Skip to content
Post Views: 5,229
கலையரசி! நல்ல கருப்பழகி! ஸ்லிம் பியூட்டி!
நல்ல திருத்தமான களையான முகம்! கொஞ்சம் வசதி குறைவான வீட்டுப் பெண்!
நன்றாகவே படிப்பாள். பிளஸ்டூ டூவில் நல்ல மார்க் எடுத்துருக்க, அவள் ஊர்த்தலைவர் உதவியில் நர்சிங் படித்து இருந்தாள்.
பார்த்தி, தான் திருமணம் செய்ய நினைத்து பேசி வைத்திருந்த கவர்மென்ட் நர்ஸ் பெண்ணின் தோழி!
Advertisement
ஆனால் அவளை விட நல்ல அழகாக இருந்தாள் கலையரசி!
இருவரையும் ஒன்றாகப் பார்த்த போது, அவசரப்பட்டு அந்த பெண்ணிடம் பேசி விட்டோமே என்றுதான் முதலில் நினைத்தான்.
ஆனால், கலையரசி தனியார் நிறுவனத்தில் நர்சிங் படித்து இருந்ததால், அவளுக்கு கவர்மென்ட் வேலை கிடைக்க வாய்ப்புகள் குறைவு!
Advertisement
எனவே அந்த எண்ணத்தை விட்டு விட்டான்!
Advertisement
ஹாய்! யாரிந்த கருப்பு திரிஷா ? அவன் முதல் அறிமுகத்திலேயே நன்றாகவே ஐஸ் வைத்தான் பார்த்தி!
அவளுக்கோ அப்படியே உச்சிக் குளிர்ந்து போய் விட்டது!
பார்த்தி மாதிரி கொஞ்சம் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும், கொஞ்சம் ஸ்டைலான ஆள் தன்னைப் பார்த்து இப்படி சொன்ன போது அவளுக்கு!
Advertisement
“தேங்க்ஸ்ண்ணா!” அவள் சிரித்தாள் பெருமையாக.
அவளுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்று அறிந்து,
“நான் ஒரு ஹாஸ்பிட்டலில் வேலைக்கு சேர்த்து விடுறேன்ம்மா!
அந்த ஹாஸ்பிட்டல் JMD என் க்ளோஸ் பிரன்ட் தான்! ஆனா என்ன யோசிக்கிறேன்னா, அவனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகல, உன்னை அவன் பார்த்து மயங்கி கல்யாணம் பண்ணிப்பானோன்னு கொஞ்சம் பயமா இருக்கு!”
“ஏம்மா அப்படி ஏதும் நடந்து, நீயே எனக்கு முதலாளி அம்மா ஆகிட்டன்னா, உன்னை வேலைக்கு சேர்த்து விட்ட இந்த அண்ணனை மறந்துட மாட்டியே? ஏன்னா என் பொழப்பு அங்க தான்! நான் தான் அங்க கேண்டீன் வச்சுருக்கேன்!”
“போங்கண்ணா” அவள் வெட்கப்பட்டாள்!
அதன் பின் அவளை ரகுவிடம் ரெகமன்ட் செய்து, வேலைக்கு சேர்த்து விட்டான். வைஷு கூட வேலை செய்யும்படி!
“ஏன் அண்ணா? அந்த ரகு டாக்டர் வார்டில் வேலை செய்தால் தானே அவர் தினமும் என்னைப் பார்ப்பார்?”
“இல்ல இங்க வைஷு தான் எல்லாம்! அவள் சொல்லும் பெண்ணை தான் அவன் கல்யாணம் செய்வான்!
அவங்க ரெண்டு பேரும் திக் பிரண்ட்ஸ்! நீ என் ஆளுன்னு தெரிஞ்சா, அந்த வைஷு உன்னை வேலைக்கே சேர்க்க மாட்டாள்!
நீ எங்கயும் என்னை தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே! அப்புறம் உன் வேலையில் நீ கரெக்டா இருந்து, வைஷுவின் குட் புக்கில் இடம் பிடிக்கணும்!
அப்ப தான் நாம நினச்சது நடக்கும்!”
பார்த்தி, வைஷுவின் இடத்தில் தனது ஆள் ஒருத்தர் இருக்கணும்னு நினைச்சு, கலையரசியை மூளை சலவை செய்து வைத்து இருந்தான்.
அவன் கேண்டீன் காண்ட்ராக்ட் கை விட்டு போன போது, கலையரசியும் வேலையை விடுவதாக சொன்ன போது, அவளைத் தடுத்து, தான் சீக்கிரமே திரும்பி வந்துவிடுவேன் என்றே சொல்லியிருந்தான்!
ஆனால், அவனே எதிர்பார்க்காத ஒன்று, ரகு-மதுவின் திருமணம்!
எவ்வளவோ பேசி ரகுவின் மனதை குழப்பி விட்டிருந்தும், அந்த வைஷு அவனை தெளிய வைத்து, அவர்கள் கல்யாணத்தையும் நடத்தியே விட்டாள்!
இருந்தாலும் விடாக் கொண்டனாக, அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க விடாமல், மேலும் தான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி, அதோடு, அந்த ரகுவே, “ஆமாம் நான் மது புருஷன்னு சொல்லிக்கிறதுல பெருமைப் படுறேன்” என்று சொன்ன பிறகு, இனி அவன் எப்பவுமே வேலைக்கு ஆக மாட்டான் என்று பார்த்தி விலகிப் போய்விட்டிருந்தான்!
ஆனால் அன்று கோவிலில் வைத்து நிறைமாத கர்ப்பிணியாக மதுவைப் பார்த்த போது, அவனுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது!
இப்படி வந்த கொஞ்ச நாளில், ரகுவின் வாழ்க்கையில் நுழைந்து, தனது இத்தனை வருட பழக்கத்தை ஒரேடியாக முடித்து வைத்து விட்ட அவள் மீது அவனுக்கு பயங்கர கோபம் வந்தது!
எதையும் அப்படியே விட்டு விட்டால் அவன் பார்த்தி கிடையாதே!
எண்ணங்கள் சரியில்லாவிட்டாலும் கூட, பார்த்தியின் இந்த விடாமுயற்சி குணத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்!
ஆனால் அதை அவன் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதில்லை! ஊர்க் குடியை கெடுக்கவே பயன்படுத்துகிறான்!
இன்னும் ஏதும் தனக்கு சான்ஸ் இருக்கான்னு தெரிஞ்சுக்கவே அவன் கலையரசியை அழைத்தான்!
“சொல்லுங்கண்ணா” என்ற அவளிடம், “நீ இன்னும் வைஷு கூட அவள் வார்டில் தானே இருக்கே?”
“ஆமாண்ணா”
“அந்த மது செக்கப் வரும்போது நீயும் இருப்பியா?’
“ஆமாம், பெரும்பாலும் நான் தான் இருப்பேன்! ஏன் கேக்குறீங்க?’
“அவளுக்கு ஏதாவது காம்ப்ளிகேசன்ஸ் இருக்கா அவ பிள்ளை பெத்துக்கிறதுல?”
“அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லை! நல்ல ஹெல்தியா இருக்கா! குடும்பமே டாக்டர் குடும்பம்! ரொம்ப கேர்புல்லா பார்த்துக்கிறாங்க!
வைஷு மேடம் ரொம்ப கேரிங்கா பார்த்துகிறாங்க! வீட்டுல அதுக்கு மேல! தரையில நடக்க விடுறது இல்ல!
அதெல்லாம் ரொம்ப நல்லா தான் இருக்கா” அவள் பல்லை கடித்துக் கொண்டு சொன்னாள்.
மது வரும்வரை, அவள் தான் அந்த ஹாஸ்பிட்டலில் அழகி! கிட்டத்தட்ட எல்லா ஆண்கள் ஜொள்ளு விட்டும், பெண்கள் கூட பாராட்டியும் வந்தார்கள்.
இந்த மது வந்த பிறகு எல்லோரும் அவள் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்!
உண்மையில் மதுவின் அக அழகே அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.
மது எல்லோருக்கும் மனதார, அக்கறையோடும் அன்போடும் சாப்பாடு போட்டுக் கொண்டு இருப்பவள்!
எல்லோரிடமும் அக்கறையும் பிரியமும் வைத்து இருப்பவள் ஸ்டேட்டஸ் பார்க்காது!
அவளின் திருமணத்திற்கு முன்பும் பின்பும் ஒரே மாதிரியாகவே!
அது இந்த கலையரசியின் பொறாமை குணம் அறியவில்லை!
“ஒண்ணுக் கூடவா இல்ல, நல்லா யோசிச்சு சொல்லு கலை!”
“ம்ம். ஒரு விஷயம் வேணுமின்னா சொல்லலாம்! அந்த மதுவுக்கு கொஞ்சம் பிரசவம் நல்லா படியா முடியனும்னு கொஞ்சம் பயம் பதட்டம் இருக்கு!
இப்படி பயப்பட்டு, BP ஐ ஏத்திக்காதே, அதான், நான் உன் கூடவே இருக்கேனே மது, ஏன் பயப்படுறன்னு அடிக்கடி வைஷு மேடம் அட்வைஸ் பண்ணுவாங்க!”
“அப்ப மதுவுக்கு அந்த பயம் பிரச்சினை இருக்கு? பயந்துகிட்டே இருந்து அவள் BP ஏறினா, அவளுக்கு பிரச்சினையாகுமா?”
“ஆமா டெலிவரி டைம் நெருங்கும் போது இப்படி BP ஏறும் என்றாலும், ரொம்ப ஆகி விட்டால், பிரச்சினை தான்!”
“அப்ப ஏத்திவிட்டுவோம்!” என்றான் பார்த்தி குரூரமாக!
“நீ அவள் டெலிவரிக்கு அட்மிட் ஆனவுடனே எனக்கு போன் பண்ணு, அப்ப நான் உனக்கு சொல்றதை செய்!” போனை வைத்து விட்டான் பார்த்தி!
————————-
மது, அவர்கள் ரூமில் ரகுவின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தாள்.
ஆடியோவில் அறையில் காதுக்கு இதமான இளையராஜா மெலடி சாங்க்ஸ்!
மதுவுக்குள் இப்போதெல்லாம் கொஞ்ச நாட்களாக தேவையில்லாத பயங்கள்!
சுற்றிலும் அன்புள்ளங்கள்! ரகுவின் பெரியப்பா, அண்ணன் ராகவன், அக்கா ராகினி, மாமனார் ராமநாதன், ரகுவின் அத்தைக் குடும்பம், உடன் பிறப்புகள், அவளின் கேண்டீன் ஊழியர்கள், ஹாஸ்பிட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட நலம் விரும்பிகள் அவளைச்சுற்றி!
சொந்த தங்கையாகவே எண்ணும் ஓரகத்தி! அவளின் அக்கறையான மருத்துவ கண்காணிப்பு!
பாட்டி மற்றும் ராஜுவின் அம்மாவின் சீராட்டல்கள்!
எல்லாவற்றையும் விட ரகுவின் பேரன்பு!
எல்லாம் இருந்தும், அவளுக்கு ஒரு பயம்!
கடவுள் எதையும் நமக்கு அவ்வளவு ஈசியா கிடைக்க விட மாட்டாரே!
எப்பவும் தலையில் குட்டி, கன்னத்தை திருகி கண்களில் கண்ணீர் வர வைத்து பின் தானே எந்த சந்தோசத்தையும் கொடுப்பார் இந்த கடவுள் எனக்கு!
ஏன் அவ்வளவு காதலித்து கல்யாணம் செய்து கூட உடனே அவளால் இனிய வாழ்க்கையை தொடங்க முடியவில்லையே! கொஞ்சம் அழுத பின் தானே கிடைத்தது! இப்போது மட்டும் உடனே கிடைத்து விடுமா என்பது போன்ற வீண் கற்பனைகளாலும் பயத்தாலும் அவ்வபோது அவளுக்கு BP ஏறி வந்தது.
மேலும் எல்லா பெண்களுக்கும் இருப்பது போன்ற முதல் பிரசவ பயம் வேறு!
வைஷு மதுவைக் கவனித்து விட்டு சொன்னாள்.
“ப்ளீஸ் மது, யாரோட டெலிவரி எக்ஸ்பீரியன்சையும் நீ கேட்டுக்காதே, உன்னோடத மட்டும் நினை. ஒவ்வொருத்தர் ஒவ்வொன்னு சொல்லி உன்னை பயமுறுத்துவாங்க!”
“அதே மாதிரி இந்த YouTube பார்த்து, இல்லன்னா தேவையில்லாத நெகடிவ் சினிமா பார்த்துட்டு இருக்காம, பாசிடிவ் தாட்ஸ் வளர்த்துக்கோ மது!
டேய் அவ போன்ல என்ன பாக்குறான்னு கூட நீ வாட்ச் பண்ண மாட்டியா” என்று ரகுவையும் திட்டுவாள்.
“ஏங்க என் போனை புடுங்குறீங்க?” மது அவன் மடியில் படுத்துக் கொண்டே போனை நோண்டிக் கொண்டிருந்தவள் கத்தினாள்!
“பின்னே உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன், Don’t Google for Symptomsன்னு!
நான் என் பேசன்ட்களையே திட்டிட்டு இருக்கேன், இங்க ஏன் பொண்டாட்டியே அந்த வேலைய செய்றா!
ஏண்டி நாங்க வீட்டுல இத்தனை டாக்டர் இருக்கோம், நீ எதுக்கு இப்படி கண்டதையும் பார்த்துட்டு பேனிக் ஆற!
இதுல ராசி பலன் வேறே! இனிமே இந்த மாதிரி எதாவது பார்த்த, அப்புறம் போனை புடுங்கி விட்டேறிஞ்சுடுவேன் பார்த்துக்கோ!”
ரகு அவளை திட்டி, போனை வாங்கி வைத்தான்!
“ஏய் உனக்கு ஒண்ணுமில்லடி, நீ ரொம்ப ஹெல்த்தியா இருக்க, மில்லெட் மதுமிதான்னா சும்மாவா?
நல்லா ஹெல்தியா இருக்கீங்க நீயும் என் பொண்ணும்! அதும் இல்லாம டாக்டர் ரகுநந்தன் அவன் பொண்ணையும் பொண்டாட்டியையும் அப்படி விட்டுடுவானா? ரகு அவளைக் கட்டிக் கொண்டு சொன்னான்!
“அதென்ன பொண்ணு பொண்ணுன்னு சொல்றீங்க? அது பையன் தான்! எனக்கு குட்டி நந்து தான் வேணும்!”
“ஓ! அப்ப சரி, பையன்னே வச்சுப்போம்! டேய் மவனே உங்கம்மா தேவையில்லாத விசயங்கள யோசிச்சு, உடம்பை கெடுத்துக்கிறா, என்னன்னு கேளுடா அவள!”
ரகு சொன்னவுடன், ஆச்சர்யமாக மதுவின் வயிற்றில் குழந்தை புழங்கியது!
“என்ன இப்பவே உங்க பையன கன்ட்ரோல்ல எடுக்கிறீங்களா?”
“டேய் பையா, நீ வந்தவுடன் அம்மா பிள்ளையா தான் இருக்கணும்,உங்கப்பா மாதிரி!”
ரகு இப்படி அவள் மூடை அவ்வபோது நல்லபடியாக பார்த்துக் கொண்டாலும், தனியே கொஞ்சம் நேரம் இருந்தாலும் அவளுக்குள் யோசனைகள் வந்துவிடும்.
அதனால் அவள் கூடவே தன்வி குட்டியோ, தாரிகாவோ, அல்லது பெரியப்பாவோ இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்!
வேலைக்காரர்கள் யாரும் அவர்கள் பிள்ளைப்பேறு கதைகளை அவளிடம் சொல்லக் கூடாது என்றும் சொல்லியிருந்தார்கள்!
இப்படியாக மதுவை ரொம்ப ஜாக்கிரதையாகவே பார்த்துக் கொண்டார்கள் ரகுவும் வைஷுவும்!
————–
மதுவின் பிரசவ நாள்.
அவளுக்கு லேசாக வலி தொடங்கிய போதே ஹாஸ்பிட்டல் கூட்டி சென்று விட்டான் ரகு!
அவனுடன் நடந்து தான் சென்றாள் மது!
வைஷு தன் உதவி ஆட்களோடு வந்து அவளை செக் செய்து விட்டு பிரசவ வலி வர ஊசிப் போட்டு விட்டு, வலி வருவதற்கு காத்திருந்தாள்.
அதற்குள் அவளுக்கு வேறு ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்து விட , மதுவை ரெண்டு நர்ஸ்களிடம் பார்த்துக்க சொல்லி விட்டு அதை அட்டென்ட் செய்யப் போனாள்!
வெளியே ரகு, ராஜு, அவன் அம்மா, எல்லோரும் காத்து இருந்தனர்!
இப்போது உள்ளே நுழைந்தாள் வேண்டுமென்றே அந்த டூட்டியைக் கேட்டு வாங்கி வந்திருந்த கலையரசி!
மதுவைப் பார்த்துக் கொள்ள சொல்லியிருந்த ரெண்டு நர்ஸ்களில் அவளும் ஒருத்தி!
மெல்ல வெளியே போய் வைஷு வர எவ்வளவு நேரம் ஆகும் என்று விசாரித்து விட்டு வந்திருந்தாள்.
வைஷு அட்டென்ட் பண்ணிக் கொண்டிருந்த அந்த பெண்ணின் குழந்தை பனிக்குட நீரைக் குடித்துவிட்டு மூச்சு திணறல் ஏற்பட்டதால், அந்த பெண்ணிற்கு எமர்ஜென்சியாக சிசேரியன் செய்ய வேண்டியதாகிவிட்டது!
வைஷு வருவதற்குள் மதுவை ஏதாவது செய்ய வேண்டும்!
அவள் பார்த்திக்கு போன் செய்துக் கேட்டாள்.
“வைஷு இப்ப எங்க?”
“அவங்க இன்னொரு எமர்ஜென்சி கேஸ் பார்த்துட்டு இருக்காங்க!”
“என்ன எமர்ஜென்சி?”
அவள் சொன்னாள்.
“அப்ப ஒண்ணு பண்ணு! அந்த எமர்ஜென்சி இப்ப மதுவுக்கு வந்துவிட்டதுன்னு அவ காது பட பேசு! அதக் கேட்டு அவளுக்கு பயம் வரட்டும்! பயம் வந்து BP நல்லா ஏறட்டும்! இப்ப BP ஏறினா ரிஸ்க் தானே!”
“ஆமாண்ணா ரொம்ப ரிஸ்க் தான்!”
“அப்ப நான் சொல்ற மாதிரி பேசு, யார்கிட்டயோ போன்ல பேசுற மாதிரி!”
“அண்ணா, எனக்கு பயமா இருக்கு! யாராவது பார்த்துட்டா?”
“அங்க கேமரா இருக்கா?”
“இல்ல!”
“அப்புறம் என்ன?”
“கூட இன்னொரு நர்ஸ் இருக்காளே!”
“அவள் பேரு, போன் நம்பர் குடு, கொஞ்ச நேரம் அவள நான் அங்க இருந்து வெளியே வர வைக்கிறேன்!”
“ரகு டாக்டர் வேற பக்கத்துல தான் இருக்கார்.”
“அவன் லேபர் ரூமுக்கு வெளியே தானே இருக்கான்! நீ உள்ளே போய் தானே பேசப் போறே? பேசு!” அவன் பேச வேண்டியதை சொன்னான்!
கலையரசி உள்ளே போனாள்.
பார்த்தி சொன்னபடியே கூட இருந்த நர்ஸ் பெண்ணின் போனுக்கு கால் வந்தது. அவள் பையன் படிக்கும் பள்ளியில் இருந்து கூப்பிடுவதாக சொல்லி!
ஆனால் அவர்களுக்கு சரியாக சிக்னல் கிடைக்கவில்லையாம் கொஞ்சம் வெளியே வந்து பேசும்படி சொல்ல, கலையரசியிடம் கொஞ்ச நேரம் பார்த்துக்கங்க என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
வெளியே ரகுவுக்கும் ராஜுவுக்கும் கூட போன் வந்திருக்க அவர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
ரகுவுக்கு ராகினியிடம் இருந்தும், ராஜுவுக்கு மாதுவிடம் இருந்தும் போன்!
ராஜுவின் அம்மாவோ கண் மூடி சுலோகம் சொல்லிக் கொண்டு இருந்தார். பாட்டியை வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்தார்கள்.
கலையரசி ரொம்ப சரியாக அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வெறும் போனை காதில் வைத்துக் கொண்டு.
“அம்மா, இங்க முக்கியமான கேஸ்ம்மா, அதான் காலையிலேயே சொன்னேனே! எங்க முதலாளியம்மா மதுவோவோட டெலிவெரி! வைஷு டாக்டர்க்கு நான் இருந்தா தான் கொஞ்சம் வசதி!
ம்ம். இல்லம்மா அவங்க கொஞ்சம் கிரிடிக்கல் தான்! பேபிக்கு கொஞ்சம் மூச்சு திணறலா இருக்கு! ஹார்ட் பீட் கொஞ்சம் குறைஞ்சுட்டு வருது! வைஷு டாக்டர் வேற வேறே ஒரு கேஸ்ல இப்ப இருக்காங்க, என் கூட இருந்த நர்ஸ் இப்ப தான் அவங்கள கூப்பிட வெளியே அவசரமா போய் இருக்காங்க. சரிம்மா நான் வைக்குறேன். நான் மது மேடத்தை பார்க்கணும்! அவங்களுக்காக நீ கொஞ்சம் வேண்டிக்கம்மா!”
மது காதில் விழும்படி பேசினாள் கலையரசி!
அதைக் கேட்டுக் கொண்டிருந்த மதுவிற்கு பயம் உச்சக் கட்டத்திற்கு போனது! “ஐயோ ஹார்ட் பீட் குறையுதா! என்ன பேசிக்கிறாங்க இவங்க? இவங்க சொல்றது என்னைத் தானா?”
அவள் ப்ளட் பிரஷர் கன்னா பின்னாவென்று எகிறியது!
அதற்குள் வெளியே சென்றிருந்த மற்றொரு நர்ஸ் வந்து, அவளுக்கு ஏதோ ஒரு உந்துதலால், மதுவின் BP யை பார்த்து விட்டு பதறி வைஷுவை அழைக்க ஓடினாள்.
அவள் ஓடுவதைப் பார்த்து விட்ட ரகு மதுவிடம் விரைந்து சென்றான்!
error: Content is protected !!