Skip to content
Post Views: 6,871

அர்ஜுனனின் தோப்பு வீடு….
Advertisement
இந்த வீட்டை தன் சொந்த காசில் ஆறு வருடம் முன்பு தான் கட்டி இருந்தான்… ஒரு சிறிய ஹால் , ஒரு பெரிய பெட்ரூம், ஒரு சின்ன பெட்ரூம் , கிச்சன், மேலே மொட்டை மாடி, வீட்டை சுற்றி தென்னை மரங்கள், ஆட்கள் அதிகம் யாரும் இருக்க மாட்டார்கள் இந்த இடத்தில்…
வீட்டின் முன்புறம் உள்ள இடத்தில கயிறு கட்டிலில் அர்ஜுன் படுத்து இருக்க அவனின் மேல் ஆரவ் படுத்து இருந்தான்.. அருகில் சுபா இருவரையும் அணைத்தவாறு அர்ஜுனின் கையில் தலை வைத்து படுத்து இருந்தாள்… அவனின் இன்னொரு கையோ அவளின் கையின் மேல் இருந்தது…
Advertisement
Advertisement
ஆரவ் உறக்கத்தில் இருக்க சுபாவின் முகமோ களையிழந்து இருந்தது… “அம்மு ஏன் அமைதியா இருக்க… வா உள்ள போலாம் அங்க போய் தூங்கு அதுக்குள்ள நான் சமைக்குறேன்” என்று கூறி அவளை எழுப்பினான்…
ஆனால் அவளோ இன்னும் அவனோடு ஒன்றினாள்… “தாரும்மா எந்திரி பாரு வயிறு இடிக்குது… தம்பியும் நெளியுறான்… இறுக்காத…” என்று கூறி அவளின் கையை தளர்த்திவிட்டு அவளின் கையின் மேல தட்டி குடுத்தான்…
Advertisement
“இப்ப தூங்கு அம்மு நைட் ரா பூஜைக்கு போகனும்… ஒரு மணி பக்கம் ஆயிடும்… அதுனால தூங்கு அம்மு… சொல்றதை கேளுடா” என்று அவளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான்…
இந்த கெஞ்சல் அவளிடம் மட்டும் தான்… வேறு யாரிடமும் கெஞ்சல் இருக்காது… இவளை தவிர அவனின் மென்மையான பக்கம் யாருக்கும் தெரியாது என்று நினைத்து கொண்டு உள்ளாள் … அது உண்மை இல்லை… இன்னொருவருக்கும் தெரியும்…
அந்த நேரத்தில் கியா கார் ஒன்று வந்து நின்றது… அந்த சத்தத்தில் வேகமாக எழ பார்த்த சுபாவை அதட்டி மீண்டும் தன் அருகில் தூங்க வைத்தான்…
வந்தது சுபாவின் அண்ணன்கள் தான்…வீட்டின் கதவை கூட திறக்காமல் அப்படியே கட்டிலில் படுத்து இருந்தனர் அர்ஜுனும் சுபாவும்…
நந்தினியும் ஜனனியும் அனைவருக்கும் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தனர்… வர்ணனும் வாணனும் ஆளுக்கு ஒரு கயிறு கட்டிலும் மடக்கு கட்டிலும் எடுத்துவந்து போட்டனர்…
அர்ஜுனன் இன்னும் படுத்து கொண்டு தான் இருந்தான்… சுபாவையும் எழ விடவில்லை… ஆனால் இருவரையும் யாரும் எதுவும் சொல்லவில்லை..
வாணன் தான் “நீ ஓகேவா மாப்பிளை…” என்று அவனிடம் கேட்டான்…
“அப்படி சொல்ல ஆசை தான் அத்தான்… ஆனா இல்ல… கூப்பிட்டு வெச்சு அவமானம் பண்ணி இருக்காங்க… எனக்கு மத்தவங்க மேல கூட கோவம் கம்மியா தான் இருக்கு… அந்த ஆளு அது தான் என் அப்பா கொலைவெறில இருக்கேன்… கைல சிக்கினாரு அவ்ளோதான்… என்று கொஞ்சம் கோவமாகவே கூறினான்…
அவனின் சத்தத்தில் தூங்கிக்கொண்டு இருந்த ஆரவ் சிணுங்கினான்… அவனை ஜனனி தூக்கிக்கொண்டு தட்டிக்கொடுத்தாள்… மீண்டும் தூங்கி விட்டான்..
சுபாவை மெதுவாக எழுப்பி உட்கார வைத்துவிட்டு அர்ஜுனனும் எழுந்து உட்கார்ந்து அவளை தன் தோள் மீது சாய்த்து கொண்டான்…
அனைவருக்கும் அவனின் கோவம் சரியாக தான் இருந்தது… அவனின் கோவத்திற்கு சற்றும் சளைக்காமல் நந்தினியும் பயங்கர கோவத்தில் உள்ளாள்…
அக்காவும் தம்பியும் தங்கள் தகப்பனின் மேல் பயங்கர கோவத்தில் உள்ளனர்.. பாலா சிக்கினார் அவ்வளவு தான்…
சுபா காலையில் இருந்து சாப்பிடவில்லை… கோவிலுக்கு சென்றுவிட்டு சாப்பிட்டு கொள்ளலாம் என நினைத்தாள்… ஆனால் கோவிலில் நடந்த பிரச்சனையில் அவள் சாப்பிடவில்லை…
தற்போது பசி எடுத்தது அவளுக்கு… அதனால் அர்ஜுனனிடம் “மாமா பசிக்குது..” என்று பாவமாக கூறினாள்….
அவள் கூறியதைக் கேட்டு ஆரவை ஜனனி வர்ணனிடம் குடுத்துவிட்டு நந்தினியுடன் சேர்ந்து சமையல் அறைக்கு சென்று அடுத்த முக்கால் மணி நேரத்தில் இருவரும் சமைத்து எடுத்து வந்தனர்…
அதற்குள் ஆரவும் எழுந்து இருந்தான்… சிவனேஷ் ஆரவ் கார்த்திகா மூவரும் விளையாடிக் கொண்டு இருந்தனர்….
சுபாவோ தன் கணவனிடம் இருந்து அண்ணன்களிடம் சென்று இருந்தாள்… இருவரும் தங்கையை கொஞ்சிக் கொண்டு இருந்தனர்…
அர்ஜுனன் அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்தான்… அதனால் வாணன் அர்ஜுனனுக்கு தெரியாமல் அவளுக்கு தேன்மிட்டாய் குடுத்தான்.. வர்ணன் அதை மறைத்து கொண்டு இருந்தான்…
அவள் ஆசையாக அதை வாயில் போடும் போது “அம்மு” என்று அழைத்தான்…
சுபாவும் வர்ணனும் திருட்டு முழியுடன் நிமிர்ந்தனர்… வாணனோ எவ்வித பாவணையும் இன்றி அவனின் முகத்தை பார்த்தான்…
“என்ன டா ரெண்டு சாப்பிட்டா ஒன்னும் ஆகாது… நீ சாப்பிடு பாப்பா” என்று கூறி அவளுக்கு இரண்டு தேன்மிட்டாயை ஊட்டிவிட்டான்…
சுபாவோ தன் கணவனிடம் கண்களால் கெஞ்சிக்கொண்டே தன் அண்ணன் ஊட்டி விட்ட தேன்மிட்டாயை சாப்பிட்டாள்…
அதற்குள் நந்தினியும் ஜனனியும் வெளியவே சாப்பாடு எடுத்துவந்து விட்டனர்… சாப்பிட்டுவிட்டு அனைவரும் பேசிக் கொண்டு இருந்தனர்..
தானாகவே தன் பிள்ளைகளிடம் திட்டுவாங்க ஆர்வமுடன் தோப்பு வீட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தார் பாலா… அவரை முதலில் பார்த்தது ஜனனி தான்… வர்ணனின் காதில் “ஏங்க வான்டட்டா திட்டு வாங்க உங்க மாமா ஆர்வமா இங்க வந்துட்டு இருக்காருங்க” என்று கிசுகிசுத்தாள்…
வர்ணனும் “ஹா ஹா தானா எலியே வந்து பொறியில மாட்டுதே…” என்று நினைத்து தன் அண்ணனுக்கு கண் கட்டினான்…
வாணனும் பார்த்துவிட்டு “வில்லங்கத்தை விலை குடுத்து வாங்க வராரே” என்று நினைத்துவிட்டு அர்ஜுனனை பார்த்தான்..
அவனும் நடந்து வரும் பாலாவை பார்த்து முகமிறுகி கோபத்துடன் அமர்ந்து இருந்தான்…
இன்னும் சுபாவும் நந்தினியும் பார்க்கவில்லை…. இருவரும் உள்ளே இருந்தனர்… அவர் வந்ததை பார்த்து வாணனும் வர்ணனும் மட்டும் எழுந்து நின்று வாங்க என்று மட்டும் வரவேற்றனர்..
ஜனனி அவர் வருவதற்கு முன்பே உள்ளே சென்று இருந்தாள்…. வாணன் வர்ணன் இருவருக்கும் ஒரு தலையசைப்பை குடுத்துவிட்டு அர்ஜுனனிடம் சென்று தன் பக்க நியாயத்தை கூற விளையும் போது “எதுக்கு இங்க வந்திங்க… இன்னும் உசுரோட இருக்கானா… பார்க்க வந்திங்களா… பாக்கி இன்னும் எதோ இருக்கா என் தம்பியை அவமானம் படுத்த” என்று கொஞ்சம் காரமாகவே கேட்டாள் நந்தினி…
அது நதிம்மா என்று எதோ கூறவந்தவரை தடுத்து எதோ பேச வந்த நந்தினியை “அமைதியா இரு இனிம்மா… அவர் என்ன சொல்லறாரு பாக்கலாம்” என்று வாணன் கூறினான்…
அவருக்கு தலையசைப்பை குடுத்துவிட்டு “தயவு செஞ்சி நான் சொல்றது கேளுங்க நதிம்மா… உன் அம்மாவும்” என்று கூறியவரைப் பார்த்து “அவங்க ஒன்னும் என் அம்மா இல்லை” என்று காட்டமாக கூறினாள் நந்தினி …
“சரிம்மா சரிம்மா…. கிரிஜாவும் மருமக பொண்ணும் சசிக்கு தான் முதல் மரியாதை தரணும்னு சொன்னாங்க… நான் மறுத்துட்டேன்…
ரெண்டு நாளைக்கு முன்னாடி மருமக பொண்ணு கத்திய கழுத்துல வெச்சிட்டு சசிக்கு தான் முதல் மரியாதை தரணும்னு பிரச்னை பண்ணிடுச்சு…
அம்மா சொன்னா ஒதுக்க மாட்டாங்கனு கிரிஜா சொன்னா… அதுதான் பூசாரிக்கு காசு குடுத்து விலைக்கு வாங்குனோம்… பூசாரிக்கு காசு தந்து இப்படி மாறி பண்ணலாம்னு சசியும் அவன் பொண்டாட்டியும் தான் சொன்னாங்க… யாரும் இதுக்கு ஒதுக்க மாட்டாங்க…
அதுனால தான் இப்படி பண்ணிட்டோம்… மன்னிச்சுடுங்க… அம்மா வீட்டை விட்டு போக சொல்றாங்க நீங்க வந்து சொல்லுங்க” என்று அர்ஜுனிடமும்…
அனைவருக்கும் சீ என ஆகிவிட்டது… தற்போது கூட வீட்டை வீட்டு வெளியா செல்ல கூறுவதால் தான் வந்துள்ளார் என…
வாணனே கூறிவிட்டான்… “நீங்க மட்டும் என் மாமனாரா இல்லனா என்ன பண்ணி இருப்பேன்னு எனக்கு கூட தெரியாது… இப்ப கூட மன்னிப்பு கேட்க வரல வீட்டை விட்டு போக சொல்றதுனால பாட்டி கிட்ட பேச சொல்ல வந்து இருக்கீங்க அவளோ தானு…. போயிடுங்க பெத்த புள்ளைங்க கிட்ட திட்டு வாங்கிடாதீங்க… தயவு செஞ்சி இவங்க ரெண்டு பேர் முன்னாடி வராதீங்க” என்று…
பாலா வேறு வழியில்லாமல் நந்தினியும் அர்ஜுனனையும் பார்த்தவாறே சென்றுவிட்டார்…
அர்ஜுன் நந்தினி இருவரும் சிறிதுநேரம் கோவமாகவே இருந்தனர்… பிறகு மெல்ல மெல்ல சமநிலைக்கு திரும்பினர்… அனைவரும் உள்ளே சென்றனர்..
பெண்கள் மூவரும் பெரிய அறையில் ஓய்வு எடுக்க வாணனும் வர்ணனும் குழந்தைகளுடன் சிறிய அறைக்கு சென்றனர்… அர்ஜுனன் அப்டியே வெளியே தூங்கிவிட்டான்…
இரவு ஒன்பது மணி ஊர் மக்கள் அனைவரும் அய்யனார் கோவிலில் குழுமி இருந்தனர்… மின்விளக்குகளால் காலை போல் காட்சி அளித்தது அந்த கோவில்…
பூஜை செய்து சசிகுமாருக்கு மாலை அணிவித்து கையில் அருவா குடுத்து உறுமி மேளம் அடித்து கொண்டு இருந்தனர் சாமி வருவதற்காக…
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அர்ஜுனனுக்குள் அய்யனார் வந்து இறங்கி இருந்தார்… அவனுக்கு மாலை அணிவித்து அவனிடம் அருவாள் குடுத்தவுடன் ஆக்ரோஷமாக ஆடினான்…
மக்கள் அனைவரும் பயந்து நின்று இருந்தனர்… அர்ஜுனனின் முகம் எப்போது இறுகி தான் இருக்கும்… தற்போது அவனின் முகம் கம்பீரமாக கோபத்துடன் காட்சி அளித்தது…
அவனின் முகம் பார்த்து சுபா பயந்து தன் அண்ணன்களில் தோளில் சாய்ந்து கொண்டாள்….
கொஞ்சம் சாந்தமான பிறகு ஒரு ஒருவராக வாக்கு கேட்க கூறினர்… ஊர் மக்கள் அனைவரும் வாக்கு கேட்டனர்…
ஒரு சிலருக்கு நல்லதாகவும் ஒரு சிலருக்கு பார்த்து இருக்குமாறு சாமி கூறியது….
சுபாவை பார்த்து சாமி “என்ன என்னை பார்த்தா பயமா இருக்கா.,..” என்று கேட்டது…
அவள் முன்னாடி வந்து நின்றாள்…. “உனக்கு கஷ்ட காலம் தான்…. ரெண்டு பேருக்கும் சண்டை சச்சரவு வரும்… ஆனா ரெண்டு பேரும் பிரிய மாட்டீங்க….. உன் புருஷன புரிஞ்சி நட… புள்ள குட்டியோட சந்தோசமா இருப்ப…. போயிட்டு வா” என்று அனுப்பினார்…..
சுபா கலங்கியே நகர்ந்தாள்….
வாணன் வர்ணனிடம் “உன் தங்கச்சிக்கும் மாப்பிளைக்கும் பக்க பலமா இருங்க…” என்று கூறி விபூதி பூசி அனுப்பினார்……
கிரிஜா முன்னாடி வந்து நின்றார்… அவரை பார்த்து சத்தம் போட்டு சிரித்தார்…. “நீ முன்னாடி செஞ்சது எல்லாம் உனக்கே திரும்பி வர போகுது…. அனுபவி அனுபவி போ போ இங்க இருந்து வேகமா போ” என்று கூறினார்….
ரேவதி வந்தாள்…. “போயிடு போயிடு நீ செஞ்சது எல்லாம் பத்தாதா…. நீ என்ன யோசிக்குறன்னு தெரியும்…. நடக்காது நடக்காது நீ நினைக்குறது எதுவும் நடக்காது….” என்று கூறினார்…
பாட்டி வந்தார்… “உன் குடும்பம் பிரிய போகுது…. பிரிய போகுது…. நீ என்ன நினைச்சாலும் திரும்பியும் சேரவே சேராது,….” என்று கூறினார்…
பாட்டி சாமி சொன்ன வாக்கைக் கேட்டு கவலையாக சென்று விட்டார்….
கர்ணனுக்கு “உனக்கு என்ன தோணுதோ அதை செய்… சந்தோசமா இருப்ப…” என்று கூறி அனுப்பி வைத்தார்…
பாலா வந்தார் அவரை ஒரு பார்வை தான் பார்த்தார்… அடுத்த நிமிடம் அர்ஜுனனின் உடம்பில் இருந்து இறங்கி இருந்தார்….
error: Content is protected !!