Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedவசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 22

தேவநாதன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வர ஒரு மாதத்திற்கு மேல் ஆனது.  இன்னும் அவனால் எழுந்து நடமாடகூட இயலவில்லை.  அவனது உதவிக்கென்று, ஆண்கள் யாராவது மாற்றி… மாற்றி… அவனுடன் இருக்கதான் வேண்டி இருந்தது.  அவனுக்கே அவனை எண்ணி எரிச்சலானது.  வலியும் வேதனையும் அவனை அந்த அளவு பாடாய்படுத்திக் கொண்டிருந்தது.

வீட்டிற்கு வந்தும், அவனால் தனித்து எழுந்து நடமாட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.  மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அவனுக்கு பிசியோ கொடுப்பதற்கு வீட்டிற்கே வரவழைத்தனர்.

அடுத்த ஒரு மாதத்திலேயே கொஞ்சம் முன்னேற்றம் வந்திருந்தது அவனிடம்.  அவனது வைராக்கியத்தாலும், விடா முயற்சியாலும்… மிகுந்த கஷ்டத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாக்கர் வைத்து நடக்க பழகிக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு நாளும் பிசியோவின் போது வலி உயிர் போனது அவனுக்கு.  திடமான மனதுடன் வலியைப் பொறுத்து… பழைய நிலைக்கு தன்னை மீட்டெடுக்க போராடிக் கொண்டிருந்தான் அவனுக்கவனே.



Advertisement

அஞ்சனா தன்னுடைய முழுகவனத்தையும் வேலையில் செலுத்த ஆரம்பித்திருந்தாள்.  இதற்கிடையில் நிஷாவுக்கும் சிறப்பாக திருமணம் முடிந்திருந்தது.

நிஷாவுக்கு திருமணம் முடிந்தபிறகு அங்கிருக்கப் பிடிக்காமல் சென்னைக்கு வேலையை மாற்றிக்கொண்டு, இங்கேயே வந்துவிட்டாள் அஞ்சனா.

வீட்டிற்கு வருவதை அறவே தவிர்த்திருந்தாள்.  யாரையும் முகம் கொண்டு பார்க்கவோ, பேசவோ, பிடிக்கவில்லை.  எது என்றாலும் வீட்டினருடன் போனில் பேசுவதோடு சரி.  வேல்முருகனுக்கு வேதனை இருந்தாலும், மகளை அப்படியே விட மனமில்லாமல் தந்தையாக அரவணைத்து கொண்டார் மகளை.

Advertisement

பெற்ற மகளாயிற்றே.  கோவம் இருந்தாலும் அதைக் காட்ட கூடிய சூழல் இது இல்லை என அந்த தகப்பனுக்கு புரிந்திருந்ததுபோல.  ஆதலால் மகளுக்கு உறுதுணையாக, பக்கபலமாக கூடவே நின்றார் தந்தை.

Advertisement

மகள் வரவில்லையென்றாலும் பெற்றவர்கள் வந்து பார்த்து செல்ல பழகியிருந்தனர்.  அதற்கு தகுந்தாற்போல அவளுக்காக சென்னையிலேயே சொந்தமாக பிளாட் வாங்க முயன்று கொண்டிருந்தார் வேல்முருகன்.

இப்பொழுதும் தனி பிளாட் எடுத்துதான் தங்கியிருந்தாள் அஞ்சனா.  ஆனால் அது வாடகை.  இவள் மட்டும் தங்கியிருப்பதால், வேல்முருகனும் ரோகிணியும் வந்து செல்ல எளிதாக இருந்தது.  சமயத்தில் லஷ்மியும் வந்து அவளுடன் நாளைந்து நாட்கள் தங்கி செல்வார்.

வேல்முருகனுக்கு மனதில் கோவமிருந்தாலும்…., மகளை எண்ணி மனதில் பயமும் வந்திருந்தது.  கல்யாண பேச்சு ஆரம்பித்ததிலிருந்து ஒன்று மாற்றி ஒன்று தடங்கலாகவே இருப்பதை எண்ணி மனதிலேயே குமைந்து கொண்டிருந்தார்.

Advertisement

அவரும் மனதளவில் தொய்ந்துதான் போயிருந்தார்.  எல்லாம் இருந்தும் மகளுக்கு ஒரு கல்யாணம் செய்து பார்க்க முடியவில்லையே என்ற வேதனை அவரை வாட்ட ஆரம்பித்திருந்தது கொஞ்ச நாட்களாக.

லஷ்மியும் பேத்தியை நினைத்தே ஒடுங்கியிருந்தார்.

செல்வதுரைக்கு அடுத்த நாளே மீனா மூலமே முழுவிவரமும் தெரிய வந்திருந்தது.  தங்கை குடும்பம் ஏன்…., சொல்லாமல் கொள்ளாமல் சென்றது.., அதுவும் ரோகிணியும்…. அஞ்சனாவும் அழுதுகொண்டே சென்றது…, அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.

ஏதோ நடந்திருக்கிறது…? என பயந்தார் செல்வதுரை.  ஆனால் அவர் மனைவியை கிஞ்சித்தும் சந்தேகிக்கவில்லை.  போன் செய்தாலும் செல்வதுரையின் அழைப்பை எவரும் அங்கு ஏற்கவில்லை.

வேல்முருகன் கோவக்காரர் ஆயிற்றே.  அவர்தான் ரோகிணியையும், அஞ்சனாவையும் ஏதோ சொல்லியிருக்கிறார் என நினைத்து மீனாவிடம் என்ன நடந்தது என கேட்டு நச்சரித்ததில்…, ரோஷப்பட்டு மீனாவே நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் கணவரிடம் கூறியிருந்தார்.

மூடிமறைக்க முடியுமா…….?  எப்படியும் தெரியவரும் என நினைத்தவர், அவர் வாயாலேயே கூறிவிட்டார் கணவரிடம்.

அன்றிலிருந்து செல்வதுரை மனைவியிடம் பேச்சை அறவே நிப்பாட்டி விட்டார்.  மனைவியை அறவே ஒதுக்க ஆரம்பித்திருந்தார்.  அவர் இருக்கும் இடத்தில்கூட இருக்க மறுத்து.

மனைவியின் கையால் சாப்பிடுவதையும் தவிர்த்திருந்தார்.  வீட்டார் யாரும் அவரிடமிருந்து இத்தகைய பரிணாமத்தை எதிர்பார்க்கவில்லை.  மீனாவே கணவனின் கோவத்தில் பயந்திருந்தார்.  கணவர் கோவப்படுவார், சண்டை போடுவார் என நினைத்திருந்தவருக்கு…., தன்னை ஏறெடுத்துகூட பார்க்காமல் கணவர் ஒதுக்கியது…, வேதனையைக் கொடுத்தது.

பலமுறை மீனா அவரது கருத்தை, நியாயத்தை, தெரியபடுத்த.., புரியவைக்க… முயன்றதற்கு, ஒரே போடாக போட்டு மனைவியின் வாயை அடைத்துவிட்டார்.

நான் இந்த வீட்டுல இருக்கறது…., உங்கம்மா….க்கு பிடிக்கலைன்னா சொல்லச் சொல்லு……. வேற எங்கயாவது தங்கிக்கறேன்….. என நடு ஹாலில் நின்று கத்தவும்… அதிர்ச்சியில் பேயறைந்ததுபோல் நின்றுவிட்டார் மீனா.  வீட்டினருக்கே செல்வதுரையின் இந்த அவதாரம் புதிதாக இருந்தது.

இதுவரை அதிர்ந்துகூட பேசாத மனிதரை…., இப்படி பார்த்தது எல்லோருக்கும் பயத்தை…தான் கொடுத்தது.  தாய் தந்தையிடையே இதுவரை இதுமாதிரியான எந்த சண்டையையும் பார்த்திராத மகன்களுக்கு கவலையாக இருந்தது.

தம்பதியர் இருவரும் ஒற்றுமையாக இணக்கமாக வாழ்ந்ததெல்லாம் கனவா…. என இருந்தது,  அவர்களது இப்போதைய வாழ்க்கையை பார்த்து.

இதற்கிடையே நடந்த நல்ல விஷயம் என்னவென்றால்… தேவநாதன் எந்த விக்னமும் இல்லாமல் முழுமையாக தேறி வந்ததுதான்.  ஆறுமாதத்திற்குமேல் ஆகியிருந்தது தேவநாதன் மருத்துவமனையில் இருந்து வீடு வந்து.

அடுத்த சில மாதங்களிலேயே தேவநாதன் பூரணமாக குணமடைந்து, தன்னுடைய தொழிலையும் பார்க்க ஆரம்பித்திருந்தான்.

                                                         @@@@@@@@@@@

“நிஷா என்ன பண்ணிட்டிருக்க…. இன்னும்?  மணியாகுது ஆபிஸ்கு… உன்னை டிராப் பண்ணிட்டு….. நான் ஆபிஸ் போகனும்….மா ரெடியா….?” என்றான் அவர்களது அறைக்குள் இருந்து.

“ஆச்சுங்க…  இதோ ரெடியாயிட்டேன்……”

“ரெடியாகுறியா……?  இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கே…?” என சட்டையை கையில் எடுத்தவன், அதை அணிந்து கொண்டே கிட்சனுக்குள் நுழைந்த உமாபதி, அவளுக்குள் பின்னால் வந்து நின்றான்.

கிட்சனில் வேர்த்துவழிய வேலை செய்து கொண்டிருந்தாள் நிஷா.  கிட்சன் மேடை முழுவதும் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டு, எங்கும் ஈரத்துடன்…., நடுநடுவே….. செதுக்கிய காய்கறி கழிவுகள் எல்லாம் இறைந்து பார்க்கவே அசுத்தமாக இருந்தது.

அதனைப் பார்த்து தலையில் கைவைத்துக் கொண்டவன், “ஹே என்னடி பண்ணி வச்சிருக்கே கிட்சன….?  இன்னைக்கு அம்மா வந்துருவாங்க, தெரியுமில்ல.  அவங்க வந்து பார்த்தாங்க….. தொலைஞ்ச நீ. பார்த்துக்கோ…  இதுக்குதான் அம்மா உன்னை கிட்சன் பக்கமே சேர்க்கறது இல்லை போல” என்றான்.

“நாந்தான் வெளியில பார்த்துக்கலாம், வேணாம்னு சொன்னேன் இல்ல…., இப்பபாரு……., இதை கிளீன் பண்ணவே டைம் எடுக்கும்”.

“ம்ப்ச்… அதெல்லாம் ஈவ்னிங் வந்து பார்த்துக்கலாம்.  டைம் ஆயிடுச்சு இப்ப கிளம்பலாம்.  வாங்க”.

“காலையிலே இருந்து கிட்சன்ல இருக்கே.  அப்படி என்னதான் இன்னிக்கு சமைச்சே….”

“எல்லாம் உங்களுக்கு பிடிச்ச ஐட்டம்தான்.  ரசம் சாதமும்…, பொட்டேட்டோ பிரையும்….. செஞ்சிருக்கேன்”.

“என்னது…?  ஒரு ரசம் சாதத்துக்கா…. இந்த அக்கப்போரு….”

திரும்பி நின்று இடுப்பில் கைவைத்து…., அவனை முறைத்தவள்,  “அது என்ன…..?  அவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க… ரசம் சாதம்னு.  அதுக்கு நான் எவ்வளவு எபோர்ட் போட்டிருக்கேன் தெரியுமா…?”

“ரசம் சாதத்துக்கு என்னடி எபோர்ட்….”

அவனை பார்த்தவாறே, அவனது அருகில் இன்னும் நெருங்கியவள்…, அவனது சட்டையின் பட்டனை போட்டுக்கொண்டே, “நேத்து யுடியூப்ல… பிசிபேளாபாத் மாதிரியே…, குக்கர்ல ரசம் சாதம் செய்யற வீடியோ ஒன்னு பார்த்தேன்.  அதை பார்த்ததுல இருந்து…, அதை செஞ்சுடனும்னு மனசுல ஆசை.  அதான் இன்னிக்கு காலையில எழுந்ததும், அதே மாதிரி ரசம் சாதம் செஞ்சேன்.  டேஸ்ட்கூட நல்லா வந்திருக்கு.  கொஞ்சமா டேஸ்ட் பண்ணி பார்க்கறீங்களா…?”

மனைவியை அணைவாக பிடித்து நின்றவனுக்கு அவள் பேசிய செய்தி எல்லாம் செவியில் விழுந்தாலும் மதியை தொடவில்லை.  காந்தம்போல் கட்டி இழுத்தவளை, அணு அணுவாக பருகிக் கொண்டிருந்தான் கண்களாலேயே.

அவள் நுனிமூக்கில் வழிந்து நின்ற வேர்வை துளியை, விரலால் சுண்டிவிட்டவன். சட்டென்று அவளை பிடித்திழுத்து மூக்கை முன்பற்களால் லேசாக கடித்து, அவளது வலது பக்கம் மின்னிக் கொண்டிருந்த மூக்குத்தியில் இதழ் ஒற்றி எடுத்தான்.

“அய்யே…. மேலே எல்லாம் ஒரே வேர்வை… நகருங்க… உங்க ஷர்ட்டுலயும் வேர்வை ஒட்டிக்கும்”.

“ஒட்டிக்கட்டும்.  இப்ப நீ என்னோட ஒட்டிக்கோ…”

“அய்ய… காலங் கார்த்தால பேச்சப் பாரு…  தள்ளுங்க ஆபிஸ்கு டைமாயிடுச்சு….”

“எங்கடி… பேசக் கத்துகிட்ட… அய்ய…… புய்யன்னு….”

“ம்ம்.  எங்கம்மா….  இதுக்குன்னு தனியா… டியூஷன் போட்டாங்க…”

“வாய்… அதுக்குதான் அந்த வாய…” என அவளை மையலாக பார்த்தவன், “சரி. அதெல்லாம் இருக்கட்டும்.  இன்னிக்கு சீக்கிரம் வந்திடு.  பார்ட்டி இருக்கு.  நாம இரண்டு பேரும் நைட் வெளியே போறோம்……. லேட் பண்ணாத…. மறந்துட்டேன்னு வந்து நின்னே…….. தொலைச்சு கட்டிடுவேன்…”

“ம்ம்.  நான் என்ன வேணும்னா…. லேட் பண்றேன்.  எனக்கு வேலையிருந்தா என்ன பண்ண முடியும்.”

“இன்னிக்கு நீ என்ன வேலையிருந்தாலும்…., சீக்கிரம் வரே… மானத்த வாங்கிடாதடி.  என் கிளோஸ் பிரெண்ட் இன்வைட் பண்ணியிருக்கான்…  கண்டிப்பா போயே ஆகனும்.  லாஸ்ட் டைம், நீ வராம நான் மட்டும் போய்…, என் பிரண்ட்ஸ் எல்லாம் ஓட்டி தள்ளிட்டாங்க….  எல்லாரும் வைப்போட வருவாங்க டா…. சீக்கிரம் வந்திடுடா…”

“ம்ம்…. ட்ரை பண்றேன்”.

“சரி. நீ போய் கிளம்பு.  நான் கிளீன் பண்றேன் இதையெல்லாம்”.

“நீங்களா….?  வேணா… வேணாம்.., டிரெஸ்ல படப் போகுது.  நானே ஈவ்னிங் வந்து கிளீன் பண்ணிக்கறேன்.  நீங்க வாங்க” என அவனை இழுத்துச் சென்றாள் வெளியே.

பேக் செய்த லன்ச் பாக்சை டைனிங் டேபிளில் கொண்டுவந்து வைத்தவள்…, வேக வேகமாக அறைக்குள் நுழைந்தாள்… அலுவலகம் கிளம்புவதற்காக.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!