ன முடியாது????”என்ற சிவாவின் குரலில் நிகழ்வுக்கு வந்தவள்,
“ஆங் ஒண்ணுமில்ல…”
“உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இது மாதிரி தனியா பேசிக்கிட்டு இருக்காதனு….கிளம்பு நானும் கிளம்புறேன்….”என்றுவிட்டு அவனும் கிளம்ப,
“அப்போ நாம பார்த்துக்கவே முடியாதா….”என்று ஏக்கமாக ஒலித்தது அமிர்தாவின் குரல்,திரும்பி பார்த்தவன் கண்கள் கூர்மையாக,
“எதுக்கு கேட்குற….”என்றவன் குரலே கடினமாக இருக்க,
“இல்ல…சும்மா தான்…”
“சும்மா ஒண்ணும் நீ என்னை பார்க்க வேண்டாம்….”என்று முகத்தில் அடித்தது போல் அவன் கூற,அமிர்தாவின் மனம் உடைந்து தான் போனது. மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேசாமல் தன் விடுதிக்கு வந்துவிட்டாள்.
ஆகிற்று இதோ மேலும் ஒருமாதம் கடந்து இன்று,
“ஏன்டீ இப்படி தண்ணீல இருந்து வெளில வந்த மீன்னு மாதிரி தவிச்சிக்கிட்டு கிடக்க….”என்று பாரதி பொரிந்து தள்ளினாள் ஆனால் அதெல்லாம் அவள் காதிலும் கருத்திலும் பதியவில்லை அவளின் கவனம் எல்லாம் தனது பேசியில் தான் இருந்தது.நிமிடத்திற்கு ஒரு முறை ஏதாவது அழைப்பு வருகிறாத என்று தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ச்சு என்னக்கா இது இன்னும் கால் பண்ணல….இன்னைக்கு தான ரிசல்ட்….”என்று கூறிவிட்டு அங்கு இருக்கும் நாள்காட்டியை பார்த்துவிட்டு மீண்டும் நடக்க,
“புள்ள நீ முதல்ல ஒரு இடத்தில உட்காரு…..நீ நடக்குறத பார்த்தா எனக்கு தான் மூச்சு வாங்குது…..கொஞ்ச நேரம் உட்காருடீ….”என்று கெஞ்சியும் விட்டாள் பாரதி.
“என்ன க்கா போன் பண்ணல….பேசாம நானே பண்ணிடவா….”என்று கேட்க,
“அதை செய் ராசாத்தி….உனக்கு புண்ணியமா போகும்….”என்றுவிட்டாள் பாரதி.அமிர்தாவும் சிவாவின் எண்ணிற்கு அழைக்க அழைப்பு போய் கொண்டே இருந்ததே தவிர எடுக்கப்படவில்லை.அழைத்து பார்த்து ஓய்ந்து போனாள் அமிர்தா.இரவு படுக்கும் பொழுது கூட உறக்கம் வராமல் தவித்தாள் ஒருவேளை பரிட்சையில் தோல்வி அடைந்துவிட்டாரோ என்று நினைத்தவளுக்கு ஏன் என்றே தெரியாமல் மனது கலங்கியது.உடனே வேகமாக எழுந்து தன் அன்னையின் புகைப்படத்தின் முன் கை கூப்பி வேண்டி கொண்டாள்.சரியாக அந்த நேரம் அவளின் கைபேசி இசைக்க யாரென்று பார்த்தவளின் முகம் பிராகாசித்தது.
“ஹலோ…..”என்று ஆர்வமாக இவள் அழைக்க,
“ம்ம்…எதுக்கு இத்தனை தடவை கால் பண்ணியிருக்க….நான் தான் தேவையில்லாம எனக்கு கால் பண்ணாதனு சொன்னேன் தான….”என்று எப்போதும் போல் அவன் கோபத்தில் திட்ட,அதையெல்லாம் காதில் வாங்காமல்,
“உங்க ரிசல்ட் வந்துடுச்சா….”என்று ஆர்வமாக கேட்க,
“ம்ம்…வந்துடுச்சு….பாஸாகிட்டேன்….”
“ரொம்ப சந்தோஷம்…..ஏன் என் கிட்ட முதல்ல சொல்லலை….”என்று உரிமையாக குறைபட,
“ப்ச் வேலை அதான்…சரி எனக்கு தூக்கம் வருது….அப்புறம் பேசுறேன்…..”என்று கத்தரிப்பது போல பேச,அமிர்தாவிற்கு மனதில் மேலும் மேலும் அடிவாங்கிய உணர்வு.
“இருங்க இருங்க வச்சிடாதீங்க…..”
“என்ன….”என்று அவன் கோபமாக கேட்கும் போதே,
“டேய்…..ஏன்டா பொய்யா சொல்லிக்கிட்டு இருக்க…..பிராடு…..”என்று ஒரு பெண்ணின் குரல் தெளிவாக விழ அமிர்தா எதுவும் பேசாமல் பேசியை வைத்துவிட்டாள்.அதன் பிறகு சிவா இரு முறை அழைத்த போதும் அவள் அழைப்பை ஏற்கவில்லை பேசியை அனைத்து வைத்துவிட்டாள்.மனதெல்லாம் அந்த முகம் தெரியாத பெண்ணின் குரலிலேயே இருந்தது.இதே பெண் தானே இதற்கு முன்பு பேசியது என்று நினைத்தவளுக்கு மனதெல்லாம் ஏதோ அழுத்துவது போல் இருக்க மெல்ல எழுந்து விடுதியின் மாடிக்கு வந்துவிட்டாள்.
வானத்தில் தெரியும் நிலவை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் மனதில் சொல்லமுடியாத வலி பரவுவதை போல் இருந்தது.யார் அந்த பெண் இரவு நேரத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கிறாரா என்று நினைத்தவளுக்கு அதுக்கு மேலும் அமர முடியவில்லை எழுந்து நடக்க தொடங்கினாள்.எவ்வளவு நேரம் நடந்திருப்பாள் என்று தெரியவில்லை.படுக்கையில் அமிர்தாவை காணாமல் பாரதி இவளை தேடி வரும் வரை.
“புள்ள என்ன பண்ணிக்கிட்டு இருக்க….”என்று அவளின் தோள்களை தொட்டு கேட்க,அமிர்தாவின் முகம் மொத்தமாக வேர்த்துவிருவிருத்து போயிருந்ததது.
“என்னடி என்ன ஆச்சு…..”என்று பதட்டத்துடன் பாரதி கேட்க,
“ஒண்ணுமில்லக்கா….ரொம்ப புழுக்கமா இருந்துச்சு…அதான்….”என்றவள் கீழ் இறங்க பாரதியும் அவளுடன் இறங்கினாள்.
அமிர்தா எதுவும் பேசாமல் தனது படுக்கையில் விழ,பாரதி அவளின் அருகில் வந்து சாவித்ரியின் படத்தை அவளின் கையில் திணித்து,
“என்னவோ பிரச்சனைனு தெரியுது….எதையும் யோசிக்காத உங்க அம்மா படத்தை கட்டிப்புடுச்சிக்கிட்டு தூங்கு மனசு பாரம் குறையும்….”என்றுவிட்டு அவளின் படுக்கையில் படித்துவிட,அமிர்தாவிற்கு தன் அன்னையின் படத்தை பார்த்தவுடன் மனதில் அழத்திய பாரம் எல்லாம் கரைந்து அழுகை பெருகியது.அழுதபடியே அவள் உறங்கிவிட,பாரதி தான் பாதி இரவில் எழுந்து அவளை வருத்ததுடன் பார்த்துவிட்டு படுத்தாள்.
நான்கு மாதங்கள் கடந்துவிட்டது அமிர்தா எப்போதும் போலவே தான் இருந்தாள் இல்லையில்லை இருப்பது போல் தன்னை காட்டிக் கொண்டாள்.அன்று சிவாவுடன் பேசியது தான் அதன் பிறகு அவள் முயற்சிக்கவில்லை அவனும் அழைக்கவில்லை.இதற்கிடையில் கோவிலுக்கு சென்ற போது சிவாவிற்கு செங்கல்பட்டில் பணி நியமனம் கிடைத்துவிட்டதாக குருக்களின் மனைவி கூறினார்.அதை கேட்ட அமிர்தாவிற்கு தனக்கு அவன் கூறவில்லை என்று மனதில் வலி பரவியது தான் ஆனால் காட்டிக் கொள்ளாமல் வந்துவிட்டாள்.இதற்கிடையில் அவளிற்கு அடுத்த தேர்வுக்கான விளம்பரம் வர அதை கவனமாக பார்த்து விண்ணப்பம் போட்டும் வைத்துவிட்டாள்.
சிவா மனதில் தான் இல்லை என்று தன் மனதிற்கும் மூளைக்கும் கூறி கொண்டிருந்தாள் அதில் ஒரளவிற்கு வெற்றியும் பெற்றிருந்தாள்.ஆனால் அவளின் வெற்றியெல்லாம் அவனை நேரில் பார்க்கும் வரை தான் அவனை பார்த்தவுடன் அவனிடம் சரணாகதி ஆகும் மனதை தடுக்க தெரியாமல் காதல் என்பதிலும் மோசமான தோல்வியை அடைந்திருந்தாள் அமிர்தா.
error: Content is protected !!