Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 25.2

ஜீப் சத்தம் கேட்டதும் ஆர்வமாய் பார்த்தாள் ஜன்னலை. டிரைவரிடம் எதோ தீவிரமாய் பேசிய பின்னே வீட்டை நோக்கி நடந்தான். விஷ்ணுவின் இறுகிய முகம் கண்டபின்னே நான் வந்ததற்கு கோபப்படுவானோ என்று அச்சமானது விஷாலினிக்கு.

விஷாலினி வீட்டை திறக்கவும், பரிதவிப்பாய் நின்றிருந்தவளைப் பார்த்தவன், “தூங்கலையா நீ?” என்றபடி உள்ளே சென்றான்.

இவள் நின்றேயிருக்க, குளித்து வந்தவன் உடை மாற்றியபடி விஷாலினியை அழைத்தான்.

உள்ளே சென்றவள், “நான் வந்திருக்கக்கூடாதோ?” என்றாள் தவிப்பாக.



Advertisement

“ஹே… ஏன் இப்படி கேக்குற?” என்றான் அணைத்தபடி.

“இல்ல, நீங்க ரொம்ப பிஸி போல, உங்க முகமே ஒருமாதிரி கோபமா இருக்கு”

“ம்… நடந்த விசயம் அப்படி” என்றான் வேதனையோடு.

Advertisement

“சாப்பிட்டிங்களா?”

Advertisement

“மதியம் சாப்பிடல, அதனால ஒன்பது மணிக்கு சாப்பிட்டேன். நீ சாப்பிட்டியா?”

“நீங்க படுங்க, நான் சாப்பிட்டு வரேன்” என்றாள்.

“சாப்பிடு, அப்புறம் ரூம்க்கு போலாம்” என்று சோபாவில் அமர்ந்தான் ஆயாசமாக.

Advertisement

“உள்ளேயே படுக்கலாம்ல? அஞ்சு நிமிஷத்துல சாப்பிட்டு வந்திடுவேன்”

கண் திறந்தவன், “சாப்பிடு” என்றான் கட்டளையாக.

சொன்னதுபோல் ஐந்தே நிமிடத்தில் உண்டு முடித்து, “உள்ள போலாம் வாங்க” என்றாள்.

“எதுக்கு இவ்வளோ நேரம் சாப்பிடாம இருந்த?” என்றான் கோபத்தோடு.

“இல்ல பசிக்கல” என்று சன்னக்குரலில் சொல்ல, “என் வயசென்ன?” என்றான் முறைப்பாக.

இவள் புரியாமல் முழிக்க, “என் ஜாப் ரிஸ்க் என்னனு தெரியாத பிள்ளை இல்லை நீ. என்னை எனக்கு பார்த்துக்க தெரியும். நான் சாப்பிட்டேனா? எனக்கு என்னாச்சோனு யோசிச்சு உன்னை வருத்திக்கிட்டு என்னை டென்ஷன் பண்ணக்கூடாது.

எத்தனை நாள் உன்னை நான் பார்க்கலன்னாலும், போன்ல பேச முடியாத சூழல் வந்தாலும், என் பொண்டாட்டி அவளை சரியா பார்த்துப்பான்ற நம்பிக்கை எப்போவும் எனக்கு இருக்கனும். அதுதான் நீ எனக்கு கொடுக்குற மிகப் பெரிய சந்தோசம், நிம்மதி, எல்லாமும். புரியுதா?” என்றான் கோபமாகவே.

சரியென்பதாய் தலையசைத்தவள், “சாரி, இனி இப்படி இருக்கமாட்டேன்” என்று மன்னிப்பும் வேண்டினாள்.

“ஹம்” என்றவன், கதவை தாழிட்டு விஷாலினி கைபிடித்து அறைக்குள் அழைத்துச் சென்று அணைத்தபடி கட்டிலில் சரிந்தான்.

நேற்றிரவு பனிரெண்டு மணிக்கு தூங்க விடுறேன், உன்னை ரெஸ்ட் எடுக்க விடுற அளவுக்கு நான் நல்லவன் இல்லை என்று தன்னை நெருங்கினான். ஒருமுறை கூடிக்களித்த பின்னே தூக்கம் கண்களை சுழற்ற தன்னையறியாமல் உறங்கியிருந்தாள் விஷாலினி.

காலை எழுந்ததும் கணவன் அருகில் இல்லாதது ஏமாற்றத்தை கொடுப்பதோடு ஊருக்கு சென்றுவிட்டான் என்பது பெரும் தவிப்பை உண்டாக்கியது.

மகாபலிபுரம் செல்லும்போது, தனக்கு இப்படி ஓய்வு நேரம் கிடைபது அரிது என்று சொன்னதை நினைத்தவள், கணவனுக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் தான் அருகில் இருக்க வேண்டும் என்ற முடிவோடு விழுப்புரம் கிளம்பினாள்.

“தூங்குங்க. நீங்க நல்லா தூங்கி இரண்டு நாள் ஆச்சு” என்றாள் அக்கறையாக.

“ம்… தூங்கனும், நாளைக்கும் நிறைய வேலையிருக்கு” என்றான். ஆனால் பத்து நிமிடங்கள் கழிந்த போதும், “மகாபலிபுரத்துல எடுத்த பிக் பார்க்குறியா?” என்று அதனை காண்பித்தபடி உறங்காமல்தான் இருந்தான்.

இத்தனை அலுப்பிலும் தனக்காக நேரம் ஒதுக்க நினைக்கிறான் எனப்புரிய, எழுந்து விளக்கணைத்து வந்து கணவன் அருகே நெருங்கிப்படுத்து, “கண்ணெல்லாம் ரொம்ப ரெட்டா இருக்கு, ப்ளீஸ் தூங்குங்க” என்றாள் மிகுந்த அக்கறையோடு.

இரண்டு நாள்கள் தூங்காத போதும், உடல் ஓய்விற்கு ஏங்கிய போதும் உறக்கம் வரவில்லை விஷ்ணுவிற்கு. மது உண்ட இருபத்தியொரு வயது ஆடவன் ஒன்பது வயது சிறுமியை கற்பழித்திருந்தான்.

நேற்றிரவு ஒன்பதரை மணிபோல் கற்பழிப்பு நடந்திருக்க, பதினொரு மணிக்கு விஷ்ணுவிற்கு அழைப்பு வந்தது. ஐந்தே நிமிடத்தில் தயாராகி மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வெளியே வந்தவன் பைக்கை கிளப்பினான் அதீத வேகத்தோடு.

ஒன்றரை மணிக்கு விழுப்புரம் சென்றடைந்த விஷ்ணு, கிடைத்த தடயங்களை வைத்து தனது அறிவுக்கூர்மையால் அதிகாலை ஐந்து மணிக்குள் ஆறு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தான். அதில் குற்றவாளியும் அடக்கம்.

காலை பத்து மணிபோல் சிறுமிக்கு மயக்கம் தெளியவே, கேட்கக்கூடாத விசயத்தை சிறுமியிடம் கேட்டாக வேண்டிய நிலையை எண்ணி வெட்கிய போதும், மனதை கல்லாக்கி, நடந்ததை விசாரித்தான் மிகவும் கனிவோடு.

சிறுமி பயம் கொள்ள, “இதுமாதிரி உன் ஃப்ரண்ட்ஸ்க்கு நடக்கக் கூடாதில்லையா? இப்படி மிருகங்கள் வெளில இருக்கக்கூடாதுதானே? ஜெயில்லதான இருக்கனும்” என்று அரைமணி நேரம் வரை தன்மையாய் எடுத்துரைத்து, இதில் உன் குற்றம் ஏதுமில்லை என்று சிறுமியின் பயத்தை போக்கினான்.

சற்றே தைரியம் வந்த சிறுமி இரண்டு விசயத்தைதான் சொன்னாள். அதற்கு மேல் கேட்க முடியாமல் எழுந்தவன் “ரெக்கார்ட் பண்ணு” என்று ஆய்வாளருக்கு கட்டளையிட்டு வெளியே வந்துவிட்டான்.

பின்னே சிறுமியல்லவா? மறைமுகமாக நடந்ததை விளக்க தெரியவில்லை. “அந்தண்ணா ச்சூச்சூ” என்று ஆரம்பித்து நடந்த விசயங்களை அப்படியே விளக்க ஆரம்பிக்க, அங்கே நிற்க முடியவில்லை விஷ்ணுவால்.

சிறுமியிடம் விசாரணை முடிந்த பின்னே, குற்றவாளியை அடையாளம் கண்டிருந்தான் விஷ்ணுவர்தன். சிறுமி வாக்குமூலம் கொடுத்ததே நினைவில் சுழல, “எப்படி துடிச்சிருக்கும் குழந்தை?” என்று தவறிழைத்தவனை வெறிகொண்டு அடித்து அச்சிறுமியை போலவே இவனும் அசைய முடியாத நிலைக்கு கொண்டு வந்த பின்னேதான் வெளியேறினான்.

இவ்விசயம் குறித்து வேலைகளை செய்து முடித்த பின்னே அடுத்தடுத்த வேலைகள் இழுத்துக்கொள்ள, வீட்டிற்கு வர தாமதமானது. இன்று மட்டும் நான்கு வழக்கிற்கான விசாரணைகளை செய்தான். ஆனால் மற்ற வழக்குகளை விட சிறுமியின் அசைய முடியாத நிலையே தற்போது வரை மனதை அழுத்தியது.

“என்ன யோசனைங்க?” என்றாள் தவிப்பாக.

‘மனசெல்லாம் பாரமா இருக்கும்மா’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன், “என்னை தூங்க வை” என்று மனைவியை மேலே போட்டுக்கொண்டான்.

விஷ்ணுவின் தலைகோதியபடி விஷாலினி கீழிறங்க முயற்சிக்க, “ம்ஹும்… இப்படியே தூங்கு” என்று அணைத்தபடி கண்ணயர்ந்தான்.

அடுத்த நாள் காலையும் ஏழு மணிக்கே கிளம்பியவன் இரவு பத்து மணிக்குத்தான் வந்தான். விஷ்ணு ஓய்வெடுக்க வேண்டும் என்றெண்ணி இவன் வரும் அரவம் தெரிந்து உள்ளே படுக்கச் சென்றிருந்தாள்.

அடுத்த இரண்டு நாளும் இப்படியே கழிந்தது. இன்றுதான் அச்சிறுமி உடலளவில் சற்று தேறி வந்திருந்தாள். மனம் சற்று லேசாய் உணர இதமான மனதோடு வீட்டிற்கு வந்திருந்தான் விஷ்ணுவர்தன்.

விஷ்ணு எட்டு மணிக்கே வரவும் உற்சாகமானாள் விஷாலினி. மனைவியின் சந்தோசத்தை முகம் காட்ட, தனது பணிச்சுமை புரிந்து ஏன் தாமதம் என்று கேள்வி எழுப்பாமல் பொலிவோடு இருக்கும் மனைவியை கண்டு மகிழ்ந்தான் விஷ்ணு. இருவரும் உண்டு முடித்த பின்னே “ஹம்… என்ன விசயமா வந்த?” என்றான் சிறு புன்னகையோடு.

கணவன் முகத்தில் பழைய இயல்பை பார்த்தவள், “வேற எதுக்கு? நீங்க வாழாவெட்டியாகிடக் கூடாதுனுதான்” என்றாள் சிரிப்போடு.

“வர்ரே வாவ்… வா வா, வந்து வாழ்க்கை கொடு. நானெல்லாம் உன்னை மாதிரி படுத்தமாட்டேன். எதை கழட்டினாலும் கோவப்ரேட் பண்ணுவேன்” என்றான் கண்ணிமைத்து.

தலையணையால் கணவனை அடித்தவள், “என்னாச்சு? ரொம்ப டல்லா இருந்திங்க, எனக்கு கஷ்டமாகிடுச்சு” என்றாள் கவலையாக.

“இந்த ஒருமுறை சொல்றேன், இனி எப்போவும் என் ஒர்க் பத்தி கேட்கக்கூடாது” என்ற கண்டிஷனோடு சில விசயங்களை சொன்னவன், “வெட்டு, குத்து, திருட்டு எல்லாம் நடக்குறதுதான். இந்த ரேப் விசயம் என்னை ரொம்ப பாதிச்சிடுச்சு. என்ன வேலை பார்த்தாலும் அந்த பாப்பா வலியோட பேசின வார்த்தைகள்தான் மண்டைக்குள்ள குடைஞ்சிட்டேயிருந்தது.

என்னதான் அக்யுஸ்ட்டை பிடிச்சிட்டாலும், தண்டனை வாங்கி கொடுத்தாலும், அந்த பாப்பா பாதிச்சது இல்லைனு ஆகிடாதில்ல? அதோட அவங்க பேரண்ட்ஸ் கதறல்” என வருந்தியவன், “ஹம்… நடக்கக்கூடாதது நடந்துடுச்சு, மீண்டு வந்துதான ஆகனும்? இன்னைக்கு அந்த பாப்பா கொஞ்சம் பெட்டரா இருந்தா. அவங்க பேரண்ட்ஸ்க்கு கவுன்சிலிங் கொடுத்தனுப்பியிருக்கேன்” என்றான் சிறு நிம்மதியோடு.

விஷாலினியின் கண்களில் கண்ணீர் வந்திருக்க, “ப்ச்… இதுக்குத்தான்” என கோபத்தோடு கண்ணை துடைத்து விட்டவன், “இன்னைக்கு எதுக்கு சொன்னேன்னா… என் ஒர்க்கை நீ புரிஞ்சிக்கனும்.

இன்னைக்கு இவ்வளோதான் ஒர்க், அப்படினு முடிவு பண்ணி போறதில்ல என் ஜாப். எப்போ வேணும்னாலும் கிளம்புவேன். வர எவ்வளோ நேரம்னாலும் ஆகும். இதுக்கெல்லாம் பதறிட்டு சாப்பிடாம இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்காது” என்று மீண்டும் கண்டித்து,

“உன்கிட்ட இப்படி அஃபிஸியல் விசயம் பேசறதும் எனக்கு பிடிக்கல. எல்லாத்தையும் இப்படி சொல்லிட்டிருப்பேனு எதிர்பார்க்கக்கூடாது. உனக்கு தெரிய வேண்டிய விசயம்னு எனக்கு தோணினா நானே சொல்வேன்” என்றான்.

சரியென தலையசைத்தவளை அணைத்துக்கொண்டவன், “என்ன? நிறைய திங்க்ஸ் எடுத்து வந்திருப்பபோல. முக்கியமா புக்ஸ் இருக்கு. பி.ஜி பண்ண போறியா?” என்றான்.

ஆமாம் என தலையசைத்தவள், “ஆனா இப்போ இல்ல, என்ட்ரன்ஸ் எழுதனும். ஒன்னு, இல்ல இரண்டு வருசம் நல்லா படிச்சிட்டு அப்புறம்தான் பண்ணப்போறேன்” என்றாள்.

“என்ட்ரன்ஸ் க்ளியர் பண்ண இரண்டு வருசமாகுமா?” என முறைக்க, “ஆகாதுதான். அதுக்கு இடையில முக்கியமான வேலையிருக்கு” என்றாள் சன்னக்குரலில்.

“என்ன வேலை? என்னை பார்த்துக்கிறதா? என்னை எனக்கு பார்த்துக்க தெரியாதா?” என்றான் முறைப்பாக.

“அதில்லைங்க… சின்ன வயசு விஷ்ணு அவ்வளவா என் அம்மாவோட ஒட்டலயாம். அதனால என் அம்மாக்கு குட்டி விஷ்ணு வேணுமாம். உங்ககிட்ட மிஸ் பண்ணினதை குட்டி விஷ்ணுகிட்ட காம்பன்சேட் பண்ணிக்கிறாங்களாம். அம்மா ஆசையை நிறைவேத்தனும்ல?”

ஆன்ட்டி சொல்லியிருந்தாலும் இவளுக்கும் குழந்தை ஆசை இருக்கிறதென்று மனைவியை புரிந்தவன் மனம் ஆனந்த கூத்தாடியது. “ஆன்ட்டி மட்டுமா குட்டி விஷ்ணுவை மிஸ் பண்ணினாங்க?” என்றான் கிண்டலாக.

“நானெல்லாம் மிஸ் பண்ணல” என்றாள் உண்மையாக.

ஆமாம்னு பொய்யாவது சொல்றாளா என்று இவன் முறைக்க, “குட்டி விஷ்ணுவோட இப்படி உரசிட்டிருந்திருக்க முடியாதில்ல. எனக்கு குட்டி விஷ்ணு வேணாம். இந்த விஷ்ணுதான் வேணும்” என்றவளை மேற்கொண்டு பேச விடாமல் அணைத்திருந்தான் இதழால்.

நீண்ட முத்தத்திற்கு பிறகு “விஷாலினி” என்றான் மென்மையாக.

“ம்” என்க, “உனக்கு இங்க இருக்கிறது ரொம்ப கஷ்டம், பகல்ல கண்டிப்பா நான் இருக்கமாட்டேன், நைட்லயும் மோஸ்ட்டா லேட்டாதான் வருவேன், நீ சென்னைக்கே போய்டு, அங்க எல்லாரோடவும் ஜாலியா இருக்கலாம். ஆன்ட்டிக்கும் உன்னை பிரிஞ்சிருக்குற ஃபீல் இருக்காது” என்றான்.

“நான் தனியா இருப்பேனு நீங்க ஃபீல் பண்ணாதிங்க. புக் எடுத்தேன்னா எனக்கு டைம் போறதே தெரியாது. நீங்க லேட்நைட் வந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. உங்களோட பத்து நிமிஷம் பேசிட்டிருந்துட்டு ஒன்னா தூங்கினாலே போதும்” என்றாள் கெஞ்சலாக.

சேர்த்தணைத்தவன் இதழ் மனைவியின் உடலில் இலக்கணமில்லாமல் பயணிக்க, கூசிச் சிவந்தவள் தடுக்க முயன்று முடியாமல் தவித்தாள்.

கணவன் மேல் கொண்ட ஆசையால் நாணங்கள் நழுவிச் சென்றிட தன்னை மறந்தாள். காதலில் நனைந்துவிட்டதை அவளின் நளினம் சொல்ல, பித்தாகிவிட்டான் விஷ்ணுவர்த்தன். உடல் இரண்டாகினும் உயிர் ஒன்றாகிப்போனது.

கூடிக்களித்தபின்னே கணவனை காண முடியாமல் புது நாணம் பூத்திருக்க, தன்னை முழுதாய் போர்த்தி படுத்திருந்தாள். போர்வை விலக்கி, நெற்றி முத்தமிட்டு நிறைவாய் அணைத்துக்கொண்டான் தன்னோடு. இப்படியாக இன்பமாய் கழிந்தது ஏழு மாதங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!