Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அன்பு நவியின் வினியின் நதி அத்தியாயம் 5

வினியின் நதி அத்தியாயம் 5

”பார்த்த முதல் நாளே
உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து
எனை அடித்தாய் கடலாய் மாறி பின்
எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே..”

என நதியின் மனதில் தினம் தினம் ஏதோ ஒரு வகையில் வினோதன் அவன் பேச்சாலும், செயலாலும் கொள்ளையடித்துக் (இடம் பிடித்து) கொண்டிருந்தான். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் உறவும் வளர்ந்தது.

வினோதனைக் காண தினமும் ஏதேனும் நொண்டிச் சாக்கை சொல்லி அவன் வகுப்பறைக்கு இடைவேளை நேரத்தில் செல்வாள் நதி. அந்தோ பாவம்.. அவன் தான் கல்லூரிக்கே தாமத வருகை. அவனா இடைவேளையில் வகுப்பில் இருக்க போகிறான்? என்றும் போல அன்றும் அவன் இடைவேளை நேரத்தில் வகுப்பில் இல்லை.



Advertisement

நதியின் மனமோ ’அதான பாத்தேன்.. டபராசெட்டு வாயன் அப்படியே இருந்துட்டாலும் க்கும்…’ என நொடித்துக் கொண்டது. ‘ஹேய்.. சும்மா இரு.. பாவம் அவன்.. எவ்ளோ வேலை பாக்கான்.. கொஞ்சம் ஓய்வு வேணும்ல அதான் வெளிய காத்து வாங்க போய்ருப்பான்’ (அட சும்மா எல்லாம் சொல்லலங்க.. நிஜமாவே வினோதன் மதியம் வகுப்பு முடிந்ததும், மாலை வரை அவன் தந்தை கடையில் வேலை செய்வான்.. மாலை முதல் இரவு வரை மொபைல் கடையில் வேலைக்கு செல்வான்… கொஞ்சம் உழைப்பாளி தாங்க நம்மலும் ஒத்துக்குவோம்) என மனச்சாட்சிக்கு சமாதானம் சொல்லி விட்டு, வந்ததற்கு காரிகாவிடம் பேசினாள்.

காரிகா கூட கேட்டாள். ”என்னடி கணக்கு காத்து, கணினி பக்கம் அடிக்கடி வீசுது?” என்று.

நதி சமாளிப்பாக, ”சும்மா உன் மேல ஒரு பாசம் தான் டி செல்லம்” என்றாள்.

Advertisement

”பாசம் என் மேல மட்டும்னா கூட பரவாயில்லையே.. பாக்குற பக்கமெல்லாம் பாசம் போற மாதிரில இருக்கு” என நதி எப்போதும் வகுப்பறையை சுற்றி பார்த்து பேசுவதை வைத்து காரிகா நதியை கலாய்க்க,

Advertisement

” பாக்குற பக்கமெல்லாம் பாசமா இருக்குறதுல தப்பில்ல… எல்லாரும் பாக்குற மாதிரி என் பாசம் இருக்குறது தான் தப்பு போல” என நதியும் பேச,

”ஏன் டி எப்ப பாத்தாலும் புரியாமயே பேசுற? சுத்தி வளைக்காம நேராவே கேக்குறேன். உனக்கு எங்க வகுப்பில் யாரையாச்சும் பிடிச்சுருக்கா..?” என காரிகா கேட்க,
”அப்படியா நான் நடந்துக்குறேன்… நான் உன்ன அடிக்கடி பார்க்க வரதால அப்டி கேக்குறயா? பாசம் வச்சாலே இப்டி தான் போல.. என்னைப்போய் இப்டி சந்தேகப்பட்டயே கோபால்” என நதி காரிகாவை பாவமாக கேட்க,
அவள் பேசிய பேச்சில் ஒரு நிமிடம் காரிகாவே குழம்பி போனாள்.. ’இவ இருக்குனு சொல்றாளா, இல்லனு சொல்றாளா?’
”என்னடி சொல்ல வர்ற?” என காரிகா கடுப்பாக,
”நான் என்ன சொல்ல வரேன்னா பப்ளிமாஸ்…” என நதி ஆரம்பிக்க,
”நிறுத்து… நீ எதுவும் சொல்ல வேண்டாம்… உன் பாசத்தப் பார்த்து எனக்கு புல்லரிக்கு..இப்ப நீ உன் வகுப்புக்கு போ.. நேரமாச்சு” என காரிகா சொல்லவும், இடைவேளை முடிந்ததற்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
நதியும் நேரமாவதால் ”வர்ட்டா செல்லம் டுர்ர்ர்ர்ர்” என கிளம்பி விட்டாள்.
முதலாம் ஆண்டு முதல் பருவத்தேர்வு ஆரம்பமாவதால் அனைவரும் தேர்வில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.
நதியும் வாலை சுருட்டிக்கொண்டு கணினிப்பிரிவின் பக்கம் செல்லாமல் படிக்கத் தொடங்கிவிட்டாள். அதற்காக வினோதனை நினைக்காமல் எல்லாம் இல்லை.
’கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில…
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல…
யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவன போல…
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல…’
என அவள் கிரஸ் வினோதனை தினமும் ஏதாவது ஒரு செயலில் நினைத்துக் கொள்வாள். அடிக்கடி முகநூலில் வினோதன் சுயவிவரத்தை, அவன் புகைப்படத்தை வெகுநேரம் ரசிப்பாள்.
நதியின் சகோதரி ரமாவுக்கு வளைபூட்டு நிகழ்ச்சி முடித்து அவளை தாய் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். ரமாவும் தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அழகான ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.

நதி வீட்டின் கடைக்குட்டி ஆதலால் அவளுக்கு அந்த குழந்தை ஒரு பொம்மை போலவே இருந்தான். அவனை தூக்கத்தில் எழுப்புவதும், அவனை கிள்ளுவதும் என அவள் விடுமுறை நாட்கள் விறுவிறுப்பாகவே சென்றது.

Advertisement

மீண்டும் கல்லூரி திறந்து நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. அப்போது வினோதன் ஒரு நாள் முகநூலில் பேசுகையில் தான் உள்ளூர் ஒளியலை தொகுப்பாளர் (Local Channel Anchor) ஆக முயற்சிக்க இருப்பதாக தெரிவித்தான்.
’பாருடா இனி நம்மாள பாக்குறதுக்கு கூட அப்பாய்ண்ட்மெண்ட் கேக்கனும் போல’ என எண்ணிக் கொண்டு அவனுக்கு வாழ்த்து தெரிவித்தாள்.

அதே போல் அடுத்த மாதம் உள்ளூர் ஒளியலையில் தொகுப்பாளராக சேர்ந்தான். அந்த நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பானது. வினோதனின் பேச்சாளும், பலகுரல் திறமையாலும் பல நேயர்களை ஈர்த்தான்.
கல்லூரியிலும் அவனுக்கு தனி ரசிகையர் பட்டாளமே இருந்தது.
’ஆஹா.. சும்மா இருந்தாலே இப்ப இருக்குற பசங்கள உஷார் பன்றது கஷ்டம்.. இதுல இவன எப்டி உஷார் பன்றது?’ என அவள் எண்ண, ’அவன எதுக்கு நீ உஷார் பண்ணனும்? அவன் உன் கிரஷ்-னு தான சொன்ன?’ என அவள் மனசாட்சி கேள்வி கேட்க,
’கிரஷ் தான்… கொஞ்சம் நெருக்கமான கிரஷ்.. அவன பிடிக்கும் தான்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்’ என அவள் மனசாட்சிக்கு நதி பதில் சொல்லிவிட, ‘ஓ… அப்போ வினோ உனக்கு காதலன் ஆ?’ என அவள் மனசாட்சி சொல்லியதும் தான் நதிக்கு சுருக்கென்றது.
‘இவ்ளோ நாள் அவன பிடிக்கும் தான நெனச்சேன்… இப்ப எனக்கே அவன விட்டு குடுக்க மனசு வரலயே.. ஏன்? ஒரு வேளை நிஜமாவே அவன காதலனா நெனைக்க ஆரம்பிச்சுட்டேனோ?.. ஆனா அது என் கொள்கைக்கு சரிவராதே’ என நதி சுய அலசலில் இறங்கிவிட்டாள்.

இறுதியாக நதி உணர்ந்தது… ’அவளுக்கு வினோதனை மிகவும் பிடிக்கும்.. அவன் இல்லாமல் அவளால் இருக்க முடியாது என்றில்லை .. ஆனால் அவன் இருந்தால் அவள் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது.. இதற்கு பெயர் காதல் என்றால் அப்படியே இருக்கட்டும்.. அவனுக்கு வேறு யாரையும் பிடித்தது போல் தெரியவில்லை.. அவனுக்கு என்னை பிடிக்கவில்லை என்றாலும் ஒன்றுமில்லை.. நண்பர்களாகவே இருக்கலாம்… எனக்கு பிடித்தவர்களுக்கும் என்னை பிடிக்க வேண்டுமென்று அவசியமில்லையே’ என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.
‘நேரம் வரும்போது அவனிடம் பிடித்தத்தை தெரிவிப்போம்… அவனுக்கும் பிடித்தால் மேட்சிங் (Matching) இல்லையென்றால் கிளாசிங் (Clashing)’ என நதி நினைத்துக் கொண்டாள்.
ஒரு நாள் இரவு ஒளியலை நிகழ்ச்சியில் வினோதனைப் பற்றி தெரிந்து கொள்பவர்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறினான். அவனுக்கு பிடித்த நடிகர், நடிகை, கலர், அவன் வாழ்க்கை குறிக்கோள் என்று பலர் பல வித கேள்விகளைக் கேட்டனர். நதி அவள் பக்கத்து வீட்டு தோழியுடன் தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நதியும், நிகழ்ச்சிக்கு தொடர்பு கொண்டு அவள் தோழியை பேச வைத்தாள். ’’உங்களுக்கு இந்த உலகிலேயே உங்க அம்மாவ தவிர பிடிச்ச பொண்ணு பேர் என்ன?” என அவள் கேட்க எண்ணிய கேள்வியை அவள் தோழியின் மூலம் கேட்க வைத்தாள்.

வினோதனும் சிரித்துக் கொண்டே, ”நீங்க எங்க இருந்து பேசுறிங்க? உங்க பேர் என்ன?” என கேட்டான். நதி தோழியும் ”என் பேரு ஐஸ்வர்யா… நான் மதுரையில் படிக்கேன்… லீவுக்கு ஊருக்கு வந்துருக்கேன்…” என கூறினாள்.
வினோதனும் ”உலகத்திலயே எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச பொண்ணு அம்மா தான்… நீங்க அம்மாவ தவிர ஒரு பேர் கேக்கிங்க?.. நீங்களா இருந்தா யார் பேர சொல்விங்க சொல்லுங்க?” எனக் கேட்டான்.
நதி தோழியோ “அம்மாவ தவிர பிடிச்சதுனா… என் நண்பர்கள் பேர சொல்லுவேன்…” என்றாள்.
”நீங்க பொண்ணு.. உங்க தோழிகள் பேர ஈசியா சொல்லலாம்.. நான் யார் பேர்-ங்க சொல்வேன்?” என வினோதன் கேட்க,
“ஏன் சொல்லக்கூடாது… உங்க மனசுல இருக்குற பேர சொல்லலாமே?”
”சரி சொல்றேன்… சாதாரணமா இருக்கையில் நிசப்தமாகவும், மனசு சந்தோசஷமா பார்க்கையில் சலசலன்னும், இடி, மின்னல்-னு பேய் மழை பெய்கையில் ஆக்ரோஷமாகவும் இருக்குற நதின்னா எனக்கு ரொம்ப பிடிக்குங்க… நதின்னா கங்கையா, யமுனையா, காவேரியானு கேட்காதிங்க… நதின்னாலே பிடிக்கும்… நதியும் பொண்ணு பேர் தான… நதி பேர் எனக்கு பிடிக்கும்-ங்க .. நதின்னு என் வாழ்க்கைல யாரச்சும் பொண்ணு இருக்கானு கேக்காதிங்க.. இல்லாமலும் இருக்கலாம்… நீங்க கேட்ட கேள்விக்கு பதில் நதி… எனக்கு எங்க அம்மா பேர தவிர ஒரு பேர் பிடிக்கும்னா அது நதி தாங்க” என வினோதனும் ரசித்துக் கூற,
”அப்ப நதின்னா உங்க சகோதரின்னு எடுத்துக்கலாமா?” என ஐஸ்வர்யா கேட்க,
”யாரா வேணாலும் இருக்கலாம்… என் தோழியாவும் இருக்கலாம், காதலியாவும் இருக்கலாம், என் வருங்காலமாவும் இருக்கலாம், அதாவது வருங்கால என் குழந்தை பேராக் கூட இருக்கலாம்… இதுக்கு மேல நான் எதாவது சொன்னா வீட்ல சாப்பாடு கிடைக்காதுங்க… நீங்க உங்களுக்கு பிடித்த பாடல் சொல்லுங்க.. நாங்க பிளே (Play) பன்றோம்” என வினோதன் பேச்சை மாற்ற,
ஐஸ்வர்யா-வும் ”உங்களுக்காக நான் ஒரு பாடல் டெடிகேட்(dedicate) பன்றேன்.. ரோஜா படத்தில் இருந்து காதல் ரோஜாவே பாடல் போடுங்க ப்ளீஸ்” என கேட்க,
வினோதனும் ” ஐஸ்வர்யா- வுடன் அவர் கேட்ட பாடல் உங்களுடன் சேர்ந்து நானும் ரசிக்க உங்களுக்காக இதோ…” என அந்த பாடலை ஒளிபரப்பினர்.
வினோதனின் பேச்சைக் கேட்ட நதியும் அவனின் கூற்றில், ரசனையில், வர்ணனையில் உருகிவிட்டாள்.
”யாரா வேணா இருக்கலாமாம்டி.. தோழியாம், காதலியாம், வருங்காலமாம், குழந்தைக்கு கூட பேரா இருக்குமாம்…” என அவள் தோழி ஐஸ்வர்யா-யும் அவளை ஓட்டித் தள்ளினாள்.
வினோதனுக்கும் நதியைப் பற்றி பேசியதும் அவள் நினைவாகவே இருந்தது.. ’அவள் நிகழ்ச்சியைப் பார்த்திருப்பாளா? அவளிடம் பேசலாமா?.. அவள் எதுவும் தவறாக நினைத்து விடக்கூடாதே’ என முகநூலை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
ஏனென்றே தெரியாமல் பெண் பெயர் கேட்டதும் அவனுக்கு நினைவு வந்தது நதி பெயர் தான்… ’தினமும் அவன் தொகுத்து வழங்குவதைப் பார்த்து நிறை, குறைகள் அனைத்தையும் சொல்லும் அவளை எப்படி பிடிக்காமல் போகும்?’
’காதலா என்றால் ஆமாம் என்றே தைரியமாக சொல்வான்… ஆனால் இந்த பிடித்தம் அவளுக்கும் இருக்குமா என்றால் அது அவனுக்கு தெரியாதே.. அழகாக பேசுவாள், செல்ல சேட்டைகள் செய்வாள், குறும்புதனம் அதிகம், நன்கு படிக்கும் பெண் வேறு.. என்னால் அவள் படிப்புக்கு பாதிப்பு வரக்கூடாது.. நண்பனோ, காதலனோ அவள் கனவுகள் நிறைவேற கண்டிப்பாக அவள் உடன் இருப்பேன்’ காலம் அனைத்தையும் சேர்க்கும் என வினோதன் நினைத்துக் கொள்ள,
‘பெப்பர் (Pepper) மண்டையன் எதுவும் சொல்லாம மறச்சு வச்சுருக்கானே… இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே… அவனுக்கும் என்ன பிடிக்கும் ஜாலி ஜாலி’ என நதியும் அவனை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!