Skip to content
Post Views: 2,234
“போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி,
ஓஹோ ராகுலா ஐ லவ் யூ என்று சொன்னாள் ப்ரீத்தி
ராக்கி வேலை சக்ஸஸ், இனி காலை மாலை கிஸ் கிஸ்”
என்று உற்சாகமாய் பாடிக் கொண்டே தன் உடலில் பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டிருந்தான் ராகுல்.
Advertisement
இன்னிக்கி சண்டே, கீழே எல்லோரும் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட அவனுக்காக வெயிட்டிங்!
சண்டே மட்டுமாவது வீட்டில் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பது கீர்த்தியின் கட்டளை!
இவன் தான் ப்ரீத்தியோடு கனவில் டூயட் பாடி, ரொம்ப லேட்டாக எழுந்து இருந்தான்.
Advertisement
அனு ரெண்டு தரமும் ரக்ஷு ரெண்டு தரமும் வந்து சாப்பிட அழைத்து விட்டார்கள்!
Advertisement
இவன் இன்னும் இங்கு பாடிக் கொண்டு லேட் பண்ணிக்கொண்டிருந்தான்.
கதவு மீண்டும் தட்டப் பட,
“கமின்! அதான் வரேன்னு சொன்னேன் இல்ல, சும்மா..” என்றபடியே திரும்பிய அவன் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான்!
Advertisement
ப்ரீத்தி அங்கு நின்றிருந்தாள். தோளில் லாப்டாப் பாக்!
“ப்ரீத்தி! நீ எப்படி இங்க?” அவன் எச்சில் முழுங்கிய படி கேட்டான்.
“குட் மார்னிங் சார்! இப்ப உங்க கை சரியாயிடுச்சா? பெல்ட்டை கழட்டிடீங்க போல?”
“கு.. குட் மார்னிங் ப்ரீத்தி! என்ன இவ்வளவு காலையில அதுவும் வீட்டுக்கே?” அவன் திணறியபடி கேட்டான்.
“ஒரு டாக்குமென்ட் உங்க கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு மெயில் அனுப்பனும். அதான் வந்தேன்.”
“அத நாளைக்கு மண்டே அனுப்பிக்கலாமே? இன்னிக்கு என்ன அர்ஜென்ட்?”
“இல்ல நாளைக்கு வேண்டிய ஒருத்தர ஹாஸ்பிட்டல்ல சேர்க்க வேண்டியிருக்கு, எனக்கு லீவ் வேணும், அதான் இன்னிக்கே வந்துட்டேன்!”
“இவ ஏதும் பொடி வச்சுப் பேசுறாளோ” ராகுலுக்குள் சந்தேகம் எட்டிப் பார்த்தது!
“என்ன சார், யோசனை! நாம வேலைய ஸ்டார்ட் பண்ணலாமா?”
“ம்ம்.”
அவள் லாப்டாப்பில் இருந்த அந்த டாகுமென்ட் பற்றி டிஸ்கஸ் செய்து விட்டு , “ஓகே சார் அப்ப நான் கிளம்புறேன்” என்று சொல்லி லாப் டாப்பை மூடி பாகில் வைத்து விட்டு கிளம்பினாள்.
“ஓகே ப்ரீத்தி, அப்புறம்..” கொஞ்சம் தயங்கி விட்டு ராகுல் கேட்டான்
“வேற ஏதாவது கேட்கனும்மா என்கிட்ட?”
“நத்திங் சார்!”
அவள் கிளம்பி கதவை நோக்கி சென்றாள்.
ராகுலுக்குள் குழப்பம்! “என்ன இவள் இப்படி ஒன்றுமே நடக்காதது போல பேசுறா. கிளம்பி வேற போய்ட்டா!”
என்னை இப்படி நல்லா, என் கையில் பெல்ட் இல்லாமல் நல்ல நிலமையில பார்த்த செக்கண்டே அவளுக்கு நியாயப்படி கோபம் தலைக்கேறி இருக்க வேண்டும்!
இந்நேரம் அவள் பேய் மாதிரி கத்தி சண்டை போட்டு இல்ல இருக்கணும்?
அதுவும் இல்லாம இப்படி வீட்டுக்கு வேறே வந்துருக்கா?
கீழே எப்படி அவளை என் ரூம் வரைக்கும் அனுப்பினாங்க?
அவனுள் ஏகப்பட்ட குழப்பங்கள், கேள்விகள்.
குழம்பிக் கொண்டிருந்த ராகுல், க்ரீச் என்ற சவுண்ட் கேட்டு திரும்பினான்!
அங்கு அந்த ரூமின் கதவை உள் பக்கமாக லாக் செய்து விட்டு அங்கிருந்த ஒற்றை சோபாவை அந்த ரூமின் நடுநாயகமாக இழுத்துப் போட்டுக் கொண்டு ப்ரீத்தி உட்கார்ந்து இருந்தாள் அவனையே கண் கொட்டாமல் முறைத்துப் பார்த்துக் கொண்டு!
அவன் ப்ரீத்தியை உதறலுடன் பார்த்தான்!
அப்போது பார்த்து அவன் போன் அடித்தது.
அது அவளுக்கு தான் கைக்கு எட்டும் தூரத்தில்!
கொஞ்சம் எக்கி அந்த போனை எடுத்துப் பார்த்தாள்.
சுமி காலிங்!
“ம்ம். எடுத்து பேசுங்க! ஸ்பீக்கர்ல போட்டு!” ப்ரீத்தி அவனிடம் மிரட்டலாய் சொன்னாள்.
அவனும் ஸ்பீக்கரில் அந்த காலை அட்டென்ட் செய்தான்.
பேசியது நந்த கிஷோர்!
“ப்ரோ.. ப்ளீஸ் ப்ளீஸ் போனை கட் பண்ணிடாதிங்க! நான் ஒண்ணும் தாங்கஸ் சொல்லி போரடிக்க உங்கள இப்ப கூப்பிடல!
சாரி ப்ரோ ஒரு தப்பு நடந்து போச்சு!
நீங்க எனக்கு நல்லது தான் பண்ணியிருக்கீங்க, சுமியை மம்மி ஆக்கிட்டு தான் ஊருக்கு வரணும், எத்தனை நாள் வேணுமின்னாலும் சுமி லீவ் எடுத்துக் கட்டும்னு சொல்லி அனுப்பி வச்சீங்க! அப்படிபட்ட உங்களுக்கு என்னோட மம்மியே ஒரு ஆப்பு வச்சுட்டாங்க!
நேத்து ஈவனிங் ப்ரீத்திய எதேச்சையாக எங்க அம்மா கோவில்ல மீட் பண்ணி, எல்லாத்தையும் உளறி வச்சுட்டாங்க ப்ரோ!
நாம் தப்பு பண்ணிட்டோம் ப்ரோ, இத்தனை செஞ்ச நாம, எங்கம்மாவை கிராமத்துக்கு அனுப்பி வச்சுருக்கணும்! அவங்க இப்படி வெளியே வந்து சொதப்பிட்டாங்க!
ப்ரோ, ப்ரீத்தி உங்கள இன்னிக்கே தேடி வந்தாலும் வரும், பார்த்து ஜாக்கிரதையா நடந்துக்கங்க!”
போனை கட் செய்யும்படி ப்ரீத்தி ஜாடையில் சொல்ல
“ஓகே ப்ரோ நான் பார்த்துக்கிறேன்” என்று போனை கட் பண்ணி நிமிர்ந்த ராகுல் திடுக்கிட்டான்!
ப்ரீத்தி கையில் ஒரு ஸ்டீல் ராட்!
ஸெல்ப் டிபென்ஸ்க்காக என்று அவள் எப்போது வைத்து இருக்கும் ஒரு மெல்லிய போல்ட்டபுள் ராட்!
“டேய்.. ஏண்டா இப்படி பொய் சொல்லி என்னை ஏமாத்தின?” என்று அவன் காலில், கையில் உடம்பில் என்று சரமாரியாக அடிக்க தொடங்கியே விட்டாள்!
“ஏய் ஏய். ப்ரீத்தி வலிக்குதுடி! விடு! பொய் சொன்னேன் ஆனா உன்னை ஏமாத்த எல்லாம் நினைச்சு இல்ல! ப்ளீஸ் நம்பு!”
அவள் அடிப்பதை நிறுத்தவே வில்லை!
லேசாக தான் அடித்தாள் என்றாலும் அடிப்பதை நிறுத்தவே இல்லை!
ஒரு கட்டத்தில் அடி தையல் போடப்பட்டிருந்த காயத்தில் மீது பட்டு விட அவன் கொஞ்சம் வேகமாக கையை இழுத்து கொண்டான்.
அதைப் பார்த்த ப்ரீத்தி, அடிப்பதை நிறுத்தி விட்டு, அவன் கையை பிடித்து அந்த காயத்தை லேசாக தடவி விட்டு, அழத் தொடங்கினாள்!
“ஏய்.. ப்ரீத்தி ஏன் இப்படி அழற!”
ராகுல் பதறி அவள் தோள் பற்றி அவளை தன் தோளின் மீது சாய்த்துக் கொண்டான்!
அவள் அழுத படியே சொன்னாள்!
“நீ என்னை ரொம்ப சீப்பா நினைச்சுட்ட இல்ல, ஒரு வாரம் பக்கத்துலயே இருக்க வச்சு, அப்பப்ப ஹக் பண்ணி கிஸ் பண்ணிட்டே இருந்தா, இந்த ப்ரீத்திய மடக்கிடலாம்னு நினச்சுட்ட இல்ல, அவ்வளவு சீப்பா நான் உனக்கு?” அவள் உதடு பிதுக்கி அழுதாள் ஒரு சின்ன குழந்தையைப் போல!
“ஆனா நான் உன் மேல எவ்வளவு ரெஸ்பெக்ட் வச்சுருந்தேன் தெரியுமா?
நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா?
ஆனா வெளியில காட்டிக்காம இருந்தேன்.
இப்பக் கூட நீ என்னை இவ்வளவு ஏமாத்தியும் உன்னை என்னால வெறுக்க முடியல!
உனக்கு தெரியுமா நான் உன்னை முத முதலா அன்னிக்கு அந்த பார்கிங் ஏரியாவுல பார்த்தப்பவே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு!
உன்னை பயங்கரமா சைட் அடிச்சேன்! ஆனா நீ என்னை அப்படியே முறைச்சுப் பாத்துட்டு போய்ட்ட!
அப்புறம் தான் தெரிஞ்சது நீ தான் அந்த கம்பெனியோட CEO ன்னு.
அது தெரிஞ்சதுக்கப்புறம், நான் உன்னை பார்க்கிறதா அவாய்ட் பண்ண தான் நினைச்சேன்.
ஆனாலும் உன்னோட திறமை, நீ எல்லா ஸ்டாப் கிட்ட மரியாதையா பழகுற விஷயம், அப்புறம் வேலை கத்து கொடுத்த விதம், முக்கியமா எந்த பொண்ணுங்க கிட்டயும் வழியாத குணம் எல்லாம் என்னை கொஞ்சம் கொஞ்சமா உன்னை லவ் பண்ண வச்சுடுச்சு!
ஆனா எக்காரணம் கொண்டு அதை வெளியில் மட்டும் காட்டிக்க கூடாதுன்றதுல மட்டும் நான் ரொம்ப எனக்கு நானே கண்டிசன் போட்டுகிட்டேன்!
ஏன்னா, நானே என் அம்மா ஆனந்தி விழுந்து விழுந்து பார்க்கிற எத்தனை டிவி சீரியல்களை கிண்டல் பண்ணியிருப்பேன்!
ஏம்மா நீ பார்க்கிற எல்லா சீரியல்களும் ஒரே டெம்ப்ளேட் தான்!
பாசை(Boss) உஷார் பண்ற வேலைக்காரிகள் அல்லது அவனோட பி ஏக்கள்!
இத தானே காலம் காலமா சீரியலா எடுக்கிறாங்க அதையும் நீங்க புதுசா பார்க்கிற மாதிரியே பார்க்கிறீங்க அப்படீன்னு அப்படி கிண்டல் பண்ணுவேன்!
அப்படி சொன்ன நானே உங்கள லவ் பண்ணினா, எல்லோரும் என்னை கேவலமா கமென்ட் பண்ணுவாங்க!
அதுவும் இல்லாம நான் என் வீட்டுல பார்க்குற மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்யணும் ஒரு ப்ரின்ஸ்பல் வச்சுட்டு இருந்தேன்!
ஆனாலும் என் மனசு உங்க பின்னாடியே தான் வந்துச்சு!
அது எங்காவது வெளியே தெரிஞ்சுடும்ன்னு தான் எப்ப பார்த்தாலும் கோபமா இருக்கிற மாதிரி காண்பிச்சுக்குவேன்! அது ஒரு மாஸ்க்! என் மனச உங்க கிட்டயிருந்து மறைக்க!
அதுவும் என்னோட ராக்கிய தூக்கிட்டு உன் வீட்டுக்கு வந்தப்போ, உன் வீட்டைப் பார்த்துட்டு, என்னோட லவ் கடுகளவு கூட வெளியே தெரிஞ்சுடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்!
ஆனா அன்னிக்கே உங்க அம்மா நாகு அண்ணாவை விட்டு எங்கள வீட்டுல டிராப் பண்ண சொன்னாங்க.
அப்ப காரில் போகும் போது தான் அவர் மூலம் தான் கீர்த்திஸ் உங்க கடை தான்னு தெரிஞ்சது!
அத நீங்க லாப நோக்கு இல்லாம, அங்க இருக்கிற ஸ்டாப்ங்க பாவம், எல்லோரும் தாத்தா காலத்து ஆளுங்க, இனிமே வேற கடையில் போய் இதே மாதிரி மரியாதையுடன் வேலைப் பார்க்க முடியாதுன்னு பெரிசா லாபம் இல்லாம தான் அத தொடர்ந்து நடத்திட்டு வர்றீங்கன்னும் தெரிஞ்சிகிட்டேன்!
நீங்களே ஒரு பில்டர்ஸ் தான், உங்களுக்கு அந்த இடத்தோட கமர்சியல் வேல்யு நல்லாவே தெரிஞ்சு இருந்தும், அதை ஒரு கமர்சியல் காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டாவே செவரல் லாக்ஸ் உங்களுக்கு வெறும் வாடகையாவே கிடைக்கும்!
ஆனா நீங்க அப்படி செய்யாம, அதை இன்னும் நடத்திட்டு வரீங்க!
அது தெரியாம, நான் தான் அந்த ஸ்டாப் பண்ணுன தப்புக்கு உங்களுக்கு போய் அப்படி கேவலமா திட்டி மெயில் அனுப்பியிருக்கேன்!
மெயில் அனுப்பினது நான் தான் உங்களுக்கு தெரிஞ்சதுக்கப்புறம், நீங்க ஆரம்பத்தில் முறைச்சாலும் அப்புறம் என்னை எப்போதும் போல் நடத்தினீங்க!
இது எல்லாம் எனக்கு உன் மேலே பயங்கர லவ் வர வச்சது! ஆனாலும் நான் என்னை வெளிக் காட்டிக்கல!
ஆனா, நான் தள்ளிவிட்டு உங்களுக்கு அடிப்பட்டப்போ எனக்கு அப்படியே துடிச்சுதான் போச்சு!
அந்த இடத்துல வேற ஆள் இது மாதிரி பொய்யா நடிச்சிருந்தா, நான் ஈசியா கண்டுபிடிச்சுருப்பேன்! அடிபட்டது உங்களுக்குகிறப்போ அப்போ என்னோட புத்தி வேலையே செய்யல!
ஆனா நீங்க அத யூஸ் பண்ணிட்டு, இப்படி என்னை ஹக் பண்ணி, கிஸ் பண்ணி .. ச்சே.. உங்களுக்கு அப்படி வேணுமின்னா நீங்க அந்த ஷீத்தல் மாதிரி பொண்ணுங்க கிட்ட இத ட்ரை பண்ணியிருக்கலாம்!
அவ என்னோட அழகாவும் இருப்பா! உங்களுக்கு நல்லா கம்பெனியும் கொடுத்துருப்பா! ஏன் இப்படி என்கிட்ட போய்?”
ப்ரீத்தி மீண்டும் அழுதாள்!
“ஏய்! ஷட் அப் ப்ரீத்தி! கண்டவளையும் ஹக் பண்ணி கிஸ் பண்ண தான், நான் ஒரு கம்பெனியோட CEO, எனக்கு சொசைட்டியில எவ்வளவு ரெஸ்பெக்ட் இருக்கு, நான் இந்த அளவு கீழே இறங்கி டிராமா பண்ணனுமா?
நீ எனக்கு வேணும் ப்ரீத்திமா, நான் உன்னை அந்த அளவு லவ் பண்றேன்! உன்னை, உன் சின்சியாரிட்டிய, உன் பெர்பெக்சனை, உன் நேர்மையை, உன்னோட கேரிங்கான குணத்தை, உன்னோட குறும்பை, அப்புறம் உன்னோட இந்த கோபத்தையும் சேர்த்து தான் உன்னை நான் லவ் பண்றேன்!
அப்பா, நான் இந்த ப்ரீத்தியை லவ் பண்றேன்னு ஒரு வார்த்தை என் அப்பாகிட்ட சொன்னா போதும், அடுத்த முஹூர்த்தத்திலேயே என் அப்பா நம் கல்யாணத்தை நடத்தி விடுவார்!
ஆனால் எனக்கு, நீயும் என்னை லவ் பண்ண வேண்டும் என்ற ஆசை!
உனக்கு விருப்பம் இருக்குதான்னு உன்னை கவனிக்க ஆரம்பித்தேன்.
உன் வாய் ஓயாமல் என்னோடு சண்டை போட்டாலும், கோபமாக பேசினாலும், உன் கண், உன்னோட லவ்வை எனக்கு காட்டிக் கொடுத்தது!
அது கொடுத்த தைரியம் தான் எனக்கு, உன்னை அப்படி அத்துமீறி உன் வீட்டில் வச்சே கிஸ் பண்ண வச்சது!
எனக்கே இன்னும் அந்த நாளை நினச்சா ஆச்சர்யமா தான் இருக்கு! நான் போய் எப்படி அப்படி நடந்துகிட்டேன்னு!
ப்ளீஸ் ப்ரீத்தி, உன் பாஸ் தான் உன்னை உஷார் பண்ணியிருக்கேன்! நீ உன் பாசை உஷார் பண்ணல! அதனால இப்படி கண்டபடி யோசிச்சு உன் மனசை என்கிட்ட மறைக்காம, இப்ப உன் மாமாவை பார்த்து ஐ லவ் யூ சொல்லிவியாம்! என்ன ஓகேயா? அவள் மூக்கைப் பிடித்து ஆட்டிக் கொஞ்சினான் ராகுல்!
இப்போது ப்ரீத்தி கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்தாள்.
“டேய்.. என்னை ஐ லவ் யூ சொல்ல வைக்க, எவ்வளவு பொய்டா? ஷ். அப்பா.. என்னால எல்லாம் இப்படி பொய் சொல்ல முடியாது!
பாவம் அந்த டாக்டர்! அவரைக் கூட இப்படி பொய் சொல்ல வச்சுட்ட! பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு என் அத்தை சொல்வாங்க, ஆனா இப்ப நீ சொல்லியிருக்கிற பொய்களுக்கு?”
“போஜனம் கிடைக்காதா? அப்படின்னா?”
“ம்ம். பொய் சொன்ன வாய்க்கு, சோறே கிடைக்காதாம்!” ப்ரீத்தி சிரிப்புடன் சொன்னாள்.
“அது ஓகே, பொய் சொன்ன வாய்க்கு மம்மு வேணுமின்னா கிடைக்காம போகலாம், ஆனா நிறைய உம்மா கிடைச்சதே!” என்றான் அவன் குறும்பாக!
“டேய்.. நீ எல்லாம் திருந்தவே மாட்டியா?” அவன் தலையில் கொட்டினாள் ப்ரீத்தி!
கொட்டிய அவள் கைகளை வளைத்துப் பிடித்து, அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான் ராகுல்!
அவன் மேல் சாய்ந்து கொண்டிருந்த ப்ரீத்தி, திடீரென்று எதையோ யோசித்து விட்டு கொஞ்சம் உம்மென்று ஆனாள் ப்ரீத்தி!
“இப்ப என்ன மேடம், புது கவலை?” அவன் முகம் நிமிர்த்திக் கேட்டான்.
“நான் அரேஞ்ச்டு மேரேஜ் தான் பண்ணிக்கணும், அப்புறம் இந்த ஹக் கிஸ் எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் நடக்கணும் ஒரு கொள்கையோட இருந்தேன்! எல்லாத்தையும் கெடுத்துட்டடா நீ!”
“லவ் ப்ரொபோஸ் பண்றதுக்குள்ளேயே எத்தனை கிஸ்! எல்லாம் உன்னால தான்!” அவள் அவன் நெஞ்சில் குத்தினாள்!
“ஓ இது தான் உன் கவலையா ப்ரீத்தி! அப்ப ஒண்ணு பண்ணு, இது வரைக்கும் நான் கொடுத்தத எல்லாம் நீ திருப்பிக் கொடுத்து நில்(Nil) பண்ணிடு!
நாம நம்மை கல்யாணத்துக்கப்புறம், நியூவா ஒப்பனிங் ஸ்டாக் வச்சு ஆரம்பிக்கலாம் என்ன சொல்ற நீ, டீலா நோ டீலா?”
“டேய்..” அவள் திரும்பவும் செல்லமாக அடிக்க ஆரம்பிக்க,
“அய்யோ ப்ரீத்தி நீ இங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சு, கீழே நம்மை தேடுவாங்க, வா போலாம்.
நீ உன் பாகை எடுத்துட்டு என் பின்னாடியே வா, நாம ஆபிஸ் விசயமா பேசுற மாதிரி பேசிட்டே கீழே போவோம்” என்று அழைத்து சென்றான்.
“அப்புறம் ப்ரீத்தி அந்த டாகுமெண்டை இன்னிக்கே மெயில் பண்ணிருங்க” என்று பார்மலாக பேசியபடி வந்த ராகுலைப் பார்த்து,
ரஞ்சித், ராதிகாவைப் பார்த்து கிசுகிசுத்தான்.
“உன் தம்பி கன்னம் என்னடி வீங்கியிருக்க மாதிரி இருக்கு!
தலை வேறு புடைச்சா மாதிரி வீங்கியிருக்கு! புடைச்சிருக்கா, முளைச்சிருக்கான்னு செக் பண்ணிப் பாரு!
ஏன்னா ப்ரீத்தி பொண்ணு, சிரிச்சா மாதிரி நம்ம கிட்ட பேசிட்டு அவன் ரூமுக்குள்ள போனாலும், அது கண்ணுல அவ்வளவு கோபம் இருந்தது! உன் தம்பி அத ஏதோ வம்பிழுத்துருக்கான்! அதான் வீடு தேடி வந்திருக்கு! என்னனு கேளுடி”
“ஷ்.. சும்மாயிருங்க.” ராதிகா அவனை அடக்கினாள்.
ரஞ்சித் விடுவதாக இல்லை!
ராகுலின் காதில் “என்ன மாப்பிள்ளை, உள்ள ஏதோ என்னை அவ அடிக்க, அவ என்னை அடிக்கன்ற மாதிரி சம்பவம் நடந்த மாதிரி தெரியுதே என்னாச்சு சொல்லு, ஒரு ஆம்பிளையோட மனசு இன்னொரு ஆம்பிளைக்கு தான் தெரியும்!” கிண்டல் அடித்தான் அவன்!
சும்மாயிருங்க மாமா என்ற ராகுல் கொஞ்சம் யோசனையில் இருந்தான்.
ப்ரீத்தி, இவர்கள் எல்லோரையும் கடந்து தான் என் ரூமிற்கு வந்துருக்கா, ஏன் இவங்க எல்லோரும் ஒண்ணுமே சொல்லாம அவளை என் ரூமிற்குள் விட்டார்கள்?
அம்மா கூட அவனை தானே கீழே அழைத்து தான் பேச சொல்லுவாங்க, இன்னிக்கு இவங்களுக்கு எல்லாம் என்னாச்சு?
ராகுல் குழம்பினான்!
error: Content is protected !!