Skip to content
Post Views: 4,546
உன் காதல் ஒரு வரமாய்…..22
அமிர்தா தனது அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சமயம் அவளின் முன் ஒரு வண்டி வந்து நிற்க நிமிர்ந்து பார்க்க,
“ஹாய்….அமிர்தா எப்படி இருக்க….” என்ற முகம் எல்லாம் பல்லாக நின்றான் கவின்.அமிர்தாவிற்கு அவனை முதலில் நியாபகம் இல்லை எனவே முழித்தபடி நிற்க,
“என்ன என்னை நியாபகம் இல்லையா நான் கவின் வாணி மேடம் பக்கத்து வீடு…..”என்று கூற,அமிர்தாவிற்கு அவன் யார் என்று புரிந்துவிட்டது.முன்பு போல் எல்லாம் பயப்படவில்லை திடமாகவே அவனை எதிர் கொண்டாள்.
Advertisement
“என்ன???”
“ப்ச் நான் அன்னைக்கு உன்கிட்ட பேசிட்டிருந்ததை அந்த மேடம் பார்த்துட்டாங்க எங்க வீட்டுல சொல்லி பெரிய பிரச்சனை அதனால தான் உன்னை பார்க்க முடியாம போகிடுச்சு….அதுக்குள்ள நீ இங்க வந்துட்ட….நேத்து உன்னை பார்த்ததும் திரும்பியும் உன்னை கண்டுபிடிச்சிட்டேன்…….”
“சரி அதுக்கு இப்ப என்ன….”
Advertisement
“என்ன நீ நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா….உன்னை ரொம்ப விரும்புறேன் அமிர்தா என்னை புரிஞ்சிக்க….”
Advertisement
“ஓஓ…சரி அதுக்கு இப்ப என்ன….”
“என்ன நீ நான் உன்னை விரும்புறேன்னு சொல்லுறேன்….”
“இங்க பாரு உன் கிட்ட நான் ஏற்கனவே இதுக்கு பதில் சொல்லிட்டேன்….கிளம்பு முதல்ல….”என்றுவிட்டு அவள் நகர,அவளின் கையை பிடித்த கவின்,
Advertisement
“அமிர்தா….நான் உன்னை விரும்புறேன்….எனக்கு பதில் சொல்லிட்டு போ….”என்று கோபத்துடன் கேட்க,அமிர்தாவோ அவனின் கைகளில் இருந்து தன் கையை விடுவிக்க முயன்று தோற்றவள்,
“இடியட் ஒழுங்கா கையை விடு இல்லை சத்தம் போட்டு ஊரை கூட்டிடுவேன்…..விடு….”என்று சத்தம் போட,அது தெருவின் திருப்பு முனை எனவே மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை அதுவே கவினிற்கு வசதியாக போக,
“கத்து…நல்லா கத்து…உனக்கு தான் யாரும் இல்லையே யார் வருவா உதவ…. ஒழுங்கா என்னோட பிரப்போசலை ஏத்துக்க இல்லை உனக்கு தான் பிரச்சனை….இந்த தடவை அந்த மேடம் கூட உன்ன என்கிட்டேந்து காப்பாத்த முடியாது….நியாபகத்துல வச்சுக்க….வரேன்…நாளைக்கு எனக்கு பதில் வேணும் அதுவும் எனக்கு சாதகமானதா தான் வேணும்…அப்புறம் போலீஸ் அதுஇது பேசாத நான் எதுக்கும் பயப்படமாட்டேன்….எனக்கு எல்லா இடத்திலேயும் ஆள் இருக்கு….”என்று எச்சரித்துவிட்டு செல்ல,அமிர்தாவிற்கு அனைத்தும் ஆடிவிட்டது.வேகமாக தன் வீட்டிற்கு வந்தவள் தனது போனில் சிவாவிற்கு அழைத்துவிட்டாள் எதையும் யோசிக்கவில்லை மனதில் பயம் பிடித்துக் கொண்டது.
முதல் இரண்டு முறை அழைத்து அழைப்பு ஏற்க்கப்படவில்லை அது இன்னும் பயத்தை கொடுக்க கடவுளே போனை எடுங்க எடுங்க என்று வேண்டிக் கொண்டே மீண்டும் அழைக்க ஏற்க்கப்பட்டவுடன்,
“ஹ….ஹலோ…..”என்றவளின் அழைப்பே அவனிற்கு எதையோ உணர்த்த,
“அம்மு எங்க இருக்க….”
“வீ….வீடு….”
“நான் இன்னும் அரைமணிநேர்த்துல அங்க இருப்பேன்…..”என்று வைத்தவன் கூறியதைப் போல அடுத்த அரைமணிநேரத்தில் அவளின் வீட்டிலிருந்தான்.
கதவை கூட தாழ்போடாமல் அமிர்தா அமர்ந்திருக்க சிவாவிற்கு பயம் பிறந்தது.
“என்னடா என்ன பிரச்சனை….”என்று அவளின் முகம் நிமிர்த்தி கேட்க,அவளின் முகம் முழுவதும் வேர்த்து நடுங்கிக் கொண்டிருந்தது.ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது சிவாவிற்கு.
“ஒண்ணுமில்ல….நா….நான் வந்துட்டேன்ல நீ பயப்படாத…..கொஞ்சம் இந்த தண்ணீய குடி….”என்று பக்கத்தில் இருந்த பாட்டில் நீரை கொடுக்க,அமிர்தாவும் நடுங்கும் விரல்களால் அதனை வாங்கி குடிக்க,அவளை தன் மீது சாய்த்து முதுகை மெல்ல நீவி விட அதுவரை பதட்டத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளின் உடல் சற்று அமைதி அடைந்தது.
“ரிலாக்ஸ்….ரிலாக்ஸ்….”என்று அவனின் குரல் மட்டும் தான் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த இடத்தில்.தன்னை ஒரளவிற்கு தேற்றிக் கொண்டவள் அவனின் தோள்களில் இருந்து எழ முற்பட,
“கொஞ்ச நேரம் அப்படியே இரு….எனக்கும் இப்போ நீ தேவை…..”என்று கூற,அவனை விட்டு முழுதாக விலகி,
“தேங்க்ஸ் வந்ததுக்கு….”
“ஓங்கி அரைஞ்சேன்னு வை….கன்னம் இரண்டு பழுத்து போயிடும் பார்த்துக்க….என்னடீ பிரச்சனை அதை சொல்லு முதல்ல….”என்று அவன் கத்த,அமிர்தா அவன் கத்தலில் பயந்து கவினை பற்றி அனைத்தும் கூறிவிட,
“பொறுக்கி…..எவ்வளவு தைரியம் இருக்கனும் அவனுக்கு….வரட்டும்….”என்றவனின் கண்களில் அத்தனை கோபம் என்பதை விட கவினை கொன்றுவிடும் வெறி,
“இல்ல நான் பார்த்துக்குறேன்….ஏ….ஏதோ பதட்டத்துல உங்களை கூப்பிட்டேன்…..”
“என்ன பார்த்துப்ப…ஆங்…என்ன பார்த்துப நீ….நான் பார்த்துக்குறேன்….”என்றவன் வேகமாக தனது பேசியை எடுத்து யாருக்கோ அழைக்க மறுபக்கம் அழைப்பை ஏற்றவுடன்,
“நான் சிவா பேசுறேன்….நீங்க நாளைக்கே இங்க சென்னைக்கு வாங்க….ஒரு பிரச்சனை….இல்ல அவ நல்லா இருக்கா…நான் இங்க தான் இருப்பேன்….நாளைக்கு காலையில இல்ல மதியத்துக்குள்ள வரீங்களா….”என்றவன் மறுபக்கம் என்ன கூறப்பட்டதோ,
“ம்ம்…சரி வாங்க வச்சிடுறேன்….”என்றுவிட்டு அமிர்தாவிடம் திரும்பி,
“போய் பிரஷ் ஆகிட்டு வா….நான் நமக்கு ஏதாவது சாப்பாடு வாங்கிட்டு வந்துடுறேன்….”என்றுவிட்டு கிளம்ப,
“இல்ல வேணாம் நீங்க கிளம்புங்க….நான் பார்த்துக்குறேன்…”என்று சொன்னதையே மீண்டும் கூறிக் கொண்டிருக்க,
“இங்க பாரு எனக்கு உன்கூட பேசக்கூட தெம்பில்லை….வேலை முடிஞ்சி வந்துட்டு இருந்தேன் உன் போன் வரவும் அப்படியே வந்துட்டேன்….ரொம்ப பசி சோ ப்ளீஸ்…நான் போயிட்டு வரேன் நீ ப்ரெஷாகி இரு….”என்றுகூறிவிட்டு செல்ல,அவன் பசியுடன் வந்துள்ளான் என்ற வார்த்தையே அமிர்தாவை அமைதியாக்க போதுமானதாக இருந்தது.
அமிர்தா முகம் கழவி வரவும் சிவா சாப்பாட்டு கவருடன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
“வந்துட்டியா….வா ரொம்ப பசி….”என்று வேகமாக பைகளை பிரிக்க,அவனின் கைகளை தடுத்தவள்,
“நீங்க முதல்ல கை கழுவுங்க….”என்று கூற,
“ம்ம்….மறந்துட்டேன்….இரு வரேன்….”என்றுவிட்டு எழ,அமிர்தா இருவருக்குமான உணவுகளை பிரித்து வைத்துக் கொண்டிருக்க அவளின் பேசி இசைத்தது.யார் என்று பார்க்க பாரதி தான் அழைத்திருந்தாள்.இவள் அழைப்பை ஏற்கவும்,
“ஏய் பாப்பா….என்னாச்சுடீ….யாருடீ அவன்…”என்று பதட்டத்துடன் ஒலிக்க அமிர்தா பதிலளிக்கும் முன் கீதாவும் அழைப்பில் இணைய,
“யாருடீ அந்த பொறுக்கி…..நீ சும்மாவா வந்த ஓங்கி நாலு மிதிக்கிறத விட்டுட்டு அழுதுட்டு வந்துருக்க….உன்னை தான்டீ சாத்தனும்….”என்று எடுத்தவுடனே கீதா பொரிந்து தள்ள,
“என்னடீ நாங்க கேட்டுட்டு இருக்கோம்….நீ என்னவோ இடிச்ச பிள்ளையார் கணக்கா உட்கார்ந்திருக்க…..”என்று இருவரும் சேர்ந்தே பொறிந்து தள்ளினர்.
“இப்படி ஒரே நேரத்துல கேட்டா எப்படி சொல்லுவா….அவளே பயந்து போய் இருக்கா….”என்று கூறியபடி அவளிடம் இருந்து பேசியை வாங்க,அமிர்தாவிற்கு தான் பதறியது.அவர்களுக்கு சிவா இங்கு தான் இருக்கிறான் என்று தெரியாதே தெரிந்தால் அய்யோ என்று பயந்து பேசியை கொடுக்க மறுக்க,
“ஏய் மக்கு பாப்பா….நான் அவங்க கிட்ட முன்னாடியே பேசிட்டேன்….அவங்களுக்கு எல்லாம் தெரியும்….போனை கொடு….”என்று அவளின் தலையில் தட்டி போனை வாங்கியவன்,
“நான் இங்க தான் இருப்பேன்….நீங்க நாளைக்கு வந்துடுங்க….”என்று கூற,
“ஏன் நீங்க அங்க தங்கனும்…பக்கத்துல தங்கிக்கோங்களேன்….கல்யாணத்துக்கு முன்னாடி தனியா அது சரியா வராது….”என்று கீதா பட்டென்று கூற,பல்லை கடித்த சிவா,
“ஏன்ங்க என்னை பார்த்தா பொறுக்கி மாதிரி இருக்கா….”என்று கேட்க,
“அய்யோ அவ அந்த அர்த்துல சொல்லங்க…அது….கல்யாணத்துக்கு முன்னாடி அதான் யோசிக்கிறா நீங்க தப்பா நினைக்காதீங்க….”என்று பாரதி முந்திக் கொண்டு கூற,சிவாவின் முகத்தில் கோபம் மறைந்து சிரிப்பு நெகிழ்ச்சியும் சேர்ந்தே நிறைந்தது.எத்தனை ஆத்மாத்தமான அன்பு இது இந்த அன்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
“அவரு நினைச்சாலும் எனக்கு கவலை இல்லை….நாளைக்கு ஏதாவது ஒண்ணுனா அவரு பேரா கெடும் பொண்ணுக்கு தான கெட்ட பேரு…”என்று கீதா அடங்குவேனா பாரு என்று தான் நின்றாள்.
“அடியே அவரு எல்லாருகிட்டேயும் பேசிட்டாரு…வீட்டு ஓனருக்கும் தெரியும் அதனால யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க…அதுவும் இல்லாம அந்த பொறுக்கி திரும்பி வந்தா அவ என்ன பண்ணுவா….நீ சும்மா இரு….”என்று பாரதி அதட்டவும் கீதா அமைதியாகிவிட்டாலும் அவள் முகத்தில் தெளிவில்லை.
“நான் ரொம்ப நல்ல பையன்ங்க…அதனால தான் இவ்வளவு நாள் தள்ளியே இருந்தேன் இல்லை இந்த நேரம் உங்க தங்கச்சி என் பொண்டாட்டியா தான் இருந்திருப்பா….”என்ற சிவாவின் பதிலில் அமிர்தா அதிர்ந்து அவனை பார்க்க மற்ற இருவரும் வாயடைத்து தான் பார்த்தனர் அவனை.இருவாரங்களுக்கு முன் தான் சிவா நேராகவே அவர்களை சந்தித்திருந்தான் தனிதனியாக.
பாரதிக்கும்,கீதாவுக்கும் சிவா கூறிய அனைத்தையும் கேட்டு முதலில் ஒன்றுமே ஓடவில்லை என்று தான் கூற வேண்டும்.இருவரில் முதலில் தெளிந்தது கீதா தான்,
“அதெப்படி நாங்க உங்களை நம்புறது….அவளே இப்ப தான் நல்லபடியா இருக்கா நீங்க திரும்ப வந்து திருப்பியும்….ம்ஹம்….வேண்டாம்….”என்று கூறிவிட,சிவாவிற்கு அத்தனை அவமானமாக போயிவிட்டது.தான் அவளை விட்டு சென்றதை தான் கூறுகிறார் என்று புரிந்தது.
“நான் தான் சொன்னேனே அவ படிக்கறதுனால தான் ஒதுங்கி இருந்தேன்னு….ஆனாலும் அவ மேல என் கண்ணு எப்போதும் இருந்தது….நான் அவளை கண்காணிச்சிட்டு தான் இருந்தேன்….”என்று சிவா எடுத்து கூற கீதாவிற்கு மனது ஆறவில்லை அன்று அமிர்தா அழுத அழுகை தான் நியாபகத்திற்கு வந்தது.
“இந்தாடீ அந்த புள்ளையே சொல்லுதுல்ல தானும் முன்னுக்கு வரனும் அந்த பொண்ணும் முன்னுக்கு வரனும் தான் இப்படி பண்ணேன்னு…அப்புறம் என்ன….”என்று கீதாவின் தாய் கூற,அப்போதும் கீதாவின் முகம் தெளியவில்லை.அவள் எதை நினைத்து பயப்படுகிறாள் என்று உணர்ந்த அவளின் தாய் வைதேகி,
“நீ உனக்கு நடந்தையே நினைச்சு அந்த பிள்ளைக்கு வர நல்ல வரனை தடுக்காத…இந்த பையனை பார்த்தா நல்ல பையனா தான் தெரியுது….”என்று கூற,
“எனக்கு நடந்தது நானே தேர்ந்தெடுத்துக்கிட்டது….நான் பண்ண பாவம்….அதுக்கு தான் இன்னமும் அனுபவிக்கிறேன்….”என்று கண்களை கசக்க,வைதேகிக்கும் கண்கள் கலங்கியது.
“ஆனா நான் அமிர்தா தான் என் மனைவினு முடிவு பண்ணி ரொம்ப நாள் ஆகுது….நீங்க என்னை நம்பலாம்….”என்றுவிட்டான்.அதை கேட்ட பிறகு தான் கீதா சம்மதித்தாள்.அதே போல பாரதியும் முதலில் தயங்க,
“ரதி….இவரு இல்லனா அமிர்தா வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்குமா….அதை சொல்லு முதல்ல….”என்று சரவணன் கேட்க,பாரதியிடம் பதில் இல்லை கண்டிப்பாக மாட்டாள் அந்தளவிற்கு அவளின் மனதில் இடம் பிடித்தவன் சிவா.
“இல்லங்க…மாட்டா….”
“அப்ப விடு அதான் தம்பி சொல்லுதுல்ல….நாம பேசுவோம்….”என்று கூறிவிட பாரதியும் சரி என்றுவிட்டாள்.ஆக அனைவரையும் கரைத்துவிட்டான் தனக்கு சாதகமாக மாற்றிவிட்டான் என்று அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள் அமிர்தா.
“என்ன முறைக்கிற….சாப்பிடு….”என்று கூற தன் நிகழ்வுக்கு வந்தவள்,அவனை முறைத்துக் கொண்டே சாப்பிட,
“ரொம்ப ஆசையா பார்க்காத….எனக்கு என்னவோ போல இருக்கு….”என்று அவன் கூறியவுடன் வேகமாக குனிந்தவள் அதன் பின் அவனின் முகத்தை பார்க்கவேயில்லை.
அடுத்த நாள் காலை அமிர்தாவை சிவா தான் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுவிட்டு வந்தான்.பாரதியும்,கீதாவும் மாலை வருவதாக இருந்தனர்.சிவா அமிர்தாவை விட்டு தானும் அலுவலகம் சென்றுவிட்டான்.மாலை அதே போல அவனே வந்து தான் அழைத்து செல்ல வந்திருந்தான்.
“ஏறு….அவங்க எல்லாரும் வந்துட்டாங்க….”என்றவன் அவள் ஏறி அமரவும் வண்டியை எடுக்க சரியாக அவர்களின் தெரு முனை திரும்பும் முன் வண்டியை நிறுத்தியவன்,
“அமிர்தா இறங்கி போ….”என்று கூற,அமிர்தாவிற்கு நடுக்கமாக இருந்தது.அவள் தயங்கி நிற்க,
“நான் இருக்கேன்ல போ…..”என்று கூற தலையாட்டி சென்றாள்.அவள் நினைத்தது போல் தெருமுனையில் வண்டியுடன் நின்றிருந்தான் கவின்.அமிர்தாவை பார்த்தவுடன் அவளிடம் நெருங்க அவன் நெருங்கும் முன் வண்டியை இருவருக்கும் இடையில் நிறுத்தியிருந்தான் சிவா.
“என்ன வேணும் உனக்கு????”என்று நேரிடையாகவே கவினிடம் அவன் வினவ,முதலில் யார் இவன் என்று நினைக்க இப்போது அவன் கேட்ட விதத்தில் அவன் அமிர்தாவிற்கு வேண்டப்பட்டவன் என்று.கவின் அமிர்தாவை பார்த்து,
“என்ன எனக்கு பயந்து ஆள் கூட்டிட்டு வந்திருக்கியா….”என்று அவட்சியமாகவே கேட்க,வண்டியில் இருந்து வேகமாக இறங்கிவிட்டான் சிவா.ஏற்கனவே சிவாவின் தோரணையிலேயே சற்று பயந்து தான் போயிருந்தான் கவின் இருந்தும் தைரியத்தை வரவழைத்து தான் அமிர்தாவை நெருங்க நினைத்தான்.ஆனால் சிவா வண்டியை விட்டு வேகமாக இறங்கவும்,
“சார் நான் அந்த பொண்ணை விரும்புறேன்…அதை பத்தி பேசத்தான் வந்தேன்….”என்று கூறிக் கொண்டே பின்னுக்கு செல்ல,
“சிவா வேணாம் விடுங்க….”என்று அமிர்தா அவனை பிடித்துக் கொண்டாள் எங்கே அவன் அடிதடி என்று பிரச்சனை ஆகி விடுமோ என்ற பயம்.
“கையை எடூ…..”என்று கோபத்துடன் கூற அமிர்தாவின் கைகள் தன் போல் இறங்க,கவினிடம் நெருங்கி அவன் தோள்களில் தன் கையை போட்டு,
“நீ காதலிச்சது தப்பில்லடா….ஆனா அவளும் உன்னை விரும்புறாளானு யோசிக்கனும்….அதைவிட்டுட்டு இப்படி வற்புறுத்தி காதலை வாங்கக் கூடாது….அப்புறம் ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாரு இன்னும் இரண்டு வாரத்துல எங்களுக்கு கல்யாணம்….இப்ப கிளம்பு கல்யாணத்துக்கு வா…என்ன கிளம்பு…..”என்று ஒவ்வொரு வார்த்தையும் பேசும் போதும் அவனின் தோள்பட்டையை அழுத்தம் கொடுத்தே உடைத்திருக்க,அதிலேயே கவின் பயந்துவிட்டான்.வெளியில் பார்ப்பவர்களுக்கு இருவரும் பேசிக் கொள்கிறார்கள் என்று தான் தோணும்.
“அப்புறம் போலீஸ்க்கு போனாலும் எனக்கு பயமில்லைனு சொன்னியாம்…..வரியா இங்க பக்கத்துல தான் இருக்கு ஸ்டேஷன் போயிட்டு வருவோம்….வா….”என்று அவனின் சட்டை காலரை பிடித்து இழுக்க,
“இல்ல சார்….தெரியாம பேசிட்டேன் விட்டுடுங்க சார்….”என்றவன் குரலே அழுகையாக மாறியிருந்தது.
“அட வாப்பா….நீ நான் தைரியசாலி ஆச்சே….எதுக்கும் பயப்படாதவன் வா….”என்று பிடித்து இழுக்க,
“இல்ல சார்….நான் அவங்களை உண்மையிலேயே விரும்புனேன்….அதனால தான் அப்படி பேசினேன்…தெரியாம பேசிட்டேன் சார் விட்டுடுங்க…..”என்று பயந்து நடுங்க தொடங்கிவிட்டான்.அவனிற்கு அமிர்தாவை பற்றிய விஷயங்கள் வாணி மேடம் தன் அன்னையிடம் பேச்சுவாக்கில் கூறியிருக்க அவளிற்கு என்று யாருமில்லை என்று தெரிந்து அதை வைத்து சற்று பயமுறுத்தினால் பயந்து தன் காதலை ஏற்றுக் கொள்வாள் என்று எண்ணியிருந்தான்.ஆனால் இன்று வில்லனை போல சிவா வந்து நிற்கவும் பயந்துவிட்டான்.
“இனி இங்க வரக்கூடாது…..வந்த….”என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்கை செய்ய அவன் விட்டதுமே அவனின் வண்டியை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.அதன் பின் அமிர்தா தடுக்கக் கூட முடியாதபடி அவளின் கல்யாண ஏற்பாடு நடக்க தொடங்கியது அதுவும் சிவா கூறியது போல இரு வாரங்களில் திருமணம் என்று தேதியும் கூறிக்கபட்டது.
error: Content is protected !!