Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 22.2

வீட்டிற்கு வந்ததும் வழக்கம்போல் நீதிமன்றத்தில் நடந்ததை சொல்லி தனதறைக்குள் சென்றுவிட்டாள் காவ்யா. ஒருமணிநேரம் கழித்து காவ்யாவிற்கு அழைப்பு வரவே திவாகராக இருக்கும் என்று அழைப்பை ஏற்கவில்லை.

மொபைல் ஒலிகேட்டதும் அறைக்கு வந்த பிரபாவதி “உன் புருசனாத்தான் இருக்கும். எடுத்து பேசு காவ்யா. உன் வெறுப்பையாவது சொல்லு” என்று மன்றாட, அடுத்த அழைப்பு வந்தது.

பிரபாவதி அழைப்பை ஏற்று மகளிடம் கொடுக்க, “ம்மா ஏன் இப்படி செய்த?” என்று கடிந்தவாறு காதில் வைத்தள் கண்கள் அகன்று விரிந்து கண்ணீரை வெளியனுப்பியது ஆனந்தத்தில்.

பேசி முடித்ததும் அன்னையை கட்டிக்கொண்டாள். “என்ன காவ்யா? உன் புருசன் மன்னிப்பு கேட்டானா?” என்று ஆர்வத்தோடு கேட்க, “அப்பாக்கும் சேர்த்து சொல்றேன் வாம்மா” என்று ஹாலுக்கு அழைத்து வந்தாள்.



Advertisement

சோர்ந்த முகத்தோடு கோபாலன் சோபாவில் கண்மூடி சாய்ந்தமர்ந்திருக்க, அவரருகே அமர்ந்தவள், “அப்பா… எனக்கு வேலை கிடைச்சிடுச்சுப்பா. சென்ட்ரல் கவர்மண்ட் ஜாப் ப்பா. நெக்ஸ்ட் வீக் ஜாயின் பண்ணனும். அக்காமடேஷன், எனக்குனு கவர்மண்ட் கார்” என்று தனது வேலையின் பெருமையை சொன்னாள் பெரும் மகிழ்வோடு.

எல்லையில்லா மகிழ்சியில் ஆழ்ந்தார் கோபாலன். பிரபாவதிக்கும் சந்தோசம்தான். ஆனால் வாழ்க்கை பறிபோகும் நிலையில் இருக்கவே, முழுதாய் சந்தோசமடைய முடியவில்லை.

மனைவியை அறிந்த கோபாலன், “காவ்யாக்கு இனிமேதான் நல்ல காலம் ஆரம்பிக்குது பிரபா” என்று மகிழ்வோடு தேற்றி, மகளிடம் “எப்போடா கிடைச்சது? லட்டர் வந்ததா?” என்றார்.

Advertisement

“லட்டர் லேட்டா வரும்னு நினைக்கிறேன்ப்பா. மெயில் வந்திருக்கு. நான் கவனிக்கல. இப்போ கால் பண்ணினாங்க” என்றவள், “விஷ்ணுகிட்ட சொல்லுங்கப்பா, நான் ஆன்ட்டிகிட்ட சொல்லிட்டு விஷாலினிக்கு கால் பண்றேன்” என்று மேகலையை காணச் சென்றாள்.

Advertisement

மேகலையிடம் சொல்லி, விஷாலினிக்கு அழைப்பு விடுக்கவே விஷாலினி அழைப்பை ஏற்கவில்லை. தனது சந்தோசத்தை குரல்வழி செய்தியாக அனுப்பினாள்.

நான்கரை வருடங்களுக்கு பிறகு காவ்யா முகம் மிகப்பொலிவாய் இருந்தது. “எதாவது இனிப்பு செய் பிரபா” என்றார் கோபாலன்.

அன்னையின் சோர்வை கண்டு, “ம்மா இந்த வேலை கிடைக்கிறது அவ்வளோ சாதாரணம் இல்ல, கேட் எக்ஸாம் நல்ல மார்க்ல க்ளியர் பண்ணினதாலதான் கிடைச்சது. இந்த வேலைக்காக நான் போட்ட உழைப்பு ரொம்ப பெருசு.

Advertisement

“திவாகர் இந்தளவுக்கு ஈகோ பார்ப்பானு நான் எதிர்பார்க்கல. என்னை மட்டும் அவமதிக்கல, நம்ம குடும்பத்தையே அவமதிச்சான். அப்படியிருந்தும் அவனுக்கொரு வாய்ப்பு கொடுத்தேன். அதை அவன் யூஸ் பண்ணிக்கல. இப்படிபட்டவனோட வாழ்றது நரகம், ஆம்பிளையில்லாம பொண்ணுங்க வாழ முடியாதா என்ன?” எனத் தேற்றினாள் அன்னையை.

“உனக்கு வருத்தமில்லையா காவ்யா? விவாகரத்து பண்றதுல நீயும் உறுதியா இருக்கியா?” என்றார் வேதனையோடு.

“வருத்தமாதான்ம்மா இருக்கு” என்று ஒப்புக்கொண்டவள், “ஆனா தன்மானத்தை இழந்து அவனோட வாழ்றது அதைவிட கொடுமைம்மா. செய்யக்கூடாத தப்பை செய்துட்டு வந்த பின்னாடியும் என்னை ஏத்துக்கிட்டதோட இல்லாம மேல படிக்க வச்சு இந்தளவுக்கு ஆளாக்கியிருக்கிங்க. உங்களோடவும் அப்பாவோடவும் இருக்கிறதை விட வேற எதுவும் பெருசில்ல” என்றாள் பெருமையோடு.

“ஆனா” என ஆரம்பிக்க, “பிரபா, வேலை கிடைச்ச சந்தோசத்தை அனுபவிக்க விடு” என்று அதட்டிய கோபாலன், “கிளம்பு காவ்யா, கோவிலுக்கு போய்ட்டு, அப்படியே உனக்கு கொஞ்சம் டிரஸ் வாங்கிட்டு வரலாம்” என்றார் மகிழ்வோடு.

பயின்று வந்த கல்லூரிக்கு சென்று தனக்கு கிடைத்த பணிபற்றி சொல்லி, ஒரு வாரம் கழித்து தாய் தந்தையோடு பெங்களூர் கிளம்பினாள் காவ்யா. ஒருவாரம் மகளோடு தங்கிவிட்டு வந்தனர் கோபாலனும் பிரபாவதியும்.

*** *** *** ***

திருமணமனத்திற்கு பின்னே ஒருமுறை வீட்டிற்கு வந்தாள் விஷாலினி. அப்பொழுது விஷ்ணு இல்லை. மருத்துவ படிப்பை முடிக்க இன்னும் நான்கு மாதங்களே இருக்க, அதிகம் விடுமுறை கிடைப்பதில்லை.

வார இறுதியில் விடுமுறை கிடைத்தாலும் விஷ்ணு இல்லை என்பதால் வீட்டிற்கு வரவில்லை விஷாலினி. இரண்டு மாதம் கழித்து நேற்று மாலைதான் வீட்டிற்கு வந்தாள். நேற்று விஷ்ணுவோடு போனில் பேசியபோது இரண்டு வாரம் கழித்துதான் சென்னை வரமுடியும் என்றிருந்தான்.

திருமணத்திற்கு பின்னே  ஒருமுறை வீட்டிற்கு வந்தபோது, மேகலை மறுத்தாலும் அன்னையோடுதான் படுத்துறங்கினாள். இந்த முறை காவ்யா பெங்களூரில் இருப்பதால் கோபாலன் வீட்டில் விஷ்ணு அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள்.

விஷாலினிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று வந்தவனுக்கு, அவன் மெத்தையில் உறங்கியபடி மனைவி கொடுத்தாள் இன்ப அதிர்ச்சி. குளித்து  வந்தவன், அறைக்கதவை தாழிட்டு, விஷாலினியருகே படுத்து அணைத்தான் இதமாக.

பட்டென விழித்தவள் கண்கள் அதிர்வில் பெரிதாக, “நல்லாயிருக்கியா?” என்றான் கிசுகிசுப்பாக.

“இரண்டு வாரம் கழிச்சுதான் வருவேன்னிங்க?” என்றவள் பேச்சு, விஷ்ணு மேலும் தன்னோடு நெருக்கிக்கொண்டதில் நின்றுபோனது.

“அப்படித்தான் சொன்னேன்… ஆனா என் பொண்டாட்டி என்னை ரொம்ப கலாய்ச்சிட்டா. அவளுக்கு பதில் கொடுக்கவேண்டி இருக்குற வேலையெல்லாம் தள்ளி வச்சிட்டு வந்துட்டேன்” என்று கன்னத்தில் முத்தமிட்டான்.

‘ஆ’ என்று விஷாலினி வாய்பிளக்க, அவளிதழை தனதால் நெருங்கியவன் “கொஞ்சம் பேச்சாடீ பேசுன… படிக்கிற புள்ளையாச்சேனு கஷ்டப்பட்டு தள்ளியிருந்ததுக்கு என்னமா என்னை கலாய்ச்சிட்ட?” என்று விஷாலினியை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்டான் நொடி நேரத்தில்.

“ஆத்தீ…” என்று அலறி நெளிந்தாள் கூச்சத்தில்.

“போன்ல என்ன சொன்ன? கல்யாணம் ஆகி இரண்டு மாசம் ஆகுது. ஒரு முத்தத்துக்கு வழியிருக்கா? அப்புறம் என்ன சொன்ன… உங்களால படிப்பு கெடும்னு நான் சொன்னேன்னானு கேட்டல்ல? அப்போ நான் வெய்ட் பண்ணத்தேவையில்ல. நான் டிஸ்டர்ப் பண்ணினாலும் நீ படிச்சிடுவ. அப்படிதானா?” என்றான் கண்ணிமைத்து.

சாட்ஸ் மட்டுமே அணிந்திருந்தான். விஷ்ணுவின் வெற்று மார்பில் தனது உடல். அவன்மேல் கவிழ்ந்து படுத்திருந்ததால் மொத்த உடலும் அழுந்தப் படிந்திருந்தது விஷ்ணுவின் உடலோடு. விஷ்ணுவின் இந்த பரிணாமத்தை கிரகிக்கவும், அவனிலிருந்து விடுபடவும் பெரும்பாடு பட்டாள் விஷாலினி.

பேரவஸ்த்தையோடும், படபடக்கும் கண்களோடும், சிலிர்த்து சிவந்தபடி தன்மேல் படுத்திருப்பவளை ரசனையோடு பார்த்தவன், “கேள்வி கேட்டா பதில் சொல்லனும். அதைவிட்டுட்டு என்மேல எதுக்கு நீச்சலடிச்சிட்டிருக்க?” என்றான் சிரிப்போடு.

எத்தனை முயற்சித்தும் விஷ்ணுவிடமிருந்து விலக முடியாமல் போகவே, “விடுங்க, எனக்கு ரெஸ்ட்ரூம் போகனும்” என்றாள் கெஞ்சலாக.

தன்னிலிருந்து விடுபட பொய்யுரைக்கிறாள் என்றறிந்தபோதும், இப்படியே இன்னும் சில நொடிகள் நீடித்தால் தன்னால் தன்னை கட்டுப்படுத்த முடியாதென்று மனைவியை விடுவித்தான் விருப்பமின்றி.

தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவசரமாய் கட்டிலிலிருந்து இறங்கியவள் அறைக்கதவை திறக்கவே, ஏமாற்றமடைந்தவன் “ரெஸ்ட்ரூம்தான போகனும்னு சொன்ன?” என்றான் முறைப்போடு.

“டூ மினிட்ஸ்” என்று கெஞ்சலாய் சொல்லி, வெளியேறிய பின்னேதான் சுவாசம் சீரானது விஷாலினிக்கு. பிரபாவதி கிச்சனில் இருந்தார்.  கோபாலன் வெளியில் சென்றிருந்தார்.

அவஸ்த்தையோடு நின்றிருக்கும் மருமகளிடம் “என்ன விஷாலினி? விஷ்ணு டீ கேட்டானா?” என்று இயல்பாக்கினார் பிரபாவதி.

“ஆ… ஆமாத்த” என்று கிச்சன் சென்றாள்.

மகன் அறைக்குள் செல்லும்போதே பிரபாவதி பார்த்திருந்ததால் டீ போட்டு தயாராகத்தான் வைத்திருந்தார். “ம்… இரண்டு பேரும் குடிங்க” என்று டீயை கொடுத்தார்.

விஷாலினியின் தடுமாற்றம் இன்னும் குறையாமல் இருக்கவே, “எதுக்கு இவ்வளோ பதட்டம்?” என்று இயல்பாய் கேட்டு, “நீ வீட்டுல இருக்கும் நேரமா பார்த்து இன்னைக்குத்தான் வந்திருக்கான். பொண்டாட்டியை இப்படித்தான் அம்போனு விட்டுட்டு போவியானு சண்டை போடு. எவ்வளோ நேரம் ஆனாலும் சரி… மன்னிப்பு கேட்க வைக்காம விட்டுடாத” என்றார் சிரிப்போடு.

தானும் இயல்பானவள், “பாவம்த்த… அவங்க டியூட்டி அப்படி” என்று டீயை வாங்கிக்கொண்டு இன்முகத்தோடு உள்ளே வந்தாள்.

பெட்டில் கவிழ்ந்து படுத்திருந்தான் விஷ்ணு. அருகே அமர்ந்து அவனின் தலைகோதியபடி “டீ குடிங்க” என்றாள் அக்கறையோடு.

விஷ்ணுவும் இன்று அவளோடு உறவாடும் எண்ணத்தில் வரவில்லைதான். ஆனாலும் ரெஸ்ட்ரூம் போறேன் என்று விலகியபோதும் அறைக்குள் இருப்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு, விஷாலினி வெளியே போனது கோபமாகிட, “படிக்கிற பிள்ளைனு தள்ளிதான இருக்கேன்? என்ன பண்ணிடுவேனு வெளில போன?” என்றான் கோபமாக.

“சாரிங்க… ரொம்ப படபடப்பாகிடுச்சு” என்றாள் வருத்தமாக.

“போடீ” என்றான் கடுப்பாக.

“டீ குடிங்க” என்று கையில் திணித்து, தானும் குடித்து எழுந்து கதவை தாழிட்டு வந்து விஷ்ணு அருகே அமர்ந்து, “இப்போ படபடப்பெல்லாம் போய்டுச்சு” என்றாள் சன்னக்குரலில்.

இச்செயலில் கோபம் குறைந்தபோதும் பொய்யாய் முறைத்தான். இவள் இன்னும் நெருங்கி அமர்ந்தாள் விஷ்ணுவோடு. உள்ளுக்குள் சிரித்தவன் “போடீ” என்றான் இலகுவாக.

“நான் போகக்கேட்டா நீங்க ஏன் விட்டீங்க?” என்றாள் குறையாக.

“ம் அப்புறம்?”

“யாராலயும் என் படிப்பை கெடுக்க முடியாது. உங்களால கூட”

“அதுக்கு” என்றான் சின்ன சிரிப்போடு.

‘அதான் படிப்பு கெடாதுனு சொல்லிட்டேன்ல? இதுக்கு மேல என்ன சொல்றது? புரியாத மாதிரி அதுக்குனு கேள்வி வேற’ என மனதோடு திட்டியவள், “நீங்க கூப்பிடாமலே நானே இவ்வளோ நெருங்கி உக்கார்ந்திருக்கேன். உங்க மேல உள்ள காதலை இன்னும் எப்படி காட்டுறது?” என்றாள் பாவமாக.

“ஓ… இதான் காதலா?” என்றான் வியக்கும் பாவனையோடு.

“கல்யாணம் ஆன அன்னைக்கு கூட இப்படி நெருக்கம் காட்டல, திடீர்னு பண்ணினா வெக்கமா இருக்காதா? அதுக்கு கோவப்படுவிங்களா?” என்று சண்டைக்கு தயாரானாள்.

“ஓ… இதான் வெக்கமா?” என்றவனுக்கு இம்முறை சிரிப்பை அடக்க முடியாமல் வெளிக்காட்டிட, “போங்க… என்ன செய்தாலும் கிண்டல் பண்றிங்க. உங்களோட முடியல என்னால. போன்ல பேசினாலாவது சண்டையில்லாம இருக்கு. நேர்ல வந்தா சண்டையாகிடுது” என்றாள் ஆற்றாமையோடு.

“எழுந்து வெளில போடீ… எதாவது பண்ணிடப்போறேன். அப்புறம் படபடப்பாகிடுச்சு, அது இதுனு எழுந்து ஓடுவ”

“நான் போகமாட்டேன்” என்று அழுத்தமாய் அமர்ந்திருக்க, சிரித்தவன், விஷாலினி முகத்தை தன்புறம் திருப்பி, “எனக்கு சும்மா தொட்டுக்கோ கட்டிக்கோல்லாம் பத்தாது. தொட்டா மொத்தமா எடுத்துப்பேன். எழுந்து ஓடிடு” என்றான் எச்சரிக்கும் பாவனையில்.

எனக்காக தன்னை கட்டுப்படுத்துகிறான் என்ற நினைப்பே விஷாலினியினுள் பெரும் தவிப்பை உண்டாக்க, தைரியத்தை வரவழைத்து “எல்லாம் தெரிஞ்சுதான் உக்கார்ந்திருக்கேன்” என்றாள் மெல்லிய குரலில்.

விஷ்ணுவின் பொறுமையெல்லாம் சோதனைக்குள்ளாக, “லூசு… இது ஒருநாள்ல அடங்குற ஆசையில்லைடீ, எனக்கு தினமும் வேணும், அதுக்கு உன் படிப்பு முடியனும்” என்று சிறு கடுப்போடு சொல்லி, “அதோட இப்போ உனக்கு என்மேல இருக்கிறது காதலும் இல்ல, வெக்கமும் இல்ல. அக்கறை. நான் ஏமாறக்கூடாதுன்ற அக்கறை. எனக்கு இதெல்லாம் பத்தாது. உன் கண்ல எனக்கான காதல் தெரியனும்” என்றான்.

காதல் இல்லையா? என்று விஷாலினி தவித்திட, அதை அவள் முகமும் கண்களும் காட்ட, அதற்குமேல் பொறுக்க முடியாதவனாய் நெற்றியில் முத்தமிட்டான், போதாமல் போக கன்னத்தில் முத்தமிட்டான், அதுவும் போதாமல் போக இதழோடு இதழ் கலந்தான்.

நொடிகள் கடந்து நிமிடங்களும் கரைய, சொக்கித் தொய்ந்தாள் விஷ்ணுவர்தன் மீது. மெல்ல விடுவித்து பெட்டில் படுக்க வைக்க, கண்திறந்தவள் சில நொடிகளிலேயே மூடினாள் நாணத்தோடு.

முதல்முறையாக விஷாலினி முகத்தில் நாணம் தெரிய, தாள முடியாதவனாய் மீண்டும் நெருங்கி அணைத்துக்கொண்டான் இறுக்கமாக. பின்னே நெற்றி முத்தமிட்டு விடுவித்து “எனக்கு கில்டியா இருக்கு. உன் படிப்பு முடியட்டும்” என்றவன், டீ சர்ட் போட்டுக்கொண்டு, “இன்னும் அம்மாவை பார்க்கல, அம்மாப்பாகிட்ட பேசிட்டு ஆன்ட்டியை பார்த்துட்டு வருவோம்” என்று வெளியேறினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!