Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒற்றை ஜன்னல்

ஒற்றை ஜன்னல் – 8 .1

விஷயத்தை வெளியில் கசியவிடாமல் அப்படியே அமர்த்திவிட்டனர் வீட்டினர், விடிவதற்குள் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிட்டனர் “வயலுக்குத் தண்ணி பாய்ச்சப் போனா மாடு தொரத்தினதுல தவறி கிணத்துல விழுந்திட்டா” என்று பேசிச் சமாளித்துவிட்டனர்.

 

 



Advertisement

கஷ்டப்பட்டு உறங்காமல் விழித்துதான் கிடந்தாள் பார்கவி இடையிடையே தமக்கையை விழித்துப் பார்ப்பதும் பின்பு கண் மூடுவதுமாக இருந்தாள் இடையில் எப்பொழுதோ ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றிருந்தாள் அந்த நேரத்தைத் துளசி பயன்டுத்திக்கொண்டாள்.

 

Advertisement

 

Advertisement

கால் போன போக்கில் நடந்தவள் பொன்னப்பன் தாத்தா வயலில் இருந்த கிணற்றை நோக்கி நடந்தாள் அவளுடைய கெட்ட நேரமோ நல்ல நேரமோ வயறு சரியில்லையென்று ஒதுங்க வந்தவர் ஏதோ ஒரு உருவம் தலைவிரிகோலமாய் தன் வயலில் நடமாடுவதை பார்த்து உறைந்து நின்றுவிட்டார்.

 

Advertisement

 

ஆனால் அந்த உருவம் கிணற்றில் குதித்ததும் பதறியவர் ஓடிச் சென்று நோக்க உள்ளே தத்தளித்துக்கொண்டு கிடந்தாள் துளசி,  யார் என்று அவருக்கு இருட்டில் தெரியவில்லை என்றாலும் உள்ளே குதித்து காப்பாற்றவிட்டார் படிகள் வழியே அவளை இழுத்துக்கொண்டு வந்தவர் வெளிச்சத்தில் பார்த்து வாயைப் பிளந்துவிட்டார்.

 

 

“துளசி… என்னத்தா இப்படி பண்ணிட்ட” என்றவர் தண்ணீரை வெளியேற்றிவிட்டு உடனே அவள் தாய்க்கு அழைத்துவிட்டார் வீட்டில் சாந்தாவும் பார்கவியும் மட்டுமே துர்கா தந்தையை வந்து பார்த்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டாள்.

 

 

வேறு வழி இல்லாமல் வீட்டைப் பூட்டிக்கொண்டு  பார்கவியை அழைத்துக்கொண்டு சாந்தா வந்து சேர்ந்தார், நெற்றியில் ஒரு துணியை வைத்துக் கட்டியிருந்தார் பொன்னப்பன், குதித்தபோது தண்ணீர் இரைச்ச போட்டிருந்த பைப்பின் முனையில் தட்டி நல்ல காயம் ஆகியிருந்ததது.

 

 

சாந்தா வந்ததும் அவளை அடிக்கத் தொடங்க இடையில் புகுந்து தடுத்தவர் “இந்தா சாந்தா தள்ளிப்போ புள்ள உசிர் பொழைச்சதே பெரியவிஷயம், சாமிதான் என்னை இந்த நேரம் வெளில வர வெச்சார் இல்லனா உன் பொண்ணு காலைல கிணத்துல மிதந்திருப்பா சும்மா போட்டு அடிக்கிற” என்றவர்.

 

 

“ஆஸ்பத்தரிக்கு கொண்டு போக்காயம் கொஞ்சம் பெருசு” என்றார்.

 

 

பார்கவி துளசியை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் துளசியிடம் எந்த அசைவும் இல்லை அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

 

“வீட்ல அவரை வெச்சு பூட்டிட்டு வந்திருக்கேன் சித்தப்பா இப்போ எப்படி கொண்டுபோக, அதோட இந்த விஷயம் வெளில தெரிஞ்சா…” என்று அவர் துளசியை முறைக்க.

 

 

சிறிது நேரம் யோச்சித்த பொன்னப்பன் “நீ புள்ளையை வீட்டுக்குக் கூட்டிட்டு போ நான் என் பையனை அனுப்புறேன் வண்டியோட, இந்த விஷயம் யாருக்கும் தெரியாது நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் என் பொண்டாட்டிகிட்டகூட சொல்லமாட்டேன் நீ கவலைப்படாத” என்றவர்.

 

 

“நனைஞ்ச துணியெல்லாம் மாத்திட்டு வீட்டில இருங்க வழுக்கி விழுந்துடுச்சு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக யாருமில்லன்னு சொல்லி அவனை நான் வரச் சொல்றேன் சீக்கிரம் போங்க ஆளுங்க தண்ணி பாய்ச்ச வருவாங்க” என்றவர் அலைபேசியோடு அந்தப் பக்கம் நடந்தார்.

 

 

துளசியை அழைத்துவந்து உடைமாற்ற வைத்துக் காத்திருக்க பொன்னப்பனின் மகன் காருடன் வந்துவிட்டான் மருத்துவமனையிலும் அதையே சொல்லித் தையலிட்டு மருந்து வாங்கி வீட்டிற்கு வந்துவிட்டனர்.

 

 

சாந்தா அவளிடம் ஒன்றும் பேசவில்லை அன்று மாலை வரையுமே துளசி உறக்கத்தில் இருந்தாள்,  இரவு தான் அவளுக்குக் கொஞ்சம் தெளிச்சம் பிறந்தது பார்கவி அவளைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று குளிக்கவைத்தாள்.

 

 

“ஏன்க்கா இப்படி  பண்ண” என்றாள் துளசியின் கைய பிடித்துக்கொண்டு   துளசியின் விழிகள் நிறைந்தது, ஒன்றும் பேசவில்லை இரவுணவுக்கு அவளை அழைத்துச் சென்றாள் பார்கவி,  கிச்சனிலிருந்து வெளியில் வந்த சாந்தா துளசியின் கையில் கஞ்சி இருந்த பாத்திரத்தைக் கொடுத்தார் அதோடு அவள் முன்னிலே அதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றினார்.

 

 

“போ… உன் அப்பாவுக்கு உன் கையாலே இதைக் குடு,  குடுத்துட்டு வா நாமளும் சாப்பிடலாம்” என்றார்.

 

 

துளசி அப்படியே நின்றிருக்க” மா என்ன பண்ற” என்று பதறி  அருகில் வந்தாள் பார்கவி.

 

 

 

“தள்ளிப்போடி இவ பண்ண காரியம் மட்டும் வெளில தெரிஞ்சா இந்த ஊர்ல மாணத்தோட வாழமுடியுமா நாளைக்கு உனக்குத்தான் ஒரு நல்ல வாழ்க்கை அமையுமா,  இவளுக்கு இவ சந்தோசம் தானே முக்கியம் எங்க எல்லாரையும் கொன்னுட்டு நீ போய் அவன்கூட வாழு” என்க.

 

 

கையில் இருந்த உணவை வெளியில் சாக்கடையில் ஊற்றிவிட்டு திரும்பிவந்தவள்  “உங்க இஷடம் போலச் செய்ங்கம்மா என்னால இனிமே உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது” என்றவள் வேறு கஞ்சி எடுத்துச் சென்று தந்தைக்கு கொடுத்துவிட்டு வந்து தனக்கான உணவை உண்டுவிட்டு தன்னுடைய அறையில் படுத்துக்கொண்டாள்.

 

 

சாந்தா அறியவில்லை மகள் தன்னை அம்மாவென்று அழைப்பது இதுவே கடைசி முறை என்று, வெற்றிவேலின் வீட்டினர் வீடியோகாலில் துளசியை பெண்பார்த்தனர்,  விஜயகுமாரின் பெரியப்பாவிடம்  சொல்லி வைத்திருக்க ஒரே வாரத்தில் அவரின் மருமகன் மூலம் கடலூர் சம்மந்தம் ஒன்று வந்தது.

 

 

பையன் போட்டோ என்று அலைபேசியில் காட்டியவர் “பேர் வெற்றிவேல் கடலூர்ல மெடிக்கல் வெச்சுருக்கார் சொந்தமா வீடு இருக்கு, அப்பா விஸ்வநாதன் அம்மா விஜயலக்ஷ்மி பாண்டிச்சேரில இருக்காங்க அங்கேயும் சொந்த வீடு இருக்கு”.

 

 

“ஒரு அக்கா பேரு வெண்மதி அந்தப் பொண்ணையும் கடலூர்ல தான் கட்டிக்குடுத்திருக்காங்க அதாவது வெற்றிவேல் வீட்டிலேயிருந்து ரெண்டு தெரு தள்ளி அந்தப் பொண்ணு இருக்கு, வீட்டுக்காரர் ஏதோ கம்பெனில வேலை பாக்குறார் ரெண்டு பெண் பிள்ளைங்க அவங்களுக்கு”.

 

 

“எந்தப் பிக்கல் பிடுங்கல் இல்ல பெருசா ஒன்னும் எதிர்பார்க்கல அந்தப் பையனுக்கு ஜாதகம் சேரலயாம் யார்கூடவும் அதான் இவ்ளோ நாள் ஆயிருக்கு,  துளசி ஜாதகம் நல்லா பொருந்தியிருக்கு உங்களுக்குச் சம்மதம்னா பொண்ணு பாக்குற சடங்கை வெச்சுக்கலாம்” என்றார்.

 

 

பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அவர்களுக்கு விருப்பம் என்றார்கள், ஆனால் பெண் பார்க்க அவ்வளவு தூரம் வந்துவிட்டு திரும்பவும் கல்யாணத்திற்கு வரவேண்டுமே ஆகையால் வீடியோ காலில் பார்த்து முடித்துக்கொள்ளலாம் என்றார்கள்.

 

 

பார்கவிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்னவோ இந்தச் சம்மந்தமே சரியாக வரும் என்று தோன்றவில்லை சாந்தாவிடம் பேச விரும்ம் இல்லாமல் அமைதியாக இருந்துவிட்டாள்.

 

 

 

பெண் வீட்டின் சார்பாகத் துர்காவும் அவள் கணவன் சேகரும் சிதம்பரம் சென்றனர் அங்குப் பெரியகோவிலில் வைத்து மாப்பிளை வீட்டினரை சந்தித்தனர், அங்கிருந்தே துளசியை பெண் பார்த்துச் சம்மதத்தை சொல்லிவிட்டனர்.

 

 

அவசரமாகக் கல்யாணம் என்பதற்கு விஜயகுமாரின் உடல்நிலையை காரணமாகக் கூறினர் அதோடு   முதலில் ஒரு சம்மந்தம் கிட்டத்தட்ட உறுதி நிலைமைக்கு வந்து அவர்கள் அதிகம் வரதட்சணை கேட்டதால் நின்றுவிட்டது என்றும் பட்டும் படாமலும் அவர்களிடம் தெரிவித்திருந்தனர்.

 

 

தங்களுக்கு அப்படி வரதட்சணை ஒன்றும் பெரிதல்ல நாங்கள் மிகவும் எதார்த்தமானவர்கள் பெருசா எந்த விஷயத்தையும் எடுத்துக்க மாட்டோம் என்றார்கள், அப்பொழுதுகூட துளசியின் வீட்டினர் சுதாரிக்கவில்லை அவர்கள் எந்த விஷயத்தையுமே பெரிதாக எடுத்துக்கொள்ளபோவதில்லை என்று.

 

 

மகன் தன் பேச்சைக் கேட்க்காமல் போய்விட்டான் என்ற கோபம் கற்பகத்திற்கு, வயது வந்ததும் துணையை தேடுகிறான் ஒருவேளை அவளை அழைத்துவந்துவிட்டால் தன்னை மொத்தமாக விலக்கிவிடுவானோ என்ற அச்சமும் ஒருபக்கம் தோன்ற அதே கோபத்தோடு வீட்டிலிருந்து வெளியில் சென்றார்.

 

 

அவர்களின் தெருவில் நடப்பதை போலவே மெய்ன் ரோட்டிலும் நடக்க, சட்டென்று இவர் வருவதை எதிர்பார்க்காத லாரி ஓட்டுநர் முடிந்தவரை வண்டியைத் திருப்பியும் கற்பகம் லாரியில் அடித்துத் தூக்கிவீசப்பட்டார், மருத்துவமனை சிகிச்சை என்று இரண்டுவாரங்கள்.

 

 

வீட்டிற்கு கொண்டுவந்துவிட்டனர் “ஹோம் நர்ஸ் வேணும்னா வெச்சுக்கோங்க தமிழ்ச்செல்வன் இனிமே எல்லாமே படுக்கையிலதான் உங்களால தனியா முடியுமா யோசிச்சுக்கோங்க” என்று சொல்லிச்சென்றார் டாக்டர்.

 

 

வீட்டிற்கு கொண்டுவந்து பத்து நாட்கள் கடந்திருந்தது,  ஹோம் நர்ஸ் ஒருவரை வேலைக்கு அமர்த்திக்கொண்டனர் தாமரைக்கு அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும் எத்தனை நாட்கள் அவளும் இங்கேயே நிற்க முடியும்,  தன்னுடைய அறையில் ஏதோ யோசனையில் படுத்திருந்த தமிழை தேடி வந்தாள் தாமரை.

 

 

“தமிழு” என்றவள் குரலில் எழுந்தமர்ந்தவன் “சொல்லுக்கா” என்றான்.

 

 

“ நீ ஒருதடவை போய்த் துளசியை பார்த்துட்டு வா தமிழு கிட்டத்தட்ட  ஒரு மாசம் ஆயிடுச்சு அவங்க கண்டிப்பா கோபப்படுவாங்க ஆனாலும் போய்ப் பேசிப் பாரு “.

 

 

“என்ன பேசச் சொல்றக்கா எப்படி போய்ப் பேசறது,  ஏற்கனவே நம்ம மேல தப்பு இதுல இவ்ளோ நாள்… என்னனு போய்க் கேட்கவோ பாக்கவோ இல்லை இப்போ என்னனு போய்ப் பேச எனக்கு ஒண்ணுமே புரியல” என்றான் தளர்வாக.

 

 

 

“நீ ஒரு மூணு நாள் நிக்குறியாக்கா நான் போயிட்டு வந்துடுறேன்” என்றான் அடுத்தநொடி, அவனால் எதையுமே முழுதாக யோசிக்கமுடியவில்லை மனம் முழுதும் குழப்பம் சூழ்ந்திருந்தது.

 

 

“நீ போய்ட்டுவா நான் இருக்கேன்” என்றாள் தாமரை.

 

 

துளசியிடம் பேசும்போது அவளுடைய ஊர்,  எப்படி அவளுடைய வீட்டிற்கு போக வேண்டும் அனைத்தையும் சும்மா கேட்டுத் தெரிந்து வைத்திருந்தான் அதை வைத்துத் தட்டு தடுமாறி வந்து சேர்ந்துவிட்டான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!