Skip to content
Post Views: 3,918

சுபா எதுவும் பேசவில்லை.. நிரவி குட்டிக்கு பால் கொடுத்துவிட்டு கட்டிலில் படுக்க வைத்துவிட்டு சுற்றியும் தலையணை வைத்துவிட்டு பாத்ரூம் சென்றுவிட்டாள்…. பாத்ரூம் சென்றவள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை…. நிரவி குட்டியும் அவள் அருகில் யாரும் இல்லை என உணர்ந்து அழுக ஆரம்பித்துவிட்டாள்…அவள் வராததை பார்த்து அர்ஜுன் சென்று கதவை தட்டினான்… ” அம்மு என்ன பண்ற… வா வெளிய… பாப்பா அழுவுறா பாரு… வெளிய வா…” என்று கதவை தட்டியவாரு கூப்பிட்டான்….
அவள் உள்ளே குழந்தை அழுகும் சத்தம் கேட்டும் அழுதவாறே கதவில் சாய்ந்தவாரு நின்றுவிட்டாள்… குழந்தை மிகவும் சத்தமாக அழுதது…
Advertisement
அவனோ குழந்தையை தூக்கவும் முடியாமல் சுபா வெளியில் வராமல் இருப்பதினால் ஏற்பட்ட கோவத்திலும் இருந்தான்… “சுபா வெளிய வாடி…. எனக்கு தெரியும் நான் பாப்பாவை தூக்காம இருக்குறதுனால இப்படி பண்றனு… வெளிய வாடி பேசிக்கலாம்…. ப்ளீஸ் வெளிய வாடி… பாப்பா ரொம்ப அழுவுறா…” என்று வேகமாக கதவை தட்டினான்…
Advertisement
குழந்தை இன்னும் கத்தி அழுதது…. சசி கர்ணன் அறை கீழே இருப்பதால் அவர்களுக்கு மேலே நடப்பது அவர்களுக்கு தெரியவில்லை…. குழந்தை அழுவதை பார்த்து மீண்டும் பதறி “அம்மு வாடி வெளிய…. என் கோவத்தை கிளராத அம்மு… வெளிய வாடி…” என்று கோவமாக கட்டினான்…
Advertisement
அவளோ வாய் விட்டே கதறிவிட்டாள்… அவளின் அழுகை அவனுக்கும் வெளியே கேட்டது…. அவனுக்கு தெரிந்துவிட்டது… தான் குழந்தையை தூக்காமல் அவள் வெளியே வரமாட்டாள் என…
Advertisement
மெதுவாக குழந்தையை நோக்கி சென்றான்… குழந்தையோ யாரும் வராததால் இன்னும் அழுதது… கை நடுங்க குழந்தையை தூக்கினான்…. நிரவி குட்டி தன் தகப்பனின் வாசத்தை உணர்ந்தாளோ என்னவோ மெது மெதுவாக அழுகையை நிறுத்தி அவனின் பனியனை இறுக்கி பிடித்து மீண்டும் தூங்கியது….. சுபாவும் அர்ஜுனனின் பனியனை பிடித்து கொண்டு தான் தூங்குவாள்… அவனுக்கு இது சுபாவை மட்டும் தான் ஞாபாகம் படுத்தியது… வேறு யாரையும் ஞாபகம் படுத்தவில்லை… அவன் உணர்ந்துவிட்டான் அது தங்கள் குழந்தை மட்டும் தான் வேறு யாரும் இல்லை என….
குழந்தையின் அழுகை நின்றும் உள் இருந்து சுபா அழுது கொண்டு தான் இருந்தாள்… பின் அவனின் பெண்ணரசியை தூக்கி கொண்டே பாத்ரூம் அருகே சென்று ” அம்மு வெளிய வா… அது தான் நீ நினச்ச மாதிரி நடந்து போச்சுல… வாடி வெளிய… அழுவாதா… வெளிய வா தாரும்மா.. ” என்று அழைத்தான் …..
அவன் அழைத்த பின் தான் மெதுவாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்… வெளியே வந்தவளை குழந்தையுடன் சேர்த்து அணைத்து கொண்டான்…. ஆரவும் சத்தத்தில் அப்போது எழுந்து கொண்டான்… சுபா அவனை தூக்கிக்கொள்ள அர்ஜுனன் மூவரையும் சேர்த்து அணைத்து கொண்டான்…..
ஆரவும் நிரவி குட்டியும் மீண்டும் தூங்கி இருக்க ஆரவை அவனின் கட்டிலில் தூங்க வைத்துவிட்டு நிரவி குட்டியை கட்டிலில் தூங்க வைத்து பாதுகாப்பிற்காக தலையணையை சுற்றி வைத்தனர்.. பின் அர்ஜுனனை அழைத்து கொண்டு உள்ளிருக்கும் அறைக்கு அழைத்து சென்றாள் சுபா…
உள்ளே நுழைந்த நொடி அர்ஜுனன் சுபாவை இறுக்கி அணைத்து கொண்டான்… அவளும் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்… இருவரும் தனிமையாக இருந்து நிறைய நாட்கள் ஆகி இருந்தது…. அன்று மருத்துவமனையில் இருந்தது தான் அதன்பின் அவன் சுபாவை தனியாக சந்திக்கவே இல்லை… இரவும் அவள் தூங்கிய பின் வருவதால் அவனை சந்திக்கவே முடிவது இல்லை அவளால்….
அணைப்பு எல்லாம் சில நொடிகள் தான்… பின் அவனை தள்ளி விட்டு அவனின் நெஞ்சிலும் கன்னத்திலும் மாறி மாறி அடித்தாள்…
“ஏன் மாமா மறைச்ச…. முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல… ஏன் டா மறைச்ச…. எனக்கு தெரிஞ்ச அப்ப அப்பயே செத்து போய் இருக்கனும்னு நினச்சேன் தெரியுமா… என்னை பத்தி உனக்கு தெரிஞ்சும் ஏன் டா மறைச்ச… ” என்று கேட்டு அவனையே அணைத்து கொண்டாள்….
அவனும் அவளை சேர்த்து அணைத்து கொண்டு “சாரி அம்மு… ஏற்கனவே நான் லவ் பண்ணது தெரிஞ்சி தான் உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு… திரும்பியும் அதை பத்தி தெரிஞ்சி உனக்கு எதோ ஆயிடிச்சுனா உசுரே போயிடும் அம்மு எனக்கு…. அதுக்கு உனக்கு தெரியாமயே இருக்கலாம்னு விட்டுட்டேன் அம்மு.. மன்னிச்சுடு அம்மு… ஐ ஆம் ரியலி சாரி டா… நான் இண்டெஷன்னா வேணும்னே மறைக்கல அம்மு ” என்று கூறினான்…
அவள் இன்னும் அவனுள் புகுந்து கொண்டு “அந்த டைரி படிக்குற அப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா… அப்டியே செத்து போன மாதிரி இருந்தது… என்னால முடியல மாமா… என் மாமா முதல்ல என்னை லவ் பண்ணலயா… நான் அவரோட முதல் காதல் இல்லையானு அவ்வளோ கேள்வி…. இனிமே என்னை விட்டு எங்கையும் போகாத மாமா… சத்தியமா நீ இல்லாம இருக்க முடியல…. ” என்று கூறி அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்…..
“சாரி அம்மு… உங்கிட்ட இதை தவிர என்ன சொல்றதுனு தெரியல அம்மு… உன்னை விட்டுட்டு நான் எங்க போக போறேன் அம்மு…. என் அம்முவை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன் ” என்று கூறி தன்னிடம் இருந்து பிரித்து நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவளை தூக்கி கொண்டு கட்டிலில் படுக்க வைத்து விட்டு தானும் அவளை அணைத்து கொண்டான்….
அவளோ அவனில் இருந்து விலகி “இத்தனை நாள் ஏன் மாமா பாப்பாவை தூக்கவே இல்ல… உங்கிட்ட அன்னிக்கே சொன்னேன்ல அவ நம்ம பாப்பா… வேற யாரும் இல்லைனு… அப்பறம் ஏன் தூக்கவே இல்ல நீ…. காலைல பாப்பாவை தரேன்… நீ கவனிக்காத மாதிரி வாங்கவே இல்லல….” என்று கேட்டு அவனின் நெஞ்சில் அடித்துவிட்டு மீண்டும் அவனை அணைத்து கொண்டாள்….
“எனக்கு ஒரு மாதிரி இருந்தது அம்மு… அந்த மச்சம் எனக்கு தேவியை அதிகம் ஞாபக படுத்திச்சு…. ஆனா இப்போ நான் தெளிவு ஆயிட்டேன் அம்மு…. பாப்பா உன்னை மாதிரி தான் இருக்கா… நீ எப்படி என் பனியனை பிடிச்சிட்டு தூங்குவ… அதே மாதிரி பாப்பாவும் தூங்குனா தெரியுமா…. அப்போ பாப்பா முகம் உன்னை மட்டும் தான் ஞாபகம் படுத்திச்சு….” என்று கூறி அவளின் நெற்றியில் முத்தமிட்டு அணைத்து கொண்டான்…..
“சரி தூங்கு அம்மு ரொம்ப நேரம் ஆகிடிச்சு…. ” என்று கூறி தட்டிக்கொடுதான்… அவளும் கண்ணை மூடினாளே தவிர தூங்கவே இல்லை… அவளின் கருவிழிகளின் அசைவில் அவள் உறங்கவில்லை என அறிந்து அர்ஜுனன் ” அம்மு என்ன ஆச்சு என்ன யோசிச்சிட்டு இருக்க.. ” என்று கேட்டான்…
அவளோ “ஒன்னும் இல்ல மாமா” என்று கூறி உறங்க முயற்சி செய்தாள்….
“ப்ச் அம்மு உன்னை பத்தி எனக்கு தெரியும் என்ன யோசனை சொல்லு” என்று கேட்டான்……
“அது மாமா பாப்பா பிறந்துல இருந்து அண்ணாங்க ரெண்டு பேரும் அதிகமா பேசவே இல்லை…. எப்போ வீட்டுக்கு வந்தாலும் என்கிட்ட தான் பேசுவாங்க…. ஆனா இப்ப உள்ள வந்ததும் பாப்பாவை தூக்கிக்குறாங்க…. சரி கிளம்புற அப்ப பேசுவாங்கனு பார்த்தா அப்பயும் கிளம்புறேன்னு சொல்லிட்டு போயிடுறாங்க…. என்கூட பேசவே மாட்டிங்குறாங்க… பாப்பா பிறந்த வாட்டி அவங்க என்கூட பேசுனதை விரல் விட்டு எண்ணிடலாம்” என்று கூறினாள்….
“பாப்பா மேல பொறாமை படுறியா அம்மு” என்று கேட்டான்…. அவன் அவ்வாறு கேட்ட நொடி கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வந்துவிட்டது…..
அழுதவாறே “நீயே இப்படி நினைக்கலாமா மாமா…. என் குழந்தை மேல நான் எப்படி பொறாமை படுவேன்…. என் குழந்தை மேல என் அண்ணாங்க பாசமா இருந்தா எனக்கு சந்தோஷம் தான் மாமா… நீயே இப்படி கேட்டா மத்தவங்களும் இப்படி தானு நினைப்பாங்க…. ” என்று கூறி மேலும் அழுதாள்…
அச்சோ அம்மு சும்மா தான் கேட்டேன்… உன்னை பத்தி எனக்கு தெரியாதா… இதுக்கெல்லாம்மா அழுவாங்க… கண்ணை தொட முதல்ல என்று கூறி அவனே துடைத்துவிட்டான்….
தூங்கு நாளைக்கு பேசலாம் அவங்ககிட்ட…. அழுகாத.. என்று கூறி தட்டி கொடுத்தான்…. அவனை அணைத்தவாறே அவளும் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டாள்….. அவனும் கவிணித்து கொண்டு தான் இருந்தான்… எனவே இருவரிடமும் பேச வேண்டும் என நினைத்து தூங்கிவிட்டான்…
error: Content is protected !!