Skip to content
Post Views: 7,709
அத்தியாயம் 6:
சந்தியா சென்றதும் வேலையை முடித்துவிட்டு வந்த ஆதியிடம் “என்ன மச்சான், என்ர சந்தியா தங்கச்சிய பாத்ததும் எகிறிட்ட”
“என்னோட வயல் வேலைய நா பாக்க போனேன். நா ஏன் யாரையோ பாத்து பயந்து போகோணும்” என்றுவிட்டு வீட்டுக்கு கிளம்பினான் ஆதி.
“போ, போ எவ்ளோ நாளைக்குதேன் உன்ர தெனாவெட்டுன்னு பாத்து போடறேன் நானும். என்ர தங்கச்சி உனக்கு கட்டம் கட்டி போட்டா” என்று முணுமுணுத்தான் வசந்தன்.
Advertisement
மதியம் நேரம் கௌரி சந்தியாவின் வீட்டிற்கு சென்றாள். டிவி பார்த்து கொண்டிருந்த செல்வம் “வாடாம்மா” என்றார்.
“சந்தியாவும், அத்தையும் எங்க மாமா”
“உனக்கு சந்தியாவை பாக்கணும்ன்னா நேரா போய் மாடில பாக்க வேண்டியதுதான கௌரிம்மா. இதுல ஊறுகாய் மாதிரி என்ன வேற எதுக்கு கேக்குற” என்றபடி கிட்சனில் இருந்து வந்தார் பத்மா.
Advertisement
“நீங்கதென் என்ன சரியா புரிஞ்சு வச்சுருக்கீங் அத்தை” என்று சொன்னபடி மாடியேறி சென்றாள் கௌரி.
Advertisement
அங்கு சந்தியா யோசனையுடன் பால்கனியில் நின்றிருந்தாள். “என்ன யோசனை மேடம்” என்றபடி அவள் அருகில் சென்று நின்றாள் கௌரி.
“எல்லாம் காதலை பத்திதான்”
“காதலா”
Advertisement
“ம் வசந்த் அண்ணா யாரையோ காதலிக்கிறாராம். கூட படிச்ச பொண்ணாம்”
“உனக்கு யாரு சொன்னா”
“ஏன் அவருதான். நாங்க வயல்ல அவ்ளோ நேரம் அதான் பேசிட்ருந்தோம். என் கல்யாணம் வந்த நேரம் இந்த ஊருக்கு நீ வந்துட்ட. நீதான் என் பொண்டாட்டிக்கு நாத்தனார் முடிச்சு போடணும்ன்னு சொல்லிட்ருந்தார்” என்று சந்தியா சொன்னதும் கௌரி கேவ ஆரம்பித்து விட்டாள்.
“என்ன கௌ விக்கல் எடுக்குதா” என்றாள் சந்தியா.
அவளை கண்ணீருடன் நிமிர்ந்து முறைத்தாள் கௌரி.
“ஏன் கௌரி கண்ணு வேர்க்குது”
“நா அழுவுறேன்”
“ஓ ஏன் பாப்பா அழுவுறாங்க” என்றதும் கோபமாக கிளம்ப போனவளை நிறுத்திய சந்தியா “வசந்த் அண்ணா காதல் கல்யாணம்ன்னு நா சும்மா கதை சொன்னேன்” என்றவளை தோளிலேயே அடித்தாள் கௌரி.
அவள் அடியை வாங்கி கொண்டவள் “இப்ப சொல்லு. உன்னோட காதல் கதையை”
“காதலும் இல்ல, கத்தரிக்காயும் இல்ல”
“பின்ன எதுக்குடி இப்ப ஒப்பாரி வச்ச”
“அது ஏன்னு தெரியல, தானா அழுகை வந்துட்டு” என்ற கௌரியை முறைத்தாள் சந்தியா.
“உண்மையா டி. காதலானுல்லாம் எனக்கு தெரியாது. ஆனா வசந்த் மச்சான எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்ட்ட போய் உன்ன எனக்கு பிடிக்கும். நீ என்ன கல்யாணம் பண்ணிக்க மாமான்னு கேட்டேன். அதுக்கு என்ன திட்டி விரட்டிட்டாரு”
“இது எப்ப நடந்தது”
“எனனோட பதினாறு வயசுல”
“என்ன பதினாறா! அதுக்குதாண்டி உன்ன மாதிரி ஊமை கத்தாளைங்கள நம்பவே கூடாது. சரி அதுக்கு பிறகு அவர்ட்ட பேசுனியா”
“இல்ல”
“ஏன்?”
“அவர்ட்ட அவ்ளோ ஆசையா கல்யாணம் பண்ணிக்கலாம் மாமான்னு கேட்டதுக்கு திட்டி போட்டாரு. பிறவு நா ஏன் திரும்ப போய் பேசோணும்”
“சரி அப்ப சித்ரா அத்தை வசதியான இடத்துல உன்ன கல்யாணம் பண்ணி கொடுக்கணும்ன்னு சொல்லிட்ருக்கு. நீயும் அதுக்கு ரெடியாயிட்ட”
சந்தியாவை முறைத்த கௌரி “நா வசந்த் மச்சான்கிட்ட பிறவு பேசலைன்னாலும், நா என் ஸ்டாண்ட்ல இருந்து மாறல”
“அது வசந்த் அண்ணாக்கு தெரியுமா”
“அது எனக்கு தெரியாது”
“சரி மேல என்ன செய்ய போற”
“தெரியல”
“சரி ஓகே. பத்து மாசத்துல அத்தை பாக்கிற மாப்பிள்ளையை கட்டிக்கிட்டு சந்தோசமா இரு” என்றுவிட்டு செல்ல போனவளை தடுத்தவள் “இவ்ளோ அவசரமா இப்ப எங்கடி போற”
“சாம்பார் வாசனை தூக்கலா இருக்கு. போய் சாப்பிட போறேன்” என்றவளை திட்டி கொண்டே பின்னோடு சென்றாள் கௌரி.
ஆதித்யன் சக்கரை ஆலைக்கு சென்றுவிட்டு மத்திய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்தான். அவன் வந்ததை கூட கவனிக்காமல் குறுக்கும் நெடுக்கும் தாழ்வாரத்தில் நடை பயின்று கொண்டிருந்தான் அருண்.
அவனை சிறிது நேரம் நின்று பார்த்தவன் பிறகு சத்தமாக அருண் என்று அழைத்தான்.
அந்த சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பியவன் “என்னங்ண்ணா” என்றான். அவனை ஒரு மாதிரியாக பார்த்தவன் “எதாவது பிரச்சனையா அருண்”
“அதெல்லாம் இல்லீங்ண்ணா. நாளைக்கு டெஸ்ட் இருக்கு. அத பத்திதான் யோசிச்சுட்டு இருந்தேங்ண்ணா” என்று அவன் சொன்னதை நம்பாமல் பார்த்தவாறு உள்ளே சென்றான் ஆதி.
மாலையானதும் சந்தியாவும் கௌரியும் ஆதியின் வீட்டுக்கு வந்தனர். முற்றத்தில் அமர்ந்திருந்த அருண் கௌரியிடம் “அம்மா வசந்த் மச்சான் வீட்டுக்கு போயிருக்காங் கௌரி. எனக்கு தல வலிக்குது. ஒரு டி போட்டு கொடேன்” என்றதும் கௌரி அடுக்களைக்கு சென்றாள்.
சந்தியா அருணுக்கு பக்கத்தில் இன்னொரு சேரில் அமர்ந்தாள். அவளிடம் “கௌரிக்கு கூட தெரியாத விஷயம் உனக்கு எப்படி தெரியும். சரத் சொன்னானா”
“என்ன விஷயத்தை பத்தி நீ பேசற அருண்”
“தெரியாமத்தான் காலையில ஸ்னேகா பத்தி கவித அனுப்பிருந்தியா”
“ஓ அதுவா. அது ஒரு பார்வேர்ட் மெஸேஜ். கவிதை நல்லாருந்ததேன்னு உனக்கு அனுப்புனேன். நீ இதுக்கு போய் ரகசிய விசாரணை பண்ணிட்ருக்க அருண்” என்று அப்பாவியாக கேட்டவளை முறைத்தவன்
“ஓ அப்ப நான் ஸ்னேகாவ லவ் பண்ற விஷயம் உனக்கு தெரியாது?” என்று கடுப்பாகி கேட்டவனிடம்
“என்ன லவ்வா… பரவால்லையே. நா கூட நீ எழுதியிருந்த மொக்க கவிதைய பாத்து, நீ அந்த சினேகாவ கலாய்ச்சுருக்கன்னுள்ள நினைச்சேன். சூப்பர். லட்டு மாதிரி ஒரு மேட்டர் சிக்கிருக்கு. இத யார்ட்ட சொல்லலாம்” என்று யோசித்தவளை பார்த்து
அடிப்பாவி எப்படி போட்டு வாங்கிருக்கா பாரேன் என்று மனதில் நினைத்தவன் வெளியில் “ஏய் நீ என்ன சொன்னாலும் செய்றேன். ப்ளீஸ். இந்த விஷயம் யாருக்கும், முக்கியமா எங்கண்ணாக்கு தெரியக்கூடாது” என்று கெஞ்சினான்.
சிறிதுநேரம் யோசிப்பது போல் பாவனை பண்ணிய சந்தியா மெதுவாக “ஓகே அப்ப உங்க அண்ணனோட அப்டேட் எனக்கு நீ அப்பப்ப தெரியப்படுத்தனும்”
“எங்கண்ணன பத்தி தெரிஞ்சு நீ என்ன பண்ண போற”
“நீ சின்ன பையன் . உனக்கு அதெல்லாம் புரியாது. இது பெரியவங்க மேட்டர். நா கேட்ட உதவிக்கு யோசிச்சு பதில் சொல்லு” என்றுவிட்டு பின் கட்டுக்கு சென்றாள்.
இவர்கள் முற்றத்தில் அமர்ந்து பேசியதை மேலிருந்த வராண்டாவிலிருந்து பார்த்து கொண்டிருந்தான் ஆதி. அவர்கள் பேச்சு காதில் விழவில்லை.
ரூமிற்க்கு சென்ற அருண் அப்படியும் இருக்குமோ என்று யோசித்தவன், சந்தோஷமாகிவிட்டான்.
சந்தியாவை தன அண்ணனின் மனைவியாக யோசித்து பார்த்தவனுக்கு இதை விட பொருத்தமான ஜோடி அமைய மாட்டார்கள் என்று தோன்றியது.
ஆதி அருணுக்கு தகப்பனை போன்றவன். சிறு வயதிலிருந்தே அருணையும் கௌரியையும் கண்ணின் இமைபோல் பார்த்து கொள்வான். அப்படி பட்டவனின் மண வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதில் மிகுந்த வருத்தம்தான் அருணுக்கு.
இப்பொழுது கம்பீரமும் அறிவும் ஆளுமையும் நிறைந்த தன அண்ணனுக்கு, சந்தியா போல அழகும் அன்பும் அறிவும் நிறைந்த பெண் மனைவியாக வந்தால் மிக நன்றாக இருக்குமென்றே தோன்றியது அருணுக்கு.
இந்த ஒரு மாதமாக பார்த்ததில் மிகுந்த விளையாட்டு நிறைந்த பெண் போல தோன்றினாலும் சந்தியா யாரையும் காய படுத்தியதில்லை. வகுப்பில் யாருக்கு கஷ்டம் என்றாலும் முதல் ஆளாக உதவிக்கு நிற்பாள். இதனாலே ஆண் பெண் பாகு பாடின்றி அனைவருக்கும் தோழியாகிவிட்டாள் சந்தியா.
அப்படிப்பட்டவள் தன அண்ணனுக்கு துணையாக அமைவதற்கு தன்னால் முடிந்த முயற்சிகளை செய்ய வேண்டுமென்று முடிவு செய்தான் அருண்.
அருணிடம் பேசிவிட்டு மாட்டு தொழுவத்திற்கு வந்த சந்தியா கன்று குட்டியை பார்த்து முட்டி போட்டு அதன் கழுத்தை கட்டி கொஞ்சி கொண்டிருந்தாள்.
மேலே தன் ஜன்னலின் வழியாக அவளை பார்த்துவிட்டு கீழே இறங்கி வந்த ஆதி அவளின் எதிரே போய் நின்று “அருண என்ன சொல்லி ப்ளாக் மெயில் பண்ணிட்ருக்க”
“என்ன பாஸ். என்ன பாத்தா கொள்ள கூட்ட தலைவி போலவா இருக்கு. பெரிய டெரரிஸ்ட் ரேஞ்சுக்கு பேசிட்ருக்கீங்க”
“ஒழுங்கா பேச்ச மாத்தாம, அவன என்ன சொல்லி பயமுறுத்துறேன்னு சொல்லு”
“இது என்ன பாஸ். அவன் என்ன எல்கெஜி படிக்கிற பையனா, நா அவன பயமுறுத்துறதுக்கு. இதுல அந்த சுண்டக்கா பையனுக்கு சப்போர்ட்டா ஆறடி உயரத்துல அர்னால்டு மாதிரி நீங்க வரீங்க. அதுவும் இல்லாம விஷயத்த உங்கட்ட சொல்ல கூடாதுங்கிறதுதான் அவன் பயமே” என்றதும் அவளை கண்கள் இடுங்க பார்த்தவன் ஆச்சரியமாக
“அப்ப பொண்ணு விஷயம்தான், லவ் பண்றானா என்ன. அவ்ளோ பெரிய மனுஷனாயிட்டானா” என்று தனக்குள் பேசி கொண்டவனை இப்பொழுது சந்தியா ஆச்சரியமாக பார்த்தாள்.
“பாஸ். அவன் காலேஜ் பைனல் இயர் படிக்கிறான். அவன் என்னவோ ஒண்ணாப்பு படிக்கிற மாதிரி சின்ன பையன்கிறீங்க”
“எவ்ளோ வயசானாலும் அவன் எனக்கு சின்ன குழந்தைதான். நீ அவன போட்டு டென்ஷன் பண்றத இதோட விட்டுடு”
“பரவால்ல இந்த அருண் லக்கி பெர்சன் தான், உங்கள மாதிரி அண்ணா கிடைக்க. ஆனா உங்கள நா ப்ளாக்மெயில் பண்ணா அவன் இந்தமாதிரி சப்போட்டுக்கு வருவானா”
ஆறடி உயரத்தில் வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக நிமிர்ந்து கைகளை நெஞ்சில் கட்டி கொண்டு தெனாவெட்டாக அவளை பார்த்தவன் “என்ன! என்னை ப்ளாக்மெயில் பண்ணுவியா. எதைவச்சு சொல்லு. நானும் பாக்கறேன்” என்று திமிராக கேட்டான்.
அவனின் போஸில் சந்தியாவின் மனது தடுமாறியது. ஆனாலும் அவனின் தெனாவட்டில் சுதாரித்தவள் “நேத்து உங்க பேமிலி ஆல்பம் காட்டினா கௌரி. எல்லாரோட சின்ன வயசு போட்டோவும் இருந்தது. உங்க போட்டோ கூட ஒன்னு இருந்தது. அதுல அத்தை உங்களுக்கு நிறைய நகை போட்டு விட்ருக்காங்க. தலையில் சிண்டு கட்டி பூ வச்சு விட்ருக்காங்க” என்றவள் சிறிது இடைவெளி விட்டாள்.
அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் பார்த்து கொண்டிருந்தவனிடம் “எல்லாம் போட்டவங்க உங்களுக்கு ட்ரெஸ் போட மட்டும் மறந்துட்டாங்க” என்றாள் நமட்டு சிரிப்புடன்.
அவள் சொன்னதை கிரகித்தவன் அவளுக்கு எதிரில் திரும்பி நின்று தலை முடியை கோதி கொண்டான். வாழ்க்கையில் முதன் முறையாக வெட்கம் வந்தது ஆதிக்கு. அதே போல் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்தம்பித்த நிலையும் இன்றுதான்.
அவன் திருமண வாழ்க்கையில் கூட பெரிய முடிவுகளை அசால்ட்டாக எடுத்தவன் இன்று முதல் முறை அசந்து நின்றிருந்தான்.
அவனுக்கு எதிரில் வந்து நின்ற சந்தியா “பாஸ். அந்த போட்டோவை க்ளீயரா என் மொபைல்ல போட்டோ எடுத்து வச்சிருக்கேன்” என்று போனை தூக்கி காட்டினாள். அவளை நோக்கி அவசரமாக போனை பிடுங்க சென்றான் ஆதி.
இதை எதிர்பார்த்தது போல் அங்கு இருந்த தண்ணீர் தொட்டியை சுற்றி ஓட ஆரம்பித்தாள் சந்தியா. அவளுக்கு ஆப்போஸிட்டாக ஓடி அவளை பிடிக்க ஆதி முயன்றாலும் அகப்படாமல் சுற்றி சுற்றி அவனுக்கு ஆட்டம் காட்டி கொண்டிருந்தாள் சந்தியா. அப்பொழுது அவளுக்கு பின்னால் வந்த கௌரியிடம் “கௌரி அவளை பிடிச்சு அந்த மொபைல பிடுங்குடா” என்றான்.
என்ன ஏதென்று புரியவில்லை என்றாலும் பின்னாலிருந்து சந்தியா தூக்கி பிடித்திருந்த அவளின் மொபைலை கரரெக்டாக பிடுங்கி ஆதியிடம் சென்று கொடுத்தாள் கௌரி.
மொபைலை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் செல்ல திரும்பிய ஆதி பார்த்தது, இவர்களை வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்த சிவகாமி, அருண், மல்லிகா மற்றும் அன்னபூரணியைத்தான்.
error: Content is protected !!