Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 1.2

புது மஞ்சள் புது தாலி

 அத்தியாயம் 1.2

                      பூர்ணா முகம் உக்கிரமாக மாறி போக ,

    “ஏண்டா கேடு கெட்ட நாயே! எவ்வளவு ஏத்தம் இருந்த என்ன பத்தி தெரிஞ்சும் இப்படி ஒரு வார்த்தை கேட்ப , ஏலே காசு பணம் கொடுத்த நாக்க தொங்க போட்டு உன் பின்னாடியே வருவேன்னு நினைச்சியா…” ஆத்திரத்துடன் பக்கத்தில் பார்க்க கம்பி அறுக்கும் பெரிய பிளேடு இருக்க அதை எடுத்து அவன் கழுத்தில் வைத்து ஒரு அழுத்து அழுத்த , மேஸ்திரி பயத்தில் அலற , அங்கு வேலை செய்யும் அனைவரும் வந்து விட்டனர். ஆனால் யாருக்கும் பூர்ணா அருகே செல்லும் தைரியம் இல்லை.



Advertisement

    அவ்வளவு கோபம் தெரிந்தது அவள் முகத்தில், “ஏலே நா பயங்காட்ட கத்திய கழுத்துல வச்சேனு நினைக்காத திருநெல்வேலிக்காரி சீவிடுவேன் சீவி , மானங்கெட்டு உனக்கு முந்தி விரிச்சு பொழப்பு பாக்குறதுக்கு எனக்கு ஒரு முழம் கயிறு போதும்லே , பொம்பள பிள்ளைக்கு மானந்தேன் உசுருன்னு வாழுற கூட்டம்லே , புருசன் அத்துவிட்டான் , அப்பன் இல்ல , அம்மாவோ நோயாளி கேட்க நாதியத்தவ அப்படினு தான வப்பாட்டிய வான்னு சொன்ன, எங்க இப்ப கேளு நீரு தைரியமான ஆம்பிளையா இருந்த கேளுலே…” என கத்திய இன்னும் அழுத்த , பயத்தில் உயிர் போய் விட்டது மேஸ்திரிக்கு.

        கை , கால் நடுக்கம் கொண்டது , கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் வரை ஓயவில்லை பெண், அவன் காலில் விழுந்தது கெஞ்சிய பின்னே விட்டவள் ஒரு நொடி கூட அங்கே நிற்க வில்லை , விறு விறுவென நடந்து போய்விட்டாள். சூழ இருந்தோர் அருவருப்பான பார்வை பார்த்து வைக்க அவமானத்தில் முகம் கன்றியது அவர்க்கு.

          மேஸ்திரி அருகே வந்த கொத்தனார் ,

Advertisement

   “அண்ணே அவளே ஒரு பாஜரி ஆம்பிளை மாதிரி நடப்ப யாருக்கும் பயப்பட மாட்ட ஒருத்தன் அவ முன்னாடி நிக்க முடியாது , சிண்ட புடிச்சு ஆஞ்சுறுவ.. அவ கிட்ட போய் எதுக்கு இதெல்லம் , இவ்ளோ அவமானம் தேவையா பாருங்க இனி உங்க பேச்சு தன் ஒரு பய உங்களுக்கு வேல தரமாட்டான் போங்க போய் இனி என்னனு பாருங்க…” என்று சொல்ல தலை குனிந்தவாறு வெளியே சென்றான் மேஸ்திரி.

Advertisement

    இப்படி ஆகும் என்று நினைக்கல மறுத்தாலும் வெளியே சொல்ல மாட்டார்கள். அவர்களுக்கும் அசிங்கம் தானே பின் எங்கும் வேலைக்கு போக முடியாது. வறுமைக்கு வேலைக்கு வருபவள் எவ்ளோ சம்பளம் விட்டுவிட மாட்டாள் என்றால் கழுத்தில் கத்தி வைத்து உயிர் பயம் காட்டி விட்டா படுபாவி , நல்ல பெயர் கேட்டு விட்டதே என்று புலம்பிய படி சென்றான் மேஸ்திரி.

        உரக்கடை சென்று திரும்பி வரும் வழியில் ஆவேசமாக செல்லும் பூர்ணவை பார்த்த வேலு, வண்டியின் வேகத்தை குறைத்து,

  “என்ன சொம்பு நடைய எட்டி போட்டு எங்க போறவ?”

Advertisement

  இவன் இப்படித்தான் சிறுவயது முதலே சம்பூர்ணவை சொம்பு என தான் கேலி செய்வான் , அவளும் சும்மா விடும் ரகம் அல்ல நார்நாரை கிழித்து தொங்க விட்டாலும் அவன் அடங்க மாட்டான் அவளிடம் மட்டும்.

        கோபமாக திரும்பிய பூர்ணா, “என்னாலே காட்டுராசா மவனே உடம்பு எப்படி இருக்கு?…” அவள் குரலில் இருந்த அழுத்தம் அவனை பயம் கொள்ள செய்ய குரலில் குழைவு கொண்டு வந்து,

  “என்ன சம்மு சும்மா தான் வேலை நேரத்தில் தனியா போறியே அதான்?

   அவனை முறைத்தவள், “நான் எப்படி போன உனக்கு என்னாலே! உன் சோலி கழுதைய பார்த்து போலே!…”

 “மாமா மகள் ஒரு அக்கறை தன்…” என அவன் பவ்யமாக தொடங்க

    “இங்கரு நானே கடுப்புல இருக்கேன். சும்மா வம்பு பேசி வாங்கி கட்டிக்கதா போயிரு பொலி போட்டு தான் ஓய்வேன் பார்த்துக்கிடு…”

    “ஏன் சம்மு இவ்வளவு கோபம் பொம்பள பிள்ளைக்கு ஆவதுலே , கொஞ்சம் பொறுமையா தான் போறது..” என தன்மையாக பேச, அவளும் அமைதியாக நடந்ததை சொல்ல , இப்போ கோபம் கரை புரண்டது அவனிற்கு ,

   “யாரடி அவன்? சொல்லு தோல உரிச்சு தொங்க விடுறேன். எந்த ஊர்காரன் நீ வண்டில ஏறு ஒரு கை பார்த்துறேன்…” என சொல்ல

      அவள் அலட்டி கொள்ளவே இல்லை, “டேய் அடங்குட நானே அவனுக்கு நல்ல குடுத்து தான் வந்தேன். நீ வேற வெட்டியா கரையாத…”

 அவளை முறைத்தவன் “ஏன் சம்மு இந்த வேலைக்கு போற காட்டு வேலை மட்டும் பார்க்க வேண்டி தானே…”

   “எந்த வேலைய இருந்தாலும் இப்படி சல்லி பாய இருப்பான்லே, எங்கையும் பொம்பள தாட்டியமா இருந்த போவுது, விடுலே, கைல காசே நிக்க மாட்டதுலே, ஆத்தா வேற இப்பவோ அப்பவோனு கிடக்கு காடு போய் சேருர வரை நல்லதா ஆக்கி போட வேண்டாமா , அப்புறம் மருந்து , மாத்திரை செலவு நெறைய கெடக்குலே , சம்பளம் கூட வருதேனு போனேன் கட்டைல போறவன் இந்த புத்தி வச்சிருக்கான்…”

         அமைதியாக பார்த்தான் வேலு , தாய் சாவின் விளிம்பில் நிற்க சொட்டு கலக்கம் இல்லாமல் சாதரணமாக சொல்கிறாள் , சம்மு எப்போதும் அப்படித்தான் நிறைய பார்த்தாதலே என்னவோ சிறு வயதில் இருந்தே ஏதற்கும் கலங்கியதில்லை. அசால்ட் துணிச்சலோடு எங்கும் நிற்பாள். அதுவே இவ்ளோ பிறகும் இன்னும் தாங்கி நிற்க வைக்கிறது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!