Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

இதயத்தின் ஓசை கேட்குதோ 10

அனைவரும் தூங்க சென்று இருக்க அர்ஜுனன் அறையில் சுபா அவனிடம் “மாமா உங்கிட்ட ஒன்னு கேட்கனும்… ஆனா திட்ட கூடாது…” என்று முன்னெச்சரிக்கையாகவே ஆரம்பித்தாள்..

“அது நீ சொல்றது பொறுத்து அம்மு.. சொல்லு என்ன விஷயம்???” என்று தூங்க ஆயத்தமாகியவாரே கேட்டான் அர்ஜுனன்…



Advertisement

“அது மாமா எனக்கு எனக்கு…” என்று திக்கியவாரே அவனிடம் எதோ கூற முயற்சித்தாள்…

“சொல்லு அம்மு என்ன பயம் தையிரமா சொல்லு” என்று படுத்தவாக்கிலே கேட்டான் அவன்…

“அது மாமா பரதம் ஆடனும்னு போல இருக்கு.. ஹெவி ஸ்டெப் போடா மாட்டேன்… ஈஸி ஸ்டெப் மட்டும் போட்டு கொஞ்ச நேரம் ஆடுறேன் மாமா… ப்ளீஸ் ப்ளீஸ் அஞ்சு மாசம் ஆகிடுச்சு மாமா… ஒரு கால் மணி நேரம் ஆடுறேனே ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தாள் சுபத்திரா…

Advertisement

“சுபா” என்று கோவமாக அழைத்தான்… அவளோ குனிந்த தலையை நிமிராமல் அமர்ந்து இருந்தாள்…

Advertisement

“நைட் டைம்ல என்ன இது சுபா ஒழுங்கா தூங்கு… காலைல பேசிக்கலாம்…” என்று அதட்டி தூங்க வைக்க முயன்றான்..

அவளோ “போடா நான் ஆடனும்” என்று கூறி அறையில் இருக்கும் ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்…

இவளை என்று பல்லை கடித்து கொண்டு “இப்பயே கை வலிக்குது கால் வலிக்குதுனு சொல்லிட்டு இருக்க… இப்ப ஆடனும்னு சொல்லிட்டு இருக்க” என்று கோவமாகவே கேட்டான்…

Advertisement

“ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடுறேன் அதுவும் சிம்பிள் ஸ்டெப்ஸ் தான் ஆடுவேன்… ரொம்ப ஆசையா இருக்கு” என்று கெஞ்சிக் கேட்டாள்…

“என்னமோ பண்ணு” என்று கூறிவிட்டு தூங்கிவிட்டான்…

இவளோ மேக்ஸி தான் அணிந்து இருந்தாள்… அதனால் போய் சுடிதார் அணிந்து கொண்டு அதனுடைய ஷாலை இடுப்பில கட்டிக்கொண்டு பாட்டை ஒலிக்க விட்டாள்…

கண்ணுக்குள்
பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே
வா தித்தித்த தை ஜாதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி
உனைப்பிடிக்க நான்
மன்றாடிட இடப்புறம்
விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா
விசமா கண்ணனே வாடா வா

அழகாக முகத்தில் அபிநயங்கள் மின்ன அவளின் கண்ணில் தொலைந்து போய் விட்டான் அர்ஜுனன்… அவனை பார்த்து விட்டு சிரித்து கொண்டே

என் கண்ணனே
வாடா வா விஷம கண்ணனே
வாடா வா

என்று முழு பாட்டையும் ஆடி முடிக்கும் அவளின் விஷம கண்ணனும் வந்து அவளை அள்ளிக் கொண்டான்…

ஆரவ் எழுந்துவிட்டானா என பார்த்துவிட்டு அந்த அறையில் உள்ள மற்றொரு குட்டி அறைக்கு அழைத்து சென்றான்.. அந்த அறை முழுவதும் சுபா நாட்டியம் ஆடிய போட்டோக்கள் தான் இடம் பெற்று இருந்தது…

அவளின் ஒவ்வொரு அபிநயங்களும் அழகாக படமாக்க பட்டு இருந்தது…. அந்த அறையில் அவளை இறக்கி விட்டு அவள் எங்கும் செல்லாதவாறு அணைத்து பிடித்துக்கொண்டு “எத்தனை டா போடுது இந்த வாய்… போடுமா போடுமா” எனக் கேட்டுக்கொண்டே அவனின் பாணியில் தண்டனை குடுத்தான்..

அவனின் தண்டனையில் பாகாய் கரைந்து அவனின் கையில் துவந்து விழுந்தாள் சுபத்திரா…

அவளை மீண்டும் தூக்கி கொண்டு உடை மாற்றும் அறையில் விட்டு அவள் காத்து அருகினில் சென்று காதின் மடலை கடித்து அங்கு முத்தமிட்டுவிட்டு “அம்மு டிரஸ் மாத்திட்டு வா… நான் வெளியே போறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்…

அவளோ அவனின் ஸ்பரிசம் மேனியாய் தீண்டுவது போல் இருக்க சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு தான் இரவாடையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்…

அங்கு அவளின் மாமனோ அவர்களின் மகனை சுவற்றின் ஓரம் படுக்க வைத்துவிட்டு அவன் நடுவில் படுத்து இருந்தான்….

இன்னும் வெக்கத்தின் சாயல் அவள் முகத்தில் மிஞ்சியிருக்க மெதுவாக நடந்து வந்து அவனின் முகத்தை பார்க்காமல் அவனின் மார்பில் தஞ்சம் புகுந்து தூங்க ஆரம்பித்தாள்… சிறிது நேரத்திற்கு பிறகு அவளுக்கு காலில் எதோ அழுத்துவது போல் இருக்க கண் முழித்து என்னவென்று பார்த்தாள்… அவளின் மாமன் தான் காலை பிடித்துவிட்டு கொண்டு இருந்தான்…

அவனிடம் இருந்து காலை இழுத்து கொண்டு “மாமா என்ன பண்ணிட்டு இருக்கீங்க வாங்க கால் வலிக்கல… வா மாமா” என்று தன் கையை அவனை நோக்கி விரித்தாள்… அவன் மீண்டும் அவள் காலினை இழுத்து அவன் கையில் இருந்த எண்ணையை அவளின் காலில் பூசிவிட்டு கொஞ்ச நேரம் மசாஜ் செய்த பின் கை கழுவிவிட்டு தான் மீண்டும் வந்து உறங்கினான்…

அதற்குள் மீண்டும் அவள் ஆழ்ந்த நித்திரைக்குள் சென்றுவிட்டாள்… சுபாவிற்கும் ஆரவிற்கும் நெற்றியில் முத்தமிட்டு விட்டு இருவருக்கும் நடுவில் படுத்து இருவரையும் தன்னருகில் தூங்க வைத்து அவனும் தூங்கி விட்டான்…

இங்கு தோப்பு வீட்டிற்கு வந்த கர்ணனும் சசியும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்… அப்போது கருப்பையா இருவருக்கும் உணவு கொண்டு வந்து கொடுத்தார்… அவரிடம் வாங்கிக்கொண்டு மீண்டும் உள்ளே வந்து சாப்பிட்டு விட்டு கர்ணன் தூங்க போவதாய் சொல்லிவிட்டு அறையினுள் நுழைய முற்படும் போது “டேய் கர்ணா என்ன இங்க தூங்க போற… வீட்டுக்கு போய் தூங்கு” என்று அனுப்ப முயன்றான்..

“என்ன என்னை அனுப்பிவிட்டு விடிய விடிய தூங்காம இருக்கலாம்னு நினைக்குறியா ஒழுங்கா கதவை மூடிட்டு வா தூங்கலாம்” என்று கூறி பெரிய அறைக்குள் நுழைந்தான் கர்ணன்..

அவனின் பதிலில் சிரித்துவிட்டு வாசற்கதவை மூடிவிட்டு அறையினுள் சென்றான் சசி… முன்பெல்லாம் சசியும் கர்ணனும் ஒன்றாக தான் உறங்குவர்… ஆனால் கல்யாணத்திற்கு பின் எல்லாம் மாறிவிட்டது…

கர்ணனோ அண்ணனுடன் மீண்டும் உறங்குகிறோம் என சந்தோசப்பட்டு கொண்டே படுக்கைவிரிப்பை சுத்தம் செய்து கொண்டு இருந்தான்… சசி உள்ளே வந்தவுடன் “நாம ரெண்டு பேரும் சேர்ந்து தூங்கி ரொம்ப நாள் ஆச்சுல… வா தூங்கலாம்” என்று கூறி கட்டிலில் பொத்தென்று விழுந்தான்….

கர்ணன் அவ்வாறு கூறியவுடன் வேதனை அடைந்த சசி உடனே தன் தம்பியுடன் சேர்ந்து அவனும் கட்டிலில் விழுந்து “உங்கள ரொம்ப கஷ்டப்படுத்தினேன்ல கர்ணா… அவ ஆயிரம் சொல்லுவா… அவ பேச்சை கேட்டு இருக்க கூடாதுல… ஆனா நான் கண்ணை மூடிட்டு அவ பேச்சை கேட்டு எவ்வளவு பிரச்சனை” என்று புலம்பிக்கொண்டு இருந்தான்…

“டேய் அண்ணப்பையா தூங்கு டா காலைல பேசிக்கலாம்…” என்று அவனின்மேல் காலை போட்டு கொண்டு தூங்கிவிட்டான் கர்ணன்…இவனும் காலையில் இருந்து நடந்த விஷயத்தை அசைபோட்டு கொண்டே தூங்கிவிட்டான்…

அர்ஜுனன் வீட்டில் இருந்து பட்டு பாட்டிக்கு மட்டும் இரவு உணவு கொண்டு செல்லப்பட்டது ராஜம்மாவால்… நந்தினி தான் அவரிடம் பாட்டியிற்கு மட்டும் குடுத்துவிட்டாள்…

வேண்டாம் என்று சொன்ன பாட்டியை வற்புறுத்தி சாப்பிட வைத்துவிட்டு தான் ராஜம்மா தன் வீட்டிற்கு புறப்பட்டார்…

ராஜம்மாவின் சத்தத்தில் உணவு கொண்டு வந்துள்ளார் என தெரிந்து கொண்ட கிரிஜா அவர் சென்றவுடன் வெளியே வந்து பார்த்து அங்கு ஒன்னும் இல்லாமல் போகவே அவரை திட்டிக்கொண்டே சமையல் அறைக்குள் சென்று தனக்கு தெரிந்தவற்றை சமைத்து சாப்பிட்டு விட்டு உள்ளே சென்றுவிட்டார்… பாலா அறையில் இருந்து வெளியே வரவே இல்லை…

அடுத்த நாள் காலை அனைவருக்கும் தாமதமாக தன விடிந்தது ஒருவனை தவிர… அர்ஜுனன் எப்போதும் போல் ஐந்து மணிக்கு எழுந்து வயலுக்கு சென்றுவிட்டு ஒன்பது மணிக்கு தான் வீடு வந்தான்..

அவன் வரும்போது பாசமலர்கள் மூவரை தவிர குழந்தைகள் உட்பட அனைவரும் எழுந்துவிட்டனர்.. ஆரவும் அவன் எழும்போது இருவரும் இல்லையென்றாலோ சுபா தூங்கிக்கொண்டு இருந்தாலோ கீழே ராஜம்மாவிடம் சென்றுவிடுவான்…

அவர் அவனுக்கு முகம் கழுவிவிட்டு பால் தருவார்… பிறகு சுபா எழவில்லை என்றால் அவரே அவனை குளிப்பாட்டிவிட்டு டிரஸ் போட்டு அவனை தயார் செய்வார்….. அவனும் குளித்துமுடித்து முதலில் வரும் இடம் பூஜை அறைதான்…

அவனுக்கு ஒருவயதில் இருந்தே பட்டு பாட்டியும் சுபாவும் ஸ்லோகம் சொல்லிக் கொடுத்து இருந்தனர்… அவனின் இரண்டு வயதில் இருந்து அவனும் தினமும் குளித்துவிட்டு பூஜை அறையில் இருந்து வந்து சுலோகம் சொல்லிவிட்டு அவனின் பிஞ்சு கரங்களில் எடுத்து விபூதியை பூசிக்கொண்டு அவனுக்கு பிடித்த லிட்டில் சிங்கம் பார்ப்பான்…

தற்பொழுதும் அவனின் மகன் லிட்டில் சிங்கம் தான் பார்த்து கொண்டு இருந்தான்… இவன் வந்ததை பார்த்ததும் அவனிடம் ஓடினான் லிட்டில் சிங்கம்…. மகனை சிறிதுநேரம் கொஞ்சிவிட்டு மேலேறினான்…

இன்னமும் அவனின் மனைவி உறங்கிக்கொண்டு தான் இருந்தாள்… இவன் சென்று குளித்துவிட்டு வந்து தான் அவளை எழுப்பினான்… “அம்மு அம்மு எந்திரி… பத்து மணி ஆக போகுது எந்திரி” என்று எழுப்பிக்கொண்டு இருந்தான்…

அவளும் கண்ணை கசக்கி கொண்டு எழுந்து அவனை அணைக்க வர அவனோ விலகி “அழுக்கு புள்ள ஒழுங்கா போய் குளிச்சிட்டு வா” என்று கூறினான்..

அவளோ “போயா… ஆசையா கட்டிக்க வந்தா குளிக்க சொல்றான்…” என்று திட்டிக்கொண்டே குளியலறை புகுந்தாள்…

அடுத்து கால் மணிநேரத்தில் குளியலறையில் இருந்து அவனை அழைத்தாள்… “மாமா மாமா” என்று அழைத்தாள்…

அவனோ உல்லாசமாக ஹ்ம்காரம் கொட்டினான்…

“மாமா அப்படியே ட்ரெஸ் எடுத்து குடு…. மறந்துட்டேன்” பாவமாக கூறினாள்..

அவனோ “அம்மு நான் மட்டும் தானு இருக்கேன்…. அப்படியே வா” என்று கூறினான்

“மாமா விளையாடாத பசிக்குது.. டிரஸ் குடு” என்று சிணுங்கி கொண்டே கூறினாள்…

அவனோ அவளின் சிணுங்கல் பேச்சில் மீண்டும் உல்லாசமாகி முடியவே முடியாது “அம்மு வந்தா போகலாம்… ” என்றான் சீண்டும் குரலில்…

அவனின் குரலில் வித்தியாசம் கண்டு இவன் வராமல் விடமாட்டான் என அறிந்து பெரிய துண்டை எடுத்து கட்டிக்கொண்டே வெக்கத்தில் கன்னம் சிவக்க வெளியே வந்தாள் சுபத்திரா…

அவனின் பார்வையில் உடம்பு முழுக்க சிவந்து போய்விட வேகமாக உடையை எடுத்து கொண்டு உடைமாற்றும் அறைக்கு சென்றுவிட்டாள்… அவளுக்கோ அவனின் பார்வை இன்னமும் தொடர்வது போல் இருந்தது… உடையை அணிந்து கொண்டு வெளியே வரும்போது அவன் அறையில் இல்லை…

இவளும் ரெடி ஆகிவிட்ட பூஜை அறை சென்று சாமி கும்பிட்டுவிட்டு டைனிங் டேபிள் சென்றாள்… அங்கு அனைவரும் அவளுக்காக தான் காத்துகொண்டு இருந்தனர்… குழந்தைகளுக்கு நந்தினியும் ஜனனியும் சேர்ந்து ஊட்டிவிட்டு விட்டனர்….

“நீங்க சாப்பிட வேண்டியது தானு எனக்காக ஏன் வெயிட் பண்றிங்க” என்று கேட்டவாறே உட்கார்ந்தாள்..

அவளுக்கு பரிமாறும் முன் வாணன் அதை தடுத்து அவனே ஊட்டிவிட்டான்… அவளும் அண்ணனின் கையால் ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள்…

என் வீட்டு தலைவி
இந்த ஜில்லாவோட அழகி
அண்ணன்காரன் அன்றாடம் நனையும்
அன்பான அருவி

என் தங்கை மை தங்கை
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!