Skip to content
Post Views: 5,775
“ஏங்க, உடனே தாரு ஸ்கூலுக்கு போன் பண்ணி, தாரிகாஸ்ரீ, தன்வி ஸ்ரீ ரெண்டு பேருக்கும் டிசி வேணும்னு கேளுங்க!
நாங்க இன்னும் ஒரு நாள் கூட இங்க இருக்க விரும்பல, நான் பசங்கள கூட்டிட்டு என் அம்மா வீட்டுக்கு போகப் போறேன்!”
“இந்த வீட்டுல நடக்கிற பாவம் எல்லாம் என் பிள்ளைங்க தலையில விடிஞ்சிட போவுது!
அதுவும் உங்க தம்பி பண்ணிட்டு இருக்கிற பாவம்!
Advertisement
பெண் பாவம்! மஹா பாவம்!” ராகவனிடம் அவன் அறைக்கு வந்து பத்ரகாளியாக நின்று கத்திக்கொண்டு இருந்தாள் வைஷு!
“ஏய் என்ன உளறுற? ஒண்ணுமே புரியல எனக்கு!
ஒண்ணும் சொல்லாம இங்க வந்து குதி குதின்னு குதிச்சுட்டு இருக்க?
Advertisement
பசங்கள ஸ்கூல் குவாட்டர்லி எக்ஸாம் முடிந்து லீவுன்னு நீ தான் உன் அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சுருக்க!
Advertisement
இப்ப வந்து டி சி வாங்க சொல்ற? முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு!
ரகு அப்படி என்ன பாவம் பண்ணிட்டான்? நீயே அவனை இப்படி விட்டு கொடுத்து பேசுற அளவுக்கு?”
ராகவனுக்கு ஒன்றும் புரியவில்லை!
Advertisement
“இன்னிக்கு மது கமலா ஆண்டிகிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போதே மயக்கம் போட்டு விழுந்துட்டா!”
“இஸ் இட்? அப்புறம் என்ன நீ போய் செக் பண்ணி கன்பர்ம் பண்ணிட்டியா?”
“நீ தானே அவன அடிக்கடி கிண்டல் பண்ணுவ, இவன் இருக்கிற வேகத்துக்கு மது மட்டும் ஓகே சொல்லியிருந்தா, கல்யாணத்திற்கு முன்னாடியே அவளை சாப்பிட்டுருப்பான்னு! கொஞ்சம் லேட் தான் பரவாயில்ல ஹேப்பி!”
“கடுப்ப கிளப்பாதீங்க! அவ ஒண்ணும் கன்சீவா இல்ல!” வைஷு அங்கு நடந்ததை சொன்னாள்.
மது மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் என்று அவளை தன் அறைக்கு வர வைத்த, வைஷு, “எத்தனை நாள் தள்ளிப் போயிருக்கு மது?
நீ வீட்டுல ஏதும் டேஸ்ட் பண்ணிட்டியா? ப்ளூ லைன் வந்ததா? இருந்தாலும் நாம இங்க ஸ்கேன் பண்ணி பார்த்திருவோம். சுசி, நீ போய் ஸ்கேன் ரூமை ரெடி பண்ணு!” தன் உதவியாளரை அனுப்பினாள்.
“இந்தா மது தண்ணி குடிச்சுட்டு வெயிட் பண்ணு!” வைஷு சந்தோசத்தில் பரபரத்தாள்!
“அய்யோ அக்கா, அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எனக்கு ஒண்ணுமே இல்லை! இதெல்லாம் தேவையும் இல்ல!”
“என்ன சொல்ற மது? தேவையில்லன்னா? என்ன? இப்ப குழந்தை வேணாம்னு இருக்கீங்களா?”
“அய்யோ இல்ல! அது.. வந்து இது வேறே!”
“இது வேறன்னா என்ன? மது இப்ப என் கிட்ட உண்மைய சொல்லப் போறியா இல்லையா?”
மது மேலும் தயங்க, “ஓ நீ என்ன ஒரு டிபிகல் கோ சிஸ்டர் மாதிரி தான் பார்க்குறல்ல! அப்படின்னா, நீ ஒண்ணும் சொல்ல வேணாம் மது! உன் பர்சனல்ல நான் தலையிட மாட்டேன்! சாரி!”
“அய்யோ அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லக்கா!
நான்.. நாங்க.. இன்னும் எங்க .. வாழ்க்கைய இன்னும் ஆரம்பிக்கவே இல்ல!”
“வாட்?” அதிர்ந்தாள் வைஷு!
“என்ன மது சொல்ற?”
“அது வந்து.. மது” அன்று அவன் கொஞ்சம் அவள் மனம் வருந்தும்படி பேசியதாகவும், அதனால் அவள் வருத்தப்பட்டு விலகி இருப்பதையும் சொன்னாள்.
“அப்படி என்ன பேசினான்? சொல்லு?”
“அது வேணாம் அக்கா!” வைஷு எவ்வளவோ வற்புறுத்திக் கேட்டும் அதை மட்டும் மது சொல்லவேயில்லை!
“நான் எவ்வளவோ கேட்டும் மது அதை மட்டும் சொல்ல மாட்டேங்கிறா?
ஆனா ரகு சாரி கேட்டுட்டானாம்.
இவளால் தான் இன்னும் மறக்க முடியலையாம். இன்னும் கொஞ்ச நாள்ல சரியாகிடும் சொல்றா!”
வைஷு ராகவனிடம் கொட்டித் தீர்த்தாள்.
“ம்ம் சரிம்மா. நான் ரகு கிட்ட பேசி சரி பண்றேன்.”
“என்ன சரி பண்ணுவீங்க, எத்தனை வாட்டி இப்படி நீங்களும் நானும் போய் பேசி பேசி சரி பண்ணுவோம் அவன் வாழ்க்கைய?”
“அவன் சரியான அம்மா பையன். அவனுக்கு அவன் அம்மா மாதிரி பார்த்துக்கிற பெண் தான் ஒய்பா வரணும்னு, மதுவ அவனுக்கு கல்யாணம் பண்ணினோம்!”
“எப்பேர்ப்பட்ட பொண்ணு இந்த மது! அவளை போய் முன்னாடி ஒரு தரம் இப்படி தான் தப்பு தப்பா பேசி, நான் போய் அவளை சமாதானம் செய்து கூட்டிட்டு வந்தேன்.”
“எல்லோர்கிட்டயும் போய் பேசி பேசி, கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தேன்.
அதுவும் இந்த பார்த்தி வந்து எதையும் கெடுத்து விடக்கூடாதுன்னு அவன் வெளிநாடு போன நேரத்தை யூஸ் பண்ணி, அவசர அவசரமா இந்த கல்யாணத்தை முடிச்சோம்!
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுச்சுன்னு நினைச்சு நிம்மதியா இருந்தேன்! இப்ப பார்த்தா, இப்படி இருக்கு இங்க!
இவன் எல்லாம் திருந்தவே போறதில்ல!” வைஷு சலிப்பாக சொன்னாள்.
“அப்படி சொல்லாதம்மா! அவனோட பெஸ்ட் பிரன்ட் நீயே இப்படி சொல்லிட்டா எப்படிடி?
நீ அவன்கிட்ட போய் எதுவும் கேட்க வேண்டாம். நான் பேசுறேன்!
நாம சரி பண்ணலாம் அவனை! நீ ஒண்ணும் ஒர்ரி பண்ணாத! சரியா?” வைஷுவை மென்மையாக அணைத்த படியே அவளை சமாதானம் செய்தான் ராகவன்!
‘ம்ம். சரி.” அவனைக் கட்டிக் கொண்டாள் அவன் மனைவி!
அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு ரகுவின் அறைக்கு சென்றான் ராகவன்.
வைஷுவின் போன் அடித்தது. திலீப்!
‘என்னடா எப்படி இருக்க புது மாப்பிள்ளை?”
‘நான் மட்டுமா புது மாப்பிள்ளை, சீனியரும் தான் இன்னும் புது மாப்பிள்ளை! அவர மட்டும் கிண்டல் பண்ண மாட்டேன்ற?”
“நீ யாரை சொல்ற?’
“ரகு ப்ரதரை தான் சொல்றேன்!”
‘ஷ்.. அப்பா என்னா ஒரு கிஸ் சீன்! அதுவும் காரில் வச்சி! காருக்கு வெளியே ஒருத்தன் நிக்கிறது கூட தெரியாம!”
“சீ.. சீ.. நீ யாரை சொல்ற?”
“நம்ம ரகு ப்ரதரை தான்! நாங்க போட்டோ ஷூட் போயிருந்தோமே அப்ப தான்!”
அவன் மேலும் ரகுவையும், மதுவையும் கிண்டல் பண்ணிவிட்டு, கொஞ்ச நேரம் வேற பொதுவான விசயங்களை பேசி விட்டு போனை கட் செய்தான்.
வைஷு இப்போது குழம்பினாள்!
ரகுவும் மதுவும், இன்னும் வாழ்க்கையை தொடங்க வில்லை என்கிறாள் மது, ஆனால் விரைவில் சரியாகிவிடும் என்றும் சொன்னாளே!
அப்போ, இந்த திலீப் சொல்வதைப் பார்த்தால், அவர்கள் இப்போது சமாதானம் ஆகி வருகிறார்கள் போல தான் தெரிகிறது!
அப்ப, நாம் ராகவனிடம் கத்தியது தவறா?
புருஷன் பொண்டாட்டி சண்டை!
அவர்களே சண்டையிட்டு அவர்களே சமாதானம் ஆகி விடுவார்களோ!
நாம் இனி தலையிடுவது டீசன்சி இல்லை!
வைஷு கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
ரகுவின் ரூமில் ராகவன். வைஷு மூலம் தான் அறிந்ததை அவனிடம் நேரே கேட்டுவிட்டு ரகு பேசட்டும் என்று காத்திருந்தான்.
“சொல்லு ரகு! அப்படி என்ன உங்களுக்குள்ள பிரச்சினை! சொல்லலாம்னா சொல்லு! ஏன்னா வைஷு எப்படி கேட்டும் மது அவ கிட்ட சொல்ல மாட்டேன்னுட்டா.”
ரகு சொன்னான்.
அனைத்தையும்.
பார்த்தி பேச்சை மறுபடியும் கேட்டுக் கொண்டு அவன் மதுவை பேசியது, பின் தானே அந்த பார்த்தியின் சுயரூபத்தை நேரில் பார்த்து அறிந்தது, அப்புறம் ராஜுவின் அப்பா அட்வைஸ் பண்ணியது எல்லாம்!
“ராஜுவின் அப்பாவா? அவருக்கு எப்படி தெரிந்தது? அய்யோ அவர் மதுவுக்கு அப்பா மாதிரில்ல. அவர் உன்னை சும்மாவா விட்டார்?”
“இல்ல, எனக்கு எடுத்து சொல்லி புரிய வைத்தார்! பார்த்தியை வார்ன் பண்ணி அனுப்ப சொன்னார்.”
“இப்ப நான் நல்லாவே ரியலைஸ் பண்ணிட்டேன்டா! அது மதுவுக்கும் புரியற மாதிரி தான் இருக்கு!
ஆனா அவ இன்னும் பயப்படறாடா!
எங்க நான் மறுபடியும் இப்படி எதாச்சும் பேசிடுவேனோன்னு!
அவ பயம் போகட்டும், அவளுக்கு என் மேல நம்பிக்கை வரட்டும்னு தாண்டா நானும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்! ரகு வருத்தத்துடன் சொன்னான்.
“இதுக்குதாண்டா நாங்க அப்போதிலிருந்தே உனக்கு அட்வைஸ் பண்ணினோம், அந்த பார்த்தியோட பிரன்ஷிப்பை கட் பண்ணுன்னு!
நீ தான் கேக்கவே இல்லை! இப்ப கூட இந்த பாச்சிலர் பார்ட்டியெல்லாம் வேண்டாம்னு வைஷு தலை தலையா அடிச்சிகிட்டா, நீ தான் கேக்கவே இல்லை!
சரி விடு. போனது போகட்டும், இனியாவது உங்க லைபில பார்த்தி மாதிரி யாரும் வராம பார்த்துக்கோ!”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, ரகுவுக்கும் போன் வந்தது.
ஒரு அன்னவுன்(unknown) நம்பரிலிருந்து!
எடுத்து பேசினால், பார்த்தி!
மறுபடியும் இவனா?
ரகு கோபமானான்.
இவன் பேச்சைக் கேட்டு, தன் வாழ்க்கை கெட்டதும் இல்லாம கொஞ்சம் விட்டுருந்தா அவன் அண்ணன் குடும்பம் கூட சிதறிப் போயிருக்கும்!
தான் போதையில் உளறியதையும் அதை ரகு கேட்டுவிட்டதையும் பாவம் பார்த்திக்கு தெரியவில்லை!
கொஞ்ச நாள் கையில் காசு இருக்கும் வரை ஊர் சுற்றியவன், பின் காசு தீர்ந்ததும், ரகுவிடம் ஏதும் தேறுமா என்று அவனுக்கு அழைக்க, கால் போகவே இல்லை. ஓ ப்ளாக் செய்து விட்டான் போல, எல்லாம் அந்த மதுவின் மயக்கத்தில் செய்திருப்பான்!
“என்னடா, ஒரு போன் கூட பண்ணல? ஒரேடியா பொண்டாட்டி தாசன் ஆகிட்டியோ? அதான் இந்த நண்பன் ஒருத்தன் இருக்கிறதை மறந்துட்ட? இல்லையா மது புருஷா?” ரகுவின் ஈகோவைத் தூண்ட கிண்டலடித்தான் பார்த்தி!
“ஆமாண்டா! நான் பொண்டாட்டி தாசன் தான்! மது புருஷன் தான்! என்னை நீ அப்படியே கூப்பிடு!
I am very much proud to be Mathu Purushan! போதுமா?
ஏன் வேணுமின்னா என் பொண்டாட்டி மதுவோட அடிமைன்னு கூட சொல்லிக்குவேன்!
நீ வைடா போனை! நீ இனி எனக்கு போன் பண்ற வேலை வச்சுகிட்ட, ராஜுவோட அப்பாகிட்ட சொல்லி, அவர் எனக்காக உன் மேல போடாம விட்ட கேஸ் எல்லாத்தையும் போட்டு உன்னை உள்ள தள்ள சொல்லிடுவேன்!” பார்த்தியிடம் கத்தி விட்டு, போனை கட் செய்தான் ரகு!
இவை யனைத்தையுமே பார்த்துக் கொண்டிருந்த ராகவனுக்கும் பெரும் நிம்மதி ஏற்பட்டது! இனி ரகுவின் வாழ்க்கையில் ப்ராப்ளம் ஏதும் வராது!
அவன் நன்றாகவே உணர்ந்து விட்டான்!
இனி பார்த்தி இல்லை, எவன் வந்தாலும் ஒண்ணும் செய்ய முடியாது! அவனுக்குள் பெரும் நம்பிக்கை வளர்ந்தது!
இங்கு வைஷு, ராகவனோடு அவர்களிடம் தன் பிரச்சினை பற்றி சொல்லிவிட்ட நிம்மதியாக ரகுவும் இருக்க, அங்கே மதுவோ பெரும் குழப்பத்தில் இருந்தாள்!
அய்யோ இந்த வைஷு அக்கா கோபத்துல போய் ரகு கிட்ட சண்டை எதுவும் போட்டுவிடுவாங்களோ, அதனால் குடும்பத்தில் பிரச்சினை உண்டாகுமோ!
இன்னும் என்னெவெல்லாம் ஆகப்போகுது? என்ற கவலையில் தனியே இருக்க வேண்டி வீட்டுக்கு கிளம்பினாள்.
அவள் கிளம்பியது யாருக்குமே தெரியவில்லை. செக்யூரிட்டியைத் தவிர!
இப்படி மனக் குழப்பத்தில் வண்டியோட்டிக் கொண்டு போன மது, எப்படி வீடு வரை வந்து சேர்ந்தாள் என்பது கடவுள் செயல்!
ஆனால் வீட்டு மெயின் கேட்டுக்கு வெளியே ரோடு போடுவதற்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லி கல் குவியலில் கொண்டு போய் வண்டியை விட்டு விட்டாள், திடீரென்று குறுக்கே வந்த தெரு நாயின் மேல் இடிக்காமல் இருக்க முயன்று!
கேட்டுக்கு வெளியே விழுந்ததால், அவள் வீட்டு வாட்ச்மேன் கூட இதை அறியவில்லை!
ரோட்டிலும் அந்த நேரம் யாருமே இல்லை!
கொஞ்ச நேரம் அப்படியே விழுந்து கிடந்தாள் மது!
இரண்டு கைகளிலும் நல்ல ஆழமான சிராய்ப்புகள்!
கால் முட்டியிலும் நல்ல அடி! அதிலும் வலது கால் முட்டியில் ஒரு கூரிய கல் கிழித்து, அந்த இடம் கொஞ்சம் நைந்து போய்விட்டிருந்து!
நல்ல வேளை எங்கும் பிராக்சர் இல்லை!
ஆனால் மிகுந்த ரத்த காயத்துடன் கூடிய சின்னதும் பெரிதுமான அடிகள் நிறைய!
வலியில் முனகிய மது, மெல்ல தானே எழுந்து, வண்டியைத் தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து, வாட்ச்மேனிடம் ஸ்கூட்டியை பார்க் செய்ய சொல்லி விட்டு, தான் நொண்டுவதை வாட்ச்மேன் அறியாவண்ணம் நடந்து சென்று தன் ரூமில் போர்த்திக்கொண்டு படுத்து விட்டாள்!
error: Content is protected !!