Skip to content
Post Views: 1,349
அத்தியாயம் 8
அத்தனை வீரமாக பேசிவிட்டு சென்றவள் என்ன நினைத்தாளோ திரும்பி அவனின் கோப முகத்தை பார்த்தாள்.
கோபத்திலும் அவன் அழகாய் இருந்து தொலைக்க, ‘அட மானங்கெட்ட மனசே இப்படியா அவனுக்குள்ள குப்புற விழுந்து வைப்ப… அவன் என்ன திட்டினாலும், அடிச்சாலும் கொஞ்சம் கூட ரோசமே இல்லாம ரசிக்கிற…’ மங்கையின் ரோசக்கார மனம் அவளை கழுவி ஊற்றியது.
Advertisement
‘நீ என்னமோ சொல்லிக் கொள்… இந்த காதலுக்கு மானம், ரோசம் எல்லாம் இருக்காது…’ என்பதை போல் மீண்டும் வாசுவை நோக்கி நடந்தாள்.
Advertisement
“என்ன” என்பதை போல் அவன் புருவத்தை உயர்த்தி கேட்க, “நீ பேசற பேச்சுக்கு மூஞ்சில சுடு தண்ணி ஊத்தற அளவுக்கு கோபம் வருது. ஆனால் இந்த மானங்கெட்ட மனசு உன் பின்னாடியே சுத்தி சுத்தி வருது. ஐ லவ் யூ தேவ்….” என்றவள் பட்டென அவனது சட்டை காலரை பிடித்து இழுத்து அவனின் இதழில் அழுத்தமாக இதழ் பதித்துவிட்டு நகர்ந்தாள்.
Advertisement
என்ன நடந்தது என்பதை உணரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது வாசுவிற்கு. அதை உணரும் முன் அங்கிருந்து பாவை நகர்ந்திருந்தாள்.
Advertisement
“இவளை…” என பல்லைக் கடித்தவன் வேகமாக வெளியில் வர அவளோ மாடிப்படியின் அருகிலேயே சென்றுவிட்டாள். இவனிருந்த உயரத்திற்கு அவளை பிடிக்க நிமிடம் தேவைப்படவில்லை…
சட்டென அவளை நெருங்கியவன் கண்களால் தாயைத் தேட, அவர் முற்றத்தில் இல்லாமல் போகவும் எதை பற்றியும் யோசிக்காமல் பொம்மையை தூக்குவது போல ஒற்றைக் கையில் அவளை தூக்கிக் கொண்டான்.
“ஐயோ…” என பதறியவள் அப்போது தான் கவனித்தால் அவன் இடது கையால் தூக்கியிருப்பதை.
‘இதுதான் லெஃப்ட் ஹேன்ட்ல ஹெண்ட்டில் பண்றது போல. சோ ஸ்வீட்…’ என அந்த நேரம் பார்த்து மங்கையின் மானங்கெட்ட மனம் எட்டிப் பார்க்க, “த்தா ச்சீ ப்பே…” என அதனை விரட்டி விட்டவள்
“டேய் விடு டா குரங்கே, விட்டு தொலை டா, ஐயோ தெரியாம கொஞ்சமா கிஸ் குடுத்துட்டேன்… கல்யாணத்துக்கு அப்புறம் மொத்தமா தரேன். இப்ப என்ன விடு தேவ்…” என் அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் கத்தினாள்.
உன் கத்தல் எல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை என்பதை போல் நடந்தான். அவளை பொம்மை போல் தூக்கி வந்தது என்னவோ ஸ்டடி ரூமிற்கு தான். இடது கையால் தூக்கி வந்தவன் அவளை சுவரோடு சுவராக ஒட்டி நிற்க வைத்து
“உன் கை, காலை கட்டி தொங்க விடாலம்னு நினைக்கிறேன்.. நீ என்ன நினைக்கிற…” என்றான் கர்ஜனை குரலில்.
“நான்…” என்றுவிட்டு ஒற்றை விரல் கொண்டு அவனின் இதயத்தை தொட்டு “உன்னை நினைக்கிறேன்…” என்றாள் குறும்பாக. அவளது பதில் அத்தனை அதிர்ச்சி அவனுக்கு. மிரட்ட நினைத்து தான் தூக்கி வந்தான் ஆனால் அவளோ சற்றும் அசராமல் பதில் கூறியதில் திகைத்து போனான்…
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு ‘ரொம்ப படுத்துகிறோமோ?’ என்று தான் தோன்றியது.
காதலை குச்சி வைத்து மிரட்டி வர வைக்க முடியாதே… தனக்கு வந்தது போல் ஓர் மெல்லிய உணர்வு அவனுக்கும் வர வேண்டும் அல்லவா…
தன் காதலை கூறியதும் அவன் அடித்தது இன்றும் நினைவு வந்தது. பிடிக்கவில்லை என்பவனின் பின்னால் செல்ல துளியும் விருப்பம் இல்லை அவளுக்கு. அதற்கு அவளது தன்மானமும் இடம் கொடுக்கவில்லை…
உண்மையை சொல்லப்போனால் அன்றைக்கு பிறகு இதயாவின் திருமணத்தில் தான் வாசுவை கண்டாள். கண்ட நொடி முதல் கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் அவனை சுற்றியே அவளது பார்வை சென்றது தான் என்றாலும் அவளாக அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.
ஏன் இன்றும் அப்படி தானே இருந்தாள்? அவனாக தான் பேசினான். பேசியது மட்டுமல்லாமல் அவள் மேல் அவன் சுமத்திய காரணங்களை தான் தாங்கி கொள்ளவே முடியவில்லை. ஒரு பக்கம் அவமானமாக இருந்தது மற்றொரு பக்கம் கோபமாக வந்தது…
கோபமும், அவமானமும் போட்டிப் போட ‘சரி அவன் சொன்னதை செய்து விட்டு தான் போவோமே…’ என்று தான் அவனிடம் அத்துமீறி நடந்து கொண்டாள்.
அதே நேரம் இங்கு வாசுவோ தன் அதிர்ச்சியை முகத்தில் காட்டியபடி நின்றிருந்தான். அது கூட நிமிடம் மட்டுமே அடுத்த நிமிடம் அவளது விரலை இறுக்கி பிடித்தான்.
அவன் பிடித்தது அத்தனை வலித்தது. அதன் வலியை வெளிக் காட்டிக் கொள்ளாமல் நக்கலாக அவனைப் பார்த்தாள். அவளின் பார்வை இவன் கோபத்தைத் துண்டி விட, கைகளில் இன்னும் இறுக்கத்தைக் கூட்டினான். அது அவளுக்கு அதீத வலியை கொடுக்க, சட்டென அவன் கையை அழுத்தமாக கடித்து விட்டாள். கடியென்றால் அப்படியொரு கடி! அவளின் பல்தடம் நன்றாகவே அவன் கைகளில் பதிந்து போனாது.
“ஆஆ…ராட்சசி” என்றவன் கையை உதறியப்படி அவளை பார்க்க, அவளோ ஒரே ஓட்டமாக அங்கிருந்து சென்றிருந்தாள்.
அவளின் பின்னாலேயே சென்றவன் அவளை பிடிக்கும் முன் கீழ் இறங்கி இருந்தாள். இவள் இறங்கி சென்ற வேகத்தில் சமையலறையில் இருந்த ஜானகியே பதட்டமாக வெளியில் வந்திருந்தார். அவர் பேசியது மேலே நின்றிருந்தவனுக்கு தெளிவாக கேட்கவும் செய்தது.
“என்னம்மா? என்னாச்சு?” என அவர் பதட்டமாக கேட்க, “அத்தை அது… சும்மா வித் இன் செகண்ட்ஸ்ல படியில இருந்து கிழ வர முடியுதான்னு பார்த்தேன்…” என்றாள் முயன்று வரவழைக்கப்பட்ட சிரிப்போடு..
“வாண்டு…” என சிரித்தவர்
“மெட்டீரியல் எடுத்திட்டியா? வாசு வந்தானா?” என்று கேட்க, “இல்ல அத்தை, வாசு சார் வரல, அவருக்கு எது முக்கியம், முக்கியமில்லைன்னு தெரியாம நானே எடுக்க முடியாதுல அத்தை. அதான் வந்துட்டேன். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை இன்னொரு நாள் எடுத்திக்கிறேன்…” என்றாள் அதே சிரிப்போடு.
“அவன் ஏதாவது வேலையில இருப்பான்னு நினைக்கிறேன் ம்மா, நீ இரு, நான் வேணா வாசுவை எடுத்து தர சொல்றேன்…” மென்மையான குரலில் மங்கையின் கேசத்தை கோதிக் கொண்டே கூறினார்.
அதற்கு அவள் பதில் கூறும் முன்பே
“ஜானு…” என்றழைத்தப்படி உள்ளே நுழைந்தனர் பானுமதியும், ஆறுமுகமும்.
குடும்பமாக வந்திருக்கிறாள் என்று நினைத்தவனுக்கு சற்று முன்னர் அவளிடம் பேசியது நினைவு வந்தது ‘அதுக்காக பொய் சொல்லிட்டு உன்னோட ரூம் தேடி வந்தது தப்பு தானே…’ தான் பேசியதை நியாயப்படுத்தியது அவன் மனது.
“வாங்க அண்ணா, வா பானு… போன விஷயம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?” என ஜானகி கேட்டார்.
“அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சது… நீயும், தம்பியும் கண்டிப்பா வந்துடனும்…” என மீண்டுமொருமுறை அழைத்தார் பானு.
“நல்லது ப்பா, கண்டிப்பா வருவோம். மூணு பேரும் உட்காருங்க டீ எடுத்துட்டு வரேன்…” என்ற ஜானகி சமையலறைக்குள் நுழைந்தார்.
ஜானகி அப்படி நகர்ந்ததும் மகளிடம் திரும்பி “வாசு தம்பிகிட்ட கேட்டு நோட்ஸ் எல்லாம் நோட் பண்ணி வைச்சுட்டியா?…” எனக் கேட்டார். சலிப்போடு இல்லையென்று தலையாட்டிட, மகளை நேரடியாக முறைத்தார் பானு.
தாயின் முறைப்பில் கடுப்பானவள் “ம்மா, வாசு சார் தூங்கிட்டு இருக்கார். நான் வேணா எழுப்பி விட்டு நோட்ஸ் கேட்கவா…” எனக் கேட்டவளின் குரலில் கோபம் தெரிந்தது.
அவள் பேசுவது புரியவில்லை என்றாலும் அவளின் கோபம் முகம் மேலே நின்று பார்த்து கொண்டிருந்தவனுக்கு நன்றாகவே தெரிந்தது.அந்த கோபம் எதற்கென புரிய தான் செய்தது.
அதுமட்டுமா புரிந்தது. சற்று முன் அவள் வேண்டுமென்றே செய்ததாக அவன் அடுக்கிய காரணங்கள் அனைத்தும் அவளாக செய்யவில்லை என்றும் புரிந்தது. ‘அப்ப நோட்ஸ் வேணும்னு இவளா கேட்கல…’ என நினைத்தவனுக்கு அத்தனை கோபம் வந்தது தன்னை தேடி அவளே வரவில்லை என்று…
கண்களை இறுக மூடித் திறந்தவன் தன்னை தானே கட்டுப் படுத்திக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அவன் நேராக சென்று நின்றது என்னவோ டிரெஸ்ஸிங் டேபிலின் முன் தான். அவள் கடித்த இடத்தை பார்க்க, லேசாக சிவந்திருந்தது. “ராட்…சசி…” என கூறியவன் இதழ்கள் சிரிப்பை சிந்த, கண்களோ சொல்ல முடியா வேதனையில் வாடியது.
“அவ உனக்கு வேண்டாம்…” என்றபடி அவள் கடித்து சிவந்த இடத்தில் வெட் டிசுவை வைத்து அழுத்தினான். அவனுள் எழுந்த மெல்லிய உணர்வையும் அத்தோடு சேர்த்து அழுத்தினான்.
அக்கணம் அவனது மனம் “அவ உனக்கு நிஜமாவே வேண்டாமா? …” புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டது.
அதற்கு பதில் கூறும் முன்வே ‘உன்னால பிஸிகல் லைஃப்குள்ள போக முடியுமா வாசு?..’என்ற இதயாவின் கேள்வியும், அன்றைய கொடூரங்களும் கண்களுக்குள் விழுந்தன…
நீண்ட நெடிய பெருமூச்சுடன்
“அவ உனக்கு வேண்டாம்…” கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தை பார்த்து அழுத்தமாக கூறிவிட்டு கண்களை இறுக மூடி நின்று விட்டான்.
ஒவ்வொரு முறையும் ‘அவள் உனக்கு வேண்டாம் வேண்டா_’மென்று கூறும் போதெல்லாம் அழுத்தமாய், ஆழமாய் அவனுள் தடம் பதித்து போகிறாள் அவனது ராட்சசி..
சிறிது நேரத்தில் மூவரையும் வழியனுப்பிவிட்டு வாசுவின் அறைக்குள் நுழைந்த ஜானகியின் கண்களில் கையை பிடித்தபடி நின்றிருந்த மகன் தான் விழுந்தான். “என்னாச்சு ப்பா? கையில என்ன?”என கேட்டு வேகமாக அவனை நெருங்கினார்.
தாயின் குரலில் சட்டென கண்களை திறந்தவன் கையைப் பார்த்தான் நல்லவேளை அவளது பல்தடம் மறைந்திருந்தது. அவனையும் அறியாமல் பெருமூச்சு வெளிவர “அது ஒன்னுமில்லை மா, அரிக்கற மாதிரி இருந்துச்சுன்னு தேய்ச்சேன். சிவந்து போச்சு…” என்றான் சாதரணமாக.
அந்த ராட்சசி இவனது மனதில் நுழைந்த நிமிடத்திலிருந்து சர்வ சாதரணமாக பொய் கூட சொல்ல வந்தது இந்த அப்பாவி வாசுவிற்கு சாரி கேடி வாசுவிற்கு.
“எங்க காட்டு…” தடித்து சிவந்திருந்த கையை பார்த்தார்.
“ஒன்னுமில்லை தம்பி, தேங்காய் எண்ணெய் வைச்சா சரியாகிடும்…” என்றவர் அதனை செய்ய அமைதியாக தாயைப் பார்த்தான். தற்போது வந்தவர்களை பற்றி கூறுவாரா? என்ற மனதின் எதிர்பார்ப்பு கண்களில் அப்படியே தெரிந்தது.
அவனது எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் “பானு வந்துட்டு போனாங்கடா… அவங்க அடுத்த வாரம் அந்தியூர் எழுதியமரைத்தயனுக்கு கிடா வெட்டி ஊரை அழைச்சு விருந்து போடறாங்களாம். அதான் வந்து சொல்லிட்டு போனாங்க.
வீடு தேடி வந்து சொல்லிட்டு போறாங்க போகாம இருந்தா நல்லா இருக்காது. போகலாமா?” கண்கள் மின்ன கேட்ட தாயிடம் மாட்டேன் என்று எப்படி கூறுவான்.
அந்த வாரத்திலேயே அந்தியூரை நோக்கி பயணித்தனர் வாசுவும், ஜானகியும்.
********
இங்கு சுதனின் வீட்டில்…
கண்களில் ஒரு வித பயத்துடன் தன்னை கண்ட மனைவியை மனதில் எழுந்த வலியோடு பார்த்த ஹரி, “இதயாடா என்னமா?” என கலங்கிய குரலில் கேட்டான்.
ஹரியின் கலங்கிய குரல் அவளை தன் நினைவிலிருந்து வெளிக் கொண்டு வந்திருந்தது. கணவன் பேச்சில் எழுந்த தலைவலியால் படுக்கையில் விழுந்தவளுக்கு சில நிமிடங்களில் உறக்கம் வந்துவிட அப்படியே உறங்கி விட்டாள்.
கணவன் பேச்சிலா இல்லை நடந்த கொடூரத்தை மீண்டுமொருமுறை நினைத்து பார்த்ததாலா ஏதோ ஒன்று. நிஜத்தில் நடந்த கொடூரம் கனவிலும் வந்திருந்தது. அந்த நேரம் தான் ஹரி அவளை எழுப்ப முயன்றது.
ஆடவனின் குரலில் பதறியடித்து எழுந்தவள் தனக்கு எதிரில் அமர்ந்திருந்த கணவனை கலவரம் மின்ன பார்த்தாள்.
மங்கையின் பயம் நிறைந்த பார்வை அவளது கணவனுக்கு அத்தனை வலியை கொடுத்தது.
“நிலவே… என்னடா?” என கலங்கிய குரலில் அவன் கேட்க, “ஆங்…” என்றாள்.
“நிலா…” என்றான் இப்போதும் அவளிடம் “ஆங்…” என்று தான் வந்தது.
அப்படி அவளை பார்க்க முடியவில்லை அவனால். அந்த நிமிடம் அவளின் பயத்தை போக்கவே நினைத்தவன் தமாதிக்காமல் மங்கையை அள்ளியணைத்து கொண்டான்.
“நிலா சாரிடா.. நிலா சாரிடா…” என தன் அணைப்பை இறுக்கி கொண்டே மன்னிப்பை வேண்டினான் சுதன்…
கணவனின் இறுகிய அணைப்பிலா இல்லை அவனின் விடாத அழைப்பிலா ஏதோ ஒன்று அவளை நடப்பிற்கு கொண்டு வந்திருந்தது. அப்போது தான் உணர்ந்தாள் கணவனின் மடியில் அவனின் அணைப்பில் தான் இருப்பதை…
அதே கணம் கணவனின் சொல்லும், செயலும் நினைவு வர பட்டென அவனை விட்டு பிரிந்தாள். மனைவியின் தீடிர் விலகல் இவனுக்கு வலியைக் கொடுத்தாலும் அவளின் நிலை புரியவே செய்தது.
அங்கு அந்த நிமிடம் ஒரு கனமான சூழ்நிலை நிலவியது. அதை கலைக்கும் விதமாக “நிலா…” என அழைத்தான். அவளிடம் பதிலில்லை கண்களை இறுக மூடித் திறந்தவனுக்கு நீண்ட நெடிய பெருமூச்சு வெளிவந்தது.
“நிலவே…” என்றான் இப்போது நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் மட்டுமல்லாமல் செவி மடலும், மூக்கின் நுனியும் சிவந்திருந்தது… அதற்கு மேல் மங்கையின் கார்கூந்தல் வேறு நெற்றியை முத்தமிட்டு சென்றது. அதனை செவியின் ஓரம் ஒதுக்கி விட கைகள் பரபரத்தது இவனுக்கு.
அதே கணம் அவன் செய்ய நினைத்ததை மங்கையின் கைகள் செய்ய “நிலவே…” என்றான். அந்த குரலின் பேதம் இவளுக்கு துளியும் புரியவில்லை நிமிர்ந்து கணவனை பார்த்தாள்.
“ஃப்ரெஷ் ஆயுட்டு வா… ஈரோடுல இருக்கற பிரான்ச் வரைக்கும் போயிட்டு வருவோம்…” இனி மனைவியை தனித்து விடக் கூடாது என்று இங்குள்ள அலுவலகத்திற்கு இதயாவை அழைத்து செல்லலாம் என்று நினைத்தான்.
ஆனால் அவளோ அவனின் எண்ணத்திற்கு மறுப்பாக தலையசைத்தாள். அவள் மாட்டேன் என்பதை போல் தலையாட்டியதும் புருவங்களை ஏற்றி “ஏன்…” என்பதை போல் பார்த்தான்.
“நான் வரல, அத்தை கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும்…” என்றாள் அவனை போலவே கைகளை கட்டிக் கொண்டு.
மனைவியின் பேச்சில் மெல்லிய புன்னகை மலர “நம்ம ரூம்ல இருந்துட்டே உன் அத்தை கூட டைம் ஸ்பெண்ட்ட் பண்ண போறயா?…” எனக் கேலியாக கேட்டான்.
அவன் கேலி புரிந்ததும் நிமிர்ந்து கணவனை முறைத்து பார்த்தவள் படுக்கையிலிருந்து இறங்கி குளியலறை நோக்கி நடந்தாள்.
செல்லும் மனைவியை சின்ன சிரிப்போடு பார்த்தவன் தோளை குலுக்கி விட்டு தன் வேலையை தொடர்ந்தான்.
அதே கணம் இங்கு சமையலறையில் “இதுக்கு தான் சொன்னேன். பணக்கார சம்மந்தம் வேண்டாம் வேண்டாம்னு யாரு என் பேச்சை கேட்டா. நானும் காலையில இருந்து பார்க்குறேன் பெட்ரூமை விட்டு வெளிய வரவே இல்லை, அப்படி என்ன வேணும் வேணும்ன்னு கேட்குது…” என முணுமுணுத்து கொண்டிருந்த மனைவியின் குரல் ஹாலில் அமர்ந்திருந்த ஈஸ்வருக்கு நன்றாகவே கேட்டது.
“தங்கம், வடக்கு மூலையில பல்லி ஒன்னு கத்திட்டே இருக்கு அதை கொஞ்சம் என்னனு பாரு, அது ரொம்ப கத்தினா வீட்டுல வாரிசு சத்தம் எதுவும் கேட்காதாம்…” என்றார் மகனும்,மருமகளும் அறையில் இருப்பதை உறுதி செய்துவிட்டு…
கணவரின் குரலில் தெரிந்த நக்கலும் அதிலிருந்த அர்த்தமும் புரியாத அளவிற்கு மக்கு இல்லையே காமாட்சி. அவசரமாக வெளியில் வந்தவர் கணவனின் கையில் ஒன்று வைத்து, “என்ன பேச்சு பேசறீங்க…” என அதட்டினார்.
“என்ன பெருசா பேசிட்டாங்க. நீ பேசறத விட கம்மியா தான் பேசறேன். வர வர கொஞ்சமும் இங்கிதமில்லாம பேசற. நமக்கு ஒரு பொண்ணு இருக்கா அவளும் இப்படியான ஒரு குடும்பத்துல தான் இருக்கான்னு ஞாபகம் இருக்கட்டும். ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லுன்னு தெரியாதா உனக்கு? உள்ள இருக்கிறது உன் மருமக மட்டுமில்லை நம்ம பையனும் தான்.
நீ யாரை அசிங்கப்படுத்திட்டு இருக்கன்னு புரியுதா. இதுக்கு மேல உன் வார்த்தை கொஞ்சம் தடுச்சு வந்தாலும் நானே இரண்டு பேரையும் தனி வீடு பார்த்து அனுப்பி விட்ருவேன்…” என கோபமாக கூறியவர் மனைவியின் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தார்.
முப்பது வருடங்களாக தன்னை ஒரு சொல் சொல்லாதவர் இன்று இப்படி பேசிவிட்டு செல்கிறார் என்றால் அதற்கு காரணம் தற்போது புதியதாக வந்த மருமகள் என நினைத்தவருக்கு அவளின் மேல் இன்னும் கோபம் தான் வந்தது.. அவள் நேரமாக எழுந்து வெளியில் வந்திருந்தால் நான் ஏன் அவளை பேசப் போகிறேன் என நினைத்தார். அந்த
கோபம் வெளியில் வந்த இதயாவிடம் திரும்பியது.
அந்த கோபம் இதயாவிடன் நிலைக்குமா என்ன? இல்லை காமாட்சி தான் அத்தனை கடுமையாக நடந்து கொள்வாரா? பார்ப்போமே…
error: Content is protected !!