Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 6

மின்னல்  ஒரு  கோடி

 அத்தியாயம்  – 6



Advertisement

  கமலம்  எல்லா  தெய்வகளுக்கும்  நன்றி  சொல்லிக் கொண்டு  இருந்தார்.

Advertisement

 இராஜாசெல்வம்  வீட்டில்  நுழைந்தவுடன் .

Advertisement

ஏங்க , நம்ம  வீடு  நம்மல  விட்டு  போகாது  என்று  முகமலர்ச்சியாக கமலம்  சொல்ல .

Advertisement

 என்ன சொல்லுற  கமலம்  என்றார் இராஜா செல்வம் .

ஆமாங்க  இப்ப  தான்  சிவா  வந்தான். பணம்  கிடச்சுருச்சுன்னு  சொல்லிட்டு  போனான்

எப்படி  கிடைச்சது பணம். இடத்தை   வித்துட்டானா.

இல்லைங்க  நம்ம  எதுத்த  வீட்டு  தம்பி. இருக்குல  கோடீஸ்வரன்  அந்த  தம்பி  தான்  குடுக்குதாம்  சிவா  சொன்னான்.

இராஜா செல்வம்  அவ்வளவு  பணமா. அந்த  தம்பி  குடுக்குறாரு.

ஆமாங்க. நான்  சொல்லல  அந்த  தம்பி ரொம்ப  நல்ல  மாதிரி. அந்த  தம்பி கடையில  வேலை  பாக்குற  பசங்கல  கூட  படிக்க  வைக்குதாம். நம்ம  சங்கரி  சொன்ன.

அதல்லாம் சரி. ஒரு  தன்  1 1/4  கோடி  பணம்  தர்றான்ன  சும்மா  குடுப்பானா. அதுக்கு பதில்  நம்ம  கிட்ட  இருந்து  ஏதாவது எதிர்  பார்பானுல்ல. என்ன  சொன்னான் சிவா. ஏதாவது  பத்திரம் கேட்டாரா. செக்குல  சைன்  வாங்குனாரா. ஒன்னும்  கேட்காமா  பணம்  தருவாங்கல  என்று  கேட்டு. கொண்டு இருக்கும்  போதே  சிவா  வர.

கமலம் . சிவாவிடம்  அப்பா. என்னவோ  கேக்குறாரு  என்னன்னு  பதில்  சொல்லுடா என்றார்.

 என்னப்பா  என்றான்  இராஜா செல்வத்திடம் .

என்ன  சொன்னார். அந்த  எதுத்த. வீட்டு  பையன்.

ஒன்னும் சொல்லலப்பா என்றான் சிவா.

 இராஜாசெல்வம் . சிவாவிடம்  அந்த  பையன்  உன்க்கிட்ட  எத  வாங்கி கிட்டு  1 1/4  கோடி  பணம்  கொடுக்குறாரு.

 சிவா   ஒன்னும்  கேட்கல  அப்பா. இடம்  வித்தா  பிறகு  பணம்  குடுங்க  அப்படின்னு  சொன்னார்.

 உங்க  இரண்டு  பேருக்கு  அறிவுன்னு ஒன்னு  இருக்க  இல்லையா .

என்னப்பா என்றான்  சிவா.

 அறிவு கெட்டவனே . ஒருதன்  தானா  வந்து பணம்  குடுக்குறானா  அவனுக்கு   நம்ம. கிட்ட  இருந்து. ஏதோ  எதிர் பார்ப்பான்  தானே.

ஆமாம்  பா.

 சொல்லு  என்ன  கேட்டார். ஏதாவது  உன்  கிட்ட  சைன்  வாக்குனாரா.

இல்லப்பா.

 நம்ம  கிட்ட  இருக்குற , இடத்தை  பத்தி , இல்ல  அதோட வால்யு, இல்ல ரேட்டு என்று  கேட்க.

இல்லப்பா என்றான்.

கமலம்  ஏங்க  இவ்வளவு  கேள்வி  கேட்குறீங்க.

இராஜா செல்வம்  கமலத்திடம் உனக்கு  உடம்பு  சரியில்லன்னு  பார்க்குறேன். இல்லன்னா  அறைஞ்சுடுவேன்  வாய் முடிட்டு  இரு. நாங்க  பேசுறவரைக்கும் .

ஏவனாது 1, 1/4  கால் கோடி  கேட்டவுடனே  தருவானா. சிவா  கேட்காமலே பணம்  தர  என்ன  காரணம் .நமக்கு  அவர்  என்ன  சொந்தமா. சொந்த  காரங்களே  பணம்  கேட்ட  ஓடிடுவாங்க.இவர்  யாரு  பணம்  குடுக்க. .

சிவாவிடம்   அந்த  தம்பிய  போன்  போட்டு அவர்  எப்போ  பிரீயா  இருப்பாருன்னு  கேளு  நாம  போய்   பேசனும்.

கமலம்  என்ன  பேச  போறீங்க.

கமலம்  வாய்  மூடிட்டு  இரு.சும்மா  எவனும்  பணம்  தரமாட்டான். நான்  எத்தனை  பேரை  பார்த்து இருக்கிறேன்  என்னன்னு  கேட்காம  பணம்  வாங்க  கூடாது.

கமலம்  இராஜாசெல்வத்திடம்   நீங்க  ஏதாவது  பேசி  பணம்  குடுக்குற  தம்பிய  கெடுத்து  விட்டுடாதீங்க.

இராஜாசெல்வம்   பண  பிரச்சனைக்காக  நாமா  வேற  பிரச்சனையில  மாட்டிக்க  கூடாது.

நீ  போன்  போடுடா  என்றார் .

சிவா  கோடியை  போனில்  அழைத்து   அப்பா   உங்க  கூட  பேசனுமாம் என்று சொல்ல.

  கோடி  எனக்கு  இப்போ  வேலை  முடிஞ்சது.நீங்க  வைட்  பண்ணுங்க .  நான்   என்  வீட்டுக்கு வரேன்  பேசலாம்  என்றான்  கோடி.

 கோடி  மனதில் என்ன  பேச  போறார்.  பணம்  குடுக்குறதுக்கு  நன்றி  சொல்லுவாரா ,இல்ல வேற  ஏதுவும்மா.

 கோடியின்  வண்டியின்  சத்தம்  கேட்டு. சிவா  வீட்டில்  இருந்து வெளியே  வந்து  கோடியிடம்  எங்க  வீட்டுக்கு வர்ரீங்களா . இல்ல  உங்க  வீட்டுக்கு  நானும்  அப்பாவும்  வரவா  என்று  கேட்க.

 நானே  வர்ரேன்  உங்க  அம்மாவை  பார்க்கனும்  என்றவன்.

கௌசியின்  வீட்டிற்குள்  செல்ல. கௌசி  அவளின்  ரூம்பில்  இருந்தாள்.

ஹாலில்  இராஜா செல்வம், கமலமும்   அமர்ந்து  இருக்க. கோடியை பார்த்தவர்கள். வாங்க  தம்பி என்று  எழுந்து வரவேற்க . ஒரு  தலை  அசைப்போடு , உள்ளே  சென்றான்.

பெரிய  சோபா  இருக்க . ஒருவர்  உங்காரும்  இடத்தில்   இராஜாசெல்வம்  அமர்ந்து  இருக்க. கமலம் மூன்று  பேர்  உங்காரும்  இடத்தில் அமர்ந்து இருக்க. கமலம்  பக்கத்தில்   கொஞ்சம்  இடம்  விட்டு  அமர்ந்த  கோடி.

எப்படி  இருக்கீங்க  அக்கா  என்றான் கமலத்திடம் .

நல்லா இருக்கேன். தம்பி நான்  உங்கள  பார்க்க  ஹாஸ்பெட்டல்  வந்தேன். நீங்க  அப்போ ஐ, சி,யூ  இருந்தீங்க . டாக்டர்  கிட்ட  விசாரிச்சுட்டு  வந்துட்டேன் .

அப்படியே தம்பி , இப்போ பரவாயில்லை தம்பி  என்றார் கமலம் .

கோடி  இராஜா  செல்வத்தை  பார்த்து  என்ன  சார்  என்கிட்ட  கேக்கணும் என்றான்.

கோடியை  பார்த்தவர் .எதுக்காக எங்களுக்கு  1 1/4  கோடி  பணம்  குடுக்குறீங்க  தம்பி. தெரிஞ்சவங்க  அப்படின்னு   மட்டும்  சொல்லாதீங்க . வட்டி  எதாவது  எதிர்  பார்க்குறீங்களா.இல்ல வேற  ஏதாவது . ப்புராபர்டி  வேணுமா  கேளுங்க.

கோடி  இல்ல  சார்  வட்டிக்கு எல்லாம்  நான்  தரல . சிவா  ஒரு  லேண்ட்  இருக்குன்னு  சொன்னாரு  அத  வித்துட்டு  குடுங்க  பணம்  வாங்கிகிறேன்.

  இராஜாசெல்வம்  பத்திரத்தில்  நானும், என்  பையனும்   கையெழுத்து  போட்டு  தரட்டுமா. இல்ல  செக்ல  சைன்  பண்ணவா.

 அதல்லாம்  வேண்டாம்  சார்  என்ற கோடி  உங்க  மேல  நம்பிக்கை  இருக்கு . இங்கே  தானே  இருக்குறீங்க.என்னை  ஏமாத்த  போறீங்களா  உங்க  கிட்ட  சைன்  வாங்க.

 இராஜாசெல்வம்  நன்றி  தம்பி  எங்களுக்கு பணம்  வேண்டாம். நாங்க  பாத்துக்குறோம்.

கமலம்  இராஜாசெல்வத்திடம்   என்ன  பேசுறீங்க  இன்னும்  ஒரு  வாரத்துல  பேங்குல  பணம்  கட்டணும். பணம்  வேண்டாமுன்னு  சொன்னா  என்ன  பண்ண  போறீங்க. அப்பனும் , மகனும்  என்னை  தெருவுல  நிக்க  வைக்க   போறீங்களா  என்று  புலம்ப.

 இராஜாசெல்வம்  நான்  எப்படியோ   பணத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன்.

கமலம் எப்படி  ஏற்பாடு  பண்ணுவீங்க.   இரண்டு  வாரமா  ஏற்பாடு  பண்ண  முடியல. இப்போ  மட்டும் எப்படி  ஏற்பாடு  பண்ணுவீங்க.

அது என்பாடு  உன்  வேலையை  பாரு.

என்ன உன்  வேலையை  பாரு. கோடி தம்பிதான்  பணம்  குடுக்குதுல அப்பறம்  என்ன.

இல்ல  இவர்கிட்ட  பணம்  வாங்க  எனக்கு  விருப்பம்  இல்ல என்றார் இராஜாசெல்வம்.

 கமலம்  என்ன  சொல்லுறீங்க . ஏன்  விருப்பம்  இல்ல.

இவர் சரியான  காரணம்  சொல்ல  சொல்லு. கோடி  தம்பி  சொல்லுறத  நான்  நம்ப  மாட்டேன்.

கோடி  இராஜா செல்வத்தின்  அருகே  வந்து . சொல்லுங்க   சார்  என் மேல ஏன்  உங்களுக்கு நம்பிக்கை  வரல.

 நீங்க  ஏதாவது  டாக்குமெண்டு எங்க கிட்ட வாங்கனும்.  இல்லை   வேற ஏதாவது  எழுதி  சைன்  பண்ணி   தர்றோம். ஏதும் இல்லாமல்  உங்க  கிட்ட  பணம்    வாங்க விருப்பம் இல்ல.

கோடி ஒரு  நிமிசம் சார் என்றவன்.   அவன்  கண்களை  மூடி திறந்தவன்.

 கௌசிக்காக   குடுத்தேன்  சார்  போதுமா. இரண்டு  நாள் முன்னாடி  கௌசியை  மெடிக்கல் சாப்பில்  பார்த்தேன். முகம் வாடி அழுத  மாதிரி  தெரிஞ்சது. அவளுக்கு  ஏதோ பிரச்சனையின்னு தெரிஞ்சது. சிவாவை  பார்த்தேன்  அவர்  விசயத்தை  சொன்னாரு. என்னால  முடிஞ்சத  செய்யுறேன்.

இராஜாசெல்வம்  இதை  எதிர்  பார்க்க வில்லை. அவர்  இவன்  பணம்  கொடுத்து . இந்த  வீட்டை  வாங்க  எதிர்  பார்க்கிறான்  என்று  நினைத்து  இருக்க. கோடியிடம்  இருந்து   இப்படி ஒரு பதிலை அவர்  எதிர் பார்க்க வில்லை.

 கோடி  கமலத்திடம்  வந்தவன்.  கௌசியை எனக்கு  ரொம்ப  பிடிக்கும். அவள  கல்யாணம்  பண்ண  நினைக்கிறேன் . கௌசியை  நல்லா  நான் பாத்துபேன். உங்களுக்கு  எல்லோருக்கும்  இது  சம்மதமின்னா  எனக்கு  கௌசியை  கல்யாணம்  பண்ணி தாங்க. அப்படி என்னை உங்களுக்கு பிடிக்கல.  அப்படியின்னாலும்  ஓகே.

இதுக்கும்  தான்  சிவாவுக்கும்  பணம்  குடுக்குறதுக்கும்  சம்பந்தம்  இல்லை. நாளைக்கு  நான்  கண்டிப்பா  பணம்  தருவேன்.

நீங்க  எப்போது முடியுமோ. அப்போ  பணம்  தாங்க  வாங்கிக்கிறேன்.

இராஜா செல்வத்திடம்  வந்தவன். உங்க  கிட்ட  ஒரு நல்ல  குணம்  இருக்கு சார்  யார்  பணம்  குடுத்தாலும் வாங்காம. என்ன  ஏதுன்னு  கேட்குறீங்க  பாருங்க   சூப்பர்  சார்.

கௌசிக்காக  மட்டும்  இல்ல . கமலம் அக்காவுக்காகவும்  தான்  பணம்  தர்ரேன். வேற  எந்த  எண்ணமும்  எனக்கு  இல்ல  என்றவன். கமலத்திடம்  வர்ரேன் அக்கா என்றவன்.

சிவாவிடம் நாளைக்கு பணம்  ஏற்பாடு  பண்ணிவிட்டு  போன்  பண்ணுறேன்  சிவா  பேங்குக்கு  வாங்க  என்று  சொல்லி  சென்றுவிட்டான்.

கமலத்துக்கு முகம்  மலர்ச்சியாக  இருக்க.

சிவா  என்னம்மா  சிரிக்குற என்றான்.

போடா  என்  பொண்ணு  என் பக்கத்திலே இருக்க  போறா.

என்ன  சொல்லுற  கமலம்  என்றார் இராஜாசெல்வம்.

கமலம்  நான்  முடிவு பண்ணிட்டேன்   கோடி  தம்பிக்கு நம்ம   கௌசியை  கல்யாணம்  பண்ணாலமுன்னு.

 ஏய் என்ன  சொல்லுற. படிக்குற  பொண்ண.

 கமலம்  இன்னும்   5  மாசம் தானே  இருக்கு   முடிஞ்சவுடனே கல்யாணத்த  வச்சுக்கலாம்.

சிவா , அம்மா கௌசி கிட்ட  கேளுங்கம்மா.

என்ன கேட்கனும்  நாம  அவளுக்கு  நல்லது தான  பண்ணுறோம்.

 இராஜாசெல்வம்  யோசிப்பதை  பார்த்த கமலம்  அவரிடம் உங்களுக்கு  தெரியுமுல . நான்  முடிவு  எடுக்குற  முன்னாடி  ஆயிரம்  தடவை  யோசிப்பேன். எனக்கு  கோடி  தம்பி கௌசியை  நல்லா பாத்துப்பாருன்னு  தோணுது.

 இராஜாசெல்வம்   கௌசிக்கிட்ட  கேட்காம  நீயே முடிவு  பண்ணாத. அவளுக்கு  முதல்ல  பிடிக்கணும .

அவளுக்கு என்ன  தெரியும்  சின்ன  பொண்ணு  நான்  சொன்னா  கேட்பா  என்று  சொல்ல. இராஜா செல்வம்  கௌசியை  அழைக்க.அவர்  முன் அமர்ந்த. கௌசியிடம்  நாங்க  பேசியிட்டு  இருக்குறது  உனக்கு  கேட்டுச்சு  தானே.

ஆமாம்  அப்பா என்றாள்  கௌசி.

நீ சொல்லுடா   உனக்கு  சம்மதமா.எங்கள  பத்தி  யோசிக்காத, உன்  விருப்பத்தை சொல்லு.

கௌசி  கமலத்தின்  முகத்தை  பார்த்தவள்.அம்மாவுக்கு  பிடிச்சா  எனக்கும்  பிடிக்கும்பா. நீங்க  எல்லாரும்  என்ன  சொன்னாலும்  எனக்கு  ஓகே  என்று  சொல்ல.

கமலம்  கௌசியை அனைத்து கொண்டவள்.   என்  செல்லம்  பாத்தீங்களா . என் பொண்ணு  என்றார்  மகிழ்ச்சியாக.

கோடிக்கு  மனதில்  உள்ளதை  சொல்லியாச்சு  இனிமேல்   நடக்குறது  நடக்கட்டும்  என்று  அவன்  வேலையை பார்க்க.

கோடியின்  கையில்  இப்போது சிவாவுக்கு  குடுக்க  அவ்வளவு பணம்  இல்லை. இரண்டு  மூன்று  பெரிய  ஆட்களிடம்  கேட்க. உனக்கா  கோடி  என்று அவர்களிடம்  இருந்ததை  கொடுத்து விட. இன்னும்  கொஞ்சம் பணம்  தேவைப்பட.

தெரிந்தவர்களிடம்  கேட்க  காலையில்  நேரடியாக  வந்து  வாங்குமாறு  சொல்லிவிட.

கோடி காலையில்  சென்று விட்டான்.  பணத்தை வாங்க  காலை 11  மணி ஆகிவிட்டது. சிவாவிடம்  இருந்து  கோடிக்கு  அழைப்பு   வர.

 போனை  எடுத்த  கோடி சிவா  நான்  ஓசூர்ல இருக்கேன். 12. 30  மணிக்கு  வந்துவிடுவேன். என்கிட்ட  கொஞ்சம்  பணம்  கம்மியா  இருந்துச்சு.  பணம்  வாங்க  தான்  வந்துருக்கேன். நீங்க  12  மணிக்கு  மேல  பேங்குக்கு  போங்க.   நானும்  பேங்குக்கு  வரேன்.

சரி  என்ற  சிவா  சோபாவில்  வந்து  அமர.

 கமலம்  என்ன  சொன்னார்  கோடி  தம்பி  என்று  சிவாவிடம்  கேட்க.

 பணத்துக்காக தான்  ஓசூருல  யார்  கிட்டையோ   பணம்  வாங்க  போயிருக்காரும்மா.

நமக்காக  கோடி  தம்பி  யார்கிட்டையோ இருந்து பணம்  வாங்கி  குடுக்குது. சீக்கிரமா அந்த  தம்பிக்கு  காச  திருப்பி. கொடுத்துடு  சிவா  என்றார்  கமலம்.

கோடியும்  , சிவாவும்  பேங்கில்  பணத்தை கட்டி  எல்லா  வேலையும்  முடித்து . வீட்டு  பத்திரத்தை  சிவாவிடம்  கொடுத்தான்  கோடி.

சிவா  கோடியின்  கையை  பிடித்துக்கொண்டு  என்  வாழ்க்கையை  எனக்கு  திருப்பி  கொடுத்து  இருக்குறீங்க  சார் என்று  நன்றி  சொல்ல.

கோடியோ  என்னால  முடிஞ்சத  நான்  பண்ணேன் . நீங்க  திருப்பி  கொடுத்தா  வாங்கிப்பேன்  என்றான்.

 சிவா  வீட்டிற்கு  சென்று  கமலத்திடம்  வீட்டின்  பத்திரத்தை  கொடுக்க .

கமலம் அதை வாங்கி  கொண்டவர்  கண்ணீல்  கண்ணீர். எனக்கு  இப்ப தான் நிம்மதியா  இருக்கு . இனிமே  யார்  கேட்டாலும்  நான்  வீட்டு   பத்திரத்தை  தரமாட்டேன் என்றவர். வீட்டின். பூஜை  அறையில்  பத்திரத்தை  வைத்து  கடவுளை  வணங்கி விட்டு வந்தார்.

 இராஜாசெல்வம்   வேலை  முடிந்து வீட்டுக்கு  வர.  கமலம்  ரெடியாக  இருந்தார்.

என்ன  கமலம் எங்கோ  கிளம்புனா  மாதிரி  இருக்கு. ஆமாம்  கோவில்  போயிட்டு கோடி   தம்பிக்கு நன்றி சொல்லிட்டு, அப்படியே  கல்யாணத்துக்கு  சம்மதம். சொல்லிட்டு  வருவோம் என்று  கூற .

நீ போற  ஸ்பீட பாத்தா என்று இராஜா செல்வம்  சொல்ல.

என்ன   ஸ்பீடு. நல்லத  தள்ளி  போட  கூடாது  என்றவர்.

 கோயில்  சென்று கடவுளை  வணங்கி  விட்டு. கோடியின்  கடைக்கு செல்ல  அவனின்  ஆபீஸ்  அறையில்  போன்  பேசி  கொண்டு  இருந்தான்.

 கமலத்தையும்,  இராஜாசெல்வத்தையும்  பார்த்தவன்  வாங்க  என்றவன். இருவரையும்  சேரில்  அமர   சொல்லி விட்டு. ஆமேலே  கரே  மாடுதேனு( அப்பறம் பேசுறேன் என்று  போனை வைத்தான்)

 இருவரையும் பார்த்து  மறுபடியும். வாங்க என்றவன். காபி  சாப்பிடுறீங்களா அக்கா  என்றவன். சூஸ்  சொல்லவ  சார்  என்றான்  ராஜாசெல்வத்திடம் .

இராஜா செல்வம்  பரவாயில்லை தம்பி இப்பதான்  சாப்பிட்டோம்.

கமலம்  அது  என்ன  தம்பியின்னு. சொல்லுறீங்க. மாப்பிள்ளையின்னு  சொல்லுங்க  என்று  சொல்ல.

கோடி  என்ன  சொல்லுறாங்க  என்று  பார்க்க.

கமலம் கோடியிடம்  நன்றி  தம்பி  பணம்  குடுத்ததுக்கு.

கமலத்தை பார்த்து  சிரித்தவன்.

கமலம் எங்களுக்கு   கௌசியை உங்களுக்கு  கல்யாணம்  பண்ணி  குடுக்க  இஷ்டம்  தம்பி.

நீங்க  உங்க  வீட்டுல  சொல்லி   பொண்ணு பாக்க  வர  சொல்லுங்க  தம்பி  என்று  கூற.

அவனுக்கு இன்ப  அதிர்ச்சியாக இருந்தது என்ன  சொல்லுறீங்க  அக்கா  உண்மையாவா  சொல்லுறீங்க.

கமலம் ஆமாம்   தம்பி  நாளைக்கு  கூட  நல்ல  நாள்  தான். உங்க வீட்டுல  பேசி  வர  சொல்லுங்க என்று  சொல்லிவிட்டு சென்றனர்.

 கோடி நடப்பது கனவா, இல்லை நிஜமா என்றே நினைத்தான். கமலத்துக்கு  தன்னை பிடிக்கும் என்று நினைத்தவன்  இராஜா செல்வன்  வந்து பேசியது . கமலம் மாப்பிள்ளை என்ற அழைப்பு. இராஜாசெல்வம்  கௌசி படிப்பு முடித்த பிறகு  பேசலாம்  என்பார், இல்லை பிறகு பார்க்கலாம்  என்று சொல்வார் என்று  நினைத்து இருந்தான். இவ்வளவு சீக்கிரத்தில்  கௌசி தனக்கு கிடைப்பாள் என்று கோடி  நினைக்க வில்லை.

தன் வீட்டில் முதலில் யாரிடம் சொல்வது என்று நினைத்தவன். தன் அக்கா தென்றலிடம்  சொல்ல  முடிவு  பண்ணினான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!