Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 10

“ஹாய் டார்லிங், மாமாக்கு ஒரு ப்ரெஸ் ஜுஸ் எடுத்துட்டு, சீக்கிரம் வா பார்ப்போம்! கமான் க்விக்!” மதுவை போனில் கூப்பிட்டான் ரகு, இன்றும் அவன் ஓய்வு அறையில் இருந்து கொண்டு!

இன்று அவன் ஓபி க்கு ரொம்ப பேசண்ட்கள் இல்லை! எப்போதாவது சில சமயம் இப்படி ஆகும்!

‘என்னது டார்லிங்கா?” மதுவுக்குள் ஆச்சரியம்!

இவனுக்கு இப்படியெல்லாம் கூட பேச வருமா? வெளியே காட்டிக்காமல்,



Advertisement

“என்ன சொன்னீங்க?”

“பொண்டாட்டிய, ஹாய் டார்லிங்க்ன்னும் கூப்பிடலாம், ஹாய் பொண்டாட்டின்னு கூப்பிடலாம், உனக்கு எது பிடிச்சுருக்கு மது டார்லிங்?”

“அடே அப்பா! ரொம்ப ஸ்பீட் தான் நீங்க! நான் கொஞ்சம் பிஸி, கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்!”

Advertisement

‘அதெல்லாம் முடியாது, இப்பவே வரணும், இல்லன்னா நான் அங்க வந்து , எங்க என் டார்லிங்ன்னு தேடிட்டு வந்துடுவேன்! எப்படி வசதி?’

Advertisement

அய்யோ, இவன் செஞ்சாலும் செய்வான்! நேற்றே மது தான் பார்த்து விட்டாளே? அவன் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போவான் என்று!

“இல்ல, இல்ல நானே வரேன்!”

குடும்பம் மொத்தமும் இந்த ப்ளாக் மெயில் பண்ணுவதில் கெட்டிக்காரர்கள் போல!

Advertisement

பெரியவரிடம் ஆரம்பித்து, வைஷு இப்போ இவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டே நினைத்துக் கொண்டாள்!

“அ.. து…. “ சொல்லி போனை வைத்தான் ரகு!

உள்ளே நுழைந்தவுடன் பட பட வென்று பேசினாள் மது!

“என்ன நீங்க, நேத்து தான் ப்ரபோஸ் பண்ணியிருக்கீங்க, அதுக்குள்ள இவ்வளவு ஸ்பீடா? நான் உங்க லவ்வ அக்செப்ட் பண்ணிட்டனான்னு கூட நீங்க தெரிஞ்சுக்கல இன்னும் அதுக்குள்ள பொண்டாட்டி, டார்லிங் ன்னு எல்லாம் கூப்பிடுறீங்க?’

“ஓ அப்போ, நீ இன்னும் என் லவ்வ அக்செப்ட் பண்ணலையா?”

“ப்ளீஸ் மது லவ் பண்றேன்னு சொல்லிடு மது! ப்ளீஸ் சொல்லு மது, சொல்லு மது” அவன் கிட்டே  வந்தான்!

அவள் சட்டென, தன் இரு கைகளால், தன் வாயை மூடிக்கொண்டு, திரும்பி நின்று கொண்டாள்!

அவளுக்கு தான் அவன் பாஸ்ட் ஹிஸ்டரி தெரியுமே!

அவன் அதைப் புரிந்து கொண்டு, குறும்பாக சிரித்த படியே வந்து அவளைப் பின்னால் கட்டிக்கொண்டு, அவள் கழுத்தில் முத்தமிட்டான்!

பின் அவளைக் கைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு போய், அங்கிருந்த சோபாவில் உட்கார வைத்துவிட்டு, சட்டென அவள் மடியில் படுத்துக் கொண்டான்!

மது, முதலில் திகைத்தாலும், பின், மெல்ல சிரித்துக்கொண்டே அவன் தலையைக் கோதி விட்டாள்!

“ஸ்.. அம்மா..  பீல் லைக் அ ஹெவன் மது!”  அவன் சொல்லிவிட்டு அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டான்!

“ஏய்.. எழுந்துரு டா, நீ இதுக்கு சரிப்பட மாட்டே!” திடீரென்று, மது அவன் தலையைத் தூக்கி எழுப்பி விட்டாள்!

“யூ கால் மீ டா?”

“ஆமாண்டா டால்டா?”

“டபுள் டா? ஏய் என்னடி ஆச்சு?”

“பாவம் பிள்ளைன்னு மடியில படுக்க விட்டா, நீ என் இடுப்புல கிஸ் பண்ற?”

“ம்ம். அது வந்து, முதல்ல அப்படி ப்ளான் இல்ல, ஆனா நான் திரும்பினப்போ,  உன் இடுப்பு வழக்கம் போல என்னை டெம்ப்ட் பண்ணுச்சு!

நான் என்ன பண்ணட்டும் ? இவ்வளவு க்ளோஸ் ஆ இருக்கும் போது! ஆனா மதர் ப்ராமிஸ், நான் வேற எதையும் பார்க்கல!”

தொண்டையில் கிள்ளி ப்ராமிஸ் பண்ணினான் ரகு!

“மது, நான் உங்கிட்ட தடுமாறினது உன் இடுப்பு அழகைப் பார்த்து தான்! ஒரு படத்துல கார்த்தி, தமன்னா, இடுப்பைப் பார்த்து, வழிவாரே அது மாதிரி!”

“எதே, வழக்கம் போல என் இடுப்பு உங்கள டெம்ப்ட் பண்ணுச்சா?”

“நான் என்ன தமன்னா மாதிரியா என் இடுப்பை காட்டிட்டா இருக்கேன்?”

“ம்ம் இல்ல, அப்படி காட்டி இருந்தீன்னா, நான் உன்னை திரும்பி கூட பார்த்து இருக்க மாட்டேன்!

நீ இப்படி கொஞ்சமா, இடுப்பு தெரியற மாதிரி சாரி கட்டியிருந்த, அது தான் என்னை அட்ராக்ட்  பண்ணுச்சு!

அப்கோர்ஸ் நான் முதல்ல உன் கண்களைப் பார்த்து தான் கவுந்துட்டேன்!

என்னால அதில இருந்து என் பார்வைய திருப்பவே முடியல! அப்படியே கட்டி இழுத்து வச்சுட்டடீ நீ?

நான் எந்த பொண்ணையும் இப்படியெல்லாம் பார்த்தது இல்ல தெரியுமா?”

“ம்ம்.. மது வெட்கத்துடன் சொன்னாள், “நானும் அன்னிக்கு அப்படி தான் இருந்தேன்! நானும் யாரையும் அப்படி வச்ச கண் வாங்காம எல்லாம் பார்த்து இல்ல, என்னமோ, உங்கள மட்டும் தான் அப்படி சைட் அடிச்சேன்!

உள்ளுக்குள் வேறே பயம்! அய்யோ ஏற்கனவே இந்த ஆள் நம்ம மேல கொலை காண்டில் இருக்கான், நாம வேறே இப்படிப் பார்க்குறோமேன்னு நினைச்சு!”

“அப்புறம் நீங்க வேறே, வளைச்சு போட ட்ரை பண்றியான்னு கேட்டவுடனே , எனக்கு அழுகையே வந்துடுச்சு!

ஆனா, நான் சின்ன வயசுல இருந்தே, எதற்கும் யார் முன்னாடியும் அழ மாட்டேன்!

யாராவது திட்டினால், எனக்கு கோபம் தான் வரும்! அழுகை வராது!

என் அப்பா அம்மா மட்டும் விதி விலக்கு!

அவங்களுக்கு அப்புறம் எனக்கு உங்க முன்னாடி தான் அழுகை வந்துச்சு! அதான் அதை மறைக்க சிரித்து ஒரு fun பண்ணிட்டு போயிட்டேன்!

“சாரி. மது! நான் அப்படி பேசியிருக்க கூடாது! ரொம்ப சாரி, ப்ளீஸ் என்னை மன்னிச்சுடு!”

“அய்யோ மறுபடியும் முதல்ல இருந்தா?” மது அவனை கட்டிக் கொண்டாள்!

அப்படியே சிறிது நேரம் இருந்தவள், திடீரென நினைவு வந்தவளாய், “அய்யோ பசங்க ஸ்கூலில் இருந்து வந்து விடும், நான் வீட்டுக்கு போகனும்!

ஸ்நாக்ஸ் எடுத்து பேக் பண்ணனும்!” என்று விலகினாள்!

“சரி கிளம்பு” என்றவன், “ ஏய் .. இரு. இரு.” என்று  அவள் அருகில் வந்து அவளை நெருங்கி நின்று அவள் மேல் வாசம் பிடித்தான்!

“என்ன செய்றீங்க?”

“ஏய் மது உன் மேல எல்லாம் என்னோட பெர்பியூம் வாசனை!

நீ வீட்டுக்கு போனவுடனே தன்விக் குட்டி வந்து உன்னை கட்டிக்கும், கட்டிக்கிட்டு என்ன மது உன் மேல சித்தாவோட  பெர்பியூம் வாசனை வருதுன்னு சொல்லி மானத்த வாங்கிடும்!

ரொம்ப ஷார்ப் அவ!  பொல்லாதவ!  நானே உன்னை சைட் அடிக்கிறது அவளுக்கு தெரியக் கூடாதுன்னு, சில சமயம் ரூம்குள்ளேயே இருப்பேன் தெரியுமா?

நீ போற வழியில ஏதாவது ஒரு கடையில் ஒரு பெர்பியூம் வாங்கி அடிச்சுகிட்டு போ! நீ முதல்ல போ, நான் பின்னாடி வரேன்!”

மது அவன் சொன்ன மாதிரியே செய்து விட்டு, வழியில் தெரிந்த  ஒருவரிடம் பேசி விட்டு, பின் வாசலில் இருந்த வாட்ச்மேனிடம் கொஞ்சம் ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு அவரிடமும் பேசி விட்டு அவள் வீட்டுக்குள் நுழையவும், அதற்குள் ரகு வீட்டிற்கு வரவும் சரியாகி விட்டது!

அவர்களை பார்த்துவிட்ட, தன்வி குட்டி “அய்! சித்தாவும் மதுவும் பேரா (Pair) வராங்கன்னு” கத்த,

பெரியவர் ரெங்கநாதன் திரும்பி அவர்களைப் பார்த்தார்!

“என்ன பொருத்தம் இவர்களுக்கு! பேசாம, மதுவை ரகுவுக்கு பெண் கேட்க சொல்லலாமா” என்று அவரும் உள்ளுக்குள் நினைத்தார்!

“அய்யோ தன்வி ! பேரா வராங்கன்னு சொல்லக் கூடாது, ஒண்ணா, ஒரே டைம்ல வராங்கன்னு சொல்லணும்!” தாரிகா அவளை திருத்தினாள்!

“போ, நான் அப்படி தான் சொல்வேன்” சிறுமி அடம்பிடித்தாள்!

மறுநாள்.

காலையில், தன்வி குட்டியை ஸ்கூலுக்கு கிளப்ப வைஷு அவளிடம் போக,  அவளோ பயங்கர யோசனையில் இருந்தாள். வாயில் பிரஷ் வைத்த படி!

“என்ன சின்ன மேடம், அப்படி  என்ன யோசனை காலையிலேயே?”

“இல்லம்மா, ஒண்ணு சொல்லணும், ஆனா சொல்லலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்!”

“ஏய் அப்பா, அப்படி என்ன விஷயம்? சும்மா  சொல்லுங்க மேடம்!”

“அது.. வந்து.. வந்து.. நேத்து மது எனக்கு பப்பு மம்மு ஊட்டினா. எனக்கு தான் அது பிடிக்காதே, நான்  டேபிள்க்கு கீழே  ஒளிஞ்சுகிட்டேன்!

மது கண்ணை மூடிட்டு, நான் இப்படி கண்ணை மூடிப்பேனாம், தன்வி குட்டி எனக்கு தெரியாம வந்து ஆ வாங்கிப்பாளாம் சொல்லிட்டு கையில் பப்பு மம்முவ வச்சுட்டு இருந்தா!”

“அப்போ.. சித்தா வந்து அவ கிட்ட அத ஆ வாங்கி ஊட்டிக்கிட்டான்மா!”

“அய்யோ அப்புறம்!”

“மது பேஸ் அப்படியே ரெட்டிஸ்ஸா ஆகிடுச்சு!”

“அய்யோ ஆங்ரி பேர்ட் ஆகிட்டாளா?”

“இல்ல, ஆங்ரி எல்லாம் ஆகல, கொஞ்சமா சிரிச்சுட்டு, அவனுக்கு ஒரு பவுலில் பப்பு மம்மு போட்டுக் கொடுத்தா!”

“பெரிய தாத்தா, தாரிகா எல்லாம் எங்க அப்போ?”

“தாரிகா ஹான்ட் வாஷ் பண்ணப் போய்ட்டா, தாத்தா ரெஸ்ட் ரூம்ல இருந்தார் அப்போ!”

மது ரகுவைக் கல்யாணம் செய்ய ஒத்துப்பாளா என்று தவித்துக் கொண்டு இருந்த வைஷுவிற்கு தன்விக் குட்டி சொன்ன செய்தி இன்ப அதிர்ச்சியாக இருந்தது!

அவள் அடுத்து ஆக்சனில் இறங்கினாள்!

அந்த பார்த்தி வந்து ஏதும் குட்டைய குழுப்புவதற்கு முன். நாம் முந்திக்கொண்டு விட வேண்டும் என்ற தீர்மானத்துடன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!