Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கொஞ்சம் பார்த்து விடு, கொஞ்சம் பேசி விடு – 9

 அன்று மதியம் ப்ரீத்தியையும் ப்ரியாவையும் தங்களுடனே மதிய உணவை வற்புறுத்தி சாப்பிட வைத்தார் கீர்த்தி.

மாலை வரையுமே அங்கேயே இருந்தவர்களை மழை வரும் போல் இருந்ததால், நாகுவை காரில் கொண்டு விட சொன்னார் அவர்.

“உன் ஸ்கூட்டியை காலையில் உன் வீட்டுக்கு கொண்டு வந்து நாகு விடுவான். இப்ப நீங்க காரில் போங்க” என்று சொல்லி அவர்களை தங்கள் வீட்டு காரில் அனுப்பி வைத்தார் கீர்த்தி.



Advertisement

ப்ரீத்தி, தன்னுடைய வேலை பற்றிய அப்டேட்ஸ் எல்லாம் ராதாகிருஷ்ணனுக்கு தெரிவித்துக் கொண்டு தான் இருந்தாள்.

இப்போது பர்ச்சேஸ் டிபார்மென்டில் ஓரளவு நன்றாகவே தெரிந்து கொண்டு விட்டதால், அடுத்து அவளை ப்ராஜெக்ட் ஈஸ்டிமேசன் செய்யும் போது அவளையும் கூட வைத்துக்  கொள்ள சொல்லி ராகுலுக்கும் சுமிக்கும் சொல்லி விட்டார்.

“நீ இங்கயும் போய் கத்துக்கோ ப்ரீத்தி, நீ இந்த கம்பெனியில எல்லா வேலையும் கத்துக்கணும்.

Advertisement

கொஞ்ச நாள் கழிச்சு நானே உன்னை சைட்டுக்கும் கூட்டிட்டுப் போறேன். அங்கயும் போய் பார்த்து தெரிஞ்சுக்கோ! டிசைனிங்கில் மட்டும் நீ தலையிடாதே, அது ராகுல் ஏரியா, அது உனக்கு புரியறதும் கொஞ்சம் கஷ்டம்!” என்றார் ராதாகிருஷ்ணன் அவளிடம்.

Advertisement

இப்போதெல்லாம் ப்ரீத்தி, ராகுலுடன் சேர்ந்து ப்ரபோசல், எஸ்டிமேசன் வேலைகளில் ஈடுபடுகிறாள்.

வேலையைப் பொறுத்த வரை அவள் கற்பூர புத்தி, நல்ல ஞாபக சக்தி வேறு! ஒரு தரம் சொன்னாவே போதும் என்ற அளவில் இருந்தாள்.

ராகுலுக்கும் அவளை ட்ரைன் பண்ணுவது கொஞ்சம் ஈசியாகவே இருந்தது.

Advertisement

சுமியும் அவளோடு நன்றாகவே பழகினாள்.

இயல்பில் அவளுக்கும் கொஞ்சம் நேர்மையான குணம் என்பதால், இருவருக்கும் கொஞ்சம் ஒத்துப் போயிற்று.

சுமியும் எந்த ஒளிவுமறைவு இன்றியும், சீனியர் பந்தா இல்லாமலும் எந்த ஈகோ பார்க்காமலும்  அவளுடன் பழகினாள்.

ப்ரீத்தியின் பெர்பெக்சன் பார்க்கும் குணம் அவளுக்கு பழகிய சில நாட்களில் புரிந்து போய் விட்டது.

சுமியும் நல்லப் பெண் தான். அவள் ஈகோ பார்க்காமல், ப்ரீத்திக்காக கொஞ்சம் அவளும் செய்யும் வேலையில் கொஞ்சம் பெர்பெக்சன் காட்ட அவளுமே முயற்சித்தாள்.

ப்ரீத்தியும் அவளின் தவறுகளை ரொம்பவும் ஹைலைட் செய்யாது, முடிந்தவரை சுமிக்கே தெரியாமலும், அல்லது தெரிந்தாலும் அவள் வருந்தும்படிக்கோ, இல்லை சங்கடப்படும்படியோ இல்லாமல் அவள் செய்திருக்கும் சில சில தவறுகளை சரி செய்து விடுவாள்.

கொஞ்ச சில நாட்களிலேயே ப்ரீத்திக்கு, சுமி பேசுவதில் இருந்து அவள் லைப் ஸ்டைல், அவள் புருஷன் நந்த கிஷோர், நொந்த கிஷோர் மாதிரி இருப்பதும் அவள் வாயாலேயே அறிந்து கொண்டாள்.

எவ்வளவு நல்லப் பெண், இந்த சுமி, இப்படி லூசு மாதிரி, கோவில் குளம் என்று சுற்றிக்கொண்டு கணவனை கவனிக்காமல் இருக்கிறாளே என்று அவள் மேல் கொஞ்சம் கோபம் கூட வந்தது!

எதுவுமே அளவுடன் தானே இருக்க வேண்டும்! அது பக்தி என்றாலும் கூட!

சுமியை ஒரு சகோதரி போல நினைத்த அவள், அவளை எப்படியாவது கொஞ்சமேனும் மாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.

ஆரம்பத்தில் சுமி அவள் வேலைகளை இவளிடம் தள்ளி விட்டு, ஏதாவது கோவில் பூஜை என்று கிளம்பினால், ப்ரீத்தி அவள் வேலைகளை எடுத்து செய்து கொண்டிருந்தாள்.

அதிலும் ராகுலின் நக்கல் கமெண்ட்களை மீறி!

ராகுல் அவளை வெறுப்பு ஏற்ற வேண்டுமென்றே,

“என்ன சுமி, இப்படி இந்த வேலைய பெண்டிங் வச்சுட்டு லீவு கேக்குற?”

“ராகுல், அத ப்ரீத்திக்கு சொல்லிக் கொடுத்து இருக்கேன் அவ பார்த்துப்பா”

“என்ன பார்த்துப்பா, இவள மாதிரி கத்துக் குட்டிய நம்பி அவ்வளவு பெரிய டாஸ்க்கை கொடுக்க முடியாது”

“கத்துக்குட்டியா, நானா! ஏண்டா டேய்! என்னோட டிராப்ட் டாகுமென்ட்டே பைனல் டாகுமென்ட் மாதிரி ஒரு தப்பு கூட இல்லாம இருக்கிறத  நீயே பல முறை பார்த்துட்டு சைலண்டா ஓகே பண்ணி இருக்க, அப்படி இருக்க, கத்துக் குட்டியா நான்!” என்று கோபப்பட்டு அவனை முறைப்பாள்!

அவனுக்கும் அது தானே வேணும்!

அவன் இது மாதிரி எதாச்சும் வம்பு செய்து அவளை டீஸ் பண்ணிக் கொண்டே இருந்தான்!

சுமியை அப்படி கோவிலுக்கு போறதுக்கு லீவ் எடுக்க, இப்போதெல்லாம் ப்ரீத்தியும் விடுவதில்லை!

வேண்டும் என்றே வேலையில் டவுட் கேட்டு கேட்டு அவளை லீவு எடுக்க விடாமல் நிறுத்தி வைத்தாள்.

 கூடவே வேலை டிலே ஆக ஆக, ராகுலுக்கு டென்சன் ஏற்றி விட்ட அல்ப சந்தோசமும் கூட!

ராகுல் அவளை சீண்டும் போது எல்லாம் அவளும் வேண்டும் என்றே ரொம்ப வேலையை முடித்து விட்டும் கூட அவனிடம் ரிப்போர்ட் செய்யாமல், தன்னிடமே வைத்துக் கொண்டு, அவனுக்கு கடைசி நேரம் வரை B.P ஐ ஏற்றி விட்டு, அப்புறம் கொடுப்பாள்.

கூடவே , ஒரு படத்தில் டீக்கடை நடத்திக் கொண்டு இருக்கும் ஊர்வசி, கவுண்டமணியிடம் “வணக்கம் வணக்கம்” என்று சும்மா சும்மா  சொல்லிக் கொண்டு டீ போட தட்டு தடுமாறும் காட்சி போல, “சாரி சார் சாரி சார்” என்று சொல்லி தட்டு தடுமாறுவது போல வேண்டுமென்றே கம்ப்யூட்டரில் தடுமாறுவாள்! தடுமாறுவது போல நடிப்பாள்.

முதலில் இதை கொஞ்சம் நம்பிய ராகுல், பின் ஒரு நாள் அவளின் பைல் ப்ராபர்ட்டியில் போய் செக் செய்து பைல் கிரியேட்டட், மாடிபைட் டைம் டேட் பார்த்து விட்டு, இவளின் கேமை தெரிந்து கொண்டான்!

“ஏண்டி என்கிட்டே உன் வேலையை காட்டுறியா? இருடி இன்னும் உன்னை என்ன செய்றேன்னு பாரு”! உள்ளுக்குள் செல்லமாக திட்டிக் கொள்வான்.

உள்ளுக்குள் அவளை இன்னும் ரொம்ப  காதலிக்க ஆரம்பித்தான்.

இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் அந்த செல்ல சண்டைகள் மட்டும் இன்னும் முடிந்த பாடில்லை!

அவனும் அவளை சீண்டிப் பார்ப்பதையும் விடுவதாக இல்லை!

அன்று ஒரு சனிக் கிழமை.

வழக்கம் போல் சுமி லீவ்! ஆனால் இந்த கோவில் போக வில்லை, வேறு எங்கோ அவள் கிஷோர் கூட வீக் எண்டு ட்ரிப்பாக வெளியூர் சென்றிருக்கிறாள்!

ப்ரீத்தியும் ராகுலும் சேர்ந்து ஒரு முக்கியமான டாகுமென்ட் ஒன்றை தயாரித்தார்கள்.

அடுத்த திங்கள் அன்று மீட்டிங்கிற்கு தேவையான முக்கிய எஸ்டிமேசன்!

ப்ரீத்தி அதை cloudலும் ஒரு பென் டிரைவிலும் ஸ்டோர் செய்திருந்தாள்.

பெண் டிரைவை தன்னுடன் வைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் ஞாயிறு அவளின் அத்தை பத்மாவின் கணவருக்கு அறுபதாம் பிறந்த நாள்!  வீட்டில் சின்ன விருந்து!

அவருக்கு ஐம்பது ஒன்பது வயது ஆரம்பத்திலேயே அறுபதாம் கல்யாணம் முடித்து விட்டதால், இப்போது வெறும் பிறந்த நாள் கொண்டாட்டம் மட்டுமே!

அதைப் பற்றி சுமியிடம் ப்ரீத்தி பேசிக் கொண்டிருந்ததை ராகுலும் கேட்டிருந்தான்!

அந்த விழாவிற்கு ப்ரீத்தி தான் எடுத்து இருக்கும் புடவைப் பற்றி, ப்ளவுஸ் மாடல் பற்றியெல்லாம் வழக்கமாக இரு ஆபீஸ் பிரண்ட்ஸ் பேசிக் கொள்வது போல யதார்த்தமாக சொல்லியிருந்தாள் ப்ரீத்தி.

இப்போது ராகுலுக்கு அவளை அந்த சாரியில் பார்க்க ஆசை!

ஆனால் விழாவிற்கோ அவனுக்கு அழைப்பே இல்லை!

என்ன பண்றதுன்னு யோசித்த அவன், பனிரெண்டு மணியளவில் அவளை போனில் அழைத்து “கொஞ்சம் ஆபிஸ் வந்து விட்டு போ! ரொம்ப அர்ஜென்ட் ! வேணுமின்னா மண்டே  ஹாப் டே ஆப்  எடுத்துக்கோ, இப்போ கண்டிப்பா வந்தே ஆகணும்” என்று சொன்னான்!

ப்ரீத்தியும் அதை நம்பி, “ரொம்ப அர்ஜென்ட் வேலைன்னு சொல்றான், போய் செஞ்சு கொடுத்துட்டு வரலாம்” என்று நினைத்துக் கொண்டு அத்தையிடம் மட்டும் சொல்லி விட்டு, அவள் அம்மா ஆனந்தி “எங்கேடி இப்ப கிளம்புற” என்று கேட்பதையும் பொருட்படுத்தாமல், ஸ்கூட்டியை எடுக்க, ப்ரியாவோ, “வண்டி இங்க வேண்டும் அவசரமா எதாச்சும் வாங்கும்னா”, என்று சண்டையிட, அபிஷேக் அவளை ஆபிசில் டிராப் பண்ணுவதாக சொல்லி அழைத்து சென்று விட்டான்.

வேலை முடிஞ்சவுடனே “எதாச்சும் கேப் புக் பண்ணி வந்துடு” என்று சொல்லி இறக்கி விட்டு சென்றான்.

ஆபிசிற்குள் சென்ற ப்ரீத்தி அங்கே ராகுலை பார்த்து “என்ன ஒர்க் சார்” என்று கேட்க, அவனோ அவளிடம் பதில் சொல்லாமல் சைகையில் அவளை உட்கார சொல்லி விட்டு யாரிடமோ போனில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.

போன் பேசும் சாக்கில் அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் மெஜந்தா கலரில் சின்னதாக ஜரிகை வைத்து சிம்ப்ளா இருந்தாலும் அந்த சாரியில் அவள் அவனுக்கு தேவதையாகவே தெரிந்தாள்!

காதில் குடை ஜிமிக்கி, குட்டி நெக்லஸ், ஒரு லாங் செயின், கைகளில் நிறைய மேட்சிங்காக பேன்சியான வளையல்கள்! மெகந்தி என்று வழக்கமாக அலங்காரத்தில் ரொம்ப மெனக்கிடாத ப்ரீத்தி அன்று கொஞ்சம் தன்னை அலங்கரித்து கொண்டு மிகவும் அழகாகவே இருந்தாள்!

தலையில் வேறு நீண்ட மல்லிகை சரம்!

ராகுல் அப்படியே கொஞ்சம்   பிளாட் ஆகி விட்டான்!

அவளை இப்படி பார்க்கவென்று தானே இல்லாத அர்ஜென்சியை சொல்லி அவளை வர வைத்து இருக்கிறான்!

அவன் இப்படி குதூகலத்தில் இருக்க, அங்கு ப்ரீத்தியோ அப்படியே பாயிலிங் பாயிண்ட்டில் இருந்தாள்.

அவள் அவன் பேசுவதற்காக வெயிட் பண்ணிய நேரத்தில் அவளுக்கு ஒரு போன் வேறு வந்து அவளை இன்னும் கோபப்படுத்தி இருந்தது!

யாரோ ஒருவன் போனில் கொஞ்சம் வடக்கத்திய தமிழில்,

“மேடம் நான் பாங்கில் இருந்து மேனேஜர் பேசுறேன்! உங்க அக்கவுண்ட்ல கொஞ்சம் ப்ரோப்ளம் இருக்கு, உங்க ATM கார்ட் மேலே இருக்கிற நம்பர சொல்லுங்க!” என்றான்

“டேய்..” அவளை பல்லைக் கடித்தாள்! “உலகம் எங்கோ போயிட்டு இருக்கு AI பின்னாடி, நீ இன்னுமாடா இந்த பழைய டெக்னிக் யூஸ் பண்ணிட்டு இருக்கீங்க, போனை கட் பண்ணிட்டு ஓடி போய்டு, இல்ல எனக்கும் ஹிந்தில நிறைய கேட்ட வார்த்தை தெரியும்” என்று கத்தி போனை கட் செய்து இருந்தாள்!

இப்போது, ராகுலும் போனை வைத்து விட்டு,

“ப்ரீத்தி நேற்று நாம் ப்ரிபேர் செஞ்ச டாகுமென்ட் cloud ல ஸ்டோர் பண்ணியிருக்க இல்ல, அதுல கொஞ்சம் கரெக்சன்ஸ் இருக்கு! அதனால அதோட க்ரடேன்சியல்ஸ் (credentials) (யூசர் நேம் பாஸ் வேர்ட்)கொஞ்சம் தரியா?”

“சார் இத போன்லையே கேட்டு இருக்கலாமே, நான் இதுக்காக அவ்வளவு தூரம் என் அத்தை வீட்டுல இருந்து வந்திருக்கேன்!” ப்ரீத்தி பல்லைக் கடித்த படி கேட்டாள்.

“ஓ ஆமா இல்ல, கேட்டு இருக்கலாம், எனக்கு தோணவே இல்ல சாரி ப்ரீத்தி.” அவன் ரொம்ப ஈசியாக சொல்லி விட்டான்!

அவள் பயங்கர கோபத்தோடு, அவன் கேட்ட விவரத்தைக் கொடுத்து விட்டு கேப் புக் பண்ணி கிளம்பினாள்.

வீட்டிற்கு சென்றும் அவளின் கோபம் அடங்க வில்லை!

யார் கேட்டும் அவள் பதிலும் சொல்ல வில்லை.

அவளாக நார்மல் ஆகட்டும் என்று அவர்களும் மேலும் கேட்காது அப்படியே விட்டு விட்டார்கள்!

ப்ரீத்தி வெளிக் காட்டாத முடியாத கடுங்கோபத்தில் இருக்கிறாள் என்று சில பல சிம்டம்சை வைத்து அவர்கள் வீட்டினர் அறிந்து வைத்து இருந்ததால் மேற்கொண்டு அவளை எதுவும் துருவி கேட்க வில்லை!

அடக்க முடியாத அளவு ப்ரீத்திக்கு கோபம் வந்து விடும் சமயங்களில் அவள் வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் வினோதமாக நடந்துக் கொள்வாள்!

அவளுக்கு அம்மா மேலோ அல்லது அத்தையிடமோ கோபம் வந்து விட்டால், அவள் கோபத்தைக் காட்ட, வேண்டுமென்றே டி சர்ட் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு வீட்டுக்குள் வலம் வருவாள்!

வீட்டுக்குள் மட்டுமே! அப்புறம் சோகமாக இருந்தால் கன்னா பின்னாவென்று வளைத்து வளைத்து சாப்பிடுவாள்!

ஒருமுறை அவள் பெரிய மனுஷி ஆன பின்னும் அபிசேக் போலவே டி சர்ட் ஷார்ட்ஸ் அணிந்து இருப்பதைப் பார்த்து விட்டு அவள் அத்தை அதைப் போட வேண்டாம் என்று சொல்லியிருக்க,  அவள் மறந்து விட்டு ஒரு நாள் ஸ்கூல் விட்டு வந்தவள் வழக்கம் போல அதையே போட்டு விட்டாள்!

அப்போது பார்த்து அபிஷேக்கின் பிரண்ட்ஸ் வந்து விட, அவன் வெளியே சென்று விட்டான் அவர்களோடு!

அத்தைக்கு கோபம் வந்து விட்டது.

“ஏண்டி நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீ அதையே போட்டுக்கிட்டு நிக்குற! அபி என்னதான் உன்னை அவன் பாப்பாவாக நினைத்தாலும் அவனும் ஒரு வயது ஆண் பிள்ளை!

அவன் முன்னால் நீ இப்படி இருப்பது தப்பு! நல்ல வேளை அவன் பிரண்ட்ஸ் வீட்டுக்குள்ள வரல, அப்படியே வெளியே போய்ட்டாங்க! இனிமே இப்படி இருந்தே, அடி பிச்சுடுவேன் பிச்சி!”  என்று சொல்லி  அவளை அடித்தும் விட்டார் பத்மா!

அத்தை அடித்து விட்டதால் ப்ரீத்திக்கு பயங்கர கோபம்!

உம்மென்று ஒரு ஸ்கர்ட்டை எடுத்து அதன் மேல் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்க, வெளியே சென்று இருந்த அபிஷேக் கூட வந்து கிண்டலாக கேட்டான்

“எங்கம்மா, என் தம்பி டவுசர் பாண்டிய காணோம்”.

பேசாதே, போடா! ப்ரீத்தி தலையை திருப்பிக் கொண்டாள்!

“ஏம்மா, அவ இன்னும் சின்ன பொண்ணு தானே! வீட்டுல கூட அவ ப்ரீயா இருக்க கூடாதா?”

“என்னடா சின்ன பொண்ணு பத்தாவது படிக்கிறா! இனிமே இப்படி எல்லாம் போடக்கூடாது!”

அதன் பின் அவள் அத்தை சொன்ன படியே தான் உடை அணிவாள் என்றாலும், என்றாவது அவளுக்கும் அத்தைக்கும் முட்டிக் கொண்டுவிட்டால், அல்லது ஆனந்தி மேல், இல்லை வீட்டில் யார் மேலாவது கோபம் என்றால், அவள் அப்படி தான் ட்ரெஸ்ஸில் அலைவாள்.

அவள் சின்னப் பெண்ணாக இருந்த போது ஒரு நாள் டிவியில் பார்த்த பிஸ்தா பட நக்மா எபக்ட்!

இப்போதும் பி ஜியே முடித்து விட்ட பின்னும் எப்போதாவது இப்படி நடந்து கொள்வாள் அவள் கோபம் கொண்டால்!

இன்றும் அவளுக்கு ராகுலின் மேல் காட்ட முடியாத கோபம்!

பங்க்சன் முடிந்து அவள் அம்மா வீட்டுக்கு வந்து விட்டாள்.

வந்து ஒரு ட் ஷர்ட், தொடை வரை உள்ள  சார்ட்ஸ் அணிந்து கொண்டு அவள் ரூமிற்கு போய் கதவை படாரென்று சாத்திக் கொண்டு விட்டாள்!

மறு நாள் திங்கட்கிழமை காலை எட்டு மணி!

ப்ரீத்தியை ரொம்ப கடுப்பேத்தி விட்ட பின், ராகுலுக்கும் கொஞ்சம் தான் பண்ணியது ஜாஸ்தி என்று தோன்றிட, மறுநாள் காலை அவளை வீட்டில் சென்று சமாதானம் செய்ய நினைத்து அவள் வீட்டிற்கே சென்றான்!

“என்ன காரணம் சொல்லிக் கொண்டு போவது என்று நினைத்து,

“ ஹாங் அந்த பென் டிரைவ் வேண்டும் அவசரமா, அதில் வேறு சில தகவல் இருக்கு” என்று ஒரு நொண்டி சாக்கு தயார் பண்ணி வைத்துக் கொண்டே  அவள் வீட்டிற்கு சென்றான்

அப்போது அவள் அம்மா ஆனந்தி உழவர் சந்தைக்கு சென்று இருந்தாள். அவள் தன் தோழிகளோடு அரட்டை அடித்து வர பத்து மணிக்கு மேல் ஆகி விடும்!

ப்ரீத்தியின் அப்பா பிரகாஷ் வெளியே சென்று இருந்தார்!

ப்ரீத்தி கையில் பக்கெட் மாப் ஸ்டிக் எடுத்துக் கொண்டு அவள் வீட்டின் ஹாலை துடைக்க வந்தாள்.

அவள் அப்படி வந்ததை பார்த்த அடுத்த நிமிடம் ப்ரியாவும் நாய் ராக்கியும் அந்த இடத்தை விட்டு கிளம்பி மாடிக்கு சென்று விட்டார்கள்!

இல்லையென்றால் யார் அவளிடம் கன்னாபின்னான்னு திட்டு வாங்குவது!

“சும்மா அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து கால் காலா ஆக்கிடாதீங்க” என்று கத்த ஆரம்பித்து விடுவாள்!

சும்மா நாள்லயே பயங்கரமா திட்டுவாள், இப்போது கோபத்தில் வேறு இருக்கிறாள்!

அதனால் அவர்கள் இருவரும் சத்தமில்லாமல் அந்த இடத்தை காலி செய்திருந்தனர்!

ப்ரீத்தியும் காதில் ப்ளூ டூத் ஹெட் போனை மாட்டி பாட்டு கேட்டுக் கொண்டு வீட்டை மாப் பண்ண தொடங்கினாள்.

அப்போது பார்த்து அங்க வந்த ராகுல், வீட்டின் பால்கனியில் ப்ரியாவும் அவன் எதிரி அந்த ராக்கியும் இருப்பதைப் பார்த்தபடியே வீட்டு காலிங் பெல்லை அழுத்தினான்!

காதில் ஹெட் போன் இருக்க ப்ரீத்திக்கு கேட்க வில்லை!

அவன்  மெல்ல கதவைத் தட்டி விட்டு வீட்டினுள் நுழைந்த அவன் ப்ரீத்தியை அந்த உடையில் பார்த்து விட்டு இன்ப அதிர்ச்சிக்குள்ளானான்!

“என்னடி இது, நான் உன் வீட்டுக்கு வந்து உனக்கு ஷாக் கொடுக்க நினைத்தால், நீ எனக்கு இப்படி ஷாக் கொடுக்கிற?”

என்று நினைத்துக் கொண்டே அவன் தரை ஈரமாக இருப்பதைக் கவனிக்காமல் காலை வைத்து, சர்ரென்று வழுக்கிக் கொண்டு போய், சற்று திரும்பியபடி மாப் பண்ணிக் கொண்டிருந்த  ப்ரீத்தியையும் தள்ளி விட்டு விட்டு அவனும் அப்படியே கீழே விழுந்து விட்டான்!

அவர்களின் கால் பட்டு, பக்கெட்டும் அதிலிருந்த லைசால் கலந்த தண்ணீரும் கொட்டி மேலும் அவர்களை கீழே தள்ளி விட்டது.

இப்போது ராகுலின் மேல் ப்ரீத்தி விழுந்து விட்டிருந்தாள்.

ராகுல் அப்படியே அவள் முகத்தைப் பார்த்தான்!

அவள் முகத்தில் அவனை தன் வீட்டில் கண்ட அதிர்ச்சி, ஏற்கனவே  இருந்த கோபம் இவற்றையும் தாண்டி அவள் கண்ணில் அவன் ஏதோ இன்னும் ஒன்றும் தெரிந்தது!

சட்டென ராகுல்,  தலையில் அடிபடாமல் இருக்கவென்று தன் தலைக்கு அடியில் வைத்திருந்த அவன் கைகளை எடுத்து அப்படியே தன் மேல் விழுந்திருந்த ப்ரீத்தியின் பின் தலையில் கை வைத்து தன் முகம் அருகே அவள் முகத்தைக் கொண்டு வந்து அவள் இதழ்களை அப்படியே கவ்விக் கொண்டு முத்தமிட்டான், ரொம்ப வன்மையாக!

இதை எதிர்பாராத ப்ரீத்தி தன்னை விடுவித்துக் கொள்ள முயல, அவனின் முத்தத்தின்  வன்மையும் அதிகரித்தது!

சில நிமிடங்கள் கழித்து, அவன் சட்டை பான்ட் முழுவதும் சோப் தண்ணீரால் ஈரமாகி விட்ட பின்னே அவனுக்கு உணர்வு வந்து அவளை விடுவித்தான்!

அவன் விட்டவுடன் உடனே கோபமாக எழுந்த ப்ரீத்தி,

“யூ…”  என்று அவனைத் திட்ட ஆரம்பிக்க, அவளை டக்கென்று கட்டியணைத்துக் கொண்டு “ஐ லவ் யூ டி!” என்றான்!

“டேய்..உன்னை..” அவள் பல்லைக் கடிக்க,

“கூல் பேபி, உனக்கும் என்னைப் பிடிச்சு தான் இருக்கு, உன் கண் என்கிட்ட சொல்லிடுச்சு! அதனால மாமா மேல கோபப்படாம, போய் ட்ரெஸ் மாத்திக்கோ, பாரு எப்படி ஈரமாச்சுன்னு! “ என்றான் சிரித்தபடியே.

“பிங்கி அங்க என்ன சத்தம்?” மேலே இருந்து பிரியாவின் குரல்!

“ஒண்ணுமில்ல, நீ இங்க வராதே” என்று அவளுக்கு சொல்லி விட்டு, ஜெயம் பட சதா போல

“போய்யா போ! என்று அவனுக்கு வாசலைக் காட்டினாள் கோபத்துடன்!

அவன் சிரித்த படியே, “சீக்கிரம் ஆபிஸ்க்கு வா டியர் நிறைய பேசணும் உன்கிட்ட” என்று சொல்லி விட்டு கிளம்பினான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!