Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தட்றோம் தூக்றோம்

தூக்றோம் – 6

நால்வரும் வட்ட மேஜை மாநாட்டைப் போல அந்த கோணிப்பையில் பாதி, மண் தரையில் பாதி என மயங்கிக் கிடைத்த பெண்ணை பார்த்துக்கொண்டே இருந்தனர். எப்படி பெண்ணை மாற்றித் தூக்கினான் என்று சத்தியமாக ப்ரேமுக்கு புரியவில்லை.

“சிவா, டேய்…. நிஜமா அந்த ரூம்ல யமுனா தான் இருந்தாளா?” மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக்கொள்ளக் கேட்டான் ப்ரேம்.

“அட அவன் தான் சொல்றான்ல. அது யமுனா தான்னு அவனும் பாத்துருக்கான். நீ தான் ஒழுங்கா பாக்காம தூக்கிட்ட” ப்ரேமை பார்த்து குற்றம் சாட்டினான் கார்த்தி.

“ஆனா நான் போனப்ப அந்த ரூம்ல இந்த பொண்ணு மட்டும் தான் இருந்துச்சு அதுவும் எனக்கு ஆப்போசிட்டா திரும்பி நின்னுச்சு” தன்னிலையை விலக்கினான் ப்ரேம்.



Advertisement

“விடு இந்த பொண்ணும் இருந்திருக்கும், ஒரு வேளை யமுனா டாய்லெட் போயிருக்கும். இப்ப என்ன பண்றது அத யோசிங்க” என்றான் ஹரி, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து.

“இந்த பொண்ண அப்டியே விட்டுட்டு போய்டலாமா?” கேவலமான பயத்துடன் கேட்டான் சிவா.

“மவனே நமக்கு ஒண்ணுமில்ல, நமக்கு சோறு போட்டு தங்க இடமும் குடுத்தாங்க பாரு, முத்து அண்ணே… இது தான் நாம அவருக்கு செய்ற பதிலுதவியா? அவரை தான் இந்த பொண்ணு இருக்குறது தெரிஞ்சு வச்சு செய்வாங்க. இந்த பொண்ணோட லைப் யோசிச்சு பாரு, எவனோ கடத்திட்டு போய்ட்டாங்கன்னு தெரிஞ்சா டோட்டல் டேமேஜ் தான்”

Advertisement

ப்ரேமின் பேச்சிற்கு தலையை தலையை ஆட்டிக்கொண்டிருந்த கார்த்தி, “கரெக்ட்டு… இது என்ன சின்ன புள்ள தனமா விட்டுட்டு போய்கிட்டு? வயசாகுது ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி வேணாம்? நான் சொல்றேன், நீ பேசாம இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ. இல்லனா நம்ம கூட்டத்துல யாராவது பெரிய மனசு பண்ணி, இந்த பொண்ண கல்யாணம் பண்ணிட்டு எங்கையாவது ஓடி போய்டலாம்” என்றான் பெரிய மனதுடன்.

Advertisement

அவனின் எண்ணத்தைப் புரிந்த ஹரி, விளையாட்டாக அவன் தலையில் ஒரு தட்டு தட்டி, “போடா அங்குட்டு, கல்யாணம் பண்ண ஆசை இருந்தா உன் அம்மா கிட்ட சொல்லு” மற்றவர்களிடம் திரும்பி, “இப்ப கூட ஒண்ணுமில்ல, நாம வந்து கால் மணி நேரம் தான் ஆகுது. கூட்டிட்டு வந்த மாதிரியே போய் விட்ரலாம். ப்ராப்லம் சால்வ்ட். கிளம்புங்க” என்று மூவரையும் கிளப்பி வீட்டிற்குள் எவருக்கும் சந்தேகம் வராமல் பார்த்துக்கொண்டான்.

வீட்டினுள் நுழைந்தவர்களுக்கு உடனே தெரிந்தது அந்த பெண்ணை இன்னும் எவரும் தேடவில்லை என்று.

“ஏண்டா ஒருவேளை பொண்ணு வேலைக்காரியா இருக்குமோ? இங்க எவனும் தேட மாட்டிக்கிறாய்ங்களே” சந்தேகமாய் நண்பர்களை பார்த்து கேட்டான் கார்த்தி.

Advertisement

“ஏன் வேலைகாரினா போய் மசால் அரைக்க போறியா? மூடிட்டு மூட்டையை தூக்குடா என் வென்று” ப்ரேமின் கோவத்திற்கு ஆளாக விரும்பாமல் வேகமாக சிரமப்பட்டு அந்த மூட்டையை தூங்கிக்கொண்டிருந்த நண்பர்களுக்கு நாளாவது கையாக மாறினான் கார்த்தி.

அந்த நேரம் தனக்கு தோன்றியதை ஹரி வாய் விட்டு கேட்டான், “டேய் எனக்கு மட்டும் தான் நாம டெட் பாடிய தூக்குற மாதிரியே பீல் ஆகுதா?” என்று கேட்டு சிரிக்க மற்ற மூவரும் இணைந்து சிரித்துக்கொண்டே நடையை தொடர்ந்தனர்.

“பல்லக்கு எவ்ளோ தூரம் ரெடியா இருக்கு? நான் சார்க்கு ரிப்போர்ட் குடுக்கணும்” என்றான் மாப்பிள்ளையின் பி.எ கையில் ஒரு பெரிய நோட்டும் பேனாவுடனும் வந்து கேட்டான்.

“பல்லக்கா? நாம எங்க அத செஞ்சோம்?” கார்த்தி வேகமாக உளறினான்.

“அதான நாங்க எங்க அத செஞ்சோம்?” சிவாவும் அவனை தொடர்ந்தான்.

இருவரையும் முறைத்த ப்ரேம், “மூட்டையை வச்சிட்டு பேசலாமா?” என்று கீழே இறக்கி வைத்தான்.

“என்ன அவங்க பல்லக்கு செய்யல்லனு சொல்றாங்க? வாங்க என்ன வேலை நடந்துட்டு இருக்குனு காட்டுங்க” கடமையில் கண்ணாய் இருந்தான் பி.எ.

“யோவ் பல்லக்கு என்ன நெனச்ச ஒடனே ரெண்டு குடைய வச்சு மூடுறதா? அதுக்கு பிளானிங் வேணும், டிசைன் வேணும். டிசைன் வெரிபை பண்ணிட்டு ஆஃப்ரூவள் வாங்கி… ப்ராஸஸ் இஸ் லாங் யு க்நொ? (Process is long you know?)” அலுவலகத்தில் செய்யும் அனைத்தையும் இங்கு தன்னுடைய மேனேஜரிடம் கூறுவது போல் ஒப்பித்தான் ஹரி.

“ஆமா டிசைன் இன்னும் வெரிபை ஆகல…” தலையை ஆட்டி ஆட்டி கூறினான் ப்ரேம்.

“பண்ணி வச்சா தான வெரிபை ஆகும்” மெதுவாக பேசுவதாக நினைத்து சத்தமாக பேசிவிட்டான் கார்த்தி.

“என்ன இன்னும் பண்ணலயா? என்ன நாளைக்கு நிச்சயம் இன்னைக்கு பண்ணலன்னு சொல்றிங்க? சார்க்கு தெரிஞ்சா என் மேல தான்யா காயிவாறு”

“நாங்க அனுப்புனத்தே உங்க சார்க்கு தானே” மூவரும் திரும்பி கார்த்தியை வெட்டும் பார்வை பார்த்தனர். கூறிய பொய்கள் போதாதா?

“இப்ப நீ தானயா இன்னும் டிசைன் பண்ணலன்னு சொன்ன?”

சமாளிக்க, “நான் அப்டியா சொன்னேன்? பல்லக்கு பண்ணலன்னு சொன்னேன். டிசைன் பண்ணலன்னு சொன்னேனா? ஏன்யா கூப மாதிரியே பேசிகிட்டு இருக்க? போன் பண்ணி உன் சார்கிட்ட டிசைன் எப்படி இருக்குனு கேளு. இல்லனா நீயே ஒரு டிசைன் சொல்லு”

இவன் உளறுவதை கூட கண்டு புடிக்க முடியாத மாப்பிள்ளையின் பி.எ ஒரு நிமிடம் யோசித்து, “நீங்களே ஒரு டிசைன் பண்ணுங்க, நான் சார்கிட்ட பேசுகிறேன்” என்று ஏதோ குறித்து அவ்விடத்தை விட்டு அகன்றான்.

“போற போக்க பாத்தா இவனே உன் மாமனார்கிட்ட போய் உன் பொண்ண தான் கடத்த வந்துருக்கோம்ன்னு சொல்லிடுவான் போல டா” அப்படியாக கூட இருக்குமோ என்ற பயத்தில் கார்த்தியை பார்த்து கை எடுத்து கும்பிட்டான் சிவா.

“கலங்காதே நண்பா, உனக்கு கருமாதி பண்ணிட்டு தான் இந்த ஊர் விட்டு போறோம்” என்று அவனை மூட்டையின் ஒரு பக்கத்தை பிடிக்க கூறி மீண்டும் நால்வரும் வீட்டின் படியை நோக்கி சென்றனர்.

வந்துவிட்டனர் மாடி படியை தாண்டி, “டேய் நீங்க இங்க என்னடா பண்ணுறீங்க?” இந்த குரலை நிச்சயம் அந்த இடத்தில் எதிர் பார்க்கவில்லை நால்வரும்.

“பொண்ண விட வந்துருக்கோம்” என்று கார்த்தியும், “மளிகை ஜாமான் போட வந்துருக்கோம்” என்று ப்ரேமும் ஒரே நேரத்தில் தவறாக கூற அவர்களின் எண்ணத்தை தெளிவாக புரிந்தவள் தானே அபர்ணா.

“அதாவது பொண்ண தூக்குறதுக்கு ட்ரைனிங் தான் இந்த மளிகை சாமான் தூக்குற ட்ரையல். அத தான் அப்டி சொல்றாங்க” சிவா சமாளித்தான்.

ஆனால் உத்தமன் கார்த்தியோ, “அவங்களுக்கு தான் எல்லாமே தெரியுமே அப்றம் எதுக்கு உண்மைய மறைக்கணும்?” என்றவன் காலில் தன்னுடைய காலை அழுத்தி மிதித்த ஹரி, “ஏதாவது பண்ணா தானடா நாம சொல்ல முடியும்? நாமே பிளான் இல்லாம சுத்திட்டு இருக்கோம்” என்று ஹரி இடையில் வந்தான்.

“பிளான் இல்லாம எதுக்குடா நீங்க மீசை வச்சிட்டு சுத்துறீங்க?” அசிங்கமாக கேட்டுவிட்டாள். ஆனால் அதற்கெல்லாம் அந்த நான்கும் சிறிதும் கவலை கொள்ளவில்லை.

“ஏன்டா மீசை வைக்கிறதுக்கும் பிளான் போடவும் என்னடா சம்மந்தம்?” என்று சோகமாக கார்த்தியை பார்த்து கேட்டான் ஹரி.

“பிளான் நான் போட்டு தர்றேன்” என்றவள் சுற்றிலும் பார்த்து அங்கு சென்றுகொண்டிருந்த ஒருவரை அழைத்து, “அண்ணே இந்த மூட்டையை மட்டும் சமையல் செய்ற இடத்துக்கு கொண்டு போங்க” என்க,

அந்த மனிதரும் யோசிக்காமல் வந்து அந்த பையை தூக்க வர, “அய்யய்யோ தொட்டுடாதீங்க” என்று நால்வரும் ஒரு சேர கத்தினர்.

“என்னையா நாலுபேரும் சொல்லி வச்ச மாதிரி ஒரே நேரத்துல கத்துறிங்க?”

“பேசி வச்சிட்டு தானே வந்தோம்” என்றான் ஹரி முணுமுணுப்பாக.

“என்னது?” – அபர்ணா

“இல்ல, இதெல்லாமா பேசிட்டு வச்சிட்டு வந்தோம்? எங்களுக்கு குடுத்த வேலைய நாங்க தானே பாக்கணும்?”

அவர்களை முறைத்து ஏதோ அபர்ணா பேச வர, அருகில் நின்ற மனிதரை பார்த்து, “அண்ணே இந்த மூட்டையை அந்த முதல் ரூம்ல கொண்டு போய் வச்சிடுங்க” என்று கூற அவரும் அதை ஒரே தூக்கில் எடுத்து செல்ல, அவர் பின்னாலே வாலை ஆட்டி செல்லும் நாயை போல் சிவாவும், கார்த்தியும் சென்றனர்.

“உனக்கு எதுக்குண்ணே சிரமம்? தாயேன் இப்ப நான் எப்படி தூக்குறேனு பாரு” என்று கதையடித்துக்கொண்டு கார்த்தி செல்ல அதற்குள் அவர் அறையினுள் சென்று அந்த மூட்டையை வேகமாக போட சென்ற நேரம், “ஐயோ பாத்து வலிச்சிடும்…” என்று கார்த்தி பதறியதில் அவனை மார்கமாக பார்த்தார் அந்த மனிதர்.

அவர் பார்வையை படித்து உடனே, “நமக்கு உயிர் இருக்குற மாதிரி தானே இந்த உலகத்துல இருக்குற உயிர் இருக்கும் பொருள், இல்லாத பொருள் எல்லாத்துக்கும் மரியாதை குடுக்கணும்? அதுக்கும் வலி, வேதனை எல்லாம் இருக்கும்ல? அதுனால தான் நான் சிக்கன், மட்டன், பீப்-னு எதையுமே தொடுறதில்லனா பாத்துகோங்களேன்”

அவனை ஒரு மாதிரி பார்த்தவர் சிவாவிடம், “இந்த ஊர்ல ஒரு முனி சாமி கோவில் இருக்கு ரொம்ப சக்திவாய்ந்தது. அந்த பூசாரிக்கிட்ட போய் இந்த பையனுக்கு திருநீர் பூசிட்டு போங்க, என்ன தான் சித்தம் கலங்கி இருந்தாலும் முனியப்பன் பாத்துக்குவான். பாவம், பெத்தவங்க மனசு எவ்ளோ கஷ்ட படும்” என்று கார்த்தியை மேலும் கீழும் பரிதாபத்தோடு பார்த்தவர் அவ்விடத்தை விட்டு சென்றார்.

அவர் சென்றதும் அவனை பார்த்து அங்கிருந்த மூட்டைகள் மீது விழுந்து விழுந்து சிரித்தான் சிவா, “உன்ன பைத்தியம்னு சொல்லிட்டு போறாருடா”

இங்கு வெளியில் அபர்ணா, அவர் சென்றதை உறுதி செய்து, “ஏண்டா வெங்காய தலையணுகலா நீங்க பொண்ண கடத்துவீங்கன்னு நெனச்சேன். ஆனா இப்ப தான் தெரியுது அருசி, பருப்பு திருடுற சில்ற பசங்க தான் நீங்க போல… சாக்கை தூக்கிட்டு வீடு முழுக்க சுத்திட்டு இருக்கீங்க, அத பாத்துக்க பின்னாடியே போறானுக பாரு ரெண்டு அட்டு பீஸுக”

“ஏய் காப்படி உழக்கு நாங்க என்னமோ பண்றோம் நீ எதுக்கு முசோலினி மாதிரி மீசையை முறுக்கிட்டு வந்து நிக்கிற? இப்டியே எங்களை பேசிட்டு இருந்த சாமி ஈட்டி வச்சு கண்ண குத்திடும்” ஏதோ சீரியஸாக பேச போகிறான் என்று ப்ரேம் அவனை பார்க்க, அவனோ கனவில் வந்த சாமியை வைத்து அவளை மிரட்ட, “டம்மி பாவா” கதையானது.

“டேய் இன்னும் அஞ்சு வயசு பீப்பாவாவே இருக்க நீ… உன்ன எப்பிடிடா இந்த முட்டா பயலுக நம்புறானுக”

“சரியா சொன்னிங்க நீங்க, குச்சிமிட்டாய் சாப்பிட்டு சுத்துறான் இந்த வயசுல… இதுல எனக்கு வேற ஒன்னு வாங்கி குடுத்து சாப்புட சொல்லி ஒரே அடி. நான் ஒரே வார்த்தைல முடிச்சிட்டேன். பி மேச்சூர்ட் ஹரி-னு” அவ்விடம் வந்த கார்த்தி அபர்ணாவை பார்த்துக்கொண்டே சீரியஸாக கூறினான்.

“கரெக்ட்ங்க… யோவ் கத்துக்கயா” என்றாள் அபர்ணாவும் ஹரியை முறைத்துக்கொண்டு.

“நீ ஒரு அட்டு பிகர்-னு, இதெல்லாம் ஒரு மூஞ்சியா சும்மா டைம் பாஸ்க்கு தான் பாக்குறேன்னு அவனை மாதிரியே நானும் போதைல மட்டும் உண்மைய சொல்றத கத்துக்குறேன். அதே மாதிரி நீ இங்கிட்டு போனதும் அட்டு பீஸுக-னு உன்ன சொன்னா மாப்பிள்ளை”

இருவரையும் இருவரிடமும் ஒரே கோர்வையாக போட்டு கொடுத்துவிட்டான் சத்தமே இல்லாமல். கார்த்தி அசடு வழிய அவள் கார்த்தியை முறைத்தாள் கண்களை உருட்டி உருட்டி.

“ஏங்க நீங்களும் கப்பைஐஸ் அடிச்சீங்க நானும் கப்பைஐஸ் அடிச்சேன் மேட்ச் ட்ரா. சரி இப்ப என்ன பண்ணலாம் அத சொல்லுங்க” சாமர்த்தியமாகப் பேச்சை மாற்றினான் கார்த்தி.

“சரி இப்ப யமுனா பூஜை ரூம்ல இருக்கா. கண்டிப்பா இப்ப உங்களால அவளை எதுவும் பண்ண முடியாது. ஏதோ நலங்கு வைக்கிறது எல்லாம் இனி தான் பண்ணுவாங்க. அந்த டைம்ல தான் நமக்கு சான்ஸ்”

தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தவளிடம், “அது என்ன நமக்கு சான்ஸ்? நீ இதுல எதுக்கு நடுல வர்ற அரை வேக்காடு”

“டேய் பேசிட்டு இருக்கறப்ப குறுக வராதடா கொரவளைய அறுத்துடுவேன். ஆமா எங்க சிவா?” அப்பொழுது தான் ப்ரேமும், ஹரியும் அவன் இல்லாததை பார்த்தனர்.

“ஆமா சிவா எங்கடா?” கார்த்தியிடம் கேள்வி எழுப்பினான் ப்ரேம்.

“ரொம்ப சிரிக்கிறான் மாப்பிள்ளை. அது தான் மூட்டைக்கு துணையா இருன்னு உள்ள வச்சு பூட்டிட்டு வந்துட்டேன். போன் பண்ணுவான் எடுக்காதிங்க” மூட்டை என்று குறிப்பிட்டதும் மற்ற இருவரும் வாயை மூடி அமைதியாகிவிட்டனர்.

ஆனாலும் கார்த்தியின் காதில், “அவனுக்கு அந்த பிள்ளையை கல்யாணம் பண்ணி வைக்காம நீ விட மாட்டல?” – ஹரி

“ஏதோ என்னால முடிஞ்ச வரைக்கும் யமுனா வாழ்க்கையை காப்பாத்துறேன்” தன காதில் கிசுகிசுத்து கார்த்தியை ஊக்குவிக்கும் வகையில் அவன் முதுகில் இரண்டு தட்டு தட்டினான்.

“சரி என்னமோ பண்ணி தொலைங்க. அந்த நலங்கு முடிஞ்சதும் தான் யமுனா பிரீ ஆவா, அது வரைக்கும் அவ பக்கத்துல ஆளுங்க இருந்துட்டே தான் இருப்பாங்க. என்னால சொல்ல முடிஞ்சது இவ்ளோ தான் இதுக்கு மேல உங்க சாமர்த்தியம்” என்று கையை விரித்தாள்.

“பிளான் செம்ம… ராஜராஜ சோழன் போடுற பிளான் எல்லாம் இது முன்னாடி தோத்து தான் நிக்கும். ஏய் சப்பி போட்ட பனங்கொட்ட, இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் இந்த இடத்துல இருந்து பாத்துருந்தா எங்களுக்கே தெரிஞ்சிருக்கும் பெருசா பேச வந்துட்டா பிளான்-னு சொல்லிட்டு” – ஹரி

“டேய் காக்கா கக்கா, நானாவது இத சொல்றேன் நீ அத கூட சொல்லாம தானடா வெட்டியா நிக்கிற” – அபர்ணா மீண்டும் இருவருக்குமான வார்த்தை போரைத் துவங்கிவிட்டாள்.

“யாரை பாத்து கக்கா-னு சொல்ற? மாட்டு சானிய எடுத்து மூஞ்சில அப்பி விட்ருவேன்” அவனுக்கு முன் நீண்டிருந்த கார்த்தியை ஒரே தள்ளில் தள்ள, அவனோ அருகிலிருந்த கம்பியில் சென்று இடித்து நின்றான்.

அதையும் பொருட்படுத்தாமல் அபர்ணாவிடம் எகிறிக்கொண்டு நின்றான் ஹரி.

“அப்புவடா, அப்புவ. கால வாரிவிட்டேனு வை படில உருண்டு, முப்பத்தி ரெண்டு பல்லு, அஞ்சு எலும்பு ஒடஞ்சு தான் கீழ குப்புற கிடப்ப” விட்டால் ஹரியின் சட்டையைப் பிடித்துவிடுவாள்.

“விழுந்தா நான் மட்டும் விழுங்க மாட்டேன், உன் காலையும் பிடிச்சு தான்டி விழுவேன்” – ஹரி.

“ஆமா இவன் என் கால பிடிக்கிற வரைக்கும் என் மூஞ்சிய பாரு உன் மூஞ்சிய பாரு-னு நின்னுட்டு இருப்பேன்” – அபர்ணா.

“உன் மூஞ்சி எல்லாம் பாக்குற மாதிரியா இருக்கு? வியாக் வாந்தி தான் வருது…”

“டேய்…”

“என்னடீ…” வெட்டவா குத்தவா என்று என்று இருவரும் நிற்க இருவரையும் பிரித்து நிறுத்தினர் கார்த்தியும் ப்ரேமும்.

“உங்க ரெண்டு பேருக்கும் பொழப்பே இல்லையா? கத்தி கத்தியே வீட்டுல இருக்க கூட்டத்தை கூட்டிறாதிங்கடா. உங்க வாய்ஸ் இப்பயே ஹிமாலயா தாண்டி சீனா போயிருக்கும்” இருவரையும் படாதபாடு பட்டு நிறுத்தினான் ப்ரேம்.

“ஹிமாலயா தாண்டி, நேபாள் இல்ல?” நல்ல பாம்பாய் சீறிக்கொண்டிருந்தவன் மந்திர தண்ணீர் தெளித்த சிலையாக மாறி பிரேமிடம் கேள்வி எழுப்பினான்.

“டேய் கஸ்மாலம், பேமானி, உன் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க…”

கார்த்தி அவன் முகத்திற்கு நேராக தன் கையை கொண்டு போக, அலறி அடித்து பின்னால் இரண்டடி சென்றான் ஹரி. மூச்சு வாங்கியபடியே, “நான் யமுனாவை பேசி கூட்டிட்டு வர்றேன்” தன் முன்னாள் சதமானம் பவதி கூறிக்கொண்டிருந்த கார்த்தியின் பீச்சாங் கையை பார்த்து பயத்தில் உரைதான் ஹரி.

“அப்டி வா வழிக்கு. இந்தாங்க உங்களுக்கு ஏதாவது இன்பர்மேஷன் கொடுக்கணும்னு தோணுச்சுனா எனக்கு கால் பண்ணுங்க” கார்த்தி அபர்ணாவிடம் வந்தான்.

“அதுக்கு நீங்க என்ன பிளாக் லிஸ்ட்ல இருந்து எடுக்கணும்”

“என்னது என் போன்ல ஒரு பொண்ணு நம்பர் பிளாக் லிஸ்ட்லயா…” அலறி அடித்து கைப்பேசியை நோண்டி ஏதோ செய்து, “இப்ப கால் பண்ணுங்க வரும். ஏதோ சைத்தான் நடுல வேலை பாத்துருக்கு” என்று ஹரியை ஓர கண்ணால் பார்த்துக்கொண்டே கூறினான்.

“கார்த்தி உன் மூக்குல ரத்தம்டா…”

தன்னுடைய கைக்குட்டையை எடுத்து அவனிடம் ஹரி கொடுக்க அவனை கை காட்டி நிறுத்தி, “கொஞ்ச நேரம் முன்னாடி நடந்த போர்ல நீ சாக கூடாதுன்னு என்ன ஆடு மாதிரி பலி குடுத்துட்டு போனது உனக்கு சாத்தியமா தெரியல?” தன்னை தள்ளி விட்டதைச் சுட்டிக் காட்டி கேட்டான் கார்த்தி.

ஹரியோ அசராமல், “நீ இந்த ஹரியோட தேவாடா…” அவனைக் கண்டு கை எடுத்துக் கும்பிட்டு, “போதும்… இதோட உன் பேச்சு கா” சரி இவனை பிறகுச் சரி செய்து கொள்ளலாம் இப்பொழுது அபர்ணாவை இந்த இடத்திலிருந்து விரட்டி அந்த பெண்ணை முதலில் அதே அறைக்குள் விட வேண்டும்.

“நீ இப்ப என்ன பண்றனா யாமுனகிட்ட போய் நாங்க எல்லாரும் ஒரு ஹாய் சொன்னோம்ன்னு சொல்லுவியாம் நாங்க அதுக்குள்ள இந்த மூட்டையை அதோட இடத்துல விட்டுட்டு வந்தர்றோம்”

“யாருமா இந்த பசங்க?” கணீரென ஒரு குரல் திடீரென பின்னால் கேட்க நால்வருக்கும் ஆச்சிரியம் தான். அபர்ணாவை சில நிமிடங்களைக் கீழிருந்து பார்த்துக்கொண்டிருந்தவர் ஏதோ சண்டை இருக்குமோ என்று வேகமாக வந்து கேட்டார், யமுனாவின் தந்தை மற்றும் எம்.பியான நெடுஞ்சேரன்.

அவளுக்கும் என்ன கூறுவதென்று தெரியாமல் போக ஹரி தான் முதலில் சமாளித்தான், “நாங்க ஃப்ரன்ட்ஸ்… ஸ்கூல்ல இருந்து ஒண்ணா தான் படிச்சோம்”

இவளுக்கு நண்பர்களெனில் யமுனாவிற்கும் நண்பர்கள் தானே, அப்படியெனில் தங்களுக்கும் இந்த வீட்டினுள் சுதந்திரமாக வளம் வரலாம் என்று தான் அந்த திடீர் யோசனை அவனுக்கு. அவரோ அபர்ணாவைப் பார்த்து, “ஓ சரிமா” என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

தாங்கள் பேசுவது அவருக்குத் தெரியாதென்று உறுதிப் படுத்தி, “டேய் யாருக்கு யாரு ஃப்ரன்ட்ஸ்? நீங்க மாட்டுறதும் இல்லாம என்னையும் சேத்து குளில தள்ளி விட பாக்குறீங்களா? பொணமா ஆனாலும் ஆவேன் தவற உனக்கெல்லாம் ஃப்ரன்ட்டாக மாட்டேன்…”

“விஷமா? இல்ல கயிறா?” முகத்தை எந்த வித சலனமும் இல்லாமல் காட்டினான் ஹரி.

“ஆஹ்???!!” பெண்ணவளுக்கு அவன் பேசியது புரியவில்லை.

“இல்ல சாக போறேன்னு சொன்னியே அது தான் கயிறா இல்ல விசமானு கேட்டேன்”

“டா…ய்ய்…”

“சாரி பேபிமா பி.ப்பி டேப்லெட் கொண்டு வரல… போ பொய் யமுனா எந்த ரூம்ல இருக்கானு பாரு, நாங்க கூட்டிட்டு போக வசதியா இருக்கும் அப்ப தான்” என்றான் ஹரி.

“ஆமா அப்ப தான் எங்களாலையும் மூட்டையை பிரிச்சு…”

கார்த்தியை இடைமறித்து “டேய் எதுக்கு நீங்க அத மூட்டையை பிரிச்சு பிரிச்சுன்னு மூடையாவே கட்டி அழுகுறீங்க?” அவளுக்கு கார்த்தி மேல் சிறு சந்தேகம் வந்தது.

“இல்லையே மூட்டை மூட்டை தான், நாங்க என்ன மூட்டைனா சொன்னோம்? ஆனா மூட்டையை மூட்டைன்னு சொல்லாம வேற என்ன மூட்டைன்னு சொல்ல முடியும்? சில்லி கேர்ள்… அந்த மூட்டைக்கும் எங்களுக்கும் என்ன மூட்டையா முடிச்சா? அதெல்லாம் மூட்டை கட்டி ஒரு மூலைல மூட்டையோட மூட்டையா போட்டாச்சுல? இன்னும் என்ன மூட்டை மூட்டைன்னு சொல்ல நாங்க என்ன ஒண்ணுமே இல்லாத முட்டையா?”

தன் வாக்கில் ஆயிரம் மூட்டையைக் கட்டியவனின் பேச்சில் எரிச்சலுற்ற அபர்ணா, “நிறுத்துடா சொறி மூஞ்சி ஐய்யனாரு… இவ்ளோ நேரம் எனக்கு சந்தேகம் இருந்துச்சு, இப்ப…”

“சந்தேகம் போய்டுச்சா?” ஆர்வமாக, வேகமாக கார்த்தி.

“இல்ல அடிச்சு சொல்றேன், அதுல என்னமோ இருக்கு” என்று மூட்டையை வைத்த அறை நோக்கி வேகமாகச் சென்ற அபர்ணாவை நிறுத்தினான் ப்ரேம்.

“ஏங்க நீங்க யமுனைக்காக எங்களை உங்க ஃப்ரன்ட்-னு சொன்னது போதும் மிச்ச எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம், ரொம்ப நன்றி, கிளம்புங்க”

“ஓ ஹலோ, நீங்க போனு சொன்ன உடனே என்னால போக முடியாது” அவர்கள் மூவரையும் மீறி அந்த அறைக்குள் வெடுக் வெடுக்கென நடந்தாள் அபர்ணா.

இவை அனைத்திற்கும் காரணமாய் இருந்த இருவரையும் ப்ரேம் முறைக்க, கார்த்தியோ அசடு வழிய, ஹரி, “மாப்பிள்ளை டோன்ட் ஒர்ரி, நாமல்லாம் காலேஜ் படிக்கிறப்ப ப்ரின்ஸி ரூம்குள்ளேயே 1000 வாளா பட்டாசு வச்சிட்டு தடயமே இல்லாம எஸ்கேப் ஆனவிங்க, இதெல்லாம் சகஜம் தான். வா இவளை உள்ள வச்சு பூட்டிட்டு வந்துடலாம்”

உள்ளே சென்றால் சிவா ஒரு பக்கம் ஒரு பத்து மாம்பழத்தை ருசித்துக்கொண்டிருந்தான், இந்த பக்கம் அபர்ணா அந்த மூட்டையை திறந்துகொண்டிருந்தாள். “மாட்டிகிட்டோம் பங்கு…” ஒரு விதத்தில் அனைவருக்குமே பயமாக தான் இருந்தது.

மூட்டையை பிரித்து பார்த்த அபர்ணா, “டேய் என்னடா என் தங்கச்சிய கடத்தி வச்சிருக்கீங்க?” அவள் கத்தியதில் சத்தம் வெளியில் கேட்டு விடுமோ என்ற பயத்தில் வேகமாக கார்த்தி கதவை மூட, ப்ரேம், ஹரிக்கு அவள் பேச்சு ஆச்சிரியத்தை கொடுத்தது.

“உன் தங்கச்சியா?”

உடனே அவளும் சுதாரித்து, “ஏன் எனக்கெல்லாம் தங்கச்சி இருக்க கூடாதா? என்னை கேள்வி கேக்காம நீங்க முதல எனக்கு பதில் சொல்லுங்கடா என் தங்கச்சி எப்படி இந்த மூட்டைக்குள்ள?”

“உன் தங்கச்சியா பேர் என்ன? பொண்ணு பாக்க சின்ன பொண்ணு மாதிரி லட்சணமா இருக்கா”

அவனை பார்த்து முறைத்தவள் ‘நீ எல்லாம் உறுப்புடுற ஜென்மமே இல்லடா’ என்று ஓய்ந்து பொய் ஒரு மூலையில் அவள் கோவம் சென்று அமர்ந்துகொண்டது. அதற்கு காரணம் அவனது கண்கள் ரம்மியமாய் அவளைப் பார்த்துக்கொண்டே கேட்டது தான்… ஆனால் கோவம் தான் அதிகம் வந்தது, என்ன செய்வது இவனிடம் பேசினால் வீண் விவாதமும், தலை வலியும் தான் வரும்.

“எப்படி என் தங்கச்சி இங்க வந்தான்னு கேட்டேன்…” ப்ரேம், கார்த்தியைப் பார்த்துக் கேட்டாள் அபர்ணா, சுத்தமாக ஹரியை ஒதுக்கி.

“உங்க தங்கச்சின்னு தெரிஞ்சிருந்தா இந்த வீடு பக்கமே வந்துருக்க மாட்டோம்” உண்மையைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டான் கார்த்தி பயத்தில். அவள் கண்கள் தான் ரத்தமாகச் சிவந்திருந்ததே…

“உண்மைய சொல்லுங்க யமுனாவை உங்களுக்கு தெரியுமா தெரியாதா… இப்டி சம்மந்தமே இல்லாம யாரையோ கடத்திட்டு நிக்கிறிங்க?”

“தெரியுங்க ஆனா தெரியாம போச்சு அது தான் இந்த மிஸ்டேக்” – ப்ரேம். எங்காவது முட்டாளாம் போல இருந்தது அபர்ணாவுக்கு.

மூச்சு வாங்க சிவா, இருவரையும் திட்ட வாய் திறந்த நேரம் வயிற்றில் ஏதோ சத்தம் கேட்க, பயத்துடன் அபர்ணாவைப் பார்த்து, “பாத்ரூம் எங்க?”

“வெளிய லெப்ட் கார்னெர்ல…” என்றது தான் தாமதம் கதவை உசைன் போல்ட் வேகத்தில் திறந்து, மின்னல் வேகத்தில் வெளியில் ஓடினான்.

“ஏண்டா இப்டி பண்றீங்க? அறிவே இருக்காதா? இது என்ன வீடா இப்டி எல்லாம் வெளையாடுறதுக்கு? கொஞ்சமாவது பொறுப்பு இருக்கனும், சுச்சுவேஷன் சீரியஸ்நெஸ் தெரிஜும் இப்டி எல்லாம் பண்ணுனா என்ன அர்த்தம்?” வழக்கத்தைப் போல ப்ரேம் அவர்களுக்கு அர்ச்சனை செய்தான்.

“இது வீடு இல்லாம பின்ன என்ன சூடுகாடா?” – ஹரி

“டேய் முட்டாள் கல்யாணம் நடக்க போற இடத்துல இப்டியாடா பேசுவீங்க?” தங்கைக்குத் தண்ணீர் தெளித்துப் பார்த்துக்கொண்டிருந்த அபர்ணா அவனைப் பார்த்து எரித்தாள், “எத்தனத்தை போட்டுடா மயக்கம் போட வச்சிங்க? வந்து ஒழுங்கா என் தங்கச்சிய எழுப்பி விட்ருங்க இல்லனா வீட்டையே கத்தி கூட்டிடுவேன்”

“நீங்க தலைகீழா கட்டி போட்டாலும் இன்னும் கால் மணி நேரம் கழிச்சு தான் எந்திரிப்பா உங்க தங்கச்சி… அப்டியே கை தங்களா புடிச்சிட்டு பெட்ல படுக்க வைங்க… டேய் வாங்கடா நம்ம வேலைய பாக்கலாம்” நண்பர்களை அழைத்துக்கொண்டு செல்ல பார்த்தான் ப்ரேம்.

“அறிவு கெட்ட முண்டங்களா இப்டியே என்னால எப்படி அவளை தூக்கிட்டு போக முடியும்? வீட்டுல யாரவது பாத்தா என்ன ஆச்சுன்னு என்ன தான் கேள்வி கேப்பாங்க. ஒழுங்கா எப்படி தூக்கிட்டு போனீங்களோ அப்டியே மூட்டையோட கொண்டு விட்ருங்க அந்த ரூம்ல” அவள் கூறுவதும் சரி என்று பட மூட்டையோடு மீண்டும் அபர்ணாவின் தங்கையைத் தூக்கி மூவரும் செல்ல, “யோவ் சொறி, இந்த இடத்தை கிளீன் பண்ணுயா” என்றாள் அங்கு சிதறி கிடந்த மல்லிகை பொருட்களைக் காண்பித்து.

“போடீ நீ பண்ணு…” என்று அவன் மேலும் முன்னேற, “யாராவது இருக்கீங்களா??” வேண்டும் என்றே அவள் குரலை உயர்த்த, வேகமாக ஓடி வந்து அவள் வாயை அடைத்தான் ஹரி.

“நீங்க போங்கடா நான் வர்றேன்” என்று நண்பர்களை அனுப்பி வைத்து வெளியில் எவரும் இல்லை என்று தெரிந்து கதவை வேகமாக உள்ளிருந்து தாளிட்டான் ஹரி.

“என்னடி நெனச்சிட்டு இருக்க நீ உன் மனசுல? விட்டா நீயே எங்களைப் போட்டு குடுத்துடுவ போல…” என்றான் கோவமாக.

தன் வாயை அடைத்திருந்த அவன் கையை உதறி, “ஆமாடா உனக்கு புடிக்காதத நான் பண்ணுனா உனக்கு கோவம் வருத்துல? அப்ப எனக்கு புடிக்காதத நீ பண்ணுனா எனக்கும் கோவம் வரும்”

“என்னடி பொடி வச்சு பேசுற?” குழம்பித் தான் போனான் ஆண் மகன்.

கொத்தாக அவன் சட்டையைப் பிடித்து, தன் உயரத்திற்குக் கீழே இழுத்தவள், “எதுக்குடா என் தங்கச்சிய அப்டி சைட் அடிச்ச?” பற்களைக் கடித்துக்கொண்டே அவனை முறைத்தாள்.

“அவளை நான் அப்டி தான் சைட் அடிப்பேன்… அத கேக்க நீ யாருடீ?” கால்கள் தடுமாற அவள் இரு புறமும் தன் கையை சுவரில் ஊன்றி தன்னை நிலைப்படுத்தி நின்றான் ஹரி.

“சைட் அடிச்ச மவனே கண்ணு ரெண்டும் இருக்காது நோண்டி எடுத்து அடுப்புல போட்ருவேன்…” என்றவள், தன்னையே கோவமாகப் பார்வையைப் பார்த்தவன் கன்னத்தில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்து எடுத்தாள்.

அவள் செயலை ஆச்சிரியமாய் பார்த்தவன் கண்கள் வெட்கத்தோடும், கன்னங்கள் முதலில் கொஞ்சம் செம்மையுற்றாலும் பிறகு அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தவன், தன்னுடைய கையை அவள் இடையோடு வளைத்து தன் பக்கம் நெருங்கி நிறுத்தி, “உனக்கு வாய் கூடி போச்சு” என்று குனிந்து, தனக்குத் தண்டனை கொடுத்த அவள் மல்லிகை பூ இதழ்களில் அழுத்தமாய் அதே சமயம் நிதானமாய் தன்னுடைய இதழ் முத்திரையைப் பதித்து, அவளை தன்னுள் முழுதாய் எடுத்துக்கொண்டான்.

அவன் ஒரு கை அவள் அணிந்திருந்த புடவையின் மறைவிலிருந்த இடையில் அழுத்தம் கொடுத்து விடைபெற, அவன் இதழ்களும் அவளிடமிருந்து மனமே இல்லாமல் பிரிந்தது…

“நான் அப்டி தான்டீ சைட் அடிப்பேன்… உனக்கு தங்கச்சியா இருந்தா என்ன? உன் அக்காவா இருந்தா என்ன? எனக்கு அழகா தெரியிற எல்லா பொண்ணுங்களையும் நான் சைட் அடிச்சிட்டே தான் இருப்பேன், உன்னால என்ன முடியுமோ அத பண்ணிக்கோடீ” தங்கள் முத்தத்தின் பொழுது அவள் கைகளினால் கலைத்திருந்த தன் சிகையை சரி செய்து, வேகமாக அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து கதவைத் திறந்து வெளியில் புயலென சென்றுவிட்டான், தன் வாழ்க்கையின் முதல் முத்தத்தினால் தன் கன்னம் சிவப்பானதை அவளிடம் காட்ட கூச்சப்பட்டு.

ஒருவழியாக நிதானம் அடைந்து வெளியில் வந்த ஹரி சற்று தொலைவில் மூட்டையை சுமக்க முடியாமல் சுமந்த நண்பர்களை பார்த்து வேகமாக சென்று அவர்களுக்கு உதவினான். சரியாக அவர்கள் கடத்திய அதே வாசலில் வந்து கதவை திறக்க சென்ற நேரம், “யோவ் எதுக்கு இப்ப அந்த ரூம்குள்ள போறீங்க?” கேட்டது வெற்றி. யமுனாவின் இரண்டாவது சகோதரன்.

கார்த்தி முழித்த பார்வையே அவர்கள் மூவரையும் காட்டிக் கொடுக்க, வெற்றிக்கே அவர்கள் மீது சந்தேகம் வரத் துவங்கியது. என்ன நடந்தாலும் கார்த்தியின் பிடி மட்டும் அந்த மூட்டையிலிருந்து சிறிதும் தளரவில்லை.

“அபர்ணா தான் இத உள்ள வைக்க சொன்னாங்க” என்றான் கார்த்தி வேகமாக.

“அவ என்ன லூசா மூட்டையை இங்க வைக்க சொல்லிருக்கா?” வெற்றிக்கே புரியவில்லை எதற்காக இதைத் தங்கும் அறைக்குள் வைக்கக் கூறினால் என்று.

“ஆமா பாக்க அப்டி தெரியாது ஆனா பேச பேச தெரிஞ்சிடும் லூசு தான்னு” தீவிரமாக வெற்றியிடம் பேசத் துவங்கினான் ஹரி.

“ஆமா ப்ரோ அது தான் நான் அவளை விட்டுட்டு அவளோட தங்கச்சிய உசார் பண்றேன்… என் அப்பனும் சரி சொல்ல மாட்டாரு, அவ வீட்டுலையும் ஒன்னும் பேச மாட்டிக்கிறாய்ங்க பேசாம கடத்திடலாம்னு இருக்கேன்” இப்பொழுது குப்பென வேர்த்தது மூவருக்கும்.

“மாட்டுனோம் மவனே சட்னி தான். அவளோட ஆள்கிட்டையே சிக்கிட்டோமேடா” என்றான் ப்ரேம்.

“தோ இப்ப எப்படி சமாளிக்கிறேன் பாரு…” என்ற கார்த்தி, “ஆமா சார் அந்த பொண்ணு அழகு தான். ஆனா என்ன கொஞ்சம் வெயிட் தான் அதிகம். இப்ப கூட ஒன்னுமில்ல இந்த மூட்டைக்குள்ள தான் நீங்க சொல்ற பொண்ணு இருக்கு எந்த கோவில்ல கல்யாணம் பண்ணனும்னு சொல்லுங்க அங்க கொண்டு போய்டலாம்”

மொத்தமாக உளறிவைத்தான் கார்த்தி, அதன் பிறகே பேசியது புரியச் சரியாக அந்த நேரம் அங்கு வந்தனர் மாப்பிள்ளையின் பி.எ வும், யமுனாவின் தந்தையும் வர அவன் பேசியதைத் தெளிவாகக் கேட்டுவிட்டனர்.

எடுத்த எடுப்பிலே நெடுஞ்சேரன், “டேய் அந்த மூட்டையை விடு” வேக எட்டுகளுடன் வந்து நின்றார் நெடுஞ்சேரன்.

“சார் இவனுக்கு மூளை வளர்ச்சி கொஞ்சம் கம்மி சார் அது தன் அடிக்கடி இப்டி பேசுவான்” சமாளிக்க முயன்றான் ஹரி.

அவனைப் பார்த்து அமிலமாய் முறைத்தவர், “நீ வாய மூடுடா. டேய் வெற்றி இந்த மூட்டையைத் திற” என்றார் மகனிடம்.

ஹரி கார்த்தியின் கையை பற்றி பின்னால் வரக் கண்களாலேயே செய்தியைக் கூறினான் நண்பர்களிடம் தப்பிக்குமாறு. “சார் நான் தான் சொல்றேன்ல அதுல ஒண்ணுமில்லன்னு” என்றான் ஹரி மீண்டும் மூட்டையைப் பிரிக்க விடாமல்.

“பொய் சொல்றாங்க மாமா அந்த மூட்டைல என்னமோ இருக்கு” எங்கோ பரிச்சயமான குரல் என்று திரும்பிப் பார்க்க, கோவமாக நின்றிருந்தாள் அபர்ணா.

‘மாமாவா?’ நண்பர்கள் மூவருக்குமே அதிர்ச்சி தான்.

“ஏங்க உங்க குடும்பத்தோட எதிரியை நீங்க மாமா-னு சொல்லலாமா? வாங்க இந்த பக்கம். சேந்து கும்-பு சண்டை போடலாம்… எனக்கு மான் கராத்தே தெரியும்… வாங்க இந்த பக்கம்”

ஏதோ விளையாடுகிறாள் என்று நம்பி அதிர்ச்சியில் உளறினான் கார்த்தி. ‘ச்ச இந்த பொண்ணு பதட்டத்துல அப்டி சொல்லிருக்கும்’ என்ற எண்ணம் இப்பொழுதும் அவனுக்கு. அதே எண்ணம் தான் மற்ற இருவருக்குமே.

“டேய் அவரு என் சொந்த தாய் மாமாடா. நான் எதுக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்? நீங்க யாரு மொத?” பதறினாள் மீண்டும்.

“எனக்கு இவங்க யாருமே தெரியாது ஆனா என்ன மிரட்டி என்னோட ஃப்ரன்ட்-னு சொல்ல சொன்னாங்க. அதுல என்ன இருக்குன்னு பாருங்க, இவங்க முழியே சரி இல்ல” அப்படியே தட்டை தலைகீழாகப் புரட்டிவைத்தாள் அபர்ணா.

வாயைப் பிளந்து அவளையே பார்த்திருந்த கார்த்தியின் கை பிடித்து ஹரி பின்னால் ஓட, அதற்குள் வெற்றி மூட்டையைப் பிரித்து, “அப்பா மது ப்பா…”

அபர்ணாவும் புதிதாய் அதிர்வது போல், “டேய் என் தங்கச்சிய கடத்துனீங்களா?” என்று ஆவேசமாகத் திரும்பிப் பார்க்க மூவரும் அந்த நேரம் படியை நெருங்கி இருந்தனர்.

“வெற்றி புடிடா அவனுகள” என்று நெடுஞ்சேரம் ஏவ அதற்குள் மாப்பிள்ளையின் பி.எ அவர்களை பின் தொடர்த்திருந்தான்.

“சிவா எங்கடா?”

ஓடிக்கொண்டே ப்ரேம் நண்பனை நினைவூட்டச் சரியாக அந்த நேரம் மாடியின் இன்னொரு பக்கத்திலிருந்த ஒரு கதவிலிருந்து வயிற்றைப் பிடித்து வேர்க்க வேர்க்க வந்து நின்றான் சிவா. முகத்தில் தெரிந்த தெளிவு அடுத்த நொடியே மீண்டும் பீதியடைய அந்த கதவை நோக்கி மீண்டும் சென்றவனின் கையை பிடித்து நிறுத்தினான் ஹரி.

“என்னடா?” என்றான் சிவா கலக்கத்தோடு.

“மாட்டிகிட்டோம் பங்கு” என்று அவனைப் பிடித்து ஹரி ஓட, அருகிலிருந்த கம்பியைப் பிடித்து, “டேய் ஒரு அஞ்சு நிமிஷம் பொறுடா. ஆய் வருது” பதறிப்போனான் சிவா.

சிவா பிடித்திருந்த கம்பியிலிருந்து அவன் பிடியைத் தளர்த்திய ஹரி, “பரவால்ல பாண்ட்லயே பொய்க்கோ” என்று விறுவிறுவென படியை நோக்கி நடக்க அங்கு வெற்றியை நிறுத்த படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான் கார்த்தி.

அதற்கு பின்னால் மாப்பிள்ளை பி.எவையும், நெடுஞ்சேரனையும் தடுக்கும் பொருட்டு கண்ணில் தெரிந்த பொருட்களை எல்லாம் அவர்கள் மீது வீசி அவர்களை முன்னேற விடாமல் தடுத்தான் ப்ரேம்.

“சார் ஏன் சார் கத்த கூடாதுனு சொல்றிங்க? நம்மளால இவங்கள தனியா சமாளிக்க முடியாது” என்றான்.

“டேய் நாளைக்கு என் பொண்ணுக்கு நிச்சயம் இப்ப கத்தி ஊருக்கே தெரியனுமா?” என்றவர் அவனை முன்னே தள்ளிவிட ப்ரேமை தள்ளிவிட்டு தானும் கீழே விழுந்தான் மாப்பிள்ளை பி.எ. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நெடுஞ்சேரன் தன் மகனைத் தாக்கிக்கொண்டிருந்த கார்த்தியை ஒரே தள்ளில் தள்ள அருகிலிருந்த ஒரு தூணைப் பிடித்து தன்னை நிதானப்படுத்திக்கொண்டான்.

“ச்சை ஒரு வேலையும் உருப்படியா பண்ண தெரியல” அந்த நேரத்திலும் வெற்றி தந்தையிடம் பாராட்டை மட்டுமே பெற்றான்.

சரியாகச் சத்தம் கேட்டு வந்த நெடுஞ்சேரனின் ஆட்கள் கார்த்தியையும் ப்ரேமையும் பிடித்துவிட அவர்களை காப்பற்ற முயல வந்த ஹரி வேறு வழியே இல்லாமல் அமைதியாய் தானும் சரணடைந்தான்.

“அண்ணே அது தான் புடிச்சிட்டீங்கல்ல நான் கக்கூஸ் போகணும். வெளியவே நில்லுங்க நான் அஞ்சே நிமிசத்துல வந்துர்றேன்” அவனுக்கு அவன் அவஸ்தை அந்த நிமிடம் யமுனாவை விடப் பெரிதாகப் பட்டது.

சிவாவின் குரல் கேட்டுத் திரும்பிய நெடுஞ்சேரனுக்கு பெரும் அதிர்ச்சி சிவா தான். ஏதோ திருட வந்துள்ளார் என்று நினைத்திருக்க இங்குக் கதையே வேறு விதமாகச் சென்றுள்ளது என்பதை அப்பொழுது தான் புரிந்துகொண்டார். இவை அனைத்தையும் சிரிப்பை அடக்க முடியாமல் அபர்ணா உற்சாகமாக ரசித்துக்கொண்டிருந்தாள்.

சுதாரித்த நெடுஞ்சேரன், “டேய் இவனுகள தோட்டத்துல கட்டி வைங்க. நான் வந்து பேசுகிறேன்” என்றார் கோவமாக.

“தோட்டமா சூப்பர் சார், தொண்டை எல்லாம் வறண்டு போயிருக்கு ஆளுக்கு ரெண்டு இளநி வெட்டி தர சொல்லுங்க வந்ததுல இருந்து குடிக்கணும்ன்னு ஆசையா இருக்கு” என்ற ஹரி நண்பர்களைப் பார்த்து, “என்னடா ரெண்டு போதும்ல” என்றான்.

உடனே கார்த்தி, “இளநி ஒன்னு போதும்” என்று மெதுவாகக் குரலைக் குறைத்து, “நேத்து உங்க ஆளுங்க குடுத்த கள்ளு சும்மா ஜிவ்வுன்னு இருந்துச்சு சார். அதை கொண்டு வர சொல்லுங்க. குடிச்சிட்டே பிசினஸ் டீல் பேசலாம்” என்று முடிக்கவும் நெடுஞ்சேரன் அவனை அறையவும் சரியாக இருந்தது.

அவன் அரை வாங்கியதை விட அவர் அறைந்த பின்னர் கார்த்தி முழித்த முழியும் அவன் கண்கள் கலங்கியதையும் பார்க்கத் தான் நண்பர்கள் மூவருக்கும் சிரிப்பை அடக்க முடியாமல் அந்த தலமே அதிரும்படி சிரிக்கத் துவங்கினர். எந்த விதமான படபடப்பும் இல்லாமல் தாங்கள் மாட்டிக்கொண்டதை கூட உணராமல் உற்சாகமாக இருக்கும் இவர்களைப் பார்க்கப் பார்க்க கோவம் ஒரு பக்கம் வந்தாலும் அதை விடப் பல மடங்கு ஆச்சிரியம் மட்டுமே அங்குள்ள அனைவருக்கும் இருந்தது, அபர்ணாவைத் தவிர.

“இவனுங்களுக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா?” என்று வாய் விட்டு கேட்டார் நெடுஞ்சேரன்.

“மாமா விட்டா நம்மள பைத்தியம் ஆக்கிடுவாங்க பாத்து காவலுக்கு பத்து பேர் போடுற இடத்துல இருவதா போடுங்க” என்றாள் எச்சரிக்கையாக அவர்களை நன்றாகப் படித்து.

அவளைப் பார்த்து கார்த்தியும் சிவாவும் இமைக்க மறந்து நின்றனர். சற்று முன்னர் உதவியது இவள் தானா இல்லை இவள் இரட்டை சகோதரியோ என்று.

“நான் பாத்துக்குறேன். இங்க நடந்தது இங்க இருக்கவங்கள தவற வேற ஒருத்தருக்கும் தெரியக் கூடாது முக்கியமா யமுனாவுக்கு. டேய் வெற்றி உளறி வச்ச வீட்டை விட்டு வெளியைத் தூக்கி போட்ருவேன்” என்ற மிரட்டலோடு அவர்கள் நால்வரையும் அப்புறப்படுத்தினர்.

– தூக்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!