Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒற்றை ஜன்னல்

ஒற்றை ஜன்னல் – 3

அப்படி இப்படி என்று சென்னையில் ஆறு மாதத்தை ஓட்டிவிட்டாள் துளசி ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது, முதல் நாள் பிரேம் அழைத்துச்சென்று வழிகாண்பித்தான் பஸ் என்றால் எப்படி ஒருவேளை பஸ் கிடைக்கவில்லை என்றால் எப்படி மாறி வர வேண்டும் அனைத்தும் சொல்லியிருந்தான்.

 

 

என்றாலும் சட்டென்று வழித்தட எண் குழப்பத்தைக் கொடுக்கும் எங்கே இறங்க வேண்டும் என்று கொஞ்சம் தடுமாற்றம் இருப்பதால் கூர்ந்து கவனித்துக்கொண்டே வருவாள் கொஞ்சம் நாட்களுக்குப் போவதும் வருவதும் எதோ பெரிய சாகசமாகத் தோன்றியது.



Advertisement

 

 

Advertisement

மெல்ல மெல்ல வழி பிடிபட்டது ஷேர் ஆட்டோ பயணத்தைக் கற்றுக்கொண்டாள் தனியே டி.நகர் சென்று வரக் கற்றுக்கொண்டாள் வேலையும் கொஞ்சம் தடுமாற்றமே தன்னால் சரியாகச் செய்ய முடியுமா என்ற பயமே முன்னில் நின்றது, படிப்பில் கெட்டி என்றாலும் இது போன்ற பெரு நகரத்தில் மற்றவர் முன் தான் கொஞ்சம் கீழிருப்பதாக ஒரு எண்ணம் தானே வந்து அமர்ந்துகொண்டது அவள் மனதில்.

Advertisement

 

 

Advertisement

அவர்களுடைய நடை உடை பேசும் முறை அனைத்தையும் பார்த்துத் தயங்கி நின்றாள், வெளியூரிலிருந்து இங்கு வேலைக்கு வைத்திருந்த வாணி நல்ல தோழியாக அமைந்தாள் துளசிக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தாள் வேலை நன்றாகப் பிடிபட்டு தனியே நாலு இடம் போய் வரத் தெரிந்து தன்னால் சமாளிக்க முடியும் என்ற தைரியம் வந்ததும் துளசியிடம் தன்னாலே ஒரு நிமிர்வும் வந்தது.

 

 

 

எப்பொழுதும் போலப் பின்னியிட்ட கூந்தல் தான் என்றாலும் முன்பு போல எண்ணெய்யை வழிய வழிய வைப்பதில்லை அளவாக வைத்து அழகாகப் பின்னலிடுவாள் அவளுடைய நிறத்திற்கு ஏற்ற நிறங்களை வாணி அழகாகத் தேர்வு செய்து தந்தாள் தைரியமாக மற்றவர் கண் பார்த்துப் பேசக் கற்றிருந்தாள்.

 

 

ஜெயந்தி கூட மகளிடம் நொடித்துக்கொள்வார் “கருப்பியை பாத்தியா இந்தச் சம்பளத்துக்கே ஆளு  மினிக்கிகிட்டு இருக்கா, இன்னும் கொஞ்சம் பாக்குற மாதிரி இருந்திருந்தா என்ன ஆகும்” என்று அது அவருடைய பொறாமையின் வெளிப்பாடே அவள் எந்த அழகுசாதனமும் போடாமலே ஒரு தனி அழகில் மிளிர்வதின் வயிற்றெரிச்சல்.

 

 

 

“என்ன சாந்த்தா… துளசி சம்பளப்பணத்தை அனுப்புறாளா ஒழுங்கா ஏன்னா அடிக்கடி வெளில போறா துணிலாம் கூடப் புதுசா நிறையா வாங்குறா அதான் கேக்குறேன்” என்று தங்கைக்குத் தூண்டிலிட.

 

 

“அதெல்லாம் மாசம் பதினெட்டாயிரம் அனுப்புராக்கா அவங்க அப்பாருதான் என்னைத் திட்டுறாரு வெளில தங்கியிருக்க பிள்ளைக்கு ஏதாவது செலவிருக்கும் எதுக்கு இவ்ளோ காசை வாங்குறன்னு, அவ அப்படிலாம் செலவாளியில்ல துணி எடுக்குறதுகூட என்கிட்டே சொல்லிட்டுதான் எடுக்குறா” என்றுவிட “சரிதான்” என்று வைத்துவிட்டார்.

 

 

 

அதற்கிடையில் ப்ரியதர்ஷினியின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக வந்து சேர்ந்தான் ரவினந்தன் அவளைப் போலவே ஐ.டி மாப்பிளை நல்ல சம்பளம், சோழிங்கநல்லூரில் சொந்தவீடு தாய் தந்தை மட்டுமே பார்க்கவும் நல்ல வாட்டசாட்டமாக அவள் எதிர்பார்த்தபோல இருந்தான்.

 

 

 

இரண்டு குடும்பங்களுக்கும் ஒத்து போய்விட்டது அனைத்தும் சரியாக இருக்கவும் திருமணத்தை முடிவு செய்துவிட்டனர் முதலில் நிச்சயம் வைத்துக்கொள்ள முடிவு செய்தனர், அக்கா மகளின் நிச்சயத்திற்கு குடும்பத்தோடு வந்துவிட்டார் சாந்தா.

 

 

தாயை விடத் தந்தையை பார்த்ததும் அழுகை வந்தது துளசிக்கு மகளைத் தன்னோடு சேர்த்து நிறுத்தியவர் “என்னத்தா சின்னப் புள்ள மாதிரி அழுவுற” என்றவருக்குமே குரல் கொஞ்சம் மாறித் தான் இருந்தது.

 

 

“ஏன் பா எளச்சு போனமாதிரி இருக்கீங்க” என்றாள் தந்தையின் கையை வருடிக்கொண்டே.

 

 

 

“ஆமா உங்க அப்பா எப்போ புஷ்டியா இருந்தார் இப்போ எளச்சு போக, என்ன கொஞ்ச நாலா இருமல்தான் விடாம இருக்கு சாப்பாடும் கம்மி ராத்திரி தூக்கமும் சரியாயில்ல மருந்து சாப்பிடுறாரு ஒன்னும் கேக்கல, டாக்டர்கிட்ட காமிக்க சொன்னா கேட்டாத்தானே” என்றார் சாந்தா.

 

 

 

“ஏன்பா… இங்க நான் வேலைப்பாக்குற ஹாஸ்ப்பிட்டல்லயே காமிக்கலாம்பா என்றாள் ஏனோ தந்தை சரியாக இருப்பதாகத் தோன்றவில்லை அவளுக்கு.

 

 

 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல துளசி வயசாவுதுல்ல அதான் சரியாப்போவும் முன்னைக்கு இப்போ பரவாயில்ல” என்று வர மறுத்துவிட்டார்.

 

 

 

ரவினந்தனினின் பெற்றோர் மிகவும் நல்ல மாதிரியே இருந்தனர் எந்தப் பந்தாவும் இல்லாமல் அனைவரோடும் கலந்து பேசினர்,  துர்காவும் ஊரிலிருந்து வந்திருந்தாள் நிச்சயத்திற்கு,  சிறிய ஹால் ஒன்று எடுத்து நன்றாகவே செய்தனர் ப்ரியாவின் வீட்டினர், பெண்ணின் சித்தி என்று சாந்தாவை அறிமுகப்படுத்த அவரோடு பேசிக்கொண்டிருந்தார் ரவினந்தனின் தாய் மல்லிகா.

 

 

 

 

துளசியை பார்த்தவர் “மாப்பிளை பாக்குறீங்களா” என்றார் சாந்தாவிடம்.

 

 

 

“இன்னும் ஆரம்பிக்கல ஆனா பாக்கணும்,  எங்க இவ நிறத்துக்கு எவ்ளோ தேடணுமோ தெரியல” என்றவரை கண்டனமாகப் பார்த்தார் மல்லிகா.

 

 

 

“இங்கபாருங்க பிள்ளையை அப்படி  சொல்லாதீங்க நம்ம பிள்ளையை நாமே அப்படி சொல்லலாமா,  என்ன கலர் பெரிய கலர் உங்க பொண்ணு  நல்லா கண்ணனுக்கு லச்சணமா இருக்கா அழகா இருக்கா எங்க சொந்தத்தலையும் தெரிஞ்ச இடத்துல சொல்லி வைக்கிறேன்”  என்றார் அவர்.

 

 

 

 

அதைக் கேட்டு நின்ற பிரியாவிற்கு எரிச்சலாக இருந்ததது என்னுடைய நிச்சயம் இவர் என்னவென்றால் மருமகளை விட்டு இந்தக் கருப்பியை கட்டிக்கொண்டு நிற்கிறாரே என்று, அதற்காக அவளையே  பிடித்துத் தொங்க முடியுமா பெண் எடுக்கும் வீட்டினருடன் ஒரு சுமுகமான உறவை வளர்த்துக்கொள்ள விரும்பினார் மல்லிகா அவருக்கு அது மிகவும் பிடித்த  விஷயம் கூட.

 

 

 

நிச்சயம் நல்லபடியாக  நடந்து முடிந்தது திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இடைவெளி இருந்தது ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள  அந்த அவகாசம் தேவை என்று கேட்டிருந்தனர் மணமக்கள், அப்படியே நாளும் குறிக்கப்பட்டது அதன்பிறகு  ப்ரியா எப்பொழுதும் அலைபேசி அழைப்பிலே இருந்தாள் முதலில் வாரத்தில் ஒருநாள் ரவியுடன் வெளியில் சென்றது  பிறகு  வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் என்று மாறியது.

 

 

 

 

பல சமயங்களில் மாலை வீட்டிற்க்கே வந்து ரவிநந்தன் அவளை அழைத்துச்செல்வான் அதை விழிகள் விரிய பார்த்து நின்றாள் துளசி காரணம் துர்காவின் திருமணம் முடிவு செய்திருந்த சமயம் பூ வைத்து அவர்கள் உறுதி செய்து சென்றிருக்க திருமணத்திற்கு இடையிலிருந்த மூன்று  மாதமும் கண்கொத்தி பாம்பாக அவளைக் கவனிப்பார் சாந்தா.

 

 

 

 

சேகரிடமிருந்து அழைப்பு வந்தாலும் அருகிலே நின்று அவர்கள் பேசுவதை நோட்டம் விடுவார்,  ஒருமுறை பார்க்க வரட்டுமா என்று சேகர் கேட்க நேரடியாகச் சந்தாவே மறுத்துவிட்டார் “அதெல்லாம் எங்க குடும்பத்தில வழக்கம் இல்ல மாப்பிள்ளை,  ஊர்ல தப்பா பேசுவாங்க” என்று நயமாகச் சொல்லிவிட்டார்.

 

 

 

 

இதில் பெரும் பங்கு ஜெயந்தியுடையது “இங்கபாரு சாந்தா கல்யாணம் முடிவாயிடுச்சுனு அதிகமா பேசவோ பழக்கவோ விடாத அப்பறம் ஏதாவது பிரச்சனைனா நம்ம பொண்ணு பேருதான் கெட்டு போகும்” என்று தங்கைக்கு அறிவுரை வழங்கினார் அந்தப் பெரியம்மாவா இது என்று ஆச்சர்யம்தான் துளசிக்கு.

 

 

 

அதோடு மட்டும்  இல்லையே பிரேமின் திருமணம் முடிவானப்பிறகு ஒருமுறை ஆனந்தியை சினிமாவிற்கு அழைத்துச்செல்ல விரும்புவதாக அவன் கேட்க அத்தனை ஆட்டம் ஆடித்தீர்த்தார் அன்று.

 

 

 

“வளர்ப்பு சரியில்ல என்னதான் கல்யாணம் முடிவானாலும் உன்கூட சினிமாவுக்கு வர அளவுக்கு அவளுக்குத் துணிச்சல் இருக்கு பாரு” என்று அவளை அன்று அவ்வளவு பேசினார்,  இன்றுவரை ஆனந்திக்கு அது தெரியாது வேறு காரணம் சொல்லி அன்று தவிர்த்துவிட்டான் பிரேம், இன்று மகளை வாசல்வரை வந்து வழியனுப்புகிறார் என்ன சொல்ல.

 

 

 

“பிரியா சொன்னா புரிஞ்சிக்கோ மூணு நாளைக்கு என்னால எங்கேயும் வர முடியாது நான் அம்மா அப்பாவோட திருவண்ணாமலை போறேன்” என்று பொறுமையாகவே அவளுக்கு விளங்கவைக்க நினைத்தான் ரவிநாதன்.

 

 

 

“ஏன்? அப்புறம் போனா என்ன அதும் திருவண்ணாமலைக்கு மூணு நாள் எதுக்கு ஒரே நாள்ல போயிட்டு வந்திடலாம்” என்று வேறு வாதம் புரிந்தாள் அவனிடம்.

 

 

 

“உனக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா இந்த மூணு மாசத்துல வாரத்துல பாதிநாள் உன்கூடதான் வெளில சுத்துறேன், ரொம்ப வர்ஷமாவே அம்மாவுக்காக நான் செய்ற ஒரு விஷயம் வெள்ளிக்கிழமை சாயந்திரம் அவங்க கூடக் கோவில் போறது அவங்க என்னை வேற எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டாங்க”.

 

 

 

“இதுவும் கட்டாயம் இல்ல ஆனா நான் போனா அவங்க முகத்துல ஒரு சந்தோசம் தெரியும் அதுக்காகவே அதை நான் மிஸ் பண்ண மாட்டேன் சண்டே கூட எங்கேயும் கூப்பிட மாட்டாங்க ஆனா கிட்டத்தட்ட ரெண்டு மாசமா அவங்ககூட கோவிலுக்குக் கூட நான் போகல”.

 

 

“அம்மா அதைப்பத்தி என்கிட்டே ஒண்ணுமே கேட்கவும் இல்ல ஆனா எனக்கே கஷ்டமா இருக்கு அவங்களுக்காக நான் ஒதுக்குற நேரம் அதுதான் அதையும் விட முடியாது இனிமே ஃப்ரைடே எங்கேயும் கூப்பிடாத, அதேமாதிரி நீ நம்ம வீட்டுக்கு வந்ததும் நாம எல்லாருமே அன்னைக்கு மட்டும் கோவிலுக்குப் போலாம்” என்க அவளுக்குத் தான் எரிச்சலாக இருந்ததது.

 

 

 

“திருவண்ணாமலை போறது மாத்த முடியாது மண்டே ஈவினிங் பாக்கலாம்” என்றவன் மேலே பேசாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

 

 

 

அம்மாவிடம் புலம்பித்தள்ளிவிட்டாள் ப்ரியா “சரிவிடு எல்லாம் கல்யாணம் வரைக்கும்தான் கொஞ்சம் கொஞ்சமா உன்பக்கம் இழுத்துக்கோ எல்லாம் உன் சாமர்த்தியம்” என்று மகளுக்கு நல்ல அறிவுரை வழங்கினார் அந்தத் தெய்வீக தாய்.

 

 

திங்கள் கிழமை வந்தவன் மதியம் உணவு நேரம் அவளுக்கு அழைக்க அவன் அழைப்பை எடுக்கவில்லை அவள், திருவண்ணாமலையில் இருந்துகூட அழைத்தான் சிலமுறை கோபத்தில் அவனிடம் பேசுவதை தவிர்த்தாள் ப்ரியா இன்றும்  அவள் எடுக்காமல் போக அவனுக்கும் கோபம் வந்தது சரிதான் போடி என்று விட்டுவிட்டான்.

 

 

அவன் மீண்டும் அழைக்காததில் இன்னும் கோபம் கொண்டாள் ப்ரியா, அதற்கிடையில் துளசிக்காக ஒரு வரனை கொண்டுவந்தார் மல்லிகா “தமிழ்ச்செல்வன்” மாநிறமாக இருந்தான் மின்சார துறையில் வேலை தந்தை இல்லை தாய்  மட்டுமே ஒரு அக்கா அவளைக் கட்டிக்கொடுத்துவிட்டார்கள்.

 

 

நல்ல சம்பளம் சொந்த ஊர் செஞ்சி, அங்கு விவசாய நிலம் சொந்தமாகப் பெரிய வீடு அனைத்தும் உண்டு அவனுடைய வேலைக்காகத் தாயுடன் இங்கே திருவள்ளூரில் தனி வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள் கொஞ்சம் வசதியானார்களே, தமிழ்ச்செல்வனை நேரடியாகவே தெரியும் மல்லிகாவிற்கு தங்கமான பையன் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை ஆகையால் தைரியமாக அவனுக்குத் துளசியை முடிக்க நினைத்தார்.

 

 

 

சாந்தாவுக்கும் விஜயகுமாருக்கும் அவர் சொன்னா விஷயங்களை வைத்து இந்தச் சம்மந்தம் சரியாக வரும் என்றே தோன்றியது, தமிழ்ச்செல்வனின் வீட்டிலும் துளசியை பற்றி அனைத்தையும் கூறியவர் அவளுடைய புகைப்படத்தையும் காட்டியிருந்தார் பார்த்ததுமே தமிழ்ச்செல்வனின்  மனதில் ஒட்டிக்கொண்டாள் துளசி.

 

 

மகனின் விருப்பமே என்று கூறிய அவனின் தாயும் ஜாதகம் சேர்ந்தால் பெண் பார்க்கலாம் என்று கூற, பிரேமின் மூலம் இருபக்கமும் ஜாதகமும் கைமாறியது பொருத்தம் அம்சமாக இருக்க பெண் பார்க்க வருகிறோம் என்றார்கள் அவர்கள்.

 

 

 

அனைத்துக்கும் சட்சட்டென்று நடந்தது, குல தெய்வத்துக்குக் காசு முடிந்து வைத்தார் சாந்தா அனைத்தும் வேகமாக நடக்கிறது தடங்கல் ஒன்றும் வந்துவிடக் கூடாது என்ற பயம் அவருக்கு.

 

 

 

நான்கு நாட்களுக்குப் பிறகு எப்படியோ சமாதானம் ஆகிவிட்டார்கள் ரவிநந்தனும் ப்ரியாவும் அந்த வாரம் பார்கவியை அழைத்துக்கொண்டு சென்னை வந்தனர் சாந்தாவும் விஜயகுமாரும் மறுநாள் தமிழ்ச்செல்வன் வீட்டிலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள்.

 

 

 

துளசிக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது அவளுக்குப் பெரிதாக  எதிர்ப்பார்ப்புகள் எதுவும் இதுவரை இல்லை எப்படியும் வீட்டில் பார்க்கும் மாப்பிளைத்தான் இவர்தான் மாப்பிளை என்று போட்டோ காட்டியிருக்க கொஞ்சம் பிடிப்பதை போலவும் இருந்தது.

 

 

 

இதுதான் என்று முடிவானால் உறுதி செய்யும்போது வருகிறேன் என்றிருந்தாள் துர்க்கா அதுவும் சரிதான் சும்மா சும்மா வீண் அலைச்சல் என்று சரி என்றுவிட்டார் சாந்தா.

 

 

 

சம்பிரதாய பேச்சுக்கள் முடிய பெண்ணை அழைத்துவிட்டனர் கைகள் வியர்த்துப் பிடித்திருந்த தட்டு நழுவத்தொடங்கியது துளசிக்கு “போக்கா எல்லாரும் வெய்ட் பண்றாங்க” என்று உந்தித்தள்ளினாள் பார்கவி, எப்படியோ அனைவருக்கும் தேநீரை கொடுத்து முடித்தாள் நிமிர்ந்து பார்க்காமல்.

 

 

 

“துளசி இங்க வாம்மா” என்ற மல்லிகா “இவர் தான் மாப்பிள்ளை நல்ல பாத்துக்கோ” என்க அவள் தலை இன்னும் தாழ்ந்தது.

 

 

 

“என்ன தமிழ் பிடிச்சிருக்கா” என்ற மல்காவை பார்த்தவன் “பிடிச்சிருந்ததால தான நேர்ல பாக்க வந்திருக்கோம்மா” என்றவன் “கொஞ்சம் பேசலாமா…” என்றான் பொதுவாக அனைவரையும் பார்த்து.

 

 

 

சாந்த்தா மறுக்கும்முன் மல்லிகா அவரைத் தடுத்தார் “இப்போல்லாம் இதெல்லாம் சாதாரணம், ஏன் என் பையனும் ப்ரியாவும்கூடத்தானே பேசினாங்க என்ன சம்மந்தி சொல்லுங்க” என்றார் ஜெயந்தியிடம்.

 

 

 

“ஆமாம் ஆமாம்” என்ற தாய் மகளின் முகத்தில் கொஞ்சம் கூடத் தெளிச்சமில்லை, இவளுக்கு இப்படியொரு சம்மந்தமா என்ற ஆற்றாமையே இருவருக்கும், வெளியில் மாடிக்குச் செல்லும் படிக்கட்டின் கீழே நின்றிருந்தான் தமிழ்ச்செல்வன் தயங்கி தயங்கி அவன் முன்னிலை வந்து நின்றாள் துளசி.

 

 

 

அத்தனை ரசனையாகப் பார்த்திருந்தான் அவளை “துளசி ரொம்ப அழகான பேர் உங்கள  மாதிரியே” என்றான் அவள் கன்னங்கள் துடுத்தது.

 

 

பொதுவாகச் சில விஷயங்களைப் பேசியவன் திடீரென்று “உங்க பேர் என்ன” என்க.

 

 

 

ஆச்சர்யமாக விழிகள் விரித்து முதல் முறை அவனை நிமிர்ந்து பார்த்தாள் துளசி, அவளைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தவன் “அப்பாடா ஒரு வழியா நிமிர்ந்து பாத்துடீங்க, எங்க கடைசிவரைக்கும் பாக்கவே மாட்டீங்களோன்னு நினைச்சேன்” என்க வெட்கப்புன்னகை அவளை இன்னும் அழகாகக் காட்டியது.

 

 

 

“துளசி… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, உங்க பதிலை எப்படியும் என்கிட்டே சொல்லமாட்டீங்க அப்படி நான் கேக்குறதும் தப்பு பிடிக்கும்னு நம்பிக்கையோடு போறேன்” என்றவன் “நீங்க உள்ள போங்க” என்றான்.

 

 

 

மீண்டும் ஒரு முறை அவனை நிமிர்ந்து பார்த்தவள் என்ன உணர்விது என்ற மயக்கத்தோடே உள்ளே சென்றாள் “எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என் காலத்துக்கு அப்புறம் என் பையனுக்கு ஒரு துணை அது அவன் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும் அவ்ளோதான் நீங்கக் கலந்துபேசி  சொல்லுங்க” என்று அவர்கள் விடைபெற்றனர்.

 

 

அலசி ஆராய்ந்து அனைவருக்கும் இது நல்ல சம்மந்தமாகவே தோன்றியது,  தாயும் மகளும் மட்டும் குறை ஒன்றும் கூறமுடியாமல் முகத்தைத் தூக்கி வைத்திருக்க ப்ரேமும் ஆனந்தியும் கூட “நடத்தலாம்” என்றார்கள், அனைவரின் ஆசியோடும் தமிழ்ச்செல்வனின் வீட்டினர் வந்து பூ வைத்து உறுதி செய்து சென்றனர்.

 

 

நிச்சயம் எல்லாம் தனியாக வைக்கவில்லை ப்ரியா ரவி திருமணம் முடிந்து இவர்களுடையதை வைத்துக்கொள்ளலாம் என்று பேசி முடிவும் செய்துவிட்டனர், துளசியின் கண்களில் கல்யாண கனவுகள் வலம் வந்தது, தமிழ்ச்செல்வனின் பேச்சே அத்தனை அனுசரணையாக இருக்கும் எந்த விஷயத்தையும் சரியான கண்ணோட்டத்தில் பார்த்துச் சரியாக எடுத்துக்கொள்வான்.

 

 

வரம்பு மீறிய பேச்சுக்கள்  இல்லை அவளை மிகவும் உயர்வாக எண்ணவைத்தான் துளசி மெல்ல மெல்ல அவனிடம் மனதை பறிகொடுத்தாள், விரும்பவைத்தான் பெண்ணை அவன் தாயும் அக்காவும் கூட அவளிடம் நல்லவிதமாகவே பேசினர், வாரத்தில் ஒருமுறை அவளைப் பார்க்க வேலை செய்யும் இடத்திற்கு வருவான்.

 

 

நிச்சயம் இரண்டு முழம் மல்லி இருக்கும் அவன் கொண்டுவரும் பையில் “உன் முடிக்கு நிறைய பூ வெச்சுக்கிட்டா அழகா இருக்கும் துளசி” என்பான்.

 

 

 

அவளுக்குப் பிடித்தமான ஏதேனும் ஒரு பொருள் இருக்கும் சாப்பிட “கண்ணுக்கு மை வெச்சுக்கோ துளசி” என்றான் ஒருநாள்.

 

 

 

“என் கலருக்கு நல்லா இருக்காதுன்னு சொல்லுவாங்க” என்றாள் மெதுவாக அம்மாவைக் குறிப்பிட்டு சொல்லாமல் “அப்படின்னு யார் சொன்னா அவங்களுக்கு ரசனை இல்லை, நான் சொல்றேன் மை வெச்சுக்கோ அடுத்த தடவை நான் வரப்போ நீ வெச்சுக்கணும்” என்றான்.

 

 

 

அந்த வாரம் முழுதும் கண்மை வைத்துத் தன்னை மீண்டும் மீண்டும் கண்ணாடியில் பார்த்தாள், நன்றாக இருப்பதாக அவளுக்கே தோன்றியது “சரியாதான் சொல்லியிருக்காங்க நல்லாத்தான் இருக்கு” என்று ரசித்துக்கொண்டாள்.

 

 

 

“ரொம்ப அழகா இருக்கு” என்றவன் விழிகளில் ரசனை கொட்டிக்கிடந்தது, அவளுக்கென்று புடவை சுடிதார் வாங்கிவைப்பான் ஆனால் அவளிடம் கொடுக்கமாட்டான் அவள் வீட்டினர் தவறாக எண்ணக்கூடும் என்று அவனுடைய பீரோவிலே பத்திராடுத்தினான்.

 

 

 

கொலுசு கழுத்துக்கு நெக்லஸ் அனைத்தும் வாங்கிவைத்தான் அவளுக்காக, மிகவும் நேசித்தான் அவளை அவள் தன்னோடு வாழ வரும் நாளுக்காக ஏங்கி காத்திருந்தான் அனைத்தும் ஒரே நாளில் முடிந்துபோனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!