Skip to content
Post Views: 4,958
காட்ஸ் ஓன் கண்ட்ரி என்று அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் ஒரு பரதநாட்டியம் பள்ளியில் ஒருத்தி பரதம் கற்று கொடுத்து கொண்டு இருந்தாள் … சாதாரண ஒரு சுடிதாரில் அவளுடைய ஷாலை பரதநாட்டியம் ஆட ஏற்றவாறு கட்டிக்கொண்டு முகத்தில் சிறு சிரிப்புடன் கண்ணனுக்கு எட்டாத சிரிப்புடன் நெற்றியில் ஒரு சிறிய கருப்பு பொட்டு கழுத்தில் ஒரு தங்க செயின் காதில் காதை ஒட்டியாவரு சிறு கம்மல் கையில் வளையல் எதுவும் போடாமல் சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தாள் …
அப்போது ஒரு கேரளா பெண்மணி ஒருத்தி வந்து ” தாரு சேச்சி ” என்று அழைத்தாள் … அவள் அழைத்தவுடன் “ஒன் மினிட் அஞ்சு ” என கூறிவிட்டு “எல்லாரும் ஒழுங்கா ப்ராக்டிஸ் பண்ணுங்க … சுஜி எல்லாரும் ஒழுங்கா ஆடுறாங்களா னு பாரு ” என்று கூறிவிட்டு வெளியே அவளை அழைத்தவளிடம் வந்தாள் …..
“சொல்லு அஞ்சு ….” என்று கேட்டாள் …. அதற்கு அஞ்சு என்று அழைக்கப்பட்டவளோ “சேச்சி உங்களை மாஸ்டர் விழிச்சு (கூப்பிட்டாங்க )… சீக்கிரம் வாங்க” என்று அவளை அழைத்து கொண்டு மாஸ்டரிடம் சென்றாள் …
Advertisement
அங்கு மாஸ்டர் அஞ்சுவிடம் “நீ போ அஞ்சு ” என்று அனுப்பிவிட்டு … அவள் போய்விட்டாளா என்று பார்த்து விட்டு இவளிடம் திரும்பி “நியூ பேட்ச் ஸ்டூடென்ட்ஸ் இன்னிக்கு ஜாயின் பண்றாங்க … அவங்களை நீங்க தான் பாத்துக்கணும் … இப்போ நீங்க பாத்துக்குற பேட்ச் சை அஞ்சு பாத்து கிட்டும் …. இப்பயே ஸ்டார்ட் பண்ணிடுறிங்களா ” என்று கேட்டர் அவர் ….
“ஓகே மேம் … மதியம் ஆகிடுச்சு … நாளைக்கு கிளாஸ் ஸ்டார்ட் பண்ணிடுறேன் … இன்னிக்கு சும்மா இன்ட்ரோ மட்டும் தரட்டும் … எல்லாரையும் நாலு மணிக்கு அரேன்ஜ் ஆக சொல்லிடுங்க ” என்று கூறிவிட்டு செல்ல போனவளை தடுத்தார் அவர் ….
“சுபி ” என்று அழைத்தவுடன் அவளின் கால்கள் அப்படியே நின்றுவிட்டது … அவளின் கண்கள் தானாகவே கலங்க ஆரம்பித்தது … அவள் அழுவதை பார்த்த அவர் “ப்ச் சுபி ரெண்டு வருஷம் ஆகிடுச்சு … இன்னும் கலங்கிட்டே இருந்தா என்ன அர்த்தம் … உன்னை தேடி யாரும் வரல … உன்னை என்கிட்ட பத்திரமா பாத்துக்க சொன்ன தம்பி உன்னை உன் குடும்பத்தை பத்தி யோசிக்கவே கூடாது னு சொல்லி இருக்கு ல …. இப்படியே அழுதா உன் பையன் எப்படி இருப்பான் … அவன் எவளோ தைரியமா இருக்கான் … அவனை மாதிரி இரு சுபி … எதுக்கும் அழுகாத …. தாராணியா இருந்தா அழுகாத நீ சுபியா இருக்க அப்ப எதுக்கு அழுகை …. நில்லு என் பேராண்டி வரட்டும் நீ அழுததை போட்டு குடுக்குறேன் ” என்று கூறினார்…
Advertisement
“என் பேச்சை கேட்காம திரும்பியும் அவனை கோவை அனுப்பி இருக்கீங்க … அவனை யாரோ பார்த்தா என்ன ஆகும் … நாங்க நிம்மதியா யார் நிம்மதியும் கெடுக்கமா நானும் என் பையனும் இருக்கோம் …. அவனை யாரோ பார்த்தா அவனையும் என்கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்க ம்மா … எனக்கு பயமா இருக்கு … என் கூட இப்ப இருக்குறது அவன் மட்டும் தான் ம்மா … அவனும் போயிட்டா நான் உயிரோட இருக்கவே மாட்டேன் ம்மா ….” என்று அழுத வாறே கூறினாள் அவள் ….
Advertisement
“சுபி எதுக்கு இந்த அழுகை அவனை யாரும் பார்க்க மாட்டாங்க … அவனை பத்தி உனக்கு தெரியாதா … ஸ்கூல் ட்ரிப் தானு போறான் … நாளைக்கு காலைல வந்துடுவான் … அவனை உன்கிட்ட இருந்து யாரும் பிரிக்க மாட்டாங்க … அழுகாம போய் சாப்பிட்டு வா … நான் ஸ்டுடென்ட்ஸை அரேன்ஜ் ஆக சொல்லிடுறேன்” என்று கூறி அவளை அனுப்பி வைத்தார் அவர் …
அவள் அவளின் மாணவர்களிடம் சென்று “இன்னிக்கு இதோட ஓவர் … மதிய ம் மேல உங்களை அஞ்சு மேம் பாத்துப்பாங்க … நான் நியூ பேட்ச் பாத்துப்பேன் … அஞ்சு மேம் சொல்றதை கேட்டு ஒபே பண்ணுங்க …” என்று அவர்களிடம் கூறிவிட்டு அந்த பள்ளியில் அவளின் அறைக்கு சென்றாள் ….
அந்த பள்ளியில் இருநூறு பிள்ளைகள் நாட்டியம் கற்றுக்கொள்கின்றனர் … சிறு பிள்ளைகளுக்கு ஒருவர் … பள்ளிக்கு செல்பவருக்கு ஒருவர் … காலேஜ் செல்பவருக்கு ஒருவர் … இருவது வயதுக்கு மேற்பட்டோருக்கு இவள் சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தாள் ….
Advertisement
தற்போது அவளை இப்போ சேர்ந்து இருக்கும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க சொல்லி இருந்தார் அந்த நாட்டியாலயத்தை ஆரம்பித்தவர் …
தற்போது அவள் மட்டும் அறையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள் … மற்றவர்கள் அனைவர்க்கும் அருகருகே வீடு இருப்பதால் சாப்பிட சென்றுவிடுவர் … இவளுக்கு கொஞ்ச தூரம் செல்ல வேண்டும் என்பதால் அவள் காலை வந்து விட்டால் மாலை தான் வீடு திரும்புவாள் ….
தற்போது அவள் சாப்பிட்டு விட்டு அவளின் பையனின் ஆசிரியருக்கு அழைத்தாள் …. அவளின் பையன் ஸ்கூல் ட்ரிப்பாக கோவை சென்றுள்ளான் … அவனின் ஆசிரியர் பெற்றோருக்கு எப்போது வேண்டுமென்றாலும் தன்னை தொடர்பு கொண்டு குழந்தை களிடம் பேசலாம் என கூறி இருந்தார் … காலையில் இருந்து அவனிடம் பேசவில்லை …
அவனின் ஆசிரியரும் அழைப்பை ஏற்று அவளின் பையனிடம் கொடுத்தார் … “ஹலோ ம்மா எப்படி இருக்கீங்க ” என்று பதினொன்று வயது மகன் அவளிடம் கேட்டான் ….
“தம்பி நான் நல்லா இருக்கேன் …. நீ எப்படி இருக்க … ஒழுங்கா இருக்கியா … ஜாக்கிரதையா இரு தம்பி … என் பேச்சையும் கேட்காம போயிட்ட…. இன்னிக்கு ஒரு நாள் தான் பத்திரமா வா ” என்று கூறினாள் … அவள் கூறுவதற்குள் அவளி ன் குரல் கொஞ்சம் பிசிறு தட்டியது …
“ப்ச் ம்மா அழுவாத நான் பத்திரமா தான் இருக்கேன் … நான் யாரையும் பாக்கல … அழுகாத நான் நாளைக்கு காலை ல வந்துடுவேன் ….” என்று அவளை சமாதானம் படுத்தினான் ….
“சரி தம்பி பத்திரமா வா … அம்மா வைக்குறேன் ” என்று கூறிவிட்டு வைத்துவிட்டாள் ….
நான்கு மணி ஆகியதும் அவள் நியூ பேட்ச் பிள்ளைகள் இருக்கும் அறைக்கு சென்றாள் … அங்கு எல்லாம் பத்து வயது முதல் பதினைந்து வயது வரை உள்ள பிள்ளைகள் இருந்தனர் … அனைவரிடமும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு அவர்களிடம் ஒவ்வொரு பெயராக கேட்டாள் …
அனைவரும் தங்களுடைய பெயர் என்ன படிக்கின்றனர் அவர்களின் பெற்றோர் பெயர் என்று சொல்லி கொண்டு இருந்தனர் … அப்போது ஒரு குழந்தை எழுந்து அவளுடைய பெயர் ஆஷா என்று கூறிவிட்டு இன்னும் பள்ளியில் சேரவில்லை … இப்பொழுது தான் இடுக்கி வந்து இருப்பதாகவும் இதுக்கு முன் ஒரு ஊரின் பெயர் சொல்லி அங்கே இருந்ததாகவும் கூறினாள் … அதுமட்டும் இல்லாமல் இந்த நாட்டியாலய த்தில் அவள் அம்மா வேலை செய்யக்கூடிய வீடு ஓனர் சேர்த்து விட்டதாக கூறினாள் ….
அனைவரும் பேசி முடித்து வுடன் குரு வணக்கம் சொல்லி குடுத்தாள் … ஒரு சிலர் தவறாக செய்தாலும் அதை அவர்களுக்கு பொறுமையாக சொல்லிக்கொடுத்தாள் … அனைவருக்கும் அவளை மிகவும் பிடித்துவிட்டது … அனைத்து பிள்ளைகளும் அவள் சொல்லி தருவதை நன்றாக கவனித்து கற்றுக்கொண்டனர் முதல் நாளே …
இன்று ஞாயிறு அதனால் இந்த நேரம் .. மற்ற நாட்கள் பள்ளிக்கு செல்வதால் மாலை ஐந்து மணியில் இருந்து ஏழு மணிவரை அவர்களுக்கு அவள் சொல்லி தர வேண்டும் … இன்று கிளாஸ் முடிந்ததால் அனைவரையும் அவர் பெற்றோர் உடன் அனுப்பிவைத்துவிட்டு ஒரு குழந்தையின் பெற்றோருக்காக காத்துகொண்டு இருந்தாள் … அந்த குழந்தை ஆஷா …ஆஷா உன்னை கூட்டிட்டு போக யாரும் வரலையா என்று கேட்டாள் …
“இல்ல மேம் சார் வரேன் னு சொன்னாரு …” என்று அவள் கூறிக்கொண்டு இருக்கும் போதே ஒருவன் வேகமாக காரில் இருந்து வந்தான் .. “சாரி ஆஷா ம்மா … கொஞ்சம் லேட் ஆகிடுச்சு ..” என்று கூறினான் …
“இல்ல சார் மேம் இருந்தாங்க கூட … “என்று ஆஷா கூறினாள் …
“டேய் சார் சொல்லாத அப்பா அம்மா சொல்லுன்னு சொன்னோம் ல ஏன் டா அப்டியே கூப்பிடு” என்று கூறினான் அவன் …
அந்த சிறுமியும் “அம்மா திட்டுவாங்களே” என்று தயக்கமாக கூறினாள் … “அம்மா கிட்ட மதி ம்மா பேசிப்பாங்க இனிமே அம்மா அப்பா சொல்லனும் சரியா” என்று கூறினான் அவன் …
“ஆஷா ” என்று அவள் அழைத்தவுடன் தான் அவள் இருப்பதையே அவர்கள் கவனித்தனர் …
அவளை பார்த்தவுடன் அவனுக்கு எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது .. ஆனால் எங்கு என்று தான் தெரியவில்லை … “சாரி மேம் ” என்று ஆஷா கூறிவிட்டு “ப்பா இது என் மாஸ்டர் ” என்று கூறினாள் …
ஆஷா அப்பா என்று அழைத்த சந்தோஷத்தில் இவளை பற்றி மறந்து “சாரி மேம் இனிமே சீக்கிரம் வந்து கூட்டிட்டு போறேன் ” என்று கூறிவிட்டு ஆஷாவுடன் கிளம்பினான் அவன் ….
அவர்கள் கிளப்பியவுடன் அவளும் அவளின் வீட்டிற்கு சென்றாள் …வீட்டினுள் நுழைந்தவுடன் “மாமா நான் வேலைக்கு போயிட்டு வந்துட்டேன்… இன்னிக்கு ஒரு புது பொண்ணு ஜாயின் பண்ணா… அந்த பொண்ணோட அம்மா வீட்டு வேலை செய்றவங்கலாம்… அந்த வீட்டுக்கு ஓனர் தான் அந்த பொண்ணை கிளாஸ்ல சேர்த்து விட்டு இருக்காங்க… அது மட்டும் இல்லாம அந்த பொண்ணை அம்மா அப்பா னு கூப்பிட சொல்றாங்க மாமா …. அவங்க ரொம்ப கிரேட்ல…. சரி மாமா எனக்கு ரொம்ப பசிக்குது நான் போய் ப்ரெஷ் ஆகிட்டு சமைக்குறேன்” என்று கூறிவிட்டு அவள் அறைக்குள் சென்றாள்…. அவள் சொன்னதை புன்னகை முகம் மாறாமல் கேட்டு கொண்டு இருந்தான் புகைப்பட சட்டத்தில் இருந்த அர்ஜுனன்….. சொல்லிவிட்டு சென்றவள் சுபத்திரா ….
error: Content is protected !!