Skip to content
Post Views: 10,164
கள்ளி காட்டு காதலியே!
அத்தியாயம் 5
காலை ஆறு மணிக்கே தனது வண்டியில், மதனை அழைத்து கொண்டு கிளம்பி விட்டான் விக்ரம்.
“எங்கடா போறோம்?…” மதன் கேட்க.
Advertisement
“சொல்றேன் பேசாம வாட…” என்ற விக்ரம், அடுத்த கால் மணி நேரத்தில் விருதுநகர் பை பாஸ் மேலே ஏற,
“அடேய்…” என்று அலறினான் மதன்.
“ஒரு முக்கியமான விசயம் மச்சான். ரொம்ப அவசரம்டா…” என்று விக்ரம் சொன்ன பின் மதன் அமைதியாகி கொண்டான்.
Advertisement
நல்ல வேகத்தில் தான் விக்ரம் சென்றது. காரணமில்லாமல் இருக்காது. விருதுநகர் என்றால் பிரபாவதி மட்டும் தான, வேற என்னவோ என்று தான் மதன் அமைதியாக அமர்ந்து வந்தான்.
Advertisement
விக்ரம் வேகமாக வந்ததால் அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே விருது நகர் வந்து விட்டான். சரியாக ஒன்பது மணிக்கு பிரபாவதி கல்லூரிக்கு சற்று தள்ளி வண்டியை போட,
“போடா பரதேசி நாயே! இதுக்கு தான் என்னை கூட்டி வந்தையா…” என்று மதன் கத்த,
“கொஞ்சம் பொறுடா மச்சான். பிரபாவ பார்த்திட்டு, அப்புறம் வேற ஒரு வேலைக்கு தான் உன்னை கூட்டி வந்தேன்…”
Advertisement
“போடா டேய்… உன்னை நம்பி வந்தேன் பாரு என்னை சொல்லணும்… எள்ளு தான் எண்ணெய்க்கு காயும். எனக்கு என்னடா வந்தது…” முறுக்கி கொண்டு, பக்கத்தில் இருந்த பேக்கரிக்கு சென்று அமர்ந்து விட்டான்.
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த கல்லூரியில் ஆசிரிய பயிற்சி மாணவர்கள் வரிசையாக வெளியே இரண்டு இரண்டு பேராக வரத் தொடங்கினார்கள்.
என்னவோ என்று வெளியே வந்த மதனும், “என்னவாம் மச்சான். போராட்டமா?…”
“அனைவருக்கும் கல்வி இயக்கமாம். ஊர்வலம் போறாங்க…” என்று விக்ரம் சொல்ல,
“அனைவருக்கும் வேலை வாய்ப்பு இயக்கம்ன்னு ஒன்னை ஆரம்பிக்க சொல்லுடா, உன்னை மாதிரி ஆளுங்க நிறைய பேர் திருந்துவாங்க…” மதன் கேலி பேச,
விக்ரம் முறைத்தான்.
“என்னடா முறைக்கிற, நெசம் தான். படிச்சுட்டு வேலை இல்லாம சுத்துறதால தான நெனைப்பு பொழப்ப கெடுக்க அலையுது…” என்ற மதன்,
“நேத்து தானடா பார்த்த, அதுக்குள்ள என்ன வந்துச்சு உனக்கு…” காட்டமாக மதன் விசாரிக்க.
“அது வந்து மச்சான்…” என்றவன் முதல் நாள் நடந்ததை முழுவதும் சொல்ல,
“ எதே, அவ்வளவு தூரம் வந்தாச்சா… நீ சொல்லும் போது ஆலமரத்து ஐயனார நான் நம்பல. இப்பா நம்புறேன்டா… அதுக்காக மறுநாளே அந்த பிள்ளையை பார்க்க ஓடி வரணுமா…”
“அதில்லை மச்சான். நேத்து நான் பிரபாக்கு பூ வாங்கி கொடுத்தேன். அதை அவ வைக்கிறாளான்னு பார்க்கணும் மச்சான்…”
“செருப்பால அடிப்பேன்டா, இதெல்லாம் ஒரு பெரிய விசயமாடா… ஐம்பது ரூபாய் பூக்காக, நூத்தி ஐம்பது கிலோமீட்டர் உசுர விட்டு வண்டிய ஓட்டி வந்த…” மதன் கத்த,
“இது தாண்ட எனக்கு விசயமே. அவ மட்டும் நான் வாங்கி கொடுத்த பூவை வச்சு இருந்தா. நிச்சயம், அவ மனசுல நான் வந்துட்டேன்டா…” என்று சொல்லி கொண்டிருக்க,
பயிற்சி ஆசிரியர்கள் ஊர்வலம் இவர்களை நெருங்கியது. நீல கலர் யூனிஃபார்ம் சேலை அணிந்து, முடியை முழுவதும் கொண்டை போட்டு, ஒரு பக்க முந்தியை இடிப்பில் சொருகி, ஜெனியோடு சிரித்து பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தாள் பிரபா.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றவன் முகத்தில் , முகம் கொள்ளா புன்னகை வந்தது. ஆம், அவன் ஆசைப்பட்டது போல பிரபாவதி கொண்டையை சுத்தி விக்ரம் வாங்கி கொடுத்த மல்லிகை பூ அலங்கரித்து இருந்தது.
“மச்சான்…” என்று விக்ரம், மதனை கட்டி கொள்ள,
“டேய், அது தூக்கி போடா மனசில்லாமா கூட வச்சு இருக்கலாம். அதெல்லாம் காதல் ஆகுமா…” சமாளித்தான் மதன்.
“அதுக்கு வாய்ப்பில்லை மச்சான். நம்ம ஊர்ல பொண்ணுக யார் பூ குடுத்தாலும் தலையில வாங்கி வச்சுபாங்களா?… அதுவும் ஒரு ஆம்பிளை பூ கொடுக்க எந்த வயசு பொண்ணு வாங்கிக்கும். அப்படியும் ஒரு பொண்ணு தன் அப்பாவோ, அண்ணனோ இல்லாம ஒரு ஆம்பிளை கொடுத்த பூவை தலையில வச்சா, அது ஒரு காரணம் தான் இருக்கும் மச்சி…” என்றான் குதூகலமாக.
“என்ன காரணம்?…”
“வேறென்ன காதல் தான்…” அட்டகாச சிரிப்போடு விக்ரம் சொல்ல,
“அந்த பிள்ளை உன் கிட்ட காதலை சொல்லும்ன்னு நினைக்கிற…”
“நிச்சயமா இல்லை. பிரபா குணத்துக்கு ஒரு நாளும் அப்படி நடக்காது. என்னைக்கும் வெளிப்படையா சொல்லிக்க மாட்டா. ஆனாலும், எனக்கு புரிய வைப்பா… அவ பார்வையே சொல்லிடும்… என்னாலையும் உணர முடியும்…”
“அப்படி உணர முடியலன்னா?…” கேள்வியாக மதன் கேட்டான். நிச்சயம் அவனுக்கு பதில் வேணும்.
“அப்படி நடக்காது மச்சான். பார்த்த தான, பிரபா மனசுல நான் வந்துட்டேன். அப்படி இல்லன்னா ஒரு சின்ன நெனைப்பாது என்னை பத்தி ஓடும்…”
“ஒரு வேளை கடைசி வரை அந்த பிள்ளையை உன்னால நெருங்க முடியலன்னா. நீ ஆசைப்பட்ட அந்த பார்வை உனக்கு கிடைக்கலன்னா? எனக்கு நிச்சயம் பதில் வேணும் விக்ரம்…”
ஒரு பெருமூச்சு விட்டவன், “நான் ஒதுங்கி போயிடுவேன் மச்சான்…”
“விக்ரம்…”
“உண்மை தான். ரொம்ப கட்டாய படுத்த மாட்டேன். எம் மனசு எனக்கு உணர்த்திடும். பிரபாக்கு என் மேலே விருப்பம் இல்லன்னா நான் நிச்சயம் ஒதுங்கி போயிடுவேன். ஆனா, நான் ஒதுங்க இன்னும் நேரம் வரல. பாப்போம், நாள் இருக்கு. அவ மனசு உறுதியா இருந்தா, என்னால ஒன்னும் பண்ண முடியாது. நல்ல விதமாகவே ஒதுங்கி போவேன் தவிர, தட்ரோம், தூக்குறோம் எல்லாம் நான் இல்லை. எங்கிருந்தாலும் வாழ்கன்னு போற நல்லவன்டா விக்ரம்…”
“ நீ தான விக்ரம் இது?…” என்று மதன் கேட்க.
சிரித்தான், “வேற என்ன பண்ணனும். ஒரு ஈர்ப்பு அதான் திரும்ப திரும்ப பார்த்தேன். ஆழமா மனசுல நின்னுடா… வயசு கோளாறுலையோ இல்லை அந்த பிள்ளை அழகா இருக்குன்னோ பின்னால சுத்தல. கடைசி வரை அவ தான்னு நினைச்சு தான் உறுதியா நிக்கிறேன். அந்த உறுதி என் வரை மட்டும் தான். என்னோட காதல், அவளுக்கு பொறுக்கிதனமா தெரிஞ்ச அடுத்த நொடி ஒதுங்கி போயிடுவேன். அந்த ஒரு பார்வையை இதுவரை அவகிட்ட நான் பார்க்கல…”
“நான் கூட அந்த பிள்ளை அழகா இருக்குன்னு, இவன் வேலையேத்து போய் சுத்துறான்னு நினைச்சேன் மாப்பிள்ளை… நிலவரம் புரியாம விளையாட்டு தனமா இருக்கான்னு ஒரு ஆதங்கம் வேற… சாரி மாப்பிள்ளை…” என்றான் மதன்.
“ ஏண்டா, நம்ம பிள்ளைக யாரும் அழகா இல்லை. அவ அழகாகவும் இருக்கா தான். அதுக்காக எல்லாம் ஊரை எதிர்க்க முடியுமா?… பொதுவா, வெளில, ரோட்ல எங்கேயாவது அழகான பொண்ணுங்களை பார்த்த நல்லா இருக்காங்க, அவ்வளவு தான். அந்த எண்ணம் அந்த இடத்தோட போயிரும். அதை விட்டு யாரு, என்னா, எங்க போகுது, வருதுன்னு பார்த்து நிக்க முடியுமா? அதுவா மச்சான் நம்ம…”
“இந்த உலகத்துல எல்லா மனுசன் ஜென்மத்துக்கும் இருக்க ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா? ஈசியா அடுத்த ஆட்களை எடை போட்டுவோம். முன்ன பின்ன தெரியாத யார பார்த்தாலும், நம்ம பார்வை அவங்க மேல விழ தான் செய்யும். ஹோட்டல்ல, கடைகள்ல, தெருவுல, தியேட்டர்ல, கோவில், மால்ன்னு எங்க யார பார்த்தாலும் நம்ம பார்வை அவங்களை அலச தான் செய்யும். பார்த்த உடனே கருப்பா இருக்காங்க, உயரமா இருக்கான், கண்ணு நல்லா இருக்கு, தோடு அழகா இருக்கு, சேலை நல்லா இருக்கு, சிரிப்பு அழகா இருக்கு, வாய்ஸ் நல்லா இருக்கு… இப்படி எவ்வளவோ பார்த்து கடந்து போக தான செய்றோம்…”
“நான் என்ஜினீயர் படிக்கும் போது ஒரு பொண்ணு வரும். பார்க்க மகாலட்சுமி மாதிரி இருக்கும். எந்த ட்ரெஸ் போட்டாலும் எடுப்பா இருக்கும். நானே பல தடவை சொல்லி இருக்கேன். காயத்ரி, நீ மகாலட்சுமி மாதிரி இருக்கேன்னு… இப்போ அந்த பிள்ளை என்ன பண்ணுதுன்னு கூட தெரியாது. ரசனை வேற மச்சான். அது ரசிக்கிறதோட நிக்கும். ஆனா, காதல் அது வேற… காலத்துக்கும் நிட்கும்…”
“உன்கூட ஒரே ஊர்ல தான மச்சான் நானும் வளர்ந்தேன். என்ன நடக்கும்ன்னு எனக்கு தெரியாதா?… ஆனாலும் மனசு அவளை தேடுது. விடுடா விக்ரம், வர்றத பார்த்துக்கலாம்ன்னு சொல்லி, மனசு அவளை நோக்கி போகுது. உனக்கு ஒரு உண்மையை சொல்லவா, அவ சிரிச்சே நான் இன்னைக்கு தான் பாக்குறேன். பிரபாவதி யார்ன்னு எனக்கு தெரியும். தனிப்பட்டு பிரபாவதி எப்படின்னு எனக்கு தெரியாது. அப்படி இருந்தும் என் பார்வை அவ கிட்ட தான். அவ பார்வையும் எனக்கு வேணும்…” என்று விக்ரம் சொல்லி முடிக்க,
அவனையே வியந்து பார்த்த மதன், “உனக்காகவாது, உலகம் மாறனும். கொஞ்சம் நல்லது நடக்கணும் மச்சான்…” என்று சொல்லி முடிக்க,
“பிரபா மாறுவா, என் காதலை அவளால உணர முடியும். நேத்து, நான் நம்ம டவுன் வரவே பன்னிரண்டு மணி ஆச்சு. அந்த நேரத்துக்கு நம்ம ஊருக்கு என்ன பஸ் இருக்கு. பஸ் ஸ்டாண்டுல தான் தூங்குனேன். காலையில கிளம்பி இங்க வந்தாச்சு. அந்தளவுக்கு இந்த கள்ளி காட்டு கள்ளி என்னை படுத்துறா…”
“ பைத்தியகாரதனம் விக்ரம்…”
“காதலே பைத்தியக்காரதனம் தான்…”
ஊர்வலம் போன மாணவர்கள் திரும்ப வந்தார்கள். அவர்கள் கையில் வைத்திருந்த நோட்டீஸ் எல்லோருக்கும் கொடுக்க பட்டது. பிரபாவும், ஜெனியும் ரோட்டை கடந்து இவர்கள் பக்கம் வர, விக்ரம் அவசரமாக தன் ஹெல்மேட்டை அணிந்து கொண்டான்.
“என்னை பார்த்தா, எம் பக்கம் அவ வரமாட்டா மச்சான்…” என்க. மதனும் திரும்பி நின்று கொண்டான்.
பிரபா, அவர்கள் அருகே வந்தவள் விக்ரமிடம் ஒன்றை கொடுத்து, மதனிடம் நீட்ட, அவள் பக்க திரும்பி தான் மதன் வாங்கி கொண்டான். அவனை பார்த்து அதிர்ந்து போனவள். பட்டென்று திரும்பி வண்டியில் அமர்ந்திருந்தவனை பார்க்க, விக்ரம் தன் ஹெல்மெட்டை கழட்டி விட்டு அவளை பார்த்து சிரித்தான்.
மதன் பார்வை குறுகுறுவென பிரபாவையே வட்டம் போட்டது. விக்ரமை அதிர்ந்து பார்த்தவள் பார்வை பின் ஆச்சர்யமாக மாறி, கொஞ்சம் சின்னதாக மலர்ச்சி கண்டு, தயங்கி தான் கடந்து போனாள்.
இப்போது ஆச்சர்ய பட்டது மதன் தான். அவன் எதிர்பார்த்தது என்னவோ முறைப்பையும், கோவத்தையும் தான். இல்லாவிட்டால் பயந்து அரண்டு ஒதுங்கி தான் போவாள். இதுவரை அப்படி தான் நடந்தது. ஆனால், பிரபா கண்களில் தோன்றிய மலர்ச்சி, ஆச்சர்யம் எல்லாம் கண்ட போது விக்ரம் சொன்ன பார்வைக்கான அர்த்தம் புரிந்தது.
“சில்வண்டு சிக்கிரச்சு சிறுத்தை கிட்ட. இந்த வாயாடி கவுத்து பூட்டான் பாரேன். சும்மாவா சொன்னாங்க, வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்ன்னு…” பெருமூச்சு விட்டு கொண்டான் மதன்.
“ பிரபா, ரதி மாதிரி மச்சான். இந்த சேலை கலர் சரி இல்லை. அதான் கொஞ்சம் டல்லா காட்டுது…” என்று அவள் போன திசையை பார்த்து சொல்லி கொண்டு இருந்தான் விக்ரம்.
“ இரண்டு முலம் மல்லிகை பூக்கு, ரெண்டரை மணி நேரம் உசுர விட்டு என்னை ஏத்தி பறந்து வந்தையே, உன் வேகத்துல எனக்கு பின்னாடி தீ பிடிக்குது மாப்பிள்ளை. வா, எதவாது கூலிங்கா உள்ளே போடுவோம்…” என்றான் மதன்.
“சரி மச்சான். அப்படியே உர கடை பார்த்திட்டு போவோம்…”
“ எதுக்கு?…”
“உனக்கு தான். நீ தான உரக்கடை போட்டு உட்கார ஆசைப்பட்ட, அதுக்கு தான். நமக்கு தெரிஞ்சவங்க தான், மொத்தமா தூக்கலாம்…”
“ மாப்பு…” என்று ஆச்சர்யமாக பார்த்தவன், “நன்றிடா…” என்று சந்தோசத்தில் சொல்ல,
“நன்றி சொன்னா செருப்பு பிய்யும். வா, போகலாம்…” தள்ளி கொண்டு போனான் விக்ரம்.
வகுப்பறைக்கு வந்த பிரபாக்கு நினைவு என்னவோ விக்ரம் மட்டும் தான். நேற்று இரவே தூக்கமில்லை. வேண்டாம் பிரபா, இது வில்லங்கம் என்று பலவாறு மனதை சமாதான படுத்தி வைக்க, காலையிலே தரிசனம் கண்டாச்சு.
“அப்படி என்ன நான்? அவ்வளவு அழகியா? சேர்ந்த போல நாலு வார்த்தை பேசியது கூட கிடையாது. அவனை பார்த்து சிரித்தது கூட இல்லை. என்னை காதலித்தால் வரும் பிரச்சனையும் தெரியும். தெரிந்தும் நான் தான் வேண்டும் என்றால்… அப்படி என்ன பிரபாவதி , ரதி தேவியா?… என்னிடம் என்னத்த பார்த்த, என்னையே சுற்றி வர…” மனம் முழுக்க தடுமாற்றமும், பயமும் தான் நிறைந்து இருந்தது.
அன்று ரெஸ்ட் ரூம் போகும் போது கூட, கண்ணாடியில் தன்னையே பார்த்து நின்றாள் பிரபா.
“வாடி கிளாஸ்க்கு போகலாம். எனக்கு மேஜர் இருக்கு. ஒத்த பரு வந்ததுக்கு ஒரு மணி நேரம் முகத்தையே உத்து உத்து பாக்குறா, அந்த இத்து போன கண்ணாடியில…” என்று ஜெனி கத்தவும், வேகமாக நகர்ந்து விட்டாள் பிரபா.
வேற என்னத்த, இந்த முகத்தில் அப்படி என்ன கண்டான் என்று கண்டுபிடிக்க பார்த்தேன்.
ஊருக்கு செல்லாத நாட்களில் விடுதி பெண்கள் ஒரு நாள் வெளியே சென்று வரலாம். தங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க பலர் வெளியே செல்வார்கள்.
அன்று, பிரபா குரூப் வெளியே வந்தது. ரோட்டோர கடைகளை பார்வையிட்டு கொண்டே பெண்கள் நடக்க தொடங்க, யாரோ பார்ப்பது போல ஒரு எண்ணம்.
பிரபாக்கு தான் அந்த உறுத்தல் இருந்தது போல… திரும்பி திரும்பி பார்த்தவாறு வந்தாள், கண்டு பிடிக்க முடியவில்லை. அப்புறம் அவளே கண்டு கொள்ள வில்லை. வாரம் ஏதாவது ஒரு கலாட்டா இருக்கும். இன்று என்னவோ?
“ஏய்! எல்லாரும் கேளுங்கடி. இங்க இருந்து சரியா அந்த சர்ச் வரை நடந்து போவோம். நம்ம ட்ரெஸ்க்கு மேட்சா ஃபர்ஸ்ட் யார பாக்குரோமோ, அப்படி தான் நம்ம வருங்காலம் அமையும். ஆனா, இது ஜஸ்ட் ஃபார் ஃபன் ஒன்லி. சொட்டையும், மொட்டையும் வந்துருச்சுன்னு யாரும் சீரியஸ்ச ஃபீல் பண்ண கூடாது சொல்லிட்டேன்…”
நிபந்தனை போட்டபடி எல்லோரும் முன்னே நடக்க, சித்ராவின் உடை வெள்ளை நிறம். அதற்கேற்ப லாயர் ஒருவர் கடந்து செல்ல,
“ஹேய்! சூப்பர். அப்ப என் ஆத்துகாரன் லாயரா…” என்று குதுகளிக்க,
“நான் போட்டு இருக்குற நீல கலருக்கு, யாரும் இல்லை…” ஜெனி சலித்து கொள்ள,
“ஏன் இல்லை. ஏடிஎம் வாசல்ல நிக்கிற செக்யூரிட்டி உனக்கு மேட்சா தான் போட்டு இருக்கார்…” சித்ரா சொல்ல,
“ஆளை பாரு… உனக்கு லாயர், எனக்கு மட்டும் செக்யூரிட்டியா…” சண்டைக்கு வந்தாள் ஜெனி.
“ஏய், பிரபா போட்டு இருக்குற கருப்பு கலருக்கு மேட்சா அங்க ஒரு ஆள் நிக்குறாரு. என்ன வேலையா இருக்கும்…” சித்ரா கேட்க.
“ஐயோ! உங்க ஆட்டைக்கு நான் ஆள் இல்லை. என்னை விடுங்க…” பதறி போய் சொன்னாள் பிரபா.
முதலில் வெளியே செல்லும் போதெல்லாம் தன் நிறத்துக்கு சரியாக யாரும் உடை அணிந்து வந்தால், சேம் பிஞ்ச் சொல்லி சாக்லெட் கேட்பார்கள். அதில் ஆரம்பித்தது, தாங்கள் போட்டு இருக்கும் உடைக்கு ஏற்ப, ஒரே உடை அதுவும் ஹன்ஸ்சம் ஆள் சிக்கிவிட்டால் போதும்… அன்று முழுவதும் அந்த ஆளை வைத்து ஓட்டியே நாள் போகும். வெறும் கேலி, கிண்டல் மட்டுமே. அதுவும் அவர்களுக்குள் தான் என்பதால் இவ்வளவு தூரம் இழுத்து வந்துள்ளது.
முன்பெல்லாம் அவளும் அரட்டையில் இருந்தவள் தான். இன்று பிடிக்க வில்லை.
அந்த கருப்பு சட்டை யாராக இருக்கும் பிரபா எட்டி பார்க்க, சிரித்த முகமாக நின்றது நம் விக்ரம் தான். மதனின் உரகடை விசயமாக வந்தவனுக்கு, பிரபா தென்பட, தொடர்ந்து வந்து விட்டான்.
எதிர்காலத்தில் என்ன நடக்குமோ தெரியாது. இந்த மாதிரி மாப்பிள்ளை தான் உனக்கு என்ற கேலி பேச்சில் கூட விக்ரம் வந்து நின்றது, என்னவோ பிரபா மனதில் நிம்மதி வந்தது.
“இது என்ன கருப்பா? நல்லாவே இல்லை…” ஜெனி சொல்ல,
“முகமும் சரி இல்லை. என்னவோ குடிகாரன் மாதிரி தெரியுது…” என்று சித்ராவும் சொல்ல,
மோனா, “அப்ப, இந்த ஆளை நம்ம லிஸ்ட்ல இருந்து கேன்சல் பண்ணுங்க. நாம வேற பார்ப்போம்…” என்று ஆரம்பிக்க,
“கருப்பா இருக்கான்…”
“கருப்பா இருந்தா என்ன, நல்லா தான் இருக்காங்க…” ரோசமாக சொல்லியது பிரபாவதி தான்.
“அப்படியா, அப்ப அவங்க கிட்டவே கேட்டுடுவோம்…” என்று ஜெனி கிளம்ப,
“என்ன…” பதறிய பிரபா.
“அதுக்கு ஆம்பிளை பிள்ளைக பரவாயில்லை. பொண்ணுங்க அலப்பறை இருக்கே… இப்படி கூடவா யோசிப்பீங்க…”
“அட என்ன பிரபா நீ… நாங்க என்ன வெளிப்படையா சைட் அடிச்சு, உருவ கேலி, கிண்டல் பேச்சுன்னு இருந்தோமா… ஏதோ எங்க ஜாலிக்கு நாங்க பேசுரோம். அதுவும் நமக்குள்ள தான்…”
“உங்களை கண்டு பிடிக்க தான் இவ்வளவு சேட்டையும்…” என்று சித்ரா சொல்ல,
“நான் என்ன பண்ணேன்…” என்றால் பிரபா.
“அன்னைக்கு ஆட்டோல இவர் கூட தான நீ வந்த. மேல மாடில இருந்து நாங்க பார்த்தோம்…” மோனா சொல்ல,
அதுவரை தலை குனிந்து இருந்த பிரபா, அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்க்க,
“அதுமட்டுமா, மறுநாள் ரோட்டுலயும் உங்களை பார்த்தோம். உனக்காக தான…” என்றாள் ஜெனி.
“நாம எல்லாம் அஞ்சு வருசமா பிரெண்ட்ஸ். ஒத்த வார்த்தை எங்க கிட்ட சொல்லல. உன்னை கண்டுபிடிக்க தான் இப்படி ஒரு டாஸ்க்…” என்றவள்,
அசதியில் கொட்டாவி விட்டவன் வாயில குளோப் ஜாமுன் விழுந்துச்சாம்… என்ற மாதிரி கேட்டு நின்றான் விக்ரம்.
பிரபா யாரையும் பார்க்க வில்லை. விக்ரம் இருக்க அவளால் நிமிர கூட முடியவில்லை. தங்களுக்கு பக்கத்தில் தான் இருக்கிறான், ஓரளவுக்கு கேட்டு இருக்கும் தானே…ஒரு பயம் வந்து அமர்ந்து விட்டது.
அவளின் நட்புகள் எல்லாம் காதல் என்றே நினைக்க, பிரபா முகமே சரியில்லை. என்னவோ ஒரு மாதிரியாகி விட்டது. எளிதாக அவனிடம் விழுந்து விட்டதாக ஒரு தோற்றம்.
“நான் அவ்வளவு தானா… எனக்கு இந்த காதல் எல்லாம் வேண்டாம்…” மனம் சோர்ந்து போக, கண் கலங்கியது.
அவள் முகத்தையே பார்த்து இருந்த விக்ரம். அவள் சரியில்லை என்ற உடன் அங்கிருந்து கிளம்பி விட்டான். பிரபா யார் கேள்விக்கும் பதில் சொல்ல வில்லை. முழு மெளனம் தான்.
அடுத்தடுத்து அவள் ஊருக்கு வந்தாலும், வெளியில் எங்கும் வர வில்லை. முழுதாக ஒடுங்கி போனாள். அவள் நட்பு வட்டம் எல்லாம் சென்னை வாசிகள். அவர்களுக்கு காதல் என்பது சாதாரணம். இங்கு அப்படி கிடையாதே…
விக்ரம் எப்போதும் போல பஸ்ஸில் மட்டுமே அவளை பார்த்து நிற்கும் வேலையை சரியாக பார்த்தான். முன்பு பிரபாவின் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று, இப்போது இல்லை. சுண்ட காய் மாதிரி தான் முகத்தை வைத்து இருந்தாள்.
அது விக்ரமிடமிருந்து அவளை பாதுகாக்க அல்ல, அவன் மனதிடமிருந்தே அவளை காத்து கொள்ள, தனக்குள்ளே வேலி போட்டு கொண்டாள்.
விக்ரம் தான், “என்னடா இது! ஜான் ஏறி முலம் சறுக்குது…” என்று நினைத்தான்.
அன்று ஒரு பொது கூட்டம். குளத்து கரை சுற்றி இருக்கும் ஐந்து ஊர் படித்த மக்கள் வந்து இருந்தார்கள். அமைச்சர் அந்த வழியே வருவதால், தங்களது பகுதியில் அரசு கல்லூரி வேண்டும் என்று கூட்டம் கூடியது. படித்த பிள்ளைகள் ஒன்று சேர்ந்து தான் கூட்டம் கூடி, ஆட்கள் திரட்டினாட்கள்.
“எல்லாரும் வந்தாச்சா. இந்த கள்ளி காடு எங்க ஆளை காணம்…” என்றான் விக்ரம்.
“அவங்க யாரும் வரலப்பு…”
“ஏன், எல்லாருக்காகவும் தான் மனு குடுக்குறோம். அவங்களும் தான் வரணும்…” என்றவன்,
“மச்சான், மதனு. டேய், மதனு புடிடா நாலு ஆட்டோவ…” என்று கிளம்ப,
“டேய்! அங்க இருந்து நூறு பேரா வருவாங்க. வாராது பத்து பேர். அவங்க வராட்டி இப்போ என்ன வந்தது…” அசட்டையாக மதன் சொல்ல,
“என்னடா அந்த ஊரை மட்டும் ஒதுக்க பாக்குறையா… அந்த ஊர் உனக்கு என்ன இளகாரமா?” சும்மா ஒரு வார்த்தையாக விக்ரம் போட,
அரண்டு போனான் மதன். “ஐயா ராசா, நீ யோனோவா கார பிடிச்சு கூட ஏத்தி வா, என்னை விட்டுட்டு, ஊர் கலவரம் ஆகிபோகும்…” என்றவன்,
“ஏண்டா அருண். எதுக்குடா இப்படி சலம்பிகிட்டு இருக்கான். அந்த பிள்ளை எதுவும் ஊருக்கு வந்து இருக்காடா…”
“ ஆமா மச்சான். அதுக்கு தான் ஜல்லி கட்டு காளை மாதிரி துள்ளிக்கு திரியுறான்…”
ஆட்டோ கள்ளி காடு செல்ல, பிரபா வெளியவே வர வில்லை.
“படிச்ச ஆம்பளை பிள்ளைக, பொம்பளை பிள்ளைக வாங்க, வந்து வண்டியில ஏறுங்க…”
“என்னடா யாரும் வர மாட்றாங்க…” என்று விக்ரம் புலம்ப,
“இல்லையே ரெண்டு, மூணு பேரு வாராங்க தான… மாப்பிள்ளை எதிர்பார்க்கிற ஆள் வரல…” என்றான்.
“ஒத்த காலேஜ் இல்லாம விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சின்னு ஊர் ஊரா அலையுறோம். நம்ம ஊருக்கு ஒரு காலேஜ் வந்தா நல்லது தான, நாலு பேருக்கு நல்லதுன்னு யாரும் நினைக்க மாட்டீங்களா…” என்று மைக்கே இல்லாம விக்ரம் கத்த,
“மொத நீ நினைடா, நாலு பேருக்கு நல்லது. எலி எதுக்கு அம்மணமா ஓடுதுன்னு எங்களுக்கு மட்டும் தான தெரியும்…” நக்கல் பண்ணியது மதன் தான்.
“வீட்டுக்கு ஒரு ஆள் கண்டிப்பா வந்தே ஆகணும். அப்படி இல்லை எந்த பொது கூட்டதுக்கும், அந்த குடும்பம் வர கூடாது…”
விக்ரம் தொண்டை கத்தி பேச, “பிரபா நீயும் சேர்ந்து போ… அந்த தம்பி அவ்வளவு தூரம் சொல்லுது. உங்க அப்பா போக சொன்னார். உன் கூட படிச்ச பிள்ளைக நியைய வருதாம்… கிளம்பு, போ பிரபா…” கலை செல்வி வற்புறுத்த, கிளம்பினாள் பிரபா.
போகாமல் விட்டால் இவள் பேர் மட்டும் தனியே அடி படும். அவளுக்கும் பள்ளி தோழிகள் இருக்க, கிளம்பி விட்டாள்.
பிரபா உடன் கலை செல்வியும் சேர்ந்து வந்தவர், “நீங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க தம்பி. கூட்டம் அதிகமா இருக்கும். இவ பாட்டுக்கு முழிச்சுக்கு நிக்க போறா…” என்று சொல்ல,
“நீங்க விடுங்க அக்கா. நான் பத்திரமா பாத்துக்கிறேன்…” என்று வாக்கு கொடுத்தான் விக்ரம்.
அருண் மெல்ல, “பத்திரமா பார்த்துக்க வேண்டியதே உன்கிட்ட இருந்து தான் மச்சான்…” என்று முனங்க, அவனை முறைத்தவன்,
“டீ, பப்ஸ் எல்லாம் குடுத்து தான் கூட்டி வருவோம்…” என்று விக்ரம் வாக்கு கொடுக்க,
“ பஞ்சாயத்தார் மகன்னா, மகன் தான். அவரோட நல்ல குணம் அப்படியே இருக்கு தம்பி. உங்களை மாதிரி யார் செய்வா…”
“அட லூசு பயலுகளா… அவனே படிச்சுட்டு அஞ்சு வருசமா வீட்டை சுத்தி திரியுறான். பொது சேவைக்கா ஆட்டோ பிடிச்சு ஆளை ஏத்துறான். கெட்ட பையன் சார் இவன், நம்பாதீங்க…” என்று புலம்ப மட்டும் தான் முடிந்தது மதனால்,
பச்சை நிற பட்டியால சுடிதார் போட்டு இருந்தாள் பிரபா. முன் பக்க கண்ணாடி வழியாக அவளை பார்த்தவன்,
“அவளை ரசித்த பின்னே நிலவு பிடிக்க வில்லை; மலர்கள் பிடிக்க வில்லை…” என்று விக்ரம் தொடங்க,
“ஆரம்பிச்சுட்டான் லூசு பைய…” என்றது மதன் தான்.
“மச்சான் பாட்டு எல்லாம் நல்லா தான் இருக்கு. நீ பாடினா தான் சிரிப்பு வந்துருது …” கேலி செய்தான் அருண்.
பிரபா வெடுக்கென்று முகம் திருப்பி கொண்டாள். அவனை பார்க்க கூட இல்லை.
“ என்னை மறந்தே தள்ளி இருந்திட துணிஞ்சது சரியா சரியா…
“தன்னந்தனியே என்னை தவிப்பில எறிஞ்சது முறையா, முறையா…” என்று விக்ரம் மெல்ல முணுமுணுக்க,
அடக்க முடியாமல் மதனும், அருணும் சிரித்து விட்டார்கள்.
அவர்கள் முதுகில் ஒன்று போட்டான் விக்ரம்.
“ஏண்டா, என்கிட்ட சரசம் பண்ணவே நீங்க வருவீங்களாடா… சிரிச்சு வேற சொதப்பி விடுங்க…” என்று கடுப்பாக கத்தியவன்,
“நானே, பை பாஸ்ல ஏறுன வண்டி பள்ளதுல கவுந்து பேச்சேன்னு கவலைல இருக்கேன்…”
error: Content is protected !!