Skip to content
Post Views: 5,906
உறவாக அல்ல உயிராக
அத்தியாயம் – 14 (Final)
Advertisement
பிரகாதீஸ்வரன் கனடா சென்று 1 மாதம் மாகிறது.
Advertisement
இனியாவுக்கு பகலில் வேலைகள் தலைக்கு மேல் இருக்க. இரவு ஒன்று ஏன் வருகிறது என்று தோன்றும் அளவிற்கு பிரகாவின் நினைவு ஆக்கிரமித்து இருந்தது
Advertisement
இதற்கு தான் என்னை விட்டு எப்படி இருப்பாய் என்று கேட்டானோ. ஆமாம் அவளாலும் பிரகாவை விட்டு தனியே இருக்க முடியவில்லை.
Advertisement
பிரகா கனடா சென்றதில் இருந்து இனியாவை போனில் அழைக்கவே இல்லை. இனியாவும் போன் போடவில்லை.
ஜெகன் வீட்டில் இருந்து வந்து மகிழை கல்யாணம் பண்ண கேட்க.
திருச்செல்வனிடம் ஏற்கனவே மகிழ் சொல்லி இருந்தாள்.
திருச்செல்வன் திருமணத்திற்கு சரி என்று இருந்தார்.
ஜெகனின் வீட்டார் பொள்ளாட்சிக்கே வந்து பேசி திருமணத்தை நிச்சயித்து செல்ல. இன்னும் மூன்று மாதங்களில் கல்யாணம் என்று முடிவு ஆனது.
மகிழின் மகிழ்ச்சியை கண்ட இனியா. ஜெகனை மனதில் வைத்துத்தான். இவள் அன்று திருமணத்தை வேண்டாம் என்றாலோ.
மகிழின் திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டு இருந்தது. சென்னையில் திருமணம் என்பதால், திருச்செல்வன் சென்னைக்கும், பொள்ளாட்சிக்கும் போய்,போய் சென்று வந்து கொண்டு இருந்தார்.
இனியா மகிழின் திருமணத்துக்கு பிரகா வருவான் அவனை காண ஆசையாக இருந்தாள் . இனியா அவளுக்கு பதிலாக அவளின் ஒவ்வொரு வேலைகளுக்கு தனி தனி ஆட்களை வைத்தாள். அதிக அளவில் வேலை நடக்கும் இடங்களில் சி.சி.டி வீடியோவை பொருத்தினாள்.
அவள் வீட்டில் அல்லது , எங்கே இருந்தாலும் எல்லா வேலைகளையும் பார்க்கிற மாதிரி நினைத்து இதனை செய்யது கொண்டு இருந்தாள்.
பிரகாவை சந்திக்கும் நாட்களை எண்ணி கொண்டு இருக்க.
மகிழின் திருமண நாள் வர. பிரகா திருமணத்துக்கு வரவே இல்லை.
ஏன் என்னை வெறுத்து விட்டானா. என் மூஞ்சியில் முழிக்காதே என்று சொல்லி சென்றானே. என்னை பார்க்க வேண்டும் என்று தோன வில்லையா.
பிரகாவின் மறுவுறுவமாக இருந்த ப்பிரித்தம்மை. பிரகாவே தன்னோடு இருப்பதாக நினைத்து கொண்டு நாட்களை கடத்தினாள்.
பிரகா திருமணத்துக்கு வருவான் என்று நினைத்து இருக்க.அவன் வரவில்லை என்று தெரிந்தவுடனே. மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்.
ஜெகன் வீட்டார் மகிழை திருமணம் முடிந்து அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல.
அனைவரும் திருச்செல்வன் வீட்டிற்கு சென்றனர்.
இனியா ஓய்வு எடுப்பதற்காக ப்பிரித்தம்மை அழைத்து கொண்டு மாடியில் தூங்க வைத்து விட்டு. அவளும் தூங்க வென நினைக்க நினைவெல்லாம் பிரகாதீஷ்வரனே தூக்கம் வருவேனா என்றது பால்கனி சென்று நிற்க.
கீழே விமல்ராஜ் யாருடனோ போனில் பேசுவது கேட்டது. இப்போ ஓகே வா. எப்போ ஹாஸ்பெட்டல இருந்து வந்த பிரகா என்று கேட்க.
இனியாவுக்கு என்னாச்சு பிரகா அத்தானுக்கு ஹாஸ்பெட்டல என்றவள். கீழே வந்து விமல்ராஜ்ஜை நோக்கி செல்ல அவர் போன் பேசிவிட்டு வந்தார்.
விமல்ராஜிடம் என்ன மாமா ஆச்சு பிரகா அத்தானுக்கு.
யாருமா என்ன ஒன்னும் இல்லையே.
இல்ல மாமா நீங்க வெளியில் ஏதோ அத்தான் கிட்ட எப்போ ஹாஸ்பெட்டல இருந்து வந்தேயின்னு கேட்டீங்க சொல்லுங்க என்ன ஆச்சு.
அது நீயே அவங்கிட்ட போன் பண்ணி பேசு . உன் புருஷன் தானே. என்க்கிட்ட ஏன்மா கேக்குற என்று சொல்லி சென்று விட்டார்.
விமல்ராஜுக்கு கோபம் , கல்யாணம் முடிந்தது 6 மாதம் ஆக போகிறது. இன்னும் இருவரும் இப்படி இருக்க. அங்கே அவன், இங்கே இவள் இருவரும் கஷ்ட படுவதை அறிந்தே கோபமாக பேச.
இனியா ஒரு முடிவு எடுத்தவளாக குமரனுக்கு போன் பண்ணி கனடா போறேன் . எப்போ வருவேன்னு தெரியாது. நீ அங்கே பாத்துக்கோ. அப்பா ஒரு வாரத்துல வருவாரு என்று போனை துண்டித்தாள் .
திருச்செல்வனிடம் சென்று நானும் ப்பிரித்தம் கனடா போறோம்பா .
சரி டா போய்ட் வா . தனியா போக வேண்டாம் . இனியனை அனுப்புறேன்.
இல்லப்பா நானே போய்க்குவேன் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.
திருச்செல்வன் சொன்னா கேளுமா உன்ன தனியா அனுப்ப. முடியாது.
நான் பாத்துக்கிறேன் என்றவள் அடுத்த விமானத்தில் கனடா சென்று விட்டாள்.
பிரகா மகிழ் திருமணத்துக்கு சொல்லலாம் என்று நினைத்து இருக்க செல்லும் ஒரு நாள் முன்னர் புட் பாய்சன் ஆகி உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பெட்டலில் சேர்ந்து விட. இப்போது அவனுக்கு தகவல் வந்தது. இனியா கனடா வருகிறாள் என்று எந்த ப்பிளைட் எப்போ வருது என்று கேட்டு தெரிந்தவன். ஏர்போர்டில் காத்து இருக்க.
இனியா வரும் ப்பிளைட் வந்து அரைமணிநேரம் ஆகியும் அவளையும் ப்பிரித்தம்மையும் காணவில்லை. வருபவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
பிரகா ப்பிரித்தம்மை பார்த்தவன். ப்பிரித்தம் என்று கை காண்பிக்க, ப்பிரித்தம் பக்கத்தில் மேடிட்ட வயிறுடன் கொஞ்சம் இல்லை அதிக எடை கூடி இருந்தாள் இனியா.
யார் இது இனியா வா என்றே வாய்விட்டு சொல்லியவன். அவள் அருகில் செல்ல. ப்பிரித்தம் ஓடி வந்து பிரகாவை அணைத்து இருந்தான் . அப்பா அப்பா என்று கட்டி அணைத்து முத்தம் வைக்க.
பிரகா இனியாவை பார்த்து கொண்டே இருக்க .
இனியாவும் பிரகாவை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
லக்கேஜ் எடுத்து கொண்டு வர . அவளிடம் இருந்து லக்கேஜ்ஜை வாங்கி வைத்தவன். ஒரு கையால் இனியாவை அணைத்தவன் . அவள் நெற்றியில் முத்தமிட்டு ஏன் என்கிட்ட சொல்லல்லா என்று அவளில் வயிறை பார்த்து சொல்ல.
அவளோ நீங்க எனக்காக வரனுன்னு நெனச்சேன். உங்க பிள்ளைக்காக இந்தியாவுக்கு வரனுன்னு நினைக்கல.
ஓ என்றவன் அவளிடம் பேசவில்லை. இருவரையும் அழைத்து கொண்டு. ஒரு இந்தியா உணவகம் சென்றான். ப்பிரிதம்முக்கு என்ன வேண்டும் என்று ஆர்டர் குடுத்தவன். உனக்கு என்ன வேணும் சொல்லிக்கோ என்றான். அவனுக்கு இரண்டு இட்லி சொல்லி உண்டு கொண்டு இருந்தான். ப்பிரித்தம்முக்கு பூரி சொல்ல அவனும் உண்டான். இனியாவுக்கு வரவேயில்லை என்ன இன்னும் காணும் என்று சொல்ல.
இதோ சார். என்று ஒரு மசால் தோசை ஆரஞ்சு சூஸ் கொஞ்சம் ப்புருட் சாலட் என்று வர அவள் முன் வைத்ததை பார்த்த . பிரகா சிரிக்க. என்ன சிரிப்பு என்றாள் இனியா.
இல்ல, நீ எப்படி இவ்வளவு குண்டு ஆனான்னு இப்ப தான் தெரியுது.
கண் வைக்காதீங்க.
சரிமா கண்ணு வைக்கல, காதும் வைக்கல நல்ல சாப்பிடு இப்போ நீங்க இரண்டு பேர் ஆச்சே.
இல்ல மூணு பேர் என்றாள் இனியா.
என்ன சொன்னா என்று பிரகா கேட்க டிவின்ஸ் என்றாள்.
பிரகா அமைதியாக அவளின் வயிறையே பார்த்து இருந்தான். அவளுக்கு 5 மாதம் தானே இருக்கும் . கொஞ்சம் பெரிய வயிறுபோல இருக்கேன்னு சந்தேகப்பட்டேன். சிலபேரு அப்படி இருக்கலாம் என்று நினைக்க.இனியா சொல்லிய உடன் அவனுக்கு என்ன மாதிரியான உணர்வு என்றே தெரியவில்லை. இரண்டு பிள்ளைகள் எனக்கு என்று நினைக்க கண்ணில் இருந்து கண்ணீர் வந்து விடுவது போல இருக்க.
வேகமாக வந்த இனியா பிரகாவின் தலையை அவள் வயிறின் மீது வைத்து வேண்டாம் பிரகா அத்தான் என்றாள். அவன் கலங்குவதை அவளால் பார்க்க முடியவில்லை. பிரகாவின் உச்ச தலையில் முத்தமிட்டவள் நம்ம பிள்ளைகள். நம்ம பார்த்துகலாம் என்று சொல்ல.
பிரகா ஐ யம் ஓகே என்றவன் அவளின் வயிறில் முத்தம் வைத்து விலக.
ஆமாம் இதுக்கு தான் நான் சொல்லாவே இல்லை .
என்ன இனியா என்றான்.
5 மாதம் புருஷன பிரிஞ்சு இருந்தது நானு முத்தம் மட்டும் உங்க பிள்ளைகளுக்கு என்ற முறுக்கியவளை.
வாய் விட்டு சிரித்தான் பிரகா . நீ இன்னும் மாறவே இல்லை மை க்யூட் பொண்டாட்டி சாப்பிட்டியா என்று பார்க்க. பாதி தோசையை மட்டும் சாப்பிட்டவள் போதும். நல்ல இருக்கு சாப்பிட முடியல.
பிரகா ஆமாம் ஒரு பௌல் நிறைய பழம் சாப்பிட்ட எப்படி தோசை சாப்பிட முடியும்.
நான் எங்க சாப்பிட்டேன் எல்லாம் உங்க பொண்ணுக்க என்று சொல்லி நாக்கை கடிக்க.
ஏய் இனியா பொண்ணா என்று கேட்டு சந்தோஷபட.
பக்கத்தில் இருந்த ப்பிரித்தம். எனக்கு இரண்டு சிஸ்டர்பா குட்டி பாப்பா அம்மா வைத்துல இருக்கு. பாப்பா வந்தவுடனே நான் நல்லா பாத்துப்பேன் என்று சொல்ல.
பிரகா ஆமா ப்பிரித்தம் உன் தங்கச்சி பாப்பா நீ தான் பாத்துக்கணும்.
இனியா வா நேரம் ஆச்சு போகலாம் என்று கூற.
இல்ல பாதி சூஸ் இருக்கு குடிச்சுட்டு வரேன் என்றவள் அவளால் குடிக்க முடியாமல் வைத்து இருக்க.
பிரகா சூசை எடுத்து அவன் வாயில் உர்றியவன் , சூஸ் காலி வா போகலாம் என்று அவசரப்படுத்த.
இனியா என்ன அவசரம் .
பிரகா வீட்டுக்கு வா சொல்றேன்.
பிரகா இருப்பது ஒரு தனி வீடு பெரியதும் இல்லாமல், சிறியதும் இல்லாமல் இரண்டு படுக்கையறை கொண்ட வீடு. வீட்டு முன் சிறிய தோட்டம். வீட்டின் முன் காரை நிப்பாட்டி விட்டு. கேட்டை திறந்தவன் காரை உள்ளே விட்டு மெதுவாக இனியாவை இறங்க சொல்லி வீட்டினுள் அழைத்து சென்றான். என்ன இனியா லக்கேஜ் கம்மியா இருக்கு.
அவசரமா கிளம்பினேன் அதான் ரொம்ப எடுத்துட்டு வரல. நல்லா இருக்கு வீடு. நல்ல கிளைமட்.
மாலையாகி விட குளிச்சுட்டு வா இனியா என்றான்.
ப்பிரிதம்மை அவனே குளிக்க வைக்க செல்ல . நான் குளிக்கலப்பா எனக்கு தூக்கம் வருது என்று சொல்லி பெட்டில் படுத்து தூக்கிவிட.பிரகா அவனின் பக்கத்தில் தலையனை வைத்து விட்டு இனியா இருந்த அறைக்கு வர. குளித்து விட்டு வந்து தலையை துவட்டிய வாரே . ப்பிரித்தம் எங்கே . அவன் தூங்கிட்டான் .
ஓ என்றவள் கண்ணாடியில் முன் நின்று தலைவாரி கொண்டு இருந்தாள். இனியா லைட் ரோஸ் கலர் லூசான டாப்பை அணிந்து இருந்தாள்.அது முட்டிக்கு கீழே இருந்தது .
ஏன் இனியா பேன்ட் போடலியா.
எனக்கு இது வசதியா இருக்கு வெளியே போனால் பேன்ட் ,இல்ல லாங் ஸ்கட் போடுவேன். வீட்டில் இப்படி தான் .
அவன் கட்டில் மேல் உக்காந்து. இனியாவிடம் பேச. இனியா என்றான்.
என்ன அத்தான்.
என் மீது கோபமா?.
இல்ல. நீங்க என்னை கூப்பிட்டப்போ எனக்கு தெரியல. நீங்க என்னை விட்டு போனது அப்பரமா தான் தெரிஞ்சது. உங்களை நான் எவ்வளவு மிஸ் பண்ணேன்னு.
அவளிடம் வேகமாக வந்தவன் மிஸ் யூ இனியா நீ இல்லாம ரொம்ப கஷ்ட பட்டேன் என்று அணைத்து கொண்டே சொல்ல.
அத்தான் என்றாள் என் வயிறு அமுங்குது.
சாரி டா. ஏன் என்க்கிட்ட நம்ம பிள்ளைகளை பத்தி சொல்லல்ல.
அதுவா நான் சொன்ன. சொன்னவுடனே வருவீங்கன்னு தெரியும்.
அப்போ ஏன் சொல்லல்ல.
அது சின்ன கோபம் . எனக்காக நீங்க வரனுன்னு நெனச்சேன்.
அலேக்கா அவளை தூக்கியவனை.
ஐயோ அத்தான் விடுங்க எனக்கு பயமா இருக்கு.
இல்ல எவ்வளவு வைட்டு இருப்பேன்னு பார்த்தேன்.
ஏன் நான் அழகா இல்லையா குண்டா இருக்கேனா.
பிரகா ஒரு மாதிரியாக சிரித்தான்.
என்ன சிரிப்பு.
முன்ன விட இப்போ சும்மா கும்முன்னு இருக்க.
அவனை தோளில் அடித்தவள் கீழே விடுங்க என்றவளை.
மெத்தையில் விட்டவன். எவ்வளவு நாள் இருப்ப இனியா.
இனியா ஏன் அத்தான்.
இல்ல நீ திடிர்ன்னு கிளப்பிட்டேனா. எனக்கு கஷ்டமா இருக்கும். இப்போ எத்தனை நாள் என்கூட இருப்பேன்னு சொன்னா என் மனச தேத்திக்குவேன்.
பிரகாவை இருக்கி அணைத்தவள் நீங்க போன்னு சொன்னாலும் போக மாட்டேன்.
அப்போ என்கூடவே இனிமேல் இருப்பீயா என்று அவளின் அணைப்பில் இருந்தபடியே கேட்க.
இனியா பிரகா முகம் முலுவதும் முத்தம் மிட்டு கொண்டே இனிமே ஒன்லி பிரகா தான் , பிரகா மட்டும் தான் என்வேலை.
போடி என்றவன்.
என்ன போடி.
இப்படி வயிறு காட்டிட்டு நிக்குற.நான் என்ன பண்ண ,கட்டி பிடிச்சாலே வயிறு இடிக்குது. நீ வேற இப்போ புசு புசுன்னு இருக்க என்று புலம்ப.
இனியா சிரித்து விட்டு என்ன ஹஸ்பென்ட் உங்க கவல உங்களுக்கு.
இனியாவின் நெருக்கம் பிரகாவுக்கு அனைத்தும் கிடைத்தது போல இருக்க . அமைதியாக அவளை உணர கண்மூடி இருந்தான். அவளை அணைத்து படியே.
அவளோ பிரகாவிடம் மேலும், மேலும் அணைப்பை கூட்டி முன்னேற.
ஏய் என்னடி பண்ணுற.
என்ன பண்ணேன்.
வேண்டாம் என்றான் பிரகா.
ஏன் உங்களுக்கு இந்த இனியா வேண்டாமா.
பிரகா இனியாவிடம் நீ பக்கத்தில் இருந்தால் போதும் இனியா எனக்காக உன்னை கஷ்ட படுத்திக்காத .
ஹலோ ஹஸ்பென்ட். நான் டாக்டர் நியாபகம் இருக்கா.
இருக்கு , இருக்கு ஆன உன் வயிறை பார்த்தால். பயமா இருக்கு. ஏதாவது ஆகிற போகுது என்றான் பிரகா.
இனியா அதெல்லாம் ஒன்னும் ஆகாது .
அப்படியா என்றவன் இனியாவுடன் இணைய . விடிய விடிய இருவரும் 5 மாத கதைகளை பேசி கொண்டே இனியாவை பிரகா கொஞ்சி கொண்டு முத்தம் மிட்டு கொண்டே இருந்தான் உனக்கு ஓகே வா பாப்பாவுக்கு கஷ்டம இருக்குமா என்று கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு தான் பசிக்குது என்றாள்.
இனியாவுக்கு பழங்களை கட் பண்ணி கொடுத்து பால் காய்ச்சி எடுத்து வந்தான். பால குடுச்சிட்டு தூங்கு இனியா என்றான்.
இனியா பிரகாவை பார்த்து கொண்டே இருந்தாள்.
தூங்கு இனியா . தூங்க வரலயே என்று அவனை பார்த்து கொண்டே சொல்ல.
முதலில் கண்ணை மூடு. இனிமேல் தினமும் அத்தானை பாரு இப்போ தூங்கு என்று மெல்ல அணைத்து இனியாவின் தலையை தடவி குடுக்க. இனியா ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றாள்.
இனியாவை தன் அணைப்பிலே வைத்து இருந்தான் பிரகா.
காலையில் எழுந்த இனியா பிரகாவை தேட . பிரகா இனியாவுக்கு சமைத்து கொண்டு இருந்தான்.
ஹாலில் ப்பிரித்தம் டி.வி பார்த்து கொண்டு இருந்தான் . ஒரு பௌலில் நொறுக்கு தீனி வைத்து உண்டு கொண்டே இருந்தான்.
சமையல் அறைக்கு வந்த இனியா என்ன பண்ணுறீங்க அத்தான் என்று பிரகாவை பின் இருந்து அணைத்து கொண்டே கேட்க.
சமைக்குறேன் என் பொண்டாட்டிக்கு.
நான் செய்ய மாட்டேனா.
அம்மா தாயே உன் வயிற பாத்தாலே பயமா இருக்கு. நீ எப்படி சமைப்ப நான் பாத்துக்கிறேன்.
இனியா இரண்டு கைகளயும் தூக்கி தூக்கு என்று சொல்ல .
அவளை தூக்கி கிச்சன் மேடையில் உங்கார வைத்தவன் . அவள் கன்னத்தில் முத்தமிட்டு சாப்பிடுறீயா என்று கேட்க இல்லை என்றாள்.
சாப்பிடு என்று சொல்லி பிரகா இனியாவுக்கு ஊட்டி விட. அவனை சீண்டி கொண்டே சாப்பிட்டாள். நீயே ஒரு பாப்பா மாதிரி பிகேவ் பண்ணுற . உனக்கு இரண்டு பாப்பா.
ப்பிரித்தம் பிரகா இனியாவுக்கு ஊட்டிவிடுவதை பார்த்து எனக்கு எனக்கு என்று கேட்டு அவனும் இணைந்து கொண்டான்.
பிரகாவின் வேலை முடியும் தருவாயில் இருக்க. வீட்டில் இருந்தபடியே வேலை செய்தான்.
இனியாவும் வீட்டில் இருந்தபடியே ,பொள்ளாட்சியில் உள்ள வேலைகளை சி .சி.டி வீடியோ மூலம் பார்த்துக் கொண்டாள்.
பிரகா இனியாவை ஒரு வேலை செய்ய விடமால் பார்த்து கொள்ள. இனியாவையும் , ப்பிரித்தம்மையும் கனடாவில் உள்ள இடங்களுக்கு அழைத்து செல்ல.
இனியா மிகவும் சந்தோஷமாக இருந்தாள்.
பிரகாவின் வேலைகள் கனடாவில் முடிந்து விட. பொள்ளாட்சிக்கு சென்றனர்.
இனியாவுக்கு 7 மாதத்தில் வளைகாப்பு செய்தனர்.
வளைகாப்பு முடிந்தவுடன் அவளையும் , ப்பிரித்தம்மையும் அழைத்து கொண்டு மட்கேரிக்கு சென்று விட்டான்.
பிரகாவிற்கு இனியாவுடன் மட்கேரியில் உள்ள வீட்டில் வாழ வேண்டும் என்று ஆசை . அழைத்து சென்று விட்டான்.
கோமதியும் ,நிர்மலாவும் யாராவது ஒருவர் இனியாவுடன் இருக்கும் மாறு பார்த்துக் கொண்டான்.
இனியாவுக்கு மட்கேரியில் உள்ள ஹாஸ்பெட்டலில் 9 மாத இறுதியில். ரோஜா பூ போல இரண்டு முத்துக்கள் பிறந்தன.
இரண்டு பிள்ளைகளையும் தன் இருகைகளில் வாங்கி கொண்டான். இரண்டு முத்துக்களும் அச்சு அசல் இனியாவை போல பால் வண்ணத்தில் இருக்க. இரண்டு பேரையும் தனது மார்பின் மீது வைத்து அணைத்து கொண்டான்.
உறவுகள் இருந்தும் தனியாக வாழ்ந்தவன். இப்போ இத்தனை உறவுகள் தன்னுடன். இனியா தனக்கு உறவு தான். ஆனால் இப்போ அவள் உறவாக அல்ல உயிராக அவன் வாழ்வில்……
error: Content is protected !!