அம்மையப்பன் 32
அம்மையப்பன் 32
அகத்தியன் அமுதன் இருவரும் வீட்டின் மொட்டை மாடியில் தீவிர ஆலோசனையில் இருந்தனர்..
Advertisement
ஹ்ம்ம் வயசான காலத்துல உனக்கு இதெல்லாம் தேவையா மாமா.. பொண்ணுக்கு கண்ணாலம் பண்ணோமா பேர புள்ளைய பார்த்தோமான்னு இல்லாமா.. ஆர்ம்ஸ வளர்த்து வச்சுக்கிட்டு சின்ன பையனாட்டம் திரிஞ்ச அதான் மோகினி உன்னைய கட்டம் கட்டி தூக்கிடுச்சு.. என அமுதன் தன் கடுப்பையும் சேர்த்து நக்கல் செய்ய.. அகத்தியன் முறைத்தான்..
சரி சரி விடு.. இப்படி என்ன பாசமா பாக்குறத விட்டுட்டு.. என்ற அக்காகிட்ட இனி எப்படி அடிவாங்காம குப்பை கொட்டலாம்ன்னு யோசி..
Advertisement
Advertisement
என்றா.. புதுசா அக்கா எல்லாம் சொல்ற.. எப்போவும் ராட்சசி ராங்கி மோகினின்னுதான சொல்லுவ.. என கேலியாக கேட்டான்.. அகத்தியன்.
ஹுக்கும் எனக்கு என்ற உசிரு முக்கியம் மாமோய்.. அதவிட என்ற வம்சம் தழைக்கிறது ரொம்பா முக்கியம்.. என அமுதன் இழுத்து கூறவும் அகத்தியன் சிரிப்பும் முறைப்புமாய் அவனை பார்த்தான்..
Advertisement
எப்பா சாமி நினைச்சே பார்க்க முடியல.. கைய நீட்டி பேசுனதுக்கு என்ன மாதிரியான தண்டனை.. என உடல் சிலிர்த்து பயத்துடன் சின்னவன் கூற.. அகத்தியன் மறுப்பாய் தலையசைத்தான்..
அது அம்மணி முகத்துக்கு நேரா கையை நீட்டி பேசினதுக்கு மட்டும் இல்லடா, அவங்க அம்மா மேல கைய வைக்க போனதுக்கும் சேர்த்து தான்.. என்றான்..
ஹுக்கும் எனக்கென்னமோ அப்படி தோணல.. உன்ற பொண்டாட்டிக்கு அவங்க யாரையும் புடிக்காதாம் மது சொல்லிருக்கா.. என அமுதன் சொல்ல..
அகத்தியன் அதற்கு பதிலேதும் சொல்லவில்லை..
அந்த மது புள்ளைய உனக்கு எப்படி தெரியும்..
என்கூட தான் படிக்குறா மாமா.. என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்.. என்றவன்,
ப்ச் அதெல்லாம் விடு மாமா.. உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் கேட்கணும்.. எப்படி மாமா மாடர்ன் மாரியாத்தாவ இப்படி குடும்ப குத்து விளக்கா மாத்துன.. அந்த ரகசியத்தை எனக்கு மொதல்ல சொல்லு என அமுதன் ஆவலாக கேட்க..
அகத்தியன் அதியிடம் அவன் போட்ட சவாலையும் அதற்கு அவள் 21 நாள் மட்டும் அவ்வாறு இருப்பதாக சொன்னதையும் பெருமையாக கூற, அமுதன் திகைப்பும் அதிர்வுமாய் தன் மாமனை பார்த்தான்..
அப்போ இந்த சமைக்கிறது, மரியாதை கொடுக்கிறது, அமைதியாக இருக்கிறது எல்லாம் வெறும் 21 நாள் மட்டும் தானா, மோகினி எப்ப வேணா பழைய அவதாரத்துக்கு வருமா, என அமுதன் அதிர்ந்து கேட்க அகத்தியன் ஆமோதிப்பாய் தலையசைத்தான்..
யோவ் மனுசனா நீய்யி.. என்ன காரியம் பண்ணிவச்சுருக்க.. இருப்பதொரு நா கழிச்சு.. உன்ற பொண்டாட்டி ஒட்டு மொத்ததுக்கும் சேர்த்தி வச்சு ஆப்படிச்சா என்னய்யா பண்றது.. என அமுதன் கோபத்தில் குதிக்க..
நீ ஏன்டா அப்படி நினைக்கிற.. நல்லதா நினைச்சு பாரு.. ஒருவேளை நம்ம குடும்பம் காமிக்கற பாசத்துல அம்மணி மனசு மாறிட்டாங்கன்னா நல்லது தானே என அகத்தியன் கூற.. அமுதன் தன் மாமனை அய்யோ பைத்தியம் என்பது போல் பார்த்தான்..
இன்னுமா மாமா உன்ற பொண்டாட்டிய நம்பிகிட்டு கிடக்க.. அய்யோ அம்மத்தா உன்ன இப்படி அப்புறானியா வளர்த்துபுடுச்சே..
இங்காரு மாமா இருப்பதியொரு நா கழிச்சு உன்ற பொண்டாட்டி ஆடுற மோகினியாட்டமோ சிலம்பாட்டமோ அத தாங்கிக்க இப்போவே உன் உடம்ப பலப்படுத்திக்க.. முக்கியமா உங்க ஆட்டத்தை உங்களுக்குள்ளயே முடிச்சுக்கோங்க.. நம்ம வீட்டு மனுசங்ககிட்ட வந்துடாத முக்கியமா என்கிட்ட.. அவ்வளவு தான் என அமுதன் சொல்ல.. அகத்தியன் பாவமாய் முழித்து கொண்டிருந்தான்..
என்றா இப்படி சொல்ற..
வேற என்ன சொல்ல சொல்ற.. அவங்ககிட்ட பாசம் நேசம்ன்னு பேசி உடம்ப புண்ணாக்கிக்க சொல்றியா.. என எகத்தாளமாக கேட்க.. அகத்தியன் பரிதாபமாக அவனை பார்த்தான்..
அப்பொழுது அகத்தியனின் போனிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வர யோசனையுடன் எடுத்தான்..
ஹலோ..
………
ஹ்ம்ம் சொல்லுங்க..
……
இப்போவா..
……
சரி வரேன்ங்க என போனை வைத்தான்.
யாரு மாமா.. என அமுதன் கேட்க..
ஒன்னுமில்லடா நா கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்.. என அவன் சொல்லவும்,
உன் முகமே சரியில்லையே.. இரு நானும் வரேன் என அவனுடன் மல்லுகட்டி சென்றான்.. அமுதன்..
கோவையின் மெயின் ஏரியாவில் உள்ள ஓர் பெரிய வீட்டின் முன் அகத்தியன் காரை நிறுத்த.. இது மது வீடு தான என கேட்டவாறு இறங்கினான்.. அமுதன்..
ஹ்ம்ம்.. அதி அம்மா தான் ஏதோ பேசணும்னு வர சொன்னாங்க.. என்றான்..
மணிமேகலை வாசலில் நின்று கொண்டிருந்தார்..
வாங்க மாப்ள.. வாங்க தம்பி இருவரையும் வரவேற்று உள்ளே செல்ல, கிருஷ்ணகுமாரும் வாங்க மாப்புள என எதிர்கொண்டு அழைத்தார்..
மது, மித்ரன் ரெண்டு பேரும் வெளியில் வாங்க என மணிமேகலை அழைக்கவும் தன் அறையிலிருந்து வந்தாள் மதுமித்ரா…
“ ஹேய் அமுதன் வாடா.. என்ன திடிர்னு வந்துருக்க என உற்சாகமாக அவனை அழைத்த மது.. அங்கு நின்றிருந்த அகத்தியனை கண்டு.. வாங்க.. மா மாமா.. என்ன சற்று தயங்கினாலும் உறவுமுறை கூறியே அழைத்தாள்..
நல்லா இருக்கீங்களா அம்மணி.. நீயும் அமுதனும் ஒன்னாதான் படிக்கிறீங்களா இப்ப தான் இவன் சொன்னான் என அகத்தியன் சற்று நேரம் சம்பிரதயகமாக பேசினான்..
அப்பொழுது அங்கு வந்த மித்ரன் இவர்களின் வருகையை விரும்பவில்லை என்பதால், அவன் வாங்க என்றதோடு நிறுத்திவிட்டு தந்தையின் அருகே அமர்ந்து போனை பார்க்க ஆரம்பித்து விட்டான்..
என்ன சாப்பிடுறீங்க காப்பி டீ ஜூஸ் என மணிமேகலை கேட்க இருவரும் மறுத்தனர்..
அதெல்லாம் சொல்லக்கூடாது. மொத மொத எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க. ஏதாவது சாப்பிட்டுத்தான் ஆகணும் என்றாள் மது..
அய்யோ வேணாம் மது.. ஆல்ரெடி வயிறு நிறைய சாப்பிட்ருக்கோம்.. அதுனால கொஞ்சம் நேரம் ஆகட்டும் என அமுதன் உண்மையாகவே அலறினான்..
இன்னைக்கு அதி அக்காதான் சமைச்சாங்க மது.. சும்மா ஒரு விருந்தே தயார் பண்ணிட்டாங்க எல்லாம் அம்புட்டு ருசியா இருந்துச்சு.. அதான் அளவே இல்லாம சாப்புட்டுட்டேன் என அவன் எதார்த்தமாக சொல்ல.. அகத்தியனை தவிர மற்ற அனைவரின் முகமும் மாறியது..
மித்ரன் அமுதனை சற்று நேரம் வெறித்துவிட்டு மீண்டும் போனில் மூழ்க.. மதுவும் கிருஷ்ணனும் வருத்தமாக இருக்க.. மணிமேகலை உணர்வுகளற்ற முகத்துடன் இருந்தார்..
அதி அக்காக்கு சமைக்க தெரியும்னு நீ சொல்லித்தான் எங்களுக்கு தெரியுது அமுதா.. என வருத்தமாக மது சொல்லவும் தான் அவர்களின் அமைதியின் காரணம் மற்ற இருவருக்கும் புரிந்தது..
என்ன சொல்வது என தெரியாமல் இருவரும் சங்கடமாக முழிக்க.. மணிமேகலை பேச ஆரம்பித்தார்..
உங்க மாமாக்கும் எனக்கும் இருந்த உறவைப்பற்றி, அதியோட பிறப்பை பற்றி உங்களுக்கெல்லாம் எவ்வளவு தெரியும்னு எனக்கு தெரியல.. அதான் சில விஷயங்கள சொல்றதுக்காக உங்கள வரச்சொன்னேன்.. முக்கியமா அதியப்பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்..
இவங்க ரெண்டு பேருக்கு கூட அதியோட அப்பா திருச்செல்வம் சார் தான்னு உங்க கல்யாணத்தப்போ தான் தெரியும் என மற்ற இருப்பிள்ளைகளையும் பார்த்து கூற.. அவர்களும் அவரையே பார்த்து கொண்டிருந்தார்கள்..
அதி தங்களின் தந்தைக்கு பிறக்கவில்லை என்பதும் தாய்க்கு இரண்டு திருமணம் என்பதும் அதியின் திருமணத்தின் போதுதான் தெரிந்தது.. ஆனாலும் அதனை மணிமேகலையிடம் கேட்டு அவரை மேலும் சங்கடபடுத்த பிள்ளைகள் விரும்பவில்லை..
அதி தங்களிடம் நெருங்காமல் இருந்ததிற்கும், அன்னை மேல் காட்டிய வெறுப்பிற்கும் இதுதான் காரணம் என அவர்களாகவே யூகித்து கொண்டார்கள்..
என்னோட சின்ன வயசுலயே என் அப்பா அம்மா ரெண்டு பேரும் தவறிட்டாங்க.. அவங்க எனக்குன்னு விட்டுப்போனது ஒரு ஓட்டுவீடு மட்டும்தான்.. அதுக்கப்பொறம் எங்கப்பாவோட அக்கா அலமேலு அத்தை தான் என்னைய பாத்துக்கிட்டாங்க..
இவரு அவங்க பையன் தான்.. என தன் கணவனை பார்த்து கூற, அவர் ஆறுதலாக தன் மனைவியின் கரத்தை பற்றி கொண்டார்..
எங்களுக்கு சொத்துனு அந்த ஓட்டு வீட்டை தவிர வேற எதுவும் பெருசா இல்லை.. மாமாக்கு சொந்தமா தொழில் பண்ணனும்னு ஆசை.. அவரோட சிநேகிதர் ஒருத்தர் மும்பைல இருந்தார்.. அங்க நல்ல சம்பளத்துல வேலை ஒன்னு இருக்குன்னு சொன்னதும்.. இவரும் கிளம்பிட்டார்.. கொஞ்சம் பணம் சம்பாதிச்சுட்டு இங்க வந்து தொழில் ஆரம்பிக்கலாம்னு இருந்தார்..
போன ஒரு மாசத்துலயே இவருக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு.. என சொல்லிகொண்டிருந்தவரின் குரல் மெலிதாக நடுங்க.. கிருஷ்ணகுமார் ஆதரவாய் அவரை அனைத்தார்.. அதில் தன்நிலை மீண்ட மணிமேகலை தொடர்ந்து கூறலானார்..
நானும் எங்க அத்தையும் பதறியடிச்சுக்கிட்டு போனோம்.. அங்க யாரையும் எங்களுக்கு தெரியாது.. புது ஊர்ல அவங்க சொல்றதும் புரியாம கண்ணை கட்டி காட்டுல விட்டது மாதிரியாகிடுச்சு எங்க நிலைமை.. அப்போ அவரோட சிநேகிதர் தான் எங்களுக்கு உதவி செஞ்சாங்க..
உடம்புல பெரிய அடி கிடையாது ஆனா மூளைல இரத்தம் உறைஞ்சுட்டுன்னு சொன்னாங்க.. முதல்ல மருந்து மாத்திரையால சரி பண்ணிடலாம்னு சொன்னவங்க, அடுத்து ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்க எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. அவ்வளவா பணமும் எங்ககிட்ட இல்லை.. அவர் ப்ரெண்டு மூலமா எப்படியோ தமிழ் நாட்டுக்கு இவரை கூட்டிட்டு வந்துட்டோம்..
இங்கயும் ஆப்ரேஷன் பண்ணனும் சொல்லிட்டாங்க.. ஆனா அதுக்கான பணம் எங்ககிட்ட இல்லை.. வீட்டை வித்தாலும் பாதி பணம் கூட கிடைக்காது.. என்ன பண்றதுன்னு புரியாம எங்க ஊர் அம்மன் கோவில்ல உட்கார்ந்து புலம்பிகிட்டு இருக்கும்போதுதான் உங்க அத்தை கலையரசி அங்க வந்தாங்க.. என நிறுத்த அகத்தியனுக்கு ஓரளவு என்ன நடந்திருக்கும் என அனுமாணிக்க முடிந்தது.. அவன் பரிவுடன் அவரை பார்த்து கொண்டிருந்தான்
அவங்கள பார்க்கும்போதே பெரிய விட்டு ஆளுங்கன்னு தெரிஞ்சது.. அதனால அவங்க கிட்ட என்னோட கஷ்டத்தை சொல்லி அழுதேன். ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு கேட்டேன்.
அவங்க என்கிட்ட பதிலுக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் கேட்டாங்க. என்னோட ராசியும் நட்சத்திரமும் என்னன்னு மட்டும் தான் கேட்டாங்க என விரக்தியாக சிரித்தவாறு சொன்னார். மணிமேகலை..
நான் சொன்னதும்.. கண்டிப்பா உதவி செய்யுறதா சொன்னவங்க அடுத்து சொன்ன விஷயம் தான் என் தலையில இடியை தூக்கி போட்டுச்சு.. என்று சொல்லிகொண்டிருந்தவரின் செவிகளுக்குள், அன்று கலையரசி கூறியது எல்லாம் மீண்டுமொருமுறை ஒலித்து கொண்டிருந்தது..
ஹ்ம்ம் நீங்க சொல்ற பணம் ரொம்ப அதிகமா இருக்கே என கலையரசி புருவம் உயர்த்தி கேட்கவும், மணிமேகலை அவர் காலிலே விழுந்துவிட்டார்..
அம்மா நீங்க ஒரு தடவை மட்டும் இந்த உதவி செய்யுங்கம்மா.. உங்க வீட்ல வாழ்நாள் முழுக்க வேலைக்காரியா இருந்து இந்த கடனை எப்படியாவது அடிச்சிடுவேன்.. எங்களுக்கு ஒரு சின்ன வீடு இருக்கு.. அந்த வீட்டு பத்திரத்தை கூட உங்களிடம் கொடுத்துடுறோம்.. என மணிமேகலை கெஞ்சினார்..
வேலைக்காரியாவா.. ரெண்டு சென்மத்துக்கு நீ வேலை செஞ்சாலும் உன்னால இந்த கடனை அடைக்க முடியாது. என அலட்சியமாக தன் கரத்திலிருந்த தங்க வளையல்களை வருடியவாரு சொன்னவர்,
நான் சொல்ற ஒரு விஷயத்தை மட்டும் செஞ்சா போதும், இதைவிட அதிகமாகவே பணம் தருவேன் என கலையரசி அமர்த்தலாக சொல்ல மணிமேகலை அவரை புரியாது பார்த்தார்..
என்ன வேலைங்க
புள்ள பெத்து கொடுக்கிற வேலை என சாதாரணமாக கலையரசி சொல்ல, அலமேலுவும் மணிமேகலையும் அதிர்ந்து போனார்கள்..
என் என்ன சொல்றீங்.. என குரல் நடுங்க கேட்டார் மணிமேகலை..
அதான் சொன்னேனே புள்ள பெத்து கொடுக்குற வேலைன்னு.. எங்க அண்ணனுக்கு ஒரு பிள்ளைய பெத்து கொடுக்கோணும்.. அவ்வளவுதான்.. வப்பாட்டியா இல்ல.. கண்ணாலம் கட்டிக்கிட்டு தான்.. என்ன பிள்ள பொறந்ததும் அத எங்ககிட்ட கொடுத்துட்டு எங்கண்ணன் கட்டுன தாலியையும் கழட்டி கொடுத்துப் போட்டு போயிடணும்… அவ்வளவு தான் என கலையரசி இரக்கமேயில்லாது கூற.. மணிமேகலை அவரை வெறித்து பார்த்தார்..
நாங்க பணம் காசு இல்லாதவங்கதான் அம்மா.. அதுக்காக மானத்தை வித்து பிழைக்கிறது கிடையாது.. என மணிமேகலை கோபமாய் கூற.. கலையரசி அவரை அறைந்துவிட்டார்..
எடுபட்ட நாயே.. ஆரு முன்னாடி குரல உசத்துற.. கொன்னு புதைச்சுப்போடுவேன்.. என்னையவே எதித்து பேசுற.. இனி உன் மாமன எப்படி காப்பாத்திறேன்னு பாக்கிறேண்டி.. என ஆங்காரமாக சொல்லவும்.. மணிமேகலை நடுக்கத்துடன் அவரை பார்த்தார்..
அய்யோ அம்மா தயவு செஞ்சு எங்கள மன்னிச்சுடுங்க.. நாங் நீங்க சொல்றதுக்கு ஒத்துக்குறோம்.. என அலமேலு அவர் காலில் விழுந்து கெஞ்ச, மணிமேகலை தன் அத்தையை அதிர்ந்து பார்த்தார்..
கலையரசி மிதப்புடன் மணிமேகலையை பார்க்கவும் அலமேலு அவரையும் கலையரசியின் காலில் விழ வைத்தார்..
வக்கத்த நாயுங்களுக்கு வாயிக்கு ஒன்னும் கொறைச்சலில்ல.. என நொடித்து கொண்டவர்.. இன்னும் ரெண்டு நாள்ல கண்ணாலம்.. அதுக்கப்புறம் நாங்க சொல்ற வரைக்கும் எங்க கண் பார்வையில் தான் இருக்கணும்.. கண்ணால முடிஞ்ச மறுநாதான் பணத்தை கொடுப்பேன்.. என மிரட்டியவாரு சென்றார்..
