Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 13.2

“சரிங்க போங்க” என்றவர் சார்பதிவாளரிடம், “ரெஜிஸ்டரக்ஷனை கேன்சல் பண்ணிடலாம் சார்” என்றார்.

அவர்களுக்கு இது சாதாரணமாக போக அடுத்த பதிர்விற்கு தயாராகி இவர்களை செல்லுமாறு அவசரப்படுத்தினர்.

பார்த்திபன் ஆரபி, பெற்றோரை அழைத்து இல்லம் புறப்பட்டான். பெற்றோருக்கு உர்ரென முகம் வைத்திருக்கும் மகனை பார்த்து எதுவும் பேச முடியவில்லை.

குழந்தை தாத்தா பாட்டியிடம் விளையாடிக்கொண்டிருக்க அவள் விளையாடும் அழகை கூட ரசிக்கும் மனநிலையில் இல்லை அவர்கள். அத்தனை கோவம் வேதனை இருந்தாலும் நிதானமாக வாகனம் வீட்டினை வந்தடைய,



Advertisement

தன் குடும்பத்திற்கு முன்பே இறங்கியவன் உள்ளே சென்ற வேகத்தில் கையில் பைக் சாவியோடு வந்தவனை நோக்கி வேகமாக நகர்ந்த ஆரபி, “பார்தி” என அழைக்க, அவளை திரும்பியே பார்க்கவில்லை அவன்.

“விஷ்ணுவை டீ கடை வர சொல்லிருக்கேன் ஆரபி” நிற்கவில்லை கணவன். காலில் சக்கரம் கட்டியவன் போல் வந்ததற்கு நேர் மாறாக அத்தனை வேகம் வாகனத்தில்.

இவனுக்கு முன்பே விஷ்ணு அங்கே நின்றான், கூடவே அவன் காரும். பெற்றோரை ஆட்டோவில் அனுப்பி வைத்திருப்பான் என்பது அவனது உடையிலும் அவன் முன்பு வைத்திருந்த தேநீர் கோப்பைகளிலுமே தெரிந்தது.

Advertisement

கையில் மற்றொரு தேநீர் சூடாக இருந்தது. நண்பனை தாண்டி கடைக்கு சென்ற பார்த்திபன் தனக்கும் தேநீர் ஒன்றை வாங்கி வந்தான்.

Advertisement

“என்னடா இது, இப்டி நடந்துடுச்சு” விஷ்ணுவால் இன்று நடந்ததை ஏற்கவே முடியவில்லை.

இடத்திற்கு உரிமையானவர் பல வருட பழக்கம். பழக்கம் என்பதை தாண்டி அவர் மேல் அதிக மரியாதை இருவருக்கும் உண்டு. ஈவென்ட் ஆர்கனைஸர் தொழில் துவங்க முடிவெடுத்து இடம் தேடி அலைந்த பொழுது பார்த்திபனின் மாமனார் மூலம் பழக்கமானவர் தான் இவர்.

தெரியாத மனிதரிடம் கை காட்டி செல்பவர் இல்லையே அவன் மாமா. அதுவும் மாப்பிள்ளையின் தொழில் சார்ந்த விஷயத்தில் நல்ல மனிதரை பார்த்து பார்த்து இடத்தை கை காட்டினார். அப்படிப்பட்டவர் தற்பொழுது வேறுபட்டு பேசுவது ஏற்கவே கடினமாக இருந்தது.

Advertisement

“சம்பாதிச்சிடலாம்டா. ஆனா இந்த ஏமாற்றம், அசிங்கம் எல்லாம் மண்டைல ஓடிட்டே இருக்கு” சிகையை அழுத்தமாக கோதி பார்த்திபன் புலம்ப, அவனை விட அதிக சினம் விஷ்ணுவிடம்.

“அந்த ஆள் வீட்டுக்கு போகலாம் வா” அழைத்தான் உண்மையை அறியும் பொருட்டு.

“இல்ல, அங்க போனாலும் யூஸ் இல்ல. கீ குடுத்த ஆள் அப்டி” என்றான் பார்த்திபன் பற்களை கடித்து.

சட்டென மண்டையில் தட்டிய பொறியானது கண்களில் தீ பந்தத்தினை ஏற்றியது போல் ஒரே நொடியில் சிவந்து போனது.

“அந்த ஆள் வண்டிய ரெஜிஸ்டர் ஆபீஸ்ல பாத்தேன்”

“அன்னைக்கே போட்டு தள்ளிருந்தா இன்னைக்கு ஆடிருப்பானா?” பார்த்திபன் வைத்திருந்த அவனது இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்தவன் அதை விட வேகமாக செல்ல பார்க்க அவனை பிடித்து நிறுத்தினான் பார்த்திபன்.

“என்ன பண்ண போற?”

“அவனை கொன்னுட்டு வர்றேன்”

“கொன்னுட்டு என்ன பண்ணுவ? அந்த ஆள் பக்கத்துல கூட போக முடியாது நம்மளால”

“என்னால முடியும். தலையை சீவிட்டு வந்து நிப்பேன்”

கையை நண்பனிடமிருந்து எடுத்தான், “சரி போ” என்று.

விஷ்ணுவால் நகர முடியவில்லை. நிதானித்து பார்த்தால் பார்த்திபன் கூறியது தான் சரி.

அந்த தாமோதரனை நெருங்க கூட முடியாது இருவராலும். முன்பு எப்படியோ, இப்பொழுது சுதாரித்துவிட்டார் அந்த துப்பாக்கி சம்பவத்திற்கு பிறகு. தன்னை சுற்றி ஆட்களை சற்று கூட்டியுளார் என்பதும் அனாயா மூலமாக தெரிய வந்தது.

வாகனத்தை விட்டு கீழே இறங்கி வர பார்த்திபனுக்கு அழைப்பு வந்தது ஸ்ரீனியிடமிருந்து. இவன் நலனை சகோதரி மூலம் தெரிந்து விசாரிக்க வந்திருப்பானோ என்கிற யோசனையில் எடுக்கவில்லை. அணைத்து வைத்தான் கைபேசியை.

“உன் மாமாகிட்ட சொல்லி பேசலாமா?” விஷ்ணுவின் அந்த கருத்து சிறிதும் ஒப்பவில்லை அவனுக்கு. உறுதியாக முடியாது என தலை அசைக்க, இப்பொழுது அனாயாவிடமிருந்து அழைப்பு வந்தது. எடுத்தான் தொழில் ரீதியாக இருக்குமோ என்று.

“சார்…”

“சொல்லும்மா”

“அவர் வந்துருக்கார் சார் இங்க”

புருவம் சுருங்கியது, “யார்?” என்று.

“தாமோதரன். நம்ம குடவுன்க்கு”

அவள் கொடுத்த பதிலில் யோசனையோடு புருவத்தை பெருவிரல் கொண்டு நீவியவன், “வர்றேன்” என விஷ்ணுவோடு அங்கு சென்றான்.

முறுக்கிய கைகளோடு தன்னோடு நடந்து வந்த நண்பன் கை பற்றிய பார்த்திபன் அதில் அழுத்தம் கொடுக்க பற்களை கடித்து இறுக்கத்தை குறைத்தான் விஷ்ணு.

விஷ்ணு, பார்த்திபன் வாகனம் நிறுத்தும் இடம் அது. அவர்கள் அலுவலக அறைக்கு எதிரில் இருக்குமந்த இடத்தில் இப்பொழுது தாமோதரன் வாகனம்.

பார்த்த விஷ்ணுவுக்கு அத்தனை கோவம், பார்த்திபனின் வாகனம் நிறுத்தும் முன்பே தாவி இறங்கியவன் சற்று தள்ளி கிடந்த ஒரு இரும்பு கம்பியை எடுத்து அந்த வாகனம் நோக்கி விரைய, “விஷ்ணு… நில்லுடா”

பார்த்திபன் கூறியதை ஆத்திரத்தின் உச்சியில் இருந்த விஷ்ணு காதிலே வாங்கவில்லை. விறுவிறுவென நடந்தவன் அந்த விலையுயர்ந்த வாகனத்தினை அடித்து நொறுக்கும் நோக்கோடு செல்ல, அவனுக்கு முன்பு வாகனத்தை தாக்காமல் இடைமறித்து நின்றாள் அனாயா.

“ஏய் போய்டு” என்றான் ருத்ர மூர்த்தியாக மாறி.

“மாட்டேன் சார்” என்றாள் அவளும் இன்னும் அழுத்தமாக.

“என்ன உன் தாத்தனை காப்பாத்த வரியா, இங்க நடக்க போறதை விட பல மடங்கு அவனுக்கு உள்ள நடக்க போகுது”

நொடி தாமதிக்காமல் கையிலிருந்த இரும்பு துண்டை வைத்து ஓங்கி வண்டியில் அடிக்க எதிர்பாராமல் இடையில் வந்த அனாயா மேல் விஷ்ணுவின் மொத்த ஆத்திரமும் இறங்கியது.

“ஆ…” விஷ்ணுவின் தாக்குதலில் தானாக விழுந்த அனாயாவிற்கு கையே உடையுமளவு அப்படி ஒரு வலி, பொறுக்க முடியாமல் கத்தியவளின் செயலில் அப்பொழுது தான் தன்னுடைய கோவத்தின் அளவை உணர்ந்தான் விஷ்ணு.

“அனாயா…” விஷ்ணுவை தள்ளிவிட்டு அவளை பிடித்து ஆராய்ந்தான் பார்த்திபன்.

அவளது தோள்பட்டைக்கு கீழ் கையை பிடித்து தரையில் அமர்ந்து கண் மூடி மௌனமாக அழுத்தவளை பார்க்கவே கடினமாக இருந்தது.

“வா ம்மா ஹாஸ்பிடல் போகலாம்” பெண்ணின் இடது கையை பிடித்து தூக்க பார்க்க அவளால் வலது கையை அசைக்க கூட முடியவில்லை.

அவளும் ஒரேடியாக மறுத்துவிட்டாள், “வேணாம் சார். பெருசா வலி இல்ல”

“டேய் நான் ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்”

விஷ்ணு அவளை பார்த்தவாறே வெளியே நடக்க பார்க்க, “எனக்கு அவர் எதுவும் பாக்க வேணாம் சார்” கோவமாகவே வந்தது அநாயாவின் குரல்.

“உன்னோட ஆத்திரத்தோடு விளைவை பாரு விஷ்ணு” நண்பனை கடுமையாக முறைத்தவன் அனாயாவிடம், “அவன் கோவத்தை தெரிஞ்சு நீ ஏன் ம்மா நடுல வந்த?”

வலியை கட்டுப்படுத்த விழி மூடி இதழ் கடித்து அழுகையை கட்டுப்படுத்தியவள் விழி திறந்து, “அவர் உங்கள ஏதாவது செய்ய காரணம் தேடிட்டு இருக்கார் சார். ஒரு சின்ன சான்ஸ் கிடைச்சா கூட போதும். வெளிய வர முடியாத அளவு பண்ணுவார். அவ்ளோ ஆங்காரம் அவருக்கு. அதுனால தான் தடுத்தேன். நான் தடுக்கலானா கொலை கேஸ்ல ஜெயில்க்கு அனுப்ப கூட தயங்க மாட்டார்”

அவளால் சரியாக பேச கூட முடியவில்லை, இதழ்கள் தடுங்கியது வலியில், “ஏன் சார் இப்டி பொறுமையே இல்லாம இருக்காங்க?”

அவனை எண்ணி உண்மையாக உருவாகிய கரிசனையை அவளையும் மீறி பார்த்திபனிடம் ஆதங்கமாக கேட்க, அவளது வேதனை புரிந்தவன்,

“என்ன, என்னை திருத்த வந்துருக்கியா?” என்றவன், “ஸ்ரீனி…” கத்தி அழைக்க வேகமாக வந்தவன் அனாயாவை பார்த்து பதற ஆட்டோ பிடித்து வர அனுப்பினான் விஷ்ணு.

அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு தாமோதரன் பேத்தியை பார்க்க வர, அவரை பார்த்த மூவருக்கும் அத்தனை கோவம். ஸ்ரீனி மூலம் அனாயாவிற்கும் விஷயம் சென்றிருந்தது.

“ரொம்ப தப்பு பண்ற தாமோதரன். சரித்திரத்துல என்னைக்குமே தோத்தவன் பேர் கோமாளியா தான் வரும். ஜெய்கிறதுக்காகவோ இல்லையோ, தோக்காம வாழணும்னே கங்கணம் கட்டி வாழ்றவன்டா நான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!