Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 5

மின்னல் ஒரு கோடி

அத்தியாயம்   –  5



Advertisement

    கோடிஸ்வரன்   மறக்க   வேண்டிய  நாட்கள் அவை. அவனின் கருப்பு  நாட்கள். அவனே   மறந்ததை  நினைவு படுத்தி விட்டாள்  கௌசி.

Advertisement

 அப்போது  கோடி  (p  u  c)  பி  யூ  சி இரண்டாம் வருடம்  படித்துக் கொண்டு  இருந்தான்.

Advertisement

வீட்டிற்க்கு  வந்தவன்  பழனிக்கு தலையில் அடிப்பட்டு  இருக்க.

கோடி குருவம்மாளிடம்  என்னம்மா  ஆச்சு அப்பாவுக்கு  என்று  கேட்க.

Advertisement

 குருவம்மாள்  அழுது கொண்டே கோடியிடம்  நம்ம  கடைசி  வீட்டுல  இருக்கானுல அந்த  காந்தி  பய உங்கப்பாவை  அடிச்சு

 தள்ளி  விட்டுட்டான். அப்பா  கீழே விழுந்து தலையில் அடிபட்டுருச்சி.

ஏன் அப்பாவ  அடிச்சான்  அவன்.

அவன்  ஒரு  வருஷமா  நம்ம  வீட்டுக்கு  வாடகை  குடுக்கலை. கேட்டதுக்கு  அடிச்சுட்டான்.

 கோடிக்கு  எங்கே  இருந்து தான் கோபம்  வந்ததோ  தெரியல. வீட்டில்  இருந்து வெளியில்  வந்தவன்.நேர  காந்தியின்  வீட்டிற்கு  செல்ல.

அங்கே  காந்தி அவன்  வீட்டில் உங்கார்ந்து  டி.வி  பார்த்துக்  கொண்டு  இருந்தான்.

 அவனை  பார்த்து  முறைத்த  கோடி. ஏன்டா  என்  நைனாவ அடிச்ச.

 காந்தி  கோடியிடம்  ஏன்டா  எத்தனை  வீடு  வச்சு  இருக்கீங்க. இந்த ஒரு  வீட்டுல  வாடகை  வல்லன்னா  என்ன  இப்போ.  நீ  ஒழுங்கு  போயிறு  இல்ல. உன் மண்டையை  ஒடச்சிருவேன்  என்று கூறி  சிரிக்க .சின்ன பய, பொடி பய , மீச  கூட  முலைக்கல  வந்துட்டான். அப்பனுக்கு  நியாயம்  கேட்டு  போடா என்று  கூற.

கோடி  அவன் பக்கத்தில்  ஓடி கொண்டிருந்த  டி.வியை  தூக்கி  காந்தியின்  தலையில்  போட . டி.வி  டமார் , என்று  உடைந்தது.

காந்தியின்  தலையில்   இருந்து  இரத்தம்  வர. அக்கம்  பக்கத்தினர்  வந்து  காந்தியை  ஹாஸ்பெட்டலில்   சேர்த்தனர்.

காந்தி  மிகவும்   மோசமான நிலையில் இருக்க. கோடியை போலிஸ்  வந்து  கூட்டி  சென்றனர்.

 ஒரு வாரம்  கோடி  ஜெயிலில் இருந்தான். கோடியின்  நல்ல நேரம்   காந்தி  பிழைத்து  விட்டான்.

 கோடி  காலேஜுக்கு  செல்ல.  கோடியின்   நண்பர்கள்  அவன்  ஜெயிலுக்கு  போய்  வந்தது  தெரிந்து  கோடியை  தவிர்க்க.சில  நண்பர்கள் அவனை  பார்த்து  பயப்பட.  கோடி  படிப்பை  நிறுத்தி  இருந்தான்.

கோடியின்  தந்தை  எவ்வளவோ  எடுத்து  சொல்லியும் . அவன்  படிக்க  போகவில்லை.

இன்று அனைத்தையும்  நினைத்து  பார்த்தவன்.மனதில்  பாரம்  தாங்க  முடியவில்லை.அதுவும்  கௌசியின்  வாயில்  இருந்து .நீ  ஜெயிலுக்கு  போனவன்  என்று சொல்ல  அவமானமாக  உணர்ந்தான். அன்று  செய்யும்  போது வருந்தாதவன்  இன்று  வருந்தினான். அதுவும்  தன்னவள்  தன்னை  பார்த்து  பயம்  என்று  சொல்ல.

கோபம்  கட்டு  கடங்காத  கோபம். யார்  மீதும்  காட்டக்கூடாது  என்று  நினைத்தவன்.  அவனையே  வருத்திக்  கொண்டான். ஒரு   வாரமாக  குடித்தான். அவளை  மறக்க  எண்ணி  ஆனால்  அது  முடியாது  என்று  நினைத்து. குடியை  விட்டான்.

அவனது  கோபத்தை  குறைக்க  வேலைகள்  அதிக  அளவில்  செய்தான்.

 குருவம்மாள்   கோடியை போனில்  அழைக்க.

என்ன என்றான்.

 குருவம்மாள்  கோடியிடம் தம்பி  உனக்கு  கல்யாணத்துக்கு  ஒரு   பொண்ணு  பார்த்து  இருக்கேன் என்று  கூற.

 கோடி   குருவம்மாளிடம்  கல்யாணம்  வேண்டாம் , ஒரு மண்ணும்   வேண்டாம். பொண்ணுங்கள  பார்த்த  வெறுப்பா  இருக்கு. எனக்கு  கல்யாணம்  பண்ணுற  ஐடியாவே  இல்ல. போனை  வை  மா  என்று போனை  ஆப்  பண்ணிட்டான்.

கோடி  கௌசியை  பார்த்து  1 மாதமாகி  விட்டது.  கோடி  பஸ்  ஸ்டாப்  பக்கமே  திரும்பி  கூட  பார்ப்பது  இல்லை.

கௌசியை  ஒரு  வாரம்  இராஜா செல்வம்  காலேஜில்  விட்டு  சென்றார். பின்பு  அவர்  கஷ்ட  படுவதை  பார்த்த  கௌசி  அவளே  நானே  போய்கிறேன்ப்பா  என்று அவளே.  அதே   பஸ்  ஸ்டாப்பில்  இருந்து   காலேஜ்க்கு  சொல்கிறாள்.

 கோடி  வருவதில்லை  என்று.  நிம்மதியாக.  சென்று கொண்டு  இருந்தாள்.

கௌசி  காலையில்  8  மணிக்கு கிளம்பி காலேஜ்  சென்று  விட்டு. காலேஜ் மதியம் 3 மணிக்கு  முடிந்து  விடும். பின்பு கௌசி  கோச்சிங்   கிளாஸ்  போவாள். அது  முடிய  இரவு  7   மணியாகும்.

தினமும் கோச்சிங்  கிளாஸ்   முடிஞ்சு  அவள்  பஸ்  ஏறி  வீட்டிற்கு 8  மணி  ஆகும்.

 கோடிக்கு  இது  தெரியாது.

ஒரு நாள்  கோடியும்  பார்த்திபனும்  அவனின்  காம்புலக்ஸ்  பக்கத்தில்  உள்ள   டீ  கடையில்   நின்று  இருவரும். டீ  குடித்துக் கொண்டு இருக்க.

கோடி  1  மாதம்  கழித்து  கௌசியை  பார்த்தவன். மனதில்   சொல்ல  முடியாத  சந்தோஷம் போல  தோன்ற   அவளை  பார்த்து  பாக்காதது   போல   திரும்பி  நின்று  கொண்டான்.

 அவள்  தினமும்  இரவு 8  மணிக்கு தான்   கோடியின்   கடை பக்கத்தில்  உள்ள  ரோட்டில்  தான்   நடந்து  வருவாள். இன்று தான்  கோடி  கௌசியை  பார்க்கிறான்.

கௌசி  கோடிஸ்வரனை  பார்க்க  வில்லை . அவனை  கடந்து  சென்றவள். பக்கத்தில் ஒரு   கடையில்  நின்று  ஏதோ  வாங்கினாள்.

அவள்  என்ன   வாங்கினாள்.  என்று  கோடி  பார்க்க . ஒரு  லாலி  பப்  வாங்கி  சப்பிக்கொண்டே  சென்றாள்.  அவளின்   வீட்டிற்கு.

கோடியை  பார்த்த   பார்த்திபன்  என்னடா  கௌசியை  லவ்  பண்ணுரீயா  என்று  கேட்க.

 இல்லை  என்றான் கோடி.

பொய் சொல்லாத என்ற  பார்த்திபன்.  பசங்க  எல்லாம்  சொன்னாங்க. நீ  அவளை  கிரகபிரவேஷத்து  கூப்பிட்டு  அவக்கூட  சாப்பிட்டுடியாமே  என்று  கூற.

 கோடி  அப்படி ஒரு எண்ணம் அப்போ  இருந்துச்சு . இப்போ  இல்ல.

என்ன சொல்லுற .அத  விடு.

ஆமா  கௌசி ஏன்  8 மணிக்கு  போறா  காலேஜ்  இவ்வளவு நேரம்  நடக்குது. காலேஜ்  மதியம்  முடிஞ்சுடும். அவ  கவர்மென்ட்  வேலைக்காக   கோசிங்  சென்டர்  போயி  படிச்சுட்டு  வாரா ரொம்ப  நல்ல  பொண்ணுடா.

ஆமா , ஆமா  ரொம்ப நல்ல  பொண்ணு  தான்  என்று  மனதில்   கௌசியை  திட்டியவன். அவனின்  காம்புலக்ஸ்  நோக்கி  சென்றான்.

கோடிக்கு  ஒரு  வாரமாக  மனதே  சரியில்லை . ஏன்  என்றே  தெரியவில்லை . அவன்  புதிதாக  கட்டிய  வீட்டிற்கும்  செல்ல  வில்லை.   அவனின்  வீட்டிற்கு  சென்று  மாடியில் உள்ள ஒரு அறையில் தூங்கி   கொண்டு  இருக்க  திடிர்  என்று  இரவு 2 மணிக்கு  ஆம்புலன்ஸ்  சத்தம்  கேட்டு   எழுந்து  கோடி  அவனின்  வீட்டின்  மாடி  அறையின்  சன்னல்

 வழி  பார்க்க.  கமலத்தை  ஹாஸ்பெட்டலுக்கு  ஆம்புலன்சில்   அழைத்து சொல்வதை  பார்த்தவன்.

கீழே  வருவதற்குள்  ஆம்புலன்ஸ்  சென்று  விட்டது.  என்ன  ஆகிற்ரு  கமலத்திற்கு என்று  நினைத்தவன்.

உனக்கு என்ன  உன்  வேலையை  பாரு  என்று  ஒரு பக்கம்  சொல்ல.

கமலத்தின்  தம்பி  என்ற  அழைப்பு  .அவனை  என்னவென்று பாரு என்று  சொல்ல.

காலையில்  சென்று  பார்க்க  வேண்டும்  என்று  நினைத்து  இருந்தான்.

 காலையிலே  எழுந்து  கிளம்பியன். அந்த  ஆம்புலன்சில்  மௌன்ட்  ஹாஸ்பெட்டல்  என்ற  பெயர்  இருக்க. ஈஸியாக  அந்த  ஹாஸ்பெட்டலுக்கு   சென்று   கமலத்தை  பத்தி  ரிஷப்சனில் இருக்கும்  பெண்ணிடம்  கேட்க. அவளோ  கமலம்  ஐ.சி .யூ.ல .  இருக்காங்க  சார்  பாக்க  முடியாது. ஹார்ட் டா டாக்  என்று  கூற . நல்லா தானே  இருந்தாங்க.  என்னாச்சு.  மேலே   செல்லலாமா  என்றவன்.

ஏனோ  செல்ல  மனம்  வரவில்லை.  திரும்பி காம்புலக்ஸ்  வந்து  விட்டான். ஒரு  வாரம் ஆகியது  கமலம்  வீட்டிற்கு வர. வந்து  விட்டார்  என்று  தெரிந்து  கொண்டான் .

 கமலத்தை  சென்று  பார்க்க நினைக்க.கௌசியை  பார்க்க  வேண்டும்  என்று  நினைத்து. போகாமல்  இருந்து  கொண்டான்.

கௌசி  நீண்ட  நாட்களாக   காலேஜ்   செல்லவில்லை. வீட்டில்  எப்போதும்  அழுகை  தான் கமலத்தை  அவளால்  சமாதானம்  பண்ண  முடியவில்லை, புலம்பல்  அதிகமாகி  கொண்டே  இருந்தது.

சிவாவுக்கு  எல்லாம்  தன்னால்  தான்  என்று  மனமுடைந்தவன். ஒரு  நண்பனை  பார்க்க  வெளியே சென்றான். கோடி  தனது  காம்புலக்ஸ்  பின்னாடி  உள்ள  குடோனில்  வரவேண்டிய  பொருள்களை  சரி  பார்த்து.  குடோனுக்கு அனுப்பி  வைத்து  கொண்டிருக்கும்  போது.

சிவா  அந்த  வழியா பைகில்   செல்ல .

சிவாவை  பார்த்த  கோடி . சிவா என்று  அழைக்க  திரும்பி பார்த்த  சிவாவுக்கு  முதலில்  கோடியை  தெரியவில்லை.  பின்பு  யோசித்தவன்   சிறு  புன்னகை  செய்து கை காண்பித்து. கோடியின்  அருகில்  வந்து  ஹாய் சார்  என்றான்.

கோடி  சிவாவிடம்  அம்மா இப்போ  ஓகேவா  என்று  கேட்க.

 சிவா  ஆன்  இப்ப  பரவா வில்லை  என்று  ஒரு  உணர்ச்சி  இல்லாமல்  சொல்ல.

கோடி என்ன சிவா உங்க  முகமே சரியில்லை என்றவன். உள்ளே  வாங்க  என்று  அவனின்  ஆபிஸ்  அறைக்கு  அழைத்து சென்றான்.

அங்கே  வேலை. செய்பவரிடம்  இரண்டு  காபி  வாங்கிட்டு  வாங்க  என்று  சொல்லி  சென்றான்.

கோடி  தன் எதிரே  உள்ள  சேரில்  சிவாவை  அமர  சொல்லி விட்டு சிவாவுக்கு  தண்ணீர்  குடுத்தான்.

சிவாவுக்கு  தண்ணீர் மிகவும்  தேவையாக  இருந்தது. வாங்கி  குடித்தவன்  தாங்  யூ  சார் என்றான் .

பரவாவில்லை என்றான்  கோடி.

காபி  கொண்டு  வந்து  கொடுக்க.

சிவாவிடம்  ஒன்றை  குடுத்த   குடிக்க  சொல்ல .

வேண்டாம்  சார்  என்றான் .

ஒரு காபி  தானே.  குடிங்க   சிவா  என்றான்.

சிவா  காபியை  குடித்து  கொண்டே  கோடியின்   ஆபிஸ் அறையை  சுற்றி  பார்த்தவன்.  காபியை  குடித்து  முடித்துவிட்டு. தாங்  யூ  சார்  என்று  சொல்லி  கிளம்ப.

என்ன  பிரச்சனை  என்றான் கோடி  சிவாவை  பார்த்து.

அவனோ என்ன  பிரச்சனை ஒன்னும்  இல்ல சார்.

சிவா  உங்களை  பார்த்தாலே  தெரியுது  ஏதோ  பெரிய  பிரச்சனையில  மாட்டி  இருக்கிற  மாதிரி  சொல்லுங்க  என்னால  முடிஞ்ச  உதவி  பண்ணுறேன்.

 இல்ல  சார்  நான்  பாத்துக்கிறேன். நீங்க  கேட்டதே  போதும் .  உங்களால  எனக்கு  உதவி  பண்ண  முடியாது . என்  பிரண்ட் கிட்ட  உதவி  கேட்டு  தான் போயிட்டு  இருக்கேன்  என்று  சொல்லி  கொண்டு இருக்கும் போதே .சிவாவுக்கு போன் வர.  கோடியிடம்  ஒரு  நிமிசம்  சார் என்றவன்.

அவனின்  நண்பனிடம்  பேச  சீக்கிரம் வேணும்டா . ஒரு  வாரம் டைம்  இருக்கு என்று சொல்ல.

 எப்போது  வருவார்  கேட்டு  சொல்லு என்று  போனை  வைக்க.

சிவா  போனையே  வெறித்து  பார்த்து  கொண்டு  இருந்தான்.

 இவர்களிடம்  இருந்து  தனக்கு  சாதகமான  பதில் வரவில்லை . எடத்த  விக்க  முயற்சி  பண்ணுவோம் என்று முடிவு எடுத்தவன்.

கோடி  சிவாயிடம் பண  பிரச்சனையா  என்று  கேட்க.

ஆமாம்  என்றான்  சிவா.

 கோடி எவ்வளவு  என்று  கேட்க .

சிவா நீங்க  கேட்டதே  போதும்  சார்.நான்  பாத்துக்கிறேன்  என்று  கிளம்ப.

என்னால  முடிஞ்ச  உங்களுக்கு  எல்பு  பண்றேன்  சிவா  என்றான்  கோடி.

சிவாவுக்கு யாரிடமாவது  மனதில் உள்ளதை  சொல்லனும்  போல  இருக்க. கோடியிடம்  நான்  ஹைதரபாத்தில்   என்  தாய்  மாமன்  நடத்தி வந்த  கம்பெனியை  பாத்து  கொள்கிறேன் சார். என் தாய்  மாமன்  4  வருஷம்  முன்னாடி இறந்துட்டார்.

அவர் லேமினேட்  செய்யும்  கம்பெனி  வைத்து  இருந்தார். எல்லாம் பொருள்களை   லேமினேட்  செய்யும்  மெசின் இருந்தது.  எல்லாம்  பழைய  மெசின். இப்போ  எங்களுக்கு  ஒருவர்   ஆடர்  கொடுத்தால். நாங்க  செய்து   கொடுக்க  ஒரு நாள்  ஆகும்.

இப்போ   லேடஸ்ட்  புது , புது  மெசின்  வந்து  இருக்கு .   ஒரு வேலையை , ஒரு மணி நேரத்தில் முடிக்குற  மாதிரி மெசின்  வந்து இருக்கு.

 எங்களுக்கு  நிறைய  ஆடர்  கம்மியாச்சு. நானும்  புது மெசின்  வாங்கனும்  நெனச்சு. மிசின்  பார்த்து  பேசி  வாங்கலாமுன்னு  முடிவு  பண்ணேன். வாங்கினேன்.

மெசின்  சைனாவுல  இருந்து  வரும்  போது  கோரோனா  ஆரம்பிச்சிருச்சு. மெசின் கப்பல்லுல  மாட்டிக்கிச்சு. மெசின்  என்  கை கிடைக்கவே  பல மாசம்  ஆகிருச்சு. மெசின்  வந்தும்  என்னால வேலை  செய்ய  முடியல.   மெசின  செட் பண்ணி  ரன்  பண்ண  கோரானா  மறுபடியும். சரியா  வேலை  நடக்கல.

நான் பேங்கில் லோன்  வாங்கித்தான் மெசின்  வாங்கினேன்.  லோன்  கட்ட  முடியல. நாங்க  இப்ப   இருக்கும் வீட்டு  பத்திரத்தை  வைத்துத்தான்  லோன்  வாங்கினேன். இப்போ  பேங்குல  இருந்து அமௌன்ட்ட செட்டுல்  பண்ணுங்க  இல்ல  வீட்ட  குடுங்கன்னு  கேக்குறாங்க.

எங்க  கிட்ட  3 , 4  இடம்  இருக்கு. அத   விக்க  ட்ரை  பண்றேன்  விக்க முடியல. ரொம்ப  கம்மியான  விலைக்கு  கேட்குறாங்க.

விஷயம்  தெரிஞ்சதுல  இருந்து அம்மா  ஒரே  அழுகை. நான்  முதல் முதலில்  வாங்கின  வீடு என்று  அம்மா அழுது  உடம்பு சரியில்லை.

கோடி  சிவாயிடம்   எவ்வளவு பணம்  பேங்குல   கட்டனும்.

சிவா 1   1/4   கோடி சார்.

 ஓ  என்ற  கோடிஸ்வரன். நான். ஏற்பாடு  பண்ணி தரேன். நீங்க  போய்  எல்லா  டாக்கு மென்டும்  எடுத்துட்டு வாங்க . நாம்  பேங்குல  போய்  பேசிட்டு  வரலாம்  என்று  கூற.

சிவாவுக்கு  அதிர்ச்சியாக இருந்தது. என்ன எனக்கு  இவர்  பணம்  தருகீராற. கோடியிடம்  உண்மையாவ  சொல்லுறீங்க .

ஆமாம்  சிவா டைம்  ஆச்சு  போங்க  பேங்குல  பேசிட்டு  வரலாம்  என்று  சொல்ல.

சிவா  கோடியை அணைத்துக்  கொண்டு நன்றி  சொல்ல.

சிவா  என்ற கோடி  இது   ஒரு சின்ன  எல்புதான்  பண்ணுறேன். ரொம்ப  எமோஷனல் ஆக  வேண்டாம். என் கிட்ட  இப்போ  பணம் இருக்கு தரேன் . நீங்க  உங்க  எடத்த  வித்து  குடுங்க  வாங்கிகிறேன்   இதுல என்ன  இருக்கு.

சிவா கோடியிடம்  நீங்க பண்ணுறது  எவ்வளவு  பெரிய. விசயம்  தெரியுமா  சார். இந்த இரண்டு வாரமா நான் கேட்காத  ஆள்  இல்லை . எங்கே  போனாலும்  இல்லை, இல்லை என்ற   ஒரே வார்த்தை தான்.

நான்  உங்க கிட்ட  கேட்க  கூட  இல்லை . இந்த  மனசு  யாருக்கும்  வராது சார்.

சிவா  கிளம்புங்க  என்று  சொல்ல.  தனது  வீட்டை நோக்கி  சென்றான் சிவா.

கமலம்  அவர் வீட்டில் அமர்ந்து  கொண்டு  அனைத்து  கடவுளையும்  திட்டி   கொண்டு  இருந்தார். நான்  எந்த   கடவுளுக்கு  என்ன  குறை  வைத்தேன் . எல்லா  பூஜை  நல்லா தானே  பண்றேன். என்  மகனுக்கு  இப்படி ஒரு  இக்கட்டான சூழ்நிலை  ஏன்  உருவாக்கினாய்  கடவுளே  என்று  புலம்ப.

சிவாவின்  வண்டி  சத்தம்  கேட்டு  புலம்புவதை  நிருத்தினார்  கமலம்.

 மலர்ந்த  முகத்தோடு  வந்த  மகனை  பார்த்த  கமலம் பணம்  கிடைச்சுருச்சா  என்று கேட்க .

 ஆமாம்  மா என்ற  சிவாவை  அனைத்துக் கொண்டு  அழுதார்  கமலம் . இரண்டு நிமிடம்  கழித்து.  யாருப்பா உன் பிரண்டா.

 இல்லம்மா  கோடி சார். எதுத்த  வீட்டுல  இருக்காருல்லா அந்த  சார்  தான்.

என்னப்பா சொல்லுற.

ஆமாம்  மா. நான்  அவர்  கடை வழியா  போனேனா. அவர்  என்  முகத்தை பார்த்தே  ஏதோ  பிரச்சனையின்னு  நெனச்சு  கேட்டார். நான்  சொன்னேன்.

 கோடி சார்  என்னை  டாக்குமென்ட்  எல்லாத்தையும் எடுத்துட்டு  பேங்குக்கு வர  சொன்னார். நாளைக்கு பணம்  குடுக்கலாமுன்னு  சொன்னார்.

நான்  கிளம்புறேன்  என்று  டாக்குமென்டை எடுத்து  சென்றான்.

தன் அறையில்  இருந்த  கௌசிக்கோ  இவர்கள்  பேசியது கேட்டது. கோடி  இப்போது அவள் கண்களுக்கு  கடவுளை  போல  தெரிந்தான்.  இவ்வளவு  பணம்  கொடுக்கிராற. இரண்டு வாரமாக  அவள்  குடும்பம் பட்ட  பாடு.  அவளுக்குதானே தெரியும். இதை வைத்து என்னை  எதாவது  மிரட்டு  வாரா  என்று  பயத்துடன்  இருந்தாள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!