Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்! அத்தியாயம் 6

பொழியும் மேகம்!

அத்தியாயம் 6

          நர்மதா சேலையை பத்திரமாக எடுத்து வைக்க,

   “ உனக்கான சின்ன சின்ன உரிமைகளையும் நீ விட்டு கொடுக்க கூடாது நர்மதா…” என்று பிருந்தா சொல்ல,



Advertisement

   லேசாக சிரித்து கொண்டாள் நர்மதா.

   “ம்ச்… நான் சொல்றது உனக்கு புரிய மாட்டாது. நீ உன் புருசனோட அச்சுல நடக்குற. அது சரி கிடையாது. கணவன், மனைவின்னா ஒரே மாதிரி தான் இருக்கணுமா?… ரெண்டு பேருக்கும் சுய விருப்பு, வெறுப்பு இருக்கு…”

  “எனக்கும் இருக்கு பிருந்தா. ஆனா, உன் கொழுந்தன் கிட்ட போய் சேர்க்க தான் தெரியல…” என்று நர்மதா சொல்ல,

Advertisement

    “நீ ஸ்ட்ராங்க அடிச்சு பேசணும்… ரெண்டு வார்த்தை நீ பேசுனா, உன் புருசன் நாலு வார்த்தை பேசுறாங்க. அப்படியே நீ மடங்கி போயிடுற… சண்டை வந்தாலும், கத்தி பேசினாலும் உன் தரப்பு நியாயத்தை நீ தான் சொல்லணும் நம்மு…”

Advertisement

   “அதெல்லாம் ஒரு நாளும் நடக்காது. நானும் சில நேரம் வாதாடுறேன். அப்புறம் அவர் பேச, பேச.. நான் பேச வந்ததே மறந்து போயிடுது. அத்தோடு வாக்குவாத முடிவு அவர் பக்கம் முடிஞ்சா தான் அமைதியா போவார், இல்லையா அதுவரைக்கும் பேசியே கொள்வார். அப்படியும் நான் பேசி அவரை மடக்கிட்டேன்னு வை… அவரால, அதை ஏத்துக்க முடியாது. அடுத்த ஒரு சந்தர்ப்பத்தில் என்னை குத்தி காட்ட ரெடியா இருப்பார். அதுக்கு தான், அவர் சொல்லவே கேட்கிறது. அது ஒரு வகையில எல்லாம் பிரச்சனைக்கும் முடிவா இருக்கு பிருந்தா…” என்று சொல்லும் தங்கையை பார்த்தவள்,

    “இப்படி எவ்வளவு நாள் நீ மட்டுமே விட்டு கொடுக்க முடியும். என்னைக்காவது ஒரு நாள் சலிப்பு தட்டி போகும். அப்படி இல்லையா அடக்க முடியாத ஆத்திரம் பெருகும்… எதையும் அப்பவே உடைச்சு பேசி தீர்வு காணுவது தான் நல்லது நம்மு… நீ விட்டு கொடுத்து விட்டு கொடுத்து உன் புருசன் ஈகோக்கு தீனி போடுற… அவர் தான் செய்யிறது சரியா, தப்பான்னு யோசிக்கிற மனநிலையில் இல்லை. நிரஞ்சனா சரி, அப்படி ஒரு மனநிலையில் தன் இருக்கார்…” வருத்தமாக பிருந்தா சொல்ல,

   சிரித்து கொண்டே நர்மதா, “வேற எப்படியும் எம் புருசனை சரிகட்ட முடியாது பிருந்தா. அவருக்கு தக்க நானும் பிடிவாத பிடிச்சு நின்னா எப்பவோ நம்ம வீடு வந்துருக்க வேண்டிய தான்…” என்றவள்,

Advertisement

      “புருசனுக்குன்னு தனியா ரூல்ஸ் எல்லாம் எதுவும் கிடையாது. அது அவங்க பொண்டாட்டிய பொறுத்து… அப்படி தான் பொண்டாட்டிக்கு ரூல்ஸ், ரெகுலேசன் கிடையாது. அவங்க வாழ்க்கை துணையை பொறுத்து தான் எல்லாம் அமையும். நீ நம்மளை சுத்தி எல்லாரையும் பாரு… எம் புருசன் குடிகாரன் தான். ஆனா, குடும்பத்தை பார்ப்பான். எம் வீட்டுக்காரன் ரொம்ப நல்லவன். ஆனா, முன் கோபம் தான் அதிகம். வேற ஒருத்தி கூட தான் குடும்பம் பண்றான். என்ன பண்ண, பிள்ளைகளுக்காக கூட இருக்கேன். வேலைக்கு போறதில்லை, ரொம்ப கோபம் தான் வருது. ஆனால், என்னை சுத்தியே வாரான். நல்லவன் தான், விட முடியல… இப்படி நான் போற ஸ்கூல்ல சுத்தி இருக்கிற மக்கள் சொல்லி நிறைய கேட்டு இருக்கேன்…”

   “நம்மளை சுத்தியும் நிறைய பார்த்து இருக்கேன். இங்க உறவுகளுக்கு வரையறை கிடையாது நர்மதா. இப்படி தான் வேணும்ன்னு நாம் ரெடிமேட்டா செலக்ட் பண்ண முடியுமா?… யார் எப்படி இருப்பாங்களோ, அப்படி தான் இருக்காங்க… அப்படியே இருக்கட்டும். அத்தோடு வாழ்வது தான் வாழ்க்கை. எனக்கு புடிச்ச மாதிரி அமையல, நான் நினைச்ச மாதிரி கிடைக்கலன்னு வாழ்க்கையை தூக்கி போடுறவங்க எத்தனை பேர்…” என்று நர்மதா சொன்னதும்,

   “இப்படி வியாக்காணம் பேசுறாதால தான். உம் புருசன், உம் தலையில மிளகாய் அறைக்கிறான்…” கடுப்பாக சொன்னாள் பிருந்தா.

   “ஹாஹா… பிருந்தா… முழுக்க, முழுக்க தப்பான ஒருத்தனோடு ஒரு பெண் வாழ மாட்டேன்னு முடிவு எடுக்குறது எவ்வளவு சரியோ… அதே போல முழுக்க முழுக்க சரியான ஒருத்தன் கூட தான் வாழ்வேன்னு ஒரு பொண்ணு எடுக்குற முடிவும் தப்பானது…”

   “போடி உன் தத்துவத்தை கொண்டு போய் குப்பையில போடு…”

     “அய்யே! நிதர்சனத்தை தான் சொல்லுறேன்… நிறை, குறை ரெண்டு பக்கமும் தான் இருக்கும். என்னோட குறை என்னன்னு என் கண் வழி எப்படி தெரியும். என் புருசன் தான் சொல்லணும். அவரும் சில விசயங்கள் என்னை அனுசரிச்சு தான் போவாரா இருக்கும்… அப்படி நானும் சிலதை அனுசரிச்சு போறேன். அவ்வளவு தான் சிம்பிள்…”

    “எல்லா நேரமும் ரூல்ஸ் பேசுறான், சண்டை போடுறான், முட்டிகிறோம் அப்படி எல்லாம் கிடையாது. எங்களுக்கான சந்தோசமும் இருக்கும், சண்டையும் இருக்கும். மாசத்துல ஒருநாள், ரெண்டு நாள் சண்டை வர தான் செய்யும். எனக்கு வாக்குவாதம் செய்ய பிடிக்காது, பயிண்டா பேசி சண்டை போடவும் தெரியாது. அதனால் நான் அமைதியா போயிடுவேன். இதை செஞ்சா என் புருசனுக்கு பிடிக்காதுன்னு தெரியும். அதை நான் பண்றது இல்லை… அப்படி இருக்குறதால என் குடும்பம் தானே நல்லா இருக்கு, என் வீடு அமைதியா மூவ் ஆகுது…” என்றவள்,

   “அத்தோடு நிரஞ்சன் எடுத்து சொல்லி புரிய வைக்கிற ஆள் இல்லை. அவரா புரிஞ்சா மட்டும் தான் ஒரு விசயத்துல இருந்து மாறுவாங்க… வாழ்க்கை நீண்ட கெடக்கு. ஒரு நாள் மாறலாம் தானே…” தெளிவாக நர்மதா சொல்ல,

  “ ஓவர் காண்பிடன்ட்…”

   “இருக்கலாம் பிருந்தா தப்பில்லை…”

     “என்னவோ போ… உன் தத்துவம் எனக்கு புரியாது. எப்படியோ என் தங்கச்சி வாழ்க்கை நல்லா இருக்கனும்…” என்று பிருந்தா சொல்ல,

   “உனக்கு எப்படி புரியும். நீ நிரஞ்சன் ஃபிமேள் வேர்ஷன். உனக்கு புரியிறது கஷ்டம் தான் …” என்று சிரிக்க,

  தங்கையை முறைத்தவள், “பேச்சை பாரு… உங்க மாமா கிட்ட கேளு நான் எப்படின்னு தெரியும்…”

   “அவர் தானே… அவர் நர்மதாவோட மைள் வேர்ஷன். என்னை மாதிரி வாழ்க்கை துனைகிட்ட இருக்குற நல்ல விசயத்தை மட்டும் தூக்கி பிடிக்கிற ஆள்…” என்று அதற்கும் சிரித்தாள்.

     இப்படி அக்கா, தங்கை இருவரும் தன் மன சங்கடங்களை பகிர்ந்து கொள்வார்கள். நிரஞ்சன் காதுக்கு செல்லாமல் நர்மதா பார்த்து கொள்வாள். அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது. கணவன், மனைவி விசயங்களை அடுத்தவர் காதுக்கு செல்வது அவனுக்கு சுத்தமாக பிடிக்காத ஒன்று… ஆனால், நர்மதா அதற்கு ஒரு வரைமுறை வைத்து விடுவாள்.

   ஒருவேளை தன்னிச்சையாக தான் எடுக்கும் முடிவு தவறாக இருந்தால்… அதனால், தன் நலத்தை விரும்பு ஒரு உறவிடம் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பது தான் அவளின் கோட்பாடு. அதனால், சில குடும்ப விசயங்களை தன் அக்காவிடம் பகிர்ந்து கொள்வாள்.

   சில நேரம் பிருந்தா சொல்வதை ஏற்று கொள்வாள். சில நேரம் அக்காவோடு மனம் திறந்து பேசும் போதே ஒரு தெளிவு வரும். அதனால் தன் மன குழப்பத்தை, சங்கடத்தை, கவலை, சந்தோசம், சண்டை எதுவென்றாலும் தன் அக்காவிடம் ஒரு குறிப்பு போல சொல்லி விடுவாள். சில நேரம் ஆதங்கமாக கொட்டி விடுவாள். தீர்வு கிடைக்குதோ இல்லையோ தான் தனி இல்லை என்ற உணர்வு மறையும். மன அழுத்தம் குறைந்து சின்ன ஆறுதல் கிடைக்கும்.

   இதையெல்லாம் கணவனிடம் சொல்ல முடியாது. ஆனால், அவன் அவன் வீட்டில்… அதாவது, தன் அம்மா, அப்பா, அண்ணனிடம் சொல்லி விடுவான். அவனின் வேலை, அழுத்தம், சண்டை, குடும்பம் என்று அவர்களுக்குள் அலச படும். இதை சொன்னால், “அவர்கள் நம் குடும்பம். பிருந்தா வேற வீட்டு பெண்…” என்று முடித்து விடுவான். அவனுக்கு தான் பிருந்தா வேற வீட்டு பெண். அவளுக்கு சிறு வயதில் இருந்து உடன் வரும் உடன் பிறப்பு. இவன் சொல்லுவது போல தள்ளி எல்லாம் வைக்க மாட்டாள். அவன் சொன்ன அறிவுரையை தள்ளி வைத்து, தன் அக்காவோட இனைந்து தான் இருப்பாள்.

          அன்று இரவு கணவன் வீட்டுக்கு வந்ததுமே சொல்லி விட்டாள், “என் பிறந்த நாளுக்கு அக்கா ரெண்டு சேலை எடுத்து கொடுத்தாங்க…” என்று சந்தோசமாக சொல்ல,

   “ரெண்டா?…” என்றான்.

    “ஆமா, ரெண்டு சேலை தான் … பாக்குரீங்களா? ரொம்ப அழகா இருக்கு. ப்ளவ்ஸ் கூட அழகா தச்சு எடுத்து வந்து இருக்கா…”

     “உங்க அப்பா எடுத்து கொடுத்ததும் ரெண்டு சேலை தான். அப்ப… நர்மதா விட்டுல நடந்த சண்டையை உங்க அக்கா கிட்ட எதுவும் சொன்னயா?…” பார்வை துருவ கேட்டான் நிரஞ்சன்.

    நெஞ்சில் திக் என்று இருந்த போதும், “என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?… ஏற்கனவே நான் உங்க மேல கோபத்துல இருக்கேன். அந்த சுபா சொன்னதுக்கு, எங்க அப்பா எனக்கு எடுத்து கொடுத்த சேலையை திருப்பி கொடுத்து விட்டீங்க. அப்படி பார்த்தா, நான் அந்த வீட்டு பொண்ணு தான் என்னை என்ன செய்யிறத இருக்கீங்க…” கணவன் விசாரிக்க இடம் கொடாமல் தன் கோபத்தை கொட்டியவள்,

     “எங்க அப்பா சொல்லி இருப்பார். அதான் எங்க அக்கா எனக்காக சேலை எடுத்து வந்து இருப்பா… இல்லன்னாலும் என் பிறந்த நாளுக்கு ஏதாவது செய்வா தான்… அதை கூட கிராஸ் கொஸ்டின் செய்வீங்களா?…”

       “இல்லை நர்மதா. சும்மா நார்மலா தான் கேட்டேன். அதுக்கு ஏன் கோப படுற…” கொஞ்சம் பின் வாங்கினான் நிரஞ்சன்.

   அவனுக்கே கொஞ்சம் உறுத்தல் தான். ரொம்ப நல்ல மனிதர் தன் மாமனார். அவரை சங்கட படுத்தி விட்டோமே என்று…

     உடை மாற்ற நைட்டி எடுத்தவள், “நான் ஒன்னு கேட்க வாங்க… சுபா சொன்ன வார்த்தைக்கு டிகராகி எங்க வீட்டுக்கே போகாதன்னு சொன்னீங்க. உங்க அம்மா தினமும் என்னை ஏதாவது சொல்லிட்டே தான் இருக்காங்க. அதுக்கெல்லாம் நான் டிகரானா உங்களை விவாகரத்து தான் பண்ணனும்…” என்றவள், அவசரமாக குளியலறைக்கு சென்று விட்டாள்.

       “எதே! விவாகரத்தா?…” அதிர்ந்து போய் திரும்பி பார்த்தால் மனைவி அங்கு இல்லை.

  நிரஞ்சன் உறங்காமல் மனைவிக்காக காத்திருந்தான். நர்மதா வெளியே வர, கணவன் முழித்து இருப்பதை பார்த்து,

   “போச்சு போ… எப்படி தான் ஒளிவு மறைவு இல்லாம திறந்த புத்தகமா புருசன் கிட்ட சில பொண்ணுக இருக்காங்களோ… அப்படி எல்லாம் ஒத்துமையா, ஒரே மாதிரி வாழ்க்கை அமையுமா என்ன?… நானெல்லாம் ஒன்னை மறைச்சு, கோபம் வரும்ன்னு ஒளிச்சு, சண்டை வேணாம்னு சிலதை பேசாமல் கடந்து, கோபத்தையும் அடக்கி… அப்பப்பா எவ்வளவு கடந்து வாரேன் இந்த புகுந்த வீட்டுல…” புலம்பி கொண்டு சத்தமில்லாமல் சற்று தள்ளி படுத்து கொள்ள,

     “நர்மதா…”

ஆரம்பிச்சாச்சு, நான் உறங்கின மாதிரி தான்… “என்னங்க…”

  “ என் மேல கோபமா?…”

 “உங்க மேல எனக்கென்ன கோபம்…” பேச்சை வளர்க்க விரும்பாத வாய்ஸ் வந்தது.

   “நான் சொன்னது எனக்கு தப்பா தெரியலை…”

      “அந்த நம்பிக்கை இருந்தா என் கிட்ட ஏன் கேக்குறீங்க?”

“உனக்கு என் மேல கோபம் இருக்கு தானே…” விடவில்லை நிரஞ்சன்.

  எரிச்சல் வந்தது நர்மதாக்கு… நாளைக்கு ஞாயிற்று கிழமை என்றாலும் அவள் சமையல் வேலைக்கு லீவா விட போகிறார்கள். கணவன் கேட்டது போல ஆமாம் கோபம், வருத்தம் தான் என்றால்… மற்ற கணவர்கள் போல சமாதானமெல்லாம் அந்த பக்கம் இருந்து வராது.

   நீ நினைப்பது தவறு. நான் என்ன சொல்கிறேன் என்றால் என்று ஆரம்பித்து பேச தொடங்கினால், நர்மதா பொறுமை பறந்து போய் விடும். ஒரு பொண்டாட்டி கோபமாக இருந்தால், குறைந்த பட்சம் என்ன எதிற்பார்ப்பாள் கொஞ்சலோடு கணவனின் சிறு சமாதானத்தை தான்.

   ஆனால், இங்கே… உன் கோபமே தவறு. இதில் என்ன சமாதானம் என்று ஆரம்பித்து ஒரு சண்டை இன்னொரு சண்டைக்கு அடித்தளமாக அமையும். வார்த்தைகள் தடித்து விழும், சத்தம் கூடும். அடுத்து ஒரு சண்டைக்கு மனதில்லை.

 “ நீ கொஞ்சம் யோசி நர்மதா. நான் பேசுனதுல என்ன தப்பு இருக்கு…”

   “என்னங்க வேணும் உங்களுக்கு… நீ பேசுனது சரி தான். என் நினைப்பு தான் தப்பு. ஆனா ஒன்னு, உங்களுக்கும் ரெண்டு பொம்பளை பிள்ளைக இருக்கு, பார்த்துக்கோங்க… நாளைக்கு அவங்களை கட்டி கொடுத்துட்டு, அங்க ஒரு வார்த்தை தடிச்சு விழுந்தா நீங்க யாரோட உறவை தள்ளி வைப்பீங்க. மதியாதோர் தலை வாசல் மிதியாதேன்னு எனக்கு சொன்ன மாதிரி உங்க பிள்ளைகளுக்கு என்ன சொல்லுவீங்க. அது தான் தீர்வு. எனக்கு தூக்கம் வருது…” என்று கண்ணை இருக மூடி கொண்டாள்.

         அடுத்த அரை மணி நேரம் அமைதியாக போனது.

   “நர்மதா…” என்று மீண்டும் அழைக்க,

  எழுந்தே உட்கார்ந்து விட்டாள், “இப்போ என்ன?..” என்று கடுப்பாக ஆரம்பிக்க,

   “ஏய்! சண்டை இல்லை. நாளைக்கு சண்டே. நம்ம ரெண்டு பேருக்கும் அவசரமா வேலைக்கு போற வேலை இல்லை…” என்று அடித்தளம் போட,

   நர்மதா புரிந்து கொண்டாள். ரெண்டு பேரும் வேலைக்கு போகும் ஆட்கள். அவர்களுக்கான நேரம் என்பது வீக் எண்ட் தான். மற்ற நாள் எல்லாம் அடுத்து என்ன மீட்டிங் என்றும், இவள் நாளை என்ன சமையல், பிள்ளைகள், தன் வேலை என்று தான் நில்லாமல் நேரம் ஓடும். அவர்களுக்கான நேரம் என்பது விடுமுறை மட்டும் தான்…

     அவளின் அருகாமைக்கு இவன் வட்டம் போட…

   “எனக்கு உறக்கம் வருது…”

“பிரச்சனை இல்லை. ஒரு மணி நேரம் தள்ளி உறங்கலாம்…” நிரஞ்சன் எழ பார்க்க,

    பிள்ளைகளை கண்ணால் காட்டினாள் நர்மதா.

    “நல்லா தூங்குறாங்க… ரெண்டு பேரையும் தூக்கி போய் எங்க அம்மா ரூம்ல விட்டுட்டு வரவா…” கணவன் யோசனை கேட்க.

        அப்பட்டமாக முறைத்தாள் மனைவி. மணி இரவு பதினோரு மணிக்கு மேல் ஆனது. இந்த நேரம் கதவை தட்டி பிள்ளைகளை மாமியாரிடம் விட்டால், தங்களை என்ன நினைப்பார்கள்.

  “பேசாம உறங்குங்க…”

   “வர வர என்னை சரியாவே கவனிக்க மாட்ற நம்மு நீ…” குறைபட்டான் கணவன்.

 “இனி அப்படித்தான். பழகிகோங்க…”

“என்னது…” என்று அலறி போய் பார்க்க.

   “ஆமா, பிள்ளைக பெருசாகுறாங்க. அவங்களுக்கும் விவரம் தெரியும். அதனால், பிள்ளைக இருக்கும் போது என்னை சீண்டுறது, சில்மிசம் பண்றது எல்லாம் இனி கூடாது…”

  “அப்ப நான் எங்க?… சாமியாரா போகவா…”

   “ரெண்டு பிள்ளை பெத்தாச்சு. பொறுப்போடு நடங்க…”

     “ நீயும் ரெண்டு பிள்ளை பெத்தவ மாதிரி இரு… நம்ம சஸ்டிக்கு அக்கா மாதிரி இருக்க…” என்று நிரஞ்சன் சொன்னதும், நர்மதா முகம் மாறி போக, லேசான சிவப்பு எட்டி பார்த்தது,

     “நம்மு, நான் அந்த பக்கம் வரவா…”

  “தத்து பித்துனு உளறாமா அமைதியா படுங்க…” என்று அதட்டல் போட,

  “போடி நீ சஸ்டிக்கு ஒன்னும் அக்கா மாதிரி இல்லை. எனக்கு தான் அக்கா மாதிரி இருக்க…” என்று கடுப்பாக சொல்லியவன், அந்த பக்கம் திரும்பி படுத்து கொண்டான். நர்மதா முகம் மலர்ந்தாது.

        மறுநாள் காலையிலே குடும்பத்தோடு வெளியில் கிளம்பி விட்டான் நிரஞ்சன். தனக்கு முன்னே பிருந்தா சேலை எடுத்து கொடுத்தது பிடிக்க வில்லை. அது ஒரு வித உரிமை உணர்வு, பொறாமையை கொடுத்தது.

      தீபாவளி நேரம் என்பதால் நிறைய ஆஃபர் போட்டு இருந்தார்கள். நர்மதாக்கு ஒரே குஷி. பிள்ளைகளுக்கு, தனக்கு என்று நிறைய எடுக்க தொடங்கினாள்.

   “நர்மதா, என்ன இது? குப்பை மாதிரி போட்டு வச்சு இருக்காங்க. இதுல என்னத்த தேடிட்டு இருக்க…”

    “நிறைய ஆஃபர் வந்து இருக்கு… பாதி விலைக்கு…”

“அப்படி போட்டது எல்லாம் எடுக்க வேணாம். நல்லதா எடுப்போம்…”

  “இதுவும் நல்லது தான். கொஞ்சம் தேடி எடுத்த போதும் துணி தரமா தான் இருக்கும்…”

   “நான் தான் காசு கொடுக்க போறேன். பிராண்டடா எடுக்கலாம்…”

“வீட்டுக்கு போட தாங்க… உங்க பிள்ளைக பத்தி உங்களுக்கே தெரியும். அவ்வளவு அழுக்கா கொண்டு வருவாங்க. அதுக்கு இது தான் சரி…”

  “நோ நர்மதா… எம் பிள்ளைக எல்லாம் தரமானதா, விலை உயர்ந்ததாக தான் போடணும்…”

“சரி உங்க பிள்ளைகளுக்கு எடுங்க. நான் எனக்கு மட்டும் டெய்லி யூஸ்க்கு காட்டன்ல போட்டு இருக்காங்க, பாக்குறேன்…” என்று நர்மதா நகர,

   “எம் பொண்டாட்டியும் அப்படி தான் ட்ரெஸ் பண்ணனும்” என்று இழுத்து கொண்டு வந்து விட்டான்.

     நிரஞ்சன் எடுத்தது எல்லாம் விலை கூடியது தான். ஒரு ரெண்டு சேலைக்கு அமைதியாக இருந்தவள். காட்டன் சேலையும் நாலாயிரம், ஐயாயிரம் என்று தூக்க கத்தி விட்டாள்.

  “ஏதோ ரெண்டு சேலை பரவாயில்லை. இவ்வளவு வேணாம். நாப்பதாயிரம் சம்பளம் வாங்குற நான் தினமும் நாலாயிரம் ரூபாய் சேலை கட்ட முடியுமா?…” நக்கலாக நர்மதா கேட்க.

   “முடியாது தான். ஆனா, நாப்பதாயிரம் சம்பளம் வாங்குற நர்மதா புருசன், லட்சத்தில் சம்பளம் வாங்குறனே…” அதே நக்கலாக நிரஞ்சன் பதில் சொல்ல,

  பார்த்து இருந்தா விற்பனை பெண், “ஏன் மேம், பொதுவா ஒய்ஃப் எல்லாரும் வாங்கி கொடுன்னு தான் சண்டை போடுவாங்க. ஹஸ்பான்ட்ஸ் தான் கணக்கு பார்ப்பாங்க. உங்க வீட்டுகாரர் வாங்கி கொடுக்கிறார், வாங்க உங்களுக்கு என்னை சிரமம்…” சிரிப்பாக கேட்டாள்.

    நர்மதா ஒரு பெருமூச்சு விட்டு ஒதுங்கி கொள்ள,

  “உன் பிர்த் டே ட்ரெஸ் பாரு நர்மதா…” என்று லட்சத்தை தொடும் விலையில் புடவைகளை காட்ட,

    நர்மதா பச்சை நிறம் ஒன்றை எடுக்க,

  “உன் கிட்ட இந்த கலர் இருக்கு…”

 ஆரஞ்சில் தாமரை போட்ட ஒன்றை எடுக்க,

  “ வேற கலரே கிடைக்கலையா நம்மு… வேற பாரு…”

ரோஸ் கலர் ஒன்றை எடுக்க,

“நிஜமாவே நல்லாவா இருக்கு…”

ஆஸ் கலர் எடுத்து பார்க்க,

   “எடுப்பா இருக்காது…”

சிவப்பில் மாங்காய் போட்டது தொட்டு பார்க்க,

 “எல்லாரும் இதவே தான் தூக்குவாங்க…”

“நீங்களே பார்த்து எடுத்து கொடுங்க…” ஒதுங்கி கொண்டாள் நர்மதா.

“ உனக்கு பிடிச்சத எடுக்க சொன்னா, நீ என்ன செலக்ட் பண்ண சொல்ற…”

  லெமன் எல்லோ வித் வயலட் கலர் நெருக்கமான தங்க கம்பி கொண்ட ஒன்றை தேர்வு செய்ய,

  “ பொல்லா அழகு…” உதட்டை சுளித்தாள் மனைவி.

   நைட்டியும் அதே போல ஆயிரங்களில் எடுக்க, தாங்க முடியாமல்,

 “உதாரிதனம்…” என்றாள் மனைவி.

“உன் கஞ்சதனத்தை உன்னோடு வச்சுக்கோ…”

“அது கஞ்சம் கிடையாது சிக்கனம்…” பொறுமை போனது.

  “இதுவும் உதாரிதனம் கிடையாது வரவுக்கு தக்க செலவு…” பகட்டான பதில் நிரஞ்சன் சொன்னான்.

  “ வரவை சேமிக்கணும், செலவு பண்ண கூடாது…”

   “உன் சம்பளத்தோட தகுதி வச்சு, என் செலவை தீர்மானிக்கதே…” திரும்ப ஒரு சண்டை ஆரம்பமானது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!