Skip to content
Post Views: 12,735
அத்தியாயம் 19
“ம்மா அஞ்சு நாள்லாம் லீவ் போடவே முடியாது. கல்யாணம் ஞாயித்துக்கிழமை. வெள்ளிக்கிழமை காலேஜ் முடிச்சிட்டு வந்தேன்னா போதும்” என்றாள் விஷாலினி.
“மூனு நாளைக்காவது நலங்கு வைக்கனும் விஷாலினி” என்றார் கெஞ்சலாக.
“அவங்களே கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னதான் வருவாங்களாம், மாமாகிட்ட சொல்லியிருக்காங்க. எனக்கு மட்டும் எதுக்கு மூனு நாளைக்கு நலங்கு? எல்லாம் ஒருநாள் வச்சா போதும்”
Advertisement
“விஷ்ணுதம்பி வேலை அப்படி. அவங்களோட போட்டி போடுவியா?” என அதட்டினார் மேகலை.
“போட்டிலாம் இல்லம்மா. உண்மையாவே லீவ் தரமாட்டாங்க. ஃபைனல் இயர் இல்லையா?” என்றாள் கொஞ்சலாக.
“உன் வசதி கேட்டுட்டுத்தான டேட் ஃபிக்ஸ் பண்ணினோம்? இப்போ இப்படி சொன்னா எப்படி?”
Advertisement
“கல்யாணத்துக்கு என்னை கேட்டுத்தான் ஃபிக்ஸ் பண்ணுனிங்க. ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி நாலஞ்சு நாள் லீவ் போடனும்னு சொன்னிங்களா? இப்போ திடீர்னு சொன்னா நான் என்ன பண்ணட்டும்?” என்றாள் பாவமாக.
Advertisement
“நான் உன் மாமாகிட்ட சொல்றேன். நீ அங்க சொல்லிக்கோ” என்று இணைப்பை துண்டித்து, கோபாலனிடம் புகார் சொன்னார் மேகலை.
பத்து நாள்களுக்கு முன்னே வந்தவன் ஆர்வத்தோடு விஷாலினியை தேடியதும், மாடிக்கு சென்று வந்தபின்னே கோபத்தோடு இருந்ததும், அடுத்தநாள் வரை விஷாலினியை பார்க்காமலே காஞ்சிபுரம் சென்றதையும் நினைத்த கோபாலன், இதை மகனே கேட்கட்டும் என, விஷ்ணுவிற்கு அழைத்து விசயத்தை சொன்னார்.
“இதெல்லாம் நீங்க பார்க்கமாட்டிங்களாப்பா?” என கடிய, “எனக்கு விஷாலினியை அதட்ட மனசு வரமாட்டேங்குதுடா” என்றார் பாவமாக.
Advertisement
இணைப்பை துண்டித்தவன், விஷாலினிக்கு அழைத்தான். அச்சோ இவன்கிட்ட சொல்லிட்டாங்களா? ஏற்கனவே என்மேல கோபத்துல இருக்கான். அட்டன் பண்ணி ஹலோ சொன்னாலும் திட்டுவான், ‘ம்‘ சொன்னாலும் திட்டுவான் என்ற தயக்கத்தோடே அழைப்பை ஏற்றவள், “நல்லாயிருக்கிங்களா?” என்றாள்.
“கல்யாணத்தை தள்ளி வச்சிடலாமா? இல்ல ஒரேடியா நிறுத்திடலாமா?” என்றான் ஏக கடுப்போடு.
“உண்மையா டியூட்டி இருக்குங்க” என்றாள் பாவமாக.
விஷ்ணு அமைதியாக இருக்க, “ஃபோட்டோ கேட்டேன். அனுப்பவேயில்ல” என்றாள் குறையாக.
“அது ஒன்னுதான் குறைச்சலா இப்போ? முதல்ல உனக்கு என்மேல விருப்பம் இருக்கானே இன்னும் தெரியல. அவசரப்பட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன்” என்றான் கடுப்பாக.
“அதெல்லாம் இருக்கு”
“வாய்ல எதாவது வந்திடப்போகுது. வைடீ போனை” என்று இணைப்பை துண்டித்தான்.
‘கல்யாணத்துக்கு முன்னாடி டிபி. ல உங்க ஃபோட்டோ வைக்க ஆசையா இருக்கு. அனுப்பி விடுங்க’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள் விஷ்ணுவிற்கு.
நான்கு நாள் முன்னே, கிரேட் விஷ்ணுவர்தனோட தங்கச்சி வாழ்க்கையை கெடுத்தவனை சும்மா விடலாமானு கோபம் ஆகிடுச்சுங்க. அதனாலதான் காவ்யாக்கா வாழ்க்கையை சரி பண்ண நினைச்சேன். என் மனசுல உள்ளதை சொன்னாதான உங்களுக்கு தெரியும்னுதான் சொன்னேன்.
அன்னைக்கே எல்லாமும் சொல்லிட்டேன்ல? இனி காவ்யாக்கப் பத்தி பேசமாட்டேன். என் கால் அட்டன் பண்ணுங்க. மெஸேஜ்க்கு ரிப்ளை பண்ணுங்க’ என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.
விஷாலினியின் குறுஞ்செய்தியைப் பார்த்த பின்னே கோபம் குறைந்தபோதும், விஷ்ணு எதற்கும் பதிலளிக்கவில்லை.
எனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சும் காவ்யாவைப் பத்தி பேசி, என்னையவே அவ வாழ்க்கையை சரி பண்ண யோசிக்க வச்சிட்டாளே… என்று நினைத்திருக்க, ‘கொடுக்கலனா போங்க, ஒரு வாரத்துக்கு அப்புறம் ஜோடியா வச்சிக்கிறேன்’ என்று மீண்டும் செய்தி அனுப்பினாள்.
பார்த்தவனுக்கு சிரிப்பு எட்டிப்பார்த்தது. காவ்யாவைப் பற்றி விஷாலினி பேசியதும் உண்மையில் கோபம்தான் வந்தது விஷ்ணுவிற்கு. இரண்டு நாள்களாய் இதைப்பற்றிய தீவிர யோசனையில் இருந்தான்.
விஷாலினி சொன்னதற்காக மட்டுமல்ல. தாய் தந்தையின் நிம்மதிக்காக என்றும் யோசித்தான். நான் பொண்டாட்டியோடு வாழும்போது, நிச்சயம் அவளின் தனிமை வாழ்க்கை பெற்றோரை மிகவும் பாதிக்க செய்யும்.
தனக்கு திருமணம் என்று யோசிக்காதவரை விஷ்ணுவும் இதைப்பற்றி யோசிக்கவில்லை. தொழில் முறையில் பழக்கம் உள்ளவர்களுக்கு, தானே பத்திரிக்கை வைப்பதாகவும், சொந்த ஊரில் உள்ளோர்களுக்கு மட்டும் நீயும் வரவேண்டும் என்று கோபாலன் வற்புறுத்தினார்.
தந்தையின் ஆசைக்காக செங்கற்பட்டு சென்றிருந்தான். முக்கிய உறவினர் வீட்டிற்கு மட்டுமே விஷ்ணு சென்றான். காவ்யா வாழ்க்கை என்னானது என்றுதான் அனைவரும் கேட்டது. படிச்சிட்டிருக்கா. படிப்பை முடிச்சதும் எல்லாம் சரியாகிடும் என்றிருந்தார் பிரபாவதி.
அன்னை பதிலளித்தபோதும், ‘வாழ்க்கையை விட படிப்பா முக்கியம்? புருசனோட வாழ்ந்த புள்ள, வாழவெட்டியா வீட்டுல இருக்கும்போது மகனுக்கு கல்யாணம் வச்சிருக்கிங்க’ என்று குறைபட்டனர்.
தாய் தந்தையின் மனவலி அவர்கள் கண்ணில் தெரிந்தது. அப்பாம்மாக்கு துரோகம் பண்றவங்க இப்படி வாழ்க்கையை கொஞ்ச நாளாவது வாழ்ந்துதான் ஆகனும். அப்போதான் பெத்தவங்க வலி புரியும். காவ்யாக்கு இருபத்திநாலு வயசுதான் ஆகுது. பி.ஹெச்.டி முடிக்கட்டும். எல்லாம் தானா சரியாகிடும்’ என்றிருந்தான் விஷ்ணுவர்தன்.
திட்டினாலும் கூட, நாலரை வருடங்களுக்குப் பிறகு காவ்யாவைப் பற்றி விஷ்ணு பேசியது பெற்றவர்களின் துயரை துடைத்திருக்க, அவர்களின் மன நிம்மதியை முகம் காட்டிக்கொடுத்தது.
பெற்றோர் நிம்மதிக்காக எதாதவது செய்ய வேண்டும் என்று அப்பொழுதே யோசித்தான்தான். ஆனால் தங்கை செய்த நம்பிக்கை துரோகம், அதனால் பெற்றோர் அடைந்த வேதனை, அவமானம் போன்ற நினைப்போடு, வீட்டிற்கு தெரியாமல் திருமணம் முடித்தவனிடம் தங்கையை ஏற்றுக்கொள் என்று நிற்பதா?
அப்படி சரிபடுத்தித் தரும் வாழ்வு காவ்யாவிற்கு சந்தோசத்தை கொடுக்குமா? பெற்றோருக்கு மரியாதையாக இருக்குமா? என்று பலமாய் யோசித்தான்.
பத்து நாள்களுக்கு முன்னே, இன்னொரு வேலவனாக என் புருசன் வேண்டாம் என்று விஷாலினி சொன்னது, அந்த நேரம் கோபத்தை வர வைத்திருந்தாலும், காஞ்சிபுரம் வந்தபின்னே அந்த வார்த்தையே மனதில் சுழன்றுகொண்டிருந்தது.
அதிலும் அதை சொல்லும்போது விஷாலினி முகத்திலிருந்த வேதனை விஷ்ணுவை அசைத்தது. காஞ்சிபுரம் வந்த இரண்டாம் நாளே திவாகரைப் பற்றி விசாரித்தான்.
காவ்யா அவனைவிட்டு வந்தபின்னே தொழிலில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறான் என்றும், முன்பை விட பலமடங்கு சம்பாதிக்கிறான், என்றும் தெரிந்தது.
சென்னையில் அவனின் கம்பெனிக்கு சென்று விசாரித்ததில், பணம் சம்பாதிப்பது மட்டுமே லட்சியம், குறிக்கோள். அதுமட்டுமே வாழ்க்கையில் அனைத்தையும் அடைய வைக்கும் என்ற நினைப்பில் இருக்கிறான் என்றும் புரிந்தது.
திவாகர் வீட்டில் வேலை செய்யும் பணியாட்களிடம் விசாரித்ததில், அவள் இல்லையென்றால் என்ன? விவாகரத்து செய்திடலாம். வேறு பெண்ணை பார்க்கிறேன் என்று பெற்றோர் இரண்டு வருடங்களாக சொல்லிக்கொண்டிருக்கிறார்.
பொண்டாட்டி இல்லாம கூட வாழ்வேன், ஆனா இன்னொரு கல்யாணம் செய்ய மாட்டேன். எத்தனை வருசமானாலும் காவ்யா என்னைத் தேடி வருவாள் என்று திவாகர் கூறியிருப்பதையும் அறிந்தவன், சுலபமாக அவனை வழிக்கு கொண்டுவரும் வழியை அறிந்திருந்தான். ஆனால் தனது திருமணம் முடிந்தபின்னே செயலாக்க திட்டமிட்டிருந்தான்.
காவ்யா வாழ்வை பற்றி இத்தனை யோசித்தாலும், அவளிடம் முன்போல் பேசும் எண்ணமோ, கணவனைப் பற்றிய விசாரணைக்காக என்றேனும் கூட அவளிடம் பேசும் எண்ணமோ வரவேயில்லை விஷ்ணுவிற்கு.
தங்களுக்கான தனிமையில் கூட காவ்யாவைப் பற்றி நினைக்கிறாள் என்று விஷாலினி மேலிருந்த கோபம், இன்று டிபியில் போட்டோ வைக்க கேட்டதும் குறைந்திருக்க, இளகிய முகத்தோடு காணப்பட்டான் காவல்நிலையத்தில்.
தந்தையிடமிருந்து வந்த அழைப்பை ஏற்றான் விஷ்ணு. “விஷ்ணு, காவ்யா பத்தி பேசுறேனு கோபப்படாதடா, உன்கிட்ட இதை சொல்லாம என்னால இருக்க முடியல. எதோ கேட் பரிச்சையாம். சென்ட்ரல் கவர்மண்ட் பரிச்சையாம், அதுல காவ்யா பாசாகியிருக்காளாம், நல்ல மார்க்ல பாசாகியிருக்காளாம். நல்ல வேலை கிடைக்கும்னு சொல்றாடா” என்றார் பெரும் மகிழ்வோடு.
“ம் கிடைக்கும்ப்பா” என்றவன், மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் “நான் அப்புறம் பேசுறேன்ப்பா” என்று இணைப்பை துண்டித்தான்.
*** *** *** *** *** ***
வெள்ளிக்கிழமை மாலை வீட்டிற்கு வந்தாள் விஷாலினி. கோபாலனே சென்று அழைத்து வந்திருந்தார். மேகலையின் அண்ணியும், அவரின் மகளும் வந்திருப்பதாக சொல்லி, “மேகலை தனியா இருக்கும்னு வந்திருக்காங்க விஷாலினி, அவங்களை ஏதும் சொல்லிடாத” என்று அறிவுறுத்தியே அழைத்து வந்திருந்தார் கோபாலன்.
வீட்டிற்குள் வந்ததும், சாந்தியையும் ராகப்ரியாவையும் பார்த்தாள். “வாங்க கல்யாணப்பொண்ணே” என வரவேற்றாள் ப்ரியா.
வரவழைத்த சிரிப்பை உதிர்த்து அறைக்குள் சென்று கல்லூரி பையை வைத்து முகம் கழுவி வந்தாள். “மதியம் என்ன சாப்பிட்ட?” என்றார் மேகலை.
“சாப்பாடுதான்ம்மா”
“எதாவது சாப்பிடுறியா? இல்ல டீ போடவா?”
“டீதான் வேணும். நானே போட்டுக்கிறேன்” என்று கிச்சன் நோக்கி செல்ல, “ம்ஹும்… கல்யாணப்பொண்ணு அடுப்படிக்கு போகக்கூடாது. சூடேது பட்டுடப்போகுது” என்று மறுத்தார் சாந்தி.
அமைதியாக அமர்ந்துகொண்டாள் விஷாலினி. இவர்கள் இருக்கிறார்கள் என்றதுமே திருமண சந்தோசம் மட்டுப்பட்டது. எதோ வேறு வீட்டில் இருப்பதை போன்ற உணர்வில் அமர்ந்திருந்தாள்.
சற்று நேரத்தில் டீயை கொடுத்து, “சீக்கிரம் குடி. மருதாணி வைக்கனும்” என்றார் மேகலை.
டீயை குடித்துக்கொண்டே, சாந்தி மற்றும் ப்ரியாவின் வரவை குறுஞ்செய்தி மூலம் விஷ்ணுவிற்கு தெரிவித்தாள். அரைமணி நேரம் கழித்து பார்த்தவன், விஷாலினிக்கு அழைத்து “கல்யாணத்துல இதெல்லாம் பார்க்கக்கூடாது” என்றான் விஷ்ணு.
“மருதாணி வைக்கனும், நான் வைக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்தாள். பிறகு காவ்யா மருதாணி வைத்துவிட்டாள். அன்றிரவு தூங்கப்போகும் வரை காவ்யாவை தன்னோடே இருக்க கேட்டுக்கொண்டாள் விஷாலினி.
அடுத்தநாள் காலை கோபாலன் தம்பி குடும்பமும் வந்துவிட்டனர். காலை, மதியம் நலங்கு வைத்தனர் விஷாலினிக்கு. உடைமாற்றுவது, குளிப்பது என்று நேரம் பரபரப்பாக சென்றதோடு, ஒவ்வொரு விசயமும் விஷ்ணுவிற்காக என்று உணர்த்த, மனம் கொண்ட சந்தோசம் முகத்தை பொலிவாக்கியது.
“என் பொண்ணுக்கு கல்யாணக்களை வந்துடுச்சு” என்று மகிழ்வோடு மகளின் கன்னம் தடவி நெட்டி முறித்தார் மேகலை.
பிற்பகல் மூன்று மணிபோல் சென்னை வந்த விஷ்ணு, மண்டபத்திற்கு சென்று, மேடை அலங்காரம், சமையல் போன்ற அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்து ஐந்து மணிபோல் வீட்டிற்கு வந்தான்.
வீடே சொந்தங்களால் நிரம்பியிருந்தது. விஷ்ணு அருகில் இல்லாதது காவ்யாவிற்கு வசதியாய் போக, அவளின் விருப்பத்திற்கு வீட்டினை அலங்கரித்திருந்தாள் மிக அழகாக.
வீட்டிற்குள் நுழைந்ததும் “வீடு பெயிண்ட் பண்ணுனிங்களாப்பா? அம்மாக்கும் உங்களுக்கும் வேலை அதிகமாகியிருக்குமே” என்றான் அக்கறையோடு.
“பெயிண்ட்டரோட மகன் கல்யாணத்துல நம்ம வீட்டை பெயிண்ட் பண்ணலனா எப்படி?” என சிரித்து, போன வாரமே செய்தாச்சு. எனக்கும் உன் அம்மாக்கும் பெருசா வேலை இழுக்கல. ஆள் வச்சிதான் செய்தேன், கவலைப்படாத” என்றார் புன்னகையோடு.
சொந்தங்களின் நலன் விசாரிப்பிற்கு பின்னே, “கவியரசும், கனிமொழியும் எங்க சித்தப்பா?” என்றான்.
“வந்ததுலயிருந்து அவங்க விஷாலினி வீட்டுலதான் இருக்காங்க” என்றார் இராமன்.
“சரி போய் குளிச்சுட்டு வா, ஒரு நலங்காவது வைப்போம்” என்றார் பிரபாவதி.
இவன் குளித்து வருவதற்கும், விஷாலினி ஜன்னல் வழியாக விஷ்ணுவைப் பார்ப்பதற்கும் சரியாக இருக்க, ‘வேஷ்டி சர்ட்டில் முதல்முறையாக பார்த்தவள் கண்கள் அகன்று விரிந்து, பின்னே சிரம் தாழ்ந்து, பிறகு அவசரமாய் மறைந்தவளை நினைத்து புன்னகைத்தான் விஷ்ணுவர்தன்.
“ரெடியா விஷ்ணு? வா” என்று இராமன் அழைக்க, தனது தந்தையிடம், “அவளுக்கு நலங்கு வைக்கலயாப்பா? நைட் டிரஸ்சோட சுத்திட்டிருக்கா?” என்றான் விசாரணையாக.
“இப்போதான் குளிச்சி வெளில வந்த? அதுக்குள்ள எப்போ பார்த்த?” என்று கிண்டலடித்தார் விஷ்ணுவின் சித்தி.
“ஜன்னல்ல நின்னுட்டிருந்தா சித்தி” என்றான் சிரிப்போடு.
“காலைல, மதியம், இப்போனு மூனு முறை குளிச்சு, டிரஸ் மாத்தி டையர்டாகிட்டா. பியூட்டிஷன் வரவரைக்கும் அந்த டிரஸ்ல இருக்கலாம்னு இருந்திருப்பா. அவங்க வந்த பின்ன விஷாலினியை ரெடி பண்ணுவாங்க. எட்டு மணிக்கெல்லாம் மண்டபத்துக்கு போயாகனும்ல? அதனால சீக்கிரமே நலங்கை வச்சிட்டோம்” என்று மகனுக்கு ஆசையோடு நலங்கு சுற்றினார் பிரபாவதி.
நலங்கு முடித்து ஏழு மணிபோல் பெண்ணழைப்பு பொறுப்பை தம்பியிடம் ஒப்படைத்து, கோபாலனும், விஷ்ணுவும் மண்டபத்திற்கு கிளம்பினர்.
தோழிகள், விஷ்ணுவின் சித்தப்பா மக்கள், காவ்யா, மற்று மேகலையின் அண்ணி, அண்ணன் மகள் ஆகியோருடன் மண்டபத்தினுள் நுழைந்தாள் விஷாலினி.
தங்கநிற ஜரிகையில் குங்குமம் நிற பட்டுடுத்தி, மணப்பெண்ணிற்குரிய அலங்காரத்தோடு… பொன் நகையும், அவளின் புன்னகையும் கூடுதல் அழகை சேர்த்திருக்க, சொக்கித்தான் போனான் விஷ்ணுவர்தன்.
“அண்ணி உங்களுக்கு வெக்கமே வராதா?” என்று கனிமொழி கேட்க, “சந்தோசப்பட வேண்டிய நேரத்துல எதுக்கு வெக்கப்படனும்?” என்றாள் தன்னிரு புருவம் உயர்த்தி.
தள்ளி நின்றிருந்தாலும் அவளின் உதட்டசைவில் உதிர்த்த வார்த்தைகளை கணித்தவன், “ம்க்கூம் இவ வெக்கப்பட்டுட்டாலும்” என முணுமுணுக்க, “விஷ்ணு… யார் வந்திருக்காங்க பாரு” என்று கோபாலனின் உயர்ந்த குரலில் அவளிடமிருந்து பார்வையை விலக்கினான்.
அதன்பின்னே நிச்சயதார்த்தம், விருந்து, உடன் வேலை செய்தவர்கள், கல்லூரித் தோழர்கள் வருகை என்று அவர்களை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கவே, விஷாலினியிடம் தனித்து பேச வாய்ப்பில்லாமல் போனது.
பத்து மணிக்கு மேல் மணமக்களை தனித்து படமெடுக்க அழைத்தனர். இன்முகத்தோடு விஷ்ணுவோடு இணைந்து நின்றாள். இப்பொழுதும் கூட விஷாலினியோடு அதிக நேரமெல்லாம் செலவிட முடியவில்லை விஷ்ணுவால். உயர் அதிகாரிகள், ஆய்வாளர்கள் போன்றோர் வருகையில் அவ்வப்போது விஷாலினியை விட்டு விலகவேண்டியிருந்தது.
பதினொரு மணிபோல் விஷாலினியை ஓய்விற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். விஷ்ணு படுக்க வர ஒரு மணியாகியிருக்க, படுத்தவனுக்கு உறக்கம் வரவில்லை. விஷாலினியின் இன்றைய புதிய ரூபம் விஷ்ணுவின் உறக்கத்தை விரட்டியடித்தது.
error: Content is protected !!