நீ எனக்கு தந்த காதல் – 29.
தமிழை அக்கறையாக பார்த்துக் கொள்ளும் நிலா.
தமிழ், அவனது பெற்றோர், நிலா அனைவரும் கவின், யாழினி வீட்டிலிருந்து கிளம்பினர்.
Advertisement
இனி,
காரை நிலா ஓட்ட, ‘நிலா ஏன் இப்பவும் நீ ஓட்ற. இப்ப நான் நல்லா தான் இருக்கேன். குடு நான் ஓட்டறேன்’, என நிலா காதில் மெதுவாக வந்து தமிழ் சொல்ல,
Advertisement
Advertisement
‘ஏய் என்னடா அங்க ‘, என தமிழ் அம்மா கேட்க,
‘ராஜி என் பொண்டாட்டி கிட்ட நான் எதுவும் ஆசையா பேசுவேன். அதெல்லாம் உன் கிட்ட சொல்லனுமா’, என தமிழ் கேட்க,
Advertisement
‘ஆமா நீ பேசிட்டாலும்’, என தமிழ் அம்மா சொல்ல தமிழ் முறைக்க அனைவரும் சிரித்தனர்.
‘அது ஒன்னுமில்ல ஆன்டி. நீயே ஏன் ஓட்ற தங்கம். உனக்கு கை வலிக்கும் குடு நான் ஓட்றேன் செல்லம்னு சொல்றாரு’, என நிலா மேலும் கிண்டல் செய்ய,
‘வேணா சாமி. எங்கள வீட்ல விட்டுட்டு நீங்க போகும் போது நீ ஓட்டிக்க’, என தமிழ் அம்மா சொல்ல,
‘ராஜி வர வர நீ எனக்கு அம்மாவா இல்ல நிலாக்கு அம்மாவான்னு எனக்கு சந்தேகமா இருக்கு’ என தமிழ் சொல்ல அனைவரும் சிரித்த படி பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.
தமிழ் அம்மாவும், அப்பாவும் காரிலிருந்து கீழே இறங்க, ‘சரி நாங்க கிளம்பறோம் ஆன்டி’, என நிலா சொல்ல,
‘நிலா நீ ஒரு நிமிஷம் உள்ள வா’, என தமிழ் அம்மா கூப்பிட நிலா இறங்க,
‘ஏய் இரு. ராஜி ஏற்கனவே ரொம்ப லேட்டாச்சு. இப்ப எதுக்கு நிலாவ கூப்டற’, என தமிழ் கேட்க,
‘டேய் என் மருமக கிட்ட நான் என்ன வேணா பேசுவேன். உனக்கு என்ன. லேட்டாச்சுன்னா நீ மட்டும் கிளம்பு’ என தமிழ் அம்மா சொல்ல,
‘ராஜி உன்ன. சரி சீக்கிரம் போய்ட்டு வா’, என தமிழ் சொல்ல,
‘ஏய் தமிழ் கொஞ்ச நேரம் அமைதியா இரு. ராஜி என்ன தான் பண்றான்னு பாப்போம்’, என தமிழ் அப்பா சொல்ல இருவரும் இறங்கி பின்னாடியே சென்றனர்.
தமிழ் அம்மா நிலாவை சமையலறைக்கு கூட்டிட்டு போய் அவளை கிழக்கு பார்க்க நிற்க வைத்து ஒரு பிடி கல் உப்பை கையில் எடுத்துக் கொண்டு, ‘ஊரு கண்ணு, உறவு கண்ணு, கொள்ளி கண்ணு,….. முக்கியமா என் கண்ணும் சேத்து எல்லா கண்ணும் போகட்டும்’, என சொல்லி சுத்தி போட,
‘எதுக்கு ஆன்டி இதெல்லாம்’, என நிலா கேட்க,
‘உனக்கு தெரியாது சும்மா இரு’, என தமிழ் அம்மா சொல்ல,
‘ஏய் ராஜி இதெல்லாம் கொஞ்சம் ஓவரு’, என தமிழ் சொல்ல,
‘எதுடா ஓவரு. இன்னிக்கு நிலா மேல எவ்ளோ கண்ணுபட்ருச்சு தெரியுமா’, என தமிழ் அம்மா சொல்ல,
‘சரி இப்பவாவது நாங்க கிளம்பட்டுமா’, என தமிழ் கேட்க,
”ம் போய்டு வாங்க ‘, என தமிழ் அம்மா சொல்ல,
‘அதான் சிக்னல் கிடைச்சிடுச்சுல்ல. அப்புறம் என்ன கிளம்புங்க.’, என தமிழ் அப்பா சொல்ல இருவரும் ஆபிஸ்க்கு கிளம்பினர்.
‘நிலா இப்பவாவது நான் ஓட்டறேன் குடு’, என தமிழ் சொல்ல,
‘இப்ப பேசாம வந்தா ஆபிஸ்க்கு போலாம். இல்ல நேரா ஹாஸ்பிடலுக்கு போலாம். நீங்களே சொல்லுங்க எப்டி வசதி’, என நிலா சொல்ல,
‘நிலா நீ வர வர ரொம்ப ஸ்டிரிட்டா இருக்க. ஒரு சின்ன தலைவலி அதுவும் நேத்து. அதுக்கு போய் நீ என்ன இப்டி பயமுறுத்துற’, என தமிழ் கேட்க,
‘அதுக்கு தான் நானும் சொல்றேன். டாக்டர் கிட்ட போனா அவரு செக் பண்ணி அது சாதாரண தலைவலி தான் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு அவரு சொல்லட்டும் நான் உங்கள தொந்தரவு பண்ணமாட்டேன். போலாமா ஹாஸ்பிடலுக்கு’, என நிலா கேட்க,
‘அம்மா தாயே நீயே வண்டிய ஓட்டு. நான் பேசாம வரேன்’, என தமிழ் சொல்ல நிலா வண்டியை ஓட்ட இருவரும் ஆபிஸ்க்கு சென்றனர்.
ஆபிஸில் எப்போதும் போல நந்தினியும் நிலாவும் இருவர் வீட்டிலும் நடந்ததை பற்றி பேசிக் கொண்டே வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தமிழும் தன் அறையில் வேலை பார்த்து கொண்டிருந்தான்., ரொம்ப நேரமாக அவனுக்கு தலைவலிக்க நிலாவை கூப்பிடலாம் என போனை எடுத்து விட்டு, ‘அய்யோ இவ ஏற்கனவே ஹாஸ்பிடல் போலாம்னு அடம் பிடிக்கறா. இன்னும் இத வேற சொன்னோம் அவ்ளோ தான் ஹாஸ்பிடல்ல அட்மிட்டே பண்ணிருவா. என்ன வேல பாக்குற டா தமிழ்’, என தனக்குள் பேசிக் கொண்டே நிலாவுக்கு போன் பண்ணாமல் வைத்து விட்டான்.
வேலை முடிந்து இருவரும் ஆபிசிலிருந்து நிலா வீட்டுக்கு கிளம்பினர்.
‘தமிழ் இங்கயே இருங்க. நான் போய் காரை எடுத்துட்டு வந்தரேன்’, என சொல்லி நிலா ஷெட்டுக்கு சென்று காரை எடுத்து விட்டு வந்து,
‘தமிழ் வாங்க ‘, என சொல்ல, தமிழ் படியிலிருந்து கீழே இறங்கி வந்தான். தலை சுற்றுவது போல் இருக்க மெதுவாக பேலன்ஸ் பண்ணி வந்து கார் கதவை திறந்த படி அங்கேயே மயக்கம் போட்டு விழ இதை பார்த்த நிலா லேகமாக இறங்கி வந்து அவனை கீழே விழாமல் பிடித்து மெதுவாக காருக்குள் உட்கார வைத்து தண்ணி எடுத்து தன் துப்பட்டா நுனியில் நனைத்து அவன் முகத்தை துடைத்து விட்டு ஏசி யை போட்டு விட்டு தமிழை எழுப்ப தமிழ் பாதி மயக்கத்தில் எழுந்தான்.
‘தமிழ் என்ன பண்ணுது’, என நிலா பதட்டமாக கேட்க,
‘ஒன்னுமில்ல நிலா. ஐ அம் ஆல்ரைட்’, என தமிழ் சொல்ல,
‘இப்ப ஒழுங்கா சொல்ல போறீங்களா இல்லயா’, என நிலா கோபமாக கத்த,
‘காலைல ஆபிஸ்க்கு வந்ததில இருந்தே தலைவலிச்சுது. நேரம் ஆக ஆக ரொம்ப வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. சரி சமாளிச்சுக்கலாம்னு நினச்சு உங்கிட்ட சொல்லல. திடீர்னு இப்ப தலை சுத்துச்சு’, என தமிழ் இழுக்க,
‘இந்தாங்க தண்ணிய முத குடிங்க’, என சொல்லி நிலா தண்ணி பாட்டிலை தர அதை வாங்கி குடித்து விட்டு,
‘நிலா இப்ப பரவால்ல எனக்கு நல்லா தான் இருக்கு. நம்ம வீட்டுக்கு போலாமே ‘, என தமிழ் சொல்ல,
‘தயவு செஞ்சு எங்கூட பேசாம வாங்க. உங்க மேல கொலை வெறில இருக்கேன்’, என நிலா சொல்லி விட்டு காரை எடுக்க தமிழ் அப்படியே அமைதியாக உட்கார்ந்து கொண்டான்.
தமிழுக்கு ஆக்சிடண்ட்டான போது பார்த்த ஆஸ்பத்திரிக்கு நிலா சென்று வண்டியை நிறுத்தி விட்டு இறங்க தமிழ் பயந்தவாறே தானும் இறங்க கார் கதவை திறக்க,
‘இறங்காதீங்க’, என நிலா கத்த தமிழ் அப்படியே உட்கார அவள் வந்து கார் கதவை திறந்து ‘இப்ப இறங்குங்க’, என சொல்ல தமிழ் இறங்க அவன் கையை தாங்கி பிடித்த படி நிலா உள்ளே கூட்டி செல்ல,
‘நிலா ப்ளீஸ் எனக்கு ஒன்னுமில்ல வீட்டுக்கு போயிடலாம்’, என தமிழ் குழந்தை மாதிரி கெஞ்ச நிலா அதை காதில் வாங்காமல் அவனை ரிசப்ஷனில் உட்கார வைத்து விட்டு போய் நேம் ரிஜிஸ்டர் செய்ய அங்கிருந்த அட்டன்டர், ‘ பேஷன்டோட ஃபைல் குடுங்க ‘ என கேட்க,
‘சாரி அது எதுவும் எடுத்துட்டு வரல’, என நிலா சொல்ல,
‘சரி பரவால்ல எப்ப இங்க அட்மிட் ஆனாருன்னு சொல்லுங்க,’, என அந்த அட்டன்டர் கேட்க, நிலா சொல்ல அவர்களிடம் இருந்த டேட்டாவை பார்த்து அவர்கள் வைத்திருந்த ஃபைலை எடுத்து கொண்டு, ‘சரி டென் மினிட்ஸ் வெய்ட் பண்ணுங்க ‘, என சொல்லி விட்டு டாக்டரிடம் கொண்டு போய் குடுக்க அதை பார்த்து விட்டு பேஷன்டை வர சொல்ல அட்டன்டர் வந்து,
‘மேடம் பேஷன்ட கூட்டி கிட்டு உள்ள போங்க’ என சொல்ல நிலா தமிழை கூட்டிக் கொண்டு உள்ளே போனாள்.
‘வாங்க உட்காருங்க. என்ன உடம்புக்கு’, என தமிழை செக் பண்ணி கொண்டே டாக்டர் கேட்க,
‘டாக்டர் நேத்துல இருந்து தலைவலி.. இன்னிக்கு ரொம்ப வலிக்குதுன்னு சொல்றாரு. அது இல்லாம கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தலை சுத்தி மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாரு’, என நிலா சொல்ல,
‘தமிழ் உங்களுக்கு இப்ப என்ன பண்ணுது’, என டாக்டர் கேட்க,
‘இப்ப ஒன்னும் பண்ணல’, என தமிழ் சொல்ல நிலா அவனை பார்த்து முறைக்க,
‘லைட்டா இன்னும் மயக்கமாவே இருக்கு’, என தமிழ் பயந்து சொல்ல டாக்டர் சிரித்துக் கொண்டே,
‘மேடம் ஸ்கேன்னுக்கு எழுதி தரேன். அந்த ரிசல்ட்ட பாத்தா தான் தெரியும். அதனால ஸ்கேன் பண்ணிட்டு வந்துருங்க’, என டாக்டர் சொல்லி விட்டு நர்ஸை கூப்பிட்டு, ‘இவங்களுக்கு இந்த ஸ்கேன் எடுக்கனும். கூட்டிட்டு போங்க’, என சொல்லி டெஸ்ட் பேரை எழுதி குடுக்க நர்ஸ் கூட்டிக் கொண்டு போய் ஸ்கேன் ரூமில் விட்டார்.
‘நிலா ரொம்ப பயமா இருக்கு. ப்ளீஸ் வீட்டுக்கு போயிடலாம்’, என தமிழ் கேட்க,
‘தமிழ் ப்ளீஸ் ஒன்னும் பயப்படாதீங்க நான் தான் உங்க கூடவே இருக்கன்ல’, என நிலா சொல்ல வேறு வழி இல்லாமல் ஸ்கேன் மெஷினில் படுத்து நிலாவின் கையை இறுக்கி பிடித்துக் கொள்ள,
‘சார் பயப்படாதீங்க ஒன்னுமில்ல வலிக்காது’, என தமிழிடம் பேச்சுக் குடுத்துக் கொண்டே அங்கிருப்பவர் ஸ்கேன் எடுத்து விட்டு, ‘அவ்ளோ தான் கீழ இறங்கிகங்க. மேடம் ஹாப்னவர் ஆகும் ரிசப்சன்ல வெய்ட் பண்ணுங்க. ரிசல்ட் வந்ததும் கூப்டு வாங்க ‘, என சொல்ல நிலா தமிழை கூட்டிக் கொண்டு ரிசப்ஷனுக்கு வந்து உட்கார தமிழ் பயந்த படியே நிலாவின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டு அவள் தோளில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தான்.
நிலாவுக்கு பாரதியிடம் இருந்து போன் வர நிலா அதை எடுத்து, ‘சொல்லு பாரதி’, என கேட்க,
‘நிலா எப்டி இருக்கீங்க’, என பாரதி கேட்க,
‘எப்டிடா கரெக்டா கூப்டற. தமிழுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல. ஹாஸ்பிடல்ல இருக்கோம்.’, என நிலா சொல்ல,
‘என்ன சொல்ற நிலா. எந்த ஹாஸ்பிடல்ல இருக்கீங்க சொல்லு நான் கிளம்பி வரேன்’, என பாரதி கேட்க,
‘இல்ல பரவால்ல டா. அவ்ளோ தான் ஸ்கேன் பண்ணியாச்சு. ரிசல்ட் வந்தா டாக்டர கன்சல்ட் பண்ணிட்டு கிளம்பிருவோம்’, என நிலா சொல்ல,
‘பரவால்ல சொல்லு நான் வந்துட்டு வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு வரேன்’, என பாரதி கேட்க,
‘நான் சொல்றத தயவு செஞ்சு கேளு. நான் பாத்துக்கறேன். இப்ப நீ வந்து இங்க என்ன பண்ண போற’, என நிலா சொல்ல,
‘சரி மாமா என்ன பண்றாரு’, என பாரதி கேட்க,
‘ம் பாதி மயக்கத்துல என் தோள் மேல சாஞ்சு படுத்திருக்காரு’, என நிலா சொல்ல,
‘பாத்து வீட்டுக்கு போய்ட்டு போன் பண்ணு’, என சொல்லி பாரதி போனை வைத்தான்.
அரை மணி நேரம் கழித்து ரிசல்ட் வர தமிழ் பேரை சொல்லி கூப்பிட அதை வாங்கி கொண்டு டாக்டரிடம் சென்றனர்.
டாக்டர் ரிசல்டை பார்த்து விட்டு, ‘ஸ்கேன் ரிப்போர்ட் நார்மலா இருக்கு. ஒன்னும் பயப்படறதுக்கு இல்ல. மே பி பழசு ஞாபகம் வறதுக்கு இப்டி சிம்ப்டம்ஸ் இருக்கலாம். ரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும். ஆனா அடிக்கடி இந்த தொந்தரவு வரும். நல்லா ரெஸ்ட் எடுக்கறது மட்டும் தான் இதுக்கு ஒரே சொல்யூசன். டேப்ளட்ஸ் எழுதி தரேன். எப்ப இந்த மாதிரி தலவலிக்குதோ ஆரம்பத்திலேய மாத்திரய போட்ருங்க. இல்லைன்னா இது மாதிரி மயக்கம் வரும். அப்புறம் தனியா எங்கயும் போக வேண்டாம். அதுவும் இந்த ரெண்டு நாளைக்கு ஈவன் பாத்ரூம் கூட தனியா விடாதீங்க. கொஞ்சம் யாராவது பக்கத்துலயே இருங்க. ஒரு இன்ஜக்ஷன் போடறேன். நீங்க எதுல வந்தீங்க ‘, என டாக்டர் கேட்க,
‘கார்ல வந்தோம் டாக்டர்’, என நிலா சொல்ல,
‘அப்ப ஓகே. ஏன்னா இந்த இன்ஜக்ஷன் போட்டு கால் மணி நேரத்துல தூங்கிருவாரு. நாளைக்கு மதியம் தான் முழிப்பாரு. இது அவரு மைன்ட் ரெஸ்ட் எடுக்க போடற இன்ஜக்ஷன். அதுக்கப்புறம் கூட அதோட எஃபக்ட் ரெண்டு நாளைக்கு மயக்கமா இருக்க மாதிரி தான் இருக்கும். அதனால தான் தனியா விடாதீங்கன்னு சொன்னேன்.’, என டாக்டர் சொல்ல,
”ஓகே டாக்டர் நீங்க சொன்ன மாதிரியே நான் பாத்துக்கறேன்’, என நிலா சொல்ல,
‘பயப்படாதீங்க அவருக்கு ஒன்னுமில்ல ‘, என டாக்டர் சொல்ல,
‘ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்’, என நிலா சொல்ல,
‘நர்ஸ் இந்த இன்ஜக்ஷன் கொண்டு வாங்க ‘, என சொல்லி பிரிஸ்கிரிப்ஷனை டாக்டர் தர அத எடுத்து கொண்டு வந்து நர்ஸ் குடுக்க அதை வாங்கிக் கொண்டு தமிழுக்கு டாக்டர் போட வர, ‘நிலா ப்ளீஸ் எனக்கு ஊசின்னா பயம்னு உனக்கு தெரியும்ல. வேண்டாம்னு சொல்லு’, என தமிழ் அழ,
நிலா தமிழ் முகத்தை தன் மார்பில் சாய்த்து கொள்ள நர்ஸ் தமிழ் கையை பிடித்துக் கொள்ள டாக்டர் ஊசி போட்டு விட நிலா நன்றாக அந்த இடத்தை அழுத்தி தேய்த்து விட்டாள்.
டாக்டர் டேப்ளட்ஸ் எழுதி குடுத்து விட்டு, ‘சொன்னது ஞாபகம் வச்சுக்குங்க. கொஞ்சம் கூடவே இருந்து பாத்துக்கங்க ‘, என சொல்ல,
‘ஓகே டாக்டர். ரொம்ப தேங்க்ஸ்’, என சொல்லி தமிழை ரிசப்ஷனில் உட்கார வைத்து விட்டு ஹாஸ்பிடல் பில் பே பண்ணி விட்டு மாத்திரையை வாங்கிக் கொண்டு வந்து அழுது அழுது தேம்பிக் கொண்டிருந்த தமிழை கை தாங்கலாக கூட்டிக் கொண்டு வந்து காரில் உட்கார வைத்து விட்டு நிலா காரை எடுத்தாள்.
டாக்டர் சொன்னது போல கால் மணி நேரத்தில் தமிழுக்கு தூக்கம் வர நிலாவின் தோளில் சாய்ந்த படி தூங்க,
‘தமிழ் உங்கள இப்டி பாக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்களுக்கு பயம்னு தெரிஞ்சும் உங்கள ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனது, ஊசி போட வச்சது எல்லாத்துக்கும் என்னை மன்னிச்சிடுங்க. ஊசி போடும் போது வலிக்குதுன்னு நீங்க அழுதப்ப எனக்கு அப்டியே உயிரே போற மாதிரி இருந்துச்சு. உங்களுக்கு தெரியாது நீங்க கஷ்டப்படறத பாக்கும் போது எனக்கு அழுக அழுகயா வருது. ரொம்ப சாரி தமிழ். நான் உங்கள கஷ்டபடுத்தறதுக்கு நீங்க சரியானதுக்கு அப்புறம் என்ன பனிஷ்மன்ட் குடுத்தாலும் வாங்கிக்கறேன். ‘, என தமிழ் தலையை தடவிய படி தனக்குள் பேசிக் கொண்டு நிலா காரை ஓட்டினாள்.
தமிழ், நிலாவின் காதல் தொடருமா?
தொடரும்…
