நீ எனக்கு தந்த காதல் – 37.
தமிழை விட்டு பிரிய முடியாமல் தவிக்கும் நிலா.
ஆபிசில் நந்தினியும், நிலாவும் பேசிக் கொண்டிருக்க இங்கே கவின் தமிழுக்கு போன் செய்தான்.
Advertisement
இனி,
‘சொல்லு டா’, என தமிழ் கேட்க,
Advertisement
Advertisement
‘நேத்து நைட் எப்டி நிலாவ சமாளிச்ச. எல்லாத்தையும் அவ கிட்ட சொல்லிட்டியா’, என கவின் கேட்க,
‘ம் சொல்லிட்டேன்’, என தமிழ் பதில் சொல்ல,
Advertisement
‘என்னது சொல்லிட்டியா. அதுக்கு நிலா என்ன சொன்னா. ஒத்துக்கிட்டாளா.’, என கவின் ஆச்சர்யமாக கேட்க,
‘ம் பர்ஸ்ட் ஏன், எதுக்கு, என்னன்னு கேட்டா. அப்புறம் நெஜமாவே என் மேல உனக்கு பாசம் இருந்தா எனக்காக இத செய்யுன்னு சொன்னேன். வேற வழி இல்லாம ஒத்துகிட்டா’, என தமிழ் சொல்ல,
‘பாவம் டா. நீ அவள படுத்துற பாட்டுக்கு வேற யாராவதா இருந்தா நிஜமாவே சொல்லாம கொள்ளாம உன்ன விட்டுட்டு ஓடி இருப்பாங்க ‘, என கவின் சொல்ல,
‘ஆமா டா எனக்கே தெரியுது அவள நான் ரொம்ப கஷ்ட படுத்தறேன்னு. நேத்து அவ எப்டி அழுதா தெரியுமா. ஒரு நிமிஷம் நானே இதெல்லாம் ஒன்னும் வேணாம் நிலாவும் நானும் ஒன்னாவே இருந்தடலாம்னு தோனுச்சு. அப்புறம் சுதாரிச்சு கிட்டேன். ‘, என தமிழ் சொல்ல,
‘அவனவனுக்கு எதிரி வெளில இருந்து வருவாங்க. ஆனா உனக்கு எதிரி நீ தான். நல்லா போய் கிட்டு இருக்கற வாழ்க்கைய இப்டி நீயே மண்ண அள்ளி போட்டுக்கற. சரி நிலா வேற ஒன்னும் சொல்லலையா. ‘, என கவின் கேட்க,
‘ம் நீங்க சொன்னத நான் செய்யனும்னா நீங்க எப்பவும் போல எங்கூட நல்லா பேசனும், பழகனும் உங்கள விட்டு போனதுக்கு பிறகு கூட. அப்புறம் ஆன்டி, அங்கிள் கிட்ட நான் பேசிட்டு தான் இருப்பேன். நீங்க அவங்க கிட்ட என்ன வேணா சொல்லி சமாளிச்சுக்குங்க. அப்டின்னு சொன்னா’, என தமிழ் சொல்ல,
‘எப்டி டா நீ இவ்ளோ கஷ்ட படுத்துனா கூட அவ இப்டி யோசிக்கறா’, என கவின் கேட்க,
‘அதான் டா என் நிலா. இப்ப சொல்லு நான் அவளுக்காக இத செய்யறது தப்பா’, என தமிழ் கேட்க,
‘ம் நிஜமாவே அவ சந்தோஷமா இருக்கனும்னு நீயும், நீ சந்தோஷமா இருக்கனும்னு அவளும் நினக்கறதுல தப்பே இல்ல. ஆமா அவ உன்ன விட்டு போனதுக்கு பிறகு நீ என்ன பண்ண போற’, என கவின் கேட்க,
‘அவள விட்டுட்டு என்னால இங்க தனியா இருக்க முடியாது. எங்க பாத்தாலும் அவ தான் ஞாபகத்துல வருவா. அதனால இந்த கம்பேனிய அப்பாவ பாத்துக்க சொல்லிட்டு நான் ஆஸ்ட்ரேலியால நம்ம க்ளெய்ன்ட் கம்பெனி ஒன்னு இருக்கு. அவங்க முதல்ல இருந்தே என்ன கூப்டுட்டு இருக்காங்க. கொஞ்ச நாள் அங்க மேனேஜரா வேல பாக்கலாம்னு இருக்கேன். அவ்ளோ தான் இப்பத்திக்கு ப்ளான்’, என தமிழ் சொல்ல,
‘டேய் என்ன டா சொல்ற. அப்ப உன் அப்பா அம்மாவ எப்டி சமாளிக்க போற’, என கவின் கேட்க,
‘அதெல்லாம் நிலா பாத்துக்கு வா. அதான் அவளே சொல்லாம சொல்லிட்டால்ல’, என தமிழ் சொல்ல,
‘என்னென்னவோ சொல்ற. எனக்கு ஒன்னும் புரியல.’, என கவின் சொல்ல,
‘எல்லாம் நடக்கும் போது உனக்கு புரியும். இப்ப போன வை’, என தமிழ் சொல்லி விட்டு போனை கட் செய்தான்.
தமிழ், நிலா இருவரும் வேலை முடிந்து ஒன்றாக காரில் வீட்டுக்கு சென்றனர்.
எப்போதும் போல் தமிழும் நிலாவும் வீட்டுக்கு வந்து பிரஷப் ஆகி கீழே வர அனைவரும் சேர்ந்து காபி குடித்தனர்.
அப்போது பாரதி இடமிருந்து போன் வர நிலா வராண்டாக்கு சென்று அதை அட்டண்ட் பண்ணி பேசினாள்.
‘சொல்லு பாரதி நீ, அம்மா எல்லாம் நல்லா இருக்கீங்களா’, என நிலா கேட்க,
‘நிலா நான் அம்மா பேசறேன். என் போன்ல ஜார்ஜ் இல்ல. அதான் பாரதி போன்ல இருந்து கூப்டேன். அவன் உக்கறமா இருக்குன்னு குளிக்க போயிருக்கான். நாங்க நல்லா இருக்கோம் . நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா’, என நிலா அம்மா கேட்க,
‘ம் எல்லாரும் நல்லா இருக்கோம். என்னம்மா இப்ப தான் என் ஞாபகம் வந்துச்சா’, என நிலா கேட்க,
‘உன்ன பத்தி நான் ஏன் கவல படனும் அதான் தமிழ் தம்பி இருக்காருல்ல உன்ன பாத்துக்க ‘, என நிலா அம்மா கேட்க,
‘நீ வேற நிலமை தெரியாம பேசுற. அவருக்கு என்ன அவர் இருக்காரு தான்’, என தனக்குள் நிலா பேசிக் கொண்டு, ‘அப்ப என்ன விசயமா போன் பண்ண’, என கேட்க,
‘நிலா நம்ம பாரதிக்கு மேட்ரிமோனில இருந்து ஒரு நல்ல சம்பந்தம் வந்துருக்கு. நான் அவங்க கிட்ட போன்ல பேசுனேன். அவங்களுக்கு ஓகே தான். நாளைக்கு நேர்ல போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்னு உன்ன கூப்டேன்’, என நிலா அம்மா சொல்ல,
‘ம் ரொம்ப சந்தோஷமான விசயம் தான். சரி நாளைக்கு எப்ப போலாம்’, என நிலா கேட்க,
‘அதுக்கு தான் உனக்கு போன் பண்னேன் . தமிழ் தம்பி கிட்ட கேளு எப்ப போலாம்னு’, என நிலா அம்மா சொல்ல,
‘என்னது அவரு எதுக்கு. அவரு ரொம்ப பிசியா இருப்பாரு நாம மட்டும் போய்ட்டு வந்தரலாம்’, என நிலா சொல்ல,
‘ஏய் என்னடி பேசுற. அவரில்லாம எப்டி. அவரு தப்பா நினச்சுக்க மாட்டாரா. அது மட்டும் இல்லாம அவரு இந்த வீட்டு மாப்ள. நீ சொல்லாட்டி பரவால்ல போன குடு நான் கேட்டுக்கறேன்’, என நிலா அம்மா சொல்ல,
‘நான் சொன்னா நீ கேக்க மாட்ட. இரு போன குடுக்கறேன் நீயே பேசிக்கோ’, என நிலா சொல்லி விட்டு உள்ளே சென்று போனை தமிழிடம் குடுத்து,
‘தமிழ், அம்மா எதோ உங்க கிட்ட பேசனுமா இந்தாங்க’, என நிலா சொல்ல அதை வாங்கி கொண்டு தமிழ் வராண்டுக்கு வந்து,
‘சொல்லுங்க நிலாம்மா என்ன விசயம்’, என தமிழ் கேட்க,
‘அது ஒன்னுமில்ல தம்பி பாரதிக்கு ஒரு சம்பந்தம் வந்துருக்கு. அதான் நாளைக்கு நேர்ல போய் பாத்துட்டு வரலாம்னு கேட்க கூப்டேன்’ என நிலா அம்மா கேட்க,
‘ரொம்ப சந்தோஷம். நாளைக்கா ஓ தாராளமா போலாமே. எந்த ஊரு’, என தமிழ் கேட்க நிலா அவனை முறைத்தாள்.
‘இவ எதுக்கு நம்மள முறைக்கறா. நாம எதுவும் தப்பா சொல்லிட்டமோ’, என தமிழ் யோசிக்க,
‘இல்ல நிலா நீங்க ரொம்ப பிசியா இருப்பீங்க ன்னு சொன்னா’, என நிலா அம்மா கேட்க,
‘ஓ இதுக்கு தான் முறைச்சாளா’ என தனக்குள் நினைத்து கொண்டு,
‘நிலாம்மா இத விட முக்கியமான விசயம் எதுவும் இல்ல. நாளைக்கு கண்டிப்பா போலாம் .’, என தமிழ் சொல்ல,
”எனக்கு தெரியும் தம்பி நீங்க வருவீங்கன்னு. இந்த நிலா தான் அதுக்குள்ள நீங்க வர மாட்டீங்க ன்னு சொல்லிட்டா. சரி விடுங்க நாளைக்கு சாயந்தரம் நாலு மணிக்கு கிளம்பலாம். நீங்க, நிலா ரெண்டு பேரும் கிளம்பி இங்க வந்துருங்க. இங்கிருந்து ஒரு மணி நேரத்துல போயிடலாம். அப்புறம் அப்பா , அம்மா கிட்ட இந்த விசயத்த சொல்லிருங்க. ‘, என நிலா அம்மா சொல்ல,
‘ஓகே நிலாம்மா கண்டிப்பா சொல்லிடறேன். அதே மாதிரி நானும் நிலாவும் நாளைக்கு கிளம்பி வந்தறோம்.’, என தமிழ் சொல்ல,
‘சரி தம்பி நான் போன வச்சறேன்’, என சொல்லி விட்டு நிலா அம்மா போனை கட் செய்தார்.
தமிழ், நிலா இருவரும் உள்ளே செல்ல,
‘தமிழ் என்ன டா சொன்னாங்க நிலா அம்மா’, என தமிழ் அம்மா கேட்க,
‘ராஜி, பாரதிக்கு பொண்ணு பாத்திருக்காங்களாம். அதான் நாளைக்கு பொண்ணு வீட்டுக்கு போலாம்னு என்னையும், நிலாவையும் கூப்டாங்க’, என தமிழ் சொல்ல,
‘அப்டியா நல்ல விசயம் தான். நாளைக்கு ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க. ‘, என தமிழ் அம்மா சொல்ல,
‘ஏம்மா நிலா என்ன யோசனையா இருக்க ‘, என தமிழ் அப்பா கேட்க,
‘அது ஒன்னுமில்ல அங்கிள். சும்மா நாளைக்கு போறத பத்தி தான் யோசிச்சு கிட்டு இருந்தேன். சரி நான் போய் டிபன் ரெடி பண்றேன்’, என நிலா சொல்லி விட்டு சமையலறைக்கு செல்ல தமிழ் அம்மாவும் உள்ளே சென்றார்.
டிபன் ரெடியானதும் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
தமிழ் தன் படுக்கையில் படுத்து இருக்க நிலா அவன் அருகில் வந்து உட்கார்ந்து அவனை உற்று பார்த்தாள்.
‘ஏய் நிலா இப்ப என்னைய ஏன் இப்டி உத்து பாக்கற.’, என தமிழ் பயந்து கேட்க,
‘அது எப்டி என்னைய உங்கள விட்டு போக சொலறீங்க ஆனா என் அம்மா கிட்ட நல்லா பேசறீங்க. என்னால உங்கள புரிஞ்சிக்கவே முடியல. நீங்க நல்லவரா கெட்டவரா’, என நிலா கேட்க,
‘ம் இப்ப இது ரொம்ப முக்கியம். கேள்வி கேட்டாச்சுல. படுக்கலாமா’, என தமிழ் கேட்க,
‘கேள்வி கேட்டாச்சு ஆனா அதுக்கு பதில் இன்னும் வரலையே’, என நிலா கேட்க,
‘அந்த கேள்விக்கு அந்த சீன்ல ஹீரோ என்ன பதில் சொல்லுவாரோ அதே பதில் தான். போதுமா’, என தமிழ் சொல்ல,
‘சரி சீரியசா ஒன்னு கேக்கறேன். என் அம்மா, தம்பி, ஆன்டி, அங்கிள் இவங்க எல்லாருக்கும் நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க ‘, என நிலா கேட்க,
தமிழ் எதுவும் பேசாமல் அமைதியாக படுத்திருக்க நிலாவும் மேற் கொண்டு எதுவும் பேசாமல் லைட் ஆப் பண்ணி விட்டு படுத்தாள்.
‘நிலா நீ கேட்ட கேள்விக்கு எங்கிட்ட எந்த பதிலும் இல்ல. அதான் அமைதியாயிட்டேன்’, என தமிழ் தனக்குள் நினைத்துக் கொள்ள,
‘தமிழ் நான் கேட்ட கேள்விக்கு உங்களால பதில் சொல்ல முடியாதுன்னு எனக்கு தெரியும். ப்ளீஸ் தயவு செஞ்சு உங்க முடிவ நீங்க மாத்திக்கங்க. என்னால உங்கள விட்டு போக முடியாது. முதல்ல எதுக்கு நான் உங்கள விட்டு போகனும்னு நீங்க சொன்னீங்கன்றதுக்கான ரீசன நான் கண்டு பிடிக்கனும். உங்களுக்கு நெஜமாவே நான் போனா சந்தோஷம்னா கண்டிப்பா நான் போயிடுவேன். கவல படாதீங்க ‘, என நிலா தனக்குள் நினைத்து கொள்ள இருவரும் அப்படியே தூங்கி போனார்கள்.
தமிழ் தன்னை விட்டு பிரிய சொன்னதற்கான காரணத்தை தெரிந்து கொள்வாளா நிலா?
தொடரும்…
