Skip to content
Post Views: 7,128
கேண்டீனுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த பெரியவரை, அங்கே எதிர்பார்க்காத மது, ஆச்சர்யத்துடன் ஓடி வந்து வரவேற்றாள்!
“சார்! என்ன இது, ஒரு போன் பண்ணியிருந்தா, நானே உங்கள பார்க்க வந்துருப்பேனே!”
“மது மேடம் ரொம்ப பிசின்னு கேள்விப் பட்டேன்! இந்த கிழவன் என்ன வீட்டுல வெட்டியா தானே உட்கார்ந்து டிவி பார்த்துட்டு இருக்கேன், அதான் நானே உன்னைப் பார்க்க இங்கேயே வந்துட்டேன்!”
Advertisement
“ஏன் மது, இந்த கிழவன பார்க்க வரணும்னு உனக்கு தோணவே இல்லையா?”
“அதான் காபி போட்டுத் தர உன் சிஸ்டர அனுப்பிட்டோமேன்னு, நினைச்சுட்டு நீ வராம இருக்கியா?”
“வெறும் காபிக்காக தான் நான் உன்னைத் தேடுவேன்னு நீயா நினைச்சுட்டியா மதும்மா?”
Advertisement
“மதும்மா..” இது அவள் ராமு மாமா அவளை அழைப்பது! மதுவுக்கு அப்படியே கண்ணீரே வந்து விடும் போல் இருந்தது அவரின் இந்த விளிப்பால்!
Advertisement
“சார்.. சார். ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாதீங்க! நான் வேணுமின்னு உங்கள பார்க்க வராம இருப்பேனா? ஒரு அன் அவாய்டஅபிள் சிச்சுவேசன்! அதான் வரல!”
“அது என்ன புடலங்கா ரீசனோ, இருந்துட்டு போகட்டும்! ஜஸ்ட் இக்னோர் இட் மது! நீ வீட்டுக்கு வராம மட்டும் இருந்துடாதே!”
“நீ வர ஆரம்பிச்துக்கப்புறம் தான், என்னோட வெறுமை கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கு!”
Advertisement
“நான் ஒரு பீடியாட்ரிசியன் ஆ இருந்துட்டே கூட, என் வீட்டுக் குழந்தைகள் கிட்ட டைம் ஸ்பென்ட் பண்ணாம இருந்துட்டேன் இத்தன நாளா!”
“என் வீட்டுல இருக்கிறவங்களும், குழந்தைகள்கிட்ட, பெரிய தாத்தாவை அடிக்கடி போய் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு சொல்லியே அவங்கள வளர்த்துட்டாங்க!”
“நீ வர ஆரம்பிச்துக்கப்புறம் தான் அவங்களும் இப்போ என் கிட்ட நெருங்கி வர்றாங்க, நானும் அவங்களோட ரொம்ப நேரம் இருக்கேன்!”
“அதுவும் இந்த தன்விக் குட்டி எப்படி பேசுது! பேச பேச அப்படி ஆசையா இருக்கு! நான் இத்தனை நாள் இதெல்லாம் மிஸ் பண்ணியிருக்கேன் பாரேன்!”
“நீ வீட்டுக்கு வா மது! நாம் இன்னிக்கு திரும்பவும் பாட்டுக்கு பாட்டு பாடலாம்!”
“அப்புறம் நீ எனக்கு நெய்ப்பொடி தோசை சுட்டுத் தரனும் இன்னிக்கு!”
“கண்டிப்பா சார்!”
“குழந்தைகளுக்கு என்ன ஸ்பெஷல்?” அவர் ஆவலாக கேட்டார்!
“அவங்களுக்கா! ம்ம்.. அவங்க இத்தனை நாள் நான் இல்லாமலே ஒழுங்கா சாப்பிட்டதுக்கு ஒரு அப்ரிசியேசனா, சாக்லேட் லாவா குழிப்பணியாரம், சீஸ் குழிப்பணியாரம் வித் கறிலீப் கார்லிக் சட்னியும் கொடுக்கப் போறேன்!
“ம்ம். அசத்து..அசத்து…! எல்லாம் சொல்லிட்டு வீட்டுக்கு வராம இருந்துடாதே! அப்புறம் நான் இங்க வந்துடுவேன் டெய்லி!”
“வந்தா, இங்க வேலை செய்றவங்களுக்கு தான் சங்கடம்! ப்ரீயா இருக்க முடியாது! பார்த்துக்கோ!” செல்லமாக வார்ன் பண்ணி விட்டு போனார் பெரியவர்!
ரகு, மதுவிடம் அப்படி பேசிவிட்டதை, மது உட்பட யாருமே அவரிடம் சொல்லவில்லை! தெரிந்தால் ரகுவின் மேல் கோபம் கொள்வார் என்று!
ஆனால், பெரியவர் காண்டீனுக்கே வந்து மதுவைத் தேடிக்கொண்டு வந்து பார்த்து விட்டுப் போன செய்தி எல்லா பக்கமும் பரவியது!
ராமநாதன், ராகினிக்கு அப்புறம் வெளிநாட்டில் இருக்கும் ரகுவின் அத்தைக்கும் கூட!
எல்லோரும் வைஷுவிடம் ஏன் என்று விவரம் கேட்க, யாரிடமும் காரணத்தை சொல்லாமல், “அது வந்து.. மது கொஞ்சம் பர்சனல் வேலையா பிசியா இருந்திருக்கா, அதனால பெரிய மாமாவ பார்க்க கொஞ்ச நாளா வராம இருந்தா! அவருக்கு மதுவ ரொம்பப் பிடிக்கும்! அதான் தேடிட்டு வந்துட்டார்!”
இந்த நிகழ்வுக்குப் பின், ராமநாதன், மதுவை ரகுவிற்கு பெண் கேட்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார்!
இது விசயமாக அவர் ராகினியிடமும் வைஷுவிடமும் போனில் பேசினார்.
ரகுவிற்கு மதுவின் மேல் ஈர்ப்பு உண்டு! அது கன்பர்ம்டு!
ஆனா மது!
அவள் விருப்பம் தெரியவில்லையே!
அவளுக்கு அவன் மேல் மிகுந்த வருத்தம் இருக்குமே!
அவன் தான் இந்த பார்த்தியின் பேச்சைக் கேட்டு இப்படி சொதப்பி வைத்து இருக்கானே!
வைஷு கையில் காபியுடன் தன் ரூமிற்கு வெளியே இருக்கும் பால்கனியில் நின்றுக் கொண்டு யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அப்போது அவள் கண்ணில், பக்கத்து அப்பார்ட்மெண்ட் வாசலில் சில குழந்தைகள் ஸ்கூல் யூனிபோர்ம் அணிந்து கொண்டு ஸ்கூல் வேனுக்குக்காக நின்றுகொண்டு இருந்தார்கள்.
அதைப் பார்த்தவுடன், வைஷுவிற்கு, அதே இடத்தில், அவளும், ரகுவும், பார்த்தியும் இதே மாதிரி யூனிபோர்ம் அணிந்து கொண்டு ஸ்கூல் வேனுக்குக்காக நின்றது அவள் நினைவுக்கு வந்தது!
அப்படியே கொஞ்சம் பழைய நினைவுகளுக்குப் போனாள்!
அப்போது இந்த அப்பார்ட்மெண்ட் எல்லாம் இல்லை! அது மாடியும் கீழேயுமாய் இரண்டு குடித்தனங்கள் இருந்த தனி வீடு!
ஆனால் நாகரிமான, வசதியான கொஞ்சம் பெரிய வீடு தான்!
அதில் மாடியில் வைஷு பாமிலி இருந்தார்கள்.
கீழே பார்த்தியின் குடும்பம்!
வைஷு வீட்டில் அவள் பிறந்த கொஞ்ச நாளிலேயே இங்கு வந்து விட்டனர்!
பார்த்தியின் குடும்பம் அவர்கள் மூவரும் நான்காம் வகுப்பு படிக்கும் போது தான் குடி வந்தார்கள்!
பார்த்தியின் அப்பா ஒரு பிரைவேட் ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியின் ஏரியா மேனேஜர்!
அவருக்கு கம்பெனி தான் இந்த வீட்டின் வாடகை தந்தது!
வைஷுவின் பெற்றோர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்!
அவர்கள் அவளை ரொம்ப டிசிப்ளின் ஆக வளர்த்தார்கள்!
பார்த்தியின் வீட்டில் அப்படியே உல்டா!
அந்த வயதிலேயே பொய் சொல்லுவது, ஏமாற்றுவது எல்லாம் அவனுக்கு நன்றாகவே வந்தது!
அவன் பாட்டி வேறு ரொம்ப செல்லம்!
அவன் ஏதாவது தப்பு செய்தால் கூட சப்பைக்கட்டு கட்டுவார்!
வைஷுவின் வீட்டில் அவள் ஒரே பெண்.
கூட விளையாட யாரும் இல்லாததால், அவள் எப்போதும் ரகு வீட்டில் அவனோடு தான் விளையாடிக் கொண்டிருப்பாள்.
ரகுவும் அவளும் ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ஸ் என்பது ஸ்கூலில் எல்லோருக்கும் தெரியும்!
மிஸ் யாராவது ரகுவைத் திட்டி விட்டால் போச்சு, இங்கே வைஷு நறநறவென்று பல்லைக் கடித்துக் கொண்டிருப்பாள்!
இதைத் தெரிந்து கொண்ட அவர்களது டீச்சர்ஸ் கூட, எப்போதாவது ரகுவைத் திட்டும் போது, திட்டி விட்டு, உடனே வைஷுவைப் பார்த்து, “என்ன வைஷு, உனக்கு இந்நேரம் கோபம் வந்திருக்குமே!” என்று கூட வம்பிழுப்பார்கள்!
இவர்கள் நட்பின் இடையே மூன்றாவது ஆளாக வந்து சேர்ந்தான் பார்த்தி!
“ஏய்! ரகு, நீ என்னடா, கேர்ள் கூட விளையாடுற?
நாமெல்லாம் பாய்ஸ், பாய்ஸ் பாய்ஸ் கூட தான் விளையாடனும்!
இப்படி கேர்ள் கூட எல்லாம் பேசிட்டு இருந்தா, நம்பள ஒருத்தனும் கிளாஸ்ல மதிக்க மாட்டான்! என்று சொல்லி சொல்லி ரகுவை அவளோடு சேர்ந்து விளையாட விட மாட்டான்!
ஆனால். விஜிம்மா, அப்படி அவனை விட்டு விடாமல் பார்த்துக் கொள்வார்!
அம்மா பேச்சைத் தட்ட மாட்டான் ரகு!
“நீ வைஷு கூட எப்ப பார்த்தாலும் வீட்டிலயே ஷட்டில் விளையாடிட்டு இருக்க! கிரிக்கெட் விளையாட வாடா, என் கூட கிரௌண்ட்க்கு!” என்று வெளியே ஊர் சுற்றக் கூட்டிக் கொண்டு போவான்!
அங்கே போனால், ரகுவுக்கு கிரிக்கெட் விளையாடவே வரவில்லை! அவனுக்கு பாட்டிங்கும் வரவில்லை, பவுலிங்கும் வர வில்லை!
ஆனால் பார்த்தி ஆல் ரவுண்டர் ஆக இருந்தான்!
அவன் பிரண்ட்ஸ், “இவன ஏண்டா கூட்டிட்டு வர?” என்று திட்டிய போது, “ஏய் நமக்கு ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் நிறைய வாங்கித் தருவான்! பெரிய பணக்கார டாக்டர் வீட்டுப் பையன்!”
“இப்ப சொன்னாலும் உடனே வீட்டில் சொல்லி, நல்ல கிரிக்கெட் பேட், பால் எல்லாம் வாங்கிட்டு வந்துடுவான்!
நம்ம வீட்டுல போய் கேட்டால், செருப்படி தான் விழும்! இவன் நமக்கு வேணும்டா! சும்மா கூட வச்சுக்குவோம்” என்றான் அப்பவே காரியவாதியான பார்த்தி!
“உனக்கென்னப்பா? டாக்டர் பையன்! ம்ம்ம்னு சொல்றதுக்கு முன்னாடி எல்லாம் கிடைச்சுடும்! நாங்க அப்படியா!”
“இதோ, இவன் வீட்டில் பாட் வாங்கித் தர சொல்லி அடம்பிடித்து இருக்கான், நல்லா பெல்ட் அடி தான் கிடைச்சது!” என்று ஒருவனைக் காட்டினான்!
“ஏய்! இன்னிக்கு ரகுவோட ட்ரீட் எல்லோருக்கும்! போறோம் ஒரு கட்டு கட்றோம்! என்ன ரகு ஓகே தானே! இதெல்லாம் உனக்கு ஒரு காசா, உனக்கிருக்கிற வசதிக்கு!”
காசு பிடுங்குவார்கள்!
அவ்வபோது மற்ற பிரண்ட்ஸ் ரகுவை விளையாட்டிற்கு ரிஜெக்ட் செய்வார்கள்! சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்!
அப்போதல்லாம் பார்த்தி, “ரகு இல்லன்னா, நானும் விளையாட வரல!” என்று அவனுக்கு ஆதரவாக பேசுவது போல் நடந்து கொண்டு, ரகுவின் நட்பை பலப்படுத்திக் கொள்வான்!
உண்மையில் அதுவே ஒரு நாடகம் தான்!
அந்த வயதிலேயே கிரிமினல் அவன்!
ரொம்ப டிசிப்ளின் ஆக வளர்ந்து கொண்டிருந்த, ரகுவிற்கு, பார்த்தியின் அடாவடித் தனம்! ஒழுங்கின்மை ஏதோ ஹீரோயிசமாக தெரிந்தது!
அப்படி தோன்ற செய்தவனும் பார்த்தி தான்! ஒழுக்கமாக இருப்பவர்களை எல்லாம் “ சரியான பழம்டா அவன்! என்று கிண்டல் அடித்து, அது ஏதோ தவறு, பயந்தான்கொள்ளித்தனம் போல உருவகப்படுத்தி சொல்வான்!
இவை அனைத்துமே வைஷுவிற்கு தெரிய வந்து அவள் விஜிம்மாவிடம் சொல்லி ரகுவைக் கண் காணிக்க செய்தாள்!
அதனால், பார்த்தியின் சேட்டைகளை ரசித்தாலும், அவன் எதுவும் பார்த்தியைப் போல எதுவும் செய்து விட வில்லை அவரின் கண்டிப்பால்!
ஒரே ஒருமுறை, இருவரும் சேர்ந்து, பின் வீட்டுக் கொல்லைப்புற மாமரத்தில் திருட்டுத்தனமாக மாங்காய் பறித்தைத் தவிர!
அதுவும் அன்று மாலையே மாட்டிக் கொண்டான் ரகு, ராமநாதனிடம்!
மாலை, கோபமாக கையில் ஒரு கூட நிறைய மாங்காய்களைக் கொண்டு வந்து ஹாலில் விட்டு எறிந்தார் அவர்!
“என்னங்க இது!” என்ற விஜிம்மாவிடம்,
“ம்ம். பின் வீட்டுக்காரர் நம் ஹாஸ்பிட்டலில் வந்து என்னைப் பார்த்துக் கொடுத்து விட்டுப் போனார்!”
“டாக்டர், உங்க சின்ன பையனும் பக்கத்து வீட்டுப் பையனும், மாடி விளிம்பில் இருந்து தாவி மரத்தில் ஏறி நின்று மாங்காய் பறிச்சாங்க! எனக்கு அப்படியே பதறிடுச்சு சார்! கீழே எதுவும் விழுந்து கை கால் உடைந்து விட்டால் என்ன செய்வது!”
“அதான் நானே ஆள் வைத்துப் பறித்துக் கொண்டு வந்தேன்! தம்பிக்கு கொடுங்க சார்! மரத்தில் ஏறி கீழே விழுந்து விட போறான்னு சொல்லிக் கொடுத்து விட்டு போனார்!”
“எனக்கு ஒரே அசிங்கமா போச்சு!”
“நீ என்ன தான் பண்ற, அவன் யார் கூட பழகுறான், என்ன பண்ணிட்டு இருக்கான்னு எல்லாம் பார்க்க மாட்டியா?” கண்டபடி திட்டிவிட்டார்!
அதன் பின் விஜிம்மா பார்த்தி விசயத்தில் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆனார்!
அதற்கேற்றார் போல், அவர்கள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, அவர்கள் ஸ்கூலில் பார்த்தியை பெயில் போடப் போவதாக சொல்லி விட்டார்கள்!
அடுத்த வருடம் பப்ளிக் எக்ஸாமில், இவனால அவர்கள் பள்ளியின் பேர் கெட்டுவிடும் என்று!
அவன் அப்பா போய், HM இடம் பேசி, பாஸ் போட்டு விடும்படி ரிக்வெஸ்ட் செய்து, டிசி வாங்கிக் கொண்டு வேறு ஒரு பள்ளியில் சேர்த்து விட்டார்!
கொஞ்ச நாளில் அவரும் அவர் கம்பெனியில் ஏதோ பணத்தைக் கையாடல் செய்து விட்டதால், வேலையை விட்டுத் தூக்கி விட்டார்கள்! வீட்டையும் காலி செய்ய வைத்து விட்டார்கள்!
இப்படி ரகு பார்த்தி நட்பு கொஞ்சம் பிரிந்தாலும், பார்த்தி அவனை விடுவதாக இல்லை!
லீவு நாட்களில் வற்புறத்தி, அவனை எப்படியாவது கிரிக்கெட் விளையாடக் கூட்டிக் கொண்டு போய் விடுவான்!
அது முப்பதை தாண்டிய இந்த வயதிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!
ரகுவும் வைஷுவும் ஒழுங்காகப் படித்து டாக்டர் ஆகியிருக்க, பார்த்தியோ பத்தாவது முடிப்பதற்குள் உன் பாடு என் பாடு ஆகி, பின் டிப்ளமோ சிவில் படித்தான்!
அதையும் ஒழுங்காக முடிக்க வில்லை!
ஆனால் அதை வைத்துக் கொண்டு, ரியல் எஸ்டேட் பிசினெஸ் பண்ணினான்!
சீட்டு கம்பெனி நடத்தினான்!
ஆனால் எந்த பிசினஸ் செய்யவும் குறைந்தப் பட்ச நாணயம் தேவை! வாக்கு சுத்தம் தேவை!
இரண்டுமே இல்லாத பார்த்தியால் எதையும் ஜெயிக்கவே முடியவில்லை!
அப்படியே ஜெயித்தாலும் அது குறுகிய கால வெற்றியாக மட்டுமே இருந்தது!
மார்கெட்டில் அவனுக்கு நல்ல பேர் இல்லை!
அதனால் அவனை நம்பி யாருமே கூட்டு சேரவும் இல்லை!
இப்படி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த பார்த்தி, ரகுவின் வீட்டினர் புதிய ஹாஸ்பிட்டல் திறக்க இருப்பது பற்றி கேள்விப்பட்டு, ரகுவிற்கு வழக்கம் போல நன்றாக ஐஸ் வைத்தும், அவன் ஈகோவைத் தூண்டி விடும் விதமாக பேசியும் கேண்டீன் கான்ராக்ட்டை பெற்று விட்டான்!
விஜிம்மா மறைவும் அவனுக்கு ரொம்ப வசதியாக போய் விட்டது!
வைஷுவும் ட்ரை பண்ணினாள் தான்! ஆனால் முடியவில்லை!
“பார், வைஷு, உனக்கு அவனைப் பிடிக்காது, அதனால வேண்டாம்னு சொல்ற! ஆனா பாவம் அவன் பிழைக்க வழியில்லாம, என்னை நம்பி வந்துட்டான், என்னை நம்பி அதிக வட்டிக்கு கடன் வாங்கி ,எல்லாம் ரெடி பண்ணிட்டான், இப்போ போய் நான் முடியாதுன்னு எப்படி சொல்வேன்!”
அவனுக்காக அவளிடம் கெஞ்சினான் ரகு!
“சரி அவனுக்கு ஒரு சான்ஸ் கொடுப்போம்! ஒருத்தன் ஆயுசுக்குமா கெட்டவனா இருப்பான்? நாமளும் அவன் திருந்தி வாழ ஒரு சான்ஸ் கொடுப்போம்” என்று தான் சரி சொல்லியிருந்தாள்!
அவன் எல்லாம் திருந்துகிறே ஆளே இல்லை, என்பது இப்போது தெரிந்து விட்டது!
அவன் எப்பேர்ப்பட்ட ஆள் என்று வைஷுவிற்கு நன்றாகவே தெரியும்!
முதலில் பார்த்தி , அவளின் ரகுவோட ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ண நினைத்தான் முடியவில்லை!
விஜிம்மா விட வில்லை!
அப்புறம் இவள் ராகவனைக் காதலிப்பது தெரிந்து, அது கல்யாணத்தில் முடிந்து விடக் கூடாது என்று எவ்வளவோ ட்ரை பண்ணினான்!
ஆனால் ரகுவின் சப்போர்ட் இதில் அவனுக்குக் கிடைக்கவில்லை! அவனே இவளின் காதலுக்குத் தூது போனதால்!
தன் கல்யாணத்திற்கே இவ்வளவு செய்த பார்த்தி, நிச்சயம் மதுவை, அவனிடம் இருந்து கான்ராக்டைப் பிடித்துக் கொண்ட மதுவை, எப்படி ரகுவோடு சேர விடுவான்?
நிச்சயம் ஏதாவது தகிடு தத்தம் செய்து நிறுத்த தான் பார்ப்பான்!
அது தான் ரகுவை அந்த மாதிரி மதுவிடம் பேச வைத்து இருக்கிறான்!
இவ்வளவுக்குப் பின்னும் மது எப்படி ரகுவை கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்வாள்!
ஆனா, ரகு அவளை விரும்புவது ரொம்பவே கன்பர்ம்ட்!
ஆனா மது!
அவள் ஒத்துக்குவாளா!
ஒத்துக்குவாள் என்று அவளுக்கு நம்பிக்கைத் தரும் செய்தி ஒன்றை தன்வி குட்டி வாயால் விரைவில் கேட்க இருக்கிறாள் வைஷு!
error: Content is protected !!