அம்மையப்பன் 17
அம்மையப்பன் 17
ஐயா பசிக்குது.. என மெல்லிய குரலில் ஷாலினி கூற.. சிவநேசன் வேதா புள்ளைங்களுக்கு பலகாரம் ஏதாவது செய்யும்மா.. பவளம் அமிர்தம் நீங்களும் உன்ற அம்மைக்கு உதவி செய்யுங்க, போங்க.. என சிவநேசன் சொல்லவும்.. பெண்கள் சமையல் கட்டிற்கு செல்ல.. ஆண்களோ அமைதியாக அமர்ந்திருந்தனர்..
Advertisement
குழலி தந்தையின் மடியில் படுத்தவாரு உறங்கிவிட்டாள்.. கன்னங்களில் கண்ணீரின் தடம் இருக்க.. நெஞ்சம் கணக்க அதனை துடைத்துவிட்டான் அகத்தியன்..
மகள் சொன்ன செய்தியில் அவன் உயிர் துடித்து கொண்டிருந்தது.. உள்ளம் கொதிக்க எதிரே வெறித்து கொண்டிருந்தான்.. என்னதான் அதி அவர்களை கொன்றுவிட்டதாக கூறினாலும்.. அவர்களை தன் கையால் ஒன்றுமே செய்ய முடியவில்லையே என கொதித்து கொண்டிருந்தான்..
Advertisement
Advertisement
பெரியவர்களுக்கு சாப்பிடும் மனதில்லை போல்.. அவர்கள் யாரும் வரவில்லை.. ஷாலினி உன் தோழிகளை கூட்டிட்டு வாத்தா.. அப்படியே குழலியையும் கூப்புடு.. என்றார்.. வேதவல்லி.
ஷாலினி, ரஞ்சனி சத்தியாவை அழைத்து கொண்டு குழலியின் அறைக்கு செல்ல அவளோ தூங்கிகொண்டிருந்தாள்..
Advertisement
மாமா அம்மத்தா சாப்புட கூப்டாங்க..
அவ தூங்கிட்டா கண்ணு.. நீங்க எல்லாரும் சாப்புடுங்க என அகத்தியன் சொல்லவும் அவள் கீழே சென்றாள்..
அம்மத்தா குழலி தூங்கிட்டா.. என அமர.. மூவரும் சாப்பிட்டார்கள்..
யாழினிய எங்க..
அவ தூங்கிட்டு இருக்கா.. எழுப்புனா கத்துவா..
மூவரும் சாப்பிட்டு சென்ற பிறகும் யாழினி வராமல் இருக்க..
யாழினி.. எழுந்திரி ஏதாவது சாப்பிட்டு படு.. என பவளம் அவளை உலுக்கினதும் தான் தாமதம்.. ஆஆஆஆ.. என்ன விடு.. என்ன விடு.. நான் தெரியாம பேசிட்டேன்.. விடு.. ஆஆஆஆ.. என வீறிட ஆரம்பிக்க அனைவரும் அவளிடம் விரைந்தார்கள்..
அவளின் சத்தத்தில் தங்களின் அறையில் இருந்த அகத்தியன் அமுதனும் வந்துவிட்டார்கள்..
யாழினி.. கண்ணு.. இங்க பாருத்தா.. அம்மணி என பவளம் பரிதவிப்போடு அவளை உலுக்கினார்.. மரகதம் தண்ணீர் கொண்டு முகத்தில் தெளிக்க.. மெல்ல விழித்தவள்.. அழுகையோடு ம்மா என அவரின் தோள் சாய்ந்தாள்.. அவளின் உடல் நடுங்கி கொண்டிருந்தது..
ம்மா.. ம்மா அவ என்னை எப்படி அடிச்சா தெரியுமா.. என்னோட முடிய புடிச்சு இழுத்தாம்மா, அப்பொறம் அவளோட ஆளுங்கள விட்டு என்கிட்ட தப்பா நடக்கவைப்பேன்னு வேற சொன்னாம்மா.. என அவள் தேம்பி கொண்டே கூற பெற்றவளின் நெஞ்சு பதறியது.. அனைவரும் அவளையே திகைத்து பார்த்தார்கள்..
அந்தக்கா ஒன்னும் அந்த மாதிரி சொல்லல.. உன்னோட பேச்சுக்கு பதில் தான் கொடுத்தாங்க.. என ஷாலினி சொல்ல.. யாழினி அவளை கோபத்துடன் பார்த்தாள்..
தேவையில்லாம அந்தக்காவ பத்தி தப்பா பேசாத.. உன்னயும் அண்ணனையும் மட்டும்தான் அந்த அக்கா அடிச்சாங்க.. எங்கள எல்லாம் ஒன்னும் செய்யல.. என மேற்கொண்டு ஷாலினி அதிக்கு பரிந்து பேச.. எல்லோரும் அவளை விசித்திரமாக பார்த்தார்கள்..
என்னம்மா பேசுனா என திருநாவுக்கரசு கேட்டார்..
கொலைகாரி கேடுகெட்டவ இப்படியெல்லாம் சொன்னா ஐயா என யாழினி பேசியதை சொல்ல.. அண்ணன் தம்பிகள் இருவரும் யாழினியை முறைத்தனர்..
என்ன யாழினி இது, எங்க இருந்து இந்த மாதிரியான வார்த்தைகள பேசகத்துக்கிட்ட.. உன்ன விட வயசுல மூத்தவங்ககிட்ட இப்படித்தான் பேசுவியா என திருச்செல்வம் கோபமாக கேட்க.. திருநாவுக்கரசு அவளை முறைத்து கொண்டிருந்தார்..
இதுவரை ஒரு வார்த்தை கூட கடிந்து பேசாத தந்தைகள் இருவரும் இன்று அதியை பேசியதற்காக, தன்னை முறைப்பதையும் பேசுவதையும் கண்டு அவள் அதிர்ந்து போனாள்..
அகத்தியனும் அமுதனும் அவர்களையே பார்த்து கொண்டிருந்தனர்.. அகத்தியன் தனக்கு தெரியாமல் தன் குடும்பத்தினுள், ஓர் ரகசியம் இருப்பதை உணர்ந்து வேதனையுடன் நின்றிருந்தான்..
ஐயா யாரோ ஒருத்திக்காக..
வாய மூடு.. உன்னோட ரூமுக்கு போ.. என திருநாவுக்கரசு பல்லை கடித்து கொண்டு சொன்னார்..
ஏன் இப்போ அவளை போக சொல்றிங்க.. யாழினி என்ன தப்பா சொன்னா.. அவ யாரோ ஒருத்தி தானே.. என அமுதன் வேண்டுமென்றே தந்தைகள் இருவரையும் பார்த்து கூறினான்..
மேலும், அவ பொண்ணே இல்ல.. ராட்சஷி.. மத்தவங்களை கஷ்டப்படுத்தி பாக்குற அரக்கி என அடுத்து ஏதோ சொல்ல போக.. அவன் கன்னத்தில் பலமாக ஓர் அறை விழுந்தது..
ஐயா.. என்ன பண்றீங்.. என அமிர்தம் பவளம் இருவரும் அலறினர்..
ஏனெனில் அங்கு ருத்ரமூர்த்தியாய் அம்மையப்பன் நின்றிருந்தார்.. இதுக்குமேல என்ற அம்மணிய பத்தி ஒருவார்த்தை பேசுன நான் மனுசனா இருக்க மாட்டேன்..
இதுவரை பேரப்பிள்ளைகளிடம் ஒரு வார்த்தை கூட அதட்டி பேசியிறாத அப்பச்சி, இன்று அவனை கைநீட்டி அடித்திருக்கிறார்.. சிறியவர்கள் நால்வரும் அம்மையப்பனிடம் இத்தகைய ஆக்ரோஷத்தை எதிர்பார்க்கவில்லை..
ஏன் நான் பேசக்கூடாது.. அவங்க நமக்கு யாரு, அவங்க எப்படி அப்பத்தா மாதிரி இருக்காங்க.. என அமுதன் கேட்க.. அனைவரும் அமைதியாக இருந்தனர்..
இப்போ மட்டும் ஏன் பேச மாட்டேங்குறீங்க சொல்லுங்க அப்பச்சி என அமுதன் கத்த..
அவ உன்ற அக்காடா.. உனக்கும் உன்ற தங்கச்சிகளுக்கும் அவ அக்கா.. போதுமா.. என திருநாவுக்கரசும் பதிலுக்கு கத்தினார்.. அமிர்தம் தலையில் அடித்து கொண்டு அழுக ஆரம்பித்தார்.. பவளத்தின் இதழும் அழுகையில் துடித்தது..
அவ என்ற பொண்ணு, இந்த குடும்பத்தோட மூத்தவாரிசு.. என ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக, திருநாவுக்கரசு திருச்செல்வம் இருவருமே சொல்ல.. அகத்தியனும் மற்ற பெண்களும் அவர்களை அதிர்ந்து பார்த்தார்கள்..
உங்களுக்கெல்லாம் அதி யாருன்னு தெரிஞ்சுடுச்சுல எல்லாரும் மேல போங்க.. போங்க.. என திருசெல்லம் கத்த அகத்தியன் அமுதன் தோள் மீது கைவைத்து அழுத்தவும்.. அதிர்வும் கோபமுமாக அமுதன் சென்றான்.. பெண்களும் திகைப்பும் விழிப்புமாக அவனை பின்தொடர்ந்தார்கள்..
அப்போவே அந்த ஜோசியர் சொன்னாரே.. நீங்க செஞ்ச கர்மா எல்லாம் பொண்ணு ரூபத்துல வளருது.. அது எல்லாம் என்ற பேரன் தலையில தான் விழுகும்னு சொன்னது சரியாபோச்சே.. மகராசி அப்படியே என்ற மவள உறிச்சி வச்சு நிக்கிறாளே.. என பேச்சியம்மை ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க.. அகத்தியன் அதனை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்..
அத்தை என்னத்தை சொல்றிங்க. என வேதவல்லி பதறினார்..
பதினெட்டு வருடத்திற்கு முன் பேச்சியம்மை ஜோசியர் சொன்ன மற்ற விஷயங்களையும் சொன்னார்.. எல்லோரும் அதை கேட்டு திகைத்து போனார்கள்..
நான் அப்போவே சொன்னேன்.. அந்த புள்ளைய நம்ம வூட்டுக்கு அழைச்சிட்டு வாங்கனு.. யாரு என் பேச்சை கேட்டா.. அப்பாவும் மவளும் குடும்பம், பாரம்பரியம், மரியாதைன்னு சொல்லி என் வாய அடைச்சுட்டாங்க என பேச்சியம்மை தன் குமுறலை கொட்டினார்..
என்னோட குடும்பத்துல எனக்கு தெரியாம நிறைய விஷயம் இருக்கு இல்லீங் ஐயா.. என அகத்தியன் சிவநேசனிடம் கேட்க.. அவர் மகனின் வலிபுரிந்து அவனை வேதனையுடன் பார்த்தார்..
எனக்கு தெரிய கூடாதுன்னு நினைச்சிருக்கீங்க.. உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்லுங்க.. என்று மட்டும் சொல்லி அவன் செல்ல.. அவனை தடுக்க கூட முடியாது அனைவரும் ஓய்ந்து போனார்கள்..
என்னதான் மேலே சென்றாலும், சிறியவர்களுக்கு கீழே தான் மொத்த கவனமும் இருந்தது.. அனைத்தையும் அவர்கள் கேட்டு கொண்டுதான் இருந்தார்கள்..
யாழினி உடனே தன் அத்தை கலையரசிக்கு போன் செய்ய கிளம்பினாள்.. கலையரசியும் அவர் கணவர் துரைப்பாண்டியும் அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்கள்.. அங்கு அவர்களின் மூத்த மகன் வசிக்கிறான்.. அவனை பார்ப்பதற்காக ஒருவாரம் முன்புதான் சென்றிருந்தார்கள்..
அண்ணே அப்போ அதியக்கா நம்ம கூட பொறந்தவங்களா.. ஆவலாக ஷாலினி கேட்க.. அமுதன் யோசனையும் குழப்பமுமாக தலையசைத்தான்..
அதியை அவனின் சகோதரி என நினைக்கவே முடியவில்லை.. அவள் நடந்து கொண்டதை வைத்தே தன் குடும்பத்தின் மேல் ஏதோ பகை என நினைத்திருந்தான்.. ஆனால் அதற்குள் இப்படியொரு கதை இருக்கும் என அவன் நினைக்கவேயில்லை.. என்ன நடந்தாலும் சரி அவனால் என்றைக்கும் அதியை தன் சகோதரியாக ஏற்றுகொள்ளவே முடியாது.. அவள் ஒரு ராட்சஷியாக அரக்கியாக அவனின் மனதில் பதிந்து போனாள்..
அண்ணே அப்படி நம்ம வீட்டுல உள்ளவங்க என்ன செஞ்சிருப்பாங்க.. ஒருவேளை சின்ன பிள்ளையில என அவள் மேற்கொண்டு ஏதோ சொல்ல போக..
ஷாலினி என அகத்தியன் அழைத்தான்..
மாமா..
போ கண்ணு.. போயி தூங்கு.. அமுதா நீயும்தான்.. என்றான்.. குரல் சாதாரணமாக இருந்தாலும் அதில் ஒரு மெல்லிய அழுத்தம் இருக்க.. ஷாலினி எதுவும் பேசாது குழலியும் அவளும் இருக்கும் அறைக்கு சென்றாள்.. அமுதனும் மாமனை ஓர் பார்வை பார்த்தவாரு சென்றான்..
அன்றிறவு யாருக்கும் உறக்கம் பிடிக்கவில்லை.. எல்லோரும் கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்தார்கள்..
மறுநாள் பொழுது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.. இரண்டு நாள் என கூறியவள், அடுத்த நாளிலேயே தன்னுடைய ஆட்டத்தை தொடங்கிவிட்டாள்..
சூரியன் மெல்ல எழும்ப ஆரம்பித்தான்.. அம்மையப்பன் வீட்டில் உள்ள பெண்கள் தங்களின் காலை வேலையில் மூழ்கியிருந்தனர்.. என்னதான் மனம் நிறைய வேதனையும் வலியும் இருந்தாலும் கரங்கள் அதன் பாட்டிற்கு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது..
குழலி மெல்ல விழி திறக்க.. ஷாலினி மடியிலுள்ள தலையணையில் கரம் பதித்து.. தீவிர யோசனையில் இருந்தாள்..
ஷாலினி.. என்னடி இவ்வளவு சீக்கிரம் எழுதிரிச்சுட்ட.. என கரக்கரப்பான குரலுடன் கேட்டாள்.. கரத்திலும் கால்களிலும் சற்று வலியாக இருந்தது..
அடியே குழலி உனக்கு சேதி தெரியுமா.. அதி இருக்காங்கள்ல என ஆரம்பிக்கவுமே, குழலி அவள் வாயை பொத்தினாள்..
வேணாம்டி.. காலையிலயே அந்த ராட்சஷிய பத்தி பேசாத.. எனக்கு பத்திகிட்டு வருது.. என குழலி எரிச்சலுடன் கூறினாள்.. அவள் தந்தையை அலையவிட்டது, மண்டியிட வைத்தது என அனைத்தும் பார்த்து, அவள் மேல் வெறுப்பு வந்துவிட்டது.. இவ்வுலகில் அவளுக்கும் பிடிக்காத வெறுக்கும் ஒரு நபர் உண்டெனில் அது அதி தான்.. அவளின் உருவம் எல்லாம் அகத்தியனின் முன்பு இரண்டாம் பட்சம் தான்..
அய்யோ நான் சொல்றது கேளுடி.. அதி என்ற அக்காடி.. அவுங்களும் நம்ம குடும்பம் தான் என ஷாலினி உற்சாகமாக சொல்லவும்.. குழலி அதிர்ந்து விழித்தாள்..
என்னடி என்ன சொல்ற..
ஆமாடி நேத்தைக்கு என ஆரம்பித்து தந்தைகள் இருவரும் சொன்னது பேச்சியம்மை சொன்னது என அனைத்தையும் சொன்னாள்.. குழலிக்கு இதனை நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.. குழலிக்கு தெரியவில்லை இதைவிட பெரிதாக ஒன்று வரபோகிறது என்றும், தன் மனதையும் நொறுக்க போகிறது என்றும், பாவம் அவளுக்கு தெரியவில்லை..
ஆமாடி.. அதி என்ற அக்கா.. அவங்க எப்படி வேற இடத்துக்கு போனாங்கன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்.. பெரியம்மத்தா சொன்னதுல இருந்து நம்ப வூட்டுல உள்ளவங்க தான் ஏதோ பெரிசா பண்ணியிருக்காங்கன்னு புரியுது.. ஆனா அது என்னன்னு தான் தெரியல.. என சோகமாக சொன்னாள்..
குழலிக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை.. உடனே ஓய்வறைக்கு சென்று குளித்து விட்டு வந்தவள் தந்தையை காண சென்றாள்.. அவன் அறையில் இல்லை.. உடனே கீழே சென்று அங்கும்மிங்கும் தேட.. எங்கும் தென்படவில்லை..
அப்பத்தா ஐயா எங்க..
உன்ற ஐயன் இல்ல கண்ணு.. ஏதோ போனு வந்துச்சுன்னு.. காத்தாலயே கிளம்பிட்டான்.. அமுதனும் கூட போயிருக்கான்..
வா வந்து ஏதாவது சாப்புடு சோர்ந்து போயி இருக்க.. என அவள் முகத்தை வழித்தார்.. காலையில் அவள் எழுந்ததும் முதலில் தந்தையிடம் தான் செல்வாள்.. அகத்தியனும் எவ்வளவு வேலை இருந்தாலும் மகளை காணாமல் எங்கும் செல்ல மாட்டான்.. ஆனால் இன்று விடியலே குழலிக்கு அமோகமாக இருந்தது..
சோகத்துடன் மேலே தோழிகளை காண சென்றாள்.. அங்கோ ரஞ்சனி சத்தியா இருவரும் ஹாஸ்டல் செல்வதாக ஷாலினியிடம் கூறிகொண்டிருந்தார்கள்..
குழலி நாங்க ஹாஸ்டல் போறோம்டி..
ஏன்டி நாலு நாள் இங்கயே இருங்க..
இல்லடி.. இங்க நிலைமை சரியில்லை.. நாங்க இன்னொரு நாள் வரோம்டி.. என ரஞ்சனி கூறவும்.. குழலிக்கும் ஷாலினிக்கும் என்ன சொல்வது என தெரியவில்லை..
சாரிடி எங்களால நீங்களும் கஷ்டப்பட்டுட்டீங்க.. என குழலி வருந்தினாள்..
ப்ச் அதெல்லாம் இல்லடி.. இதுவும் கொஞ்சம் த்ரில்லா தான் இருந்தது.. என கண்சிமிட்டினாள் சத்தியா..
ஆண்கள் அனைவரும் கூடத்தில் அமர்ந்திருக்க.. பெண்கள் மூவரும் ஆளுக்கொரு தூணில் சாய்ந்திருந்தார்கள்..
திருநாவுக்கரசு திருச்செல்வம் நாகநாதன் என மூவரின் போனும் சில நிமிடங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.. அவர்கள் யாரும் போனை எடுக்காது, அதனை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் தங்கள் யோசனைகளில் மூழ்கினர்..
அடுத்து மரகதத்தின் போனும் ஒலித்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் எரிச்சலுற்று போனை எடுத்தார்..
என்னடி எதுக்கு இப்ப போன் அடிச்சுக்கிட்டே கிடக்க.. எடுக்கலைன்னா விடவேண்டியது தானே.. இங்க நானே ஏகப்பட்ட குடைச்சல்ல இருக்கேன்.. இதுல நீ வேற.. என தன் மகள் கலையரசியிடம் கத்தினார்..
…………
உன்ற ஐயன் கிட்டயும், அண்ணனுங்ககிட்டயும் பேசணும்னா போன் பண்ணி பேசு, அவங்க எடுக்கலைன்னா நேர்ல வந்து பேசு, ஏன் என்ன போட்டு தொல்ல பண்ணிக்கிட்டு கிடக்க.. என கோபம் குறையாமல் கத்தினார்..
…………
சும்மா நொழுவிக்கிட்டே இருக்காதா.. இங்க நடக்குற எல்லாத்துக்கும் நீதான் காரணம்.. உனக்கு என்ன சொல்லணுமோ, அத நேருல வந்து பேசிக்க என போனை வைத்துவிட்டார்.. சுற்றியுள்ளவர்களுக்கு அனைத்தும் கேட்கத்தான் செய்தது.. ஆனாலும் யாரும் வாய் திறக்கவில்லை.. ஒரு அசாதாரமான அமைதி நிலவ, குழலி அதனை கலைத்தாள்..
அப்பத்தா என்ற தோழிங்க எல்லாம் ஹாஸ்டல் கிளம்புறாங்க.. முத்தண்ணேகிட்ட சொல்லி விட்டுட்டு வரசொல்றிங்களா என குழலி கேட்கவும், அனைவரின் கவனமும் அங்கு சென்றது..
வீடு இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் இருப்பது சரிவராது என்பதால் யாரும் எதுவும் செல்லவில்லை..
காலை பலகாரம் சாப்புட்டு கிளம்பலாம் த்தா.. என வேதவல்லி இளையவர்களை சாப்பிட சொன்னார்..
அப்படியே வீட்டில் செய்த பலகாரம், தோட்டத்தில் பறித்த பழங்கள் என மூன்று கட்டப்பைகளை நிரப்பி முத்துவிடம் காரில் வைக்க சொன்னார்.. குழலி, ஷாலினி, வேதவல்லி, திருச்செல்வமும் வாசல் வரை வந்து இருவரையும் வழியனுப்பினர்..
அவர்கள் மூவரும் உள்ளேவந்த மறுநிமிடம், ஒரு காரும் இரண்டு வேணும் உள்ளே நுழைந்தது..
யாரது.. என திருச்செல்வம் மீண்டும் வெளியே வந்தார்.. காரில் இருந்து விஷ்ணு இறங்கவும், அவரின் விழிகள் ஆவலுடன் அதி வந்திருக்கிறாளா என துலாவியது..
அவள் இல்லை என தெரிந்ததும் திருச்செல்வத்தின் முகம் சற்று வாடியது..
விஷ்ணு அவரை தாண்டி உள்ளே சென்றான்.. வேனிலிருந்து இறங்கிய ஒரு பத்து பேர் அவனை பின்தொடர்ந்தார்கள்..
கூட்டமாக உள்ளே வந்தவர்களை கண்டு வீட்டினர் திகைத்து நின்றனர்.. விஷ்ணுவை கண்டதும் அதி அனுப்பியிருக்கிறாள் என புரிந்தது.. அடுத்து என்னவோ என அனைவரும் முழித்து கொண்டிருந்தார்கள்..
