Skip to content
Post Views: 7,690
அத்தியாயம் 18:
சந்தியா கூறியதற்கு பதில் கூறாமல் “போய் ட்ரெஸ்லாம் வாஷ் பண்ணிக்கோ” என்று விட்டு அவனும் சட்டையை கழட்டி கொண்டே கிணற்று பக்கம் சென்றான்.
கடுப்பானாள் சந்தியா. அவனுக்கு எதிரில் போய் வழியை மறைத்து நின்றவள் “எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க பாஸ்” என்றாள்.
“நீ சின்னபுள்ளத்தனமா ஏதாவது பேசிட்டு இருப்ப. அதுக்கெல்லாம் நா பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. எனக்கு நிறைய வேலையிருக்கும்மா. தள்ளு”
Advertisement
“அதெல்லாம் முடியாது. ஏன் எனக்கு ஓகே சொல்ல மாட்றிங்க”
“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சே. உனக்கு தெரியுமா தெரியாதா”
“அதான் டைவர்ஸும் ஆயிடுச்சே”
Advertisement
“ஆமா. ஆனா திரும்ப திரும்ப என்னால கல்யாணம் பண்ணிட்ருக்க முடியாது. சில விஷயங்கள்லாம் ஒரு டைம் பண்ணாதான் மதிப்பு”
Advertisement
“ஏன் அவங்கள உங்களுக்கு ரொம்ப புடிக்குமா. அதான் அவங்க நினைப்புலயே காலம் முழுக்க இருக்க போறேன்னு டயலாக் பேச போறீங்களா”
“அவ இப்ப வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறா. அவளை பத்தி இனிமே பேசறது தப்பு. புரியுதா உனக்கு”
“சோ அவங்க முடிஞ்சு போன விஷயம். நீங்க அப்ப என்ன கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன தப்பு”
Advertisement
“உன் அழகுக்கும் தகுதிக்கும் இன்னும் நல்ல மாப்பிள கிடைப்பான். என்ன பொறுத்தவரைக்கும் நீ ரொம்ப சின்ன புள்ள”
“சின்ன புள்ளையா…..”
“ஆமா. உனக்கு வயசும் பத்தல. ஆள் பாக்க வேற ஒல்லியா சின்ன பொண்ணா தெரியற. உன்ன நா ஒரு கையாள ஈஸியா தூக்கிட்டேன் பாரு இன்னைக்கு. எனக்கு பொண்ணுன்னா நல்ல புடவை கட்டி, முடி நீளமா பின்னி தலை நிறைய பூ வச்சு இருக்கிற பொண்ணைத்தான் புடிக்கும். உனக்கும் எனக்கும் எதுலயும் பொருத்தம் கிடையாது. அதனால இந்த காதல் கத்திரிக்கான்னு கிறுக்குத்தனமா உளர்றத விட்டுட்டு வேற வேலையிருந்தா போய் பாரு” என்று விட்டு முகம் கழுவ சென்றான்.
சந்தியாவே முழுதாக குழம்பி போனாள். இவர் உண்மையைத்தான் சொல்கிறாரா என்று யோசித்து கொண்டே தண்ணீர் தொட்டியில் போய் ட்ரெஸ்ஸில் இருந்த சேற்றை துடைத்து விட்டாள்.
ஆதியும் முகத்தை கழுவிக்கொண்டு சட்டையில் இருந்த கரையை அலசி, திரும்பவும் போட்டு கொண்டு வந்தான். வந்தவன் பார்த்தது பாதி உடையை நனைத்து கொண்டு நின்ற சந்தியாவைத்தான்.
அங்கு நிறுத்தி வைத்திருந்த அவன் புல்லட்டிலிருந்து டவலை எடுத்து வந்து கொடுத்து துடைத்து கொள்ள சொன்னவன் “உன் ஸ்கூட்டி எங்க” என்று கேட்டான்.
“நா ஸ்கூட்டில வரல. நடந்துதான் வந்தேன். நா கிளம்புறேன்” என்று முகத்தை சுருக்கிக்கொண்டு டவலை அவனிடம் நீட்டினாள்.
“என்ன! இப்படியே ஈரத்தோட ஊருக்குள்ள ஊர்வலம் போக போறியா. ஏற்கனவே இந்த ஊருக்கு ஒட்டாம வித்தியாசமா தெரியற நீ. வெளியூர்ல இருக்கும்போது நீ எப்படி இருந்தாலும் யாருக்கும் தெரியாது. இது கிராமம். இங்க என்ன நடந்தாலும் கரெக்டா இன்னார் வீட்டு பொண்ணு இப்படி பண்ணிச்சுன்னு அடுத்த நாளே பேச ஆரம்பிச்சிடுவாங்க. அதனால இனிமே என்ன பாக்க வர வேல வச்சிக்காத”
“இப்ப நா என்னதான் செய்யணும்” என்று கடுப்பாக கேட்டாள்.
அவளை முறைத்து கொண்டே போய் புல்லட்டில் அமர்ந்தவன் “வந்து வண்டில ஏறு. நானே உங்க வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு போறேன்” என்றான். அதை கேட்டதும் இவ்வளவு நேரம் இருந்த குழப்பம் நீங்கி முகமெல்லாம் சுவிட்ச் போட்டது போல் பிரகாசமாகி விட்டது சந்தியாவிற்கு.
அவளின் மலர்ந்த முகத்தை பார்த்தவன் “இதோட இந்த மாதிரி கிறுக்கு தனம் பண்றத விட்டுடு. எப்போதும் பைக்ல ஏத்திட்டு போயிட்டு இருக்க மாட்டேன்’ என்று அவன் கூறியதெல்லாம் எங்கே சந்தியாவின் காதில் விழுந்தது. அவள்தான் வேறு உலகில் இருந்தாளே.
அவள் வீட்டு வாசல் வந்ததும் இறங்கியவள் அவனை பார்த்து “நீங்க என்ன சொன்னாலும் ஐ லவ் யு மாமா” என்றுவிட்டு உள்ளே ஓடிவிட்டாள். அவளை பார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்ட ஆதி தலையை ஆட்டிக்கொண்டு புல்லட்டை கிளப்பினான்.
அடுத்த ஒரு வாரம் சந்தியா ஆதியின் முன்னால் செல்லவில்லை. அன்று தீபாவளி.
கௌரியின் குடும்பம் ஆதியின் வீட்டிற்கு முதல் நாளே வந்துவிட்டது. விஷேஷ நாள் என்றால் இப்படி ஒன்று கூடுவது அவர்கள் வழக்கம். சந்தியாவின் குடும்பத்தையும் தீபாவளிக்கு வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தார் சிவகாமி.
அதனால் காலையில் குளித்து பூஜையை முடித்துவிட்டு அவர்கள் வீட்டில் செய்த பலகாரங்களை எடுத்துக்கொண்டு சந்தியாவின் குடும்பம் ஆதியின் வீட்டிற்கு வந்தது.
செல்வம் ஈஸ்வரனிடமும், சுந்தரத்திடமும் பேச அமர்ந்து விட்டார். பத்மா சித்ராவுடன் சேர்ந்து அடுப்படி வேலையை கவனிக்க சென்றார். சிவகாமி ஆதி அணிவதற்க்காக புது துணிமணிகளை சந்தியாவிடம் கொடுத்து அனுப்பினார்.
குளித்துவிட்டு இடுப்பில் ஈரத்துண்டு, மேலே பனியன் மட்டும் அணிந்து பால்கனியில் இருந்து உள்ளே வந்த ஆதி ரூமிற்குள் நின்றிருந்த சந்தியாவை பார்த்து சமைந்து நின்றான்.
சந்தியா அன்று அரவிந்தின் கடையில் எடுத்த பிரவுன் பார்டர் வைத்த சிவப்பு புடவையணிந்திருந்தாள். தோள் வரை இருந்த முடியை இரண்டு பின்னல் மட்டும் போட்டு மல்லி பூ சூடியிருந்தாள். காதில் ஜிமிக்கி, கழுத்தில் சிவப்பு கல் வைத்த அட்டிகை, கைகள் நிறைய கண்ணாடி வளையல்கள் என்று அதிரூப தேவதையாக நின்றிருந்தாள்.
ஆதி அவளை இமைக்க மறந்து பார்த்து நின்றிருந்தான். அவன் பார்வையை பார்த்து சந்தியாவிற்க்கே வெட்கம் வந்தது. கட்டிலின் மேல் கையில் இருந்த ஆடைகளை வைத்து விட்டு நிமிர்ந்தவள், முன்பகுதி புடவையை மிதித்து, தடுக்கி விழ போனாள். அதற்குள் அவள் அருகில் வந்திருந்த ஆதி அவளின் இடுப்பை பிடித்து தூக்கி நிறுத்தினான்.
நிறுத்தியவனின் கைகள் அவள் இடுப்பிலேயே தங்கிவிட்டது. சந்தியா நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவன் பார்வை அவளின் முகத்தைத்தான் அணு அணுவாக ரசித்து கொண்டிருந்தது. சந்தியாவின் உடம்பே சிவந்து போனது. என்ன பார்வை இது என்று. அவளின் நெற்றி கண் கன்னம் என்று போனவனின் பார்வை இறுதியில் அவளின் சிறிய சிவந்த சொப்பு உதட்டில் நிலைத்தது. அதை பார்த்தவன் பொ என்று ஆரம்பித்து எதோ உளற போனான். அந்நேரம் சரியாக பின்கட்டில் இருந்த மாடு அம்மா என்று கத்தியது.
அதில் சுய நினைவுக்கு வந்த ஆதி சந்தியாவின் இடுப்பில் இருந்து கையெடுத்துவிட்டு வேக வேகமாக தள்ளி சென்று ட்ரெஸ்ஸிங் டேபிளின் அருகே திரும்பி நின்றான். சந்தியாவும் திரும்பி அவனை பார்த்துவிட்டு ஒன்றும் கூறாமல் நடக்க போனவள், வயிற்றில் சொருகி இருந்த புடவை மடிப்புகள் அவிழ்ந்து முழுவதுமாக வெளியில் வந்திருந்ததால் அதை கையில் பிடித்து கொண்டு தடுமாறி நின்றாள்.
அவளை சொல்லியும் தப்பில்லை. ஏனென்றால் அவளுக்கு புடவை கட்ட தெரியாது. பெரிதாக கட்டியதும் இல்லை. காலையில் பத்மாதான் கட்டி விட்டிருந்தார். ஆதி அன்று புடவை பிடிக்கும் என்று சொன்னதால் ஒரு ஆர்வத்தில் கட்டியவள், காலையிலிருந்து நிறைய தடவை தடுக்கி விழபோனாள்.
இப்பொழுது கட்டிலில் ஆடையை வைக்க குனியும்போது முன் கொசுவத்தை மிதித்து கொண்டே நிமிர்ந்ததால், அந்த முன் பகுதி மடிப்புகள் அனைத்தும் வெளியே வந்துவிட்டது. இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்தவள் அதை மொத்தமாக அள்ளி பிடித்து கொண்டு வெளியில் செல்ல போனாள்.
சுய நினைவிற்கு வந்த ஆதி கண்ணாடி வழியாக அவள் புடவையை பிடித்து கொண்டு செல்வதை பார்த்தவன், “நின்னு புடவையை கட்டிட்டு போ” என்றான்.
திரும்பி அவனை பரிதாபமாக பார்த்தவள் “எனக்கு புடவை கட்ட தெரியாது பாஸ்” என்றாள்.
அவளை முறைத்தவன் “அப்புறம் யாரு உன்ன புடவை கட்ட சொன்னா”
“நீங்கதான் உங்களுக்கு புடவை கட்ற பொண்ணை புடிக்கும்ன்னு சொன்னீங்க. அதான் அம்மாகிட்ட கட்டிகிட்டேன்”
அவளிடம் ஒன்றும் சொல்லாமல் போனை எடுத்து கௌரிக்கு அழைத்தான். அவளை மேலே தன் ரூமிற்கு வருமாறு அழைத்ததற்கு அவள் தன் வீட்டுக்கு எதோ பொருள் எடுப்பதற்காக சென்று கொண்டிருப்பதாக கூறினாள்.
என்ன செய்வது என்று யோசித்தவனிற்கு “பரவால்ல பாஸ். நா அம்மாட்ட போய் கட்டிக்கிறேன்” என்றாள் சந்தியா.
அவளை முறைத்தவன் “கீழ எல்லா பெரியவங்களும் இருக்காங்க. இப்படியே போவியா. வாய் மட்டும் தான். ஒரு புடவை கூட கட்ட தெரியல” என்று விட்டு அவள் அருகில் வந்தவன் ஒரு துண்டை எடுத்து அவள் தோளிலிருந்து வயிறு வரை முடிந்தளவு போர்த்தி அவளை பிடித்து கொள்ள சொன்னவன், அவள் கையிலிருந்த புடவையை வாங்கி அழகாக மடிப்பு வைத்தான். அதை வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தாள் சந்தியா. மடிப்பு வைத்தவன் அதை அவளிடம் கொடுத்து வயிற்றில் சொருக சொன்னான். பிறகு மீதி இருந்த புடவையை சுற்றி கொண்டு வந்து சொருகி கொள்ள சொன்னவன் கீழே முட்டி போட்டு உட்கார்ந்து அவள் புடவையின் மடிப்பை சரி செய்தான்.
ஊருக்கு முன்னால் தெனாவெட்டாக நடமாடுபவன் தனக்கு முன்னால் முட்டி போட்டு கீழே அமர்ந்து புடவை கட்டுவதை பார்த்து நேசம் பொங்கியது சந்தியாவிற்கு. தனக்கு முன்னால் தெரிந்த அவன் அடர்ந்த கேசத்தை கோத வேண்டும் என்று கைகள் பர பரத்தது. அடக்கி கொண்டு நின்றாள்.
புடவையின் மடிப்பை சரி பண்ணிவிட்டு எழுந்து அவளை பார்க்காமல் ட்ரெஸ்ஸிங் டேபிளிற்கு முன்னால் சென்று நின்று முடியை சீப்பு கொண்டு சீவினான்.
சந்தியா அவன் பின்பக்கம் போய் நின்று அவனை பின்னாலிருந்து கட்டி பிடித்து முதுகில் ஒரு முத்தம் வைத்தவள் “தேங்க்ஸ் மாமா” என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.
ஆதி ஸ்தம்பித்து போய் நின்றான்.
கீழே வந்த சந்தியாவை, வெளியே பலகார கூடையோடு கிளம்பிய கௌரி கையோடு கூட்டி சென்றாள்.
“எங்க போறோம் கௌரி” என்றாள் சந்தியா.
“வசந்த் மச்சான் வீட்டுக்கு. இந்த பண்டிகை வந்தாலே தூக்கு போசிய குடுத்து வீடு வீடா போக சொல்லிடுவாங் இந்த அம்மாவும், பெரியம்மாவும்”
“ஏண்டி அலுத்துக்கிற. நல்ல விஷயம்தான”
“உனக்கு என்னம்மா. நீ நல்லா மேக்கப் போட்டுட்டு அத்தை செஞ்சு குடுத்த தீபாவளி பலகாரம் டிஃபன்லாம் மொக்கி போட்டு தெம்பா வந்துருப்ப. என்ன பாரு காலைல குளிச்சிட்டு வந்து இந்த புடவைய சுத்திக்கிட்டதோட சரி. இன்னும் ஒரு பலகாரத்தையும் கண்ணுல காட்டல. அங்க போ இங்க போன்னு விரட்டிட்டு இருக்காங்க. இந்த அருண பாரு, குளிச்சு, ஜோரா டிரஸ் பண்ணிட்டு ஸ்னாக்ஸ் சாப்டுட்டு உக்காந்துருக்கான். பொண்ணா, அதிலையும் கடைக்குட்டியா பொறக்கவே கூடாது சந்தியா” என்று பேசி கொண்டே நடந்தவளை
“அம்மா. மூச்சு வாங்கிட்டு பேசும்மா. நீ வேணா வீட்டுக்கு போ. நா மட்டும் போய் குடுத்துட்டு வரேன்”
“வேண்டாம்மா. நீயே இன்னைக்குத்தான வசந்த் மச்சான் வீட்டுக்கு வர. புதுசா வந்த உன்னட்ட குடுத்தனுப்பி போட்டேன்னு அம்மா பேசியே கொல்வாங்” என்று சொன்னவள் ஒரு பழைய ஒட்டு வீட்டுக்குள் அத்தை என்று கூப்பிட்டு கொண்டே போனாள்.
“வாங் வாங். கௌரி கண்ணு இதான் உன்ர மாமன் மகளா. வா சாமி . வசந்தன் உன்னய பத்தி நிறைய சொல்லிருக்கான். அப்படியே மஹாலக்ஷ்மியாட்ட இருக்க கண்ணு” என்று சந்தியாவை சுற்றி திருஷ்டி எடுத்தார் வள்ளி.
அவர் கையில் பலகார கூடையை குடுத்த கௌரி “அத்தை இதெல்லாம் நல்லால்ல சொல்லி போட்டேனுங். புதுசா ஒருத்தி வந்ததொட்டு உங்க நங்கயா ரெண்டு பேருக்கும் என்னை தெரியமாட்டேங்குது. காலைலதொட்டு எல்லாரும் அவ புடவை கட்டிருக்கத பாத்துப்போட்டு ஓவரா கொஞ்சிட்ருக்காங். சரின்னு இங்க வந்தா இப்ப உங்களுக்கும் என்ன தெரியலல்லங்”
“அட என்ன சாமி நீ இப்படி பேசறவ. இத்தனை வருஷம் உன்னை மட்டும்தேன் கொஞ்சிகிட்டு கிடந்தோம். இந்த வருஷம்தான புள்ள வந்துருக்கு. அத விட்டு போட்டு உன்னையே கொஞ்சினா அது பொக்குன்னு போயிருமல்லோ”
“என்னமோ சொல்றீங் அத்தை. விடியால இருந்து ஒரே வேலையா சொல்லிட்ருக்காங்” என்று அலுத்து கொண்டாள்.
“என்ன ஒரே சத்தமா இருக்குதுங்ம்மா” என்று அங்கு வந்த வசந்த் இருவரையும் பார்த்து “என்ர தங்கச்சி வந்துருக்காளா. அதான் வீடே கலகலன்னு இருக்குது” என்றான்.
“அண்ணா. நீங்க வேற. நா வந்ததுல இருந்து ஒரு வார்த்தை பேசல. எல்லாம் நம்ம கௌரி மேடம்தான் விடாம பேசறாங்க. தீபாவளி ஸ்பெஷல் போல” என்றாள் சந்தியா.
இருவரையும் பார்த்து முகத்தை திருப்பி கொண்ட கௌரி “அத்தை என்ன பலகாரம் செஞ்சிருக்கீங்” என்று கேட்டு கொண்டே கிட்சன் பக்கம் சென்றாள்.
சந்தியா வள்ளியிடம் “அம்மா. எங்க வீட்டு தீபாவளி ஸ்வீட்லாம் நா ஈவ்னிங் எடுத்து வந்து தரேன். இந்த ஊர்ல இப்படி குடுப்பாங்கன்னு தெரியாது” என்றாள்.
“இருக்கட்டும் கண்ணு. உன்ர ஐயன் ஆத்தால்லாம் நல்லாருக்காங்களா” என்று இருவரும் பேசி கொண்டிருப்பதை பார்த்துவிட்டு கிட்சன் பக்கம் சென்றான் வசந்த்.
அங்கு சென்று பாத்திரங்களை உருட்டி கொண்டிருந்த கௌரியை பின்னாலிருந்து “மயிலு” என்று அழைத்தான். திடுக்கிட்டு திரும்பினாள் கௌரி.
கரும்பச்சையில் ஆரஞ்சு கலர் பார்டர் வைத்த பட்டு புடவை கட்டியிருந்தாள் கௌரி. வசந்தை பார்த்துவிட்டு வெளியில் செல்ல போனாள். அவளின் கை பிடித்து தடுத்தவன் “என்ர கிட்ட பேச மாட்டியா மயிலு” என்றான்.
கௌரிக்கு அழுகையாக வந்தது. “இப்ப என்ன திடீர்ன்னு. இத்தனை வருஷம் பேசாமதான இருந்தேன்” என்றாள் அழுகையை அடக்கிய குரலில்.
“இவ்ளோ நாளா சின்ன பொண்ணா தெரிஞ்ச மயிலு இன்னைக்கு சேலை கட்டி பெரிய பொண்ணா தெரியறாளே. அதும் அவள யாருமே கொஞ்சலன்னு கவலை பட்ட மாதிரி வேற தெரிஞ்சது. அதான் நாமளாவது கொஞ்சிபோடுவோம்ன்னு வந்தேன்” என்று அவளின் கையை பிடித்து அருகில் இழுத்தான்.
அவனின் அருகே சென்றவளுக்கு பயம் வந்தது “என்ன மச்சான் பண்றீங். அத்தை வர போறாங். கைய விடுங்” என்று கையை இழுத்தவளை விடாமல் “என்ன மச்சான்னு சொல்ல உனக்கு இவ்ளோ நாளாச்சா மயிலு” என்றான்.
“நீங்களும் என்னை இவ்ளோ நாளு மயிலுன்னு கூப்பிடாம தான இருந்தீங் மச்சான்”
“சாரி மயிலு. இந்த மச்சான மன்னிச்சுடு. இவ்ளோ வருஷம் உன்ன கஷ்டப்படுத்தி போட்டேன்” என்று அவளின் நெற்றி முட்டியவனை, விழி அகல பார்த்தவள் “மச்சான்” என்று சொல்லும்போது சந்தியாவின் குரல் கிட்சன் வாயிலில் கேட்டதால் இருவரும் விலகினர்.
error: Content is protected !!