Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வினியின் நதி

அன்பு நவியின் வினியின் நதி அத்தியாயம் 3

வினியின் நதி அத்தியாயம் 3

மறுநாள் நதி மற்றும் அவள் நண்பர்கள் இணைந்து இவர்களுக்கும் ஃபிரசர்ஸ் டே வைக்கக் கேட்டு அவர்கள் ஹெச்.ஓ.டியிடம் சென்றனர். அவர் கண்டிப்பாக முடியாவே முடியாது என கூறிவிட்டார்.  

வெளியே வந்ததும் ”நமக்கு அந்த பாக்கியம் இல்ல போலடி” என வெண்ணிலா கூறினாள்.

ராதாவோ ”நான் தான் சொன்னேன்ல அவர் ஒத்துக்கமாட்டாருனு நீங்க தான் கேக்கல. நமக்கு தான் இன்செல்ட்.. இதுல நதி வேற எல்லாம் நான் பாத்துக்குறேனு சொன்னா.. அவர் முடியாதுனு சொன்னத பாத்துட்டு மட்டும் தான் இருக்கா” என்றாள்.



Advertisement

நதியோ ”நான் சொன்னது சொன்னது தான்டி.. கண்டிப்பா நாளைக்கும் போய் கேப்போம். அவர் ஓகே னு சொல்லுவாரு பாரு” என்றாள்.

”அது எப்டி சரினு சொல்லுவாரு?” என மரியா கேட்க ”அது அப்டிதான் வெயிட் அண்ட் வாச்” என நதி சொல்லிவிட அனைவரும் வகுப்பிற்குச் சென்று அன்றைய நாளை கடந்தனர். 

மறுநாள் காலை நதி அவள் தோழிகளை ஹெச்.ஓ.டியிடம் பேச கூப்பிட அவர்களோ ”போடி நாங்க வரல.. தினமும் வந்து மொக்க வாங்கவா? அங்க இருக்குற ஸ்டாஃப் எல்லாம் சிரிக்காங்க..” என்றனர்.

Advertisement

”அடிபடாம எப்டிடி கோவில் கூட்டத்துல புளியோதரை வாங்க முடியும்.. அவமானம் இல்லாம எப்டிடி ஜெயிக்க முடியும்.. அப்ப தான நாளைக்கு நம்ம பேரயே நம்ம டிபார்ட்மெண்ட் சொல்லும்..” என்றாள் நதி. 

Advertisement

”தத்துவம் எல்லாம் நல்லா தான் பாஸ் பேசுற.. ஆனா பிராக்டிக்கல் சரியில்லயே உன்கிட்ட” என்றாள் வெண்ணிலா.

“நீங்க யாரும் பேச வேண்டாம். என் கூட வந்து நில்லுங்க போதும்” என்றாள் நதி.

”சரிடி நமக்காக தான அவளும் பேசுறா சும்மா போய் கூட நிப்போம்.” என்று தோழிகள் உடன் சென்றனர்.

Advertisement

ஹெச்.ஓ.டி ரூமில் நதியோ ”சார் எங்களுக்கு ஃபிரசர்ஸ் டே?” என்றவுடன் அவரே ”நானே உங்க கிட்ட பேசனும்னு நினச்சேன்.. நீங்களும் விருப்பப்பட்டு தினமும் கேக்குறிங்க.. அதுனால எந்த பிரச்சனையும் இல்லாம நீட்டா புரோகிராம் பண்ணுங்க.. நதி பாத்துக்கோமா” என கூறிவிட்டார்.

அனைவரும் வெளியே வந்ததும் ”எப்டிடி உடனே ஒத்துக்கிட்டாரு? சாருக்கு எதுவும் பேய் அடிச்சுருச்சோ” என அவர்களுக்குள் குழம்பிக்கொண்டனர். 

அதற்கு நதியோ ”பேய்லாம் இல்ல. ஒரு சின்ன டிரிக் அவ்ளோ தான் டி.” என்றாள்.

”ஹே என்னடி பண்ண? சொல்லுடி” என அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர்.

”சார் எங்க பக்கத்து ஏரியா தான் டி. அவர் வொய்ஃப் ஒரு பக்தி பழம். தினமும் எங்க தெருவுல இருக்குற சிவன் கோவிலுக்கு வருவாங்க. நேத்து சாயங்காலம் நானும், சார் வொய்ஃப் கோவிலுக்கு போற டைம்க்கு போனேன். அந்த மேடம் ஒரு பெண் சுதந்திரவாதி வேற. ஒரு சொசைட்டில தலைவியா இருக்காங்க”

”அவங்க சாமி கும்பிட்டு உக்காந்ததும், நான் என் ஃப்ரண்ட் கூட அவங்க பக்கத்துல போய் உக்காந்து, நாங்களா பேசுற மாதிரி நமக்குலாம் திறமையை காட்ட இடமே இல்ல” என்றேன். 

என் ஃப்ரண்ட் ”ஏன்டி அப்டி சொல்ற..?” என கேட்கவும் நானும் ”எப்பவும் படிப்பு படிப்புனு போக சொல்றாங்க. அப்றம் எப்டிடி என்ஜாய் பண்ண? நம்மலாம் என்ஜாய் பண்றதே இந்த காலேஜ் லைப்ல தான்.. அதுக்கப்புறம் வேலை, கல்யாணம்னு போய்ரும்.. எதுக்குத்தான் மேக்ஸ் எடுத்தேனு இருக்கு”என்றேன்.

என் ஃப்ரண்ட்”உங்க ஹெச்.ஓ.டி சார் ரொம்ப நல்லமாதிரினு தான சொன்ன?” எனவும், நானும் ”அவர் நல்லவர் தான்.. என்ன பண்ண? அவர் பொண்ணுனா இப்டி பண்ணுவாறா? பொண்ணா பிறந்தாலே இப்டி தான் போல” எனவும், ஹெச்.ஓ.டி மனைவி ”நீங்க எந்த காலேஜ் மா?” என்றார். நான் கல்லூரி பெயரைச் சொன்னதும் அவரும் எதுவும் பேசாமல் கிளம்பிச் சென்றார் என நதி கூறி முடித்தாள்.

”கூட்டி, கழிச்சுப் பாத்தேன். ஹெச்.ஓ.டி ஓகே சொல்லிருவாருனு நினச்சேன். அதே மாதிரி நடந்துருச்சு” என்றாள் நதி.

”பலே ஆளுதாண்டி நீ.. எப்டியோ நம்ம தலயோட மெயின் சுவிட்ச்ல கை வச்சு அவர ஒத்துக்க வச்சுட்ட..” என ராதா கூறவும், ”அடுத்து நம்ம புரோகிராம் எப்டி இருக்கனும்னு டிஸ்கஸ் பண்ணலாம் வாங்கடி” என அன்றைய நாள் விறுவிறுப்பாக சென்றது.

ஃப்ரசர்ஸ் டேக்கு பர்மிஷன் வாங்கியதால் நதியின் மேல் ஒரு தனி மதிப்பு அனைவருக்கும் வந்தது. 

ஒரு வாரம் சென்று இரவு அனைத்து வேலைகளையும் முடித்து, தூங்க சென்ற நேரம் நதி தன் லேப்டாப்பில் முகநூலை திறந்து அனைத்து பதிவுகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது நண்பர்கள் பரிந்துரை வரிசையில் லவ்லி வினோ என இருந்தது. 

அட நம்ம சீனியர் கிரஷ்.. சே சே வளர்ந்த கிரஷ்… கிரஷ்ஷீ அவ்ளோ தான். இனி இவன் நமக்கு கிரஷ் மட்டும் தான். 

அவளுக்கு தெரிந்தவர்கள் பலர் அவனுடன் மியூசுவல் ஃப்ரண்ட் ஆக இருந்தனர்.

சும்மா அவன் பொரபைலை என்ன வச்சுருக்கான்னு பாப்போம் என நினைத்து அதை திறந்து பார்த்தாள். 

எல்லாம் அவன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களே அதிகம் இருந்தது. கடைசியாக ஃப்ரசர்ஸ் டேயில் அவன் பெர்பார்ம் செய்த புகைப்படங்களை பதிவேற்றியிருந்தான்.

பார்க்க பார்க்க பிடிக்கத்தான் செய்தது நதிக்கு. அவன் ஆன்லைனில் இருப்பதாக காட்டியது. பேசலாமா, வேண்டாமா என யோசித்து, சரி நம்ம என்ன ஒரிஜினல் பேரயா வச்சுருக்கோம் (அன்பு என ஐடிக்கு பெயர் வைத்திருந்தாள்- அன்பு என்பது அவள் வகுப்பு ஆசிரியர் – அவரும் அவளுக்கு ஒரு கிரஷ் தான். என்ன அடுத்த வருடம் ரிட்டையர்டு கொஞ்சம் ஓல்டு கிரஷ்). சும்மா பேசி பாப்போம். எப்டி பேசுறானு? என அவனுக்கு ’ஹாய்’ என அனுப்பினாள்.

அவன் ஒரு அரை மணி நேரம் பதில் தரவில்லை. அதன்பிறகு அவனும் ’ஹாய்’ என அனுப்பினான். 

’பரவாயில்ல. கொஞ்சம் நல்ல பையன் தான் போல’ என நினைத்துக் கொண்டாள்.

பேச்சை வளர்க்க நதியே ”உங்க பெர்பாமன்ஸ் பாத்தேன் ஃப்ரஷர்ஸ் டேல. நல்லா இருந்துச்சு.. அதுல இருந்து உங்க ஃபேன் ஆகிட்டேன்” என்றாள் நதி. 

அவனும் ”தேங்க்யூ” என சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பினான்.

அவனைப் பற்றி தெரிந்துக் கொள்ள எண்ணி அவனிடம் இன்னும் பேச்சுக் கொடுத்தாள். 

இவள் ஆண் என நினைத்து அவனும் ப்ரோ எனவே பேசிக் கொண்டிருந்தான். 

அவன் அம்மா, அப்பா இருவரும் இதே ஊரில் ஐஸ்லேண்ட் வைத்துள்ளனர். அம்மா பெயர் முத்து, அப்பா பெயர் ராஜ். அவனுக்கு ஒரு சகோதரர் உள்ளார். அவர் தற்போது எம்.டெக் படித்துக் கொண்டிருக்கிறார். சகோதரர் பெயர் பூபதி. 

பள்ளி, கல்லூரி எல்லாம் உள்ளூரிலேயே தான் இவன் படிக்கிறான். அவன் தந்தையைப் போல் ஒரு நல்ல தொழில் தொடங்கி, சிறப்பான தொழிலதிபர் ஆவது தான் இவன் விருப்பம் என்பது வரை இரவு 1 மணி வரை நிறைய தெரிந்து கொண்டாள்.

நதிக்கு அவனை பிடித்திருந்தது. காதலா என்றால் சொல்ல தெரியவில்லை. அவளுக்கு பெரிய ஆசை எதுவும் இல்லை. நன்கு படித்து சில வருடம் வேலை பார்த்து பெற்றோருக்கு என இவள் வருமானத்தில் செய்யவேண்டும் அவ்வளவே.

அவளுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆசையே கல்யாணத்திற்குப் பின் கணவன் வேலைக்கு சென்றதும், சாப்பிட்டு நன்றாக தூங்க வேண்டும். வாழ்நாளில் ஒரு நாளிலாவது இது நடந்து விட வேண்டும் என்பதே அவள் கனவு. பொறுத்திருந்து பார்ப்போம். 

மறுநாள் கல்லூரிக்கு 8 மணிக்கே சென்று விட்டாள். ஃப்ரசர்ஸ் டேக்கு நடன நிகழ்ச்சிக்கு ப்ராக்டீஸ் செய்ய சென்று விட்டாள். அவன் வகுப்பறையை தாண்டி செல்கையில் வகுப்பில் அவன் இல்லை. ஒரு வேலை அவன் விடுமுறையோ என நினைத்துக்கொண்டாள். அப்டி எதுவும் நேத்து சொல்லலயே என அவள் யோசித்து அவள் வேலையை பார்க்கையில் 8.30க்கு கல்லூரிக்குள் வந்தான். அவனைப் பார்த்ததும் நதியோ மனதிற்குள் ’அடப்பாவி! நீ ஒரு நாள் லேட் கம்மர் இல்லையா? டெய்லி லேட் கம்மர்ரா..’ என எண்ணிக்கொண்டாள். ‘எரும விடிய விடிய ஆன்லைன்ல இருந்தா எப்டி சீக்கிரம் வர முடியும்’ எனவும் நினைத்துக் கொண்டாள். 

அதன்பிறகு அவள் அவனுடன் பேசவில்லை. நேரமில்லை என்றே சொல்லலாம். காலையில் சீக்கிரம் செல்ல வேண்டி இரவு இவள் விரைவாகவே தூங்குவதால் முகநூல் பக்கம் செல்லவில்லை. இருப்பினும் தினமும் அவனை கல்லூரியில் தேடுவாள்.  

அடுத்தடுத்த நாட்களும் அவன் தாமதமாக வருவதே தொடர வார இறுதியில் மதிய நேரம் டிபார்மெண்ட்டில் வினோதனும், அவனுடன் இருவரும் நின்று கொண்டிருந்தனர். 

மேக்ஸ் ஹெச்.ஓ.டி தான் வைஸ் பிரின்ஸிபில், கணினி மற்றும் மேக்ஸ் ஸ்டாஃப்ஸ் இருதுறைக்கும் ஒரே அறைதான். 

நதியும் மாதிரி வினாத்தாள் எடுக்க துறைக்கு சென்றாள். அப்போது அவர்கள் நிற்பதை பார்த்து, அவளும் பொறுமையாகவே வினாத்தாட்களைப் புரட்டிக் கொண்டிருந்தாள். 

தினமும் தாமதமாக வருவதால் வைஸ் பிரின்ஸிபில் அவர்களை திட்டிக் கொண்டிருந்தார். ”இனியும் லேட்டா வந்தா பேரண்ஸ்ஸ வரச் சொல்லிருவோம். இது தான் பைனல் வார்னிங்.. கிளம்புங்க” எனக் கூறினார். அவர்களும் சரி என்று கூட கூறாமல் கிளம்பினர். 

”இப்ப இருக்குற பசங்களுக்கு பயமே இல்ல சார்.. இவ்ளோ சொல்றிங்க கொஞ்சமாச்சும் வாயத்திறந்து பேசுறாங்கலா பாருங்க” என கணினித்துறை ஆசிரியர் ஒருவர் கூற, ”இளரத்தம் அப்டி தான் சார் இருக்கும்.. அதான் சார் சொல்லிடாருல இனி இப்டி பண்ண மாட்டாங்க” என கணினித்துறை ஹெச்.ஓ.டி அவர்களுக்கு பரிந்து பேசினார்.      

நதியும் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து விட்டாள். ’எதுக்கு இப்படி எல்லார்டயும் ஏச்சு, பேச்சு வாங்கனும். பேசாம சீக்கிரம் வந்துரலாம்ல’ என நினைத்துக் கொண்டு அவனிடம் இன்று பேச வேண்டும் என நினைத்துக்கொண்டாள். 

அன்று இரவு அவனுக்கு முகநூலில் செய்தி அனுப்பினாள். ”தேவையில்லாம எதுக்கு திட்டு வாங்கனும். இனி சீக்கிரம் வாங்க காலேஜ்க்கு” என அனுப்பினாள்.

”நீங்களும் பாத்திங்களா ப்ரோ.. நானும் ட்ரை பண்றேன். சீக்கிரம் எந்திக்க முடியல.. பழகிருச்சு ப்ரோ.. திட்டு வாங்குறது எனக்கு புதுசு இல்ல” என்றான்.

”அய்யோ, ப்ரோ ப்ரோ – னு சொல்லாதிங்க.. கடுப்பா இருக்கு” என்றாள் நதி.  

”அப்றம் அன்புனு பேர் சொல்லி கூப்டவா தம்பி?” என்றான் அவன். 

“நான் ஒன்னும் தம்பி இல்ல..” என்றாள் நதி.

”அப்ப அண்ணாவா?” என்றான் அவன்.

”நான் அண்ணனும் இல்ல. தம்பியும் இல்ல. நான் பொண்ணு.. என்னை பேர் சொல்லியே கூப்டுங்க..” என்றாள் அவள். 

அவனிடமிருந்து அடுத்து எந்த பதிலும் இல்லை. ’ஒரு வேளை தப்பா நினச்சுட்டானோ?’ என இவள் நினைக்க சிறிது நேரத்திற்கு பின் அவனே, ”அன்புன்னு பையனுக்கு தான் வப்பாங்கனு நினச்சுட்டேன்.முதல்லயே சொல்லிருக்கலாம்ல பொண்ணுனு” என்றான்.

”நான் பொண்ணு தான். ஆனா என் பேரு. அன்பு இல்ல” என்றாள்.

“உண்மையச் சொல்லு.. நீ எந்த டிபார்ட்மென்ண்ட்?” என்றான்.

”நான் மேக்ஸ்.. முதல் வருடம் தான்.. பேர் மட்டும் இப்ப சொல்ல மாட்டேன்.” என்றாள்.

”டேய்.. எவண்டா அது என்ன கலாய்க்கிறது? நீ என் ஸ்கூல் ஃப்ரண்ட்டா? காலேஜ் ஃப்ரண்ட்டா? உண்மையச் சொல்லு” என்றான்.

’இது என்னடி நதி உனக்கு வந்த சோதன’ என நினைத்துக்கொண்டு,

”ஏங்க நிஜமா நம்புங்க.. நான் பொண்ணு தான்.. உங்க ஃப்ரண்ட்ஸ் இப்டியா பேசுவாங்க?” என்றாள்.

”அதுவும் சரி தான்.. என் ஃப்ரண்ஸ் எவனும் இவ்ளோ டீசண்டா பேச மாட்டாங்க தான்…” என் அவன் கூறவும்,

”ஏன் உங்க கிளாஸ் பொண்ணுங்கட்ட நீங்க பேசுவிங்கல்ல” என்று அவள் கேட்கவும், 

”நாங்களா தான் பேசுவோம்.. ஒரு பொண்ணு வந்து அதுவே பேசுறப்ப சந்தேகம் வருதுங்க.” என்றான்.

”ஓகே ஓகே இனி நீங்களும் நானும் ஃப்ரண்ட்ஸ் ஓகே?” என்றாள் நதி.

”ஓகே தான்.. ஆனா இன்னும் உங்க நேம் சொல்லலயே?” என்றான் அவன்.

”ஒரு விடுகதை சொல்றேன். கண்டு பிடிங்க பாக்கலாம். ’கடலோடு கலப்பேன் நான்.. ருசிப்பதிலும் இனிப்பேன் நான்.. உலகில் பல இடங்களில் இருக்கும் என் ஓட்டம் நின்றால் உயிரணுவும் இருக்காது.. நான் யார்??’ இதுக்கான பதில் தான் என் பேர்… இத கண்டுபிடிங்க நாளைக்கு பேசலாம்.. நாளைக்கு எங்களுக்கு ஃப்ரஷர்ச்ஸ் டே செலிபிரேஷன் அதுல நானும் பார்டிசிபேட் பண்றேன் வந்துருங்க… குட் நைட்” என நதி தூங்கச் சென்றாள்.

வினோதனோ ‘இத கண்டுபிடிக்கிறதா கஷ்டம்.. இவ நம்மல மக்குனு நினச்சுட்டாளோ’ என மனதுக்குள் சிரித்துக் கொண்டான். நாளை கல்லூரியில் அவளை நேரில் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!