Skip to content
Post Views: 4,166
கந்தன் கொடுத்த களவு – 5
மதிய வேளைக்கும்,அந்தி சாயும் வேளைக்கும் இடைப்பட்ட பொழுது. கதிரவன் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துக் கொள்ளக் குளிர் வீசம் நிலவு மெல்ல பவனி வர துடித்துக் கொண்டிருந்தது.இந்த இடைப்பட்ட பொழுது மனதுக்குச் சிறு இதத்தைக் கொடுக்க அதனை ரசித்தவாறு கை கட்டி நின்று கொண்டிருந்தான் கந்தன், அவனுக்கு எதிரில் பத்மாவதி.
அன்று பேச வேண்டும் வர சொல்லுங்கள் என்று பத்மா கந்தன் வீட்டாரிடம் சொல்லி அனுப்ப.கந்தனுக்கு விடயம் கடத்த பட்டுச் சரியாக ஒரு வாரம் சென்ற நிலையில், இன்று மாலை பேச வர சொல்லி ஆள் அனுப்பிவிட்டான். அவன் அழைப்பை ஏற்று பத்மாவும் வர,தற்போது கோவிலுக்குப் பின் பக்கம் உள்ள ஆலமரத்தடியில் தான் இருவரும் நின்று கொண்டிருந்தனர்.
பேச வேண்டும் என்று வர சொல்லிவிட்டுப் பேசாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவனைப் பார்த்து பல்லை கடித்தவள். மனதுக்குள், ‘வியாபாரத்துக்கு நேரம் நெருங்கி நிக்குது. இந்நேரம் பேசனமுனு கூட்டி வச்சுக்கிட்டு வேடிக்கை பார்த்து கிட்டு கிடக்கான் வெள்ளை பண்ணியராம்.
Advertisement
அய்யோ! பார்த்தாலே கோபம் கோபமா வருதே. இந்த ஆளு கிட்ட நான் என்னத்த பொறுமையெடுத்து பேசி வைக்க. மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்த அத்தனையும் மறந்து நிக்குதே!.. அம்மா மங்களாம்பிகை பொறுமையக் குடுத்து காப்பாத்தி விட்டுரு தாயி’ என்று வேண்டுதலை முன் வைத்தே தனது வாதத்தைத் தொடங்கினாள்.
“இந்தாருங்க!” சற்று உரக்க அழைக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கந்தன் பொறுமையாக அவளை நோக்கி திரும்பினான். ’என்ன?’ என்பது போல் ஓர் பார்வை மட்டுமே அதில் இன்னும் பத்மாவுக்கு எரிச்சல் வர.
“பேசணும்னு கூட்டிகிட்டு வந்து கிழக்கையும் மேற்கையும் பார்த்து வச்சா என்ன அர்த்தம்? எனக்குப் பொழைப்புக்கு நேரம் ஆச்சு என்ன பேசனமோ சட்டுனு பேசிட வேண்டியது தானே”
Advertisement
“நீதானே பேசணும்னு சொன்ன அதான் நீ தொடங்குவியோன்னு பார்த்தேன்” ஒருவித தோரணையாக தொடங்கினான் கந்தன்.
Advertisement
“நல்லா பார்த்தீங்க….. நீங்க செய்றது சரியா? முடிஞ்சது முடிஞ்சது தான் இத்தனை வருஷம் கழிச்சு எதுக்குத் தொடங்கனும்? அதுக்கு என்ன அவசியம் இப்போ?” தடாலடியாக கேட்டு விட்டாள்.
“ப்ச்”
“என்ன சலிப்பு”
Advertisement
“என் பக்கத்தைச் சொல்றேன் பிறகு நீ பேசு”
“உங்க பக்கத்தை இப்போ சொல்லி வச்சு என்னதுக்குனு தான் என் கேள்வி”
“கல்யாணம் பண்ண தோணுது அதுக்கு தான்” இருவரும் சரிக்கு சரியாக வார்த்தையால் விளையாடி நின்றனர்.
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்” பத்மா வெடுக்கெனப் பேச. அவளது பேச்சில் சுர்ரென கோபம் வந்தாலும்,காரியம் கண்ணில் நிற்க பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசினான் கந்தன்.
“உன்னைப் பண்ணிக்கத் தோணுது அப்போ உங்கிட்ட தான் பேச முடியும் பத்து” சாதாரணமாகத் தான் விழித்தான் அதுவே பத்மாவுக்குக் கோபத்தை அளிக்க.
“யோவ்!… என்னங்குறேன் பத்து பதினொன்னு‘னு’ என் பெயர் பத்மா இந்த சுருக்கி காட்டி நிக்கிற வேலையெல்லாம் வேணாம் சொல்லிட்டேன்”
“பெருசா இருக்கும்மா பத்மா…… வதின்னு இழுக்க முடியலம்மா” நக்கல் தோணி தான், ஆனால் அவனது முகம் அந்தப் பாவத்தைக் காட்டி கொடுக்க வில்லை.அதற்கும் பத்மா எதுவோ பேச வர கை நீட்டி வார்த்தைக்குத் தடை போட்டவன்.
“பேச விடு, நான் சொல்றதை கேளு.அப்புறம் நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன் எதுவுமே இங்க கட்டாயம் இல்ல”அவனது கடைசி வார்த்தையில் சற்று அடங்கி நின்றாள் பத்மா.
“எதுக்கு கல்யாணத்தை நிறுத்தினேன் தெரியுமா?” நீயே சொல்லி தொலை என்ற பாவனையில் இறுக்கமாக நின்றாள் பத்மா.
“எனக்குச் சமைக்க ரொம்பப் புடிக்கும்.சின்னதுல இருந்து கடைய பார்த்து வளர்ந்த எனக்கு அதில ஈடுபாடு அதிகம். அதுக்குப் படிக்கச் வேண்டி தான் முயற்சியெடுத்தேன்.சரியா எனக்குப் படிக்கச் வெளி நாட்டுல இடம் கிடைச்சது. அதைச் சொன்னா எங்கப்பா உனக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிட்டு வந்துட்டேன்னு சொல்றாரு. எத்தனை மறுத்தும் அவர் கேக்கல பத்து”
“அதுக்குன்னு அத்தனை சனம் முன்னாடி நாங்க அசிங்க பட்டு நிக்கணுமா?”
“தப்பு தான்!.. தப்பு தான்!.. பெரிய தப்பு!.. அப்போ எனக்கு யோசிக்க நேரமில்லை சனம் முன்னாடி சொன்னா தான் வேலை ஆகும்னு ஒரு எண்ணம் சாதகம் பாதகம் பார்க்க தெரியலம்மா” பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு தான் பேசினான்.அதில் உண்மையான வருத்தமும் உள்ளது போலும்.
“என்ன!… சாதகம் பாதகம் பார்க்க தெரியலையா?அது பக்காவா பார்க்க தெரிஞ்சதுல தான் உங்க காரியம் கை கூடுச்சு, ஆளு நல்ல விவரம் தான்” என்ன பேசினாலும் பிடி கொடுக்காமல் நின்ற பேரிளம் பெண்ணை என்னத்தான் செய்வது என்று மலைத்து நின்றான் கந்தன்.வாய் விட்டு காத்தை ஊதி நின்றவன்.
“இங்க பாரு நீ பேசுறது எல்லாமே சரிதான், தப்புக்கு முழுமையும் நான் பொறுப்பை ஏத்துக்குறேன்”
“போன போகுதுனு சொல்லுற மாதிரில இருக்கு அதானே உண்மை”
“ஆமா தாயே!” பல்லை கடித்து பொறுத்து நின்றான் கந்தன்.
“ப்ச்”
“இங்க பாரு பத்து அன்னைக்கு நடந்தது எல்லாமே தப்பு தான்.என்னைக் கொண்டு எந்தச் சமாதானமும் நான் வைக்கல. அதை அப்படியே விட்டுரு. இப்போ போன மாசம் தான் நீ என் கண்ணுல பட்ட. விசாரிக்கப் போயி நீயும் இன்னும் கல்யாணம் பண்ணலன்னு சொன்னாங்க அதான் பேசி பார்த்தேன்.
உண்மை சொன்னா அதுவரை எனக்குக் கல்யாணத்துல நாட்டமில்ல தொழில் பண்ணி எல்லா ஊருளையும் பெரிய! பெரிய!… ஹோட்டல் வைக்கனும் இது தான் என் கனவு” இதனைச் சொல்லும் போது மட்டும் கண் மூடி ஒரு சிரிப்புடன் சொல்ல. அவனது பிடித்தம் புரிந்தாலும் அது எதற்கு நமக்கு என்ற நிலையில்.
“ரொம்பச் சந்தோசம் இப்பவும் அந்தக் கனவு நினைவாகி ஒன்னை ஒன்பதா பெருக்கி நில்லுங்க நான் வரேன்” என்றவள் தனது கூடையை எடுத்துக் கொண்டு போகப் பார்க்க இத்தனை நேரம் காத்து வைத்த பொறுமை காற்றில் பறந்தது.
“என்ன நீ ஏட்டிக்கு போட்டி பேசிகிட்டு இருக்க. நானும் என் மேல தப்புனு தானே பொறுமையா பேசுறேன். அப்படியும் திமிர் காட்டுனா என்னடி அர்த்தம்”
பத்மா!… பத்துவாகி நின்றதை கூட பொறுத்தவள், அதுவும் தேய்ந்து ‘டி’யில் வந்து நிற்க. கோபமாக கூடையைப் பொத்தெனக் கீழே போட்டவள் வேகமாக அவனை நெருங்கி “என்னய்யா ‘டி’ மிரட்டி வைக்கப் பாக்கறியா? என்கிட்ட இந்த வேலை ஆகாது சொல்லிட்டேன்” முகத்திற்கு நேராகக் கை நீட்டி பேசி வைக்க. அதில் இன்னும் கோபம் வந்தது கந்தனுக்கு.
“கைய இறக்கி பேசு இது என்ன பழக்கம்?”
“போடி சொல்லுறது மட்டும் நல்ல பழக்கமா?”
“நீ பேச வைக்கிற”
“நீயுந்தான்” சரிக்கு சரி நின்றவளிடம் எரிச்சல் வர.
“ஏய்!… போய் தொலைடி” என்றவன் வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தனது வண்டியை நோக்கி செல்ல.
“அது என்ன நான் தொலையுறது நீ தொலை வெள்ளை காக்க” என்று கத்திவிட்டு கூடையை எடுத்துக் கொண்டு வேக வேகமாக நடந்து விட்டாள்.
“திமிராடி யாரு வெள்ளை காக்க” என்று திரும்பி கத்தியவனைக் கண்டு கொள்ளாமல் நடந்து விட்டாள்.கோபம் தொண்டையை அடைக்க எதற்கென்று தெரியாமலே கண்ணில் இருந்து கண்ணீர் பெருகியது.கந்தனும் கோபமாக வந்து காரில் அமர்ந்து கொண்டான்.அதுவரை அவர்களை பார்த்தவாறு வண்டியில் சாய்ந்து நின்ற சிங்காரம்.
“என்ன கந்தா இது? இப்படி பேசிக்கிறீங்க” என்ற மாமனை பார்த்து.
“எப்படி மாமா?”
“நீ ‘டி’ அந்த பொண்ணு ‘வெள்ளை காக்க’ என்னய்யா இது பேச்சு”
“அதான் கேட்டுச்சா மச்சான்?” என்றதும் சிங்காரம் அதிர்ந்து.
“அதுக்கு மேலயா பேசி வச்சீங்க? என்ன கந்தா இது?” உண்மையில் சிங்காரத்திற்குக் கவலையாக இருந்தது.பேச்சே இந்த லட்சணம் இதில் இருவரும் சேர்ந்தால் எண்ணவே கண்ணை இருட்டி கொண்டு வந்தது.
“பேச விடாம வார்த்தைக்கு வார்த்தை பிராண்டி வைக்கிறா மாமா.அப்படியும் அடக்கிட்டுப் பொறுமைய்யா தான் பேசுனேன்.என்ன பேசுனாலும் எகத்தாளம் பண்ணுறா. தப்பு நான் தாண்டின்னு காலுல விழுந்தாச்சு மாமா இன்னும் என்னை என்ன செய்யச் சொல்லுறீங்க”
“ப்ச் கந்தா பிடிக்காத இடத்துல நமக்கு என்ன வேலை? கட்டாயப் படுத்த வேண்டாம் கந்தா நான் பெரிய மச்சான் கிட்ட சொல்லி வேற பொண்ணு பார்க்க சொல்றேன்”
“அது முடியாது”
“இது என்ன கதையா கட்டாயப் படுத்திக் கல்யாணம் பண்ண வைக்க. நிம்மதியே போயிடும் கந்தா விளையாட்டு பண்ணாத”
“இல்ல மாமா கொஞ்ச நாள் போகட்டும்”
“நாள் போயி…”
“திரும்ப இது போலப் பேசி பார்ப்போம்”
“திரும்ப அந்தப் புள்ள மறுக்கும், திட்டி வைக்கும்”
“திட்டுனா இது போல நேரம் கொடுப்போம். திரும்ப நாள் போகட்டும், திரும்பப் பேசுவோம்” கந்தன் தீவிரமாகச் சொல்ல. அதுவரை பதட்டத்தில் பேசி கொண்டிருந்த சிங்காரத்திற்கு மச்சானின் இந்த பேச்சுச் சிரிப்பை கொடுக்கச் சிரித்தவாறே அவனை சீண்டும் பொருட்டு,
“அப்படியும் அந்த பொண்ணு மறுத்து நிற்கும்.என்ன செய்வ கந்தா?”
“திரும்ப நாள் எடுப்போம் ,பேசுவோம்” என்றவன் பேச்சில் இப்போது வாய்விட்டே சிரித்த சிங்காரம்.
“சரியான வம்புணியா நீ? அந்தப் பொண்ணு அடிச்சு வெளுக்கப் போகுது பாரு”
“வாங்கிக்குவோம் அடிக்க ஆள் இல்லாம போறதுக்கு இது தேவல” என்றவன் பிடிவாதம் நெருடலை கொடுத்தாலும். கந்தனை விட்டு பிடிக்க எண்ணியவர் அதன் பின் கந்தனிடம் இந்த பேச்சை தொடரவில்லை.விடயம் கொஞ்சம் பெரியதாகத் தோன்ற அன்பரசனிடம் தனித்துப் பேச எண்ணி கொண்டார் சிங்காரம்.
இங்கு வழியெங்கும் அழுது கொண்டே வந்தவள்.வியாபாரம் செய்ய மனம் வராமல் கட்டிய பூவை எடுத்துக் கொண்டு மங்களாம்பிகையைத் தரிசித்துப் பூவை அம்பாளுக்கே கொடுத்து விட்டு தனது தம்பி வீட்டுக்கு வந்து விட்டாள்.
இன்று தனியாகச் சயனம் கொண்டாள் தூக்கம் என்பது தொலைவாகி போகும் என்று எண்ணியவள்.மலரிடம் தன்னை எழுப்ப வேண்டாம் உடல் நிலை சரியில்லை என்று பூஜை அறையில் சுருண்டு கொண்டாள்.ஒருவர் மட்டுமே அந்த அறைக்குள் படுக்க முடியும்.
எப்போது தம்பி வீட்டுக்கு வந்தாலும் அவளது இடம் அது தான்.ஒரே ஒரு ஜன்னல் நான்கு சாமி படங்கள் கொண்ட அறை அது. அதில் தன்னைக் குறுக்கி படுத்து கொண்டாள் பத்மா.கண் மூடி கொண்டவள் காட்சியாக கந்தன் பேச்சுகளே வளம் வந்தது.
ஒரு மனம் கந்தன் பேசியது தவறில்லை என்று எடுத்துரைத்தது. அன்றைய நிகழுவுக்கு நானே பொறுப்பு என்று ஏற்றுக் கொண்டான். அவனை வரையில் திருமணம் பேசி நின்றான் முறையாக.என்னால் முடியாது என்றால் முடிந்தது, அதை விட்டு அவனிடம் ஏன் மல்லுக்கட்டி கொண்டு நின்றோம்.
ஒரே வாக்கியம் ‘நீ சொல்வது அனைத்தும் சரி’, ஆனால் எனக்குத் திருமணம் செய்ய விருப்பமில்லை’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கலாம் என்று எண்ணியது. இன்னொரு மனமோ அவன் எப்படி பேசலாம்? அவன் செய்ததற்கு நான் பேசியது சரிதான் என்று நின்றது.
இதுவோ? அதுவோ? அது தான்? இது தான்? சரி? தவறு? என்று மனதை போட்டு உலப்பிக் கொண்டிருந்தவளுக்கு உடல் சூடு கண்டது தான் மிச்சம். என்றுமே இல்லாத அளவில் உடல் சூடு எகிறி நின்றது. அதன் பலன் ஒரு நாள் முழுமையும் கண் முழிக்காமல் கிடந்த தமக்கையை அள்ளி கொண்டு மருத்துவமனை நோக்கி ஓடினான் செல்வம்.
error: Content is protected !!