Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 22

“என்ன அத்தை சொல்ற? அதுக்குள்ள எப்படி  முடியும்? இப்ப தான் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சுருக்காங்க.

அடுத்த ரெண்டாவது மாசமே  இன்னொரு கல்யாணம் செய்ய எப்படி முடியும்? அவங்களுக்கு ப்ரீத்திங்க்கு(Breathing) ஆவது டைம் கொடுக்கனுமில்ல?”  வைஷு தன் அத்தை லதாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

“எல்லாம் சரி தான் வைஷு, இங்க நம்ம வீட்டுல சிச்சுவேசன் அப்படி! பெரிய தாத்தா ஆசை!

கரெக்டா சொல்லனும்னா கடைசி ஆசை!



Advertisement

அதான் உன்னை போய் பேச சொல்றேன்” என்றார் அவளின் அத்தை லதா!

லதா, திலீப்பின் அம்மா.

மானுவுக்கு என்று வைஷு பேசி வைத்திருக்கும் மாப்பிள்ளை திலீப்பின்  அம்மா.

Advertisement

லதா அவள் புகுந்த வீட்டின் கடைசி மருமகள்.

Advertisement

அவர்கள் வீட்டின் மூத்த தம்பதிகள் குடும்ப தலைவர்,  அவளின் பெரிய மாமனார் நாராயணன் – ரெங்கநாயகி . அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

அவருக்கு அடுத்த இளையவர் வேணு கோபால் அவரின் மனைவி வைதேகி.

இவர்களுக்கு மூன்றும் பையன்கள் தான்.

Advertisement

பெரிய மகன் கணேசன். அவன் மனைவி  நீலா அவர்களுக்கு ரெண்டும் பெண் மக்கள். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது.

அடுத்து நடு மகன் சுந்தரம் அவர் மனைவி சந்திரா. அவர்களுக்கும் பெண் குழந்தை தான். அவளுக்கும் திருமணமாகி விட்டது.

கடைசி மகன் ஆனந்த் அவர் மனைவி லதா, வைஷுவின் அத்தை.

இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாகவே இருக்கின்றனர்.

கடைக்குட்டி தான் திலீப்!

அந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசு!

வீட்டுப் பெரியவர்கள் அனைவரின் செல்லக் குழந்தை!

அது தான் அவன் ஆசைப் பட்டான் என்று, குடும்ப தொழிலான டெக்ஸ்டைல் தொழிலில் கூட அவனை இழுக்காமல், அவன் விருப்பப்படி டாக்டருக்கு படிக்க வைத்தனர்.

இப்போதும் அவன் ஆசைப்படி மானுவைத் திருமணம் செய்யவும் சம்மதம் சொல்லிவிட்டார்கள்.

பெரியவர் நாராயணனுக்கோ, அவள் ரெங்கநாதன் தேர்ந்தெடுத்த பெண்ணான மதுவின் தங்கை என்ற ஒன்றே போதுமாக இருந்தது!

அவர் சொல்லுக்கு அங்கு அப்பீலே கிடையாது அந்த வீட்டில்.

மானுவின் படிப்பு முடிந்தவுடன் தான் திருமணம் என்று தான் முதலில் இருந்தனர்.

ஆனால் இப்போதோ நாராயணனின் ஹெல்த் கண்டிசன், அவர் இன்னும் சில மாதங்களே தாக்குப் பிடிப்பார் என்று ஆகி விட்டது!

அவருக்கு தன் பேரன் கல்யாணத்தை பார்த்து விட்டு கண் மூட ஆசை!

அதனால் லதாவை அழைத்து வைஷுவிடம் பேச சொன்னார்.

“மானு கல்யாணம் பண்ணிக் கொண்டு படிப்பைத் தொடரட்டும் இங்கேருந்து.

இன்னும் சொல்லப் போனால், அவள் வீட்டை விட, இங்கிருந்து தான் அவள் கல்லூரியும் பக்கம்!” லதா தொடர்ந்து வைஷுவை வற்புறுத்தினார்!

“சரி அத்தை. நான் பேசிப் பார்க்கிறேன்! என்றாள் வைஷுவும்.

அவள் ராகவனிடம் இதை முதலில் சொன்னாள்.

“அவன் நீ சொன்னதும் சரி தான் வைஷு, அவங்க வீட்டில் இப்ப தான் மதுவுக்கு கல்யாணம் செய்து வைச்சுருக்காங்க.

இங்க நாம் அவங்களுக்கு பெரிசா செலவு வைக்கல, அதனால அவங்களால் திடீர்னு ஒரு கல்யாணத்தை நடத்த முடிஞ்சது.

அப்பவும் கூட அவங்க செய்முறை அது இதுன்னு கொஞ்சம் அவங்க பக்கமும் நிறைய செலவு செய்தாங்க தான்.

இப்ப இன்னொரு செலவு எல்லாம் அவங்களால தாக்குப் பிடிக்க முடியமான்னு தெரியலையே. யோசிச்சு தான் வைஷு செய்யணும்.

ரொம்பவும் அவங்க வீட்ட கஷ்டப் படுத்திட கூடாது.”

“அதாங்க நானும் அத்தை கிட்ட சொன்னேன். நீங்களே பேசுங்க அவங்ககிட்ட.”

ராகவன் நேரே அவர்கள் வீட்டுக்குப் போய் இப்போது சொன்னதையே அந்த வீட்டு பெரியவர்களிடமும் சொன்னான்.

நாராயணன் தாத்தாவோ விடாப்பிடியாக, “இல்லை எனக்கு உடனே என் பேரன் கல்யாணத்த பார்க்கணும்.

அதுக்கு என்ன செய்யணுமோ அத நானே பார்த்துக்கிறேன்! என்ன லதா உன் பையனுக்கு எவ்ளோ டவுரி கேக்குற? சொல்லு அத நான் செய்யுறேன்!”

“அய்யோ மாமா என்ன நீங்க, உங்கள மாதிரி தான் நானும், என் பையன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.

இந்த சீர் செனத்தி எல்லாம் நான் எதுவும் எதிர்பார்க்கல! உங்க முடிவுதான் எங்க முடிவும்! ஏங்க சொல்லுங்க” என்று கணவனை இடித்தார்.

“ஆமா பெரியப்பா, நீங்க சொன்னா சரி தான்!” என்றார் ஆனந்தும்.

 “அப்ப என்ன ராகவா? நீயும் உன் பொண்டாட்டியும் போய் அவங்க வீட்டுல போய் பேசி முடிங்க. நான் ரெங்குகிட்ட பேசுறேன்.”

அதன் படி ராகவனும் வைஷுவும் போய் பட்டுப் பாட்டியிடம் பேச, அவர் தன் மகனையும் ராஜுவின்  பெற்றோரையும் வர வைத்து பேசி முடித்தார்.

மதுவின் தாய் மாமா, இந்த விஷயம் என் வீட்டுக்கு தெரியவே வேண்டாம், மகேஸ்வரியும் அவள் அம்மாவும் இந்த கல்யாணத்திற்கு வரவும் வேண்டாம் என்று சொல்லி விட்டு, தான் மட்டும் வந்து தாய் மாமன் கடமைகளை செய்யப் போவதாகவும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

திலீப் வீட்டார் முறைப்படி வந்து மானுவை பெண் பார்த்து உறுதி செய்தனர்.

பெண் பார்க்கும் படலத்தில் நாராயணன் கேட்டார், “யாரும்மா இவளுக்கு மானஸான்னு பேர் வச்சது?” மதுவைப் பார்த்து கேட்டார்.

பட்டுப் பாட்டியே சொன்னார்.

“அது மதுவின் மாமா ராமு அண்ணன் வைத்தது. அவர் மானு அவள் அம்மா வயிற்றில் இருக்கும்போது தான் ஹரித்வார் ரிஷிகேஷ் போய் வந்தார்.

ஹரித்வாரில் ஒரு மலைக் கோவிலில் இருக்கும் அம்மன் தான் மானஸா தேவி! வின்ச்சில் தான் போக முடியும் அந்த கோவிலுக்கு!

அந்த அம்மனின் பேரை தான் இவளுக்கு வைத்தார் அவள் மாமா!”

“நானும் அதையே தான் நினைச்சேன்மா! நானும் அந்த கோவிலுக்கு போயிருக்கேன்! அதான் கேட்டேன்!”

மேலும் கல்யாணம் சம்பந்தமாக பேசி கலந்து முடிவெடுத்தார்கள்!

இதோ, அடுத்தடுத்த விசயங்கள் மின்னல் வேகத்தில் நடந்து, மானு திலீப்

நிச்சயதார்த்தமும் நல்லபடியே முடிந்து, அதைத் தொடர்ந்து திருமணம் கோலாகலமாகவே நடந்து முடிந்து விட்டது!

மகேஸ்வரி வராததால் எந்த ஒரு பேட் வைப்ஸ்ஸும் இல்லை!

இந்த முறை ராஜுவின் அம்மா சொர்ணம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொண்டார்.

சம்மந்தம் கலக்க வேண்டுமே அவரும் தேவேந்திரனும்!

மதுவும் ரகுவும் அக்கா அத்தான் என்று முன்னின்று எல்லா கடமைகளையும் செய்தனர்.

எல்லாம் நல்ல படியாகவே முடிந்து, இதோ போஸ்ட் வெட்டிங் போட்டோ ஷூட் என்று அவர்கள் ஊரின் பக்கத்தில் உள்ள ஒரு சின்ன மலைக்கு வந்திருக்கிறார்கள் மானுவும் திலீப்பும்!

கூடவே மானுவின் பிடிவாதத்தால், மதுவும் ரகுவும் கூட!

“அக்கா, நீயும்  கல்யாணம் முடிந்து, இன்னும் ஒரு இடத்திற்கு கூட வெளியே போகவே இல்லை! இதுக்காச்சும் வாக்கா!” என்று அடம்பிடித்தாள். “சொல்லுங்கத்தான்” என்று ரகுவிடமும்!

அவர்கள் ரெண்டு ஜோடிகளும் அந்த சின்ன மலையில்!

இன்னும் டூரிஸ்டுகளின் கண்களில் பெரிதும் விழாத, உள்ளூர் ஆட்களுக்கு மட்டுமே தெரிந்த அந்த குட்டி மலை!

அதில் நிறைய இயற்கை காட்சிகள்!

இப்போது தான் டூரிசம் டிப்பார்ட்மென்ட்  சிறியதாக ஒரு குழந்தைகள்  பார்க் அமைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தது அங்கே!

இந்த மாதிரி போட்டோ சூட் எடுக்க தோதான இடம் தான் அது!

மானுவையும் திலீப்பையும் வைத்து, அங்கு வித விதமாக, தற்போதைய ட்ரெண்டின் படி, கொஞ்சம் நெருக்கமான போஸ்களில் போட்டோக்கள் எடுக்கப்பட்டன!

போட்டோ செசன் முடிந்த பின்னும் கொஞ்ச நேரம் அங்கேயே இருந்து விட்டு வர ப்ளான் செய்திருந்தார்கள் நால்வரும்.

அதனால் மது நால்வருக்கும் லஞ்ச் கூட பாக் செய்து எடுத்து வந்திருந்தாள்!

போட்டோ எடுத்து முடித்து, போட்டோ கிராபர் தன் உதவியாளருடன் தன் உபகரணங்களை எடுத்துக் கொண்டு பைக்கில் கிளம்பி விட, இப்போது இவர்கள் நால்வர் மட்டுமே!

அவர்களின் லஞ்ச் பாக்கெட்டுகளை அவர்களிடம் கொடுத்து அவர்களை தனியே அனுப்பினான் ரகு!

கேள்வியாய் பார்த்த மதுவிடம், “அவங்க வீட்டுல எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து தான் லஞ்ச் சாப்பிடுவாங்க, அவங்களுக்கு அங்க ப்ரைவசியே கிடைக்காது! இங்கயாச்சும் அவங்க ஒருத்தர்ருக்கு ஒருத்தர் ஊட்டிக்கிட்டு  சாப்பிடட்டும்!”

அவர்கள் போன பின்னே தான் மதுவுக்கு, அவர்களுக்கென்று எடுத்து வந்த செவ்வாழை பழங்களை கொடுக்க மறந்தது தெரிந்தது!

எனவே அதை கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் போன இடம் தேடி பின்னால் சென்றாள்.

“ஏய்.. மது போகாதே!” என்று பின்னாலயே வந்தான் ரகுவும்.

அங்கே சென்ற மது, கண்டது  மானுவை இறுகி அணைத்துக் கொண்டு இதழ் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்த திலீப்பை!

சட்டென முகம் சிவந்தது மதுவுக்கு!

அவள் வேகமாக திரும்ப முயற்சித்து கல் தடுக்கி தடுமாற, பின்னால் வந்த ரகு அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான்!

அவள் வாயைப் பொத்தி, வேகமாக தன்னுடன் இழுத்து சென்று விட்டான்!

“ஏய்! அறிவிருக்கா, இப்படியா பின்னால் போவ!” செல்லமாக திட்டினான் அவளை!

அவள் ஒன்றும் சொல்லாமல் காரின் முன் சீட்டில் ஏறிக் கொண்டாள். பின்னால் வந்த ரகு டிரைவர் சீட்டில் அமர்ந்து, குறும்பாக கேட்டான்.

“ஏது நீ அம்மா ஆவதற்கு முன்னால் பெரியம்மா ஆகிடுவ போலிருக்கு! ஆனா உன் தங்கச்சி படிப்பு?  அது இன்னும் முடியலையே! ம்ம்?’

“ம்ம்..  அதெல்லாம் அவங்க ரெண்டு பெரும் டாக்டர்ஸ்! எதாச்சும் ப்ரிகாசன்ஸ் மெதட்(Precaution methods) பாலோ பண்ணுவாங்க!” என்று சொல்ல நினைத்து, ப்ரிகாசன்ஸ் வரை சொன்ன மது, ரகுவின் குறும்பு பார்வையை கண்டு கொஞ்சம் வெட்கத்தில்  முகம் சிவந்து பேச்சை நிறுத்திக் கொண்டு முகத்தை காரின் ஜன்னல் பக்கம் திருப்பினாள்!

திரும்பிய வேகத்தில் “அய்யோ” என்று கத்தியபடி, ரகுவின் தோளில் முகம் புதைத்துக் கொண்டு அவனைக் கட்டிக் கொண்டாள்!

“ஓ, என் மக்கு பொண்டாட்டிக்கு, ப்ரிகாசன்ஸ் மெதட் பத்தியெல்லாம் கூட தெரியுமா?” என்று நினைத்து அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவன், திடீரென்று அவள் பயந்து வேகமாக கட்டிக் கொள்ள, சட்டென கார் ஜன்னலைப் பார்த்தால். அங்கு தன் பற்களை பயங்கரமாக காட்டி இளித்துக் கொண்டு,

தலை கீழாக தொங்கிக் கொண்டு மதுவின் கையில் இருந்த செவ்வாழை பழங்களை பறித்துக் கொள்ள முயற்சி செய்த குட்டி குரங்கு!

அதன் பின்னே இன்னும் இரண்டு மூன்று குரங்குகளும் இருப்பது போல தெரிந்தது!

ரகு பழங்களை வெளிப் பக்கம் எறிந்துவிட்டு கார் ஹாரனை அடிக்க, அவை பயந்து பழங்களை எடுத்துக் கொண்டு ஓடி விட்டன!

மது இன்னும் பயத்தில் அவனைக் கட்டிக் கொண்டு தான் இருந்தாள்!

எல்லாம் போய்டுச்சு மது! ரிலாக்ஸ்! ரகு அவள் முகத்தை திருப்பினான்!

அவள் கொஞ்சம் வியர்த்து இருந்தாள்! முகத்தில் கொஞ்சம் வியர்வை அரும்புகள்! குறிப்பாக அவள் மேல் உதட்டில் அரும்பியிருந்த வேர்வை முத்துக்கள்!

அதன் பின், அந்த ப்ராசெசை(Process) அவன் இனிசியேட்(initiate) பண்ணினானா? அல்லது அவளா என்று தெரியவில்லை(?!)

அங்கு ஒரு முத்த யுத்தம் அரங்கேறியது!

அவள் இடுப்பில் இருந்த அவன் கைகள், கணவன் உரிமையை முழுவதுமாக எடுத்துக்கொண்டு, அதன் கடமைகளை கட்டுப்பாடுகள் இன்றி செய்துக் கொண்டிருந்தன!

“காதலுக்கு அன்னபக்ஷி தேவையில்லையே காக்கை கூட தூது போகுமே!” என்பது பழைய பாடல்!

இப்போது குரங்கு கூட!

நன்றி மாண்புமிகு குரங்கார் அவர்களே!

கொஞ்சம் நேரம் சென்று தன்னிலை திரும்பிய ரகு, அவளை விடுவித்து, உள்ளுக்குள் அவனையே நொந்து கொண்டான்!

ஏற்கனவே அவள் அவனை தப்பாக, நினைத்துக் கொண்டு இருக்கா, இப்ப தான் வேறு இப்படி கண்ட்ரோல் இல்லாமல்…

மதுவும் அப்படியே நினைத்துக் கொண்டிருந்தாள்!

அவனை டெம்ட் பண்ண மாட்டேன், ஒதுங்கி இருப்பேன் என்று சொல்லி விட்டு, இப்படி அவனை முத்தமிட்டு, அவனை தூண்டிவிட்டு, பின் அவனையே குத்தமும் சொல்லிக் கொண்டு இருக்கோம்!

இதற்குள், ரகு அடித்த ஹார்ன் சத்தத்தைக் கேட்டு விட்டு திலீப் மானுவோடு கார் அருகே வந்தவன், கொஞ்சம் தூரத்திலேயே மதுவும் ரகுவும் நெருக்கமாக இருந்ததைப் பர்ர்த்து விட்டான்.

சட்டென அவனும் மானுவை அழைத்துக் கொண்டு அவர்கள் இருந்த இடத்திற்கே திரும்பி விட்டான்!

மானு எதையும் பார்க்க வில்லை!

கொஞ்ச நேரம் கழித்து ரகுவே திலீப்பை போனில் அழைத்து விட்டான்.

“திலீப் கிளம்புவோம், மழை வர மாதிரி இருக்கு, இங்கு ரோட் வேற சரியில்ல!”

நால்வரும் கிளம்பினார்கள்!

கார் ஓட்டிய படியே அவ்வபோது மதுவை பார்த்துக் கொண்டிருந்தான்!

“ஏண்டி, இவ்வளவு குழப்பம் உனக்கு! உன் புருஷன் தாண்டி கிஸ் பண்ணினேன்! வெட்கபடாம ஏண்டி குழம்பிட்டு இருக்க!”  மனதுள் நினைத்தான்!

மதுவுக்குள் ஏகப்பட்ட கேள்விகள்!

“தான் செய்து கொண்டு இருப்பது சரியா? அவன் அன்று பேசியது மட்டும் சரியா? அதற்கு தான் அவன் சாரி சொல்லிட்டானே!”

“சாரி சொன்னா..? மறுபடியும் இதே மாதிரி செய்ய மாட்டானா?”

“அப்படியே தப்பே செய்யாம ஒரே நேர் கோட்டுல போயிட்டு இருக்க முடியுமா?” தவறுகள் செய்தால், பின் திருந்தவே மாட்டார்களா?

“எல்லார் லைபும் இங்க ட்ரையல் அண்ட் எரர் (Trial and error) தான்!

அவன் என்ன உன்கிட்ட வயலண்டா நடந்துட்டு இருக்கானா? வேற ஒரு ஆளா இருந்தா நடக்கிறதே வேற?

இல்ல வேற பொண்ண தேடி போய்ட்டானா? அப்படி போனா உன்னால தாங்கிக்க முடியுமா?

என்னமோ சொன்ன தான்! அன்னிக்கு உங்களுக்கு பிசிக்கல் நீட் இருந்தா வெளியே பார்த்துக்கங்கன்னு!

அப்படி அவன் போனா உன்னால தாங்கிக்க முடியுமா!

உன்னால உன் நந்துவ வேற ஒரு பொண்ணோட சேர்த்து பார்க்க முடியுமா?

சும்மா வாய் தான் இருக்குன்னு அன்னிக்கு நீயும் தான் பேசுன?

கோபத்துல பேசிட்டன்னு அவன் உன்னை மன்னிக்கல?

தெரியாம பேசிட்டான்னு நீ ஏன் மன்னிக்க கூடாது?

இல்ல மறுபடி, இது மாதிரி ஏதாவது பேசிட்டா?  என்னால எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?”

அவள் மனதுடன் போராடிக் கொண்டிருந்தாள்!

அதன் பின் அவள் சரியாக தூங்க வில்லை, சாப்பிடவும் இல்லை!

மறுநாள் , அவள் ஹாஸ்பிட்டலில் கமலா மேடமுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தாள்!

மயங்கிய விஷயம் வைஷுவுக்கு போனது!

அவள் ஏதேதோ கற்பனையுடன் மகிழ்ச்சியுடன் மதுவை செக்கப் பண்ண தன் ரூமிற்கு அழைத்து சென்றாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!