Skip to content
Post Views: 8,581
தாலி கட்டியாயிற்று “யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்குமாம் அப்படிதான் இருக்கு இந்தப் பொண்ணு கதை, இவ்ளோ தூரம் சொல்லியும் இப்படி பண்ணிட்டாங்களே சார்” என்று கோபம்கொண்டான் சக்தி.
“சார் என்ன பண்ணட்டும்” என்ற மோனிகாவிடம் “ஜஸ்ட் டூ சம்திங், பூஜா நிர்மல் கூடப் போகக் கூடாது” என்றான் சேனா.
Advertisement
“சரி” என்று அலைபேசியை அனைத்தவள் சிந்தனை என்ன செய்ய என்பதிலே நின்றது, படியில் தள்ளிவிடுவது காலை இடற வைத்து விழ வைப்பது என்று பலவாறாகத் திட்டம் தீட்டி வைக்கப் புடவை மாற்ற அறைக்குள் வந்தாள் பூஜா.
மணவறை வரை செல்லும்போதும் இருந்த தைரியம் நிர்மலின் அருகில் அமர்ந்ததும் காணாமல் போனது, ஒருவேளை மாமா சொன்னது உண்மையா இருந்தா… ஐயோ என்ன செய்ய இப்படி வந்து மாட்டிகிட்டேனே என்று சிந்தையில் உழன்றவள் நிர்மலின் கரங்கள் மங்கலநாணை அவள் கழுத்தில் பூட்டவும் தான் சுயம் பெற்றாள் அதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது.
Advertisement
Advertisement
புடவையை வாங்கிக்கொண்டு படிகள் எறியவள் தன்னையே பார்த்து நிற்கும் மோனிகாவை நிமிர்ந்து பார்த்தாள் “உன் அப்பன் புத்திதான் உனக்கும் நல்லது எதுவும் உங்க கண்ணுக்குத் தெரியாது” என்றவள் தள்ளிநிற்க மனம் முழுதும் குழப்பம் சூழ்ந்தது பூஜாவை.
முகம் இருண்டு கைகள் நடுங்க அறைக்குள் நுழைந்தவள் “பாத்ரூம் போனும்” என்று சொல்லி உள்ளே சென்ற சில நொடிகளில் அலறல் சத்தம் கேட்டது, அவளுடைய தோழி வந்து கதவைத் தட்ட உள்ளில் அழும் சத்தம் மட்டுமே கேட்டது அவர்கள் வேகமாகக் கதவைத் தட்டி பார்த்தும் திறக்காமல் போக இறுதியில் உடைத்தே உள்ளே நுழைந்தனர்.
Advertisement
உள்ளே கிளோஸ்ட் அருகில் தலையிலும் கையிலும் அடிபட்டுக் கிடந்தாள் பூஜா, கீழே கொட்டிக்கிடந்த எண்ணையில் கால் வைத்து அடித்து விழுந்திருந்தாள் கொஞ்சம் பாவமாக இருந்தபோதும் வேறு வழியிருக்கவில்லை மோனிகாவிற்கு, ஒரு பாட்டில் எண்ணையை கொட்டிவிட்டாள்.
ஒருவேளை அதிலிருந்து தப்பினால் படியில் தள்ளி விடுவது என்றுதான் முடிவு செய்திருந்தாள், ஏற்கனவே டாக்டர் சந்தியாவிடம் விவரம் கூறியிருக்க மணமகனின் பெற்றோருக்கு முன்பே அவர் வந்து பொறுப்பை எடுத்துக்கொண்டார்.
“அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கலாம்” என்க, அருகில் அவருடைய மருத்துவமனையே கொஞ்சம் பெரியது ஆகையால் அங்கேயே கொண்டு சென்றுவிட்டனர் இவர்கள் வரும் விவரம் அறிந்ததும் சக்தி மட்டும் அங்கு வந்து காத்திருந்தான்.
சிகிச்சை முடிந்ததும் பூஜாவிடம் இன்னும் விளக்கமாக விவரங்களைக் கூறி புரியவைத்தான் சக்தி காலம் கடந்து வேலை செய்த தன் மூளையை திட்டிக்கொண்டு படுத்திருந்தாள் புதுமணப்பெண்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு பூஜாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள் கந்தசாமியும் செந்திலும் குடும்பத்தோடு சென்று பார்த்து வந்தார்கள், மயூரியும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினாள்.
அவர்களுக்கும் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, ராஜேந்திரன் தெய்வானையுடன் சென்று தொழில்முறையாக ஓஸ்கரை அழைத்திருந்தார், மயூரியும் திருமணத்திற்கு சென்றிருந்தாள் மற்றது எதுவும் அவளுக்குத் தெரியாது அவளுடைய தெய்வா ஆண்ட்டிக்காக அடிக்கடி பூஜாவின் வீட்டிற்கு வந்து சென்றாள்.
ஏனோ அவள்மீது முன்பிருந்த வெறுப்பும் கோபமும் இப்பொழுது தோன்றவில்லை பூஜாவிற்கு, இடையில் அவள் நலனை அறிய அழைக்கும் சேனாவிடம் கேட்டு மயூரியை பற்றித் தனக்கு தெரியாத நிறைய விஷயங்களை அறிந்துக்கொண்டாள்.
“அவ கூடப் பிரென்ட் ஆயிடு உனக்கு நல்லா டைம் போகும்” என்றவன் “உண்மையிலே அவ ஒரு கொழந்த தான், நீ கொஞ்சமா அன்ப காட்டினா போதும்… நாம எல்லாருமே குடும்ப அமைப்புக்குள்ள வாழ்ந்தவங்க அப்படி ஒன்னு கிடைக்காமலே வாழ்ந்தவ அவ அந்த ஏக்கம் மனசுபூரா இருக்கு ஆனா வெளில காமிச்சுக்கமாட்டா” என்றபோது இதுவரை கேட்டிராத குரல் அவனிடமிருந்து, மொத்தமாக இளகி ஒரு வித மெல்லிய சங்கீதம் போல.
“ஹ்ம்ம்… நேத்து வந்தப்போ ஒரு வாட்ச் கட்டியிருந்தா பேபி பிங்க் டயல் கோல்ட் ஸ்ட்ராப் நடுநடுவுல ஹார்ட் ஷேப் அதுல ரெட் ஸ்டோன்னு ரொம்ப அழகா இருந்துது, எப்படியும் பல ஆயிரம் இருக்கும், அம்மா அதப்பாத்ததும் ரொம்ப அழகா இருக்கு குட்டி அப்படின்னு ரசிச்சு சொன்னாங்க உடனே கழட்டி அவங்க கைல போட்டு விட்டுட்டா அம்மா வேண்டாம்னு எவ்ளோவோ சொல்லியும் கேக்கல”.
“என்னால அப்படி செய்ய முடியாது எனக்குப் பிடிச்சத்தை யாருக்கும் கொடுக்கமாட்டேன் மாமா, அவங்க எனக்குப் பிடிச்சவங்களா இருந்தாலும் எனக்கு மனசு வராது” என்றாள் பூஜா.
சத்தமாகச் சிரித்தவன் “அவகிட்ட யார் என்ன கேட்டாலும் குடுப்பா இந்தத் தேவசேனாபதிய தவிர” என்றவன் குரலில் அத்தனை பெருமிதம்.
“ரொம்பத்தான்…” என்றவள் இதழ்களிலும் புன்னகை.
“ஆமா உங்க பிரென்ட் ஏதாவது கண்டுபிடிப்பாரா இல்லையா, நிர்மல் வேற ரெண்டு நாளைக்கு ஒருதடவை வந்து பாத்துட்டு போறான் உண்மையிலே கொஞ்சம் பயமா இருக்கு மாமா” என்க.
“நெருங்கிட்டோம் பூஜா பயப்படாத சீக்கிரமே குட் நியூஸ் வரும்” என்றான்.
நிர்மல் குடும்பத்தின் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் ‘லைப்’ பணம் படைத்தவர்களுக்கான மருத்துவமனை, புகார்கள் நிறைய வந்திருக்கிறது அந்த மருத்துவமனையைப் பற்றிச் சாதாரணமாக இது போன்ற பெரிய இடங்களில் தவறு நடப்பதும் அதை அவர்கள் பணம் கொண்டு மூடி மறைப்பதும் அணைத்து இடங்களிலும் நடக்கும்.
ஆனால் கிரைம் ப்ராஞ்சின் கவனத்தை ஈர்த்தது லைப் ஹாஸ்ப்பிட்டலை பற்றி வந்த முக்கியமான ஒரு புகாரே, சுற்றுவட்டத்தில் எங்கு விபத்து நடந்தாலும், விபத்தில் அடிபட்டாலும் இறந்துபோனாலும் அவர்கள் லைப் ஹாஸ்பிடலுக்கு மட்டுமே அனுப்ப படுகிறார்கள் அதிலும் முக்கியமாகப் பெண்கள்.
விபத்துகளும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கே அதிகம் நடக்கிறது முக்கியமாக அதில் வயது பெண்களிருந்தால் இதைப் பற்றிய முதல் புகார் லைப் ஹாஸ்பிடலுக்காக அம்புலன்ஸ் ஓட்டிக்கொண்டிருந்த ஒரு ஓட்டுனரிடமிருந்து வந்தது.
காப்பாற்றிவிடலாம் என்ற நிலையில் இருக்கும் உயிர் கூட அங்குச் சென்றபிறகு மரணமடைகிறது, ஒரு இரவு வைத்துச் சிகிச்சை அளித்தால் கூடக் குடும்பத்தாரிடம் கணிசமான தொகை கறக்கப்படுகிறது, இவர்களுக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியவில்லை அப்படியே அரசு மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் நடந்தாலும் உடல் உறுப்புகள் திருடப்பட்டது எதுவும் வெளியில் வராது.
உடல் உறுப்பு திருட்டாக இருக்கலாம் என்ற கோணத்தில்தான் விசாரணை நடந்தது “இல்ல சார் வேற என்னமோ இருக்கு” என்றான் சேனா முதல்முறை இந்தக் கேஸ் வந்தபோதே.
“ஓர்கன்ஸ்ன்னா ஆம்பளைங்க உடம்புல இருந்தும் எடுக்கலாமே ஏன் பெண்கள் அதும் வயது பெண்கள்?” அங்கிருந்துதான் விசாரணை தீவிரமானது.
ஏகப்பட்ட கெடுபிடிகள் மருத்துவமனையில் பல வழிகளிலும் முயன்று கொண்டிருந்தனர், லைப் மருத்துவமனைக்காக ஆம்புலன்ஸ் ஓட்டும் பல பேரில் ஒரு ட்ரைவரை பிடித்து எப்படியோ பேசிச் சரிக்கட்டி இனிமேல் விபத்து நடந்து இதுபோல் கொண்டுபோவதற்கு முன் தங்களுக்கு தகவல் தர வேண்டும் என்று சொல்லிவைத்தனர்.
அவர்கள் எதிர்பார்த்த நாளும் வந்தது அன்று இரவு பத்துமணிக்கு மேல் அந்த ட்ரைவர் அழைத்திருந்தான் “சார் கோயம்பத்தூர் பைபாஸ், பொண்ணு ஸ்பாட் அவுட் வயசு எப்படியும் இருபதுல இருந்து இருபத்து அஞ்சு இருக்கும் கூட அப்பா அவருக்குத் தலைல அடி, நான் கெளம்பட்டுமா சார்” என்றவன் கேட்டு நிற்க.
“ஸ்டார்ட் பண்ணிடுங்க நான் வழில ஜாயின் பண்ணிக்கிறேன்” என்ற சேனா சக்திக்கும் அவர்களுடைய சீப் சிவசங்கருக்கும் தகவல் கொடுத்துவிட்டு வழியில் ஆம்புலன்சில் ஏறிக்கொண்டான்.
சின்னப் பெண் தந்தையுடன் எதோ விசேஷத்துக்குப் போய்விட்டு வந்திருக்கிறாள் “சாரிமா” என்றவன் அவள் முன்நெற்றி முடிகளுக்கு இடையில் சிறிய மச்சத்தின் அளவில் இருந்த கேமிராவை மூன்று இடங்களில் பின் செய்தான்.
“சார் எனக்கு ஒன்னும் பிரச்சனை வராதே” என்றான் ட்ரைவர் பயத்தோடு.
“இன்னையோட உனக்கு அங்க லாஸ்ட் நாளைல இருந்து உனக்கு வேற எடத்துல நல்ல சம்பளத்துல வேல தைரியமா போ” என்று அனுப்பிவைத்தான், நேரே அவர்களின் அலுவலகம் வரச் சக்தி மோனிகா மற்றும் அவனின் டீமும் அந்தக் கேமராக்களின் வழி அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“நெக்ரோபிலியா” இறந்து போனவரின் உடலோடு உறவு கொள்ளும் தன்மை, உலகின் அனைத்து இடங்களிலும் நடக்கும் ஒரு மறைக்கப்பட்ட உண்மை, இறந்தவர்களின் உடல்கள்கள் பாதுகாக்கப்படும் சவக்கிடங்கின் காவலாளிகளிடம் இந்தப் பழக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
உயிரற்ற உணர்வுகளற்ற ஒரு உடல் அதனால் என்ன செய்ய முடியும், உயிரோடு இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பில்லாத இந்த உலகில்… என்ன செய்திட முடியும் அந்த உடல்களால் அப்படியொரு கிரைம்தான் நடந்துகொண்டிருந்தது லைப் மருத்துவமனையில்.
அந்தப் பெண்ணின் உடல் கொண்டுசெல்லப்பட்டவுடன் அங்கிருந்த மருத்துவர் பரிசோத்தித்து உயிர் பிரிந்துவிட்டதாக உறுதி செய்ததும், மோர்சேரி கொண்டுசெல்லப்பட்டது தந்தைக்கும் மகனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு அங்கு நடந்ததை காணும் தைரியம் வரவில்லை யாருக்கும் மோனிகா ஒருபக்கம் குடல் வெளியில் வந்துவிடும் அளவுக்கு வாமிட் செய்துகொண்டிருந்தாள், சேனாவாலோ சக்தியாலோ அதைப் பார்க்காமல் தவிர்க்க முடியாது.
காவல் அதிகாரிகள் எந்தச் சூழ்நிலையிலும் திடமாக நிற்கும் மனதைரியம் பெற்றிருக்க வேண்டும் எத்தனை பெரிய கொடுமையான சம்பவமாக இருந்தாலும் ஆதாரங்களைச் சேகரிக்க அனைத்தையும் அவர்கள் கடந்துதான் ஆக வேண்டும், உணர்ச்சிகளற்ற முகத்தோடு நின்றிருந்தனர் இருவரும்.
தந்தையும் மகனும் அதன் பிறகு பேசிக்கொள்வதும் கேட்டது “டாட் இவ அப்பன் இழுத்துட்டு இருக்கான் என்ன பண்ணலாம்”.
“வெச்சிருந்து என்ன பண்ண போறோம் ஏதாவது தேறுமா?” என்றான் நிர்மலின் தந்தை.
“தலைலதான் அடி, ஓர்கன்ஸ் எல்லாம் நல்லா இருக்கு”.
“அப்பறம் என்ன எல்லாத்தயும் எடுத்துட்டு பொட்டலம் கட்டிட சொல்லு” என்றவன் வெளியில் செல்லப் பின்னையே மகனும் சென்றான்.
சேனா கால்கள் மடக்கி சுவற்றில் சாய்ந்து அமர்ந்துவிட்டான், சக்த்தியின் கோபம் அலறலாக மூடியிருந்த கதவுகளையும் தாண்டி வெளியில் கேட்டது, அதே வயதில் வீட்டில் ஒரு தங்கை இருக்கிறாள் அவனுக்குத் திரையில் பார்வை பதித்து அமர்ந்திருந்த அவனின் டீம் முழுதும் விழிகளை மூடிக்கொண்டது “சார்” என்ற குரல்கள் அனைத்துப்பக்கமிருந்தும்.
இப்படி கேள்விப்பட்டிருக்கிறார்கள் ஆனால் கண்முன்னில் அப்படியொரு காட்சி ஜீரணிக்க முடியவில்லை உயிரைக் காக்கும் பணியைச் செய்யும் இருவர் இப்படியொரு மிருக குணத்தோடு… அப்படியே இருவரையும் துண்டம் துண்டமாக வெட்டிப்போட துடித்தது சேனாவின் கைகள்.
“வாட் தி ஹெல் இஸ் திஸ் சேனா” என்றார் சிவசங்கர் அந்த விடியோவை பார்த்து “மனுஷங்களா இவனுங்க” என்றவர் “கெட் ரெடி சீக்கிரம்… இப்போவே அரெஸ்ட் பண்ணனும் இவனுங்கள” என்றவர் தன்னுடைய மேலதிகாரிக்கு விவரங்களைச் சொல்ல நேரில் சென்றார்.
அங்கு மருத்துவமனையில் ஊசலாடிக்கொண்டிருந்த தந்தையின் உயிரும் சிறிது நேரத்தில் மகளின் ஆத்மாவுடன் சேர்ந்துவிட்டது இல்லை சேர்க்கப்பட்டது அந்தக் கயவர்களால், அன்று இரவு வீட்டில் வைத்துத் தந்தை மகன் இருவரையும் கைது செய்தனர் அதன் பிறகு அனைத்தும் மின்னல் வேகமே.
மனதெல்லாம் பதறியது அந்தப் பைலை கையிலே எடுக்கமுடியாமல் தடுமாறினான் சேனா.
“தேவா” என்ற அழைப்பில் அருகில் நெருங்கிவந்தவளை இழுத்து அவள் வயிற்றோடு கரம்கோர்த்து மார்பில் புதைந்துகொண்டான், முதல் முறையாக அவன் கண்ணீர் அவள் மார்பை நனைத்தது.
“தேவா…” என்றவளை இன்னும் இறுக்கியவன் “கண்ணை மூடவே முடியல மயுமா, உயிர் இல்லனாலும் அதுக்கான மரியாதையை குடுக்கவேண்டாமா… இந்த உடல்தானே நாம உயிரோட வாழுற காலம் முழுசும் நம்மளோட அடையாளமா இருக்கு ஒரு மனுஷனை அவனோட உருவத்தை வெச்சுத்தானே ஞாபகம் வெச்சுக்குறோம், எதுக்காக இறந்தவங்க உடலுக்கு மாலை மரியாதை செஞ்சு நாய் நரி எடுக்காம புதைக்கிறோம், இல்லனா எரிக்கிறோம்”.
“அந்தச் சாம்பலைக்கூட பூஜை பண்ணி அவ்ளோ மரியாதையா கடல்ல கரைக்குறோம், அந்த ஆன்மாவுக்கு வலிச்சிருக்காதா இறந்துபோய்ட்டாலும் நம்ம ஆன்மா நம்ம உடலைச் சுத்தியே இருக்கும்ல தனக்கு நடுக்குற அநியாயத்தைத் தடுக்கவும் முடியாம அத மத்தவங்களுக்கு சொல்லவும் முடியாம எப்படி துடிச்சுருக்கும்” என்றவன் குரல் அவளை உடைத்தது.
“தேவா இங்க பாருங்க, என்னைப் பாருங்க” என்று அவனை நிமிர்த்தியவள் “எல்லா தப்பையும் நம்மால தடுக்க முடியாது, இது மாதிரி நிறைய இடத்துல நடக்குறதா நியூஸ்ல சொல்றாங்களே எல்லா இடத்திலேயும் நடக்குது ஆனா இதுவரைக்கும் யாரும் அதை வெளில கொண்டுவரல, நீங்கச் செஞ்சிருக்கீங்க உங்க மூலமா அங்க கஷ்டப்பட்ட எல்லா ஆத்மாக்கும் நியாயம் கிடைச்சிருக்கு”.
“அவங்களுக்கு அங்க என்ன நடந்ததுன்னு இந்த உலகத்துக்கு இப்போ தெரிஞ்சிருக்கு, நிச்சயமா அந்த ஆத்மாக்கள் எல்லாம் உங்களுக்கு நன்றி சொல்லும் இந்தக் கேஸ் நீங்க முடிக்கணும் அவனுக்குத் தண்டனை கிடைக்குது கிடைக்கல ஆனா அவனைப் பத்தி எல்லார்க்கும் தெரியணும், நீங்க இப்படி ஒடைஞ்சுபோறதை என்னால ஏத்துக்க முடியாது”.
“கவலையோ வருத்தமோ காயமோ என்கிட்டே மட்டும் காட்டுங்க, என் தேவா எப்போவும் கம்பீரம் தான் அப்படிதான் இருக்கணும் வெளில, நெஞ்சை நிமித்தி எல்லார் முன்னாடியும் நில்லுங்க இதைப் பண்ற தைரியம் வேற யாருக்கும் வரலையே, போங்க தேவா சக்தி உங்களுக்காக வெயிட் பண்றார்” என்றவள் அவன் நெற்றியில் முத்தம் பதித்து “கோ” என்க எழுந்தவன் அவளை ஒருமுறை இறுக்கி அனைத்து “தேங்க்ஸ்” என்றதோடு வெளியில் சென்றான்.
இந்தக் குற்றத்திற்கு நம் நாட்டில் தண்டனை கிடையாது ஒரு உயிரைக் கொள்வது குற்றம், ஆனால் உயிரற்ற உடலுக்கு நடக்கும் பாலியல் வன்முறை குற்றத்தின் பின்னணியில் வராது என்பது இப்பொது வரை உள்ள சட்டம் இனி வரும்காலம் மாறலாம் மாறாமலும் போகலாம்.
அவர்கள் மருத்துவமனையில் நடந்த மற்ற அனைத்து முறைகேடுகளும் குற்ற நடவடிக்கைகளும் அவர்களுக்கு எதிராகப் பதியப்பட்டது, முன்பு இவர்களுக்குப் பயந்து வெளியில் சொல்லமுடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருந்த பலரும் முன்வந்து ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர் தந்தை மகன் இருவருக்குமே இந்த மனநோய் இருக்கிறது.
இதில் சிலர் சாதாரணமாகத் தாம்பத்ய வாழ்வை கொண்டுசெல்வர் சிலரால் ஜடத்துடன் மட்டுமே உறவு கொள்ள முடியும், தந்தை மகன் இருவருமே அந்த ரகம் இந்த உண்மை நிர்மலின் தாய்க்கும் தெரியும், திருமணத்திற்கு பின்பு கணவனுக்கு இப்படியொரு பிரச்சனை இருப்பதை அறிந்துகொண்டார் அவர் முதலிரவில்.
காரணம்… மனைவியிடம் தூக்க மாத்திரைகளைக் கொடுத்த நிர்மலின் தந்தை நீ ஜடம்போல் இருந்தால் மட்டுமே என்னால் உன்னுடன் வாழ முடியும் என்று கூற அதை ஏற்றுக்கொள்ளவில்லை அவர், இருவரும் செய்துகொண்ட உடன்படிக்கைபடி கணவன் அவனுடைய விருப்பம்போல் வாழச் சமுதாயத்துக்காக வாடகை தாய் மூலம் நிர்மலை பெற்றுக்கொண்டனர், நிர்மலின் தாய் அவர் விரும்பும் ஆண்களுடன் வாழ்வார் வெளியில் இருவரும் மனமொத்த கணவன் மனைவி.
நிர்மலுக்கும் அதே பிரச்சனையே அதனால்தான் அவனுக்குப் பெண் சகவாசம் மட்டும் இதுவரை இல்லை இவனோடு வாழும் நிலை பூஜாவுக்கு வந்திருந்தால், அவள் கதி என்ன என்ற எண்ணத்திலே தலை சுற்றி விழுந்துவிட்டார் தெய்வானை.
பத்திரிகை தொலைக்காட்சி அனைத்திலும் இந்தச் செய்தியே இதுபோல் அங்கு நடந்தது இங்கு நடந்தது, சட்டம் வேண்டும் தண்டனை வேண்டும் என்று கத்தி தீர்த்தனர் மருத்துவமனை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ராஜப்பன் இப்படியொரு சதியை எதிர்பார்க்கவில்லை உள்ளே நடக்கும் சில தில்லு முல்லுகளை அரசாங்கம் காணாமல் இருந்துவிட வேண்டும் என்பதுதான் இந்தத் திருமணத்தின் ஒப்பந்தமே, நிர்மல் மற்றும் அவன் பெற்றோர் கூட எதிர்பார்க்கவில்லை மிஞ்சிப்போனால் ஓர்கன்ஸ் திருட்டு பற்றிச் சேனாவிற்கு தெரிந்திருக்கும் என்றுதான் நினைத்திருந்தான்.
திருமணம் தாலி கட்டியதோடு நின்றிருந்தது பதிவு கூடச் செய்திருக்கவில்லை ஆகையால் ரத்துசெய்வது எளிதானது, கழுத்தில் கிடந்த தாலியை அருவறுப்போடு கழட்டி வீசினாள் பூஜா.
செய்தியை முதன்முதலில் தொலைக்காட்சியில் பார்த்தவள் இரு தினங்கள் அறையை விட்டு வெளியிலே வரவில்லை அவனோடு சென்றிருந்தால் என்னவாயிருக்கும் என்ற எண்ணமே உறங்கவிடாமல் அவளை அலைக்கழித்தது, பசி தூக்கம் மறந்தவளை இறுதியில் மயூரிதான் சந்தியாவின் உதவியோடு சைகியாட்ரிஸ்டம் அழைத்துச்சென்றாள்.
தெய்வானை கணவனின் சட்டையைப் பிடித்துவிட்டார் “பாவி பாவி உன்கிட்ட சொன்னானே விசாரின்னு சொன்னானே காசுக்கு ஆசைப்பட்டு அண்ணனும் தம்பியும் என் புள்ளய கொல்ல பாத்தீங்களே, ஐயோ அவன் வீட்டுக்குப் போயிருந்தா இன்னைக்கு என் பொண்ணை பொதச்ச எடத்துல புல்லு மொளச்சுருக்கும், அந்தப் பிள்ளைங்க இப்படி செய்யாம இருந்திருந்தா அவ அங்க போயிருப்பாளே எல்லாமே முடிஞ்சிருக்குமே, என் மருமவன்தான் இப்போ காப்பாத்தினான் இப்போ எங்க போய் வெச்சுப்ப உன் மூஞ்சிய” என்று கத்தி தீர்த்துவிட்டார்.
வீட்டிற்கு செல்லவே முடியாத நிலை ராஜேந்திரனுக்கு மனைவி காளியாகச் சிலிர்த்து நிற்க மூத்தமகள் அவரைக் கண்டாலே தாயின் பின்னே ஒளிந்து கொள்கிறாள், இளயமகள் அவரைத் திரும்பியும் பார்ப்பதில்லை அவர் குரல் கேட்டாலே பொருட்களைப் போட்டு உடைக்கிறாள்.
பூஜாவை அழைத்துக்கொண்டு தாய் வீடு வந்துவிட்டார் தெய்வானை, அவளுக்கு ஒரு மாற்றமாக இருக்கும் என்று எண்ணினார், இங்கு வந்தபிறகு மயூரி வீட்டிற்கு வருவதில்லை அன்று கோசலை என்ன நினைத்துச் சொன்னாரோ ஆனால் அந்த வார்த்தைகள் மனதில் முள்ளாய் குத்திக்கொண்டிருக்கிறது.
“உனக்கு ஜாதகம் கிடையாது நாள் நட்சத்திரம் தெரியாது, கேட்கவும் பெத்தவங்க இல்ல… உன்ன பிடிக்காதுன்னு இல்லேடியம்மா ரொம்ப பிடிக்கும் ஆனா என் பேரனைவிட யாரும் எனக்கு முக்கியமில்லை உன்னைக் கட்டி அவன் உயிருக்கு ஏதாவது ஆபத்தாயிடுச்சுனா அப்புறம் உன்னைச் சாகர வரைக்கும் நான் மன்னிக்கமாட்டேன் விட்டுடு இது சரியா வராது” என்றதோடு இனிமேல் வீட்டிற்கும் வராதே என்று கூறியிருந்தார்.
ஏனோ அந்த வார்த்தைகளை மீறி அங்குச் செல்ல மனம்வரவில்லை, பூஜாவுக்கு அழைத்துப் பேசுவதோடு சரி பூஜா வந்து நான்கு நாட்கள் கடந்த பிறகும் மயூரி வீட்டிற்கு வராமல் இருப்பதை கவனித்தான் சேனா நேரே அவள் வீட்டிற்க்கே சென்றுவிட்டான்.
தன்னுடைய அறையின் பால்கனியில் சாய்வுநாற்காலியில் ஓய்ந்து போய் உடலைச் சுருக்கி படுத்திருந்தாள் அந்தத் தோற்றமே அவனைக் கூறு போட்டது “குட்டிமா” என்ற அழைப்பில் விழிகள் விரிய நம்பமுடியாமல் அவனைத் திரும்பிப் பார்த்தாள் மயூரி.
“தேவா” என்றவள் எழுந்து அருகில் வர அவளைத் தன் அணைப்பில் வைத்தவன் “ஏண்டா ஏன் இப்படி… அப்பத்தா உன்னை அங்க வரக்கூடாதுன்னு சொன்னாங்களா” என்று கேட்டவனுக்கு மௌனமே பதிலானது.
சொல்லமாட்டாள் “வேண்டாம் வர வேண்டாம் நீ அங்க வரது இந்தச் சேனாபதி பொண்டாட்டியாத்தான் இருக்கணும், அப்போ எப்படி வரவேண்டாம்னு சொல்வாங்க பாக்குறேன்” என்றவனை நிமிர்ந்து பார்த்த விழிகள் கேள்வி எழுப்பியது நடக்குமா என்று.
“ஆசைப்பட்டவளுக்கு தாலிகட்டி உரிமையா அவ கைபிடிச்சு வரக்கூடாதுன்னு சொன்ன வீட்டுக்குள்ள அவளைக் கொண்டுபோய் விளக்கேத்த வைக்கலானா நான் என்னடி ஆம்பள” என்றான் மீசையை முறுக்கி, அந்தப் பச்சை நிற விழிகள் பளபளத்தது இதழ்களில் புன்னகை பூத்தது.
“அப்பத்தாக்கு சும்மா இருந்து போர் அடிக்குது நினைக்குறேன் அதான் இப்படிலாம் பண்றாங்க, நாம என்ன பன்றோம் ஒவ்வொரு புதுவருஷமும் ஒரு குட்டி மயூரியோ சேனாவோ ரிலீஸ் பன்றோம் அப்பத்தாவை பிசியா வெக்குறோம்” என்றான் அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக்கொண்டு.
“ஏய்!… நீங்க ரொம்ப கிரீன் கிரீன் பேசுறீங்க” என்றாள் வெட்க சிரிப்போடு.
“கிரீனா… அதை இந்த மாதிரி கிரீன் ஐஸ் வெச்சு மனுஷன் உசுரை எடுக்குற நீ சொல்லக் கூடாது” என்றவன் இதழ்கள் அவள் கன்னத்தை உரசி இதழ்களை அடைய அந்தி செவ்வானமாய் சிவந்துகொண்டிருந்தாள் பெண்ணவள்.
error: Content is protected !!