Skip to content
Post Views: 12,730
“இல்லப்பா அப்படி பண்ணமாட்டேன்” என கலங்கினாள் காவ்யா.
மகளைப் பாராமல் அரைமணி நேரம் யோசனையோடு அமர்ந்திருந்தவர், “கூட்டு குடும்ப சூட்சமம் புரிஞ்சு குடும்பம் நடத்தற அளவுக்கு இவளுக்கு பக்குவம் கிடையாது. தண்டச்சோறுனு நினைக்கிறாங்கனு இங்க வந்துட்டா ஆச்சா? நான் அப்படியில்லைனு இல்லைனு ப்ருஃப் பண்ணனும்” என்றார் மனைவியிடம்.
பிரபாவதி மகளைப் பார்க்க, “அப்பா சொல்றதை செய்யிறேன்ம்மா” என்றாள்.
“பி.ஹெச்.டி படிக்க முடியலனா பரவால்ல. உன்னோட கோர்ஸ்க்கு என்ன ஜாப் கிடைக்குமோ அதை ட்ரை பண்ணு. உன் கையில வருமானம் வர வரைக்கும் எதையும் நினைக்காத. நாங்க கொடுக்குற நகை பணம்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் அவங்க வாயை அடைக்கும். உனக்கான தனி அடையாளம்தான் நிரந்தர தீர்வை கொடுக்கும்” என்றார் மகளிடம்.
Advertisement
தந்தை கோபமில்லாமல் தன்னிடம் நேரடியாக பேசியதில் மகிழ்ந்து, “சரிப்பா” என்றாள்.
“வீட்டுல இருந்தா கல்யாண வாழ்க்கையை நினைக்கத் தோணும். படிக்கிற எண்ணம் வராது. பி.ஜி ஜாயின் பண்ணு. காலேஜ், கோச்சிங் க்ளாஸ்னு உன்னை பிஸியா வச்சிக்கோ”
“நான் படிச்ச காலேஜ்ல சீட் கிடைக்கிறது கஷ்டம்ப்பா”
Advertisement
“அங்கையே படிக்கனும்னு என்ன இருக்கு? இங்க பக்கத்துல இருக்க காலேஜ்க்கு போ. அப்போதான் கோச்சிங் சென்ட்டர் போக வசதியா இருக்கும்” என்றார்.
Advertisement
சென்னையில் பிரபல கல்லூரியில் படித்தாள் காவ்யா. திருமணத்தின் போது தனது வாழ்க்கை வண்ண மயமாகப்போகிறது என்ற கனவோடு இருந்தாள். தோழிகளிடமும் அதையே மகிழ்வோடு பகிர்ந்தாள். தற்போது அருகில் உள்ள கல்லூரிக்கு சென்றால் தோழிகள் கிண்டல் செய்வார்கள் என்ற வருத்தம் இருந்தபோதும், தனது தன்மானம் காக்கவேண்டும் என்றால் இதனை எல்லாம் சகித்தாக வேண்டும் என்று தந்தை சொற்படி நடக்க முடிவெடுத்தாள்.
மகளின் மலர்ந்த முகம் கண்டு, “இத்தனை நடந்தும் வீட்டுல உன்னை ஏத்துக்கிட்டோம்னு திரும்ப எதாவது பண்ணினேனு வை… உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்டுவான் விஷ்ணு.
நீ பண்ணின வேலையால அவன் வாழ்க்கையும் சேர்ந்து வீணாகியிருக்கு. யு.பி.எஸ்.சி எக்ஸாம்ல பாஸ் பண்ணியும் இன்டர்வியுக்கு போகமாட்டேனுட்டான். பெத்தவங்களை உதாசினப்படுத்தின உன்னை விட, திறமையிருந்தும் என் நலத்துக்காக அவனோட கனவை விட்டுக்கொடுத்தவன் எனக்கு ரொம்ப முக்கியம்.
Advertisement
காலேஜ், கோச்சிங் சென்ட்டர் தவிர என் அனுமதியில்லாம வேற எங்கேயும் போகக்கூடாது. விஷ்ணு இருக்கும்போது உன் சத்தம் கூட வெளில வரக்கூடாது” என்று எச்சரித்து தனதறைக்கு சென்றார் கோபாலன்.
*** *** *** *** *** ***
வீட்டிற்குள் வந்ததும் கொஞ்ச நேரம் படு, என்று சமைக்க சென்றவர், அரைமணி நேரத்தில் சமையல் முடித்து “விஷாலினி சாப்பிடலாம் வா” என்றார் மேகலை.
தான் பேசும்போது அன்னை அழுததும், பேசி முடித்த பின்னே அந்நியன், அம்பி என்று விஷ்ணு சொன்னதுமே மனதை அழுத்த, “நான் சரியா பேசினேனாம்மா? பெரியவங்க நீங்க இருக்கும்போது நான் பேசியிருக்கக்கூடாது. ஆமாம்தானம்மா?” என புலம்பினாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லடா, நமக்காகத்தான நீ பேசின?” என்றார்.
“ஆமாம்… ஆனா நீ எதுக்கும்மா அழுத?” என விசாரித்தாள் அன்னையிடம்.
“இப்படி சூழலை உனக்கு உருவாக்கிட்டேனேனு அழ வந்துடுச்சுடா”
“ம்மா நான் அப்படிலாம் நினைக்கல, அவர்தான உன்னை ஏமாத்திட்டார். எனக்குதான் எல்லாம் பாட்டி சொல்லியிருக்காங்களே” என்றாள்.
“இனி அவங்க பேச்சு நமக்கு வேணாம். எனக்கு பசிக்குது, வா சாப்பிடலாம்” என்றார்.
எழுந்து கை கழுவி சாப்பிட அமர்ந்தவள், “அவங்க ஏன்ம்மா என்னை அப்படி சொன்னாங்க?” என்றாள்.
“யாரு?”
“அவங்கதான்… கோபால் மாமாவோட மகன்”
“அப்படி சொல்லாதனு அன்னைக்கே சொன்னேன்தான? விஷ்ணு அண்ணா சொல்லு. இல்ல மாமா தப்பா நினைப்பார்”
“அவங்கதான் என்னை அண்ணானு கூப்பிடக்கூடாதுனு சொன்னாங்கனு நானும் அன்னைக்கே சொல்லிட்டேன். மாமா எப்படி என்னை தப்பா நினைக்கமாட்டார். அன்னைக்கு அவங்க அப்படி சொல்லும்போது மாமாவும்தான் இருந்தார்” என்றாள்.
“நீ தோசை வேணாம்னு சொன்ன கோபத்துல எதோ சொல்லிட்டான். இன்னமும் அதை பிடிச்சி தொங்கிட்டிருப்பியா? அவங்க இவங்கனு சொன்னா மரியாதையா இருக்காது. இனி அண்ணா சொல்லனும்” என்று பரிமாறினார்.
“ஆனா இப்போ நானா ட்ரை பண்ணினாலும் அண்ணா சொல்ல வரமாட்டேங்குதுமா, அவங்க மிரட்டினதுதான் நியாபகம் வருது” என்றாள் பாவமாக.
லேசாய் அதிர்ந்தபோதும், மகளின் முகம் பாவமாக இருக்கவே “சரி முதல்ல சாப்பிடு” என்று தானும் உண்ண அமர்ந்தார்.
இருவரும் உண்டு முடித்ததும், “படிக்கிற வேலையிருந்தா பாரு. இல்ல படு. நான் பூ கட்டறேன்” என்றார்.
“நானும் கட்டேறேன்ம்மா” என்று இவளும் தயாராக, கவனம் வேறுபுறம் திருப்புவது நல்லதுதான் என்பதால் சம்மதித்தார்.
“ம்மா பூ அதிகமா இருக்கமாதிரி இருக்கு” என்றாள்.
“ம் அதிகமாத்தான் இருக்கு. நீயும் இல்லாம எனக்கு ரொம்ப போரடிக்குதா… அதான் பூவை சேர்த்து கொடுக்க சொல்லிட்டேன்”
“போரடிச்சா டிவி பாரு. ஆயாகிட்ட பேசு. அதுக்காக பூவை அதிகம் வாங்குவியா? தனியா கட்டினா இதுக்கே நாலு மணி நேரத்துக்கு மேல ஆகும். இடுப்பு வலிக்கும்மா. நாளைலயிருந்து கம்மியா கொடுக்க சொல்லு” என்றாள் அக்கறையாக.
“எனக்கு முடியலனா கம்மி பண்ண சொல்லிடுவேன் பெரிய மனுஷி” என்றார் சிரிப்போடு. இருவரும் பூக்களை தொடுக்க ஆரம்பிக்க, “ஏன் அப்படி சொன்னாங்க? ஒருவேளை நான் நடிக்கிறேனு நினைச்சிருப்பாங்களோ?” என்றாள்.
“ப்ச்… அப்படிலாம் விஷ்ணு நினைக்கமாட்டான்” என்றார் அதட்டலாக.
அமைதியானவள் பூ கட்டுவதில் கவனத்தை செலுத்தினாள். ஆனால் அவளின் முகம் யோசனையோடே இருக்க, அதை கவனித்தவாறே பூக்களை கட்டி முடித்து, பூக்காரருக்கு அழைத்து சரங்களை கொடுத்தனுப்பியவர், “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றார்.
“என்ன வாங்கி வச்சிருக்க?” என்றாள் ஆவலாக.
“ஏதும் வாங்கல. ஆனா விசயத்தை சொன்னா நீ ரொம்ப சந்தோசப்படுவ”
“ஆயா போன் செய்துச்சா? இப்போ உடம்பு பரவால்லையாமா?” என்றாள் ஆவலாக.
“ஆயா போன் செய்துச்சுதான். ஆனா இது வேற விசயம்”
“வேற விசயமா?” என யோசித்தவள், “எனக்கு என்னனு கெஸ் பண்ண தெரியல, நீயே சொல்லும்மா” என்றாள்.
“நான் சொன்னதும் அங்க ஓடிடக்கூடாது” என்று கண்டிஷன் போட்டு, “காவ்யா வந்திருக்கா” என்றார்.
“என்ன?” என கண்களை அகல விரித்தவள், “எப்போம்மா? அத்தை மாமா ஏத்துக்கிட்டாங்களா?” என்றாள்.
“அத்தைக்கு சந்தோசம்தான். மாமா பேசினாரா தெரியல. ஆனா வீட்டுலதான் இருக்கா. அப்போ ஏத்துக்கிட்டாங்கனுதானே அர்த்தம்?”
“எப்போ வந்தாங்க? ஏன் இன்னும் என்னை பார்க்க வரல?”
காலையில் நடந்ததை சொன்னவர், “கட்டிக்கிட்ட இடத்துல பிரச்சனை போல. என்ன மன உளைச்சல்ல இருக்காளோ? மெதுவா பேசுவா விடு” என்றார்.
“இவ்வளோ பிரச்சனையிலயும் மாமாவும் அவங்களும் நமக்காக வெளில இருந்தாங்களா?” என சந்தோசித்து, விஷ்ணு அடித்ததை நினைத்தவள் “அவனை நல்லா அடிச்சாங்கல்லம்மா? எனக்கு செம்ம சந்தோசமா இருந்தது. இனி அவன் நம்ம பக்கமே வரமாட்டான்” என்றாள் மகிழ்வோடு.
“அப்படிலாம் நினைக்காத விஷாலினி, சில ஜென்மங்கள் நினைச்சது நடக்கலனா பழிவாங்க கிளம்பிடும். நீ எப்போவும் ஜாக்கிரதையா இருக்கனும். இனி காலேஜ்லயிருந்து தனியா வராத. நான் வந்து அழைச்சிட்டு வரேன்” என்றார்.
அவன் திரும்ப வருவான் என்ற நம்பிக்கையெல்லாம் இல்லை விஷாலினிக்கு. அனாலும் அன்னையின் பயத்தை போக்க சரியென தலையசைத்தாள்.
பிறகு கல்லூரியின் நடப்பை பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார் மேகலை. இரவு உணவு உண்ணும்போது காவ்யா ஹாலுக்கு வருகிறாளா எனப்பார்த்தாள் விஷாலினி.
மகளை கவனித்த மேகலை, “கொஞ்ச நாள் போன பின்ன அவளா பேசுவா. அதுவரைக்கும் காவ்யாகிட்ட பேச நினைக்காத, பெரிய மனுஷிபோல அத்தை மாமாகிட்டயும் விசாரிக்கக்கூடாது” என்றார்.
சம்மதமாய் தலையசைத்தாள். அன்றிரவு விஷாலினி சீக்கிரம் உறங்கிவிட்டாள். தான் செய்த தவறு மகளை எத்தனை பாதித்திருக்கிறது என்ற வேதனையில் மேகலைக்குத்தான் உறக்கம் வரவில்லை.
அடுத்த நாள் காலை “ம்மா இதெல்லாம் அநியாயம். எப்போவும் சனிக்கிழமைதான எண்ணைய் தேய்ச்சி விடுவ? இன்னைக்கு எதுக்கு தேய்ச்சிவிடற?” என்று எண்ணை தேய்த்துக்கொள்ள மறுத்து போராடிக்கொண்டிருந்தாள் விஷாலினி.
“ப்ளஸ் டூலயிருந்தே ஞாயித்துக் கிழமைதான தேய்ச்சி விடறேன்? இனி சனிக்கிழமைதான் எண்ணைய்க் குளியல்னு பார்க்கக்கூடாது. நேரம் இருக்கும்போது எண்ணைய் வச்சி குளிச்சிக்கனும்” என்று அதட்டி மிரட்டி ஒருவழியாக எண்ணையை தேய்த்துவிட்டு கொண்டையிட்டு வெந்நீர் வைக்க கிளம்பினார் மேகலை.
அப்பொழுதுதான் மைதானம் சென்று வந்த விஷ்ணு, காவ்யா வீட்டில் இருப்பதால் குளித்ததும் மாடிக்கு வந்திருந்தான். இவளின் குரல் வந்த திசையில் பார்வையை திருப்பினான்.
இரவு உடையில் அமர்ந்திருந்தாள். முகம் முழுதும் எண்ணைய். “தலைக்கு தேய்ச்சதோட விட்டுருந்தா ஃபோனாவது பார்த்திட்டிருந்திருப்பேன். கண்ணை மூடிக்கிட்டு எவ்வளோ நேரம் உக்கார்ந்திருக்கிறது?” என சிணுங்கியவள், “இனி லீவ் இருந்தாலும் வீட்டுக்கு வரமாட்டேன். ஹாஸ்டல்லயே இருந்துக்குவேன்” என்றாள் பழி தீர்க்கும் பாவனையில்.
சிரித்தபடி அந்தப்புறம் சென்றான் விஷ்ணு. அரை மணி நேரம் கழித்து மேகலை குளிக்க அழைத்துப்போக, “நானே தேய்ச்சி குளிச்சிப்பேன், நீ வரக்கூடாது” என்றாள்.
“டிரஸ்சோடதான தலைக்கு தேய்ச்சி விடறேன்? அப்புறமென்ன? நீ நல்லா தேய்ச்சி குளிக்கமாட்ட” என்று அதட்டி மகளுக்கு தலையை அலசிவிட்ட்டு வெளியேறினார்.
பதினொரு மணிக்கே மதிய உணவையும் சமைத்து, “மதியத்துக்கு இதுல வச்சிருக்கேன், உன் ஃப்ரண்ட்ஸ்க்கும் கொடுத்து சாப்பிடு. இப்போ கிளம்பினாத்தான் உன்னை விட்டுட்டு வந்து பூ கட்ட சரியா இருக்கும்” என்றார்.
“பூ கட்டி கொடுத்துட்டு அஞ்சு மணிபோல கிளம்பலாம்மா” என்றாள் விஷாலினி.
“ம்ஹும். டிராஃபிக்ல வர லேட் ஆகிடும். கிளம்பு” என்று மகளை கிளப்ப, பிணக்கோடே கிளம்பினாள்.
“மாமாகிட்ட சொல்லிட்டு வரேன்” என்றவள், காவ்யா தன்னை பார்க்க வருவாள் என்ற எதிர்பார்ப்போடு “மாமா” என சத்தமாக அழைத்தாள்.
கோபாலன் வெளியே வர, இவளின் குரல் கேட்டு விஷ்ணுவும் வந்தான்.
“கிளம்பிட்டியாடா?” என்றார்.
“ஆமாம் மாமா… ஈவ்னிங் போலாம்னு சொன்னா அம்மாதான் இப்போவே கிளம்ப சொல்லிட்டாங்க”
“உன்னை விட்டுட்டு அம்மா நேரத்தோட வீட்டுக்கு வரனும்ல?” என எடுத்துரைத்தார்.
சரியென தலையசைத்தவள், அந்நியம் அம்பினு என்னை ஏன் சொன்னிங்க என்று விஷ்ணுவிடம் கேட்க நினைத்தாள். ஆனால் தயங்கி நிற்க, “கொஞ்ச நாளைக்கு தனியா எங்கையும் போகாத. அவனேது திரும்ப வந்தா எனக்கு போன் செய்” என்றவன், “என் நம்பர் தெரியுமா? இல்லைனா சேவ் பண்ணிக்கோ” என்று தனது எண்ணை சொன்னான்.
விஷ்ணு எண்ணை குறித்துக் கொண்டாள். “அசட்டு தைரியத்தோட இருக்கக்கூடாது விஷாலினி. ஜாக்கிரதையா இருக்கனும்” என்றார் கோபாலனும்.
“நீங்க பயப்படாதிங்க மாமா. அவன் வரமாட்டான். நேத்து அடி வாங்கினதும் அடங்கிட்டான்” என்றாள் வெற்றி சிரிப்போடு.
“அப்படிலாம் ஈஸியா நினைக்காத. கேர்ஃபுலா இருக்கனும்” என்றான் விஷ்ணு.
சரியென்பதாய் தலையசைத்து “அத்தை எங்க மாமா?” என்றாள்.
“அத்த வேலையா இருக்காடா. நான் போன் பண்ண சொல்றேன். நீ பத்திரமா போய் வா” என்றார்.
இருவரும் கிளம்ப, கோபாலன் உள்ளே சென்றபோதும் வெளியிலேயே நின்றிருந்தான் விஷ்ணுவர்தன். எத்தனை வலிகளை தாங்கிக்கொண்டிருக்கிறாள். அதனால்தான் பின் விளைவை பற்றி யோசிக்காமல் நேற்று வெடித்துவிட்டாள்.
தன்னிடம் வேறு அடிவாங்கியிருக்கிறான். அவனால் இவளுக்கு மீண்டும் பிரச்சனை வர வாய்ப்பிருக்கு என நினைத்தவன், அடுத்து வந்த நாள்களில் மேகலையிடம் விஷாலினியை விசாரித்தும் கொண்டான். ம்… நீண்ட நெடிய வருடங்களுக்கு பின்னே மேகலையிடம் அவ்வப்போது பேச ஆரம்பித்தான் விஷ்ணுவர்தன்.
error: Content is protected !!