Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஊர் பேசும் ஓவிய சிலையே

ஊர் பேசும் ஓவிய சிலையே – 16

“வாங்க சுந்தர் உக்காருங்க” என்றவன் அவருக்கு எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்தான், அவனுக்கு எதிர்புறம் தயக்கத்தோடு அமர்ந்தவர் “சொல்லுங்க தம்பி என்ன விஷயம்” என்றவருக்கு அவனை நேர்கொண்டு பார்க்கமுடியவில்லை கூர் வாளாக அவரைத் துளைத்தது அவன் விழிகள்.

 

“நீங்கதான் சொல்லணும் என்ன நடக்குது உங்க முதலாளி மிஸ்டர் ஓஸ்கரை  சுற்றி” என்றான்.



Advertisement

 

“எதோ அவசர வேலையா ஸ்பெய்ன் போயிருக்கார் எனக்கு வேற எதுவும் தெரியாது தம்பி,  அவர் முதலாளி நான் அவர்கிட்ட வேலை செய்றேன் என்கிட்டே எல்லா விஷயத்தையும் சொல்வாரா” என்றவரை பார்த்து மெல்ல சிரித்தான்.

Advertisement

 

Advertisement

அடுத்த நொடி அவரின் அலைபேசி அடித்தது எடுத்துப்பார்க்க ஏதோ புதிய எண் “பேசுங்க” என்றான் சேனா.

 

Advertisement

அழைப்பை அவர் ஏற்றதும் அவர் மனைவியின் குரல் கேட்டது அந்தப்பக்கம் “என்னங்க ஏதோ ஆபிஸ் பணத்தை கையாடல் பண்ண்ணிடீங்கன்னு போலீஸ் வந்து நிக்குது வீட்டில, எடுத்த பணத்தை எங்க வெச்சுருக்கீங்கன்னு கேக்குறாங்க என்னங்க இதெல்லாம்”  என்றார் அவர்.

 

அவன் விழிகள் அவரையே துளைத்துக்கொண்டிருந்தது  அவருடைய மனைவியின் கையிலிருந்து போனை வாங்கிய சக்தி “என்ன பி. எ சார்…  கேக்குற கேள்விக்கு டான் டான்னு உண்மையை மட்டும் சொன்னா வந்தமாதிரியே நாங்க கெளம்பி போயிடுவோம் இல்லனா உங்க வீட்டில இருந்து பணத்தையும் எடுத்துக்கிட்டு உங்களையும் கூட்டிட்டு தான் போவோம் எப்படி வசதி” என்க.

 

கைகள் நடுங்க சேனாவை பார்த்தவர் “சொல்லிடுறேன் என்ன கேட்டாலும் சொல்லறேன் ப்ளீஸ் அவங்கள போகச் சொல்லுங்க” என்க.

 

“எல்லா கேள்விக்கும் பதிலைச் சொல்லிடீங்கன்னா நீங்களும் போகலாம் அவங்களும் போய்டுவாங்க” என்றான்.

 

அலைபேசியை  அனைத்து  பாக்கெட்டில் வைத்தவருக்கு ‘இவனுக்கு எப்படி போலீஸ் உதவி செய்கிறது’ என்ற எண்ணமே.

 

“நல்லா உக்காருங்க சுந்தர் கொஞ்சம் நேரமாகலாம்” என்றவன் நன்றாகச் சாய்ந்தமர்ந்தவன் “ஓஸ்கர்  எதுக்காக இப்போ ஸ்பெய்ன் போயிருக்காரு”  என்க.

 

“அங்க கொஞ்சம் பிரச்சனை அதுக்காகத்தான் போயிருக்கார்”  என்றார் சுந்தர் பட்டும் படாமலும்,  அவர் முன்னில் சில காகிதங்களை எடுத்துப் போட்டான் சேனா.

 

 “உங்க முதலாளியோட போன் பில்… ஸ்பெயின்ல இருக்குற இந்த நம்பருக்கு தினமும் பேசுறார்,  இன்னைக்கு நேத்து இல்ல ரொம்ப வருஷமா யார் அது  இவ்ளோ முக்கியமானவங்க யார் இருக்காங்க அவருக்கு,  எதுக்காக மயூரியை ஸ்பெயின்ல இருக்குற யாரோ ஒருத்தனுக்கு கல்யாணம் செஞ்சு குடுத்துட்டு இவரும் அங்கேயே போய்ச் செட்டில் ஆகணும் நினைச்சார்” என்றவன் அவரை ஆழுந்து பார்க்க.

 

சுந்தரின் முகம் வெளுத்தது இதெல்லாம் இவன் எப்படி  எடுத்தான்!  நான் எப்படி சொல்வது முதலாளிக்குத் தெரிஞ்சா என்னாவும் என்ற பயமும் அப்பட்டமாகத் தெரிந்தது அவர் முகத்தில்.

 

“நானே எடுத்துக்கொடுக்கவா”  என்றவன் “மிராண்டா?” என்றான்,  சுந்தர் அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்க்க  “மிராண்டா உயிரோட இருக்காங்க சரியா அதுவும் அவங்க ஸ்பெயின்ல இருக்காங்க அப்படித்தானே” என்க.

 

“தம்பி அது…”

 

“பச்… இங்கப்பாருங்க எனக்கு நேரமில்லை இப்போ சொல்றீங்களா இல்ல கெளம்புறீங்களா” என்றவனை பார்த்தவர் “சொல்றேன் எல்லாத்தயும் சொல்லிடுறேன்”  என்றவர் தனக்கு தெரிந்த ரகசியத்தின் முடிச்சுகளை அவிழ்த்தார்.

 

“பொண்ணு காணாமப்போன அப்புறம் சார் ரொம்ப உடைஞ்சு போய்ட்டார் மிராண்டாவ தேடி அவ்ளோ கஷ்டப்பட்டோம் கிடைக்கல, கடைசியா உங்க அப்பா அம்மா மூலமா அவங்க குருவினையப்பள்ளில இருக்குறத தெரிஞ்சு அங்க போய்க் கூட்டிட்டு வந்தாங்க”.

 

“இங்க டிரீட்மென்ட நடந்துட்டு இருக்கும்போதே மிராண்டாவுக்கு கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் வந்துடுச்சு ஆனா வெளில சொல்லல, முக்கியமா மயூரியை பார்க்கவோ அவளைப் பொண்ணா ஏத்துக்கவோ மிராண்டா தயாராயில்ல, இங்க இருக்க பிடிக்கலன்னு ஒரே பிரச்சனை அதனாலதான் லண்டன் கொண்டுபோனாங்க அங்க ஜெஸ்டின் வீட்ல கொஞ்ச மாசம் தங்கியிருந்தாங்க முழுசா ஞாபகம் வந்ததும் எல்லா உண்மையும் மிராண்டா சொல்லிடுச்சு”.

 

“ஜெஸ்டினோட அப்பா அம்மா மகனை ரொம்ப திட்டியிருக்காங்க அவளுக்குப் பிடிக்கலைன்னா விட்டுட்டு வந்திருக்கவேண்டியதுதானே வேற பொண்ணா இல்ல எதுக்காக இப்படி பன்னன்னு, அதோட மிராண்டா செஞ்ச தப்பையும் சொல்லியிருக்காங்க”.

ரெண்டு பேர்கிட்டயும் சம்மதம் கேட்டுதானே கல்யாணம் முடிவு பண்ணினோம் அப்படியே இடையில பிடிக்காம போனாலும் அதை அப்போவே ஜெஸ்டின் கிட்ட சொல்லியிருக்கணும், அவன் மனசுல ஆசையை வளத்துட்டு உன் இஷ்டத்துக்கு நீ ஊர் சுத்துவியான்னு திட்டியிருக்காங்க”.

 

“சாருக்கு ரொம்ப அவமானப்போச்சு பொண்ணு பண்ண வேலையில அவரால பெருசா ஒன்னும் செய்யமுடியால, ஆனாலும் மகளுக்கு நடந்தது அநியாயம் தானே அதைச் சொல்லி ஜெஸ்டினை அடிச்சுட்டாரு அப்படி இப்படினு ரொம்ப பெரிய பிரச்சனை”.

 

“ஜெஸ்டினோட அப்பா அம்மாவும் ரொம்ப வருத்தப்பட்டாங்க ஏதோ நடந்தது நடந்துடுச்சு இவங்களுக்கு தான கல்யாணம் பேசி வெச்சிருந்தாங்க அதனால எல்லாத்தயும் மறந்துட்டு.

 

ஒண்ணா வாழச் சொல்லியிருக்காங்க, அதோட மயூரியும் அவங்க பொண்ணுதான அவளையும் அங்கேயே அவங்களோட வெச்சுக்கலாமே இப்படி எல்லாத்தயும் எடுத்துச் சொல்லியும் மிராண்டா ஒத்துக்கல ஜெஸ்டின்கூட வாழ முடியாதுனு தீர்மானமா சொல்லிடுச்சு, ஜெஸ்டின்னும் மன்னிப்பு கேட்டுப் பேசிப்பார்த்தும் ஒத்துக்கல அதுக்குமேல ஜெஸ்டின் வீட்டில தங்காம வெளில தங்கிக்கிட்டாங்க”.

 

“எந்த முடிவும் எடுக்காம சார் திரும்பி வந்துட்டார் இந்தியாவுக்கும் வரமாட்டேன் ஜெஸ்டின் கூடவும் வாழமாட்டேன்னு மிராண்டாவும் பிடிவாதமா இருக்கவும் என்ன பண்ணணு தெரில அவங்களுக்கும், ஓஸ்கர் சார் மிராண்டாகிட்டா முடிவா சொல்லிட்டாரு ஒன்னு ஊருக்கு வந்து மயூரியை பாத்துகிட்டு இங்கேயே இரு இல்லையா கல்யாணம் பண்ணிக்கோன்னு அப்படி அவர் சொல்லிட்டுவந்து எட்டு மாசத்துக்கு அப்புறம்தான் மிராண்டா வேற கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்கிச்சு”.

 

“அவங்க அம்மா அங்கேயே இருந்தாங்களே பேசிப் பேசிப் பொண்ணு மனசை கரைச்சுட்டாங்க அவங்களுக்கும் மயூரியை ஏத்துக்க விருப்பமில்லை கட்டாயத்துல வந்த  பிள்ளை வேண்டாம்னு முடிவா நின்னாங்க, ஸ்பெயின்ல இருந்த நண்பர் ஒருதர் மூலமா வந்த வரன்தான் ஜேம்ஸ் ஏற்கனவே கல்யாணம் ஆகி ஆறு வயசுல  ஒரு பெண் குழைந்தையும் இருந்தது, மனைவி பிரிஞ்சு போய்ட்டா  ஜேம்ஸ் மிராண்டா கல்யாணம் நடந்தது”.

 

“இங்க யாருக்கும் இது எதுவும் தெரிய வேண்டாம் மயூரிக்கும் தன்னை பத்தி எதுவும் தெரியக்கூடாதுன்னு மிராண்டா சொல்லிடுச்சு,  புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறேன் பழசு எதுவும் எனக்கு வேணாம் அந்த மிராண்டா செத்து போய்ட்டா அப்படியே அங்க எல்லார்க்கும் சொல்லிடுங்கனு சொல்லிடுச்சு அதனாலதான் அப்படியொரு பொய்யைச் சொல்லி எல்லாரையும் நம்ப வெச்சாங்க, இப்போ ஜேம்ஸ் மிராண்டாவுக்கு ஏழு வயசுல ஒரு பையனும் இருக்கான்” என்றார் அவர்.

 

எதிரில் அமர்ந்திருந்தவனின் மனநிலை என்ன என்று தெரியவில்லை கை விரல்களைப் பிரிப்பதும் கோர்ப்பதுமாக இருந்தான் முகம் இறுகி கிடந்தது, ஒருநொடி செய்வதை நிறுத்திச் சுந்தரை நிமிர்ந்து பார்க்கச் சோபாவின் உள்ளே தன்னை சுருக்கிக்கொண்டு அமர்ந்தவர் மீண்டும் சொல்லத்தொடங்கினார்.

 

“இப்போ எதுக்கு ஸ்பெய்ன் போயிருக்காருன்னா முதல் தாரத்துல ஒரு பொண்ணு இருக்குனு சொன்னேன்ல அந்தப் பொண்ணால கொஞ்சம் பிரச்சனை பேரு கிளாரா ஆரம்பத்துல மிராண்டாக்கூட அன்பாதான் இருந்துச்சு அப்புறமா அந்த ஊர் கலாச்சாரம் பழக்கவழக்கம் வழிமாறிடுச்சு, அதோட மிராண்டா என்ன சொன்னாலும் நீ ஒன்னும் எனக்கு அம்மாயில்ல உன் வேலையைப் பாருன்னு சொல்லிடும்”.

 

“இந்த வயசுலயே தண்ணி போதைன்னு பழக்கம், ஆன் நண்பர்கள் வேற தப்பு நடந்துடுச்சு அபார்ஷன் பண்ணிட்டாங்க கோவத்துல மிராண்டா அடிச்சுட்டா… பிரெண்ட்ஸ் சொன்னதை கேட்டுப் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிடுச்சு கிளாரா, அங்க அப்படிலாம் அடிக்கக்கூடாதே அரெஸ்ட் பண்ணிட்டாங்க மிராண்டாவையும் ஜேம்ஸ்சயும்  வெளில எடுத்தாச்சு அதனானாலதான் சார் அவசரமா அங்க போனாரு கிளாரா புதுசா கெடச்ச பாய் பிரெண்ட்கூட போய்டுச்சு மிராண்டா அங்க இருந்து லண்டனுக்கே போக ஆசைப்படுது போல அது எல்லாத்தயும் பத்தி பேசி முடிவெடுத்துட்டு வருவார்”.

 

“ஜேம்ஸ்க்கு தொழில்ல நஷ்டம் அவரோட பார்ட்னருக்கு நிறைய காசு கொடுக்கவேண்டியது இருக்கு,  மிராண்டாவுக்கு ஏற்கனவே ஒரு பொண்ணு இருக்குனு ஜேம்ஸோட பார்ட்னருக்கு தெரியும் அதோட சார் வருஷத்துல ரெண்டுதடவ பிசினெஸ் டூர்ன்னு பொண்ணை பாக்க போவார் அப்போ மயூரியோட போட்டவை அவங்களும் பாத்திருக்காங்க”.

 

“தன்னோட மகனுக்கு மயூரியை கல்யாணம் செஞ்சுவெச்சா ஜேம்ஸ் கொடுக்கவேண்டிய பணத்தை தள்ளுபடி பண்றதா அந்தப் பார்ட்னர் சொல்லியிருக்காரு, அதோட இங்கேயிருக்குற சொத்து எல்லாத்தயும் வித்துட்டு மருமகனுக்கு மறுபடியும் புது பிசினெஸ் தொடங்கிட்டா மக கூட அங்கேயே இருந்திடலாம்னு தான் மயூரிக்கு அவசரமா கல்யாணம் செய்ய நினைச்சார்” என்று சொல்லி முடித்தார் சுந்தர்.

 

“யார் பொண்டாட்டிக்கு யாருயா மாப்ள பாக்குறீங்க… அவ என்ன பண்டமா பாத்திரமா தூக்கி குடுக்குறதுக்கு மனுஷனா அந்த ஆளு, என்ன பொம்பள அவங்க சுமந்து பெத்த பொண்ணை பாத்துக்க முடியல அநாதை மாதிரி தூக்கி வீசிட்டு போயிட்டு எவனுக்கோ பொறந்ததை மடில வெச்சு தாலாட்டிட்டு இருக்கு” என்றவன் முன்னிலிருந்த பூஜாடியை தூக்கி விசிறி அடிக்க அது சில்லு சில்லாகத் தெறித்து விழுந்தது அறையெங்கும்.

 

 

“போங்க” என்றவன் வேக எட்டுக்களில் மேலேறினான், சுந்தர் சில நொடிகள் அங்கேயே தயங்கி நின்றுவிட்டு அவசரமாக வீட்டைவிட்டு வெளியில் சென்றார், மனைவியை அழைக்கக் கொஞ்சம் நேரத்திற்கு முன்பு வந்தவர்கள் அனைவரும் சென்று விட்டார்கள் என்றார் அவர்.

 

ஓஸ்கரை  அழைக்க அவருக்கு அழைப்பு செல்லவில்லை தான் செய்வதற்கு ஒன்றுமில்லை அவர் அழைத்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று வேகமாக வீட்டிற்க்கு புறப்பட்டுவிட்டார் சுந்தர்.

 

அறை வாயிலில் சில நொடிகள் நின்றுவிட்டான் மனம் வலித்தது, மலையை எடுத்து மனதோடு கட்டியதைப் போலக் கால்கள் நகர மறுத்தது மெல்ல அறைக்கதவை திறந்து பார்க்க ஒரு குழந்தையைப் போல உடலைச் சுருக்கி  அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள் மயூரி, கதவை அடைத்துவிட்டு அவளை நெருங்கியவன் அவளைப் பார்க்கும் விதமாக அருகில் படுத்துக்கொண்டான்.

 

விரல்கள் மெல்ல அவள் முகத்தை வருடியது ‘இவளை மாதிரி ஒருத்தியை எப்படிடா வேண்டாம்னு சொல்லி விட்டுட்டு போனீங்க  எவ்ளோ ஈஸியா தூக்கி போட்டீங்க’ என்றவனுக்கு சகித்துக்கொள்ளவே முடியவில்லை “நான் இருக்கேன் குட்டிமா உனக்கு வேற யாரும் வேண்டாம் எல்லாரையும் போகசொல்லிடலாம் உன்னை யாருக்கும் நான் குடுக்கமாட்டேண்டி” என்றவன் இதழ்கள் அவள் உச்சியில் அழுத்தமாகப் பதிய உருண்டுநின்ற கண்ணீர்த்துளி அவள் உச்சசியில் விழுந்து சிதறியது.

 

அமைதியின்றி தவித்த மனம் அவள் அருகாமையை வேண்ட அவளைத் தன் அணைப்பில் வைத்துக்கொண்டு இரவெல்லாம் விழித்தேகிடந்தான்.

 

 

ஐந்து நாட்களுக்குப் பிறகு மிக ஆழமான உறக்கம் மயூரிக்கு மெல்ல விழிகளைத் திறந்தவள் முதலில் உணர்ந்தது கதகதப்பை தான்,  இதழ்கள் புன்னகை சூடியது இன்னும் கொஞ்சம் அவனை ஒட்டிக்கொண்டாள்.

 

“ஒய்” என்றவன் குரலில் “ஹ்ம்ம்” என்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க “இப்படியே என்னோட இருந்துடுறியா” என்றான்.

 

 “நிஜமா!”.

 

 “ நிஜமா” என்றவனின் மார்பில் முகத்தை அழுந்தப் புதைத்தாள்.

 

காலை உணவை இருவரும் ஒன்றாகவே உண்டு முடித்தனர் “கொஞ்சம் உடம்பு சரியாயிடுச்சுன்னு ஏதாவது செஞ்சிட்டு இருக்காதா பூஜாவை வரசொல்லியிருக்கேன் ரெஸ்ட் எடு,  நான் வீட்டுக்குப் போயிட்டு வரேன்” என்றவனை பார்த்தே நின்றிருந்தாள் அவளை அருகில் இழுத்தவன் “என்ன” என்க.

 

“பாட்டிக்கு உண்மை தெரிஞ்சா…” என்றவளின் இதழ்களைக் கைக்கொண்டு மூடியவன்  “யாருக்கும் சொல்லவேண்டியதில்லை சொல்லப் போறதுமில்லை இது உனக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்சா போதும், எல்லாத்தயும் என்கிட்டே விட்டுடு ரெஸ்ட் எடு நான் போயிட்டு வரேன்” என்றவன் மனதில் ‘மிராண்டா உயிரோடு இருப்பதையும் வேறு குடும்பம் குழந்தை இருப்பதையும் இது அனைத்தும் அவளின் கிராண்ட்பாவுக்கும் தெரியும் என்பதையும் எப்படி அவளிடம் சொல்ல’ என்ற சிந்தனையே.

 

ஓஸ்கர்  வருவதற்குள் இவளைத் தன்னுடன் அழைத்துசென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான், சரியாகப் பூஜாவின் காரும் வாசலில் வந்து நின்றது “இன்னைக்கு மயூரி கூடவே இரு நான் வரக் கொஞ்சம் லேட்டா ஆகலாம் பாத்துக்கோ” என்றவன் அவனுடைய வீட்டிற்கு புறப்பட்டான்.

 

போகும் வழியிலே தந்தைக்கு அழைத்து முக்கியமாகப் பேச வேண்டும் என்று வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தான்,  என்னவோ என்ற பதட்டத்தில் அவர் தம்பியுடன் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்,  வீட்டிற்குள்  நுழைந்தவன் யாரையும் கவனிக்காமல் தன்னுடைய அறைக்குள் நுழைந்துகொண்டான்.

 

 கந்தசாமியும் செந்திலும் உள்ளே வர “ஏய்யா என்ன இந்த நேரம் வந்திருக்கீங்க ரெண்டுபேரும்  ராசாவும் வந்துட்டு ஒண்ணுமே பேசாம உள்ள போய்டுச்சு”  என்றார் கோசலை.

 

“தெரியலாமா தம்பி தான் வரசொன்னுச்சு”  என்றார் கந்தசாமி.

 

அனைவரும் அவனுக்காகக் காத்திருக்க குளித்துவந்தவன் “வாங்க சித்தப்பா”  என்றான்  செந்திலை பார்த்து  “மா ஒரு டி” என்றுவிட்டு அவர்களுக்கு எதிரில் சோபாவில் அமர்ந்துகொண்டான்,  அவனே பேசட்டும் என்று அனைவரும் அமைதியாகக் காத்திருக்க பவுனு அனைவருக்குமே தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு மாமியாருடன் அமர்ந்துகொண்டார்.

 

 மெல்ல டீயை குடித்து முடித்தவன் ஆழ மூச்செடுத்து அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு “கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்” என்க.

 

கோசலை ஏதோ சொல்ல வந்தார் அவரைத் தடுத்தவன் “அப்பத்தா மயூரியை தவிர வேற யாரையும் என்னால ஏத்துக்க முடியாது, அவ என்கூடதான் இருப்பா இருந்தாகணும் அதும் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம்”  என்றான் அழுத்தமாகப் பிடிவாதமாக.

 

மகன்கள் இருவரும் கோசாலையை பார்த்து ஒன்றும் சொல்லாதீர்கள் என்றார்கள் கண்ணசைவில் “எங்களுக்குச் சம்மதம்பா முறையாடி போய்ப் பொண்ணுகேப்போம் “ என்றார் கந்தசாமி.

 

“இல்ல வேண்டாம் அவளோட கிராண்ட்பா  வரதுக்குள்ள இந்தக் கல்யாணம் நடக்கணும் பக்கத்துலயே எந்த நாள் நல்லா இருக்கோ அன்னைக்கே”  என்றவனை அனைவரும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.

 

“ஏய்யா என் பேரன் கல்யாணம் எம்புட்டு ஆசை இருக்கு  இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு எப்படி செய்யச் சாதி சனம் எல்லாத்துக்கும் சொல்லிச் சடங்கெல்லாம் செஞ்சு பெருசா செய்யணுமைய்யா அதோட தொரையையாவுக்கு தெரியாம எப்படி அவர் வீட்டு பொண்ணை நாம கூட்டிட்டுவரது” என்றார் கோசலை.

 

“அதுக்கெல்லாம் நேரம் இல்ல மிஞ்சிப் போன ஒரே வாரம் இல்லனா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்”  என்றவனிடம் இதுவரை அவர்கள் கண்டிராத இறுக்கமும் கோபமும்.

 

“சரிப்பா நாங்க பாத்துக்குறோம் நீ கொஞ்சம் அமைதியாகு” என்ற செந்தில் “அம்மா நல்ல நாள் பாருங்க” என்க.

 

அவர் அனைவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்து நின்றார் “பாருங்க அத்தை” என்று பவுனும் சொல்லக் காலண்டரை எடுத்தவர் அடுத்த “வெள்ளி நல்ல முகூர்த்த நாள்” என்றார் அவனைப் பார்த்து இடையில் வெறும் ஒன்பது நாட்கள்.

 

“அப்பா கெண்டைக்குடி கோவில்ல கல்யாணம் வெச்சுக்கலாம், சொந்தக்காரங்களை கூப்பிடுறதை மட்டும் நீங்கப் பாருங்க மத்ததை நான் பாத்துக்குறேன்” என்றவன் அதே வேகத்தில் வெளியிலும் கிளம்பிவிட்டான்.

 

கோசாலைக்கு மனதே கேட்கவில்லை ஜாதகம் பாக்காம எப்படி என்று அவர் தயங்கி நிற்க “இவ்ளோ பிடிவாதமா சொல்லும்போதே தெரியலயாமா… உங்க திருப்திக்கு  வேணா மலைக்கோவில் மாரியம்மனுக்கு ஒரு வேண்டுதல் வெச்சுக்கலாம் நம்ம பிள்ளைங்கமா மனசு நிறைஞ்சு நாம ஆசிர்வாதம் செஞ்சா போதும் நல்லா இருப்பாங்க” என்றார் செந்தில்.

 

“உங்க பேரன் இருக்குற வேகத்துக்கு நீங்க இப்படி பிடிவாதம் பிடிச்சா தாலி கட்டாம கூடக் கூட்டிட்டு வந்துடுவார் போலத் தம்பி சொன்னமாதிரி அவங்க நல்லா இருப்பாங்க நீங்க முழுமனசோட பிள்ளைகளை வாழ்த்துங்க” என்றார் கந்தசாமியும், அதற்குமேல் கோசலை யோசிக்கவில்லை அன்றே மலைக்கோயிலுக்கு மருமகளுடன் சென்றுவிட்டார் வேண்டுதலுடன்.

 

“உசுரோட இருக்கவரை எல்லா வருஷமும் பூச்சட்டி எடுக்குறேன் என் பேரனுக்கு ஒரு ஆபத்தும் வராம அந்தப் பிள்ளையோட தாலி பாக்கியம் கெட்டியா இருந்து என் பேரன் உசுரை காப்பாத்த அருள் புரியனும் மாரியாத்தா” என்று வேண்டிக்கொண்டார்.

 

‘இப்படி வேண்டுதல் வைக்கும் அளவுக்கு அப்படி என்ன மகனின் ஜாதகத்தில் பிரச்சனை’ என்ற பயம் பவுனுக்கும்  வந்துவிட மகனின் ஆயுளுக்காக நிம்மதியான குடும்ப வாழ்வுக்காகத் தானும் வருடம்தோறும் பூச்சட்டி  எடுப்பதாக வேண்டிக்கொண்டார்.

 

சந்நிதியில் நின்று மனமுருகி வேண்டிக்கொண்டே சாமியைப் பார்க்கப் பூமாலை ஒன்று அப்படியே ஒழுகி அன்னையின் பாதத்தில் விழுந்தது பரவசமாகிவிட்டது கோசாலைக்கும் பவுனுக்கும்.

 

“வேண்டியது நல்லபடியா நடக்கும் ரொம்ப நல்ல சகுனம்” என்றார் பூசாரி சஞ்சலமான மனதோடு சென்றுவிட்டு நிறைவான நிம்மதியோடு திரும்பி வந்தனர் இருவரும்.

 

அதன்பிறகு அனைத்தும் புயல் வேகமே, அன்றிரவு மயூரியை காண சென்றவன் அவளை அருகில் இழுத்து அவள் செவியில் ரகசியம் பேச விழிகளைப் பெரிதாய் விரித்தவள் “ஏன் கேக்குறீங்க” என்றாள் முகத்தை நிமிர்த்தாமல்.

 

“அது தெரியாம எப்படிடி பஸ்ட்  நைட்க்கு நாள் குறிக்கிறது” என்றவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் நம்பாமல்.

 

“சொல்லு” என்க.

 

“இப்போதான் முடிஞ்சிது” என்றாள் நாணத்தில் துடுத்த கன்னங்களைத் தேய்த்துக்கொண்டே,  அவள் கைகளை எடுத்துத் தன்னை சுற்றி போட்டுக்கொண்டவன் “அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இதே நேரம்  இந்த ஐரிஸ் மயூரி தேவசேனாபதி பொண்டாட்டியா அவன் கைக்குள்ள உரிமையோடு நிப்பா,  என்னைக் கட்டிக்க உனக்குச் சம்மதமா” என்றவனை தாவி அணைத்துக்கொண்டாள் மயூரி.

 

“மயூ கோவில்லதான் கல்யாணத்துக்கு பதிவு பண்ண சொல்லியிருக்கேன் உனக்கு வேண்டாம்னா சர்ச் இல்லனா  ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றவனுக்கு மறுப்பாகத் தலை அசைத்தவள் “எனக்கு உங்ககூட இருக்கணும் அவ்ளோதான் வேறு எதுவும் எனக்குத் தேவையில்லை” என்றாள் நெகிழ்ச்சியாக.

 

“என்னமா இது நேத்து புள்ளய பெத்து இன்னைக்கு பள்ளிக்கூடம் அனுப்புன மாதிரி திடுதிப்புனு கல்யாணம் சொல்ராங்க, என்ன எதுன்னு விசாரிச்சியா” என்ற கார்த்திகா  தாயின் அருகில் கால் நீட்டி அமர்ந்தாள்.

 

“எண்ணத்தடி விசாரிக்கிறது உன் அப்பத்தாவுக்கு வேற யார் என்ன செஞ்சாலும் தப்பு அதே அவங்க ராசன்னா அப்படியே பொட்டி பாம்பா அடக்கிட வேண்டியது,  ஜாதகம் ஜாதகம்னு குதிச்சுட்டு இப்போ பாத்தியா கமுக்கமா இருக்கிறத”  என்றார் கனகம்.

 

“அததான்மா நானும் கேக்குறேன் ஒருவேளை வயித்துல எதுவும் வாங்கியிருப்பாளோ அதுதான் இவ்ளோ அவசரமா நடத்துறானோ,  அவ தாத்தா இங்க இல்லையாமே அவருக்குக் கூடத் தெரியாம இவன்கூட கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்னா அப்போ எதுவும் விஷயம் இல்லாமலா இருக்கும்” என்ற மகளைப் பார்த்த கனகம் “இருக்குமோ” என்க.

 

“கண்டிப்பா அதேதான் நீவேனா பாரு வந்து விளக்கேத்துன அடுத்தநாளே வாந்தி எடுக்கப் போறா” என்றாள் வன்மத்தோடு.

 

“இருக்கும் இருக்கும் கத்தரிக்காய் முத்துனா வராமலா போகப்போவுது அப்போ கேக்குறேன் நாக்கை புடிங்கிக்குற மாதிரி” என்ற கனகம் சப்பாத்தி மாவை குழைத்துக்கொண்டிருக்க  “இங்க குடு” என்ற கார்த்திகா “எங்கம்மா இவளைக் காணும் அண்ணனுக்குக் கல்யாணம்ன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குறாளா” என்றாள் தங்கை வேல்விழியை.

 

“அவ எங்கடி வீட்ல இருக்கா காலேஜ் தொறந்து நாலு மாசம்தான் ஆகுது பாதிநாள் நேரம் சென்றுதான் வராக் கேட்டா இப்போல்லாம் தனியா கிளாஸ் எடுக்குறாங்களாம் புது விஷயங்களைக் கத்துக்க, அதை முடிச்சுட்டுதான் வரா,  என்ன அவளோட படிப்புச் செலவு போயிட்டு வரச் செலவு எல்லாத்தயும் சேனாவே பாத்துக்குறான் நமக்கு அஞ்சு பைசா  செலவில்ல” என்றார் வாயெல்லாம் பல்லாக.

 

யாரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்களோ அவள் குன்னூரின் காபீ ஷாப்பில் மாமன் மகன் ரகுவரனுடன்  குளிருக்கு இதமாகக் காபி குடித்துக்கொண்டு அவன் காதல் வசனங்களில் லயித்து அமர்ந்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!