Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நீ எனக்கு தந்த காதல்

நீ எனக்கு தந்த காதல் – 22.

தமிழும் நிலாவும் ஒருவருக்கு ஒருவர் தந்து கொள்ளும் எதிர்பாராத சர்ப்ரைஸ்.

 

தமிழும் நிலாவும் டின்னர் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு வந்தனர்.

 



Advertisement

இனி,

 

‘தமிழ் ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்’, என நிலா கூப்பிட,

Advertisement

 

Advertisement

‘ம் வந்துட்டேன் என்ன வேனும் சொல்லு’, என சொல்லி தமிழ் நிலா அருகில் வந்து நின்று கொண்டு கேட்க,

 

அவனை கீழே இழுத்து தன் அருகில் உட்கார வைத்து அருகில் இருந்த துண்டை எடுத்து தமிழ் கண்ணை நிலா கட்ட,

Advertisement

 

‘ஏய் நிலா என்ன கண்ணாமூச்சி விளையாட போறமா’, என தமிழ் கேட்க,

 

‘ம் ஆமா அப்பா, அம்மா விளையாட வேண்டிய வயசுல கண்ணாமூச்சி விளையாட போறமான்னு கேக்குறியே உன்ன’, என நிலா தனக்குள் தமிழை திட்டிக் கொண்டே சென்று தன் ஹேண்ட் பேக்கில் இருந்து ஒரு சின்ன ஜுவல் பாக்சை எடுத்து வந்து தமிழின் கையில் கொடுத்து, ‘இப்ப கண்ண திறந்து பாருங்க ‘, என நிலா சொல்ல,

 

தமிழும் கண் கட்டை அவிழ்த்து விட்டு அதை திறந்து பார்க்க அதில் அழகான மோதிரம் ஒன்று இருந்தது.

 

‘ஏய் நிலா ரொம்ப அழகா இருக்கு. இது எனக்கா.’, என தமிழ் கேட்க,

 

‘ம் இல்ல கொண்டாங்க.’, என நிலா அதை வாங்கி தமிழ் விரலில் மாட்டி விட,

 

‘நிலா எப்டி எனக்கு இவ்ளோ கரெக்டா வாங்குன. ஆமா உன் ப்ரெண்ட் சிஸ்டருக்கு கிஃப்ட் தான வாங்குன. இது எப்போ வாங்குன’, என தமிழ் கேட்க,

 

‘உங்க மோதிர விரல் சைஸ் என்னோடத விட கொஞ்சம் பெருசு. ஜஸ்ட் கெஸ் பண்ணேன். கரெக்டா இருந்துச்சு. அப்புறம் ரொம்ப நாளா உங்களுக்கு ஒரு கிஃப்ட் குடுத்து சர்ப்ரைஸ் பண்ணனும்னு எனக்கு ஆசை. அதான் வாங்குனேன். நெஜமாவே உங்களுக்கு பிடிச்சிருக்கா.’, என நிலா சொல்ல,

 

‘நிஜமாவே ரொம்ப புடிச்சிருக்கு. அதான் நீயே பில் பண்றேன்னு சொன்னியா. சரி இப்ப உன் டெர்ன் திரும்பு’, என சொல்லி தமிழ் தன் கையிலிருந்த துண்டை எடுத்து நிலா கண்ணை கட்ட,

 

‘தமிழ் உங்களுக்கு கண்ணாமூச்சி விளையாட அவ்ளோ புடிக்குமா. விளையாடாம விட மாட்டீங்க போல ‘, என நிலா கேட்க,

 

‘ஆமா ஆமா. பத்து வரைக்கும் மெதுவா எண்ணிட்டு கண்ணை திற சரியா’,  என தமிழ் சொல்லி விட்டு தன் பேக்கில் இருந்து ஒரு ஜூவல் பாக்சை எடுத்து வந்து நிலா அருகில் உட்கார்ந்தான்.

 

நிலா பத்து வரை எண்ணி விட்டு கண்ணை திறக்க தமிழ் அந்த பாக்சை அவள் கையில் கொடுத்தான்.

 

‘ஏய் என்னப்பா இது. நீங்க எப்ப இத வாங்குனீங்க’ என ஆச்சர்யம் கலந்த குழப்பத்துடன் நிலா கேட்க,

 

‘ம் அதே கடைல தான். உனக்கு தெரியாம சர்ப்ரைஸா இருக்கட்டும்னு வாங்குனேன். அத பிரிச்சு பாரு’, என தமிழ் சொல்ல,

 

நிலா அதை பிரித்துப் பார்க்க அதில் அழகான பிரேஸ்லெட் இருந்தது.

 

‘அழகா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இத கொஞ்சம் என் கைல போட்டு விடுங்களேன்’, என நிலா அதை தமிழிடம் நீட்ட அவன் அதை வாங்கி அவள் கையில் போட்டு விட்டான்.

 

‘உன் கைல இது இன்னும் அழகா தெரியுது.’, என்றான் தமிழ்.

 

‘ஆமா என்ன திடீர்னு கிஃப்ட்’, என நிலா கேட்க,

 

‘ஏன் உனக்கு மட்டும் தான் தோனுமா எனக்கு தோனாதா. முன்னாடி நான் உனக்கு கிஃப்ட் வாங்கிக் குடுத்தனா இல்லையான்னு எனக்கு ஞாபகம் இல்ல.நீ சொன்ன மாதிரி பர்ஸ்ட் டைம் ஜூவல்லரி ஷாப்க்கு சேர்ந்து வந்துருக்கோம் ஏதாவது வாங்கித் தரலாமேன்னு தோனுச்சு. ஆனா இங்க வந்து பாத்தா நீயும் எனக்காக வாங்கிருக்க.  எப்டி நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிச்சிருக்கோம்’,  என தமிழ் கேட்க,

 

‘ம் நம்ம ரெண்டு பேர் மைண்டும் சேம் வேவ் லென்த்ல யோசிக்குது.’, என தமிழிடம் சொல்லி விட்டு,

 

‘இன்னுமாடா புரியல உன் மர மண்டைக்கு. நானும் நீயும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கறோம். எப்ப தான் இது உனக்கு புரியுமோ. அது வரைக்கும் இப்பத்திக்கு இது போதும்’, என தனக்குள் சொல்லிக் கொண்டு. தன் கையில் அவன் போட்டு விட்ட பிரேஸ்லட்டை பார்த்துக் கொண்டாள் நிலா.

 

‘சரி நிலா ஆரம்பிச்சது ஆரம்பிச்சிட்டோம் ஆளுக்கு ஒரு தடவ கண்ணை கட்டி கண்ணாமூச்சி விளையாடலாம் வறியா’, என தமிழ் கேட்க,

 

நிலாவும் சிரித்துக் கொண்டே சரி என சொல்ல இருவரும் விளையாடினர்.

 

‘தமிழ் போதும் எனக்கு டயர்டா ஆயிருச்சு. நான் போய் தூங்க போறேன். நீங்களும் போய் தூங்குங்க ‘, என நிலா சொல்ல,

 

‘ஆமா நிலா ஐம் ஆல்ஸோ டயர்ட். ஓகே குட் நைட்’, என சொல்லி விட்டு தமிழ் படுக்க நிலாவும் தமிழும் தூங்கினர்.

 

அடுத்த நாள் காலையில் எழுந்து இருவரும் கிளம்பி சாப்பிட வர தமிழ் அம்மா அப்பா அவர்களுக்காக வெய்ட் பண்ண அவர்கள் லந்ததும் அனைவரும் சாப்பிட தொடங்கினர்.

 

‘நிலா புது பிரேஸ்லெட்டாம்மா. ரொம்ப நல்லாருக்கு’, என தமிழ் அம்மா கேட்க,

 

”அதுவந்து ஆன்டி’, என நிலா இழுக்க,

 

‘ஆமா ராஜி நேத்து கிஃப்ட் வாங்க ஜூவல்லரி ஷாப்க்கு போனோம்ல அங்க நான் அவளுக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு இத வாங்கனேன். அவ எனக்கு சர்ப்ரைஸ் பண்ணனும்னு நினச்சு இத வாங்குனா’, என தமிழ் தன் கையில் போட்டிருந்த மோதிரத்தைக் காட்ட,

 

‘ம் ரெண்டும் நல்லா இருக்கு. நிலா இத சொல்ல ஏன் தயங்குற. நிஜமா நீயும் தமிழும் ஒருத்தர் ஒருத்தர் மேல வச்சிருக்கிற பாசத்த பாத்தா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.’, என தமிழ் அம்மா சொல்ல,

 

‘ஆமாடா நீ நிலாவ மறந்ததை நினச்சு ரொம்ப கவலப் பட்டோம் நாங்க ரெண்டு பேரும். ஆனா இப்ப இத பாக்கும் போது அதெல்லாம் தீர்ந்து போச்சு’, என தமிழ் அப்பா சொன்னார்.

 

‘சரி சாப்டுங்க’, என தமிழ் அம்மா சொல்ல அனைவரும் சாப்பிட்டனர்.

 

ஆபிசில் நிலாவும் நந்தினியும் வேலை பார்த்துக் கொண்டிருக்க நிலாவின் கையில் இருந்த ப்ரேஸ்லட்டை பார்த்து விட்டு,

 

‘இது எப்ப வாங்குன நிலா. அழகா இருக்கு’, என நந்தினி கேட்க,

 

நடந்தவற்றை நிலா சொல்ல,  ‘பார்ரா அப்ப கல்யாணத்துக்கு பிறகு தமிழ் வாங்கித் தந்த முதல் கிஃப்ட்டா. ம் நடத்து நடத்து. நீ வாங்கி தந்ததுக்கு சாரோட ரியாக்ஷன் எப்டி இருந்துச்சு’, என நந்தினி ஆர்வமாக கேட்க,

 

‘நல்லா இருக்கு. எப்டி இவ்ளோ கரெக்டா வாங்குன அப்டீன்னு கேட்டாரு ‘, என நிலா சொல்ல,

 

‘ம் அப்புறம் என்ன நடந்துச்சு. இந்த சமயத்துல ரொமேன்ஸ் சீன் நடந்துருக்கனுமே’, என நந்தினி கேட்க,

 

‘ம் நடந்துச்சே. ரெண்டு பேரும் கடைசியா கண்ணாமூச்சி விளையாடிட்டு தூங்கிட்டோம்’, என நிலா சொல்ல,

 

‘என்னது கண்ணாமூச்சி விளையாண்டீங்களா. அடப்பாவிகளா நீங்க ரெண்டு பேரும் இன்னும் வளரவே இல்லயா.’, என நந்தினி ஏமாற்றத்துடன் கேட்க,

 

‘என்னை என்ன பண்ண சொல்ற. தமிழ் கேட்டப்ப எனக்கும் பர்ஸ்ட் அப்டி தான் தோனுச்சு. ஆனா அப்புறமா சேர்ந்து விளையாடும் போது நல்லா இருந்துச்சு’, என நிலா சொல்ல,

 

‘அது சரி. இன்னைக்கு ஈவ்னிங் பங்க்ஷனுக்கு போகும் போதாவது ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க ‘, என நந்தினி சொல்ல,

 

‘ம் ட்ரை பண்றேன்’  என நிலா சொல்ல இருவரும் பேசிக் கொண்டே வேலைப் பார்த்தனர்.

 

வேலை முடிந்து தமிழும் நிலாவும் வீட்டுக்கு வந்து ரிசப்ஷனுக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தனர்.

 

‘நிலா இதுல எந்த ட்ரஸ் போடட்டும்னு சொல்லேன்’, என தமிழ் கேட்க நிலாவும் ஒன்றை செலக்ட் செய்ய அதை போட்டு வந்தான் தமிழ்.

 

‘நிலா ரெடியா டைம் ஆச்சு’, என தமிழ் கேட்க,

 

‘ம் ரெடி’, என சொல்லி நிலா வர சிறிது நேரம் அவளையே கண் இமைக்காமல் பார்த்தான் தமிழ்.

 

‘தமிழ் தமிழ். போலாமா’, என நிலா அவனை அசைத்து கேட்க,

 

சுயநினைவுக்கு வந்த தமிழ், ‘ஓ இது தான் அழகுல மயங்குறதோ. ஆமா இவ்ளோ அழகா இருந்தா மயங்காம என்ன பண்ணுவேன்’, என தனக்குள் நினைத்துக் கொண்டு, ‘ம் போலாம்’, என தமிழ் சொல்ல இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

 

இதை பார்த்த தமிழ் அம்மா, ‘ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க. என் கண்ணே பட்ரும் போல. ஒரு நிமிஷம் இருங்க ‘  என சொல்லி விட்டு உள்ளே சென்று உப்பை கையில் எடுத்து வந்து இருவருக்கும் சுற்றி போட்டார்.

 

‘சரி பாய் ராஜி, பாய் டாடி. வர லேட்டாகும் நீங்க கதவ சாத்திட்டு தூங்குங்க. நாங்க வந்து போன் பண்ணதுக்கு பிறகு தொறந்துக்கலாம்’, என தமிழ் சொல்ல,

 

‘மறக்காம எல்லாம் எடுத்துக்கிட்டீங்களா’, என தமிழ் அம்மா கேட்க

 

‘ம் கிஃப்ட் பர்ஸ் பேக் எல்லாம் எடுத்தாச்சு ஆன்டி’, என்றாள் நிலா.

 

‘சரி வண்டிய பாத்து ஓட்டு. பாத்து பத்திரமா போய்ட்டு வாங்க ‘, என தமிழ் அப்பா சொல்ல இருவரும் சரி என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினர்.

 

‘தமிழ் இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு. அப்டியே ஹாலிவுட் ஆக்டர் மாதிரி இருக்கீங்க ‘, என நிலா சொல்ல,

 

‘நிலா நீ வேற இந்த சேரில நீ ஏஞ்சல் மாதிரி இருக்க. இந்த கலர் உனக்கு ரொம்ப அழகா இருக்கு’, என தமிழ் சொல்ல,

 

‘அப்டியா இந்த சேரி யாரு வாங்கி தந்தாங்க தெரியுமா’, என நிலா கேட்க,

 

‘ம் உங்க அம்மா, இல்ல உன் தம்பி’, என தமிழ் சொல்ல,

 

‘இல்ல எனக்கு ரொம்ப புடிச்சவங்க வாங்கித் தந்தது’, என நிலா சொல்ல,

 

‘ம் உன் ப்ரெண்ட்ஸா’, என தமிழ் கேட்க,

 

‘ம் போதும். நீங்க விட்டா எல்லாரையும் சொல்லுவீங்க. ஆனா உங்க பேர மட்டும் சொல்ல மாட்டீங்க. இத எனக்கு வாங்கிக் குடுத்தது நீங்க தான்’, என நிலா கோபமாக சொல்ல,

 

‘ஏய் நிலா சாரி. நான் பர்ஸ்டே கெஸ் பண்ணேன். ஆனா சொல்லல. கோவுச்சுக்காத ப்ளீஸ்’, என தமிழ் சொல்ல,

 

‘சரி ஓகே. இது தான் லாஸ்ட் டைம்.’, என சொல்லி நிலா சிரிக்க தமிழும் சேர்ந்து சிரித்தான்.

 

இந்த மகிழ்ச்சி இவர்கள் வாழ்வில் தொடருமா?

 

தொடரும்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!