Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாக அல்ல உயிராக

Uravaaga Alla Uyiraaga 3

உறவாக  அல்ல  உயிராக

அத்தியாயம்.  3



Advertisement

   இனியா    காரை   திருச்செல்வன்  மல்டி  ஸ்பெஷல். ஷாஸ்பெட்டல்  முன்  நிறுத்தினாள்.

Advertisement

Advertisement

அங்கே  இருந்த  வாட்ச்மேன்   வந்து,  இனியாவுக்கு   வணக்கம் வைத்து. கார்  கீயை  வாங்கிக்  கொண்டு  காரை  பார்க்கிங்கில் விட.

இனியா  அங்கே  உள்ள  வாட்பாய்யிடம்,   சொல்லி ஒரு  வீல்  சேரை   வர வைத்தவள். சுமதியை  அதில்  உட்கார  வைத்துவிட்டு.

Advertisement

  ஒரு  செவிலியை  அழைத்து ” சுமதியைக்   காட்டி  இவர்  தனக்கு  வேண்டப்  பட்டவர்,  நல்லா  பார்த்துக்கணும்”  என்றவள்.

ஞானதுரை  அம்மாளிடம்  அழைத்துச்  செல்ல  சொல்லியவள்.

மறுபடியும் அந்த  செவிலியிடம் எல்லாம்  முடிந்தவுடன். தன் அறைக்கு  அழைத்து  வருமாறு  கூறியவள்.

பில்லை தன்  பெயரில்  போடு  மாறு   கூறிவிட்டு.  சுமதியிடம்  தனக்கு  கொஞ்சம்  வேலை   இருப்பதாக  சொல்லியவள்.  குமரனின்   அம்மாவிடம்    டாக்டரிடம்   பார்த்துவிட்டு  தன்   அறைக்கு   வருமாறு   கூறிக்   சென்றாள்.

   ” ஞானதுரையம்மாள்”  இந்த   ஹாஸ்பெட்டலில்   மகப்பேறு   மருத்துவராக   வேலை  செய்பவர்.  மிகவும்   திறமைசாலி   வயது. 50 பது   இருக்கும்.  இங்கே  மூன்று  வருடமாக   வேலை   செய்து  வருகிறார்.

இனியா  மருத்துவம்   படிக்க   கல்லூரியில்  சேர்ந்தவுடனே   தேவேந்திரன். இந்த  இடத்தை  வாங்கி   தன்  பேத்தியின்  பெயரில்  பதிவு  செய்து.  ஹாஸ்பெட்டல்   கட்டிவிட்டார்.

இனியா  தன் தாத்தாவின்  பெயரை  ஹாஸ்பெட்டலுக்கு   வைக்கச்  சொல்ல.

தேவேந்திரன்   சொன்னது.    திருச்செல்வன்  பெயர்  தான்  ஹாஸ்பெட்டலுக்கு   வைக்க   வேண்டும் என்று.  தன்  மகன்   எப்படியும்  இங்கே  வருவான்   என்று   சொல்லியவர்.

திருச்செல்வன்  ஹாஸ்பெட்டல்   கடந்த  5   ஆண்டுகளாக   இயக்கிக்  கொண்டிருக்கிறது.

  இனியா   தன்  ஹாஸ்பெட்டல்   உள்ளே   செல்ல.  ஹாஸ்பெட்டல்  ஒனர் , சீ. இ . ஓ.  டாக்டர்  இனியா   வருவதைப்   பார்த்தவுடன்.  அங்கே  வேலை  செய்யும்   அனைவரும்   அவளுக்கு   குட்  இவ்னிங் மேம்,  குட்  இவ்னிங்  மேம்  என்று   சொல்ல.

அங்கே  இருந்த   சிலர்.  வைத்தியம்  பார்க்க  வந்த  நோயாளிகள். இனியாவைப்   பார்த்து .   ஒரு   செவிலியிடம்   யாருமா   இவங்க ?  டாக்டர்?   என்று  கேட்க.

அந்த  செவிலி , டாக்டர்  மட்டும்   இல்ல.  இந்த  ஹாஸ்பெட்டலோட   ஓனர்  என்று    கூற.

தேவேந்திரன்   அய்யா  ஓட   பேத்தியா?  என்று  கேட்க  ஆமாம் என்றாள்.  ஆதான்  இந்த   பொண்ணைப்  பார்க்கும்   போதே  ஏதோ  தெரிஞ்ச  மாதிரி  இருக்குனு  நெனைச்சேன்.

  இனியா  இவர்களை   கடந்து  போக. என்ன  அழகுடா!   இந்த  பொண்ணு!  என்று  தான்  அப்பெண்  பார்த்தாள்.

  அப்பெண். இரண்டு   நிமிடம்   இனியாவை   உத்துப்  பார்த்தாள்.  என்ன  கண்ணுடா , கண்ணுன்ணா  இப்படித்  தான்  இருக்கனும்!  அவளின்  பால் நிறம் ,  6  அடிக்கு  குறைவான  உயரம்,  ஒல்லியும்   இல்லாமல்   குண்டும்   இல்லாமல், உடல்  வாகு.

 பெண்களே   இரண்டு  நிமிடம்   அவளைப்  பார்த்து  ரசிக்கும்  அழகு.

 இனியா  கட்டி  இருந்த  சிமென்ட்  கலர்  காட்டன்  புடவைக்கு, கருப்பு  நிற  பிளவுஸ். கையில்  ஒரு  கரப்பு  நிற  ஸ்மாட்  வாட்ச்,  காதில்   ஒரு  சிறிய  கல்  வைத்த  கம்மல்,  கழுத்தில்  ஒரு  சிறிய  சங்கிலி,  நெற்றியில்  ஒரு  மேருன்  கலர்  பொட்டு,  அவளின்  வெள்ளை   நிறத்துக்கு.  எது  போட்டாலும்   அழகாய்  தான்  இருக்கும்.

  இனியாவுக்கு  அந்த  ஹாஸ்பெட்டலில்  இரண்டு  அறைகள்  உள்ளது.

ஒன்று , இவள்  மருத்துவம்  பார்க்கும்  அறை.  இன்னொன்று  அவளின்   ஆபிஸ்  ரூம். கணக்கு  வழக்கு  பார்க்கும்  அறை, அந்த அறைக்கு  தான்  முதலில்  சொல்வாள்.

அங்கே  மிகப்பெரிய  அளவில்  தேவேந்திரனனின்  புகைப்படம்  இருக்கும்.  அந்த  படத்தின்  முன்  நின்று  வணங்கி  விட்டு.

  இனியா  மருத்துவம்  பார்க்கும்  அறைக்கு  சென்றாள் . ரூமின்  உள்ளே உள்ள  பெல்லை  அழுத்த.

  ஒரு  செவிலி   வந்து  மேம்  பேசன்டை  அனுப்பவா?  என்று கேட்க.

அனுப்பு  என்றவள். வந்தவர்களுக்கு  வைத்தியம்  பார்த்து  அனுப்பி  வைத்தவள்.

 ஹாஸ்பெட்டலில்  வேலை  பார்க்கும்  செவிலியை   அழைத்து. மீதம்  உள்ளவர்களை  அடுத்த  ரூமில் உள்ள  டாக்டரிடம்  அனுப்ப  சொல்லி  விட்டு.

ஹாஸ்பெட்டலை  சுற்றி  வர   கிளம்பினாள்.  குமரனிடம்  இருந்து  போன் வர,   “சொல்லு   குமரா”  என்று   கேட்டவள். எழுந்து நடக்க.

அக்கா   சுமதிக்கு  டாக்டரை  பார்த்து  முடிச்சாச்சு,   நீங்க  எங்க  இருக்கீங்க?  என்று  கேட்க.

உன்னை  பார்த்துட்டேன்  குமரா   என்று  கூறியவள். சுமதியின்  அருகில்  வந்தாள்.

குமரன்  நன்றி  சொல்லிவிட்டு  செல்ல.

“இனியா”   சுமதியை  நல்ல  பார்த்துக்கோ  குமரா  நாளைக்கு  ஒரு  நாள்   உனக்கு   லீவ்.  சுமதியை  பக்கத்தில்  இருந்து   பார்த்துக்கோ.

கிளம்பு  என்று  சொல்ல  அனைவரும்  இனியாவுக்கு  நன்றி  சொல்லி   கிளம்பினார்.

இனியா  ஹாஸ்பெட்டலை  ஒரு   ரவுண்டு  வந்தவள்.  சில டாக்டரிடம் பேசிவிட்டு  அவர்களுக்கு  தேவையானதை  செய்வதாக. சொல்லி  விட்டு.

திருச்செல்வன்   ஹாஸ்பெட்டல்  அருகில்  உள்ள , மீனாட்சி  ஹாஸ்பெட்டலுக்குள்  நுழைந்தாள்.

இது  இவள்  கட்டிய  ஹாஸ்பெட்டல்.

திருச்செல்வன்   ஹாஸ்பெட்டல்  அனைத்து  வசதிகளையும்  கொண்ட மிக  பெரிய  ஹாஸ்பெட்டல்,  எல்லா  நோய்களுக்கும்  பார்க்கப்படும்.

ஆனால்  மீனாட்சி  ஹாஸ்பெட்டல்  மிகச்சிறிய   அளவு  தான்.  இந்த  ஹாஸ்பெட்டல்   பொள்ளாச்சிக்கும்   கோயம்புத்தூருக்கும்  நடுவில்  இருப்பதால்.

இவ்விரு  ஊர்களைச்  சுற்றி  பெரும்  அளவில்   கிராமங்கள்  தான்  அதிகமாக  இருக்கும்.

எனவே.

பெரும்பாலும்   இவர்கள்  பொருளாதாரத்தில்  பின்  தங்கியவர்களாக  இருப்பர்.

   முதலில்  ” மீனாட்சி   ஹாஸ்பெட்டலை”   இலவசமாக  நடத்தத்  திட்டமிட்டாள்  ,பிறகு  யோசித்து, இலவசமாக  வைத்தியம்  பார்த்தால். அதற்கு  அவ்வளவு  மதிப்பு  இருக்காது.  என்று  முடிவு  எடுத்தவள்.

  ஒருவர்  100  ரூபாய்  குடுத்தால்  போதும். நோய்யிங்கு  வைத்தியம்  பார்த்து,  ஊசிபோட்டு   மருந்து   மாத்திரைகள்  அனைத்தும்  கொடுக்கப்படும்.

எந்த  வியாதியாக  இருந்தாலும் சரி. ஒருவர்   100  ரூபாய்  குடுத்து. ஒரு டோக்கன்  போட்டால்  போதும்  அனைத்தும்  வழக்கப்படும். என்று

   வைத்துள்ளாள்.

திருச்செல்வன்,   ஹாஸ்பெட்டலை   விட .  மீனாட்சி  ஹாஸ்பெட்டலுக்கு  தான்   அதிக   அளவில்  கூட்டம்  வரும்.

இரண்டு  ஹாஸ்பெட்டலையும்  எந்த  குறையும்  இல்லாமல்  நடத்தி  வருகிறாள்.

ஒரு  செவிலி  வந்து  இனியாவிடம்,  மேம்  ஜிஜிதா  டாக்டர்,  உங்களைப்  பார்க்க  வரலாமா?   என்று  கேட்டாங்க.

இனியா  அந்த   செவிலியிடம்.  ஜிஜிதா  மேம்மை  ஆபிஸ்  அறைக்கு  வரச்  சொல்லுங்க  என்றவள்.

மீனாட்சி  ஹாஸ்பெட்டலில்  அனைத்தும்  பார்த்தவள்.

அவளின்  ஆபிஸ்  ரூம்மில்  உள்ள  ஒய்வு  அறைக்கு  சென்று  ப்பிரஷ்  செய்து  கொண்டு  வர. ஜிஜிதா  வர சரியாக  இருந்தது.

ஜிஜிதாவை  பார்த்த   இனியா  வாங்க , வாங்க.  சேச்சி எப்படி?  இருக்கீங்க.

ஜிஜிதா  ஏன்டி  ஒரு  போனை  கையில  வச்சுட்டு  இருக்க  மாட்டியா ?  எத்தனை  போன்  போடுறது?  பாரு   என்று  சொல்ல.

  இனியா  மறந்துடேன்  பா, சாரி  .போன்  சைலண்டுல  இருந்துச்சு.

 சாரீ  , பூரி.  போடி  என்று  இனியாவின்  எதிரில்  உள்ள  சேரில்  அமர்ந்தாள்.

 இனியாவோ  ” என்ன?  கல்யாண  பொண்ணு  எப்போ  கேரளா  கிளம்புற?”

எங்க  கிளம்ப?  உன்    வேலையையும்  சேர்த்து  நான்  தான்  பார்க்க   வேண்டியதா  இருக்கு,  எப்படி  கிளம்ப.?

இனியாவும் ,ஜிஜிதாவும்   ஒரே  கல்லுரியில்  மருத்துவம்  படித்தவர்கள். இருவரும்  இனைபிரியா  தோழிகள்.

 இனியாவோ,  ஏன்  ஜிஜி  பேபி, அலுத்துக்குற.  கல்யாணம்  ஆகப்  போற  பொண்ணு  இப்படி  கோபப்படலாமா?  உன்  கஷின்  ஒரு டாக்டர்  வாரான் சொன்ன  எப்போ வரான்? .

 ஜிஜிதா  என்   கஷின்   அம்மாவுக்கு . இந்த  ஊருக்கு  மகனை  அனுப்ப  விருப்பம்  இல்லையாம். அதான்  லேட்.

இன்னும் 2  டேசுல  வருவான்.  வந்தவுடனே  அவனுக்கு  எல்லாத்தையும்  சொல்லிக்  குடுத்துட்டு.  நான்  கேரளா  கிளம்புறன்.

இனியாவோ  கல்யாணம்  என்ன  டேட்  பா? என்று  கேட்க.

அடிப்பாவி  நீ கல்யாண பத்திரிக்கை    பார்க்கலியா .

இனியாவோ  சிரித்தபடியே  , எப்படியும்  நீ  கல்யாணத்துக்கு   ஒன்னு  வீக் முன்னாடி  தான்  போவ.  அப்போ  தெரிஞ்சுக்கலா முன்னு  நினச்சேன்.

ஜிஜிதாவோ   இப்படியே   இருந்தேனு வை?  நீ கல்யாணத்துக்கு,  ஒரு  நாள்  முன்னதான்  அனுப்புவ  போலயே.

“இனியா   சரி  சரி, சொல்லு  எப்போ   கல்யாணம்”.

இன்னும்  20  நாள்  இருக்கு  என்று  ஜிஜிதா  சொல்ல.

இனியா  20  நாள்  இருக்க.  அப்போ   நீ  10  நாள்  கழிச்சு  போ  என்று  கூற.

வேகமாக  எழுந்த  ஜிஜிதா.  இனியாவின்   கழுத்தைப்பிடிக்க  பாவி , பாவி    உன்னை   நம்பி  வேலைக்கு  வந்த  என்னை  இப்படி  கொடும  படுத்துறியா,  நான்  இன்னும்  4, 5  டேசுல   கிளம்புறேன்.

நீ  ஆச்சு  உன்   ஹாஸ்பெட்டல்  ஆச்சு.  பாய்  என்று  கிளம்பிவிட்டாள்.

இனியாவுக்குத்  தெரியும்,  தன்  தோழியை  பற்றி   எல்லாத்தையும்  முடித்தவுடன்  தான்  செல்வாள்  என்று.

தன்  தோழி  ஜிஜிதாவுக்கு,   திருச்செல்வன்  மருத்துவமனையின்  முக்கிய   முடிவுகளை  எடுக்க  எல்லா உரிமையையும்  கொடுத்துள்ளாள்.

இனியாவுக்கு ,  தேவேந்திரன்  தாத்தா    உருவாக்கி   வைத்துள்ள  வேலைகளை    செய்ய  காலையிலிருந்து,  மாலை  வரை  ஆகும்.

இனியா  எல்லா  வேலைகளை முடித்துவிட்டு. சாயங்காலம் , இல்லை  இரவாது  திருச்செல்வன்   ஹாஸ்பெட்டலுக்கு  வந்து  விடுவாள். இல்லை  என்றாள். அவளுக்கு  அந்த  நாள்  முழுமையடையாது.

 இரவு  9  மணியாகவும்  வீட்டுக்கு  கிளம்ப.

தன்  போனில்  இருந்து  அழைப்பு வர. அதைப்  பார்தது

  புன்னனைத்தவள், அத்தை  என்று  போனை  காதில்  வைக்க.

 “இனியா ,எப்படி  இருக்கடா?”  என்று  நிர்மலா   கேட்க.

நான்  ஓகே  அத்தை. நீங்க  மாமா   எப்படி  இருக்கீங்க?

இங்கே   எல்லாரும்  நல்லா  இருக்கோம்டா. அம்மாவுக்கு  போன்  பண்ணேன்டா  போன் ரிங்  போகுது.  ஆன,  அம்மா  போன எடுக்கல என்ன ஆச்சு.

இனியா ,   நிர்மலாவிடம்  அத்தை  பாட்டி  போனை  ரூமில்  வச்சுட்டு. ஹால்ல டீ .வி   சீரியல்  பார்த்துட்டு  இருப்பாங்க.நான்  வீட்டுக்குப் போனதும். போன்   பேசச்  சொல்லுறேன்.

நிர்மலா   ” சரிடா  நீ   வீட்டுக்கு  போயிட்டு  கூப்பிடு”   என்று  சொல்லி போனை  வைத்தார்.

இனியா  காரை  வீட்டை  நோக்கி  செலுத்தினான்.

 வீட்டின்  முன்  காரை  நிறுத்த.  வாச்மேன். வந்து  கேட்டை  திறந்து  விட்டார்.

 அவளின்  காரை   செட்டில்  வைத்தவள்.   பக்கத்தில்  இருந்த  அனைத்து  வாகனங்களை  பார்க்க  , சர்வீஸ்க்கு   போன  டிராக்டர் வந்து இருந்தது. விவசாயத்துக்கு  வேண்டிய  அனைத்து  மிசின்கலும், வாகனக்களும்  அனைத்தும் இருந்தது  அதை  ஒரு  பார்வை    பார்த்தவள்.

  கார்  செட்டை பூட்டியவள். நிமிர்ந்து   பார்க்க  தேவேந்திரன்   தாத்தா கட்டிய  வீடு.  அது  வீடு   அல்ல  பழய  காலத்து  அரண்மணை போல  இருக்கும்.

பின்கட்டில் மீனாட்சி , ஆடு, கோலி , பசுமாடுகளை வளப்பார்.

இனியா  வீட்டிற்கு  நுழைய.

மீனாட்சி  பாட்டி  சீரியல் பார்த்து கொண்டு  அதில்  வரும் வில்லியை  திட்டி கொண்டு  இருக்க.

இனியா  பாட்டியை   பார்த்து  உன் போன் எங்கே பாட்டி ?

மீனாட்சி  அவரின்  பக்கத்தில்  தேடியவர். இங்கே தான்  வச்சேன். எங்கே என்று  தேட.

மீனாட்சியை  பார்த்த  இனியா ” உன்  போனை    ரூமில்  உள்ள வச்சுட்டு  இங்கே  உங்காந்து இருக்க . ஏதாவது  முக்கியமா  விசயமா  உன்  கிட்ட  பேச  நெனச்சா  எப்படி  பேச.  போனை  எப்போதும் பக்கத்தில் வச்சுக்கோ  பாட்டி . அத்தை  உன் கிட்ட பேசனுமாம்.  நிர்மலாவை  போனில் அழைத்தவள் . போனை  பாட்டியிடம்   குடுத்து விட்டு.  நான் குளிச்சுட்டு  வரேன் என்று  அவளின்  ரூம் சென்றாள்.

ஹலோ  மா  கேக்குத   என்ற  நிர்மலா.  அம்மா  எப்படி  இருக்க?

மீனாட்சி  நல்ல  இருக்கேன்மா. நீ  மருமகன் என்  பேரன்  எல்லோரும் நலமா என்று  கேட்க.

 எல்லோரும்  நல்ல  இருக்கோம்.

மீனாட்சி   நிர்மலாவிடம் ”  கண்ணு  ஊர்க்கு  வந்துட்டு  போக  கூடாதா?

வர்றேன்மா.  ஒரு  நல்ல   விசயத்தைப்  பத்தி தான்  உன்  கிட்ட  சொல்லனும்.

நானும்   அண்ணாவும் ,  மகிழ்லுக்கும்,  பீரகதீஸ்வரனுக்கும்  கல்யாணம் பண்ண பேசி  முடிச்சுட்டோம் மா.

 அப்படியா ! என்ற  மீனாட்சி ரொம்ப  சந்தோஷம்மா, என் பேரான்டியும். மகிழும்  என்ன  சொல்லுறாங்க?  அவங்களுக்கு  சம்மதம் தானே.

உன் பேத்தி  அண்ணா  சொன்னவுடனே  சரின்னு  சொல்லிட்டா.

 உன் பேரனும்  சரின்னு  சொல்லிட்டான். நேத்து தான்  கேட்டோம்.

பீரகதீஸ்வரனுக்கு   இப்போ தான்  ஒரு  பிராஜெக்ட்  முடிஞ்சதாம்.அடுத்து தொடக்க  ஒரு மாதம்  இருக்கும. அதனால  கல்யாணத்தை   இரண்டு வாரத்தில் வைக்க  சொல்லிட்டான்.

நிர்மலா, மீனாட்சியிடம்  கல்யாண நாள்  குறிச்சுட்டு . உன்க்கிட்ட  சொல்லுறேன்மா. என்று போனை வைத்தார்.

 மேலே   சென்ற  இனியா குளித்துவிட்டு  கீழே வர.

மீனாட்சியின்   மலர்ந்த  முகத்தைப்  பார்த்தவள்.

 ” என்ன பாட்டி உன் மூஞ்சியில்   லைட்டு  போட்ட மாதிரி  இருக்கு என்ன விசயம்?

நிர்மலா  சொன்னதைச்  சொல்ல .

ஓ… அதான்  உன் வாய்யெல்லாம்  பல்லா  இருக்கா. உன்  ஆசை பேரன் , பேத்தி  கல்யாணம்   உன்னை  இனிமேல்  கையில் பிடிக்க  முடியுமா. பார்த்து  மீனுக்குட்டி. தரையில  நட   ஆகாயத்துல  பறக்காத..

நீ  போடி , என் பேரனையும், பேத்தியையும். பத்தி  பேசும்  உனக்கு பொறாமை  வந்தரும்.

” யாரு ,எனக்கு  ,பொறாமை,  நீ பார்த்த”.

ஆமா  ஒன்னு கேட்கவா.

கேளு என்றார் மீனாட்சி.

   உன் பேரன்  வெளிநாட்டுல  சுத்திட்டு  திரியரான் ஒரு வெள்ளக்காரிய  இலுத்துட்டு வருவான்னு நெனச்சேன், பரவாயில்லை  தப்பிச்சுட்ட  வெள்ளக்காரி  என்று  சொல்லி  ஓடியவளை.

அடியே!  என் பேரன பத்தி சொன்ன. வந்தேனு வை  என்று சத்தம் போட.

 சும்மா விளையாட்டுக்கு பாட்டி  சிரி பாப்போம்.  என்று இருவரும் சிரித்தனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!