நீ எனக்கு தந்த காதல் – 25.
நிலாவை காணாமல் தேடி அலையும் தமிழ்.
தமிழ் ஆபிஸில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
Advertisement
இனி,
தமிழ் நிலாவை தன் அறைக்கு அழைக்க நிலாவும் அங்கு வந்தாள்.
Advertisement
Advertisement
‘நிலா எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு நான் கிளம்பறேன். நம்ம ப்ராஜக்ட் விசயமா இந்த இன்வஸ்டர நீ போய் பாத்துட்டு அப்டியே வீட்டுக்கு போயிரு. நானும் வந்தரேன். ஆபிஸ்ல இருக்க உன் டூ விலர்ல போயிடு. இந்தா அது சம்பந்தமான டீடைல்ஸ் இந்த ஃபைல்ல இருக்கு. உனக்கு தெரிஞ்சது தான். எதுக்கும் ப்ரிபேர்டா போ. சரியா. அப்புறம் அந்த கம்பெனி அட்ரஸ் கார்டு அதுலயே இருக்கு. நீ முடிச்சிட்டு கிளம்பும் போது எனக்கு போன் பண்ணு.’, என சொல்லி தமிழ் அந்த ஃபைலைக் குடுக்க,
‘ம் சரி தமிழ் ‘, என்று சொல்லி நிலா அங்கிருந்து சென்றாள்.
Advertisement
‘நந்தினி நான் இன்வஸ்டர பாக்கப் போறேன். அப்டியே வீட்டுக்கு கிளம்பிடுவேன். என் டேபிள்ல இருக்க ஃபைல்ஸ் எல்லாம் கொஞ்சம் பாத்து அது அது எடுத்துல வச்சறியா ப்ளீஸ்’, என நிலா சொல்ல,
‘ம் ஓகே நிலா நான் பாத்துக்கறேன்.’, என்று நந்தினி சொல்ல,
‘சரி பாய்’, என சொல்லி விட்டு நிலா ஆபிசிலிருந்து கிளம்ப, தமிழும் நந்தினியிடம் வந்து, ‘நந்தினி நானும் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. கிளம்பறேன். பாத்து எல்லாரும் கிளம்பிய பிறகு ஆபிஸ க்ளோஸ் பண்ணிட்டு சாவிய செக்யூரிட்டி கிட்ட குடுத்துடுங்க. ஓகே வா’, என சொல்ல,
‘ஓகே சார்’, என நந்தினி சொல்ல தமிழும் ஆபிசிலிருந்து கிளம்பினான்.
ஒரு வழியாக நிலா அந்த கம்பெனியை கண்டு பிடித்து அப்பாய்ண்மண்டுக்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்றாள்.
நிலா ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் சென்று தங்கள் கம்பெனி கார்டை காட்ட,
‘மேடம் சார் வர இன்னும் ஹாஃப்னவர் ஆகும். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.’, என அந்த ரிசப்ஷனிஸ்ட் சொல்ல,
‘இட்ஸ் ஓகே மேடம். நான் தான் கொஞ்சம் முன்னாடி வந்துட்டேன். நான் அங்க வெய்ட் பண்றேன். சார் வந்ததும் என்னை கூப்டுங்க ‘, என நிலா சொல்ல,
‘ஓகே மேடம்’, என்றாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்.
நிலா அங்கு இருந்த ஷோபாவில் உட்கார்ந்து அந்த ஃபைலை எடுத்து படித்துக் கொண்டிருந்தாள்.
அரை மணி நேரத்தில் அந்த இன்வஸ்டர் வர ரிசப்ஷனிஸ்டும் அவரிடம் கேட்டு விட்டு நிலாவை உள்ளே அனுப்பினாள்.
‘வணக்கம்மா வாங்க உட்காருங்க. என்ன சாப்டறீங்க கூல்டிரிங்ஸ், டீ , காபி’, என அவர் கேட்க,
‘ உங்க உபசரிப்புக்கு ரொம்ப நன்றி சார். ஆனா எனக்கு எதுவும் வேண்டாம். ‘, என நிலா சொல்ல,
‘என்னம்மா நீங்க. சரி தமிழ் சார் வரல’, என அவர் கேட்க,
‘சார் ஒரு மீட்டிங்க்ல மாட்டிக் கிட்டாரு. அதனால எனக்கு போன் பண்ணி உங்கள பாத்துட்டு வர சொன்னாரு. ஏனா உங்க டைமும் ரொம்ப ப்ரீஸியஸ்ல அது வேஸ்ட் பண்ண வேண்டாம்னு தான்’, என நிலா சொல்ல,
‘அதுவும் கரெக்ட் தான். ஏற்கனவே இந்த ப்ராஜக்ட் தள்ளி போய் கிட்டே இருக்கு. சரி ஃபைல்ல குடுங்க பாக்கலாம்’, என அவர் சொல்ல நிலா தன் கையிலிருந்த ஃபைலை குடுத்தாள்.
அதில் இருந்த டீடைல்ஸை படித்து விட்டு தனக்கு சந்தேகம் உள்ள இடங்களில் இன்வஸ்டர் கேட்க அதை நிலா விவரித்தாள்.
‘ஓகே ம்மா. எல்லாம் பர்ஃபெக்டா இருக்கு. ‘, என சொல்லி இன்வஸ்டர் கையெழுத்துப் போட்டார். அதை வாங்கிக் கொண்டு நிலா, ‘எங்க தமிழ் சார் கையெழுத்து போட்டதும் உங்களுக்கு ஒரு காபி சென்ட் பண்ணிருவோம். அப்ப நான் கிளம்பறேன் சார்’, என சொல்ல
‘ஏம்மா வந்ததிலிருந்து கேக்கனும்னு நினச்சேன். நீங்க தமிழ் வைஃப் தான’, என இன்வஸ்டர் கேட்க,
‘ஆமா சார்’, என நிலா சொல்ல,
‘ரொம்ப சந்தோஷம். தமிழ் குடுத்து வச்சவரு. அவரு பிஸ்னஸ்லயும் ஹெல்ப் பண்ண நீங்க இருக்கீங்க.’, என இன்வஸ்டர் சொல்ல,
‘நான் தாங்க குடுத்து வச்சவ. ஏன்னா சம்பளம் குடுத்தா வேல செய்ய நிறைய பேரு இருக்காங்க. ஆனா தமிழ் மாதிரி ஒரு நல்ல புருஷன் எத்தன பேருக்கு கிடைக்கும்’ என நிலா சொல்ல,
‘உங்க வீட்டுகாரர விட்டுக் குடுக்காம பேசறதில இருந்தே தெரியுது நீங்க தமிழ் மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கீங்க ன்னு. எப்பவும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பா இருக்கனும்னு நான் வாழ்த்தறேன்.’, என இன்வஸ்டர் சொல்ல,
‘ரொம்ப நன்றிங்க. சரி நான் கிளம்பறேன்’, என நிலா சொல்லி கிளம்ப,
‘சரிம்மா பாத்து போய்ட்டு வாங்க ‘, என சொல்லி இன்வஸ்டர் நிலாவை வழி அனுப்பி வைத்தார்.
அப்படியே தமிழுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். அதில், ‘வணக்கம் தமிழ். நீங்க ஏதோ மீட்டிங்ல மாட்டி கிட்டனால வர முடியலைன்னு உங்க வைஃப் சொன்னாங்க. அதனால தான் கால் பண்ணாம வாய்ஸ் மெசேஜ் அனுப்பறேன். அப்புறம் ஃபைல்ல படிச்சு பாத்து சைன் பண்ணிட்டேன். இடைல இருந்த டவுட்ஸ் எல்லாம் நிலா க்ளியர் பண்ணிட்டாங்க. அவங்க ரொம்ப ப்ரிலியண்ட் கூடவே மரியாதை தெரிஞ்ச பொண்ணு. அத விட உங்க மேல ரொம்ப அன்பு வச்சிருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் இப்படியே சேர்ந்து வாழ என் வாழ்த்துக்கள். சரி ஃப்ரியா ஆகிட்டு கால் பண்ணுங்க ‘, என அனுப்பி இருந்தார்.
நிலா வெளியே சென்று கிளம்பும் போது, ‘தமிழ் எல்லாம் ஓகே. சைன்டு காபி உங்களுக்கு சென்ட் பண்ணி இருக்கேன். நான் வீட்டுக்கு கிளம்பறேன்.’ என தமிழுக்கு மெசேஜ் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.
தமிழ் மீட்டிங் முடிஞ்சதும் வெளியே வந்து தன் போனை எடுத்துப் பார்த்து தனக்கு வந்த கால்ஸ் மற்றும் மெசேஜைஸை பார்த்துக் கொண்டிருந்தான். இன்வஸ்டரின் வாய்ஸ் மெசேஜை கேட்டு விட்டு, ‘ரொம்ப நன்றி சார். ‘, என அவருக்கு ரிப்ளை செய்து விட்டு, நிலாவின் மெசேஜையும் பார்த்து விட்டு, ‘சூப்பர் நிலா. சரி பாத்து பத்திரமா வா. நானும் இப்ப தான் கிளம்பறேன்.’, என அவளுக்கும் ரிப்ளை செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினான் தமிழ்.
தமிழ் வீட்டுக்கு வரும் வழியில் மழை பெய்ய, ‘என்ன திடீர்னு இப்டி மழை பெய்யுது. நிலா வீட்டுக்கு போயிருப்பாளா’, என சொல்லிக் கொண்டு காரை ஒட்டிக் கொண்டே நிலாவுக்கு போன் செய்ய ஸ்விட்ச் ஆஃப் என்று வர, வேகமாக காரை ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு சென்றான் தமிழ்.
தமிழ் காரை விட்டு வேகமாக இறங்கி வீட்டுக்குள் செல்ல, ‘டேய் தமிழ் ஏன் இப்டி பதட்டமா வர. ஆமா நிலா எங்க’, என தமிழ் அப்பா கேட்க,
அதிலேயே நிலா இன்னும் வீட்டுக்கு வர வில்லை என புரிந்துக் கொண்ட தமிழ், ‘நான் ஒரு மீட்டிங் விசயமா வெளிய போயிருந்தேன் டாடி. இந்தா இனிமே தான் போய் ஆபிஸ்ல இருந்து நிலாவ கூட்டிட்டு வரனும். நான் போய்ட்டு வரேன் டாடி’, என சொல்லி விட்டு தமிழ் அங்கிருந்து வேகமாக காரை எடுத்துச் சென்றான் தமிழ்.
‘நிலா எங்க போன. போன் வேற ஸ்விட்ச் ஆஃப் ன்னு வருது. மழை வேற வேகமாக பெய்யுது. ‘, என தனக்குள் பேசிக் கொண்டே அந்த இன்வஸ்டர் கம்பெனிக்கு போனான் தமிழ்.
அங்கு சென்று அந்த ரிசப்ஷனிஸ்ட்டிடம், ‘ஏங்க நிலா ன்னு ஒருத்தங்க வந்தாங்களே அவங்க’, என தமிழ் இழுக்க,
‘ஆமா சார் வந்தாங்க. சார பாத்து பேசிட்டு அவங்க அப்பவே கிளம்பிட்டாங்க’, என ரிசப்ஷனிஸ்ட் சொல்ல,
‘அவங்க கிளம்பி எவ்ளோ நேரம் இருக்கும்’, என தமிழ் கேட்க,
‘ஒன்ஹவர் இருக்கும். ஏன் சார் எதுவும் ப்ராப்ளமா’, என ரிசப்ஷனிஸ்ட் கேட்க,
‘அதெல்லாம் ஒன்னுமில்ல. தேங்க்ஸ்’, என சொல்லி விட்டு தமிழ் அங்கிருந்து கிளம்பினான்.
அந்த வழியில் தான் நிலாவின் ஹோட்டல் இருப்பது ஞாபகத்துக்கு வர நிலாவின் தம்பி பாரதிக்கு தமிழ் போன் செய்தான்.
‘சொல்லுங்க மாமா. நல்லா இருக்கீங்களா’, என பாரதி கேட்க,
‘ம் பாரதி இந்த வழியா போனேன் உன் ஞாபகம் வந்துச்சு. அதான்’, என தமிழ் இழுக்க,
‘ஓ அப்டியா. அக்காவும் கூட இருக்காளா மாமா. இல்ல நீங்க மட்டும் தான் வந்தீங்களா. மழை வேற வேகமா பெய்யுது. வந்து கடைல இருந்துட்டு மழை விட்டதும் ரெண்டு பேரும் போலாம்’, என பாரதி சொல்ல,
அதிலிருந்தே நிலா அங்கு இல்லை என புரிந்துக் கொண்டு, ‘பரவால்ல பாரதி நான் மட்டும் தான் வந்தேன். கார்ல தான சீக்கரமா வீட்டுக்கு போயிருவேன். இன்னொரு நாள் ரெண்டு பேரும் வறோம்’, என சொல்லி தமிழ் போனை வைத்து விட்டு, ‘நிலா எங்கடி போய் தொலஞ்ச. எல்லாம் என் தப்பு தான் உன்னை தனியா நான் அனுப்பி இருக்க கூடாது. இப்ப எங்கேன்னு போய் நான் தேடறது. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலடி. ப்ளீஸ் சீக்கரமா எங்கிட்ட வந்துருடி.’, என தனக்குள் புலம்பி அழுதுக் கொண்டு வழி முழுவதும் தேடி கொண்டே சென்றான் தமிழ்.
ஒரு கடையில் யாரோ நிலா போல் மழையில் நனைந்து கொண்டு நிற்பதை பார்த்த தமிழ் வண்டியை மெதுவாக ஓட்டிச் சென்று அருகில் நிறுத்திப் பார்க்க அது நிலா தான் என தெரிந்ததும் வேகமாக காரை விட்டு இறங்கி வந்து நிலாவை இறுக்கி கட்டி பிடித்து அழுது கொண்டே அவள் முகம் முழுவதும் முத்த மழை பொலிய நிலா அப்படியே உறைந்து போய் நின்றாள்.
பிறகு சுய நினைவிற்கு வந்த தமிழ், ‘அவளை தரதரவென இழுத்துக் கொண்டு போய் காரில் உட்கார வைத்து விட்டு அவள் வந்த டூவீலரை அந்த கடையில் நிறுத்தி பூட்டி விட்டு கடைக் காரரிடம் சென்று, ‘அண்ணா வண்டிய கொஞ்சம் பாத்துக்கங்க நாளைக்கு வந்து எடுத்துக்கறேன் ‘, என தமிழ் சொல்ல,
‘சரிப்பா’, என கடைக்காரர் சொல்ல தமிழ் காருக்கு சென்று நிலாவிடம் எதுவும் பேசாமல் ஓட்ட,
‘தமிழ் என்னாச்சு. ஏன் இவ்ளோ டென்சனா இருக்கீங்க. ‘, என நிலா வாயைக் கொடுக்க,
‘ஆமா உன் போன் என்னாச்சு. கால் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வருது’ , என தமிழ் கோபமாக கேட்க,
‘அத ஏன் கேக்கறீங்க தமிழ். உங்களுக்கு மெசேஜ் பண்ணி வச்சதும் ஜார்ஜ் போயிடுச்சு. அதான் ஸ்விட்ச் ஆஃப்னு வந்துருக்கு’, என நிலா அசால்டாக சொல்ல,
‘அறிவிருக்கா உனக்கு போன ஜார்ஜ் பண்ணி வச்சுக்க மாட்டியா’, என தமிழ் கேட்க,
‘ஏன் இப்ப என்னாச்சு அதனால ‘, என நிலா கேட்க,
‘நீ ஜாலியா இருக்க. உனக்கென்ன ஆச்சோனனு நான் ஒரு மணி நேரமா தேடி அலைஞ்சு கிட்டு இருக்கேன். இன்வஸ்டர் ஆபிஸ்ல போய் கேட்டு அங்க இல்லைன்னதும், அப்புறம் உன் ஹோட்டலுக்கு போயிருப்பியோன்னு பாரதி கிட்ட கேட்டு, அங்கயும் நீ இல்லைன்னு தெரிஞ்சு கிட்டு அவன் பயந்துருவான்னு அவன் கிட்ட எதுவும் சொல்லாம, வழி முழுசும் தேடிக் கிட்டு இருந்தேன். எல்லாம் என் தப்பு தான் உன்னை தனியா அனுப்பி வச்சேன் பாரு அதுக்கு தான் இந்த தண்டனை. எனக்கு இதுவும் வேனும் இன்னுமும் வேனும்’ , என தமிழ் புலம்பிக் கொண்டிருக்க நிலா தன்னை காணாமல் தமிழ் தவித்ததை அவன் கண்ணில் பார்த்து தனக்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டாள்.
‘சாரி தமிழ். வீட்டுக்கு வர வழில மழை ஹெவியா பெய்ய ஆரம்பிச்சிருச்சு. போனும் ஆஃப் ஆயிடுச்சு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. சரி மழை நின்னதும் கிளம்பலாம்னு அப்டியே அந்த கடை கிட்ட நின்னுட்டேன். ஆனா நீங்க என்ன காணோம்னு இவ்ளோ பதட்டப்படுவீங்கன்னு எனக்கு தோனாம போச்சு சாரிப்பா’, என நிலா சமாதானப்படுத்த தமிழ் எதுவும் பேசாமல் காரை ஓட்டினான். தமிழ், நிலா இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
‘தமிழ் நிலாவ கூட்டிட்டு வர இவ்ளோ நேரமா’, என தமிழ் அம்மா கேட்க தமிழ் எதுவும் பேசாமல் தன் ரூமுக்கு செல்ல,
அங்கிருந்த துண்டை எடுத்து நிலாவிடம் குடுத்து, ‘நிலா என்னாச்சு தமிழ் ஏன் கோபமா போறான். நீ ஏன் இப்டி தொப்பலா நினஞ்சிருக்க’, என தமிழ் அம்மா கேட்க,
‘அத ஏன் ஆன்டி கேக்கறீங்க ‘, என ஆரம்பித்து நிலா எல்லாவற்றையும் சொல்லி முடிக்க,
‘அது ஒன்னுமில்ல கொஞ்ச நேரம் கழிச்சு அவனே வந்து பேசிருவான். நீ கவலைப்படாத. நீ போய் தலைக்கு குளிச்சிட்டு நல்லா காய வை’, என தமிழ் அம்மா சொல்ல,
‘சரி ஆன்டி’, என சொல்லி நிலா மேலே ரூமுக்கு சென்றாள்.
அங்கு தமிழ் துணி மாற்றிக் கொண்டிருக்க நிலா தன் துணிகளை எடுத்துக் கொண்டு குளிக்க செல்ல அவளுக்கு தும்மல் வர ஹச் என தும்ப தமிழ் திரும்பி முறைத்து பார்க்க நிலா வேகமாக பாத்ரூமுக்குள் சென்றாள்.
நிலாவை காணாமல் தவித்த தமிழுக்கு புரிந்ததா அவன் அவள் மேல் வைத்திருக்கும் அன்பு தான் காதல் என்று?
தொடரும்
