Skip to content
Post Views: 6,362
தேவநாதனின் பக்கத்தில் சென்றவள்….., தனது கைப்பையில் இருந்து விபூதியை எடுத்து அவனது நெற்றியில் வைத்துவிட்டாள். தேவநாதனின் கண்கள் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தது.
உடம்பில் அங்கங்கே சிராய்ப்புகள், கைகாலில் கட்டுகள் என முகத்தைத் தவிர எல்லா இடமும் அவனுக்கு காயங்களும் கட்டுகளாக இருந்தன. அவனது உடம்பை அங்குலம் அங்குலமாக துழாவிய அவளது கண்கள், மெல்ல அவனது முகத்தில் வந்து தேங்கி நி்ன்றது.
அவனையே விழியெடுக்காமல் சில நொடிகள் பார்த்திருந்தவள் “வலி அதிகமாயிருக்கா……?” என்றாள்.
இதற்கு என்ன பதில் சொல்வது? இவ்வளவு அடிபட்டிருப்பவனிடம் வலிக்குதா……. என்று கேட்டாள்……, வலிக்காமலா இருக்கும். அவளது கேள்வி அபத்தமாக இருந்ததை… அவளே உணர்ந்தாள். இருந்தும் அவனது வலியை பற்றி அறிய எண்ணிய அவளது மனம், அவனிடம், அப்படி கேட்க வைத்ததுபோல.
Advertisement
ஆமாம் என தலையசைத்தான்.
தனது கை விரல்களால்… அவனது சிகையை கோதி…, வருடி விட்டு, நான் இருக்கேன்… சரியாயிடும்… ஒன்னும் ஆகாது. ம்ம்…. என ஆறுதல் சொல்ல விழைந்த மனதை அடக்க முடியாமல் தவித்து நின்றாள் அமைதியாக.
இன்னும் அவனை தொட்டு பேசும் அளவு தைரியம் வரவில்லை அவளுக்கு. மனதை வெளிப்படையாக அவனிடம் காட்டவும் தெரியவில்லை. மணாளனைத் தொட்டுப் பேச கூச்சமும் தடையாக இருந்தது பெண்ணுக்கு.
Advertisement
அவளையே விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் தேவநாதன். அஞ்சனா பார்ப்பதற்கு மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். இந்த மூன்று நாட்களிலேயே…, கன்னம் ஒட்டி, முகம் வெளுத்து….., கண் ஈரப்பசையை இழந்து, கண்ணைச் சுற்றி கருமையும் வந்திருந்தது.
Advertisement
நிறைய அழுதிருப்பாள் போல. கண் இமைகள் லேசாக தடித்து காணப்பட்டது. தூக்கத்தை இழந்ததினால் கண்கள் சிவப்பேறியிருந்தது. அவளையே விழிகளால் ஆராய்ந்து கொண்டிருந்தவனுக்கு, தன்னால்தானோ… என்ற குற்றவுணர்வு வந்தது.
சும்மாயிருந்தவளை…, திருமணம் செய்துகொள்ளலாம் என பேசி அவளையும் வீணாக இதில் இழுத்துவிட்டோமோ… என சஞ்சலம் அவனுக்குள்.
இன்னமும் அவன் மனதில் ஓரத்தில், தான் அவளிடம் திருமணத்தில் பார்த்து பேசியதால்தான் தன்னை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டிருப்பாள்… என்ற நம்பிக்கை இருந்தது.
Advertisement
தான் பேசாமல் இருந்திருந்தால், அவளுக்கு இங்கு வந்து, இப்படி தனக்காக வருந்த வேண்டிய அவசியம் வந்திருக்காது இல்லையா… என தேவையில்லாததையெல்லாம் நினைத்து குழம்பிக்கொண்டிருந்தான்.
சில சமயங்களில் இப்படிதான் வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டுவிடும். நாம் எண்ணி செயல்பட்டது ஒன்றாக இருக்கும். நடந்தது வேறாக இருக்கும். இதற்கு யார் காரண கர்த்தா…? யார் அறிய முடியும்…?
சிலருக்கு வாழ்வில் சாதாரணமாக கைகூடுவது எல்லாம், சிலருக்கு அசாத்தியமாக இருக்கும்.
இப்போது அஞ்சனாவுக்கும் அப்படிதான் இருந்தது. எவ்வளவு வசவு…? எத்தனை போராட்டம்…? இப்படி இவன் படுக்கவா…? இதற்கா இவன் மீது காதல் கொண்டேன்…? நான் என் மனச வெளிப்படுத்தாம இருந்தா… அட்லீஸ்ட் இவனாவது நல்லாயிருந்திருப்போனோ…. என அவளுக்கு உள்ளூர வருத்தம்.
இருவரும் தங்கள் மனப்போராட்டத்தை வெளியில் சொல்லவில்லை என்றாலும், அவர்களது முகமே அதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது இருவருக்கும்.
உடல் முழுவதும் அசைக்க முடியாத அளவு வலி, அணு அணுவாக வதைத்துக் கொண்டிருந்தது அவனை. இதிலிருந்து தேறுவதற்கு எத்தனை மாதங்கள் ஆகும்? ம்கூம்… எதுவும் தெரியாது? இங்கே உயிர் பிழைத்ததே அரிதாக இருந்ததே அவனுக்கு.
அப்படியே தேறி வந்தாலும் முன்போல இருப்பானா…? அதுவும் தெரியாது.
என்னோட சேர்ந்து இவள் வாழ்க்கையும் வீணாயிடுச்சே என்று வேதனைப்பட்டான் உள்ளுக்குள்.
அவளும் அவனை நினைத்து வருந்திக்கொண்டிருந்தாள் மனதிலேயே. மெல்ல தனது எண்ணவோட்டத்திலிருந்து மீட்டுகொண்டவள், அவனிடம் ‘’நான் இங்கயே உங்க கூடவே…, ஹாஸ்பிட்டல்ல இருக்கவா…? உங்களை கவனிச்சுக்க…” என்றாள்.
அவளுக்கு அவன் பதில் சொல்ல விழைவதற்குள், ‘’எதுக்குடியம்மா…..? அவனை இப்படி படுக்க வைச்சது போதாதா….? மொத்தமா பரலோகத்துக்கு அனுப்பிடலாம்னா…..? என்றார் அறைக்குள் நுழைந்த மீனா, அவளைப் பார்த்து கோவமாக.
“அத்தை……….” என அஞ்சனாவும், “ம்மா….” என அவனும் ஒரே நேரத்தில் கத்தியிருந்தனர். மீனாவின் வார்த்தையை கேட்டு.
“ம்மா… என்ன பேசறீங்க…?” என்றான் தாயைப் பார்த்து முகத்தை சுணங்கிக்கொண்டே தேவநாதன். அவனுக்கிருந்த வலியில் சத்தமாகக்கூட பேச முடியவில்லை அவனால்.
“நீ சும்மயிருடா…” என அவனை அதட்டிய மீனா, அஞ்சனாவிடம் “பண்ணதெல்லாம் போறும்டியம்மா. அவனை விட்டுடு…..”
“நான் என்ன பண்ணேன் அத்தை…..?”
“உன்னை எந்த நேரத்துல பார்த்தாரோ… இவன் அப்பா…, அன்னைக்கே எங்களுக்கு பிடிச்சிடுத்து…..”
“த்தை……” என்றாள் அதிர்ச்சியாக
“ம்மா…….. சும்மாயிருங்க……..” என அவரை அடக்க முயன்றான் தேவநாதன்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதைப் போல மீனாவுக்கு மகன் அடிப்பட்ட வேதனை…, நல்ல விஷயத்திற்கு சென்று வரும் போது இப்படி தடங்கல் நடந்துவிட்டதே என்ற வருத்தம்…, மகன் திரும்ப பழையபடி குணமாக வேண்டுமே என்ற பயம்… எல்லாம் சேர்ந்து அவரை ஆத்திரப்பட வைத்தது.
உண்மையிலேயே அவருக்கு ஆத்திரம் கண்ணை மறைத்திருந்தது அந்த க்ஷணம். “இன்னும் எதுக்குடா சும்மாயிருக்கனும்….? சும்மாயிருந்த உன் மனசுல கல்லை விட்டு எறிஞ்ச மாதிரி…, உங்கப்பா அவர் தங்கச்சி குடும்பத்தோட சேர்றதுக்கு…, உன்னை அடகு வச்சிட்டார்”.
“சும்மாயிருந்த உன் மனசுல, அதையும் இதையும் பேசி, இவளைப் பத்தி… ஆசைய வளர்த்துவிட்டது அவர்தானே…? அவருக்கு அவர் தங்கச்சியோட உறவு வேணும்னா…, அவர் போயி உறவாடியிருக்க வேண்டியதுதானே….? அவரை யார் தடுத்தா……?” “தங்கச்சி பொண்ணை உனக்கு கட்டி வச்சி, அது மூலமா தங்கச்சி குடும்பத்தோட இணைஞ்சிடலாம்னு திட்டம் போட்டது எல்லாம், எங்க கொண்டுவந்து விட்டிருக்கு பார்த்தியா…..?”
“இரண்டு பேருக்கும் ஜாதகம்கூட பார்க்கவிடாம மனப்பொருத்தம் மட்டும் போதும்னு…, என் வாயை அடைச்சிட்டாரு. அப்பவே ஜாதகம் பார்த்திருந்தா…, இப்படியாயிருக்குமா….? அப்பவே எனக்கு தெரிஞ்சிருக்கும்ல”.
“இதோ நிக்கறாளே…., இவள் ஜாதகத்துல என்ன தோஷமோ….? யார் கண்டா….? முகூர்த்தப்புடவை எடுக்க வந்ததுக்கே…. இப்படி உன்னை எழுந்துருக்க முடியாம படுக்க வச்சுட்டாள்…..”
“இன்னும் தாலிகட்டி குடும்பம் நடத்துனா……? நம்ம எல்லாரையும் சேர்த்து மொத்தமா அனுப்பினாலும்…. ஆச்சர்யப்படறதுக்கு இல்ல…… குடும்பம் மொத்தமா போகதான இருந்தோம். யார் செஞ்ச புண்ணியமோ…..? உயிரோட தப்பிப் பிழைச்சோம்…?”
“பார்த்து பேசும்மா… நாக்குல நரம்பு இல்லன்றதுக்காக… என்ன வேணா பேசலாம்னு அர்த்தம் இல்ல. பெத்தவங்க கல்லுமாதிரி இருக்கும் போதே, இப்படி எங்க பொண்ணை பேசறே….?” என்றார் வேல்முருகன்.
மீனா திரும்பி பார்த்தார். வேல்முருகனும் ரோகிணியும் நின்றிருந்தனர். காஞ்சனாவைப் பார்த்துவிட்டு வந்தவர்களை, இங்கு அனுப்பிவிட்டு செல்வதுரை மட்டும் பார்மசி வரைக்கும் சென்றிருந்தார்.
காஞ்சனாவுக்கு சில மருந்துகளை எழுதிக் கொடுத்து வாங்கி வரச் சொல்லியிருந்தனர் செவிலியர்தேவநாதனின் பக்கத்தில் சென்றவள்….., தனது கைப்பையில் இருந்து விபூதியை எடுத்து அவனது நெற்றியில் வைத்துவிட்டாள். தேவநாதனின் கண்கள் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தது.

காஞ்சனாவுக்கு சில மருந்துகளை எழுதிக் கொடுத்து வாங்கி வரச் சொல்லியிருந்தனர் செவிலியர். அதற்காக அவர் ஹாஸ்பிட்டலில் இருந்த பார்மசிக்கு சென்றிருந்தார்.
மீனாவின் வார்த்தைகளை கேட்டு… கொதிப்படைந்த வேல்முருகன், உக்கிரமாக நின்றிருந்தார். ரோகிணி வாயடைத்து நின்றிருந்தார் கண்களில் கண்ணீருடன். அவருக்கே அதிர்ச்சியாக இருந்தது. மீனாவின் வார்த்தைகளை கேட்டு. இவ்வளவு கீழ்தரமாக பேசுவார் என எண்ணவில்லை. திக்பிரமை பிடித்ததுபோல நின்றிருந்தார்.
தேவநாதன் பலமுறை தாயைத் தடுக்கப் பார்த்தும், மீனாவை கன்ட்ரோல் செய்ய முடியவில்லை. என்னாச்சு அம்மாக்கு…? ஏன் இப்படி பேசறாங்க…? நல்லாதான இருந்தாங்க. ஒன்றும் புரியவில்லை அவனுக்கும்.
இந்த அளவு யாரையும் மீனா பேசி இதுவரை அவனும் பார்த்ததில்லை. அவனுக்கும் எரிச்சலும் கோவமும் எழுந்தது, அன்னையின் வார்த்தையில். மீனா பேசப் பேச அஞ்சனா எதுவும் வாய் திறக்க முடியாமல் விக்கித்து நின்றிருந்தாள் கண்களில் நீர் வழிய.
“இந்த மாதிரி யோசிக்காம வார்த்தைய கொட்னதாலதான், இத்தனை வருஷம்… உங்க உறவே வேணாம்னு தள்ளியிருந்தேன். பழச எல்லாம் மறந்துட்டு பேசறியா… நீ”
“உறவே வேணாம்னு ஒதுங்கியிருந்த எங்களை…, வீடு தேடி வந்து என் பொண்ணை… உங்க பையனுக்கு பொண்ணு கேட்டது யாரு…? நீயும் உன் புருஷனும்தான. அதையெல்லாம் மறந்துட்டு பேசறியா…… நீ? என்னமோ நாங்க உன்வீடு தேடி வந்து சம்மந்தம் பேசின மாதிரி… ரொம்ப குதிக்கற…”
“ஆமா… வந்தோம்தான். யாரு இல்லன்னு சொன்னது. அப்ப எனக்கு தெரியாதே இவளை கட்னா இப்படி ஆகும்னு. இத மாதிரி நடக்கும்னு முன்னமே தெரிஞ்சிருந்தா…, நான் ஏன் வந்திருக்க போறேன்…? உங்க திசையிருக்க பக்கமே திரும்பியிருக்க மாட்டனே”.
“ஒஹ்…. என் பொண்ணுக்கு தோஷம் இருக்குன்னு…., யார் சொன்னா உனக்கு….?”
“யார் சொல்லனும்…..? அதான் கண்கூடா நேர்லயே பார்த்தாச்சே. அவளுக்கு தோஷம் இருக்கப்போய்தான…., கல்யாணம் பேசிமுடிச்சு…, ஜவுளி எடுக்க போன அன்னைக்கே, என் பிள்ளையோட உயிரை பணயம் வைக்கறமாதிரி ஆயிடுச்சு….”
“என்னை கேள்வி கேக்கறீங்களே…? என்னமோ… நாங்க பொண்ணு கேட்டு வந்ததாலதான்…, நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட மாதிரி பேசறீங்க”.
“நாங்க பொண்ணு கேட்டதுமே…, உடனே நீங்க என் பையனுக்கு தரேன்னு ஒத்துகிட்டீங்களா….? மறுத்து பேசிதான எங்களை அனுப்பி வச்சீங்க…”
“அப்படி அனுப்புன நீங்க எதுக்கு திரும்ப போன் போட்டு, எங்களை சம்மந்தம் பேச வரவச்சீங்க….? இவளுக்கு எங்கயும் வரன் அமையலன்னுதான…?
“என்ன உளர்ற….?” என்றார் பல்லைக் கடித்துகொண்டு காட்டமாக வேல்முருகன்.
“யார் உளர்றாங்க……..? எங்களுக்கு பொண்ணு தரமாட்டேன்னு மறுத்துட்டு, வெளியில இவளுக்கு நீங்க மாப்பிள்ளை பார்க்கல….? எங்க என் மூஞ்சுக்கு நேரா இல்லன்னு சொல்லுங்கப் பார்ப்போம்”.
என்ன சொல்லமுடியும்….? பார்த்தார்தானே
“ஏன் அதெல்லாம் தட்டிப்போச்சு?”
“அதுவும் கல்யாணம் பேசி முடிவானதுக்கு அப்புறம் தட்டிப் போயிருக்கு. ஏன் காரணம் சொல்லுங்க பார்ப்போம்…..? இவளுக்கு இப்படி தோஷம் இருக்கறது, தெரிஞ்சி… அவங்களே வேணாம்னு போயிட்டாங்களா….?” என்றார் குத்தலாக.
“வீணா வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிட்டிருக்காத…. பொம்பளையாச்சேன்னு பார்க்கிறேன். உன் இடத்துல ஒரு ஆம்பிளை இருந்திருந்தா இந்நேரம் நடந்திருக்கறதே வேற….” என எகிறினார்.
“உன் பிள்ளை வண்டி ஓட்ட தெரியாம…, எங்கயோ போய் இடிச்சிட்டு…., ஆக்ஸிடென்டாகி வந்து படுத்தா.., அதுக்கு என் பொண்ணு காரணமா….? நல்லாயிருக்கே… உன் நியாயம். நாளைக்கு உங்க வீட்ல, வேற எதாவது நடந்தாகூட… என் பொண்ணுதான் காரணம்னு சொல்லுவ போல…..”
“அததான் நானும் சொல்றேன். அந்த அளவுக்கு ஏன் விடனும்…? உங்க பொண்ணை கூட்டிட்டு கிளம்புங்க…”
“சந்தோஷம் மா… ரொம்ப சந்தோஷம். மனசு ரொம்ப குளுந்து போயிடுச்சு நீ பேசனத கேட்டு. நல்லாயிரு. பொண்ணைப் பெத்தவங்களோட வலியும் வேதனையும் உனக்கெங்கே புரிய போகுது? ஆணவத்துல பேசற…. ரொம்ப நாள் நீடிக்காது…”
திரும்பி பக்கத்தில் நின்றிருந்த மனைவியைப் பார்த்தவர், அவர் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து எரிச்சலாகி மனைவியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார், ஆத்திரத்தை அடக்கும் வழி தெரியாமல்.
“போதுமாடி…? எல்லாம் உன்னால வந்தது. நொண்ணன் வீடுன்னு தூக்கி வச்சிட்டு கொண்டாடுவியே…, கேட்டியா…? பேசுனத எல்லாம்.
வாயத்திறக்காம… அப்படியே குத்துகல்லாட்டம் நிக்கறே…? இவங்ககிட்ட எல்லாம் பேச்சு வாங்கதான் நான் பொண்ணு பெத்து வச்சிருக்கேனா…? எனக்கு இதெல்லாம் தேவையாடி…?”
“என் பொண்ணுக்கு வேற இடமே அமையாதுன்னு, மாமியாரும் மருமகளுமா சேர்ந்து என்ன ஆட்டம் போட்டீங்க….? என் பேச்சை யாரு மதிச்சா….? பத்தாததுக்கு…..” என அஞ்சனாவை திரும்பி தீயாய் எரித்தவர்…,. “இன்னும் என்ன அங்க ஒட்டிகிட்டு நின்னுட்டிருக்க…..? இவ்வளவு பேசியும் வெக்கமாயில்ல… உனக்கு. இல்ல, சூடு சுரணையே இல்லையா….” என முறைத்தார் மகளை.
உண்மையிலேயே மகளை அடித்து துவம்சம் செய்யும் ஆத்திரம் இருந்தது மனதில். அதைதான் ரோகிணியின் மீது காட்டியிருந்தார். வேண்டாம் என்று இருந்தவனை வலுக்கட்டாயப்படுத்தி சம்மந்தம் பேசியது மட்டும் இல்லாமல்…, என்னவெல்லாம் பேச்சு வாங்கவேண்டியதாகி விட்டது என மனதிலேயே கூனி குறுகிப் போய்விட்டார் வேல்முருகன்.
தன்னைப் பார்த்து இதுவரை மரியாதை குறையாமல், பணிவுடன் பேசிக்கொண்டிருந்த மீனா இன்று, எல்லோரின் முன்பு நிற்க வைத்து இப்படி பேசியது அவருக்கு அவமானமாக இருந்தது.
தனது பெண்ணின் காதுகுத்தின்போது நடந்த…, பழைய சம்பவங்கள் எல்லாம் தேவையில்லாமல் நினைவு படுத்தியிருந்தது மூளை வேறு. எல்லாம் சேர்ந்து அவரை, மேலும் வதைக்க ஆரம்பித்தது உள்ளுக்குள்ளேய. இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ… என கவலையுற்றவர் எதுவும் பேசாமல் வேகமாக காருக்கு சென்றார்.
எதிரில் செல்வதுரை பார்த்து கூப்பிட்டதைக்கூட காதில் வாங்காமல் சென்றுவிட்டார் வேல்முருகன். ரோகிணியும், அஞ்சனாவும் அழுதுகொண்டே பின்னால் சென்றதைப் பார்த்த செல்வதுரைக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் பின்னாடியே சென்று அவர்களை அடைவதற்கு முன்னால் காரில் ஏறி சென்றிருந்தனர்.
குழப்பமாகவே…… சிந்தனையுடன் தேவநாதன் இருக்கும் அறைக்கு வந்தவர் மனைவியிடம்…. “என்னாச்சு… மீனா…? மாப்பிள்ளை கோவமா போறார். பின்னாடி ரோகிணியும் அஞ்சனாவும் அழுதுகிட்டே போறாங்க” என விசாரித்தார் மனைவியிடம்.
மீனாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. முகத்தை திருப்பி நின்றுகொண்டார் எதுவும் சொல்லாமல்.
தேவநாதனைத் திரும்பி பார்த்தார். அவன் கண்களை மூடி படுத்திருந்தான் மனமெல்லாம் ஒய்ந்துபோய். தாயின் வார்த்தைகள் அவனையும் வதைத்திருந்தது. இருந்தும் அவன் பேசாமல் இருந்ததற்கு காரணமும் இருந்தது.
தனக்கு இப்படி ஆனதால்… எங்கே அஞ்சனாவின் வாழ்வும் தன்னுடன் சேர்ந்து வீணாகி விடுமோ என பயந்து, ஏற்கனவே மனதைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தான்.
இப்போது அன்னையின் பேச்சினால் கோவம் வந்து, அஞ்சனாவுக்கு நல்ல வரன் பார்த்து கட்டி வைப்பார் வேல்முருகன் என பேசாமல் அமைதியாகிவிட்டான். தன்னால் அவள் வாழ்வு கெட வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் சட்டென்று அமைதியாகி இருந்தான்.
error: Content is protected !!