Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 24

ராகவனிடம் பேசிவிட்டு வந்த பின், ரகு, மதுவைத் தேடினான்.

ஆனால் அவள் ஹாஸ்பிட்டலில் இல்லை. அப்பவே அவள் வீட்டுக்குப் போய் விட்டதாக செக்யுரிட்டி சொன்னார்.

அவன் உடனே வீட்டுக்கு சென்றான்.

அங்கு போய் வாட்ச்மேனிடம் “மது வீட்டில் இருக்காளா?’ என்று கேட்டதற்கு,



Advertisement

“வீட்டுல தான் சார் இருக்காங்க” என்று சொல்லிய வாட்ச்மேன், ஏதோ சொல்ல தயங்குவதையும் கவனித்து என்னெவென்று கேட்டான் ரகு.

“அது.. வந்து சார், மது மேடம் முகமே கொஞ்சம் சரியில்ல,இன்னிக்கு, ரொம்ப டயர்டா தெரிஞ்சாங்க, எப்பவுமே அவங்க ஸ்கூட்டிய அவங்களே தான் பார்க் பண்ணுவாங்க, இன்னிக்கு என்னன்னு தெரியல என் கிட்ட கொடுத்து பார்க் பண்ண சொல்லிட்டு உள்ளே போனாங்க!” என்றார் அவர்.

“சரி நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி விட்டு, தன் அறைக்கு சென்றவன் அங்கு  நன்றாக போர்த்திக்கொண்டு தூங்கும் மதுவைப் பார்த்தான்!

Advertisement

“மது..” என்று அழைக்க, பதில் இல்லை.

Advertisement

அவன் யோசித்துக்கொண்டே உட்கார்ந்து இருந்தவனின் கண்களில் அந்த CCTV காட்சிகள் விழுந்தன!

மது விழுந்த அதே இடத்தில், இன்னொரு இளைஞனும் தன் பைக்கை போட்டுவிட்டு விழுந்தான், அதே மாதிரி அந்த ஜல்லிக் கல் குவியலில்!

சட்டென்று ஏதோ உள்ளுணர்வு தோன்ற, அவன் மதுவின் போர்வையை விலக்கி விட்டு, அவளை எழுப்பினான்.

Advertisement

போர்வையை விலக்கினால், மது கட்டியிருந்த பிஸ்தா கிரீன் சாரியின் கால் பகுதி முழுக்க இரத்த சிவப்பு!

முழங்கால் அருகே புடவை நைந்து போய் கிழிந்தே இருந்தது!

“ஏய்.. என்னடி இது இவ்வளவு காயம்! எழுந்திரு.. மது” அதட்டி எழுப்பினான்.

அவள் மெல்ல எழுந்து சாய்ந்து உட்கார்ந்தாள்.

முகம் முழுக்க வலியின் வேதனை!

“கையை காட்டு! என்ன ஆச்சு?” அவன் கையை திருப்பி திருப்பி பார்த்து விட்டு கேட்டான.

அவற்றில் நல்ல ஆழமான சிராய்ப்புகள்! அதில் நிறைய ரத்தம்!

வலது உள்ளங்கை முழுக்க நன்றாக கல் குத்தியிருந்தது! கையை ஊன்றி விட்டாள் போல!

“வீட்டு வாசலில் கொட்டியிருக்கும் ஜல்லி கல்லு மேலே சறுக்கி விட்டு வண்டியோட விழுந்துட்டேன்!”

அவன் பதட்டமாகி, அவள் முழங்கால் காயத்தை செக் செய்ய, முயல அவள் தடுத்தாள்!

“பரவாயில்ல வைஷு அக்கா வரட்டும். அவங்க கிட்ட காமிச்சு மருந்து போட்டுக்குறேன்!”

“ஏய் அவ வர லேட் ஆகும்! அதுவரை இப்படியே இருப்பியா?”

“இல்ல வேண்டாம்.. அவங்க வந்துடட்டும்” மது மேலும் தடுக்க அவன் கோபமானான்.

“இப்ப விடப் போறியா இல்லையா” என்று கோபத்தில், இப்போ போய் இதெல்லாம் பார்க்கிறாளே என்ற பதட்டத்தில்  அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான்.

அவள் அடி வாங்கிய பின் அமைதியாக ஒத்துழைத்தாள் அவள்.

அவன் அவள் முழங்கால் காயத்தை செக் செய்தான். பிராக்சர் எதுவும் ஆகி விட்டதா என்று சோதித்தான்.

அவளின் அந்த வழு வழு வாழைத்தண்டு கால்களோ, வாளிப்பான தொடைகளோ இப்போது அவன் கவனத்தில் இல்லை. அவளின் காயங்களும் அதில் வந்த ரத்தமும் மட்டுமே அவன் கவனத்தில்!

“உன் கண்ணில் நீர் வழிந்தால், என் கண்ணில் உதிரம் கொட்டுதடி” ரேன்ஞ்சுக்கு அவள் மீது அன்பும் காதலும் வைத்திருப்பவன் கண்களில் அவளின் கால்களில் ரத்தமே கொட்டும் போது எப்படியிருப்பான்?

மிகுந்த பதட்டமானான்.

அவனில் அந்நியன் அம்பி மாதிரி டுயுயல் கேரக்டர்கள்!

காதல் கணவன் மற்றும்  கடமை மிகுந்த டாக்டர்!

இரண்டு ரோலும் நன்றாக பிளண்டாகி இருந்தான் அப்போது! ஆனால் காமம் மட்டும் இல்லை!

மது அதை நன்கு உணர்ந்தாள் அந்த வலியிலும்!

“ச்சே இவனைப் போய் என்னவெல்லாம் பேசி விட்டோம்!

 வெறும் உடம்பின் கவர்ச்சி மட்டுமே அவனுக்கு இருந்தது என்று!”

மது உள்ளுக்குள் கொஞ்சம் வருத்தப்படத் தொடங்கினாள்!

அவன் உடனே வீட்டில் இருந்த மெடிக்கல் கிட்டை எடுத்து அவளின் காயத்தை துடைத்து, டிரெஸ்ஸிங் செய்தான்.

இல்லாத மருந்துகளை அவர்கள் வீட்டருகே இருக்கும் அவர்களின் பழைய ஹாஸ்பிட்டலின் பார்மசிக்கு போன் செய்து உடனே கொண்டு வர சொன்னான்.

மருந்துகள் வந்தவுடன் சிரிஞ்சில் மருந்து ஏற்றி அவளுக்கு ஊசிப் போட போனான்.

“மது, உன் ஜாக்கெட் கையை மேலே ஏத்தி விடு, இன்ஜெக்ஷன் போடணும்.”

அவள் ஜாக்கெட்டின் கையை மேலே ஏற்றி விட, அது கொஞ்சம் கூட மேலே ஏற வில்லை. கரெக்ட் பிட்டிங்கில் போட்டுருந்ததால்!

“ச். ச்ச் சீக்கிரம் மது!”

“போக மாட்டேங்குது, நீங்க இங்கயே போடுங்க!”

“இங்கெல்லாம் போட முடியாது! இல்லன்னா புல்லா கழட்டிடு!” அவன் சாதாரணமாக சொன்னான்!

“எதே!” மது அதிர்ந்தாள்

“அதெல்லாம் வேண்டாம், நான் வைஷு அக்காகிட்ட போட்டுக்கிறேன்!”

“அவ வர லேட்டாகும்டி, அதும் இல்லாம இங்க பார் இன்ஜெக்சன் லோட் பண்ணிட்டேன், சீக்கிரம் போடணும்!”

“லோட் பண்ணுனதை வேணுமின்னா தூக்கிப்போட்டுடுங்க, நான் வேற போட்டுக்கிறேன்!”

“அவ வர வரைக்கும் இப்படியே பெயினோடவே இருப்பியா? சொன்னா கேளு மது!”

“ம்ஹும் மாட்டேன்”

“சொன்னா கேக்கப் போறியா இல்ல, புல்லா எல்லாத்தையும் உரிஞ்சு விட்டுடுவேன் பார்த்துக்கோ, உனக்கு என்னைப் பத்தி தெரியும் இல்ல?”

அவள் கூச்சத்தோடு கழட்ட முயல, வலது கை காயம் மிகவும் வலியை உண்டாக்கியது!

“விடு” என்று சொல்லி விட்டு அவனே கழற்றிவிட்டு ஊசிப் போட்டான்!

அவள் கைககள் கொண்டு மறைத்துக் கொள்வதை பார்த்து சிரித்து விட்டு, “இதெல்லாம் தேவையில்ல , நான் ஒண்ணும் பார்க்கல!”

ஊசிப் போட்டுவிட்டு அவனே மீண்டும் போட்டும் விட்டான்!

“ஏங்க, இந்த வென்ப்லான் எல்லாம் இல்லையா?” அவள் கேட்க

“அதானே பார்த்தேன், இன்னும் கேக்கலையேன்னு! அவசரத்தில் கேட்க மறந்துட்டேண்டி!”

என்று அவனே அவளின் உடைகளை சரி செய்து விட்டு, கீழே கிச்சனுக்குப் போய், பழங்கள் எடுத்து, அவனுக்கு தெரிந்த வரை ஜூஸ் போட்டு எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.

அவள் பேய் முழி முழத்துக் கொண்டு குடிப்பதைப் பார்த்து,  “என்னடி இப்படி மூஞ்சிய வச்சுட்டு இருக்க? ஜூஸ் நல்லா இல்லையா?”

“ம்ம். ஆமா.” என்று அவள் தயக்கத்துடன் தலையாட்ட,

“ரொம்ப நாக்கை வளர்த்து வச்சுருக்கடி நீ, ஏதோ எனக்கு தெரிஞ்சத போட்டுருக்கேன்! நல்லா இல்லன்னாலும் குடி, டேப்லெட் போடணும்!”

“ஆமா, இந்த சினிமால்ல எல்லாம் புருஷன் காரன் கேவலமா சமைச்சா கூட, இந்த பொண்டாட்டிங்க சாப்பிட்டுட்டு, ஆனந்தக்கண்ணீர் விட்டு நல்லா இருக்குன்னு பொய் சொல்வாங்களே, அப்படியாவது சொல்ல மாட்டியா மது!”

“நான் பொய் சொல்ல மாட்டேன்!”

“அய்யோடா நம்பிட்டோம்! போடி..” கிண்டலடித்தவன் “மது கொஞ்ச நேரம் தனியா இருப்ப இல்ல, இப்ப பரவாயில்ல தானே!”

“நான் கொஞ்சம் வெளியே போய் ஒரு சின்ன பர்ச்சேஸ் பண்ண வேண்டியிருக்கு!”

“வெளியே பூட்டிட்டு போறேன், நீ இந்த காயத்து மேலே டிரஸ் உரசாம பார்த்துக்கோ!”

வெளியே சென்றவன் வாங்கி வந்ததைப் பார்த்த மது அதிர்ச்சியடைந்தாள்!

“முழங்கால் காயம் ஆறும் வரை, இதை போட்டுக்க” என்று அவன் கொடுத்தது, நைட் சூட்கள்!

ஷர்ட்டும் ஷார்ட்ஸ்களும்! தொடை வரை மட்டுமே உள்ள ஷார்ட்ஸ்! முழங்கால் காயத்தை உரசாமல் இருக்கவென்று!

“ம்ஹும், நான் இதையெல்லாம் போட மாட்டேன்!”

“ரூமுக்குள்ள தாண்டி போட்டுக்க போறே, போட்டுக்கோ மது!”

“மாட்டேன், அப்புறம் நீங்க .. “ சொல்ல வந்ததை முழுங்கினாள்.

“நான் ஒண்ணும் டெம்ப்ட் ஆக மாட்டேன், உன்னையும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்! என் போகஸ் எல்லாம் இப்ப உன் இன்ஜூரிஸ் எல்லாம் சரியாகணும் அவ்வளவுதான்!”

அவள் உடை மாற்றவும் உதவினான்!

மதுவுக்கு அடிப்பட்டு விட்டதை ராகவனுக்கு மட்டுமே சொன்னான் ரகு!

பெரியாப்பவுக்கு மதுவுக்கு பீவர் என்று மட்டுமே சொன்னான்.

வைஷுவிடம் அதையும் சொல்லவில்லை அவன்!

அவள் மேல் அவனுக்கும் கோபம்!

அவன் மேல் அவளுக்கு கோபம் என்றால், நேரே வந்து சண்டை போட்டுருக்கணும், இல்ல போன தரம் மாதிரி அறையாவது விட்டுருக்கனும். அதை விட்டுட்டு, அது என்ன? ஒரேடியா வீட்டை விட்டுப் போறேன்னு சொல்றது!

மதுவுக்கு அடிப்பட்டது ராகவன் மூலம்  தெரிந்து, வைஷு உதவ வந்த போது, அவளை தடுத்தான் ரகு!

“என் பொண்டாட்டி பார்த்துக்க எனக்கு தெரியும், நீங்க உங்க குடும்பத்தை பாருங்க அண்ணி!”

“டேய் என்னடா இது! இப்படியெல்லாம் பேசுற? நீ எப்படி பார்த்துக்குவ? அவ பாட்டி வேற மாதுவோட நார்த் இந்தியா போய்ட்டாங்க, அவனுக்கு சமைச்சு போடன்னு!

மானுவும் கல்யாணம் பண்ணிட்டுப் போய்ட்டா”

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்! நீங்க கவலைப்படாதீங்கண்ணி!’

மதுவும் பதறி, “என்னங்க நீங்க” என்று ஆரம்பிக்க,

வைஷுவோ “டேய் உனக்கு இதெல்லாம் செட்டே ஆகல, போதும் நிறுத்திக்கோ! என்னால் சிரிப்ப கண்ரோல் பண்ண முடியல!”

‘ரொம்ப சந்தோசமா இருக்குடா, உன்னை இப்படி பார்க்க! நீ பார்த்தி கிட்ட பேசுனத உங்க அண்ணன் என் கிட்ட சொல்லிட்டாரு!”

“சூப்பர்டா! ரகு! எப்படி? எப்படி? I am proud to be மது புருஷன்!

கிரேட் ரகு! நீ மது மேல இவ்வளவு பாசம் காதல் வச்சுருக்கறத பாக்குறப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு!”

வைஷு அவனை மெல்ல தோளோடு அணைத்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்!

மதுவையும் அணைத்துக் கொண்டு, “இந்த ஆக்சிடென்ட் கூட நல்லதுக்கு தான் போல மது! நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்க உதவும்!”

“யப்பா ரகு நந்தா, உன் பொண்டாட்டி நீயே பார்த்துக்கோ, அப்பப்போ கொஞ்சம் உன் பேசண்டுகளையும் பார்த்துக்கோ, நான் வரேன்!”

வைஷு மன நிறைவுடன் சென்றாள்.

இரவு உணவை மேலே எடுத்து வந்து ரகுவே மதுவுக்கு ஊட்டி விட்டான்.

காலையில் நன்றாக அடிபட்டிருந்த  வலது கையால் பிரஷ் செய்ய முடியாமலும் , இடது கை வாகாக வராமலும் மது கஷ்டப்பட, அவனே பிரஷ் செய்து விட்டான். அவளைத்  தூக்கிக் கொண்டு போய் ரெஸ்ட் ரூமில் விட்டான்.

அவள் பிரெஷ் ஆகி வந்த போது, அவன் YouTube ல் ஈசியாக கொண்டை போடும் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தான்!

மதுவினால் தலை வாரிக் கொள்ள முடியாதே!

ரகு, மதுவை அவன் விஜிம்மா போல தாயாக எண்ணி அவள் மேல் நேசம் கொண்டான் முதலில்!

இப்போதோ, அந்த மதுவே இப்போது அவனுக்கு சேயாகிப் போயிருந்தாள் அவள் அன்பு கணவனுக்கு!

இனியாவது, மதுவின் பயம் போகுமா? அவனை முழுவதும் நம்பி அவனோடு காதல் வானில் பறப்பாளா?

நம்புவாள்..

நம்புவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!